-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
ஓம், சம்பந்தருக்கு 60 ஆகும் போது ஓய்வு எடுப்பார், கண்டியளே! சோத்திலை உப்புப் போட்டுத் தின்ணுறதால, 65 வரை, சுமந்திரன் மாதிரி இழுபடார்.
-
முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இதை தானே இங்கே வலியுறுத்திறம். இவர்கள் சர்வதேச சட்டப்படி எங்குமே போக முடியாது. காரணம் அவர்கள் மேலுள்ள கொலை பதிவு. Criminal Records உள்ள யாரையுமே எந்த நாடும் ஏற்றுக் கொள்ளாது என்பது வெள்ளிடை மலை. அகதிகள் கதை வேறு. சிறப்பு முகாமில் இருக்கும் இவர்களுக்கு அந்த தெரிவும் இல்லை. சாதாரணமான drunk and drive records இருந்த என்ஜினியர் ஒருவர், இலண்டணில் இருந்து ரொரண்ரோ குடிபெயர, பொலீஸ் ரெக்கோட் எடுத்து, விபரம் பார்த்ததும், கப்சிப் ஆகினார். இலங்கை ஆவணங்களைப் பெற சட்ட உரிமை உள்ளதால், பெற்று நாடு திரும்ப வேண்டியது தான் நிலை. இது புரியாமல் சும்மா சட்ட அலம்பறை பண்ணுவது வீண் வேலை. கடவுச்சீட்டே இல்லை. இலண்டண் விசா ரெடி என்பது போல வழக்காடுவது வெட்டிவேலை. இலங்கையில் குற்றம் எதுவும் இல்லாததால், துணிந்து திரும்ப வேண்டியது தான். -
கறி, போர்த்துக்கேய மொழி மூலமாக, 16ம் நூறாண்டில் ஆங்கில மொழியினை வந்தடைந்த தமிழ் சொல் என்று போட்டிருந்த ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி, இப்ப, அது திராவிட மொழி சொல். கர்நாடக மொழியிலும் உள்ளது என்கிறது. திராவிடம் என்ன செய்கிறது என்று யாராவது கவனம் எடுத்தார்களா? ரிஷி சுணக்கின் மனைவி, கர்நாடகா. ஆனால் அவர் செல்வாக்கு செலுத்தி இருக்க மாட்டார். ஆனால், அதை சொல்லி, யாரோ ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்கு சொல்லி இருக்க கூடும். போர்த்துக்கேயர், யாழ்ப்பாணத்தினை பிடித்த வரலாறு, அங்கிருந்தே, ஆங்கிலத்துக்கு, கறி, மிளகுத்தண்ணி, கஞ்சி, ரசம், மாங்கா போனது என்று அடித்து சொல்ல, தமிழனுக்கு மூளை இல்லை. 17ம் நூறாண்டில் வந்த பிரிட்டிஷ்காரன் கர்நாடகாவை பிடித்ததே, 18ம் நூறாண்டில். இதுதான் நமது, தமிழர்களது, கவலையீனம். எழுதி இருக்கிறேன், பார்ப்போம். @goshan_che நீங்களும், எழுதுங்கள். முடிந்ததை செய்வோம். போர்த்துக்கேயருக்கும், இந்திய துணைக்கண்டத்து தமிழருக்கும், கன்னடர்களுக்கும் எந்த காலனி தொடர்பும் இல்லை. கோவா மட்டுமே அவர்களது காலனி, அது தமிழர்களது அல்ல.
-
1400 மைல் தொலைவில் இருந்த அந்தமான், நிக்கோபார் தீவுகளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மாவையும் இந்தியாவுடன் இணைத்த பிரிட்டிஷ்காரன், பக்கத்தில், 18 மைல் தொலைவில் இருந்த, இந்த சின்ன தீவினை, தனியே ஆண்டான். இந்தியாவுடன் சேர்த்து ஆளவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பிரிட்டிஷ்காரனுக்கே தெரிந்திருக்கிறது, இந்தியனை நம்பினால், கந்தருந்து போவீர்கள் எண்டு. 🤪🤣
-
சிங்களம் மட்டுமல்ல, இன, மத பேதம் இன்றி, இலங்கை வாழும் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக நம்புவது, எக்காலத்திலும் இந்தியாவை நம்ப முடியாது, கூடாது என்று. இரண்டு பக்கமும், முதுகில் குத்தி விட்டு, பின்னர், துவாரகா என்று ஒரு கூத்தினை காட்டினால், யாரு நம்புவார்கள். மாலைதீவு புட்டுக்கிச்சு, இலங்கையை மடக்கி பறிக்குள்ள போடலாம் எண்டால், சீனா காரன் வேட்டியோட, நயினாதீவுக்குள்ள நிக்குறான். என்ன தான் செய்வது? சவேந்திராவை கூப்பிட்டு, ஒரு ராணுவ....பு... ஏதாவது செய்ய முகாந்திரம் இருக்கோ எண்டு நூல் விட்டு பாக்கினமோ தெரியாது. ஆனால் அதிலை திறமையான, மேற்கு ஆட்களும், அநுபவம் மிக்க அம்மணியும் உள்ள இருந்து பார்த்துக்கொண்டெல்லே இருக்கினம்.
-
ஐரோப்பிய காலனித்துவம் கொடி கட்டி பறந்தது, 20ம் நூறாண்டு வரை. அதன் பின்னர், பிரித்தானியா தனது காலனித்துவ நாடுகளை ஒவ்வொன்றாக சுதந்திரம் கொடுத்து, தனது பெரும் பேரரசினை சிறியதாக்கிக் கொண்டது. இன்று அதன் வீட்டுக்குள்ளேயே, இரண்டு நாடுகள், வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து பிரிந்து போக முனைப்பு காட்டுகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், பேரரசினை கலைக்கும் இந்த நிலை, பிரித்தானியாவுக்கு உண்டாக்கியது. பிரான்ஸ் நாடுதான், இன்னோரு காலனித்துவ நாட்டினை பிடித்தால், அதன் காலனி நாடுகளை ஆட்டையினை போடலாம் என்ற தந்திரத்தினை பாவித்து, நெதர்லாந்து மேலே போர் தொடுத்தது. ஆனால் அது எதிர்பார்த்தத்துக்கு மாறாக, நெதர்லாந்து மன்னர், இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று அங்கிருந்து, தனது காலணிகளினது கவனர்களுக்கு, அந்த காலணிகளை பிரித்தானியா வசம் ஒப்படைத்து விடுமாறு எழுத, இலங்கை, தென் ஆப்பிரிக்கா பிரித்தானியா வசம் ஆனது. பிரான்ஸ் ஏமாந்தது. ஆனால் பிரான்சின் இதே தந்திரத்தினை ஜெர்மனி முதலாம், இரண்டாம் போரில் பயன்படுத்தியது. இரண்டிலும் பிரித்தானியாவே போரில் ஈடுபட்டு கடுமையாக பாதிப்படைந்தது. இரண்டாம் உலகப்போரில், பிரான்ஸ், ஜெர்மனியால் முழுவதுமாக கையகப்படுத்தப்பட்டது. ஹிட்லரின் இலக்கு பிரித்தானியாவாக இருந்தது. அவர் வென்றிருந்தால், உலகின் பெரும் ஜெர்மனிய பேரரசு உருவாகி இருக்கும். இந்தியா, இலங்கை, மற்றும் பிரித்தானிய காலனிகள் மட்டுமல்ல, பிரான்சின் காலனிகள் கூட அதன் கீழ் வந்திருக்கும். ஆனால் பிரித்தானியா, அமெரிக்காவின் உதவியுடன், ரசியாவும் சேர, ஜெர்மனி தோல்வி அடைந்தது. போரின் முடிவில், பிரித்தானிய பேரரசினை படிப்படியாக குறைக்கும் முடிவினை பிரித்தானியா எடுத்ததால், இலங்கை, இந்தியா போன்ற பல நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆகவே, காந்தி அல்ல, ஹிட்லரே இந்திய சுதந்திரத்துக்கு காரணம். இங்கே ஒரு முரண்நகை, போரில் நாட்டையே இழந்த பிரான்ஸ், தனது காலனிகளை அப்படியே பத்திரமாக வைத்துக்கொண்டது. பல காலத்துக்கு பின்னர், இந்தோ-சீனா நாடுகளான, லாவோஸ், வியட்நாம், கம்போடியவினை இழந்தது. ஆனால், பல நாடுகளை, காலனி நாடுகளை பிரித்தானியா நடத்தியது போல இல்லாமல், அவர்கள் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக நடத்தியதால், அந்த காலனிகள் பல, பிரான்சிடம் இருந்து, சுதந்திரத்தினை எதிர்பார்க்க வில்லை. மாறாக குடியொப்பங்களில் சுதந்திரம் வேண்டாம் என்று சொல்லி விட்டன. இது ஒரு ஆச்சரியம் தான். இந்து சமுத்திரத்தில் தமிழர்கள் பலர் வாழும், ரீயூனியன் தீவு, குடியொப்ப தேர்தலில், சுதந்திரம் வேண்டாம் என்று சொல்லி விட்டது. நேரு இராணுவ ரீதியில் நெருக்கி இராவிடில், பாண்டிசேரி, பிரான்சுடன் இருந்திருக்கும். தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு பிரெஞ்சு கயானா. இது, பிரான்ஸ் தேசத்துக்கு வெளியே உள்ள, மிக பெரிய பிரான்ஸ் தேசத்துக்குரிய நிலப்பரப்பு. இது, ஐரோப்பிய யூனியனின் தென் அமெரிக்க நிலப்பரப்பு என்று வரைவிலக்கணம் கொடுத்திருக்கிறார்கள். பிரான்சினை அடுத்த, பிரான்சுக்கு உரிய இரண்டாவது பெரிய நிலப்பரப்பு. அவுஸ்திரேலியா எப்படி, பிரித்தானிய சிறைக்கைதிகளின், வெளிநாட்டு சிறையாக இருந்ததோ, அதேபோலவே, இந்த நிலப்பரப்பும், பிரான்சின் சிறைக்கைதிகளின், வெளிநாட்டு சிறையாக இருந்திருக்கிறது. மிகப்பெரிய நிலப்பரப்பு, மக்கள் தொகை, 3 லட்ச்சத்துக்கும் குறைவு. மக்கள் தொகை குறைவு என்பதால், நாட்டின் கட்டமைப்பு, போக்குவரத்து போன்றவை வளரவில்லை. வேலை வாய்ப்பு குறைவு, அது தொடர்பில் போராட்டம் நடந்தாலும், 2010ல் நடந்த குடியொப்பத்தில், மேலதிக சுய ஆட்சியே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். காரணம் வேறென்ன, சும்மா இருக்க, சோசியல் காசு வருமே. அதுவே, பிரான்ஸ் நாட்டுக்கும், பிரித்தானியாவுக்கும் உள்ள வித்தியாசம். பிரான்ஸ் புதுசேரியினை விட்டு நீங்கிய போது, அங்கு பிரென்ச் அரச சேவையில் இருந்தவர்களுக்கு, பிரெஞ்சு தூதரகம் ஊடாக, பென்சன் கிடைத்து. அது பிரான்சில் கிடைக்கும் தொகைக்கு ஈடாக இருந்தது, ஏனெனில் காலனியானாலும், பிரான்ஸின் ஒருபகுதியாகவே பார்த்தார்கள். ஆனால் பிரித்தானியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், தனது பென்சன் வேலைகளை அந்தந்த அரசுகளிடம் சொருகி விட்டு வந்து விட்டதால், பலர் சாதாரண பென்சன் காரர்களாகவே வாழ்ந்து மடிந்தார்கள். பிரித்தானியா போலல்லாது, பிரான்சின் பாரிஸ் நகரத்து பாராளுமன்றுக்கு, தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, செனட் உறுப்பினர்களை, இந்த காலணிகள் அனுப்புகின்றன. காலணிகள், பிரஞ்சு அதிபர் தேர்தல்களிலும் நேரடியாக பங்கு கொள்கின்றன. காலனிகளின் அரச தலைவராக, பிரென்ச் ஜனாதிபதியே உள்ளார். அமெரிக்கா பிரிந்து போனதன் ஒரு முக்கிய காரணம், அதன் பிரதிநிதிகளை பிரித்தானிய பாராளுமன்றில் அனுமதிக்கும் கோரிக்கைக்கு, மறுப்பு தெரிவிக்கப்பட்டமையும் ஆகும். https://www.bbc.co.uk/news/world-latin-america-20376142
-
ஏன், இழுக்கப்படக் கூடாத புனிதரே, அம்மான்? சும்மா வாயை கிளறாதீங்கோ அக்கா.
-
அதுதான் விசயமே. இன்று, இலங்கை முழுவதுமாக, மேற்கின் கைக்குள். அது, முற்று முழுவதுமாக, இலங்கை ராணுவத்தினை, பாதுகாப்பு தரப்பினரை கையகப்படுத்தி உள்ளது. ரணில், மிஞ்சினாலும், ராஜபக்சேக்கள் எல்லை மீறினாலும், கதை கந்தல். இதனாலேயே, இந்தியா கூப்பிட்டு, குலை அடிக்கிறது. சவேந்திர சில்வாக்கு அமெரிக்கா ஆதரவு முக்கியம். அவர் எல்லை மீறினால், ஆளை கொண்டு போய், ஹெய்க்கில் நிப்பாட்டி வைக்கும் பலம் உண்டு என்று அவருக்கு தெரியும். அதாலை, போடுற, வடை கறி சாப்பிட்டினை தின்னு போட்டு, வருவார். அவ்வளவுதான்.
-
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் இலங்கையில்.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சீனா ஓமாமோ? 🤪 -
அம்மானின் தங்கை, அண்ணணுக்கு வக்காலத்தா? நான், பிரதேச வாதத்தை எதிர்த்து எழுதியதை முதலில் புரிந்து எழுதுங்கள்! அப்புறம், அண்ணியும், பிள்ளைகளும் இன்னும் பிரிட்டன் ஸ்காட்லாந்து தானே?
-
மீன் செதில் வறை: தலையின் ஸ்பெஷல் ஐட்டம். மறக்கப்படாது. நிழலி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞனின் பரிதாபம்
Nathamuni replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
பெண் சிங்கம் எண்டு நினைச்சுத்தான் உள்ள இறங்கி இருப்பார் எண்டு சொல்ல வாறீங்கோ, என்ன ?🤣🤣 -
நான் கோசனுடன் மட்டுமே விவாதிக்க விரும்ப ஒரு காரணம் உண்டு, நன்னியர். உங்கள் பதிவு அதனை உறுதி செய்கிறது. விவாதங்களில், நேர்மை, தரம் இருக்க வேண்டும்!!! நன்றி!!
-
நன்னியர், நான் பொதுவாக இந்த விவாதங்களை தவிர்க்கிறேன். இங்கே ‘மட்டுவில் நடந்தது’ என்றது நானல்ல நீங்கள். 'எனக்கும் இந்த ஐயம் உண்டு' என்ற உங்கள் கருத்து ஒன்று அப்பாவித்தனமானது அல்லது விசமத்தனமானது. கருணா அம்மான் பலவீனம், பாயைப் போட்டு மூடும் ஒன்றல்ல. தாய்லாந்து சம்பவங்கள் குறித்து தேசத்தின் குரலே பேசியிருக்கிறார். தாய்லாந்து பயணமே புலிகள் அழிவின் ஆரம்பம் என்பது பலர் கருத்து. அங்கே தான் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின், 'திருவிளையாடல்கள்' ஆரம்பமாகியது. இன்றுவரை சிங்களத்தின் கைப்பாவையாக அம்மான் மாறிய நிகழ்வின் விதை அங்கேயே போடப்பட்டது. அம்மாணை வெளியே அனுப்பியது பெரும் தவறு என்ற கருத்து இன்றும் உண்டு. புலிகளில் இருந்து பிரிந்த பின், அம்மான் நடத்தை, புலிகளில் இருந்த போது என்ன நடந்திருக்கும் என்பதை கட்டியம் கூறுகிறது. ஆனல், கையின் 5 விரல்களும் ஒன்று போலவே இருக்காது என்பதை ஏற்று நகர்வோம். திருமணம் செய்வது இயக்க கொள்கையல்ல என்று இருந்த தலமை அதனை மாற்ற, காரணங்கள் இருந்தன. இது நூல் பற்றிய திரி. நானும், நீங்களும், கோசனும் விவாதிப்பது சரியல்ல. நகர்வோம். நன்றி 🙏
-
கலியாணம் நடந்த்து வன்னியில் 😎 தலைவரும், தேத்தின் குரலும் சபையோர் சமூகத்தில் இருந்தார்கள் 🙄 வன்னி, மட்டு பிரிவினை தேவையில்லை என்பது தாழ்மையான கருத்து
-
என்ன கேள்வி நன்னியர்? புலிகள் குறித்து எழுதும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கருணா அம்மான் கதை என்ன?
-
யாழில். மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு
Nathamuni replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
இதென்னப்பா இது ஒரு செய்தி என்று. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு சாதாரண நிகழ்வுகளை போட்டு, பீதியை கிளப்புறாங்கள். 🙄 -
தலைவர் சொன்னதை தலை கீழா சொல்லுற நிலைமைக்கு வந்தாச்சு! தமிழர் நிலம் இறைமையோட இருந்தா இந்தியாவுக்கு பாதுகாப்பு என்றார் தலைவர். இப்ப, இந்தியா பாதுகாப்புடன் இருந்தா, பாருங்கோ, இலங்கைக்கே பாதுகாப்பு என்று பூ வைக்கிறார் காதிலை. சீனாக்காரனிட்டை கேட்டுட்டு சொல்லுறம். அதெல்லாம் இருக்க, மாலைதீவில என்ன நடந்தது? 😎
-
"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு
Nathamuni replied to nochchi's topic in ஊர்ப் புதினம்
பேசாமல், தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஒரு தமிழ் வேட்ப்பாளரை நிறுத்தி, இதை ஒரு குடியொப்ப தேர்தலாக்கி, தமிழர் விருப்பத்தினை உலகுக்கு அறிவிக்க வேண்டும். அதுவே செயப்படுபொருள். 👍