-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு - குவியும் கண்டனங்கள்
Nathamuni replied to ஏராளன்'s topic in வண்ணத் திரை
உங்களுக்கு நான் சொல்வது விளங்காமல் அப்பாவித்தனமா பேசுகிறீர்கள். நிழலிக்கு நான் எழுதின பதிலைப் பாருங்கள். இது சரக்கு படத்திற்கான திட்டமிட்ட விளம்பரம். அணைவருமே சினிமாக்காரர்கள். நேரவிரயம் செய்யாமல், விளங்கினால் நல்லது!! -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
இதைதான் சொல்லுறது சும்மா கிடைக்கிற மாட்டை பல்லை பிளந்து பதம் பார்கிறதென்று. அவர்கள் தேவையானதை அங்கேயே திரட்டி விட்டார்கள். நாங்கள் வாயை மூடுவது நல்லது. இல்லையோ? -
திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு - குவியும் கண்டனங்கள்
Nathamuni replied to ஏராளன்'s topic in வண்ணத் திரை
ஆகா.. அதுவா விசயம்... மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா? முதல்ல, சரக்கு படம் ரிக்கற் எடுத்து தியேட்டரில் பாருங்க. சம்பந்தப்பட்ட அணைவருக்குப் நன்மை!! -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
சரிதான், சீமான் பேச்சினை கேட்க்காமல், அவர் குறித்து வாசிக்காமல், பேசுகிறீர்கள் என்று சொன்னதை, மீண்டும், மீண்டும் எழுத்திலும் உறுதிப்படுத்துகிறீர்கள். நீங்கள் எழுதியதன் அர்த்தம் ஏதாவது, உங்களுக்கு, புரிந்தால், தயவுடன் விளக்கம் தரவும். 🤣🤦♂️😁 போடுவிட்டுது மனிசி. தனியா இல்லை. இரண்டு லட்சுமிகளும் ஆளுக்கொன்று. நம்ம அண்ணி, திரிசா வுக்கு கொதிச்சு பொங்கி எழுந்த குஸ்பு, எனக்கு ஏன் பொங்கி எழவில்லையாம்.... 😁🤣 -
திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு - குவியும் கண்டனங்கள்
Nathamuni replied to ஏராளன்'s topic in வண்ணத் திரை
இதில என்ன ஆண் திமிர்த்தனம், நிழலி? இது அவர்களது தொழில் ரகசியம். சம்பந்தப்பட அனைவருமே சினிமாக்காரர்கள். ஒரே நாற்றம் பிடித்த குட் டையில் ஊறும் மட்டைகள். இவர்களை நம்பி, நாம் சில்லறையை சிதற விடுவது வேஸ்ட். நான் நேற்று சொன்னதுபோலவே, இது சரக்கு படத்துக்கான, விளம்பரம். எனது கணிப்பு சரியானால், பட விநியோகம், ரெட் ஜெயண்ட் இடம் போகும். அப்புறம், கூட்டிக், கழித்துப் பார்த்தால், கணக்கு சரியாக இருக்கும். 😜 -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
அந்த கயவர் கூட்டமே, சீமானை திட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும். எனக்கு, கோடி தந்தாலும், கைது பயம் இருக்கும் கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்தில், மாவீரர் நிகழ்வு நடத்த போக மாட்டேன் என்னும் போது, அதே பயம் இருந்தும், வருவது வரட்டும் என்று தொடங்கி,இன்று பல ஆயிரம் மக்களை திரட்டி மாவீரர் தினம் நடாத்தும் சீமான், எனக்கு மதிப்புக்குரியவராக தெரிகிறார். (உடான்ஸ் சுவாமியார் ஸ்டைலில்: பி.கு) நான் சீமான் நடாத்தும் மாவீரர் குறித்து மட்டுமே பேசுகிறேன். நாதக அரசியல் குறித்தல்ல. -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
பத்து இலட்சம் நிதி சேகரிப்பு திட்டம். தமிழகத்தினுள் மட்டும் இன்று வரை 93% திரண்டுள்ளது. எப்படியும் 100% இலக்கை அடைந்துவுடும் என மகிழ்ச்சியடைகிறார்கள். வழக்கமாக50 - 52% தான் தமிழகத்தினுள். இது மாவீரர் நாள் உணர்வு, தமிழகம் எங்கும் பரவி முக்கியத்துவம் உணரப்பட்டதாலா அல்லது நாம் தமிழர் மக்கள் நம்பிக்கை பெறுவதாலா என சிறு விவாதம் போகிறது. -
இவர், ஜெனீவா போய், சிங்கள ராணுவம் பத்தரை மாத்து தங்கம் என்கிற ரீதியில் கதை விட்டுக்கொண்டிருந்தார். அமெரிக்கா விசா தர முடியாது என்றவுடன், மேலை நாடுகள் எதுவுமே கொடாது என்பதால், கடுப்பில் நிக்கிறார். ஆனால், அந்தம்மா, ஜூலி, இவரை கண்டுகொள்வது போல தெரியவில்லை. இதுபோலவே உளறிக்கொண்டிருந்த உதயா கம்மன்பிள்ள க்கு, அவுஸ் விசா நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஆகி, அமைதியாகி விட்டார். இவ்வளவுக்கும், அங்கே வாழ்ந்தவர். அமைதியான இன்னோருவர், விமல் வீரவன்ச.
-
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
அட, விளங்க நிணைப்பவருக்கு விளங்கிவிட்டது. தலைவர் இறந்த உடலை சிங்களம் காட்டிய போது கூட, அது சும்மா, தலைவர் அவசரமா பணம் வேணுமாம் என்று திரட்டி ஆட்டையப் போட்ட கோஸ்டிகளுள், பணத்தை கேட்டாலும், கொடுப்பதற்கு அமைய சிறப்பா செய்து காட்டுவது பரவாயில்லை தானே 😎 -
வெடி கொளுத்தி கொண்டாடியது சிங்களவர்கள். தமிழர்கள் அல்ல. ஆனால் கண்டனம் தெரிவித்தது தமிழர். ஆகவே. தமிழர்களோயென்று நினைக்க வைக்கிறது. கன்னடம் வைத்த அமைச்சர், யாருக்கு என்றும் சொல்லி இருக்கலாம். சொல்லி இருந்தால், ஆளுக்கு திட்டு விழுந்திருக்கும். ஆக... வடிவேலு ஸ்டைலியே, நான் உங்களை சொல்வதில்லை, என்பது போல... சொல்லி இருக்கிறார். 🤣
-
பிரபாகரன் பிறந்த வாழ்ந்த வீடு என்னும் போது சமகாலம் புரியும். ஆனால் இது ஒரு பேக்காட்டலாகவே தெரிகிறது! 😂🤣
-
என்கெண்டால் இது சுத்துமாத்து போல தெரிகிறது. பிறந்த ஆண்டு 1917. இந்தியா திரும்பியது 1920. அவர் நடிகராவர். பின்னர் முதல்வராவர் என்று தெரியாத நிலையில் எப்படி? எம்ஜிஆர் இருந்தால் கூட நிணைவில் இராது. அவரது பெற்றோர் சொன்னால் தானே. குறைந்த பட்சம் அண்ணண் சக்கரபாணியாவது சொல்லவில்லையே... 😇🤔
-
வட மாகாணத்தில் 3 தொழிற்பேட்டைகளை அமைக்க நடவடிக்கைகள் மும்முரம்
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
வரியில்லாத Free Trade Zone என்றால் நல்லது. நம்ம உடான்சர் அங்கயே நிண்டு தொழிலை கவனிப்பார்! -
சலிப்பை தரும் பைடன் – டிரம்ப்? – மாற்றத்தை விரும்பும் மக்கள்
Nathamuni replied to கிருபன்'s topic in உலக நடப்பு
இந்த இரண்டு கிழடுகளும், கட்டையில ச.. சா.. குழிக்குள்ள போற வயசிலயம் பதவி ஆசைல திரியுதுகள். ஓய்வூதியம் வருது ஒதுங்களாமே!! -
புலம்பெயர் இலங்கையரை இலக்கு வைத்து இலங்கை எங்கும் காணி, வீடு, கடைகள் என ஆதன மோசடிகள் பரவலாக நடை பெறுவதாக தெரிகிறது. சில இடங்களில் பொலீசாருக்கு அல்லது உள்ளூர் காடையர்களுக்கு பணமும் கொடுத்து பயமுறுத்தல்கள் நடந்துள்ளன. சில இடங்களில், உங்களுக்கு இதெல்லாம் பெரிய சொத்தா, எமது பிள்ளைக்கு சீதனமா கொடுங்களன், கரை சேர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று எமோசனல் தாக்குதல் நடக்கிறது. இலண்டணில் ஒரு வைத்திய நிபுணர். பிள்ளைகள் இல்லை. மணைவியும் அவருமாக வெள்ளவத்தையில் பல ஆண்டுகளுக்கு முன் அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி அவ்வப்போது போய் தங்கி வருவார்கள். இந்நிலையில் வைத்தியர் கோவிட் காலத்தில் இறக்க, விதவை மணைவி போனவருடம் போயிருக்கிறார். வீட்டில் வேறு யாரோ... விசாரித்தால் வாடகைக்கு இருக்கிறார்களாம், மூன்று வருடமாக... கோவிட் காலத்தில் இருந்து.. வீட்டு உரிமையாளர் என்று சொல்லப்பட்ட இன்னொரு தளத்தில் இருந்தவர் அது தான் வாங்கிவிட்டதாகவும், விதவை பெண் யார் என்றே தெரியாதென்று சொல்ல... இவர் வெள்ளவத்தை பொலீசுக்குப் போக அவர்கள் நீதிமன்றம் போக சொல்லிவிட்டனர். அநேகமாக பணம் வாங்கியிருப்பர். இப்படிப்பட்ட பல அடுக்குமாடி வீடுகளுக்கு உறுதி ஆவணம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிள்ளையளும் இல்லை. நான் என்ன வழக்கை போடுறது என்று திரும்பி விட்டார். இதைதான் மோசடிக் கோஸ்டிகள் எதிர்பார்ப்பது. வந்தால் இரண்டு அல்லது மூன்று கிழமை... போய் விடுவர் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.
-
அட.... இதை தான்.... அசல் யாழ்ப்பாணத்தான் எண்டுறது! சரி, சரி.... தனீய இருந்து சாப்பிடுங்க... ஒருத்தரும் கேட்க மாட்டம் 🤣😂
-
தமிழ் கடை இல்லாத வேறு தொழில்நுட்ப நவீன வழிகள் உண்டு. மக்கள் தயாரில்லை!
-
அனுப்பிற செலவு, விநியோக செலவு .... இலவசமா கொடுக்க முடியாதே!
-
இவயலிண்ட கூத்தை பார்த்துக் கொண்டு இன்னோரு பார்ட்டி, கம்மெண்டு இருக்குது, கண்டியளே? அதுதான் கோத்தாவை கிளப்பி, ரணிலை இருத்தினது. ஓரமா போய் விளாடுங்கோ எண்டு சொல்லிப் போட்டு, அது தனது அலுவலை பார்க்கும். அதன் கையில தான் இலங்கையின் ராணுவமும் அதன் பெரும் தலைகளும் இருக்குது. நிலைமை மிஞ்சிப்போனா, ரணிலும் அவுட். இலங்கை முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் ராணுவம், மகுடிப்பாம்பு போல, அந்த பார்ட்டி சொல் கேட்டு ஆடும்.
-
யாழில் தங்க நகை அணியாத பெண் மீது தாக்குதல்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி
நகை நட்ட வாங்கிக் கொண்டு போய் லொக்கரில தானே வைககப் போகினம். வீட்டீல வைச்சிருந்தா களவு கொடுக்கப்போகினம். அது கில்ட்டா இருக்கட்டுமன் என்ற நல்லெண்ணம் தான். 🥴😂🤣 தெரிஞ்ச ஒருத்தரிண்ட வீடு பூந்து நகையள கொண்டு போட்டாங்கள். £25,000 காப்புறுதி செக் வர, அதையும் ஆட்டையப் போட்டு கொண்டு போய் அவர் பெயரீலயே பாங்க் அக்கவுண்ட் திறந்து டிப்போசிட்டும் செய்து கொண்டோடிற்றாங்கள். காப்புறுதிக் கம்பனி இவர் தான் அக்கவுண்ட் திறந்து போட்டவர் எண்ட, இவர் இல்லை எண்ட, இரண்டு வருச விசாரணைக்குப் பிறகு தான் காசு கையில வந்தது. நொந்து போய், கில்ட் நகைல வாங்கிப் போட்டு மனிசியை அம்மன் போல கொண்டு திரியிறார். 🤣