Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. ஓம், டயட் கோக் அடிப்பவர் என்ன சொல்கிறீர்கள்? 🤣 பிரிட்டனில் அனுமதி எடுத்தாலும், சம்பந்த பட்ட நாட்டின் அனுமதி இல்லாமல் விமானத்தில் கொண்டு போக முடியுமா? சில, மூளை பிசகிணத்துகள் ரிஸ்க் எடுக்குதுகள் என்று, அது அடுத்தவர்களும் எடுக்கலாம் என்று சொல்வதை விடுத்து, இது, தொந்தரவு பிடித்த விவகாரம். அதாலை. இதனை கொண்டு போகாமல் இருப்பதே புத்திசாலித்தனம். அதனை விடுத்து, அப்படி கொண்டு போகலாம், இப்படி கொண்டுபோகலாம் எண்டு வியாக்கியானம் தேவையில்லை என்பது எனது கருத்து. உந்த ரிஸ்க் எடுக்கிறதுக்கு, பேசாமல் காசோட வாங்கோ, உங்களுக்கு பிடித்த மாதிரி இலங்கையில் வாங்கித்தரலாம். பிரச்சனை இல்லை என்று சொல்லுறன், நீங்கள் என்ன சொல்லுறியள்? போன கிழமை ஆஸ்திரேலியா பார்டர் கண்ட்ரோல் டிவியில் பார்த்தேன். ஒரு விசர், இப்படி ரிவோல்வரினை கொண்டு போயிருக்குது. ஏர்போர்ட்டே அலறி, செக்கிங் எல்லாம் செய்து, ஆளை விசாரிக்க, அது, சிகரெட் லைட்டர், சிநேகிதருக்கு கிபிட் ஆக கொண்டு வந்தாராம். அவருக்கு பைன் போட்டு, அதனை சீஸ் பண்ணி, அனுப்பி வைத்தார்கள்.
  2. அடிவாங்கி காண்ட்பாக்கை வீசி எறிந்து, பொங்கி கத்தி துழைத்துக் கொண்டிருந்த அக்காவின், காண்ட்பாக்கை எடுத்து, வாக்கா, பொங்காத எண்டு அன்பா, அரவணைத்து கூட்டிக் கொண்டு போன வீடியோ இங்க வந்ததே, பார்க்கவில்லையோ?
  3. 54 வயது இங்கிலாந்துப் பிரஜை என்டோன்ன வெள்ளை போல என்று நினைத்தால் கொம்பனி பொறுப்பில்லை. யாராவது, தீவிர தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருந்த ஒருத்தரை, உள்ளுக்கு போட்டு, அவரது இயக்கத்தை தடுக்க, இது, புனையப்பட்டிருக்காலம். ஹீத்ரோ விமான நிலையத்தில், டெர்மினல் 5 பிராஜெக்ட் ஒன்றில் வேலை செய்திருப்பதால், உள்ளே, கன்வேயர் பெல்ட் எப்படி இயங்குகிறது என்று, எமது மென்பொருள் பிராஜெக்ட் டீம் போய் பார்த்தது. மனிதர்கள் பரிசீலனை செய்வதிலும், மென்பொருள், ஸ்கேன் பக்காவாக பிடித்து விடும். மேலும், விமான நிலையங்களில் உள்ள பலவீனங்களை கண்டறிய, அரச, ரகசிய அனுமதியுடன், சிலர் துப்பாக்கி, கைக்குண்டுகள் கொண்டு போய் அவ்வப்போது பரிசோதனை செய்வார்கள். இது, என்ன கதை என்று விரைவில் தெரியவரும்.
  4. சினிமா போலவே மேற்கின் தலுவலே மாயாவி. ராணி காமிக்ஸ், காப்பி ரைட்ஸ் வாங்கி, தமிழில் மொழி பெயர்த்து, அதே படங்களுடன் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய மொழி அணைத்துக்கும் உரிமை பெற்ற நிறுவனம், தமிழில் மட்டும், ராணியிடம் கொடுத்ததா அல்லது, ராணி நேரடியாக பெற்றதா தெரியவில்லை. எனது பெரியப்பா வீட்டில் ஒரு நூலகமே உள்ளது. பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு மட்டுமல்ல, ஆனந்த விகடனில் வந்த இரட்டைவால் இரண்டு, வாண்டு மாமா, அம்புலிக்கு அப்பால் போன்ற கதைகள் வாசித்திருக்கிறேன். ஓநாய் கோட்டை, மாயாவி கதை போலவே காப்பிரைட் வாங்கி வெளியிடப்பட்டது, விகடனால். குமுதத்தில், வந்த பட்டாம் பூச்சி கதை வாசித்திருக்கிறேன். காப்பிரைட் வாங்கி மொழி மாற்றம் செயாயப் பட்ட கதை. இணையம் வந்ததும் நின்று போன இன்னொன்று, அம்புலிமாமா! ஆனால், விகடன், குமுதம், இணையத்துக்கு அமைய தமது பிஸ்ணஸ் மாடலை மாத்தி, உலகெங்கும், புத்தகம் போக வசதியில்லா இடம் எங்கும் போய் வருவாயை பெருக்கிக் கொள்கின்றன. ராணி காமிக்ஸ் போன்ற நிறுவனங்களின் முக்கிய பிரச்சணையே, நிறுவனர்களின் பிள்ளைகள், சிறப்பான கல்வி பெற்று மேலை நாடுகள் போய் அங்கேயே தங்கி விடுவதால், நிறுவணத்தை கவனிக்க ஆள் இல்லாமல் நின்றுவிடுகின்றன. குமுதம் மட்டும் விதிவிலக்கு. நிறுவனர் மகன் ஜவகர் பழனியப்பன் அமேரிக்காவில் புகழ் பெற்ற டாக்டர். ஆனால், ஒரு ஆசிரியர் | நிருவாக குழுவை அமைத்து குமுதத்தை தொடர்ந்து நடாத்துகிறார். அவரது வாரிசுகள் என்ன செய்வார்களோ தெரியாது. ஆனாலும், ராணி போலல்லாது, குழுதம் வருமானத்தில் முன்னனியில் இருப்பதால், ஜவகர் அதை தொடர்ந்து நடாத்த முடிவு செய்திருக்கலாம். அது போலவே, விகடன் நிறுவனர் வாசன், மகன் பாலசுப்பிரமணியன், அவரது மகன் என்று வெளி நாடு போகாமலே உள்ளூரில் இருப்பதால் கவனித்துக் கொள்கிறார்கள்.
  5. விழுந்த அடியும், சாணக்கியன் அரவணைப்பும், மனிசியை துறவி ஆகும் முடிவை எடுக்க வைச்சுடுது போல. 🙄
  6. இல்லையே, பேசாமல் போய் நியமனப் பத்திரத்தை கொடூக்கிறார் எங்கண்ட ஏராளன். எல்லாதாதையுமா ஏற்றாப்பிறகு, டபுக்கெண்டு அறிவிக்க வேண்டீயது தானே! 🤣😂
  7. யாருடைய வியூகமாக இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை குடியொப்ப தேர்தலாக மாத்தி, எமது விருப்பை உலகுக்கு தெரிவிக்க வேண்டும்.
  8. தலைப்பினை மாத்தி, சீனாவின் மாநிலம் ஆகிறதா வடக்கு, கிழக்கு என்று வைக்கவேணும். சீனாக்காரன், சொல்லுக்கு முன் செயல், இந்தியா காரன் செயல் இல்லாமலே வாயால வடை சூடுபவன். 🤣😁
  9. இதே கேள்வியை 1983 கலவரத்தின் பின்னர், குமுதம் அரசுவுடன் கேட்க, இன்று இரவு 250 மில்லி அடித்தால், நடக்கும் என்று பதில் சொன்னார் என்று வீரகேசரியில் வாசித்திருக்கிறேன். நல்ல கலந்துரையாடல். இந்தியாவின் மெத்தனமான அணுகுமுறையே சிங்களத்தின் சீன நட்புக்கு காரணம் என்கிறார். சீனாவுடன் நல்ல தொடர்புகளை பேணவேண்டும். தமிழர்கள் போடு தடி என்று நினைக்க இடம் கொடுக்கக்கூடாது என்பதாக சொல்கிறார்.
  10. வழக்கு ஒரு கோடி 60 லட்சத்திற்கு, தண்டனை 3 வருடம், 50 லட்சம். ஆனால், உதவி பேராசிரியராக தொடங்கிய இவர், 896 ஏக்கரில் 25 பெரிய கல்லூரிகளை வைத்திருக்கின்றார். அதன் மதிப்பு மட்டுமே 20,000 கோடி. 5 கோடியை கடன் வாங்கி, இந்தோனேசிய சுரங்கம் ஒன்றில் முதலீடு செய்து, அடுத்த வருடமே, 100 கோடியாக திருப்பிக்கொண்டு வந்த வியாபார முதலை. 😤 ஒரு சில்லறை காசு அவரை பொறுத்த வரை பிச்சைக்காசு விசயத்தில் மாட்டிக்கிறாரு. ஒரு தீபாவளிக்கு, வீட்டின் முன்னால் நிக்க, டீம்கா ஆட்கள் வரிசையாக வர, 2000 நோட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். கையில் இருந்த காசு முடிய, உதவியாளர், இன்னோரு கட்டு கொடுக்கிறார். இவரும் தொடர்ந்து கொடுக்கிறார். அவ்வளவு பெரிய பொன் மனசு, பொன்முடிக்கு.
  11. ஆள் உள்ளுக்கு போனமாதிரிதான். ஆனா, அரசியல் ரீதியா ஸ்டாலினுக்கு பெரும் தோல்வி. காங்கிரஸை, கழட்டி ஆவது விட்டிருக்கலாம். அதுக்கு, ஈரோடில காசை கொட்டொ, கொட்டு எண்டு கொட்ட, பிஜேபி அரண்டு போய் விட்டது. அடுத்த முறை, பெருமளவு பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையில், இவர்கள், இப்படி காசை எறிந்து, 40 (39+1) சீட்டுகளை வென்று, குடைச்சல் தர போகிறார்கள் என்று பிஜேபி அலெர்ட் ஆகி விட்டதால், வந்த வினை. அதுக்குரிய பலனை அனுபவிக்கிறார்கள். பிஜேபியுடன் சேராவிடினும், காங்கிரசை கழட்டி விட்டால், இனி வரும் பிரச்சனைகளில் இருந்தாவது தப்பலாம். 🤪 பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி, இடைத்தேர்தலில், பணம் கொட்டும் சான்ஸ் இல்லை.... 😰 இந்த மேதாவிகள், கடுமையான தீர்ப்பினை கொடுக்க கூடிய, கண்டிப்பான நீதிபதியிடம் இருந்து, லஞ்சம் வாங்கி, விடுதலை தரக்கூடிய நீதிபதி அமரும் வேறு ஒரு நீதிமன்றுக்கு வழக்கினை மாத்தி, வென்றது மட்டுமல்லாது, அதிமுக ஊழல் கட்சி என்று வேறு உருட்டிக்கொண்டு இருந்தார்கள். உயர் நீதிமன்று, சுஜமாக இதனை எடுத்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த பின்னணியில், இப்போது, உச்ச நீதிமன்றில், கருணை கிடைக்க சந்தர்ப்பம் குறைவு.
  12. இன்னும் ரெண்டு வழக்கு இவர் மேல இருக்குது. ED raid கேஸ் இனித்தான்!
  13. அடிபிடி, பாடம் பத்தியதா, ஆசிரியைகள் பத்தினதா அல்லது மாணவிகள் பத்தினதா எண்டு தெரியல்லையே! 🤨🥺
  14. இஞ்சருங்கோ சாமியார், சிவபெருமான் பார்வதியோட பகிடி விட்டிட்டு, பிறகு, சீனிக்குளிசை டபுள் ஆக போடவேண்டிவரும்... ஓகேவா ? 🤣😅
  15. செஸ், பூர்வீகம் தமிழ் என்று கேள்விப்பட்டேன். அதன் காரணமாகவே, சர்வதேச செஸ் போட்டி தமிழகத்தின் அண்மையில் நடந்தது. சிவனும், பார்வதியும் விளையாடினர் ளன்று ஒரு கோவிலும் இருக்குதாமே!
  16. சிங்கள பாடகி, யோஹானிக்கு கோத்தா அரச காணி பரிசா கொடுத்தார். அப்படி ஏதும் சிலமன் தெரியுதே. அல்லது வாழ்த்துக்கள் மட்டும் தானோ 🤪
  17. விஞ்ஞானம் போற போக்கினைப் பார்த்தால், கடைசீல, ஆம்பிளையளுக்கும் கருப்பையை பொருத்தி பிள்ளையா பெற வைத்திடுவாங்களோ எண்டு யோசனையா இருக்குது. 😲🤣
  18. அமெரிகாக சுப்பிரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போகுமாம்! பைடன், டிரம்ப்: கிழடுகள். ஓய்வெடுத்து அமைதியாகாமல், அல்லாடுதுகள்!
  19. ஜோவ்சாமியார், உள்ள பக்கற்றுக்குள்ள இருப்பது தான் ஆணுறை எண்டு சீடர்களுக்கு சொல்லிக் கொடுக்கல்லையோ! பிழையா விளங்கி, மெசினை கொண்டு போட்டினமோ? யோசிச்சு, யோசிச்சி, ஒரே ரென்சனா இருக்குது !! 🥺🤨
  20. இந்த லூசுத் தலைப்பை என்ன சொல்லுறது? புரிசன்ற ஊர்ப் பக்கம் வந்திருக்குது மனிசி, பிள்ளையளோட!
  21. முதல் காதலன் கடுப்பில பதிவு ஏத்தி இருக்கிறார். ஆக பெட்டை முழு மக்கு என்று தெரியுது. இரண்டு பெடியளும், உள்ளுக்கு போனதும் சரிதான். தலைப்பும் பிழை. பாலியல் துஸ்பிரயோகம் என்பது தவறு. சேர்ந்தே போயிருக்கிறார்கள், விடுதிக்கு - படிக்கப் போகவில்லை அங்கு. சேர்ந்து போனவர் தவறு வீடியோ எடுத்தது. அதை அனுப்பி பிளாக் மெயில் பண்ணியது உண்மையானால், பாலியல் துன்புறுத்தல். ஆனால், முதல் காதலனுக்கு அனுப்பியதே தவறு. நோக்கம் என்ன? பீலா விடவா என்ற கேள்வி வந்தால், பதில்... ஆம் அவர் கடுப்பில் வெளீல விட, தாய்க்கு தெரிய வந்ததா? தல சுத்துது !!
  22. எங்கப்பா உடான்சர், நாலு நியாயம் பிளக்கவேணும் வாருங்கோ. @goshan_che இதிலை, பெட்டையிலையும் பிழை இருக்குதெண்டுறன். படிக்க அனுப்பினால், விடுதிக்கு போயிருக்கிறா. போனது மட்டுமல்ல, வந்த விடியோவை, முன்னாள் காதலனுக்கு அனுப்பி வைத்திருக்குது. ஆக, காதலர் இரண்டு உடன் தான், விடுதிக்கு போயிருக்கிறா. தலைக்கு மேலே விசயம் போனவுடன் தாயிடம் சொல்லி இருக்கிறா போலை இருக்குது. ஆக, இது சின்ன பிள்ளை ஆக இருந்தாலும், பிஞ்சில முத்தின கேசு என்பதால், எனக்கு கோவம் அந்த பிள்ளை மேல வருவது, சரியா, தவறா? பெடியளும் அதே வயசு எண்டால், சட்டம் கொஞ்சம் திக்கு முக்காடும். ஆனால் இரண்டாவது காதலன், விடியோவை அனுப்பி, பிளாக் மெயில் செய்திருக்கிறார். அவருக்கு சிக்கல் தான். ஆக நாடு எங்கே போகிறது என்று சொல்ல போவதில்லை. ஒருவர் இப்படி, காதலியை தள்ளிக்கொண்டு kks விடுதிக்கு ஒன்றுக்கு போனார். ரிசப்ஷனில் இருந்தவர் ரூம் கொடுக்க, பின்னால் வந்த மேனேஜர், பேசி துரத்தி விட்டாராம். அந்த மேனேஜர் இப்ப லண்டனில் உள்ளார், எனக்கு தெரிந்தவர். இவர் சொன்ன கதை நடந்தது, 80 களில் என்கிறார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.