Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. பார்சி ஸ்பெஷல் ரெசிப்பி சல்லி பொட்டி கோழி தன்சக் பார்சி கீமா பேட்டீஸ் பத்ராணி மச்சி லகன் நூ கஸ்டர்ட் பார்சி சேவ் குங்குமப்பூ புலாவ் கோழி பார்சா மோரி தார் கத்திரிக்காய் பட்டியோ பண்டைய இரானிலிருந்து இடம்பெயர்ந்து, குஜராத் மற்றும் சிந்து சமவெளிப் பகுதிகளில் குடியேறிய மக்களே பார்சி சமூகத்தினர். இப்போது இந்தியாவில் குஜராத் உள்பட சில மாநிலங்களில் மொத்தம் 60 ஆயிரம் பார்சிகள் வசிக்கின்றனர். இரானின் புத்தாண்டான ‘நவ்ரஷ்’ என்பதையே இம்மக்களும் கொண்டாடுகின்றனர் (இந்த ஆண்டு: மார்ச் 21). பார்சி புத்தாண்டை முன்னிட்டு, பெர்ஷிய உணவுக் கலாசாரத்தில் வந்த பார்சி சிறப்பு உணவுகளை அறிமுகப்படுத்துகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசினா செய்யது. சல்லி பொட்டி (Salli boti) தேவையானவை: ஆட்டு இறைச்சி (எலும்புடன்) - ஒரு கிலோ காய்ந்த மிளகாய் - 4 பட்டை - அரை துண்டு சீரகம் - இரண்டரை டீஸ்பூன் ஏலக்காய் - 6 கிராம்பு - 8 இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு (துருவவும்) பூண்டுப் பல் - 4 (தட்டவும்) சர்க்கரை பாதாமி (Apricot) - 12 (நறுக்கவும்) தண்ணீர் - 500 மில்லி எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்) தக்காளி - 2 (நறுக்கவும்) வினிகர் - 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 25 கிராம் உருளைக்கிழங்கு - 3 (குச்சி சிப்ஸ் போன்று நறுக்கவும்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய் மற்றும் காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையுடன் பாதியளவு இஞ்சித் துருவல், தட்டிய பூண்டு கலந்து அதனோடு ஆட்டு இறைச்சியைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாதாமியுடன் 500 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். மீதமுள்ள இஞ்சித் துருவலையும், தட்டிய பூண்டையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன், ஊறிய ஆட்டு இறைச்சி, நறுக்கிய தக்காளி, உப்பு, வினிகர் மற்றும் சர்க்கரை பாதாமி சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கிய பின், மூடியால் மூடி இறைச்சியை நன்றாக வேகவிட்டு, சர்க்கரை சேர்த்து இறக்கவும். பொரிப்பதற்கான எண்ணெயை நன்றாகச் சூடாக்கி, குச்சி சிப்ஸ் போன்று நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பொரித்துவைத்த உருளைக்கிழங்கு சிப்ஸை பரிமாறும் முன்பு ஆட்டு இறைச்சிக்கு மேல் அழகாக வைத்து சூடாகப் பரிமாறவும். பின்குறிப்பு: இதே செயல்முறையில் சிக்கனைக் கொண்டும் செய்யலாம். கோழி தன்சக் (Chicken dhansak) தேவையானவை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, மைசூர் பருப்பு - தலா கால் கப் தண்ணீர் - ஒரு லிட்டர் கோழி இறைச்சி - அரை கிலோ மிளகு - 10 கிராம்பு - 8 பட்டை - ஒரு இஞ்ச் துண்டு ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் ஜாதிக்காய்த்தோல் - ஒரு இன்ச் பிரியாணி இலை - 2 நட்சத்திர சோம்பு - ஒன்று காய்ந்த மிளகாய் - 3 சீரகம், மல்லி (தனியா) - தலா ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் - அரை டீஸ்பூன் வெள்ளை எள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை, வெந்தயக்கீரை - தலா 150 கிராம் புதினா இலை - 75 கிராம் புளிக்கரைசல், பூண்டு விழுது, இஞ்சி விழுது - தலா ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: நான்கு பருப்பு வகைகளையும் குக்கரில் சேர்த்து நன்றாக வேகவிடவும். வாணலியில் மிளகு, கிராம்பு, பட்டை, ஜாதிக்காய்த்தோல், பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, காய்ந்த மிளகாய், சீரகம், மல்லி (தனியா), வெந்தயம் வெள்ளை எள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்து ஆறவைத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். மஞ்சள்தூள் மற்றும் ஜாதிக்காய்த்தூளை அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வேகவைத்த பருப்பை கெட்டியான சூப் பக்குவத்துக்கு கடைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கொத்தமல்லித்தழை, வெந்தயக்கீரை மற்றும் புதினா சேர்த்து வேகும் வரை வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் மைபோல் அரைத்து எடுக்கவும். கடைந்த பருப்பு, இஞ்சி விழுது, பூண்டு விழுது, புளிக்கரைசல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அடிபிடிக்காமல் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்த கொத்தமல்லித்தழை - புதினா விழுது, உப்பு, வறுத்துப் பொடித்த பொடி, கோழி இறைச்சித் துண்டுகள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இடையே தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேகவிடவும். கோழி தன்சக் தயார்... சூடாகப் பரிமாறவும்! குறிப்பு: கோழிக்குப் பதிலாக உருளைக்கிழங்கு, சுரைக்காய், கத்திரிக்காய், சிவப்பு பூசணி, ஆட்டு இறைச்சி கொண்டும் இதை செய்யலாம். பார்சி கீமா பேட்டீஸ் (Parsi keema pattis) தேவையானவை: கொத்துக்கறி (ஆட்டு இறைச்சி) - 500 கிராம் பிரெட் துண்டுகள் - 5 இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்) மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன் புதினா, கொத்தமல்லித்தழை (நறுக்கியது) - தலா 2 டேபிள்ஸ்பூன் பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப் முட்டை - 4 எண்ணெய், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு செய்முறை: கொத்துக்கறியைக் கழுவி தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து எடுக்கவும். பிரெட் துண்டுகளை தனித்தனியாக ஒரு கப் தண்ணீரில் 10 விநாடிகள் நனைத்துப் பிழிந்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் நனைத்துப் பிழிந்த பிரெட், கொத்துக்கறி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கலவையை 12 சரிசம உருண்டைகளாக உருட்டி, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். உருண்டைகளை கட்லெட் வடிவில் தட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். முட்டையுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். எண்ணெயைச் சூடாக்கவும். தட்டி வைத்தவற்றை, அடித்த முட்டைக் கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பத்ராணி நி மச்சி (Patrani ni machi) தேவையானவை: வாழை இலை - 4 வெள்ளை வௌவால் மீன் அல்லது வஞ்சிரம் மீன் - ஒரு கிலோ (முழு மீனை சுத்தம் செய்து ஆங்காங்கே கீறவும்) எலுமிச்சைப்பழம் - ஒன்று உப்பு - தேவையான அளவு சட்னிக்குத் தேவையானவை: தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்) பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லித்தழை (தண்டுடன்) - 50 கிராம் புதினா இலை - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தூள், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மீனை அரை மணி நேரம் ஊறவைக்கவும். சட்னிக்குத் தேவையானவற்றை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த விழுதை மீனின் மீது தடவி வாழை இலையில் வைத்து பொட்டலங்களாக மடித்து எடுக்கவும். இட்லித் தட்டில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும். லகன் நூ கஸ்டர்ட் (Lagan nu custard) தேவையானவை: பால் - 6 கப் பிரெட் - ஒரு துண்டு முட்டை - 3 சர்க்கரை - ஒரு கப் வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன் சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன் செய்முறை: ஆறு கப் பாலை அடுப்பில் வைத்து நான்கு கப் அளவுக்கு சுண்டக் காய்ச்சி, நன்றாக ஆறவைக்கவும். ஆறிய பாலுடன் சர்க்கரை, முட்டை, பிரெட் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும். பின்னர் அதை பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, சாரைப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். 180 டிகிரி ப்ரீ ஹீட் செய்த அவனில் 50 நிமிடங்கள், மேல்பாகம் பொன்னிறமாக மாறும் வரை, பேக் செய்து எடுக்கவும். ஆறவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும். பின்குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை சாப்பிடலாம். பார்சி சேவ் (Parsi sev) தேவையானவை: சேமியா - 100 கிராம் நெய் - 25 கிராம் சர்க்கரை - 100 கிராம் ரோஸ் வாட்டர் (பன்னீர்) - அரை டீஸ்பூன் பாதாம் பருப்பு (தோல் உரித்து, நறுக்கியது) - 25 கிராம் உலர்ந்த திராட்சை - 25 கிராம் ஜாதிக்காய்த்தூள் - ஒரு துளி ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் தண்ணீர் - ஒரு கப் செய்முறை: பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கி, சேமியாவைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து ஒன்றானதும் சேமியாவைச் சேர்த்து வேகவிடவும். வேகவைத்த சேமியாவுடன் ஜாதிக்காய்த்தூள் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்து, தூவி அலங்கரித்துப் பரிமாறலாம். குங்குமப்பூ புலாவ் (Saffron pulav) தேவையானவை: பாஸ்மதி அரிசி - இரண்டரை கப் குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன் நெய் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 4 பட்டை - 2 இஞ்ச் துண்டு கிராம்பு - 4 மிளகு - 10 ஆரஞ்சுப்பழத் தோல் - (துருவியது) ஒன்றரை டீஸ்பூன் பிஸ்தா பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் ஊறவைத்து தோல் நீக்கிய பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: முதலில் 2 டேபிள்ஸ்பூன் சுடுநீரில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் மிளகு சேர்த்து தாளிக்கவும். பாஸ்மதி அரிசி சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் 4 கப் தண்ணீர், உப்பு, ஊறிய குங்குமப்பூ, ஆரஞ்சுத் தோல் துருவல் கலந்து நன்றாகக் கொதிக்கவைத்து, பிறகு, தீயை மிதமாக்கி 20 நிமிடங்கள் வேகவிடவும். பாதாம் பருப்பை நறுக்கி நெய்யில் வறுக்கவும். பிஸ்தா மற்றும் உலர்ந்த திராட்சையை தனித்தனியாக சிறிதளவு நெய்யில் வறுக்கவும். சாதம் நன்றாக வெந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காயை நீக்கிவிடவும். சாதக் கலவையுடன் வறுத்த பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை சேர்த்துக் கலந்து பரிமாறவும். கோழி ஃபார்ஷா (Chicken farsha) தேவையானவை: பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு ஊறவைக்க தேவையானவை: கோழி இறைச்சி - ஒரு கிலோ இஞ்சி விழுது, பூண்டு விழுது - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்) உப்பு - தேவைக்கேற்ப மேல் பூச்சுக்குத் தேவையானவை: முட்டை - 2 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு துளி உப்பு - தேவையான அளவு செய்முறை: ஊறவைக்க வேண்டியவற்றை ஒன்றாகச் சேர்த்து 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும். அடுத்த நாள் ஒரு பாத்திரத்தில் மேல் பூச்சுக்குத் தேவையானவற்றை சேர்த்துக் கலக்கவும். ஊறிய சிக்கன் துண்டுகளை மேல் பூச்சு கலவையில் முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்த சிக்கன் துண்டுகளை சாலட் மற்றும் வதக்கிய காய்கறிகளுடன் பரிமாறவும். மோரி தார் (Mori dar) தேவையானவை: கடலைப்பருப்பு, மைசூர் பருப்பு - தலா அரை கப் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் தண்ணீர் - 3 கப் பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்) சீரகம் - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்) நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்) உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை: நறுக்கிய வெங்காயத்தை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இரண்டு பருப்புகளையும் கழுவி தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் குழையும் வரை வேகவிடவும். கடாயில் நெய்யைச் சூடாக்கி சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும். பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பருப்பில் சேர்க்கவும். பின்பு, பொரித்த வெங்காயத்தால் அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறவும். கத்திரிக்காய் பேட்டியோ (Brinjal patio) தேவையானவை: காம்புடன் கூடிய சிறிய கத்திரிக்காய் - அரை கிலோ சீரகம் - இரண்டரை டேபிள்ஸ்பூன் பூண்டு - 3 பல் வினிகர் - அரை கப் மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கத்திரிக்காய்களை நான்காக கீறிக்கொள்ளவும் (எண்ணெய் கத்திரிக்காய்க்கு செய்வதுபோல). சீரகத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும். பூண்டு, வறுத்த சீரகம் மற்றும் வினிகரை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தீயைக் குறைத்து, தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு கத்திரிக்காயைச் சேர்த்து வேகவிட்டு, வெந்தவுடன் சூடாகப் பரிமாறவும். பின்குறிப்பு: இதே முறையில் கத்திரிக்காய்க்குப் பதிலாக மீன், இறால், பாம்பே டக் கருவாடு கொண்டு தயாரிக்கலாம்..
  2. மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம் பொதுவாக இடியாப்பம் செய்தால், அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த மசாலா இடியாப்பமானது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம். தேவையான பொருட்கள் : இடியாப்பம் - 1 கப் வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 புதினா - சிறிது மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 கறிவேப்பிலை - சிறிது செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * முதலில் இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்க வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிது வதக்கவும். * அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். * இறுதியில் அதில் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும். * சூப்பரான மசாலா இடியாப்பம் ரெடி!!!
  3. சூப்பரான சைடு டிஷ் கார்ன் மஷ்ரூம் மசாலா சப்பாத்தி, நாண், புலாவ், நெய் சாதத்திற்கு சூப்பரான ரைடு டிஷ் இந்த கார்ன் மஷ்ரூம் மசாலா. இப்போது இந்த கார்ன் மஷ்ரூம் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உதிர்த்த சோளம் - 100 கிராம் மஷ்ரூம் - 150 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன் மல்லிப்பொடி - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய்ப்பால் - 1/2 கப். செய்முறை : * மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். * அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கி நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம், உதிர்த்து வைத்துள்ள சோளம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். * அடுத்து அதில் சிறிது நீர் தெளித்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும். * நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். * சூப்பரான கார்ன் மஷ்ரூம் மசாலா ரெடி.
  4. பசியைத் தூண்டும் சீரக துவையல் இந்த சீரக துவையல் பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும். இந்த துவையலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சீரகம் - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 10, புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வதக்கி ஆற விடவும். * ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். * விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம். * சூப்பரான சீரக துவையல் ரெடி. * இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.
  5. பேலியோ டயட் ரெசிப்பி கீரை சூப் காலிஃப்ளவர் - பனீர் கட்லெட் மஷ்ரூம் - தேங்காய்ப்பால் சூப் பனீர் டோஸ்ட் முட்டை புர்ஜி முட்டை மாஸ் ஸ்டீம்டு மசாலா முட்டை கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பதுதான் பேலியோ டயட்டின் அடிப்படை. அப்படியானால், வேறு எதைத்தான் சாப்பிடுவது? ‘பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க’, ‘கொழுப்பை மட்டும் வாங்கிவந்து ஃப்ரை பண்ணி சாப்பிடுங்க’ என்கிறார்கள். பொதுவாக கொழுப்பைத் தவிர்க்கச் சொல்வதுதானே வழக்கம். இவர்களோ, கொழுப்பை மட்டுமே சாப்பிடுங்கள் என்று சொல்வது ஏன்? நம் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் பருமனுக்குக் காரணம். ஆனால், பேலியோ டயட்டில் கொழுப்பைத்தானே அதிக அளவில் சாப்பிடுகிறோம்... அது என்ன ஆகும்? `அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியாக மாறி, எரிக்கப்பட்டுவிடும். சுருங்கச் சொன்னால், கொழுப்பைக் கரைக்க, கொழுப்பை சாப்பிட வேண்டும்’ என்கிறார்கள் பேலியோ நிபுணர்கள். இதோ... கரூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும் சமையல் கலைஞருமான சிவசக்தி கார்த்திகேயன் வழங்கும் சுவையான பேலியோ ரெசிப்பிகள்! குறிப்பு: பேலியோ டயட்டைப் பின்பற்றுவதற்கு முன் முறையான மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். கீரை சூப் தேவையானவை: கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 7 தேங்காய்ப்பால் - ஒரு கப் பூண்டு - 4 பல் சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: சுத்தம் செய்த கீரை, பூண்டு, வெங்காயம், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றைக் குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர்விட்டு மூடி, மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறிய பின் மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் கீரைக் கலவை, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும். காலிஃப்ளவர் - பனீர் கட்லெட் தேவையானவை: காலிஃப்ளவர், - ஒன்று (சிறிய பூக்களாக நறுக்கவும்) பனீர் துருவல் – ஒரு கப் சீஸ் துருவல் - 25 கிராம் பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பூண்டுப் பல் - 4 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கரு - 3 டீஸ்பூன் நெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். காலிஃப்ளவர் பூக்களைச் சூடான தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்துத் தண்ணீரை வடித்துத் தனியாக வைக்கவும். மிக்ஸி ஜாரில் காலிஃப்ளவர் பூக்களைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் (மாவாகிவிடக்கூடாது). ஒரு பாத்திரத்தில் அரைத்த காலிஃப்ளவர், பனீர் துருவல், சீஸ் துருவல், முட்டையின் வெள்ளைக்கரு, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் செய்யவும். தோசைக்கல்லை காயவிட்டு உருட்டிய கட்லெட்டுகளை அடுக்கிச் சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். மஷ்ரூம் - தேங்காய்ப்பால் சூப் தேவையானவை: பட்டன் காளான் – 10 (பொடியாக நறுக்கவும்) தேங்காய்பால் - ஒரு கப் பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்) சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, காளான் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால்... ‘மஷ்ரூம் சூப்’ ரெடி. பனீர் டோஸ்ட் தேவையானவை: பனீர் - 100 கிராம் நெய் - 4 டீஸ்பூன் செய்முறை: பனீரை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி ஒவ்வொரு பனீர் ஸ்லைஸாகப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்க... பனீர் டோஸ்ட் ரெடி.. குறிப்பு: இந்த பனீர் டோஸ்ட்டை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடுவில் கறி மசால் அல்லது வெஜ் கிரேவி வைத்தும் சாப்பிடலாம். முட்டை புர்ஜி தேவையானவை: பனீர் துருவல் – ஒரு கப் முட்டை - 3 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கொத்தமல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன் வெண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் வெண்ணெயை உருக்கி பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மற்றொரு வாணலியில் முட்டையை உடைத்து ஊற்றி சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் வதக்கிய மசால், பனீர் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி... கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி பரிமாறவும். முட்டை மாஸ் தேவையானவை: முட்டை - 4 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2 (நறுக்கவும்) நெய் - 2 டீஸ்பூன் சிக்கன் குழம்பு - ஒரு கப் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முட்டையை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் முட்டைத் துண்டுகள், சிக்கன் குழம்பு சேர்த்து கொதிக்கவிட்டு கலவை கெட்டியாக வரும்போது இறக்கிப் பரிமாறவும். ஸ்டீம்டு மசாலா முட்டை தேவையானவை: முட்டை – 5 பெரிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் கேரட் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை நெய் - 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் கேரட், குடமிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். இதுவே மசாலா. பச்சை முட்டையின் மேல் பாகத்தில் சிறிய துளையிட்டு அந்த இடத்தில் உள்ள ஓட்டை எடுத்துவிடவும். முட்டையின் உள் இருக்கும் வெள்ளை கருவில் சிறிதளவு வெளியே எடுத்து விட்டு, வதக்கிய மசாலாவை முட்டையின் உள்ளே தள்ளவும். சிறிய கிண்ணங்களில் முட்டையை வைத்து ஆவியில் வேகவிட்டு இறக்கவும் (படத்தில் காட்டியுள்ளபடி வைத்து வேகவிடவும்). வெந்ததும் முட்டையின் மேல் ஓட்டை முழுவதுமாக நீக்கி விட்டு முட்டையை மட்டும் பிரித்தெடுக்க ‘ஸ்டீம்டு மசாலா முட்டை” ரெடி.
  6. இணையவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  7. காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருள்கள் : பச்சை மிளகாய் - 15 குட மிளகாய் - 1 சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 1 உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன் புளி - சிறிய உருண்டை வெந்தயம் - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். * வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும். * பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். * மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும். * காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார். * இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
  8. சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி டிரை ஃப்ரூட்ஸ், பிரட் வைத்து செய்யும் இந்த பர்ஃபி சூப்பராக இருக்கும். இப்போது இந்த சூப்பரான பிரட் பர்ஃபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஃப்ரெஷ் பிரட் தூள் - 2 கப், துருவிய தேங்காய் - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், சர்க்கரை - 1/2 கப், நெய் - 4 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - சில துளிகள், வெள்ளித் தாள் - சில, கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப், உடைத்த நட்ஸ், விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் - 3/4 கப், திராட்சை, பொடித்த செர்ரி பழங்கள் - தேவைக்கு, பால் - 1 கப். செய்முறை : * வெறும் கடாயில் நட்ஸ், உலர்ந்த பழங்கள், விதைகள் அனைத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்துக் கொள்ளலாம். * பாலில் பிரட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். * ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் மிதமான தீயில் நெய்யை விட்டு சூடாக்கி பிரட் விழுதை சேர்த்து கிளறவும். * நன்கு சுருண்டு வரும் போது தேவையானால் சிறிது நெய் சேர்க்கலாம். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கும். * அடுத்து அதில் சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறவும். * துருவிய தேங்காய், ரோஸ் எசென்ஸ் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும். * பர்ஃபி கலவை திக்கான பதம் வந்தவுடன் அதில் உலர்ந்த பழங்கள், நட்ஸ், விதைகள் சேர்க்கவும். கொஞ்சம் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும். * கடைசியாக ஏலக்காய் தூளை தூவி நன்றாக கலந்து இறக்கவும். * பர்ஃபி கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விடவும். * ஆறியதும் வெள்ளி சரிகையை அதில் இட்டு, மீதி உள்ள நட்ஸை தூவி துண்டுகள் போட்டு பரிமாறவும். * பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி ரெடி. * இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
  9. வீட்டிலேயே செய்யலாம் இறால் பக்கோடா! வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'இறால் பக்கோடா' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: குடல் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட இறால் - கால் கிலோ நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லித்தழை - சிறிதளவு கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - 2 சிட்டிகை (விருப்பப்பட்டால்) கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு: மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: ஊற வைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் இக்கலவையுடன் எண்ணெய் தவிர கொடுக்கப்பட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் இக்கலவையுடன் சிறிதளவு நீர் தெளித்துக்கொள்ளலாம். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் தயாராக வைத்திருக்கும் இறால் மற்றும் இதரப் பொருட்கள் சேர்ந்த கலவையைச் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். சூடான சுவையான இறால் பக்கோடாவை, தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.
  10. சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி மீல் மேக்கருடன் மஷ்ரூம் சேர்த்து பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். செய்தும் எளிமையானது. இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1 1/4கப் வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 2 தக்காளி - 1 எண்ணெய் + நெய் - 4 டேபிள்ஸ்பூன் பட்டன் மஷ்ரூம் - 200 கிராம் மீல் மேக்கர் - 20 உருண்டைகள் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - கொஞ்சம் பிரியாணி மசாலா - 1 1/2 டேபிள்ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லித்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு பொடிக்க : இஞ்சி - சிறுதுண்டு பூண்டு - 5பல் பட்டை - 3 துண்டு கிராம்பு - 2 ஏலக்காய் - 1 பிரியாணி இலை - 1 செய்முறை : * அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். * மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும். * பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும். * காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும். * ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும். * குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். * தக்காளி நன்றா வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம் - மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும். * வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். * அடுத்து அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும். * சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி ரெடி.
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதி
  12. சூப்பரான இறால் - காய்கறி சூப் இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் - காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : விருப்பமான காய்கறிகள் - 200 கிராம் இறால் - 100 கிராம் வெள்ளை வெங்காயம் - 1 சோயா சாஸ் - 1 டீஸ்பூன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் கார்ன் ஃபிளார் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு வெங்காயத்தாள் - சிறிதளவு செய்முறை : * இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள். * கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். * கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும். * வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். * வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள். * வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள். * இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவிஇறக்குங்கள். * சத்து நிறைந்த இறால் - காய்கறி சூப் ரெடி.
  13. சூப்பரான சைடு டிஷ் முருங்கைக்காய் இறால் தொக்கு அனைவரும் இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முருங்கைக்காய் சேர்த்து சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் - 1 இறால் - ½ கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 3 கறிவேப்பிலை - சிறிதளவு மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன் கரம் மசால் பொடி - ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : * இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். * பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் பதத்தில் இறால் சேர்த்து கிளறி விடவும். * சிறிது நேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும். * சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு ரெடி. * தேவையென்றால் இத்துடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து ருசிக்கலாம்.
  14. சத்து நிறைந்த சோயாபீன்ஸ் மசாலா சுண்டல் சோயாபீன்சில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மாலையில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த சோயாபீன்ஸ் சுண்டல் செய்து கொடுத்து அசத்துங்கள். தேவையான பொருட்கள் : வெள்ளை சோயா பீன்ஸ் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: * சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். * சோயாபீன்சில் மசாலா நன்கு கலந்து தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். * சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!
  15. கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ் காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காராமணியை வைத்து எளிய முறையில் கர்நாடகா ஸ்டைலில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அரிசி - ஒரு கப், காராமணி பயறு - கால் கப் சின்ன வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 2, பூண்டு - 10 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 6, தனியா தூள் - 1 ஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். * பூண்டை தோல் நீக்கி ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும். * காராமணியை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுக்கவும். * வறுத்த காராமணியில் பாதியளவு எடுத்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தனியா தூள், தக்காளியை சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் பிறகு களைந்த அரிசி, உப்பு, அரைத்த வைத்திருக்கும் காராமணி, மிளகாய் பொடி, மீதமுள்ள காராமணி சேர்த்து நன்றாக வதக்கவும். * அடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும். * சூப்பரான கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ் ரெடி.
  16. சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முந்திரி சிக்கன் கிரேவி சூப்பராக இருக்கும். இன்று இந்த முந்திரி சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தயிர் - 1 டீஸ்பூன் பால் - 2 டீஸ்பூன் எலுமிச்சை - பாதி கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு : முந்திரி - 8 மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1/4 டீஸ்பூன் பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 புதினா - சிறிது செய்முறை : * சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். * கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, சிக்கன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும். * பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். * சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். * சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!!!
  17. சுவையான காரசாரமான தக்காளி பூண்டு சாதம் தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. அதிலும் காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ். தேவையான பொருட்கள் : அரிசி - 2 கப் வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 3 பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் இலவங்கம் - 1 கிராம்பு - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 வர மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். * வெங்காயம் நன்றகா வதங்கியதும் அதில் பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். * அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கவும். * தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும். * பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். * இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!!
  18. சூப்பரான பலாச்சுளை இலை அடை கேரளாவில் பலாப்பழம் வைத்து செய்யும் இலை அடை மிகவும் பிரபலம். இன்று இந்த பலாச்சுளை இலை அடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பலாச்சுளைகள் - 20, வெல்லம் - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வாழை இலை - தேவைக்கு நெய் - 5 டீஸ்பூன். செய்முறை : * பலாச்சுளைகளை கொட்டையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். * வெல்லத்தை துருவிக்கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கி ஆறவைக்கவும். * மிக்சியில் வதக்கிய பலாச்சுளையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும். * அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். * வாழை இலைகளை பெரிய துண்டுகளாக வெட்டி அதில் நெய் தடவி, அதில் பிசைந்த மாவு உருண்டையை இலையின் நடுவில் வைத்து இலையை மூடி கைகளால் மாவை பரப்பி விடவும். இவ்வாறு அனைத்திலும் செய்யவும். * இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த அடைகைளை அடுக்கி வைத்து ஆவியில் வேகவிடவும். * சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி. குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்
  19. கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி கோதுமையில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை பிரெட் - 15 கேரட், பட்டாணி, பீன்ஸ் - மூன்றும் சேர்த்து 150 கிராம், பச்சை மிளகாய் - 5 வெங்காயம் - 2, கடலைப் பருப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, மஞ்சள் தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப. கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை : * பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கிளறி வைக்கவும். * காய்கறிகள், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் * இஞ்சியை துருவிக்கொள்ளவும். * கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். * காய்கறிகள் வெந்தவுடன் அதில் பிரெட் துண்டுகளைப் போட்டு நன்றாக கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும். * வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும். * சூப்பரான கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா ரெடி.
  20. மசாலா ஆம்லெட் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: முட்டை - 2 வெங்காயம் - 2 தக்காளி - சிறிதளவு நறுக்கப்பட்ட மிளகாய் - 2 டீஸ்பூன் குடைமிளகாய் - 2 சிறிதளவு கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி மிளகு தூள் - சிறிதளவு கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி எண்ணெய் - 1 முதல் 2 தேக்கரண்டி உப்பு - சிறிது செய்முறை: * முதலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி இலை முதலியவற்றை வெட்டி வைக்கவும். * ஒரு சிறிய கிண்ணத்தில், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும். * ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மசாலா விழுது சேர்த்து நன்றாகக் கலக்கவும். * வெட்டி வைத்த அனைத்தையும் இவற்றுடன் சேர்த்து கலந்து, கடாயில் எண்ணெய் விட்டு முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும். * சுவையான மசாலா ஆம்லெட் தயார்.
  21. சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா செட்டிநாடு முறையில் காளான் மசாலா செய்தால் சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காளான் - அரை கிலோ எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் பட்டை - ஒன்று லவங்கம் - ஒன்று ஏலக்காய் - ஒன்று சின்ன வெங்காயம் - 200 கிராம் தக்காளி - இரண்டு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - இரண்டு கறிவேப்பில்லை - சிறிதளவு மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் தனியா தூள் - இரண்டு டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிளகு தூள் - அரை டீஸ்பூன் சீரக தூள் - அரை டீஸ்பூன் சோம்பு தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். * பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும். * பிறகு அதில் காளான் சேர்த்து வதக்கவும். காளான் 10 நிமிடத்தில் வெந்து விடும். * காளான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும். * சூப்பரான சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா ரெடி.
  22. மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முந்திரி பக்கோடா செய்து கொடுக்கலாம். இப்போது இந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3 புதினா - சிறிதளவு முழு முந்திரி - 100 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு. செய்முறை : * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் * புதினாவை அரைத்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, .ப.மிளகாய், புதினா விழுது, முந்திரி, உப்பு சேர்த்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் உதிரியாக பிசைந்து கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்’மில் வைத்து, பிசைந்து வைத்த மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும். * எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும். * சூப்பரான முந்திரி பக்கோடா ரெடி.
  23. இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ் இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - சுவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 10, தயிர் - கால் கப், தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: * தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும். * குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும். * அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும். * தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும். * பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும். * உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது.
  24. சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை பருப்பு வடையை விட பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பட்டாணிப் பருப்பு - 200 கிராம், கடலைப் பருப்பு - 50 கிராம், அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு. செய்முறை : * இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். * அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். * மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.