• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  30,105
 • Joined

 • Days Won

  191

Everything posted by குமாரசாமி

 1. குறைந்த சாதியினர் எனப்படுபவர்கள் ஏன் வெள்ளாள குடும்பத்தில் சம்பந்தம் வைக்க விரும்புகின்றார்கள்? குறைந்த சாதியினர் என நினைப்பவர்கள் ஏன் தங்களுக்கு குறைந்த சாதிக்குள் இரண்டற கலக்க விரும்புவதில்லை?
 2. அரசியலும் சட்டமும் ஒழுங்கான நாடுகளிலை விளம்பரங்கள் ஒட்டுறதுக்கெண்டே இடங்கள் ஒதுக்கி வைச்சிருப்பினம். அது தேர்தல் விளம்பரம் எண்டாலும் குறிப்பிட்ட இடத்திலை தான் ஒட்ட வேணும் இதுதான் சட்டம். சமுதாய சீர்திருத்தத்தை முதலில் இப்படியான இடங்களிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.அரசியலை திருத்த சமுதாயம் தானாக திருந்தும்.கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சமுதாய சீர்திருத்தம் பேசுவதில் எவ்வித பயனும் இல்லை. அதை விட்டுட்டு சும்மா ஆன்மீகத்தையும் கோயில் குளத்தையும் பார்த்து குலைக்கிறதிலை ஒரு பிரயோசனமும் இல்லை.
 3. ஆடிக்கூழ் செய்வது எப்படி? 16ம் திகதி ஆடிப்பிறப்பாம்...... ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! – நவாலியூர் சோமசுந்தரப்புலவர்-
 4. ⁂ எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிகிழமை எண்டாலே கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு.....
 5. ஊரில் மேட்டுக்குடி திமிரில் இருந்தவர்கள்,கோட்டு சூட்டு அணிவதை மேன்மையாக நினைத்தவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு வந்து பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பணத்துக்காக எந்த வேலையும் செய்தார்கள். பணத்தின் முன் அவர்களின் ஊர் வரட்டுக் கௌரவங்கள் கரைந்து போயின.தினசரி துப்பவரவு தொழில் செய்கின்றனர்.உணவு விடுதிகளில் கோப்பை கழுவுகின்றனர்.வீதி துப்பரவாக்கும் தொழில்கூட செய்கின்றனர். இருந்தாலும் சாதி எனும் கையாலாக தனத்தை இன்னும் விடவேயில்லை. இவர்களுக்கு சாதி குறைந்தவர்கள் என கருதப்படும் வீடுகளில் வயிறு புடைக்க உண்டு விட்டு புறம் சொல்லும் திமிர்பழக்கமும் இன்றும் குறையவில்லை
 6. இஞ்சை கேட்டுதே நாதர்! உந்த விசயம் ரம்புக்கு தெரியுமோ? தெரியாட்டில் ஒருக்கால் ரம்புக்கு தெரியப்படுத்தி விடுங்கோ. மிச்சத்தை சிங்கன் பாத்துக்கொள்வார்
 7. அதுவும் இஞ்சை ஜேர்மனியிலை நடந்திருக்கு. அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்.
 8. சாப்பாட்டு விசயத்திலை எல்லாரும் என்யோய் பண்ணுறது தான்.....பிறகு தெரியும் தானே
 9. நேரு மாமா லண்டனிலை எப்பவும் ரோசாப்பூவோடதான் திரிஞ்சவராம் மெய்யே?
 10. இனி வரும் காலங்களில் சிங்கள தலைமைகள் இது போன்று சிறு அறிக்கைகளை உதிர்த்து விட்டு சர்வசாதாரணமாக கடந்து செல்வர்.ஆனால் எம் தமிழ் தலைமைகள் சிங்களத்திற்கு எதுவுமே சம்பந்தமில்லை என ஐ நா வரைக்கும் வாதிட்டுக்கொண்டிருப்பர்.
 11. அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது? எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.
 12. அக்கா டெய்லி நிறைய சமைச்சு காட்டுறா. உவ்வளத்தையும் ஆர் சாப்பிட்டு முடிக்கினமாம்? இதே சாட்டிலை சாப்பாடு செய்து விக்கிறா எண்டு நினைக்கிறன்.
 13. நக்கலாக்கும்...... இலங்கையை பொறுத்தவரை இவையெல்லாம் தமிழர் அடையாளங்கள்.சிங்கள பேரினவாதாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வாழும் இடங்களை இப்படியான நடவடிக்கைகள் மூலம் எம்மினத்தை அழித்து வருகின்றது .ஆனால் இங்கு யாழ்களத்தில் சைவசமயத்தை/சமய வழிபாட்டை தூற்றிக்கொண்டிருக்கின்றார்கள்..இவர்களும் ஒரு வகையில் தமிழின அழிப்பிற்கு துணை போகின்றவர்கள் என கருதவேண்டும்.
 14. இங்கே ஓரிடத்தில் ஜோதிடத்தின் உண்மையும் நாசுக்காக சொல்லப்படுகின்றது.
 15. எனக்கு இப்போது இருக்கும் வருத்தங்களுக்கு எல்லா காரணங்களும் நான் இளமைப்பருவங்களில் கவலையீனமாக இருந்ததுதான். ஊரில் இருக்கும் போதும் தனியாக வேலை செய்து முறிவது.அளவு மிஞ்சிய பெரிய பாரங்களை தூக்கியது. அது மட்டுமல்லாமல் 15 வயதிருக்கும் என நினைக்கின்றேன் நாவல் மரத்திலிருந்து விழுந்தும் பெரிது படுத்தாமல் 3தரம் இடுப்புக்கு புக்கை கட்டியவுடன் நோ இல்லை என்று விட்டு அசட்டையாக இருந்து விட்டேன். ஜேர்மனிக்கு வந்த பின்னர் குளிரை பெரிது படுத்தாமல் ரீ சேர்ட் நெஞ்சு தெரிய சேர்ட்......அது இப்ப வைச்சு வாங்குது.வேலையிடத்திலை நெஞ்சை குடுத்து வேலை.முதலாளிமாரும் பப்பாவிலை ஏத்த ஏத்த எல்லா வேலையையும் நானே எடுத்துப்போட்டு முக்கிமுக்கி வேலை செய்தது.தண்ணி,சிகரட் அளவு கணக்கில்லை....சாப்பாடு ஒழுங்கில்லை. சினோ கொட்டும் காலங்களில் பல தடவைகள் சறுக்கி இடுப்பு அடிபட விழுந்தும் சும்மா தைலங்களை வாங்கி பூசிப்போட்டு பேசாமல் இருந்தது. இளமையில் எதுவுமே தெரியவில்லை.வயது போகப்போக வருத்தங்களும் வெளிவர ஆரம்பிக்கின்றது.இதனால் தான் என்னுடன் பழகும் இளையவர்களுக்கு எப்போதும் உடல் நலத்தில் கவனமாக இருங்கள் என்று சொல்வது.இள வயதில் செய்யும் சிறு தவறும் வயது போகப்போக ஏதோ ஒரு வடிவில் பூதாகரமாக வந்து நிற்கும்.வேலை இடத்தில் இடுப்பு பட்டி கட்ட வேண்டும்.இல்லையேல் ஒரு மணித்தியாலம் கூட நிற்க முடியாது.வலிக்கு எடுத்த குளிசையை இப்போது நிப்பாட்ட முடியவில்லை.வலி இருக்கோ இல்லையோ அது எடுக்கா விட்டால் உடம்பு முழுக்க வேறொரு இனம் புரியாத வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பித்து விடும்.நித்திரையும் வராது.ஆகவே அந்த வலி குளிசையை சும்மாவே போட்டுக்கொண்டிருந்தால் ராசா மாதிரி இருக்கலாம்.கிட்டத்தட்ட போதைப்பொருள் மாதிரி. எனக்கும் தரையில் சிறிது நேரம் இருக்கும் படி சொல்லியுள்ளார்கள்.20 நிமிசம் சைக்கிள் ஓட்டம் அல்லது நடத்தல் என்று கட்டளை.எனக்கும் பாயில் படுக்க ஆசைதான் .....ஆனால் குளிரை யோசிக்க பயமாய் இருக்கு
 16. தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ.... நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு என்னத்தை எழுதுறீங்கள் குடி சிகரெட் இல்லாதவனுக்கும் அதே வருத்தங்கள் தான் சாரே!
 17. சென்ற வருடம் நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது எனது படுக்கைக்கு அருகில் ஒரு 86 வயதுக்காரர். 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு வந்து போவாராம். சுவாசப்பையை சீர் செய்து கொண்டு போவாராம். அவர் தொடர்து சொன்னார்... மருந்துக்கொம்பனியும் டாக்குத்தர்மாரும் ஆஸ்பத்திரிகளும் உழைக்கோணும் எண்டு தன்னை 100 வயது வரை வைத்திருப்பார்களாம்
 18. இன்று உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு இருதய நோய், வீட்டுக்கு வீடு புற்று நோய். இவையெல்லாம் அல்லது இப்படியான அதிகரிப்பு அன்றில்லையே ஏன்?