Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. நல்லது! ஆனால் அவரது மரணத்தை விளைவித்த இதயத் தாக்குதலுக்கான காரணமே வேறு!!
  2. மீரா சொல்வதே பல வியாபார முதலைகள் செய்வது. பணத்தை NRFC a/c யில்போட்டு, அதற்கு எதிராக 80% வரை உள்ளூர் பணத்தை லோன் எடுப்பது. அதில் ஆதனத்தை வாங்கி, பின்னர் மோர்க்கேஜ் எடுத்து கடணைக்கட்டுவது. வடகைக்கு கொடுத்து வரும் பணத்தில் மோர்ட்கேஜ் கட்டுவது. ஆக, சிங்களவன் எரித்தால், சந்தோசம், நீயே கடனை உழைச்சுக்கட்டப்பா என்று நோ ரென்சன் சிரிப்பு!!
  3. சீனா காரன் வேட்டியோட போய் கும்பிட்ட நயினாதீவுக்கு சிங்கன் கெளம்பீட்டார். இந்தியா எங்களுக்கு செய்த முதுகில குத்தின வேலையளால, சீனக்காரனை நிணைச்சு பீதீல இருக்கவேண்டியது தான். கொல்லையில இருக்கிற சுண்டக்காய் நாட்டுக்கு, புலிகளை அழித்து கொடுத்தாச்சு, எங்களது காலடியில் கம்மென்று இருக்கும் என்று அலட்சியமாக இருந்ததால் தெற்கில சீனாவும் பூந்திட்டுது. மாலைதீவு கதையும் காலி. கிழக்கை பிடிக்க செந்தில்.... வடக்கைப் பிடிக்க சார்ஸ் அம்மா... சீனா, இந்தியா: சபாஸ் சரியான போட்டி.
  4. முத்தையரின் மகன், தனது சகோதரரின் அரசியலுக்கும், குடும்ப வியாபாரத்துக்கும் ராஜபக்சேவை பந்தம் பிடிக்க, சொன்ன வார்த்தைகள், தமிழகத்தில் அவரது முயல்வுகளுக்கு உலையாக வந்த கடுப்பில், தனது வியாபார முனைவுகளை கர்நாடகத்துக்கு நகர்த்தி விட்டார். ஆனால் கடுப்பில் உளறுவார். *** வேலணை, சுருவில் போன்ற தீவுப்பகுதிகளில், உள்ள பணக்கார குடும்பங்களில் வீடுகளில் வேலைக்கு இருந்த மலையக இளைஞர்களை, அங்கே வேறு வீடுகளில் வேலைக்கு இருந்த பெண்களை பேசி, மணமுடித்து வைத்து, சுமார் பத்து குடும்பங்களை, தமது வீடுகளில் இருக்குமாறு விட்டு பலர், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என்று குடி போய் விட்டார்கள். இவர்கள், பாழடைந்து காணப்பட்ட ஒரு சில வீடுகளை உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டு, மலையகத்தில் இருந்து மேலும் பலரை வரவழைத்து குடி அமர்த்தி உள்ளனர். பாடசாலை, வயல், காணி, பயிர்ச்செய்கை, கோவில்கள் என்று அவர்களுக்கு விசா பிரச்சனை எதுவும் இல்லாமல் குடி அமரக் கூடியதாக உள்ளது. பார்க்கும் போது இதுவே நடக்கும் என்று தோன்றுகிறது. அதுவும் நல்லதுதான். கரம்பனில் வெறும் வீடு வைத்திருக்கும் உறவினருக்கும் இதனையே சிபாரிசு செய்துளேன்.
  5. துவாரகா வரவின் நோக்கம், பின்னணி துவாரகா குறித்து தமக்கு தெரியாது, அவர் எங்களுடன் பேசியதே இல்லை என்று, பிரபாகரன் அண்ணன், மகன், டென்மார்க்கில் இருப்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார். அநேகமான, தமிழக தமிழ் தேசிய வட்டாரங்கள் கூட இதனை போலி என்று நிராகரிக்கின்றன. இது உண்மை என்று சொல்பவர்களின் பக்கம் பார்த்தால், அவர்கள் அனைவருமே, இந்திய ரோ உடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டவர்களாகவே தெரிகின்றனர். சிவாஜிலிங்கம் முதல், காசி ஆனந்தன் என்று நீள்கிறது பட்டியல். சரி... நோக்கம் எதுவாக இருக்கலாம்? 1980 களின் ஆரம்பத்தில், இந்திய அரசு தமிழ் இயக்கங்களை ஆதரித்து வளர்த்தது. அப்போது அதன் எதிரி அமெரிக்காவாக இருந்தது. அமெரிக்கா ஒதுங்கிக் கொள்ள, புலிகளும் இந்திய கட்டுப்பாட்டுக்கு வெளியே வர அதனை அடக்கி ஒடுக்க, இந்திய படை உள்ளே வந்தது. பின்னர் 2009ல் புலிகளை ஒழிக்க, சிங்களத்துடன் கூட்டு சேர்ந்தது இந்தியா. இன்று நிலை, தலைவலி போய், திருகுவலி வந்த கதை. சீனா வந்து, தென்பகுதியில் கால் நீட்டி, வடக்கே பூர தலைப்படுகிறது. அதனால் திணறுகிறது இந்தியா. இம்முறை, சிங்களம், சீனாவுடன் சேர்ந்து கபட வேலை செய்கிறது. இலங்கை, இந்திய, சீன பூலோக அரசியலுக்குள் சிக்கி கொண்டுள்ளது என்று கடந்தவாரம், அந்த நாட்டு ஜனாதிபதி இந்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார். ஆனால், இந்த போட்டியால் திணறுகிறது இந்தியா. காரணம் இலங்கை முழுவதுமே, ஒரு விடயத்தில் இன, மத பேதம் இன்றி ஒரே கருத்தினை கொண்டிருக்கிறார்கள் என்றால் அது, இந்தியாவை எக்காரணம் கொண்டும் நம்ப முடியாது என்பதனை. இந்த நிலைமையில், இந்தியாவுக்கு, இலங்கைத்தமிழர் நம்பக்கூடிய ஒரு துருப்பு சீட்டு தேவை. அதுவே தேசிய தலைவரின் குடும்பம். அவர்களது கண்டுபிடிப்பே துவாரகா. இதன் மூலம், தமிழர் நிலைமையினை 1980 காலப்பகுதிக்கு கொண்டுபோய், துவாரகா தலைமையில் தமது சொல் கேட்கும் 'பையன்களுக்கு' டிரைனிங் கொடுக்கிறோம், மீண்டும் ஈழ போராட்டம் தொடங்குகிறது என்று ஒரு திட்டம் இருக்குமோ தெரியாது. ஆனால், இந்தியாவின் கபடத்துக்கு ஆட, தமிழர்கள் இனியும் தயாரில்லை. பிச்சை வேண்டாம் நாயை பிடி கதைதான். இதிலும் பார்க்க, சீனர்களுடன் பேசலாம். சிங்களத்துடன் ஒரு கவுரவமான தீர்வினை பெற்று தந்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி அமைதியாக வாழலாம். ஆனால் அங்கே ஒரு மூன்றாவது சக்தி, மேற்கு உள்ளது. அதன் நோக்கம் வேறு. அது எப்படிப்பட்ட அணுகுமுறை எடுக்கும் என்பது கேள்விக்குரியது. ஏனெனில் அது கடந்த 2022ம் ஆண்டு தனது பலத்தினை நிரூபித்துள்ளது. அதன் காரணமாக இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் பதவிக்கு வந்த கோத்தா வெளியேறி, இந்தியா விரும்பாத ரணில் பதவிக்கு வந்தார். ஆக, ரணில் சொன்னது போல, இல்லாமல், உண்மை நிலையானது, நாடானது, இரண்டல்ல, மூன்று பலம் மிக்க வல்லரசுகளின் பிடியில் சிக்கி விட்டது. மூன்றாவது, மேற்கு - ஒன்றல்ல, பல பலமிக்க நாடுகளின் கூட்டு என்றால் மிகையில்லை. *** உடான்ஸ் சுவாமிகள் ஆசியுடன் சுஜ ஆக்கம்.
  6. இங்க பாருங்கோவன், துவாரகா, கண பழைய உறவுகளை இறக்கி விட்டுட்டா... 🤣🤣 அப்ப, ஆள் வந்தது நல்லதுதானே 🥰 😍
  7. நாலு காசு பார்க்கும், கடின உழைப்பையா, உழைப்பு. 🤣 நமக்கு ஒருநாளில் கிடைக்கும் பணம், அவர்களுக்கு ஒரு மாதத்தில் கிடைத்தாலே, வண்டி அமோகமாக ஓடும். 😁
  8. அப்படி நான் பார்க்கவில்லை. ஒரு ஆர்வம், அனுதாபத்தால் வந்ததாக இருக்கலாம். எல்லோருமே, இது போலி என்றுதானே சொல்கின்றார்கள். இல்லை இது உண்மைதான் என்று சொன்னால் தானே, நமக்கு சந்தேகம் வரவேண்டும்.
  9. களவுறவு எங்கண்ட சாந்தி அக்காவும் களத்திலை.... இதில என்ன விசயம் என்றால், இந்த விசயம் தமிழ்நாட்டினையும் குழப்பி விட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்.
  10. உடான்ஸ் சுவாமிகள் வலு பிசி. என்னமோ அவசரமா சொல்லிட்டு போக வந்தேன் எண்டுட்டு போட்டார். கதைக்க நேரமில்லையாம். ஆறுதலா வரட்டுமன். நாலு சிஸ்சயலை கரைசேர்க்க மும்மரமா இருக்கிறார் போலை கிடக்குது. 😁🤣
  11. அய்யோ, அய்யோ!! நீங்கள் சொல்லுற இடங்களுக்கு இழுத்து வர முன்னமே வெக்கைல உருகி, ஆவியா போயிடும். அதிலும் பார்க்க, ஆப்பிரிக்கா, அரேபியாவை இழுத்துக் கொண்டு போய் பக்கத்தில விடலாம்!!
  12. எங்கு நடந்தாலும், உணர்வு.... உணர்வு... அந்த பெரும் தமிழ் உணர்வு. 🙏🙏
  13. நகைச்சுவைக்காக ஒரு வெளியே அதிகம் தெரியாத விசயம். 1983ல் பிரபாகரன் மணைவி, மதிவதனி வேறு மாணவர்களுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் பல்கழைக்கழகத்தில் சேர்ந்து படித்த முருகானந்தம் என்பவர் அவோவை சுழட்டிக் கொண்டு லைன் அடித்துக் கொண்டு இருந்தார். மதிவதனி உண்ணாவிரதம் இருப்பதால், முருகானந்தம் மும்மரமாக அங்கே இருந்தார். உண்ணாவிரதம் முடிந்ததும் காதலை சொல்லலாம் என்று இருந்தார். உண்ணாவிரதத்தை சிங்கள அரசு கண்டு கொள்ளாது என்ற நிலையில், அதை செய்து கொண்டிருந்த அணைவரும், புலிகளால் அப்புறுத்தப்படும் நோக்கில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மதிவதனி, பிரபாகரன் காதல், கலியாணம் வரலாறு. யாழ் இந்து பழைய மாணவரான முருகானந்தம் பின்னர் இலண்டண் வந்து விட்டார். நண்பர்கள் அவருக்கு, உனது வில்லன் பிரபாகரன் தானே என்றால் சிரிப்பார். காதல் வந்தால் டபாரெண்டு சொல்லீர வேண்டும். இல்லையெண்டால் வில்லங்கம் தான் என்று நக்கல் அடிப்பார்கள். உனது விசயத்தில சொல்லாமல் இருந்தது நல்லது தான் என்பார்கள். அட, கொண்டு போன ஆள் லவ் அடிப்பார் எண்டு எனக்கு எப்படி தெரியும், இரண்டு நாளில ஆள் வரும் தானே என்று நிணைத்தேன்,எண்டுவாராம் முருகு. 🤣😂
  14. உங்கள் பெயரை இணைக்கப் பார்த்தேன். ஏனோ வேலை செய்யவில்லை. ஆனால் டபக்கெண்டு வந்தது ஆச்சரியமா இருக்கிறது!!
  15. மேதகு ஜனாதிபதி அவர்களே! கிழக்கு மாகாண ஆளுனராக சாலேயை போட்டு, அங்கிருக்கும் சமய சம்பந்தமான நிலையங்களுக்கு வெடிகுண்டுப் பிரச்சணைகளை உருவாக்காமல், எமது சிவப்பு தொப்பி லெப்பையரை ஆளுனராக்குமாறு கோருகிறோம். அவரே அந்தப் பதவிக்கு தகுதியானவர்.
  16. பெற்றோர், இருபக்க தாத்தா, பாட்டிகளுடன் வாழ்கிறார்களா? 🤔
  17. திருமுருகன் காந்தி இன்று 15 திராவிட இயக்கங்களுடன், நடாத்திய கூட்டத்துக்கு 30 பேர் அளவில் தான் வந்திருந்தார்களாம்.
  18. சரி, திட்டினவர்கள், ஆதரவு கொடுத்தவர்கள் எல்லாம் வாங்கப்பா! தலைவனின் சரக்கு படம் டிரெயிலர் வந்து பட்டையக் கிளப்புது, பாருங்கோ. வழக்கமா 300,000 தாண்டாத வியூ 1.5M தாண்டிப் போகுது. சர்ச்சையில சம்பந்தப்பட்டவர்கள் அணைவரும், சினிமாக்காரர்கள், நடிகர்கள், பட விளம்பரத்துக்காக நடித்தார்கள் என்றேன். விளங்க நிணைக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி? 🤣😂 அட, அந்த படம்...🤨 தமிழ் சூரியன் என்று உறவு முன்னர் வருவார். இங்கே யாரோ அதைப் பத்தி சொல்ல, இரவிரவாக தேடிப் பார்த்து, அடுத்தநாள், கண்டேன், பார்த்தேன் என்றார். பே அறைஞ்சது போல, பிறகு இந்தப்பக்கம் வரத்தே இல்லை. 😂🤣
  19. ஒருவரின் கருத்துக்கு இவ்வளவு -1 இன்றுதான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. உங்களிடம் ஒரு கேள்வி @karu தலைவர் குடும்பம் வெளியேறியது என்றால் பாலச்சந்திரனுக்கு ஏன் முடியவில்லை என்ற கேள்வி எழுமே. தலைவரோ, குடும்ப உறுப்பினரோ இன்று வந்தாலும், ஆரவாரம் அடங்கியபின் எழும் முதல் கேள்வி: இவ்வளவு உயிர்களை பலி கொடுத்து நீங்கள் மட்டும் சுயநலத்துடன் தப்பித்தீர்களா? மேலும் வந்தால் கூட வயது மற்றும், சிங்கள புலனாய்வு வலையமைப்பு காரணமாக முன்னர் போல் கட்டி எழுப்ப முடியாதே! ஆகவே அவர்கள் பெரும் தியாகத்துக்கு நன்றி. முடிந்த கதை முடிந்ததாகஇருக்கட்டுமே. யாராவது மிஞ்சியிருந்தால் நிம்மதியாக வாழட்டும். காலம் மாறும், நமது விடுதலைக்கு வழியும் வரும் 🙏
  20. குளத்துடன் கோவித்து அடிக்கழுவாமல் இருக்க ஏலாது. வடக்கு, கிழக்கு மலையகப் பொருட்கள் மட்டும் என்ற முடிவே சிறப்பானது.! கிளிநொச்சி கீரை மிக்சர், சிவனடியாள் மிளகாய்தூள் சந்தை கிடைத்தால் பலருக்கு தொழில் கிடைக்குமே. அதே வேளை மேற்கில் பிரபலமான கிங்ஸ் தூள், கொழும்பில் இருக்கும் பக்டறியின் சிறு பகுதியை கூட வடக்கே நகர்த்த மறுத்து விட்டது.
  21. நான் ஆரம்பத்திலிருந்தே சொல்வது, ஈழ அரசியலை, தமிழக, இந்திய அரசியலுடன் போட்டுக் குழப்பி, தாமும் குழம்பி, அடுத்தவர்களை குழப்ப என்றே சிலர் இருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டத்தை வேறு நாட்டவருடன் கையளித்திருப்பார் தலைவர் என்று நிணைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. திராவிடத்தினால் வீழ்ந்தோம் என்பதால், அதே திராவிடத்தால் நீங்களும் ஏமாறாதீர்கள் என்ற ஆலோசணையை வழங்கி அதற்கு என்ன செய்யலாம் என வழிகாட்டியிருக்கலாம், தலைவர். அது திறம்பட நடக்கிறது என்பதே எனது அவதானிப்பு.
  22. ஏன் இப்பவும் எக்சல் வாறீங்களா, ஒக்ஸ்போட் வாறீங்களா என்கிறார்களே. எக்சல் போனால், மண்டபத்துக்கு காசு கட்டனும் எண்டு உண்டியல். பூ போட, ஒத்த ரோசாவுக்கு காசு. முன்னே போனவர் போட்ட பூவை எடுத்து வந்து பின்னே வருபவருக்கு வியாபாரம். கொத்து ரொட்டி, ரோல் யாவாரம். 2008 தலைவர் உரை கேட்க சென்ற பின் எக்சல் போகவில்லை. 2009ல்இலண்டண் மாவீரர் தினத்தில் இரண்டு கோஸ்டிகளாக பிரிந்து நின்றது. ஒரு கோஸ்டி ஒக்போட்டில் பல ஏக்கர் காணி வாங்கிப் போட்டு உள்ளது. யார் பணம் அது? தலைவர் இறந்ததாக காட்டப்பட்ட பின்பும், அவர் கேட்கிறார் என்று பணத்தை கேட்டு ஆட்டையப் போட்ட கோஸ்டிகள் குறித்த உங்கள் கருத்து?? வளவன், நிசத்துக்கு வாங்கப்பா!!
  23. நான் கொடுக்கவில்லை. ஆகவே கணக்கு கேட்கும் தார்மீக உரிமை இல்லை. நீங்கள் கொடுத்திருந்தால், அதற்கு என்ன வேலை நடந்தது என்று தாராளமாக கேட்கலாம் விசுகண்ணை! இதில் என்ன குழப்பம்??
  24. கொடுத்தார்கள்வளரும் வரை. இனி அங்கேயே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அட, அங்குள்ள தமிழர் பணத்தில் தான், சிங்களத்து அம்பாந்தோட்டையில் ஒரு பில்லியன் டாலர் முதலிட வந்தார் ஜெகதரட்சகன். அப்புறம்??
  25. நீங்களும் வாசிக்காமல் பதில் போடுகிறீர்கள் என்று தோன்றுகிறது. தேவையான நிதி 93% நேற்றுவரை உள்ளூரிலேயே கிடைத்திருக்கிறது. 100% இம்முறை அங்கேயே கிடைத்து விடுமளவுக்கு ஒன்று மாவீரர் புகழ் பரவியுள்ளது அல்லது நாதக வளர்ந்துள்ளது. இந்த நிலையில், கணக்கு வேணும் என்று நாம் கேட்க முடியுமா என்ன? வந்த நிதி, செலவு விபரம் சமர்ப்பிக்க வெண்டும் என, தேர்தல் ஆணையம் விதியாக வைத்துள்ளதே.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.