Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  85,545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Everything posted by நவீனன்

 1. அருமையான வறுத்த மீன் குருமா அ-அ+ சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்) பச்சை மிளகாய் - 3 வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா,
 2. 131. பூர்ணாஹுதி அற்புதங்கள் அதனதன் இயல்பில், தோற்றத்தில், விதிப்பில், வார்ப்பில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு சூரியன் உதிப்பதைக் காட்டிலும், ஒரு பெருமழையைக் காட்டிலும் அற்புதமென்று இன்னொன்று இருந்துவிட இயலாது. ஆனால் மனித மனத்தின் விசித்திர மூலைகளை இந்த அற்புதங்களின் பக்கம் நாம் திருப்பி வைப்பதேயில்லை. ஒரு விடியலை நின்று அனுபவிப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? நான் ஒரு சமயம் இரவெல்லாம் ஒரு பூச்செடியின் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து, ஒரு மொட்டு மலரும் கணத்துக்காகக் காத்திருந்தேன். அது மலரத்தான் செய்தது. ஆனால் மலர்
 3. 130. நாயர் கங்காதரன் கிளம்பிப் போனபின் நாங்கள் நெடுநேரம் கடற்கரை மணலில் படுத்துக் கிடந்தோம். பகல் முழுதும் நல்ல வெயில் அடித்திருக்க வேண்டும். கடல் காற்றின் குளுமையை ஊடுருவி மணல் பரப்பின் வெதுவெதுப்பை உணர முடிந்தது. எனக்கு தர்கா வரை போய் வரலாம் என்று தோன்றியது. கோவளத்தில் கால் வைத்தது முதல் எனக்கு அந்தப் பக்கிரியின் நினைவுதான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. நான் ஓடிப்போவேன் என்று சொன்ன மனிதர். திருவானைக்கா சித்தனுடன் அவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுடன் தொடர்பு இருந்திருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு கண்ணில் ஒருங்கிணைந்திர
 4. ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தற்போது எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறைமாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நேரத்திற்கு சாப்பிடாதது, சத்துள்ளவற்றை போதிய அளவிற்கு சாப்பிடாதது. உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியையோ நாளாந்தம் மேற்கொள்வது கிடையாது. அத்துடன் அதிக கலோரிகளைக் கொண்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அளவிற்குமேல் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில்
 5. 129. மருந்து நள்ளிரவு வரை நாங்கள் செல்லியம்மன் கோயில் வாசலிலேயேதான் கிடந்தோம். எழுந்து வீட்டுக்குப் போகவே தோன்றவில்லை. கோயில் வாசலில் கால் நீட்டி உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் மூன்று பரதேசிகள் யார் என்று விசாரிக்க அந்தப் பக்கம் யாரும் வரவும் இல்லை. பூசாரி கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கிளம்பும்போது எங்களைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினார். என்ன நினைத்தாரோ, அருகே வந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போய்விட்டார். வினய் நெடு நேரம் அண்ணாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறானோ
 6. 128. விட்டகுறை பேருந்து கேளம்பாக்கத்தை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்குமேல் இன்னொரு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று வினோத் சொன்னான். திருவிடந்தைவரை நடந்தே போய்விடலாம் என்று முடிவு செய்து, நாங்கள் மன்னார் ஓட்டல் வழியாக இரட்டைக் குளத்தைத் தாண்டிக் கோவளம் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். குளமெல்லாம் ஒரு காலத்தில் இருந்ததுதான். இப்போது அந்த இடமெல்லாம் கட்டடங்களாகிவிட்டன. உப்பளங்கள் வெகுவாகக் குறைந்து நிறைய அடுக்குமாடி வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. அழகான சாலையும் சாலை விளக்குகளும் சாலையோர நடைபாத
 7. சூப்பரான ஆட்டு மூளை பொரியல் அ-அ+ ஆட்டு மூளையில் கொழுப்பு மிகவும் குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் ப.மிளகாய் - 1 கொத்தமல்லி - சிறிதளவு வெங்காயம் - 1
 8. 127. கடத்தல் அந்தப் பெண் அவன் எதிரே அமர்ந்திருந்தாள். அவளது தோழி அவனுக்குப் பக்கத்தில் இருந்தாள். வினய் தன்னெதிரே அமர்ந்திருந்தவளின் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான்கு விநாடிகளுக்கு ஒருமுறை அவள் இமைப்பது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. ‘சிறிது நேரம் இமைக்காதிருக்க முயற்சி செய்’ என்று சொல்லவும் செய்தான். ஆனால் அது அவளால் முடியவில்லை. சிரமப்பட்டாள். அவளது தோழி, ‘நான் முயற்சி செய்கிறேன் சுவாமிஜி’ என்று சொன்னாள். எனவே, இமைக்கும் பெண்ணைத் தன்னருகே அமர்த்திக்கொண்டு, இரண்டாமவளை எதிரே வந்து அமரச் சொன்னான். அவளால் ஏழெட்டு விநாடிகள்
 9. வேற்றுமையில் ஒற்றுமை என்.கே. அஷோக்பரன் / தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 162) பிரிந்து நின்றவர்கள் நோக்கம் ஒன்று; ஆனால், அதை அடைவதற்காகப் பல பாதைகளில் புறப்பட்ட பல அமைப்புகள் ஒன்றோடொன்றும், தமக்குள்ளும் முரண்பட்டு, எதிரும் புதிருமாகத் திசைமாறிப் பயணிக்க ஆரம்பித்தன. ஈழத் தமிழ் மக்களுக்காகத் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, ஆயுதப்போராட்டமே ஒரேவழி எனத் தீர்மானித்த தமிழ் இளைஞர், ஆயுதம் தரித்த அமைப்புகளாக இயங்கினார்கள். இவை ஒவ்வொன்றினதும் உருவாக்கம், செயற்பாடுகள், பின்புலம் என்பன, தனித்து
 10. இதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? சர்க்கரை நோயாளிகள், இதய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? இதயம்... உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கரியது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு முதல் இறப்பு வரை ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்புதான், நாம் உயிருடன் இருப்பதற்கான சாட்சியும் ஆதாரமும் என்றால், அது மிகையாகாது. ஒவ்வொரு துடிப்பின்போதும் இதயமானது அதன் சுழற்சிக்காக பிராணவாயு மற்றும் சத்துகள் நிறைந்த ர
 11. 126. களையும் கலை பேருந்து எல்.ஐ.சி.யைத் தாண்டும்வரை யாரும் எதுவும் பேசவில்லை. எனக்கு லேசாகத் தூக்கம் வந்து கண்ணை மூடத் தொடங்கியபோது, ‘விமல், உனக்கு என்றைக்காவது குற்ற உணர்வு போல ஏதேனும் தோன்றியிருக்கிறதா?’ என்று வினோத் கேட்டான். எனக்கு எதற்குக் குற்ற உணர்வு ஏற்பட வேண்டும்? இந்த உலகில் பாவமே செய்யாத ஒரு பிறப்பு உண்டென்றால் அது நான்தான். என் சுதந்திரத்தின் பூரணத்துவத்தில் திளைப்பது எப்படி ஒரு குற்றமாகும்? ‘இல்லை. நீ சன்னியாசம் என்னும் புனிதமான தருமத்தை உன் வாயிற்கதவுத் தாழ்ப்பாளாக வைத்துக்கொண்டு உள்ளுக்குள் ஒரு சராசரியாக
 12. இதயம் காக்கும் இதமான உணவுகள் - 30 வகை செம்பருத்திப்பூ பானம் தேவை: சுத்தம் செய்த ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15 பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்) நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்) தண்ணீர் - 500 மில்லி. செய்முறை: செம்பருத்திப்பூ இதழ்களுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் க
 13. 125. லட்சத்து எட்டு வினோத் என்ன நினைத்து அதைச் செய்தான் என்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால் வினய் தனது ஜனாதிபதி மாளிகை அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது வினோத்துக்குக் கண் கலங்கிவிட்டிருந்தது. மிகவும் பரிவுடனும் துயரத்துடனும் அவன் வினய்யை நோக்கினான். சட்டென்று தனது தோள் பைக்குள் கையைவிட்டு எதையோ தேடினான். அவன் தேடிய பொருள் அவன் கைக்கு அகப்பட்டுவிட்டதை அவன் முகபாவத்தில் தெரிந்துகொண்டேன். ஆனால் கையை வெளியே எடுக்காமல் அவன் வினய்யிடம் சொன்னான், ‘வினய், நீ என்ன நினைத்துக்கொள்வாய் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நீ சிரிக்கலாம். என்னுடை
 14. ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 19 திறந்த சிவகாமியின் அதரங்களை தன் உதடுகளால் கரிகாலன் மூடினான்! இருவரது அமிர்தங்களும் இரண்டறக் கலந்தன. சங்கமித்துப் பெருகின. ஒற்றியதை விலக்காமல் தன்இரு கரங்களால் அவள் வதனத்தை ஏந்தினான். போருக்கு ஆயத்தமாகும் படைக்கலன்களைப் போல் இருவரது உடல் ரோமங்களும் குத்திட்டு நின்றன. ஆற்றுப்படுத்தவும் பரஸ்பர துணையின் அவசியத்தை உணர்த்தவும் இருவருக்குமே அந்தக் கணம் தேவைப்பட்டது. தங்களைப் பூரணமாக அதற்கு ஒப்புக் கொடுத்தார்கள். தன் அதரத்தைத் தவிர வேறு எங்கும் அவன் உதடுகள் நுழையாதது இன்பத்தையும் நிம்மதியையும் வெறுமையையும் ஒருசேர சிவகாமிக்கு அளித்தது.
 15. 124. இரண்டு இட்லிகள் அந்தக் குடியரசு தின தேநீர் விருந்தை வினய்யால் மறக்கவே முடியாது. அவனது இடாகினி அவனை ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஓர் அதிகாரியின் தோற்றத்துக்கு மாற்றியிருந்தது. கோட் சூட் அணிந்து, பளபளக்கும் ஷூக்கள் அணிந்து ஒரு விலை உயர்ந்த காரில் அவன் முன்னதாக மூன்று மணிக்கே ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றுவிட்டிருந்தான். இடாகினி தெளிவான உத்தரவுகள் கொடுத்திருந்தது. அவன் பேசக் கூடாது. அவனுக்குப் பதிலாக அது பேசும். அதன் குரல் ஒலிக்கும்போதெல்லாம் பொருத்தமாக அவன் வாயசைத்தால் போதும். யாரைக் கண்டாலும் சிறிதாக ஒரு புன்னகை. எதிராளி வணங்க
 16. மாங்காய் நெய் இறால் மசாலா என்னென்ன தேவை? இறால் - 1/2 கிலோ, நெய் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு - தலா 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, மாங்காய் - 4 துண்டு, சாம்பார் வெங்காயம் - 6, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது, உப்பு - தேவைக்கு. மசாலா அரைக்க... எண்ணெய் - சிறிது, மிளகு, தனியா, சீரகம் - தலா 25 கிராம், காய்ந்தமிளகாய் - 5, புளி - எலுமிச்சை அளவு, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் . எப்படிச் செய்வது? தோசைக்கல் மசாலாவை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.கடாயில் நெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு தாளித்து கறிவேப்பிலை, வ
 17. 123. விருந்தும் விசேடமும் நாங்கள் பூக்கடை பேருந்து நிலையத்துக்குள்ளேயேதான் இருந்தோம். வீட்டுக்குக் கிளம்ப மனமே வரவில்லை. வீட்டுக்குப் போவதைப் பற்றியும் அங்கே யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்பதைக் குறித்தும் என்ன பேசலாம் அல்லது எதையெல்லாம் பேச வேண்டாம் என்பதைப் பற்றியும் எங்களுக்குள் பேசி முடிவு செய்துகொண்டு கிளம்பலாம் என்று வினய் சொல்லியிருந்தான். எனக்கு அதில் ஆட்சேபம் ஏதுமில்லை என்பதால் அமைதியாக இருந்தேன். ஆனால் சென்னை வரை வந்த பின்பும் வினோத்தான் வீட்டுக்குப் போவது பற்றி சஞ்சலம் கொண்டிருந்தான். ‘அவசியம் நான் வரத்தான் வேண்டுமா?’ என்ற
 18. சர்க்கரை நோய்க்கு மரபணுவே காரணம் இன்று 2 ஆம் வகை சர்க்கரை நோய் வருவதற்கு பாரம்பரிய மரபணு, மன அழுத்தம், வாழ்க்கை நடைமுறை மாற்றம், உணவு முறை மாற்றம் என பல காரணங்களைச் குறிப்பிடலாம். தற்போது வைத்தியத்துறையில் உள்ளவர்களே தங்களுக்கு தொழுநோய், காசநோய் போன்ற நோய்கள் கூட வரலாம். ஆனால் சர்க்கரை வியாதி மட்டும் வரவேக்கூடாது என்கிறார்கள். ஏனெனில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் தலைமுதல் உள்ளங்கால் வரை எந்த பகுதி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம். இதற்காக அவர்கள் வருமுன் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நோயாளிகளுக்கு முன்னூதரணமாக இரு
 19. 122. மூன்று மாதங்கள் அந்தப் பெண் துறவி மறுநாள் காலை குகையை விட்டுப் புறப்பட்டாள். முந்தைய இரவு அடித்த பனிப்புயலும் பேய்க்காற்றும் எங்கு போயின என்றே தெரியாத அளவுக்கு பர்வதம் தியானத்தில் ஆழ்ந்திருந்தாற்போல இருந்தது. கிளம்பும்போது, சாஜிதா அவளுக்குப் பத்து ரொட்டிகள் சுட்டுக் கொடுத்து அன்போடு அனுப்பிவைத்தாள். ‘இது வேண்டாமே. நான் ஒரு துறவி. அடுத்த வேளைக்கு உணவைச் சுமந்து செல்லக் கூடாது’. ‘வழியில் யாராவது பசிக்கிறது என்றால் அவர்களுக்குக் கொடுங்கள்’ என்று அந்தப் பெண் சொன்னாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளம்
 20. 121. பனிப்புயல் அவளது கால்கள் மிகவும் சொரசொரப்பாக இருந்தன. வினோத் அவளது இரண்டு கால்களையும் அழுத்திப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தபோதும் அந்தக் கால்களின் சொரசொரப்பு அவன் மூளையின் ஒரு பகுதியில் நிறைந்து குவிந்திருந்தது. அவள் குளிப்பதேயில்லை; அல்லது அவளுக்கு ஏதோ சரும வியாதி இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த நினைவில் இருந்து விடுபட சிரமமாக இருந்தது. கூடவே தனது மனத்தின் அற்ப ஞாபகங்களை எண்ணி துக்கம் பொங்கவும் செய்தது.சுய துக்கத்தின்மீதுகூட கவிய மறுக்கும் மனத்தின் பலவீனம் அவனை அவமானம் கொள்ளச் செய்தது. அதை எண்ணியும் சிறிது நேரம் குமுற
 21. 120. வாசனை அன்றைக்கு நெடு நேரம் அவன் சித்ராவை நினைத்துக்கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது. நான் குரல் கொடுக்கும்வரை கண்ணைத் திறக்காதே, நினைப்பதை மாற்றாதே என்று சொன்ன அந்தப் பெண், சொன்னதையே மறந்துவிட்டாளோ என்று வினோத்துக்குத் தோன்றியது. ஆனாலும் கண் விழித்துப் பார்க்கவும் பேசவும் தயக்கமாக இருந்தது. எனவே திரும்பவும் சித்ராவையே நினைக்க ஆரம்பித்தான். அவளைக் காதலிப்பதை அவளுக்கு எப்படித் தெரியப்படுத்துவது என்று அவனுக்கு அந்நாள்களில் தெரிந்திருக்கவில்லை. கடிதம் எழுதலாம் என்று முதலில் நினைத்தான். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான்
 22. மாறியது களம் என்.கே. அஷோக்பரன் / தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 161) ராஜீவினுடைய ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ அணுகுமுறை ராஜீவ் காந்தியின் கீழான, இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையானது, அதற்கு முன்பிருந்த இந்திரா காந்தியின் கீழாக, இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகளிலிருந்து மாறுபட்டதல்ல என்று, 1987இல் வௌியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருத்துரைக்கும் ஹரிஷ் கபூர், ஆனால், ராஜீவின் பாணி வேறானதாக இருந்தது என்கிறார். நபருக்கு நபர், அரசியல் பாணி மாறுபடும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அவர், ராஜீவினுடைய பாணி ‘அரசியலற்ற முகா
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.