Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  35,574
 • Joined

 • Days Won

  303

Everything posted by குமாரசாமி

 1. நான் இப்போது கருத்துக்கள உறவுகள் எனும் தரத்தில் உள்ளேன். சில தனிப்பட்ட பிரச்சனைகளால் பல நாட்கள் யாழ்களத்திற்கு வர முடியாமல் போய் விட்டது. கொஞ்ச நாட்களில் நான் திரும்பி வரும் போது புதிதாக வரும் உறவுகளுக்கு உள்ள உரிமை கூட எனக்கு இல்லாமல் இருக்கின்றது. இதை எப்படி எடுத்துக்கொள்வது?
 2. கோத்தா அமெரிக்க விருந்தினர் அல்ல. ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் இடம் ஒரு பொது இடம். அமெரிக்காவுக்கும் இதுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.. அமெரிக்காவினால் தேடப்படுபவர்களும்,அமெரிக்க விரோதிகளும் ஐநாவிற்கு வந்து செல்ல அனுமதியுண்டு. கொண்ணர் எப்படியோ தங்கையும் அப்படியே.
 3. நான் ஊரிலையும் இஞ்சையும் திருவலை எண்டுதான் சொல்லி பழக்கம்.....வாழ்க்கைப்பட்டு போன இடத்திலையும் திருவலைதான்...
 4. நெடுக்கர் சொன்ன சமூக நல ஆய்வுகள்,சமூக நல திட்டங்கள்,சமூக நல கல்விகள் என புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு ஒழுங்காக சொல்லி கொடுக்கின்றார்கள். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சமூக நலன் பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்கள்.பெறு பேறுகளை அரசுக்கு சமர்ப்பிக்கின்றார்கள். அதை அரசுகளும் முடிந்தவரை செவிமடுத்து முன்னெடுத்து செல்கின்றது. இங்கு ஜேர்மனியில் கோரோனா காலங்களில் பல்கலைகழக பேராசிரியர்கள் மற்றும் வைரஸ் சம்பந்தப்பட்ட பல்கலைகழக ஆராய்சியாளர்களின் அறிக்கைகளை வைத்தே பல முடிவுகள் எடுக்கப்பட்டது. நிற்க... பல இடங்களில் உலக நடப்புகளை மட்டுமே இங்கு பகிர்கின்றோம். அதை சொல்ல முனையும் போது.......இல்லை நீ வா.....வந்து செய்து காட்டு என்ற மனப்பான்மையே பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.புத்தக படிப்பை விட அனுபவம் மேலானது.போலி வாழ்க்கையை விட சொந்த மண் வாழ்க்கை அமைதியானது. தப்பியோடி .....தப்பியோடிய இடத்தில் சந்ததிகளை வளர்த்து விட்டோம். அந்த அனுபவத்தில் சொல்கின்றோம். சொந்த நாடு. சொந்த மண். சொந்த மொழி. சொர்க்கம்
 5. எனது ஊரில் என்னைப் போன்று கிட்டத்தட்ட 20 பேர் அளவில் தான் வெளியூர் வெளியேறியவர்கள். மற்றும் படி ஊரில் உள்ள அனைவரும் கடவுள் கிருபையால் இன்றுவரை நலமே உள்ளனர். இலங்கை அரசியலை தவிர நாடு நல்ல நாடு.
 6. பச்சை புள்ளி நடைமுறையும்,திண்ணையும் இல்லாத காலத்து யாழ்களத்தில் எவ்வித வாக்குவாதங்களும்,குழுவாதங்களும், தடைகளும் இல்லாமலா இருந்தது?
 7. பெண்களுக்கு உடம்பை விட இடுப்பு பகுதி மட்டும் மிகவும் பெரிதாய் இருப்பதற்கு காரணம்...... குடத்தை தூக்கவும், அடுத்து குழந்தைகளை தூக்கவும், இயற்கையால் படைக்க பட்டுள்ளதாகும்.
 8. நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஜேர்மனி இன்று ஒரு யூத நாடாக இருக்க வேண்டும். தங்கள் இனம் மாறாமலிருக்க குடும்ப பெயரை சந்ததி முழுக்க காவித்திரிவார்கள். தமிழிழனத்தில் அதை அழித்தே விட்டார்கள்.
 9. பலருக்கு ஜேர்மனி பெரிய வளமான நாடாக தெரியலாம். ஆனால் இவர்களுக்கு பல விடயங்களில் தன்னிச்சையாக செயல்பட அங்கீகாரம் இன்னும் இல்லை. குறிப்பாக அணு சம்பந்தமான விடயங்களில்...... காரணம்..........இவர்களில் பல சந்ததிகள் மாறினாலும் போர்க்குற்றம் பெரிதாக இன்றும் இவர்களை வாட்டி வதைக்கின்றது.
 10. முன்னெரெல்லாம் சுமேரியரை யாழ்களத்தில் கலாய்த்த வண்ணமே திரிவீர்கள். ஆனால் கொஞ்சக்காலமாக எதுவுமேயில்லை. ஒட்ட நறுக்கி விட்டார்களோ? அது தான் இங்க வந்து....????
 11. குத்துபவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரிகின்றது தானே? அவர்களை பற்றி நேரடியாக நிர்வாகத்திடம் முறையிடவேண்டியது உங்கள் கடமை அல்லவா?
 12. இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும். Eric Schmidt Mark Zuckerberg Steven Spielberg Hermann Rumsfeld Donald Rumsfeld
 13. வணக்கம் மோகன் ஐயா! நான் சொல்ல வந்த விடயம் ஒரு யாழ்கள உறுப்பினர் நீண்ட நாட்கள் வர முடியாவிட்டால் கருத்துக்கள உறவுகள் வரிசையிலிருந்து கருத்துக்கள பார்வையாளர் என்ற தரவிறக்கம் சம்பந்தமாக மட்டுமே. மற்றும் படி பச்சை புள்ளி விவகாரம் யாழ்கள விதிகள் சம்பந்தப்பட்டது. இதற்குள் நான் என்றுமே மூக்கை நுழைத்ததில்லை. காரணம் அது நிர்வாகம் சம்பந்தப்பட்டது.குமாரசாமி ஆகிய நான் நிர்வாகத்திற்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு யோக்கியனும் இல்லை. ஆனால் ஒரு கேள்வி? யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?
 14. ஏதோ எல்லா வெளிநாடுகளும் எல்லா கதவு யன்னலையும் திறந்து வைச்சிருக்கிற மாதிரி.... அப்பிடி வந்தாலும் படிச்சு பட்டம் எடுத்தவையள் தான் கஸ்டப்பட்டு வரலாம். மற்றும் படி கோப்பை ,கக்கூஸ் கழுவ நாங்கள் இருக்கிறம்...
 15. நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ?
 16. ஓம் பாருங்கோ! உந்த பச்சை புள்ளியளை வைச்சுத்தான் ஜேர்மனியிலை இரண்டு வீடு வாங்கி வைச்சிருக்கிறன். சிலோனிலை 50 எக்கர் தென்னங்காணி வாங்கி விட்டுருக்கிறன். முரசுமோட்டையிலை 30 ஏக்கர் வயல் வாங்கி விட்டுருக்கிறன். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலை 1 அப்பார்ட்மென்ட் என்ரை பேரிலை வாங்கி வாடகைக்கு விட்டுருக்கிறன். இப்ப கொழும்பிலை பெரிய மாடி வீடொண்டு பாத்துக்கொண்டு திரியிறன். சந்திச்சால் சொல்லுங்கோ என்ன..... உந்த பச்சைப்புள்ளி பல பிரச்சனைய தருமெண்டு சொன்ன ஆக்களிலை நானுமொருவன். தெரியாட்டில் தேடி வாசிக்கவும். எனக்கு பச்சைபுள்ளியே வேண்டாமெண்டு நான் வேண்டுகோள் வைச்ச திரி... உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.