Everything posted by தமிழரசு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மயூரேசன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கொக்குளாய் கடற்பரப்பில் வீரகாவியமான கரும்புலிகளின் நினைவு நாள்
14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற மோதலின்போது கடற்படையின் நான்கு டோறா படகுகள் கடற்புலிகளால் சேதமாகக்கப்பட்டன. இதன்போது கடற்புலி மேஜர் துவாகரன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://www.eeladhesa...ndex.php?option தாயக விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
13.10.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீர்களின் வீரவணக்க நாள்
13.10.1997 அன்று வவுனியா மாவட்டம் பெரியமடுப்பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சந்திரகாந்தன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 13.10.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அன்பரசன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/13/13 தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த இம்மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறுத்தைபுலி, அளவையூர் கவிகுமரன், கவிக்குமரன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
12.10.1986 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிககொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesa...ndex.php?option மண்ணின் விடியலுக்காக தம்மையே ஆகுதியாக்கிய இந்த மாவீரருக்கு எனது வீரவணக்கம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிதர்ஷன் உங்களிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சப்த89
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வன்னி 01 , அந்நியன்,செழியன், கெவின் ருடோல்ப், ஆகியோருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “..பெண் அடிமைத்தனத்தின்விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…” -தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள். விடுதலைப் போராட்டத்தின் “விழுதுகளுள் ஒன்றாக” உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள். அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1.15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன. துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. ‘நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ.” தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம். ‘என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ.” எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள். அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது. எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. 2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது. தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும். தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம். http://youtu.be/4ArMoG66unY http://youtu.be/ZPl-XKh3dvE http://youtu.be/0F7rMtZze94 http://www.tamilthai.com/?p=28133 தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்க்கு எனது வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் கஜன் & யோகன் இருவருக்கும் பிறந்நாள் வாழ்த்துக்கள் ...........
-
06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு
வெள்ளி, 7 அக்டோபர், 2011 06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ராஜவன்னியன் சிலருக்கு பச்சை என்றால் கொள்ள ஆசை அவர்களுக்கு குத்த்ங்கோ ...........
-
இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
இடிமுழக்கம் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல் அண்ணாச்சி 11ம் ஆண்டு நினைவு
01.10.1999 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அண்ணாச்சி அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesa...ndex.php?option தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்க்கு எனது வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....... மேலும் பல பெற்று வாழவாழ்த்துகின்றேன். அன்புடன் தமிழரசு.
-
ஓயாத அலைகள் 2ல் வீரகாவியமான மாவீர்களின் நினைவு
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
மூத்த தளபதி கேணல் சங்கர்
தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்க்கு எனது வீரவணக்கங்கள். http://youtu.be/TIY5Z2h6rvs
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
வீர வணக்கங்கள்
-
லெப்.கேணல் அருணா - லெப்.கேணல் புத்தொளி நினைவு நாள்
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் .
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ்ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன்உட்பட்ட கடற்புலிகளினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வளங்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளையே இவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai.com/?p=26869 தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
லெப். கேணல் – இரும்பொறை மாஸ்டர் – கடற்புலிகளின் துணைத் தளபதியினதும், மற்றும் – 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவஞ்சலி
சென்ற 16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கடற் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கடற்கலங்களை தேசமாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட….. ….கடற் கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் – 10 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற் புலிகளும், கடற் கரும்புலிகளும் சிறிலங்கா கடற் படையினருக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்தினர். 15 ற்கும் அதிகமான டோறா பீரங்கிப்படகுகளுடன் சுமார் எட்டு மணிநேரம் கடுமையாக சமரிட்டு அவற்றில் இரண்டை மூழ்கடித்து மேலும் இரண்டை கடுமையாகச் சேதப்படுத்தினர். இக்கப்பற் தொடரணியில் 1,200 படையினருடன் சென்று கொண்டிருந்த பிரைட் ஒப் சவுத் கப்பலை தகர்த்து மூழ்கடிக்கும் வாய்ப்பிருந்தது. எனினும் படையினருடன் மக்களும் அதில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்தார்கள் என கிடைக்கப்பட்ட தவறான தகவலால் தாக்குதல் நடவடிக்கை தாமதமானதன் காரணத்தால் அக்கப்பல் தப்பிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது எமது சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள். கவிதை லெப். கேணல் – இரும்பொறை மாஸ்ரர் – கடற் புலிகளின் துணைத்தளபதி, வீரக் கடற்புலிகளின் துணைத் தளபதியே!! வீரவணக்கம் நீல வரி தரித்த இரும்பொறை வீரனே!! வீரவணக்கம் திருக்கோண மாமலை துறைமுகம் அதிர செங்களம் ஆடியவன் எமனேறும் – இரு கப்பல்கள் மூழ்கடித்து – அங்கே பகையேறி வந்த வான்கலம் ஒன்றையும் வீழ்த்திய வீரனே!! ஈனப் படைகொண்ட கயவர் கூட்டத்தை – எல்லையில் உடல் கிழித்துப் – போர்க்களத்தில் புறமுதுகிடச் செய்தவன் பருத்தித்துறை கடற்பரப்பில் – துரும்பரை நீ எதிர்த்துக் கயவர்கள் படகினை கலங்கடித்த வெஞ்சமரில் சிந்திய உன் செங் குருதி உப்பு நீருடன் சங்கமிக்க வீரச் சாவடைந்த கடற்புலித் தளபதியே!! வீரவணக்கம்!! இரும்பொறை என்றொரு பெயர் கொண்டு பெரும்பகை தகர்த்தழித்தான் கரிகாலன் தளபதியே!! உங்களிற்கு எம் சிரம் தாழ்த்திய கண்ணீர் அஞ்சலிகள்!! உங்கள் பணி – விட்ட இடத்திலிருந்து தொடர்வோம் என உறுதி எடுத்துக் கொள்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். http://www.tamilthai.com/?p=26722 தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
லெப்டினன்ட் கேணல் செந்தமிழ் , லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் வீரவணக்க நாள்
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
லெப்டினன்ட் கேணல் செந்தமிழ் , லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் வீரவணக்க நாள்
12.09.1999 அன்று யாழ். நல்லூர் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டலெப்டினன்ட் கேணல் செந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வன்) அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், மட்டக்களப்பு அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26532