Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. அது உஙகள் அவதானிப்பு. எனது அவதானிப்பு வேறு. அது உங்களினதிலும் வேறானது. அது குறித்து பல முறை சொல்லி விட்டதால், மீண்டும் சொல்வது தேவையற்றது. ஆனால் நான் சொல்வது, உங்கள் தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடு குறித்த கவலை தேவையற்றதும், காலம்கடந்த காலாவதியான ஒன்றுமாகும். சீமான் தனது அரசியலை செய்யட்டும். அதனை இழுத்து எமதரசியலுடன் குழப்பாதிருப்பது தான் உசிதம். புரியாது என நிணைக்கிறேன்.
  2. இப்ப உங்கள் கருத்தின் மேற்பகுதிக்கு: உங்கள் கவனிப்பும், அவதானிப்பும் ஒரு சதத்துக்கு கூட பிரயோசனம் இல்லை. இலங்கைத் தமிழர் நலன் என்றுமே இந்தியாவின் முன்னுரிமையாக இருந்ததுமில்லை. இருக்கப் போவதுமில்லை. நீங்கள் சொன்ன விச செடி 2009ல் அல்ல, 1991ல் இராஜிவ் கொலையுடன் ஊன்றப்பட்டது என்பது நிசமில்லையா என்ன? புலிகள் எதிர்ப்பும், புலி ஆதரவாளர்கள் கைதும் நடந்தது. அப்போதிருந்தே காங்கிரஸ் கருவறுக்க தருணம் பார்த்திருந்தது. ஆக, 2009ல் இந்தியா கருவறுத்தல் முடிய, சத்தமில்லாமல் பூந்து விட்ட சீனனைப் பார்த்து மிரள்கிறது. இன்றைய நிலையில் எமக்கு இழக்க எதுவுமே இல்லை. இந்தியாவுக்கு இழக்க பல உண்டு. அதற்கு ஈழத்தமிழர் தேவை, எமக்கு தேவையில்லை. காரணம் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு முதுகில் குத்தப் பட்டுள்ளோம். தமிழகமோ, இந்தியாவோ ஏதாவது செய்யும் நிலையிலும் இல்லை. காத்திரமாக ஏதும் செய்யாது துவாரகா விசயம் போல குழப்பம் விளைவிக்கிறது. நான் முன்னரே சொல்லிவிட்டேன். பந்து டெல்லியில் இல்லை. அது பீகீங், வாசிங்டன் பக்கம் போய் நீண்ட காலம். அதன் காரணமாக தமிழக அரசியல் குறித்த உங்கள் ஈழ அரசியல் ஊடான பார்வை தேவையற்றதும், முக்கியமானதும் அல்ல. அதை ஈழ அரசியலுடன் குழப்பாது அதன் போக்கிலேயே பார்ப்பதே சிறப்பு! நீங்களும் குழம்பி, இங்கே எங்களையும் குழப்புகிறீர்கள்!!
  3. நீங்கள் தான் மாஞ்சு மாஞ்சு பாராட்டுறியள். கனடாவில் மாட்டிக்கிற மாதிரி வேலை. அமேரிக்காவில் வேலை தொடங்க முதலே கைது. மாலைதீவில் மெகா சொதப்பல். துவாரகா மேற்றர் சொதப்பலோ சொதப்பல்- சொன்னது உடான்சர். இலங்கையில், ஓரமா இரு என்று, கூப்பில இருத்திப் போட்டு கோத்தாவை, இறக்கி ரணில ஏத்தீற்றுது அமேரிக்கன் கவுண்டர் பார்ட். நீங்கள், பாவம், இரவிரவா, தண்ணீல வட சுடுறியள்!! நாங்கள் என்ன வைச்சுக் கொண்டு வஞ்சணையே செய்யிறம். நல்லா இயங்கினா பராட்டிட்டுப் போறம்!! அவ்வளவு தானே!!
  4. ரணிலின் மாமன் ஜேஆர் இஸ்லாமியரை தமிழர்களிடம் இருந்து பிரித்தார். அதுக்கு முன்னர், இந்திய தமிழரை, தொண்டைமானை ஈழத்தமிழர்களிடம் இருந்து பிரித்தார். இப்போது ரணில் செய்வது, இந்திய அரசியலுக்கு எதிர் அரசியல். முக்கியமாக, கிழக்கு மாகாண ஆளுநராக போடப்பட்டவர், இந்தியாவின் அழுத்தத்தினால். இதன் எதிர் விளைவே, நீங்கள் சொல்லும் வேலை. எத்தனை நாளுக்கு? இந்தியா, இலங்கையில் தனது ஆளுமையினை முழுமையாக இழந்து நிக்கிறது. சீனா, பேச்சு குறைவு, செய்யும் வேலை கூட. அடுத்த பக்கம், மேற்கு.... அதுவே நாம் சார்ந்து நடக்கவேண்டிய தளம்.
  5. ஒண்டுக்குமே உதவாத ஒரு அமைப்பினை தூக்கிப் பிடிச்சு அதனை கொண்டு போய் யாரோடையாவது சொருக நினைக்கிற நீங்கள் யாறோ? றோவா(?) தண்ணி அடித்துக் கொண்டே யோசிக்கிறேன் 🤣😁
  6. தென் ஆசியாவிலே, லண்டனுக்கு அடுத்து, கொழும்பில் தான், விக்டோரியா மகாராணி காலத்தில் நிலக்கீழ் drainage சிஸ்டம் அமைத்தார்கள். அது காலத்துக்கு அமைய முன்னேற்ற படவில்லை. அதுவே அதன் குறைபாடு. சென்னையில், யாழ்ப்பாணத்தை போலவே, ஒரு முழுமையான drainage சிஸ்டம் இல்லை. வீதியின் ஓரத்தில் ஓடும் சாக்கடை தான், வழிக்கால்.
  7. பிரான்சில் இருந்து, ஆங்கில கால்வாயை கடந்து ஓடுங்கோ என்று ரப்பர் படகினை கொடுத்து, அனுப்பி, பிரான்ஸ் தெருவெல்லாம் சுத்தமாக்கிப் போட்டார் மக்கிறோன். விசுகரிண்ட மகிழ்ச்சியை எழுத்தில் பார்க்கலாமே. உங்க வந்த ஆட்களை ருவாண்டாவுக்கு அனுப்ப நிக்கினம்.
  8. ரிசியும், சுலேலாவும் இறக்கவேண்டிய ஆட்களை எல்லாம் இறக்கிப்போட்டு, கதவை பூட்டுகினமாம். இனி பூட்டினா என்ன, பூட்டாவிட்டால் தான் என்ன? ரிசியின் மாமனாரின் infosys ஒரு பெரும் கூட்டத்தையே இறக்கி இருக்கும். வந்த கூட்டத்தில், care home வேலை என்று வந்து ஏமாந்த கூட்டத்தினை, கோவில்களில் பிரசாதம் கொடுக்கும் இடங்களில் பார்க்கலாம். என்ன விசயம் எண்டால், முந்தி மாதிரி, PR, Citizenship இலகு அல்ல. வாங்கோ, வேலை செய்து வரியை கொடுங்கோ, கிளம்பி போய் கிட்டே இருங்கோ.
  9. உங்களால் இனவாதம் பேசி, பதவிக்கு கொண்டு வந்து அமர்த்திய, கோத்தாவையே, காப்பாத்த முடியவில்லை. அதுக்குள்ளே தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லையாம். இப்படித்தான் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரிட்டிஷ்காரரும் மிக அண்மையில இந்தியரும் கொக்கரித்தார்கள். இலங்கை வரலாறில், போர்த்துக்கேயனை உள்ளே கொண்டுவந்தது சிங்களவன். சுதந்திரமாக இருந்த கண்டி ராச்சசியத்துனுள் பிரிட்டிஷ்காரனை கொண்டுவந்து சேர்த்தது சிங்களவன். இந்திய படைகளை கொண்டு வந்து இறக்கினது சிங்களவன். இப்போது சீனனை கொண்டுவந்தது சிங்களவன். போர்த்துகேயனுடன் சரணாகதி அடையாமல் போர்க்களத்தில் மாண்டவன் யாழ்ப்பாண தமிழ் மன்னன் சங்கிலியன். பிரிட்டிஷ்காரனுடன் வன்னியில் போரிட்டு, போர்க்களத்தில் மாண்டவன் பண்டாரவன்னியன். கண்டியில் இறுதியில் சூழ்ச்சி வெல்லும் வரை பிரிட்டிஷ்காரனுடன் போரிட்டவன் ஸ்ரீவிக்கிரமராசசிங்கன், தமிழன். இந்திய படைகளை அடித்து விரட்டியவன் பிரபாகன் என்ற தமிழன். இறுதியாக, பெரும் வல்லரசுகளை போரில் சந்தித்து, போர்க்களத்தில் வீழ்ந்தவன் தமிழன் பிரபாகரன். சுதந்திரத்தை காக்க தமிழன். நோகாமல் நொங்கு குடிக்க நினைக்கும் சிங்களவனே, கொண்டுவந்த சீனனை திரத்த ஒரு தமிழனை தேடும் போது, புத்தி வரும். அதுவரை பிழைத்துப் போ, மூடகனே. 😡
  10. விடுமுறையில் போட்டு வாறன்... பூட்டினை பிடிச்சி தொங்காதீங்க என்று வேற சவடால் விட்டோமே என்று பார்த்துப் பார்த்து, மீசை துடிக்க, கண்கள் சிவந்து... இருந்தவருக்கு... துவாரகா விசயம் லட்டு போல வந்தது. அதை வச்சு, பூந்திடார்.... இனி சிங்கனை பிடிக்க ஏலாது ... இன்னொரு பெரிய ரவுண்டு வருவார்...😜😁🤣
  11. கணநாளக்கு பிறகு திரியை எட்டிப் பார்த்தன். பூட்டினை போட்டு இந்த ஆட்டு ஆட்டுறமே, உடான்சர், சிங்கன் வராமலே போவார் என்று நினைத்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை. உடான்சர் ஏமாத்தவில்லை...
  12. இரண்டு தென் இந்தியர்களின் பெரும் போட்டி சுந்தர் பிச்சை - சத்யா நடெல்லா இருவரும் உலகின் மிக பெரிய நிறுவனங்களின் CEO கள். இவர்களிடேயே நடக்கும் பெரும் போட்டி, பிரமிக்க வைக்கிறது. ஆனால் ஆரோக்கியமானது. கூகிள் சேர்ச் என்ஜின் ராசா. சந்தையியலில், hope marketing இல் இருந்து target marketing கொண்டு சென்றது என்றால் கூகிள் தான். அதன் அடுத்த அடியாக youtube வந்து சேர்ந்தது. உலகமே அதனுள் மூழ்கிப் போனது. ஈரோடு அம்மா வீடியோ மட்டுமல்ல, யாழ் சமையல் என்று நமது கள உறவின் தாயாரின் வீடியோ கூட வருமளவுக்கு அதன் வீச்சு இருந்தது. ஆக, கூகிள் முன்னணியில் இருந்து பெரும் தாக்கத்தினை உண்டாக்குவதாக கருதப்பட்டது. மறுபுறம், மைக்ரோசாப்ட் சத்தமே இல்லாமல், linkedin ஐ வாங்கிப்போட்டது. அங்கே இருக்கும் professionals படிக்க என்று lynda.com இணை வாங்கிப் போட்டது. இப்போது, இரகசியமாக $10பில்லியன் முதலீடு செய்து ChatGPT ஐ வெளியில் விட்டது. இந்த artificial intelligence தொழில்நுட்பம், உலகத்தினையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. எல்லோரும் பாவிக்க முடியாது என்றாலும், இதன் தாக்கம் விரைவில் உணரப்படும். இது கூகிளின் ஆணி வேரையே அசைத்துப் பார்ப்பதால், அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே இப்போதுள்ள கேள்வி. ChatGPT க்கு இணையான ஒன்றினை கொண்டு வருவார்களா என்ற சந்தை எதிர்பார்ப்பில், கூகிள் bard இணை வெளிவிட்டது. இன்றய நிலையில் ChatGPT முன்னணியில் இருந்தாலும், அதனிடம் உள்ள data - 2021 வரையானது. கூகிளிடம் மிக அதிகமான data உள்ளது. ஆக வரும் காலங்களில் அது ChatGPT யினை முந்தலாம். எனினும், ChatGPTதனது இடத்தினை விட்டுக்கொடுக்காமல், அடுத்த கட்டத்துக்கான திட்டமிடலை முன்னரே செய்திருக்கலாம் என்பதால், கூகிள் அடுத்த கட்டத்துக்கு போகும் போது, ChatGPT இன்னும் ஒரு கட்டத்துக்கு முன்னோக்கி செல்லும் ஆக, இந்த தென் இந்தியர்களின் மோதல் எப்படி போகப்போகிறது என்பது சுவாரசியமானது.
  13. நிசத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப வாழப்பழக வேண்டும். ஹமாஸ் போலவே துரதிஸ்டமாக புலிகளும் தடை செய்யப்பட்ட இயக்கம். அதற்கு ஆதரவு கொடுத்தால், தடை மட்டுமல்ல, கண்காணிப்புக்கும் உள்ளாக நேரிடும். தேவையில்லாத சிக்கல். வேலை தேடும் போது, இவற்றைப் பார்ப்பார்கள். அண்மையில் பாதுகாப்புத் துறை சம்பந்தமான வேலைக்கு விண்ணப்பித்த போது, அரச செக்கியூரிட்டி கிளியரன்ஸ் செய்தார்கள். அப்போது தான் எவ்வளவு ஆழமாக செக் பண்ணுகிறார்கள் என்று புரிந்தது. இலங்கைப் போலீஸ் முதல்... பிரிட்டிஸ் போலீஸ் வரை நோண்டி நொங்கெடுக்கிறார்கள். இது போன்ற சமூக வலைத்தடைகள், ஆதரவு நிலைப்பாடு அணைத்து விபரமும் அவரகளிடம் பதிவாகிறது என்பதால் தேவையில்லாத சிக்கல்.
  14. தமிழர்கள் பலர், சிங்களவர்களாக வாழும் அநியாய கதை. புத்தளம் முதல், பாணந்துறை பகுதிவரை பல தலைமுறையாக வளைந்து வந்த தமிழர்கள் பலர், சிங்களத்தில் கல்வி பெற்று சிங்களவர்களாக வாழும் கதை. முன்னாள் தமிழ் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை. அவரது பிள்ளைகள் அனைவருமே சிங்கள பெயர்கள். அப்படியே தென் இலங்கை எம்பி ஒருவர் பெயரே தேவாரப்பெருமாள். மகிந்த கட்சி எம்பியான அவரது சிங்களத்தனமான பெயர் தெவாரப்பெரும...
  15. தாத்தா சுவியருக்கு வாழ்த்துகள் உங்கள் கார்ட் படி பூட்டன். Great - Grandson ஆனால் பேரன் எல்லோ ? Grandson
  16. லண்டன் வந்த புதிதில, வெள்ளைகளுக்கும் எமக்குமான தொடர்பு இரண்டு இடங்களில். ஒன்று தபால் அலுவலங்களில் அடுத்தது வங்கிகள். சும்மா Tie எல்லாம் தூள் கிளப்ப குந்திக் கொண்டு இருப்பார்கள். கடதாசி ஊரு அனுப்ப, பார்சல் அனுப்ப, வங்கிக் கணக்கு திறக்க அவர்களிடம் போக வேண்டும். இப்ப, தபால் அலுவலகம், தமிழ் கடை உள்ளுக்கு வந்துட்டுது. நம்ம சுமே அக்கா அங்க வேலை செய்யுறா. வெள்ளைகள் அந்த பக்கமே கிடையாது. அதே போலத்தான் வங்கிகள். ஒரு வீதியில், பக்கம், பக்கமாக ஒரு பத்து வங்கிக் கிளைகள் இருக்கும். இப்ப, 5 மைலுக்கு ஒன்று என்று வந்து விட்டது. வங்கிகளுக்கு போக வேண்டிய தேவையில்லாமல், கையில் உள்ள மொபைலை வைத்தே சகலமும் செய்யமுடியும் என்ற நிலை வந்து விட்டது. வங்கிகள், மட்டை இல்லாமலே, ATM இல் பணம் எடுக்கும் தொழில் நுட்பத்தினை கொண்டு வந்து பலகாலம். ஆக வங்கி வேலை நிரந்தரமில்லை. இலங்கை அரசு நினைப்பது போல அல்லாமல், வங்கியை வாங்க யாரும் பணம் போட போவதில்லை. ஆனால் வங்கிகளை, நவீனப்படுத்தும், பிரித்தானியாவில் உள்ள தொழில் நுட்பத்தினை உள்ளே புகுத்தம் ப்ரோஜெக்ட்டுக்கே பணம் முதலீடு செய்வார்கள். ரணிலுக்கு புரியவில்லையா அல்லது, தலையில் கட்டி அடிக்க போகிறார்களா? இலங்கையில் போராடுகிறார்கள், புதிய வங்கியியல் தொழில் நுட்பம் எப்படி என்று புரியாமல்.
  17. சாமியார், நிஸ்டையில் இருந்த போதும், ‘ஞானக்கண்ணால' முழுசிப் பார்த்ததுப் போட்டார்! 😂🤣
  18. அதுக்கு non residents இடம் கேட்டால் எப்படி? நேரா யாழ்பாண வங்கி ஒண்டுக்கு போனைப் போட்டு, என்ன டாக்குமென்ற்ஸ் தேவை, நேர வரவேணுமா, ஒன்லைன திறக்கேலுமா என்று கேட்க்க வேண்டியது தானே!! சிம்பிள் விசயத்துக்கு, மண்டைய தேவையில்லாமல் உடைக்கப்படாது!! Commercial Bank Jaffna எண்டு போட்டால் குறைஞ்சது 3 கிளை, முகவரி, போனுடன் வருதே!! நம்பரை வைத்துக் கேட்டால் ஓம், நான் வெளிநாடு, தம்பி | தங்கைக்கு திறக்கணும் எண்டு சொல்லுங்க!
  19. அது எங்களுக்கு, 'பாக்கித் துரைகளுக்கு'. (யாரும் பிழை பிடிக்க வராயினம் எணட நம்பிக்கை). வெள்ளையள், 'வாலா' பேரை கேட்டே வராயினம். போனனான். விலை அநியாயத்துக்கு கூட!!
  20. நாட்டாமை தீர்ப்பு பிழை. வழக்கினை நீதிமன்றம் கொண்டுபோன போலீசாரே அந்த அபாரதத்தினை கட்ட வேணும். போலீசார் இவர்களை அப்புறப்படுத்தி வீதியை அதுக்குரிய பாவனைக்கு திறந்து விட்டிருக்க வேணும். கருணாநிதியின் ரயில் மறிப்பு போராட்டம் போல, இது, பொது மக்களுக்கு அரிக்கண்டம் தரும் ஒரு போராடடம். எந்த ஒரு போராட்டமும், அடுத்தவர்களுக்கு இடையூறு இன்றி அரசுக்கு சொல்லப்படவேண்டும். அவசரமாக, ஏதோ ஒரு காரணத்துக்காக வீதியினை பாவிப்பவர்கள், தமது போராட்டம் மூலம், உபத்திரவம் கொடுப்பது தவறு. இந்த வாகனம், செல்லும் வழியில், எச்சிரிக்கையின மீறியும் உக்காத்திருந்தவர் மேல் தவறு. அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விட்டு, அந்த சாரதியை கோட்டுக்கு கொண்டு போன போலீசார், தாம் தமது கடமையை சரி வர செய்யாமல் இருந்த்துக்கான காரணத்தினை சொல்லியிருக்க வேண்டும் அல்லவா.
  21. கோபிக்குப் பெயர் போன அமெரிக்கா... இங்கிருந்து கிளம்பி தேத்தண்ணியை இந்தியா, இலங்கை உலகமெங்கும் உள்ள தனது காலணிகள் அனைத்திலும் பரப்பிய பிரித்தானியாவிலேயே, தேத்தண்ணியை விழுத்தி, கோப்பி சாம்ராஜ்ஜியத்தினை உருவாக்கி விட்டார்கள். இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்த ஒரு அம்மணி ராஜஸ்தான் சுற்றுலா போயிருக்கிறார். தங்கியிருந்த மோட்டல் யன்னல் ஊடாக பார்த்தால், ஒரு கடை - வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், கப்பில் வாங்கிக் குடிக்கிறார்கள்... கிளம்புகிறார்கள். சிலர் இரண்டாவது கப் ஆர்டர் பண்ணி குடித்து விட்டு கிளப்புகிறார்கள். இவருக்கு ஆச்சிரியம். அப்படி என்னத்தை வாங்கிக் குடிக்கிறார்கள் என்று சிந்திக்கிறார். ஒரு வேலை சாராயமோ... டீ கடை போர்டு இருந்தால் தெரிந்திருக்கும் அது இல்லாததால் குழப்பம். கீழே இறங்கி வருகிறார். ரெஸ்ப்பினில் விசாரிக்கிறார். அவர்கள் சொன்ன விபரத்துடன் வெளியே போய், இந்தியில் சாய் என்கிறார். எந்த சாய் வேணும் என்கிறார் கடைக்கார பையன் ஆங்கிலத்தில். அட, ஆங்கிலம் பேசுகிறானே என்று மகிழ்வுடன் பேசினால், அவன் ஒரு பட்டதாரி. வியாபாரம் செய்ய முனைந்து இதனை செய்கிறார். தான் செய்யும் விதவிதமான, டீகளை அவவுக்கு விளக்கப்படுத்த... அந்த பெண் அமேரிக்கா திரும்பி, கோப்பி போலவே ஒரு டீ செயின் தொடங்கி விட்டார். நான் இதனை வாசித்த 2007ம் ஆண்டு, இரண்டாவது ஆண்டு வருமானம் $15மில்லியன். இப்போது பெயர் மறந்து விட்டது. தேடித் பார்க்க வேண்டும். தாய்லாந்துக்காரி வலு கெட்டிக்காரி... ஊருக்கு வருவேன் என்று அடம் பிடித்த ஜெர்மன் வீட்டுக்காரரை டெல்லில இறக்கி விட்டாச்சு. இனி ஊருக்கு போய், தாய்லாந்து ஒரிஜினல் புருசனோட, லீவில வந்த காலத்திலை சந்தோசமா இருந்து போட்டு, திரும்பி வந்து, I am very sorry darling எண்டால் ஓகே தானே... 😜 அவர் எங்கை ஹாலிடே போனவர்... கொஞ்சம் ஓய்வா இருப்பம் எண்டு பார்த்திருப்பார்... நாட்டில எத்தனை பிரச்சனைகள்... சை... 🤣😁
  22. மருத்துவரின் அறிவுறுத்தல் தேவையில்லை. இதை இங்கே over the counter medicine என்பார்கள். அதாவது, ஆணுறை வாங்குவது போலவே யாரும் வாங்கிக்கொண்டு போகலாம். ஆனால், எல்லா மருந்துகள் போலவே, இதுவும் அளவோடு பாவிக்கப்படவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. இவர், இறந்த அறைக்கு, முதல் நாள் இரவு பல பெண்கள் போனார்கள் என்று, போலீஸ் விசாரணையின் முடிவை, வெளியே பெரிதாக வெளியிடவில்லை. அப்புறம் தாய்லாந்து மரியாதையை காப்பாத்த ஏலாது தானே. பிறகு... தாய்லாந்து விடுமுறை ஐடியா இருக்குது எண்டியலே... எப்ப பயணம் 🤪
  23. உடான்ஸ் சாமியாரிடம் கேட்கவேண்டியதை எல்லாம், இப்பத்தான் ஆசிரமத்தில சேர்ந்திருக்கும் அடியேனிடம் கேட்கக்கூடாது. 🥰🥰
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.