Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  12033
 • Joined

 • Days Won

  21

Everything posted by Nathamuni

 1. ஆடை துறை ஒரு வித்தியசமான முறையில் மாறி வருகிறது. இணைய வழி வியாபாரம் பெருகி வருகிறது. இது போல பெரும் ஆலைகளை வைத்து, மேற்கில் இயங்கிய பல பெரிய நிறுவனங்கள் கடையை பூட்டி, இணைய பக்கம் போகின்றன. ஆகவே,பழமையான முறையில் இயங்கிய இந்த பெரு ஆலைகள் இல்லாமல் போக, புதிய சிறிய ஆலைகள் உருவாகின்றன.
 2. ஒரு சிறு கருத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறேன்..... பாடலை சேர்ந்து உருவாக்கிய போது, வராத சாதியம், பிறகு ஏன் வரவேண்டும் என்ற காரணமாகவே எனது பதில் முதலில் அமைந்தது. சந்தோஸ் பதிலும் அதனை உறுதி செய்தது. இது பணம் பங்கிடும் பிரச்சணை. சாதியம் அல்ல.... அதே எனது கருத்தாக இருந்தது, இருக்கிறது.
 3. இளையராஜா மட்டுமா? சினிமாவில் பிராமணர் எங்கே ஆதிக்கம் செலுத்தினார்கள்? கே பாலசந்தர், விசு தவிர, கருணாதி முதல், எம்ஜிஆர், சிவாஜி, மெய்யப்ப செட்டியார், பாரதிராஜா, பாக்யராஜ், பா ரஞ்சித் என்று அடித்தட்டிலிருந்து வந்தவர்கள் லிஸ்ட் அதிகமே....
 4. இளையராஜா, ஜனாதிபதி ஆகும் கனவில், துதி பாடினார் என்பது எனது கணிப்பு. அதனால், தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லாடலை கண்டுகொள்ளவில்லை. அடுத்த ஜனாதிபதி நீங்கள் தான், இப்போது எம்பியாகுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.
 5. ஓகே... என்சாமி.... சுமந்திரன் பொங்கிறார்.... என்னெண்டு பார்த்துட்டு வாறன்.... திண்ணயில லிங்க்...
 6. மேலே, சந்தோஷ் கருத்தினை பார்த்தீர்களா? எனக்கு, பாடல் தயாரிப்பு குறித்த உள் வீட்டு விடயங்கள் தெரியாது. பாடலை முழுவதுமாக கேட்கவும் இல்லை. ஆனால் ஒருவர் குறை சொல்லும் போது.... மறுபக்கம் வேறு கருத்து இருக்கும் என்று நினைத்தேன். இது சாதி பிரச்சனை போல தெரியவில்லை. பங்குப் பிரச்சனை போலவே படுகிறது. அதாவது, எனது வேலை கூட.... அல்லது பாடல் என்னது.... எனக்கு கூட பங்கு வேணும்.......
 7. சந்தோஷ் நாராயணன் ட்வீட் பண்ணி உள்ளார். அறிவு, தான், தீ என்னும் இன்னுமொருவர் சேர்ந்தே உருவாக்கினோம். அவர் மட்டுமல்ல. எனக்கான வரிகளுக்கு தீயும், அறிவின் இடங்களுக்கு நானும், இசையமைக்க, பாடலை அறிவு எழுதினார். இது ஒரு கூட்டு முனைவு. வருமானம் சமமாக பங்கிடப்படுகிறது. அறிவு அமெரிக்காவில் இருப்பதால், இந்த நிகழ்வில் பங்கு கொள்ள முடியவில்லை. இறுதியாக, அதே பாடல் மெட்டில், 'வாங்கோ, வாங்கோ ஒன்னாகி' என்று அறிவை அழைக்கிறார்.
 8. ஒன்று போதாதா, என்ன? மேலும் நான் எனது பார்வையை தான் சொன்னேன், அதில் தவறு இருக்கலாம்.
 9. கால்களுக்கு இடையில் வால் உடன் சண்டை போடுவது யாராக இருக்கும்.
 10. அப்படி சொல்ல முடியமா என்ன? இளையராஜா, எந்த அடி மட்டத்தில் இருந்து வந்து, தனது திறமையால் நம்மை எல்லாம் கட்டிப்போட்டார்.... ஆகவே.... திறமை.... அது திமிறிக்கொண்டு வெளியே வரும், வந்தே தீரும் என்பது எனது பார்வை. தவறானால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன். *** சிலர், குறை சொல்வார்கள். நெருங்கி போய் விசாரித்தால்.... குறித்த நபர் திறமையாளர் தான், சந்தேகமே இல்லை. ஆனால், அய்யோ.... அவருடன் வேலை செய்ய நான் பட்ட பாடு, நாய் பாடப்பாடு என்று அழுவார்கள். இவர் அப்படி ஒருவராக இருக்கலாமோ என்று நினைக்கிறேன். உதாரணமாக, சிறந்த நடிகர் கார்த்திக்..... படிப்பிடிப்புக்கு வந்தால், ரூமை பூட்டிக்கொண்டு, தண்ணி, வேறு.... என்று படப்பிடிப்புக்கு வெளியே வராமல் படுத்து விடுவார். சந்தையினை இழந்தார்..... அறிவு சொல்வது.... ஒரு பக்கம். அவர் புறக்கணிக்கப்படுவராகின், அதுக்கு என்ன காரணம் மறுபக்கம் வைத்திருக்கிறார்கள் என்று அறிய ஆவல்.
 11. உங்கடை, உங்கடை வீடுகளில, மறந்தும் காட்டிப் போடாதீங்க.... ஒண்டு .... அடி செருப்பால... எண்டு பதில் வரும்... அல்லது.... இரண்டொரு மணித்தியாலம் இருத்தி வைச்சு..... நெருப்பை காட்டி பயமுறுத்தப் படிவியள்...... அப்புறம், தனிய...யாத்திரை கிளம்பிரன் எண்டு போறது கஸ்டமாயிடும்...
 12. சம்பந்தரின் ஆட்கள் சும்மா குழப்பி அடிக்கினம், கணபதி ஜயர் வெட்டியாடிப் போட்டார் எண்டு தானே எல்லோரும் நினைக்க, ஜயர்..... சந்தில நிண்டு ‘ஜயோ போச்சே...கள்ளப் புரிஜன் வேலியால புகுந்து வாறானே’ எண்டு கத்தினால் என்னத்தை விளங்குறதாம்? அது சரி.... உந்த குறிசுடுற விசயம்.... யாரு, யாருக்கு சுட்டது? ஜயருக்கே, பஞ்சிப்பட்டுக் கொண்டிருக்க, சூடு விழுந்தது?
 13. இந்தியாவின் தெற்கு அண்டை நாடான இலங்கையில் உள்ள துறைமுகத்திற்கு சீன இராணுவக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகை குறித்து புது டெல்லி கவலை தெரிவித்ததை அடுத்து, "சம்பந்தப்பட்டவர்கள்" தனது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்க்கும் என நம்புவதாக சீனா வெள்ளிக்கிழமை கூறியது. சீனாவால் கட்டப்பட்டு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தியாவின் கொல்லைப்புறத்தில் ராணுவ தளமாக சீனா பயன்படுத்திக்கொள்ளும் என இந்தியா கவலை கொண்டுள்ளது. $1.5 பில்லியன் மதிப்புள்ள துறைமுகம் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முக்கிய கப்பல் பாதைக்கு அருகில் உள்ளது. ஏழு தசாப்தங்களில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5 அம்பாந்தோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரவிருந்ததாகவும் Refinitiv Eikon இன் கப்பல் தரவுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு இந்தியா 4 பில்லியன் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது. வியாழன் பிற்பகுதியில் ஒரு வாராந்திர மாநாட்டின் போது, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகையை அரசாங்கம் கண்காணித்து வருவதாகக் கூறினார், புது தில்லி அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் என்று கூறினார். கப்பலின் வருகைக்கு எதிராக இந்தியா ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் வாய்மொழியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ராய்ட்டர்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகம், பெய்ஜிங் எப்போதும் உயர் கடல்களின் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகவே பயன்படுத்துகிறது, என்கிறது. “சீனாவின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியாகப் பார்த்து அறிக்கை செய்வார்கள் என்றும், சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் என்றும் சீனா நம்புகிறது” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் எல்லையில் ஆயுதம் தாங்கிய மோதல்களில் குறைந்தது 20 இந்திய மற்றும் நான்கு சீன வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் இறுக்கமடைந்துள்ளன, மேலும் இரு தரப்பிலும் துருப்புக்கள் பெருமளவில் குவிக்க வழிவகுத்தது. வெளிநாட்டு பாதுகாப்பு ஆய்வாளர்கள் யுவான் வாங் 5 ஐ சீனாவின் சமீபத்திய தலைமுறை விண்வெளி கண்காணிப்பு கப்பல்களில் ஒன்றாக விவரிக்கின்றனர், இது செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல்களை கண்காணிக்க பயன்படுகிறது. சீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் பற்றிய பென்டகனின் வருடாந்திர அறிக்கை யுவான் வாங் கப்பல்கள் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) மூலோபாய ஆதரவுப் படையால் இயக்கப்படுகிறது என்று கூறுகிறது. இலங்கையின் ஆலோசனை நிறுவனமான Belt & Road Initiative Sri Lanka, யுவான் வாங் 5 ஒரு வாரத்திற்கு ஹம்பாந்தோட்டையில் இருக்கும் என்றும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் என்றும் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை." கடனை அடைக்க முடியாமல் திணறிய இலங்கை தனது பிரதான தெற்கு துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளை 2017 ஆம் ஆண்டு 99 வருட குத்தகைக்கு சீன நிறுவனத்திடம் கையளித்தது. சீனா இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குபவர்களில் ஒன்றாகும், மேலும் விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு நிதியளித்துள்ளது, இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது, இது இப்போது இழந்த நிலத்தை மீண்டும் பெற முயற்சிக்கிறது. 2014ஆம் ஆண்டு கொழும்பில் சீன நீர்மூழ்கிக் கப்பலையும் போர்க்கப்பலையும் நிறுத்த அனுமதித்ததால் இலங்கை இந்தியாவைக் கோபப்படுத்தியது.(ராய்ட்டர்ஸ்) https://www.dailymirror.lk/top_story/China-defends-military-ships-planned-visit-to-SL-as-India-voices-concern/155-242092 போராளிகளுக்கு பயிட்சி, ஆயுதம், கையை திருகி 13 என்று சிங்களவரும் நம்ப முடியாத வேலைகளை செய்துள்ளதே. அதே வேளை, இந்திய ராணுவத்தினை அனுப்பி செய்த அட்டுழியத்தால் தமிழரும் நம்ப முடியாத வடு. அது மட்டுமா, முள்ளிவாய்க்காலில், இந்திய வெளியுறவுக் கொள்கையினை, சோனியா எனும் விதவைப்பெண்ணின் பழிவாங்கலுக்காக வளைத்ததால், இந்த நிலைமை. *** பந்து புதுடெல்லியில் இல்லை, பீகிங், வாஷிங்டன் போய் நீண்ட காலம் என்று நான் சொன்னது உறுதி ஆகிறது. நானும் ஏரியா ரவுடி தான் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டியது தான், நிலைமை.
 14. நான் முன்பே இங்கு சொன்னதுதான். இலங்கைத்தீவில், பருத்தித்துறை முதல் மாத்தறை வரையும், புத்தளம் முதல் மட்டக்கிளப்பு வரை, மக்கள் முழுவதும் இன, மத பேதம் இன்றி ஒத்த கருத்தாக நினைப்பது, இந்தியா ஒரு போதுமே தன்னை நம்பும் படி நடந்து கொள்ளவில்லை என்பதால், அதனை நம்பவே முடியாது.
 15. இன, நிற மத வேறுபாடுகளை மீறி, மக்கள் விரும்பினால், ஒருவர் உயர் பதவிக்கு வரமுடியும் என்பதற்கு உதாரணம், பெஞ்சமின் டிசேரலி - யூதர், ஹிட்லர் - ஆஸ்திரியர், ஒபாமா - மிக சிறந்த பேச்சு வன்மை கொண்ட கலப்பினத்தவர். ** மோ பாரா (மொஹமட் பாரஹ்) என்னும் சோமாலியர். அகதியாக பத்து வயதில் பிரிட்டன் வந்தவர். ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட மரதன் போட்டிகளில் வென்று, மக்களினால் விரும்பப்படும் ஒருவர். ராணியம்மாவினால் சார் பட்டம் கொடுக்கப்பட்டவர். அண்மையில், தனது உண்மையான பெயர் வேறு, இது நாட்டினுள் கடத்தியவர்கள் வைத்த பெயர் என்று சொல்ல, அரசும், அதனால் என்ன, உண்மையான பெயரை திருத்திக் கொள்ளலாமே.... அறியாத சிறு வயது.... ஏமாத்த பட்டிருக்கிறார் என்று சொல்லி விட்டது. சட்டப்படி பொய் சொன்னால், குடியுரிமை பறி போகலாம். ஆனால் மக்கள் விரும்பும் ஒருவர் என்பதால் கடந்து போகிறார்கள்.
 16. ரிஷியோட, ஜாவிட் என்னும் பாகிஸ்தானிய வம்சாவளிகாரர் ஒருவரும் ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு தெரியும் என்ன நடக்கும் என்று, போட்டி இடவில்லை. இவர்... தேவையில்லாமல் இதுக்குள்ள போய், தோல்வி அடையப்போகிறார். இது இலங்கை போல எம்பிக்கள் தேர்வில் இல்லை.நாடு முழுவதும் உள்ள, இரண்டு லட்சத்துக்கும் மேலான கட்சி உறுப்பினர்கள் தேர்வில் நடைபெறுவது. ஆகவே வெள்ளையம்மா தான் வெல்லுவார். பிரித்தானிய வரலாறில், விக்டோரிய மகாராணி காலத்தில் 19ம் நூறாண்டில், பெஞ்சமின் டீஸரேலி எனும் யூதர் பிரதமராக வந்தார். அவரது வீடு, நேஷனல் டிரஸ்ட் என்னும் தர்ம ஸ்தாபனத்தின் பொறுப்பில் உள்ளது. அந்த வீட்டின், உள்ளே, unlikely prime minster in Victorian era என்று பொறிக்கப்பட்டு இருந்தது. அதன் அர்த்தம் என்ன என்று அங்கிருந்த பெண்மணியிடம் கேட்டேன். அந்த காலத்தில், பேரரசு ஒன்றை நடாத்திய, பெரும் பலத்துடன், உலகின் தாதா போன்று திகழ்ந்த, இனவாதம் மிக்க (no blacks, no dogs) , அடிமை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு நாட்டில், ஒரு யூத அகதி குடும்பத்தின் மகன் பிரதமராக வருவதனால், அதீத திறமை மிக்கவராக இருந்திருக்க வேண்டும் அல்லவா என்றார். அதே போல, அவர் இறந்த பின்னர், மரபை மீறி, அவரது அந்த வீட்டுக்கு சென்ற, விக்டோரியா மகாராணியார், எனது பிரதமர்களில், மிக திறமைமிக்கவர் ஆக இருந்தார் என்று நினைவு குறிப்பில், சொந்த கையெழுத்தில் பதிந்து சென்றார். அந்த திறமை இவருக்கு இருப்பதாக தெரியவில்லை. மேலும், அவருக்கு பதவி தந்து அழகு பார்த்த போரிஸ் முதுகில் குத்தியவர் என்ற கறுப்பு புள்ளி இவர் மேல் உள்ளது. அது ரசிக்க கூடியது அல்ல.
 17. இலங்கை வல்லரசுப்போட்டியின் மத்தியில் சிக்கிவிட்டதா? இலங்கையின் இன்றய நிலை பல ஊகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது. ரணில் விசயத்தில், இந்திய, மேற்கு கைகள் உள்ளன என்ற நிலைப்பாட்டில் பல ஊடகவியலாளர்கள் இருந்தனர். ஆனால், டல்லஸ் ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க சொல்லி இந்தியா வலியுறுத்தியதாக சில தமிழ் அரசியல்வாதிகள் வெளியே சில தகவல்களை கசிய விட, அதனை இந்திய தூதரகம் மறுக்க.... ரணில் இந்திய விருப்புக்குரியவர் இல்லையோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சீனாவின் யுத்த கப்பல் ஒன்றுஇலங்கை வருவதும், அது குறித்து ரணில் அமைதி காப்பதும், இந்தியா அதீத கரிசனை காட்டுவதும் கவனிப்புக்குரியதாகி உள்ளது. மேலும், போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைதாகி உள்ளதும், போராட்டம் நடத்தியவர்கள் குறிவைத்து இரும்புக்கரம் கொண்டு அடக்க படுவதும் இது ரணில் ஜனாதிபதி ஆகிய அடுத்த மணித்தியாலத்தில் இருந்து ஆரம்பமாகியதும் ஒரு செய்தியினை தெளிவாக சொல்கிறது. சீன சார்பு மகிந்தா, தனது கட்டுப்பாடினை மீறிய, தன்னையே பதவியில் இருந்து தூக்கிய தம்பி கோத்தாவை, எப்படி பதவியில் ஏத்தினரோ, அதே போல இறக்கி, தனது நண்பர் ரணிலை ஏத்தி இருக்கிறார். இதில், இந்திய ரோ, வழக்கம் போலவே கோட்டை விட்டு விட்டது போல தெரிகிறது. கோட்டை விட்டு, விட்டு, சீன கப்பல் வருகிறது, குய்யோ,முறையோ என்று குளறுகிறது. ஆக, சிங்களம் மீண்டும் ஒரு ஆப்பினை சொருகி உள்ளது போலவே தெரிகிறது. கேள்வி என்னவென்றால், இந்திய தெரிவாக இருக்காத ரணில், சீன தெரிவா அல்லது மேற்கு தெரிவா என்பதே இன்றுள்ள கேள்வி. ஏனெனில், வெளிநாட்டு கரம் பின்னால் இருந்தது என்பது தெளிவு. அது எந்த கரம் என்பதே இப்போதுள்ள கேள்வி. ஆக, இலங்கை ஒரு வல்லரசு போட்டிக்குள் லாவகமாக சிக்கி உள்ளது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய போகிறது? என்ன செய்ய முடியும்? இப்போதுள்ள கேள்வி, ரணில் சீனாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ஒரே தடவையில் இலங்கையின் முழு கடனையுமே சீனா அடைத்து விட்டால், இந்திய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதனை நினைத்தால்.... சிரிப்பு, சிரிப்பாக வருகிறது.
 18. ரொம்ப ஆட்டம் போடாதீங்கப்பு.... இருக்கிற எரிபொருள்.... இன்னும் ஒரு மாதத்துக்கு தான் காணும். அதன் பிறகு... பழைய கதை தான். போராட்டத்தினை ஒடுக்க முயலும் ரணில் டொலர் ஒண்டையும் கொண்டு வரவில்லை.... கொண்டு வரக்கூடிய நிலையும் இல்லை. மக்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள்...
 19. இத்தால் நாம் விடும் அறிவித்தல் என்னவெண்டால், கோத்தாவின் கோவணத்தையும் எடுத்தவர்கள் கையளித்து விடுங்கள். நேற்று கோத்தாவின் கொடியை கொண்டு போய், படுக்கையில் விரித்து படுத்தவரை கைது செய்துள்ளார்கள். அவரை செக் பண்ணி பார்த்திருக்க வேண்டும்... சிலவேளை கோத்தாவின் கோவணத்தை போட்டுக் கொண்டிருக்க கூடும். கோவணம் இல்லாமல்,கோத்தா சிங்கப்பூரில், வீட்டினுள் முடங்கி போய் இருக்கிறார். தயவுடன் அதை கொடுத்து உதவுங்கள்.
 20. நம்ம... பங்கர்.... பழம் திண்டு கொட்டை போடுற ஆள்..... பகிடி, வெற்றி விளங்கும்..... நோ மனஅழுத்தம்.... சரியோ.... ஓகே..
 21. மகிந்தா காலத்திலேயே வெவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இங்கே தமிழ் சிறியர், வசாவிளான் பக்கம் ஆமி, மிளகாய் தோட்டம் செய்யும் படம் இணைத்திருந்தார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.