Everything posted by நவீனன்
-
சமையல் செய்முறைகள் சில
உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட் தினமும் உணவில் சாலட் சேர்த்து கொண்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று வெஜிடபிள் சாலட் செய்துவது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் - 2 முட்டைகோஸ் - 50 கிராம், தக்காளி - 1 வெள்ளரிக்காய் - 1 குடமிளகாய் - 1, எலுமிச்சைப் பழம் - ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன் பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - அரை ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : * பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து கொள்ளவும். * வெள்ளரிக்காய், கேரட், முட்டைகோஸை துருவி கொள்ளவும். * தக்காளியின் விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். * குடமிளகாயை மெலிதாக வெட்டி கொள்ளவும். * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு கிண்ணத்தில் காய்கறிகளைப் போட்டு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும். * கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி இறக்கி, காய்கறிக் கலவையில் சேர்க்கவும். * துருவிய வெள்ளரிக்காய், நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். * பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். * வெஜிடபிள் சாலட் ரெடி.
-
கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
வெஜ் கபாப் ரெசிப்பி உருளைக்கிழங்கு கபாப் காலிஃப்ளவர் மலாய் டிக்கா மஷ்ரூம் டிக்கா பனீர் டிக்கா ஹரா பரா கபாப் கபாப் போன்றவற்றை நான்–வெஜ் விரும்பிகள் மட்டும்தான் சுவைக்க முடியுமா, என்ன? சைவத்திலும் சகல ருசிகளும் உண்டு என்கிற தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞரும் உணவுப்புகைப்பட நிபுணருமான திவ்யா, கபாப் செய்முறைகளை அளித்திருக்கிறார்! உருளைக்கிழங்கு கபாப் தேவையானவை: உருளைக்கிழங்கு - 3 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - கால் கப் சீரகம் - அரை டீஸ்பூன் தோல் சீவித் துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் பூண்டு பல் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் மூங்கில் குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சித் துருவல், பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை சேர்த்து, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்), சீரகத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு, தேவையான அளவு கலவை எடுத்து, மூங்கில் குச்சிகள் மீது வைத்து விரல்களால் அழுத்திப் பரப்பவும். மேலே மைதா தூவி தடவவும். இப்படியே விழுது முழுவதையும் செய்துகொள்ளவும். தோசைக்கல்லில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு, செய்துவைத்திருக்கும் கபாப்களை அதில் வைத்து இருபுறமும், பொன்னிறமாக, மொறுமொறுவென்று ஆகும்வரை வாட்டியெடுத்து, `கெச்சப்’ உடன் பரிமாறவும். காலிஃப்ளவர் மலாய் டிக்கா தேவையானவை: காலிஃப்ளவர் - 10 சிறிய பூக்கள் (முழு காலிஃப்ளவரை உதிர்த்தது) ஃப்ரெஷ் க்ரீம் - 4 டேபிள்ஸ்பூன் புளிப்பில்லாத கெட்டி தயிர் - 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: காலிஃப்ளவர் பூக்களைப் படத்தில் காட்டியுள்ளபடி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். துண்டுகளைச் சூடான தண்ணீரில் போட்டு எடுக்கவும். ஃப்ரெஷ் க்ரீமுடன் உப்பு, தயிர், எலுமிச்சைச் சாறு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். இதனுடன் காலிஃப்ளவர் துண்டுகளைச் சேர்த்து பிசிறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சூடான தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு, காலிஃப்ளவர் துண்டுகளை அடுக்கி இருபுறமும் நன்றாக டோஸ்ட் செய்து எடுக்கவும். மஷ்ரூம் டிக்கா தேவையானவை: மஷ்ரூம் - 10 (கழுவி துடைத்து துண்டுகளாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் கடலை மாவு - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன் குடமிளகாய் - பாதியளவு (சதுரங்களாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - பாதியளவு (சதுரங்களாக நறுக்கவும்) எண்ணெய் - 2 டேபிஸ்பூன் உப்பு - தேவையான அளவு மூங்கில் டிக்கா குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) - தேவையான அளவு செய்முறை: மூங்கில் குச்சிகளை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கடலை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து பேஸ்ட் போல ஆக்கவும். இதனுடன் மஷ்ரூம், வெங்காயம், குடமிளகாய் சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு குடமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு, அதே கடாயில் மஷ்ரூம் சேர்த்து வதக்கி எடுக்கவும். டிக்கா குச்சியில் குடமிளகாய், வெங்காயம், மஷ்ரூம் என மாற்றி மாற்றிக் குத்தி வைக்கவும். பிறகு டிக்கா குச்சிகளை நேரடியாகத் தணலில் காட்டி, சுட்டு எடுத்து புதினா சட்னியுடன் பரிமாறவும். பனீர் டிக்கா தேவையானவை: பனீர் - 150 கிராம் பெரிய வெங்காயம், குடமிளகாய் - ஒன்று (சதுர வடிவத் துண்டுகளாக நறுக்கவும்) தக்காளி - 2 (சதுர வடிவத் துண்டுகளாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கெட்டித் தயிர் - ஒரு கப் மிளகாய்த்தூள், தந்தூரி மசாலாத்தூள் - தலா 2 டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் - சிறிதளவு கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் மூங்கில் அல்லது மெட்டல் டிக்கா குச்சி (ஸ்கீவர்ஸ் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - தேவையான அளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: தயிரை ஒரு மெல்லிய துணியில் வைத்து மூட்டையாகக் கட்டித் தொங்கவிடவும். அதிலுள்ள அதிகப்படியான தண்ணீர் வடிந்துவிடும். ஒரு பாத்திரத்தில் தயிருடன் மிளகாய்த்தூள், தந்தூரி மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கஸூரி மேத்தி, எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலக்கவும் (கலவை நீர்க்க இருப்பின் சிறிதளவு கடலை மாவு அல்லது சோள மாவு சேர்த்துக் கலக்கவும்). பனீர் துண்டுகளைச் சூடான தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்து டிஷ்யூ பேப்பரால் துடைக்கவும். பனீர், நறுக்கிய பெரிய வெங்காயம், குடமிளகாய், தக்காளித் துண்டுகளை தயிர் கலவையில் முக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் வெளியில் எடுத்து அறை வெப்பநிலைக்கு வரும் வரை அப்படியே வைக்கவும். ஒரு நான்-ஸ்டிக் தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பனீர், குடமிளகாய், வெங்காயம், தக்காளித் துண்டுகளைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வாட்டி எடுக்கவும். பிறகு அவற்றை கைபொறுக்கும் சூட்டில் ஒவ்வொன்றாக குச்சியில் செருகவும் (மூங்கில் குச்சிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவற்றை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்). அதை சில விநாடிகள் நேரடியாகத் தணலில் காட்டி எடுத்து மேலே சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும். ஹரா பரா கபாப் தேவையானவை: கீரை - ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்) உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்) பச்சைப் பட்டாணி - அரை கப் (வேகவைத்து மசிக்கவும்) சீரகம் - அரை டீஸ்பூன் தோல் சீவி துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன் கடலை மாவு - ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் பச்சை மிளகாய் - ஒன்று கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வெறும் வாணலியில் கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் சீரகம் தாளித்து கீரை சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிட்டு இறக்கவும். ஆறிய பின் கீரையுடன் பட்டாணி, இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்), உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மசித்த உருளைக்கிழங்கு, வறுத்த கடலை மாவு சேர்த்துக் கலந்து பிசைந்து மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டவும் (கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு செய்யவும்). தோசைக்கல்லைச் சூடாக்கி, எண்ணெய்விட்டு தட்டிய கபாப்களை அடுக்கி, பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்கவும். புளிப்பு சட்னியுடன் (சாட் சட்னி) பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
30 வகை ஹெல்த்தி ரெசிப்பி சாப்பிடும் உணவு சுவையாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. குடும்பத்தில், குழந்தைகள் முதல் சீனியர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழ ஆரோக்கியமான உணவு வகைகளை இங்கே பட்டியலிட்டு, செய்துகாட்டுகிறார் சமையல்கலைஞர் ஹரிதா படவா கோபி. பீட்ரூட் சாப்ஸ் தேவையானவை: பெரிய பீட்ரூட் - 2 (வேகவைத்து, தோல் உரித்து, சதுர துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (நறுக்கவும்), தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கவும்), பூண்டு - 8 பல், மிளகு - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, கடுகு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு பீட்ரூட், உப்பு சேர்த்துக் கிளறி மூடி, சிறிது நேரம் வேகவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதைச் சூடான சாதத்துடன் பரிமாறலாம். பொட்டேட்டோ - கேஷ்யூ கிரேவி தேவையானவை: குட்டி உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து, தோலுரிக்கவும்), வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை- சிறிய துண்டு, தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 50 கிராம், ஏலக்காய் - 2, லவங்கம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) இலைகள் - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தயிர் - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கொத்த மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: முந்திரிப்பருப்புடன், ஏலக்காய், தனியா, பட்டை, லவங்கம், சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு உருளைக்கிழங்கை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு... பெருங்காயத்தூள், பிரிஞ்சி இலை, இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் மிக்ஸியில் அரைத்த பொடி, தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். தயிர் நன்கு கலந்தவுடன் மிளகாய்த் தூள், சர்க்கரை, உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கஸூரி மேத்தி (வெந்தயக்கீரை) இலைகள், கொத்தமல்லித்தழை தூவவும். இதைச் சூடான சாதத்துடனோ, சப்பாத்தி, பூரியுடனோ பரிமாறலாம். பனீர் பசந்தா தேவையானவை: பனீர் - 500 கிராம், தக்காளி - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - பாதியளவு, வெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பனீரை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் பனீருடன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி தனியே எடுத்துவைக்கவும். கடாயில் வெண்ணெய் ஊற்றி சூடாக்கி, பனீர் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன பின் மீதமுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), சோம்புத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் பனீர் துண்டுகளை சேர்த்து மேலும் நன்கு வதக்கி இறக்கவும். மேலே எலுமிச்சைப் பழம் பிழிந்து பரிமாறவும். கருணைக்கிழங்கு - லெமன் ஃப்ரை தேவையானவை: கருணைக்கிழங்கு - 250 கிராம், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கருணைக்கிழங்கை தோல் சீவி, டைமண்ட் வடிவத்தில் நறுக்கி, வேகவைத்து எடுக்கவும். பாத்திரத்தில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலக்கவும். இதில் கருணைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துப் பிசிறி, எலுமிச்சைச் சாற்றை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு, கருணைக்கிழங்கு துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பேக்டு காலிஃப்ளவர் தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, மெக்ஸிகன் ஹெர்ப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், ஆரிகானோ - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - சிறிதளவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். காலிஃப்ளவர் பூக்கள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சுடுநீரில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, நீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி காலிஃப்ளவர் துண்டுகளைப் பரப்பவும். மெக்ஸிகன் ஹெர்ப்ஸ், ஆரிகானோ, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து மேலே தூவவும். 108 டிகிரியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசைக்கல்லில் சமைக்கலாம். பீன்ஸ் - பனீர் டிலைட் தேவையானவை: பீன்ஸ் - 250 கிராம், பனீர் - 250 கிராம், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பீன்ஸ், பனீரை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி தனியே வைக்கவும். பனீருடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசிறி தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கி, பனீரைப் போட்டு பொரித்து எடுத்து, தனியே வைக்கவும். பிறகு, அதே வாணலியில் மேலும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் பீன்ஸ் கலவை, தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, பனீர் கலவை சேர்த்து மூடி வேகவிட்டு இறக்கவும். வெண்டைக்காய் - வேர்க்கடலை ஸ்டஃப்பிங் தேவையானவை: வெண்டைக்காய் - 500 கிராம், வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெண்டைக்காயின் மேல், கீழ் பாகங்களை நறுக்கிவிட்டு நடுவில் ஒரு கீறல் போட்டு உள்ளிருக்கும் விதைகளை எடுக்கவும். வெறும் வாணலியில் கடலை மாவைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறிய பின் கடலை மாவுடன் வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். இந்தப் பொடியை கீறிய வெண்டைக்காய் உள்ளே நிரப்பவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்னர் அதே வாணலியில் சற்று கூடுதலாக எண்ணெய்விட்டு, வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுக்கவும். பொரித்த வெண்டைக்காய் மீது வறுத்த வெங்காயம் சேர்த்துக் கலந்து பரிமாறவும். கேழ்வரகு - பனீர் சேமியா தேவையானவை: கேழ்வரகு சேமியா (ராகி சேமியா) - 250 கிராம், பனீர் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பனீரை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும். நன்கு கொதிக்கும் நீரில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு வடிகட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பனீரைச் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை மேலும் வதக்கவும். பிறகு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சேமியா, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும். பச்சைப் பயறு சமோசா தேவையானவை: பச்சைப் பயறு - 200 கிராம், மைதா மாவு - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பச்சைப் பயறை நன்றாக வேகவைத்து மசிக்கவும். இதனுடன் வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா உருண்டைகளை முக்கோண வடிவத்தில் திரட்டவும். ஒவ்வொரு முக்கோணத்தையும் கப் போல செய்து, நடுவே பச்சைப் பயறு மசாலாவை வைத்து ஓரங்களைத் தண்ணீர் தொட்டு மூடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, செய்துவைத்த சமோசாக்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். சௌசௌ பொடிமாஸ் தேவையானவை: சௌசௌ (பெங்களூரு கத்திரிக்காய்) - 2 (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு, காய்ந்த மிளகாய் - 6, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். சௌசௌவைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக மொறுமொறுவென்று வரும்வரை வறுக்கவும்.. இதனுடன் வேகவைத்த சௌசௌ சேர்த்துக் கிளறி இறக்கவும். மஷ்ரூம் - பூண்டு மசாலா தேவையானவை: மஷ்ரூம் - 200 கிராம், பூண்டுப் பல் - 10, பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - தேவையான அளவு. செய்முறை: மஷ்ரூமின் அடிப்பாகம் நீக்கி இரண்டாக நறுக்கி, கழுவி சுத்தம் செய்யவும். பூண்டைத் தோல் உரித்து தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி... வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஷ்ரூம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்கு வதங்கி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், மஷ்ரூம் - பூண்டு மசாலா ரெடி. பனீர் சில்லி ஃப்ரை தேவையானவை: பனீர் - 250 கிராம் (டைமண்ட் வடிவில் நறுக்கவும்), குடமிளகாய் (சிவப்பு, மஞ்சள்) - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - சிறிதளவு, சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் பனீருடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, அஜினமோட்டோ, சோயா சாஸ், சில்லி சாஸ், குடமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். குடமிளகாய் பாதி வெந்த பின்பு பனீரை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக வேகவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சோயா கபாப் தேவையானவை: மீல் மேக்கர் (சோயா சங்க்ஸ்) - 250 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், மிளகு - 8 (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மீல் மேக்கரை வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்திருந்து நீரைப் பிழிந்து எடுக்கவும். கடலைப்பருப்பை நன்கு வேகவைக்கவும். ஆறிய பின் கடலைப்பருப்புடன் மீல் மேக்கர் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டவும். பிறகு, தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி, செய்து வைத்த கபாப்களைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். குறிப்பு: எண்ணெயில் பொரித்து எடுத்தும் தயாரிக்கலாம். கோதுமை சேமியா பிரியாணி தேவையானவை: கோதுமை சேமியா - 250 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பீன்ஸ் - 3, கேரட் - ஒன்று, பிரிஞ்சி இலை - ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு, காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்), உருளைக்கிழங்கு - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, கோதுமை சேமியா சேர்த்துக் கிளறி இறக்கவும். பூசணிக்காய் கோஃப்தா கறி தேவையானவை: வெள்ளை அல்லது மஞ்சள் பூசணிக்காய் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடலை மாவு - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பூசணிக்காயை விதை, தோல் நீக்கித் துருவவும். இந்தத் துருவலில் உள்ள நீரை கைகளால் பிழிந்து வடித்துவிடவும். துருவிய பூசணிக்காயோடு சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கடலை மாவு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு இந்த உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.. பிறகு, அதே வாணலியில் மீதமிருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மீதமுள்ள மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்றாக கொதித்து கிரேவி பதத்துக்கு வரும்போது பொரித்து வைத்த கோஃப்தா உருண்டைகளைப் போடவும். மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சன்னா புலாவ் தேவையானவை: சன்னா (கொண்டைக்கடலை) - 100 கிராம், பாசுமதி அரிசி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சன்னா மசாலா பொடி - 2 டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சன்னாவை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து, வேகவைத்து எடுக்கவும். பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அரிசியைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சன்னா மசாலா பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, வேகவைத்த சன்னா சேர்த்து நன்கு வதக்கவும். சன்னாவில் மசாலா நன்றாக சேர்ந்த பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். பேபி கார்ன் பெப்பர் ஃப்ரைடு ரைஸ் தேவையானவை: பேபி கார்ன் - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), பாசுமதி அரிசி - 100 கிராம், வெள்ளை மிளகு - 4 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), அஜினமோட்டோ (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து வேகவைத்து எடுக்கவும். பேபி கார்னை தனியாக வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வும். இதனுடன் பேபி கார்ன், மிளகுத்தூள், உப்பு, (விருப்பப்பட்டால்) அஜினமோட்டோ சேர்த்து வதக்கவும். பிறகு, வடித்து வைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து கிளறி இறக்கவும். சொதி தேவையானவை: தக்காளி - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் (முதல் பால், இரண்டாவது பால்) - தலா ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, இரண்டாவது தேங்காய்ப் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும், முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். கேப்ஸிகம் - வேர்க்கடலை கறி தேவையானவை: குடமிளகாய் (பச்சை, சிவப்பு) - தலா ஒன்று (விரும்பிய வடிவில் நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேர்க்கடலை - 100 கிராம், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் அரைத்த பொடி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். குறிப்பு: குடமிளகாய் நன்கு வேகாமல், கொஞ்சம் `நறுக் நறுக்’கென்று இருந்தால், மிகவும் சுவையாக இருக்கும். இன்ஸ்டன்ட் கோஃப்தா கறி தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து வைக்கவும். பாத்திரத்தில் கடலை மாவு, ஒரு பாகம் வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மீதம் உள்ள வெங்காயம் மற்றும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்ப்பாலை சேர்த்து, பொரித்து வைத்த உருண்டைகளைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். லேடிஸ் ஃபிங்கர் - கேஷ்யூ மசாலா தேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 100 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். சுடுநீரில் முந்திரிப் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் வெண்டைக்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த முந்திரிப் பருப்பு விழுது, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியாக வந்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கலக்கவும். காலிஃப்ளவர் பூரி தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, கோதுமை மாவு - 200 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். சூடான நீரில் காலிஃப்ளவர் பூக்கள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல பிசையவும். காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்கவும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். குறிப்பு: இது சாதாரண பூரி போல உப்பி வராது. தட்டையாகவே இருந்தாலும், ருசி நன்றாக இருக்கும். மீல் மேக்கர் மஞ்சூரியன் தேவையானவை: மீல் மேக்கர் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தக்காளி சாஸ் - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சூடான நீரில் மீல் மேக்கரைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து எடுக்கவும். அதைப் பிழிந்துவிட்டு, துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், மீல் மேக்கர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிட்டு இறக்கவும். கொள்ளு சாம்பார் தேவையானவை: கொள்ளு - 200 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), விரும்பிய காய்கறிகள் கலவை (முருங்கைக்காய், மாங்காய், பூசணிக்காய்) - ஒரு கப், தனியா (மல்லி) - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடியளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெல்லம் - 50 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த் துருவல், கடலைப்பருப்பு, வெந்தயம், புளி, வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். கொள்ளுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளைச் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் வேகவைத்த கொள்ளு, அரைத்து வைத்த விழுது, உப்பு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும். இதைச் சாதத்துடன் பரிமாறலாம். ஸ்பானிஷ் ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - 200 கிராம், டொமேட்டோ ப்யூரி - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டுப் பல் - 10 (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் வெண்ணெயைவிட்டு உருக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வேகவைத்த சாதம், டொமேட்டோ ப்யூரி, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பாகற்காய் மசாலா தேவையானவை: சிறிய பாகற்காய் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாகற்காயின் ஓரங்களை நறுக்கிவிட்டு, நடுவில் சிறு கீறல் போட்டு, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவும். (முழுவதுமாக நறுக்கக் கூடாது). வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். ஆறிய பின் இந்தக் கலவையைப் பாகற்காயின் நடுவே அடைக்கவும். பிறகு பாகற்காயை நூலால் கட்டி சிறிது நேரம் ஊறவிடவும் (உள்ளிருக்கும் மசாலா வெளியில் வராமல் இருப்பதற்காக). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பாகற்காய்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் (நூல் தானாகப் பிரிந்து வந்துவிடும்). சுவையான பாகற்காய் மசாலா ரெடி. பொட்டேட்டோ கப்ஸ் தேவையானவை: உருளைக் கிழங்கு - 250 கிராம் (தோல் சீவி துருவவும்), க்யூப் சீஸ் - 6 (துருவவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: துருவிய உருளைக் கிழங்கில் இருந்து தண்ணீரைப் பிழிந்தெடுக்கவும். இதனுடன் சீஸ் துருவல், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிய கப்களில் எண்ணெய் தடவி, இந்தக் கலவையை உள்ளே போட்டு நன்றாக அழுத்தவும். பின்னர் கப்பை திருப்பித் தட்டினால், சிறு சிறு கப் வடிவில் கலவை வெளியே வரும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொட்டேட்டோ கப்புகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தானியம் - சம்பா பிசிபேளாபாத் தேவையானவை: சம்பா ரவை - 200 கிராம், தானியக் கலவை (பச்சைப் பயறு, மொச்சை, வெள்ளைக் காராமணி, சிவப்புக் காராமணி, வெள்ளைக் கொண்டைக்கடலை, கறுப்புக் கொண்டைகடலை) - ஒரு கப், துவரம்பருப்பு - 2 கப், வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, புளிக்கரைசல் - ஒரு சிறிய கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: முதல் நாள் இரவே தானியங்களைத் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் களைந்து அரைவேக்காடு பதத்தில் வேகவைத்து எடுக்கவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தானியங்கள், உப்பு, மஞ்சள்தூள், துவரம்பருப்பு, புளிக்கரைசல், சம்பா ரவை, சாம்பார் பொடி சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். ராஜ்மா பிரியாணி தேவையானவை: ராஜ்மா - 200 கிராம், பாசுமதி அரிசி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறிய ராஜ்மாவைக் களையவும். குக்கரில் ராஜ்மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி பத்து விசில்கள் வரை விட்டு இறக்கவும். பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு உருக்கி, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், ராஜ்மா பிரியாணி ரெடி. சோயா பக்கோடா தேவையானவை: சோயா - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கி, சோயாவைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு சோயாவைப் பிழிந்து எடுக்கவும். பிறகு, சோயாவைக் கையால் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு மசித்து தனியே எடுத்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சோயா, கடலை மாவு, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சோயா கலவையைச் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.- சமையல் செய்முறைகள் சில
"வாழைப்பூ போண்டா செய்யும் முறை தேவையான பொருள்கள் : உளுந்து - கால் கிலோ வாழைப்பூ - ஒன்று (நடுத்தரமான அளவு) வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப கறிவேப்பிலை - ஓரு கொத்து தேங்காய்ப்பூ - அரை கப் மிளகு - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க செய்முறை : உளுந்தை ஊறவைத்து நைசாக அரைக்கவும். தேங்காயுடன் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உளுந்து மாவுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டி போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாழைப்பூ போண்டா தயார். சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் - சீஸ் பாஸ்தா விடுமுறை நாட்களில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க ஆசைப்பட்டால், இத்தாலியன் ரெசிபியான சிக்கன் - சீஸ் பாஸ்தாவை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 1 கப் பாஸ்தா - 250 கிராம் பூண்டு - 8 பற்கள் சீஸ் - 1/4 கப் கிரீம் - 1/2 கப் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் பால் - 3-4 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன் வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு செய்முறை : * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும். * பூண்டை நன்றாக தட்டிக்கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், பூண்டு, சிக்கன் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து வாணலியை மூடி 15 நிமிடம் சிக்கன் துண்டுகளை வேக வைக்க வேண்டும். * ஒரு பௌலில் சோள மாவு, மற்றும் சிறிது பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். * சிக்கன் வெந்ததும், அதில் கிரீம், சோள மாவு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, கலவை நன்கு கெட்டியாக வரும் வரை கைவிடாமல் கிளறி விட வேண்டும் * கலவையானது கெட்டியானதும், அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும். * பின் அதில் சீஸ் போட்டு, தீயை குறைவில் வைத்து, சீஸை உருக வைக்க வேண்டும். * அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் பாஸ்தாவில் ஒட்டுமாறு பிரட்டவும். * கடைசியாக மிளகு தூள், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். * சுவையான சிக்கன் பாஸ்தா ரெடி!!!- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சப்பாத்தி - 4, வெங்காயம் - 2 தக்காளி - 1 ப.மிளகாய் - 1 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு. தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு. செய்முறை : * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின், ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.. * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். * அடுத்து நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் 5 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். * மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா ரெடி.- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி சத்தான கேழ்வரகை வைத்து வித்தியாசமான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று கேழ்வரகு சேமியாவை வைத்து சூப்பரான பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ராகி சேமியா - ஒரு கப், பச்சைப் பட்டாணி - 50 கிராம், பீன்ஸ் - 10 கேரட் - 1 தக்காளி - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - சிறிதளவு பட்டை - சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 பூண்டு - 6 பல், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: * வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சேமியாவை வெறும் கடாயில் போட்டு சிறிது வதக்கி கொள்ளவும். * வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். * காய்கறிகள் சற்று வதங்கியதும் இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள், உப்பு சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்). * தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும். * சூப்பரான ராகி சேமியா பிரியாணி ரெடி.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ் சிம்பிளாக எளிய முறையில் ஏதேனும் வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், குடைமிளகாய் புலாவ் செய்து சாப்பிடுங்கள். இப்போது குடைமிளகாய் புலாவ் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1/2 கப் வெங்காயம் - 1 குடைமிளகாய் - 1/4 கப் ஏலக்காய் - 1 கிராம்பு - 2 பட்டை - 1/4 இன்ச் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு அரைப்பதற்கு... பூண்டு - 3 பற்கள் மிளகு - 1/2 டீஸ்பூன் முந்திரி - 5 செய்முறை: * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியை நன்றாக கழுவி நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். * மிக்ஸியில் பூண்டு, மிளகு, முந்தியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். சாதத்தை உதிரியாக வேக வைத்து கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தாளித்த பின் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் வதக்கவும். * அடுத்து அதில் அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். * பின் அதில் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டவும். * அடுத்து உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். * சூப்பரான ஈஸியான குடைமிளகாய் புலாவ் ரெடி!!!- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - முக்கால் கிலோ சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1 புளி - 50 கிராம் குழம்பு பொடி - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு வெந்தயம் - கால் டீஸ்பூன் பூண்டு - பல் எப்படிச் செய்வது? வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்துத் தாளியுங்கள். பிறகு உரித்துவைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். சுத்தம் செய்து வைத்துள்ள இறால்களை அதில் போட்டு நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் புளிக் கரைசலை ஊற்றி, சிறு தீயில் பத்து நிமிடம் கொதிக்கவையுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் எண்ணெய் தனியாகப் பிரிந்துவரும். இதுவே சரியான பதம். அப்போது சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கிவையுங்கள். சுறாப்புட்டு என்னென்ன தேவை? சுறா மீன் - கால் கிலோ வெங்காயம் - 2 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு தனி மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? சுறா மீனைச் சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கொதித்ததும் தண்ணீரை வடிகட்டி ஆறவிடுங்கள். ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கிவிடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் தோலுரித்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து அது உதிரி உதிரியாக வரும்வரை சிறு தீயில் வைத்துக் கிளறிவிடுங்கள். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் நாவூறும் சுறாப்புட்டு தயார். சாதத்தில் இந்த மசியலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.- சமையல் செய்முறைகள் சில
காரல் மீன் சொதி என்னென்ன தேவை? காரல் மீன் - அரை கிலோ, தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 3, சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - 1, சின்ன வெங்காயம் - 5, கறிவேப்பிலை, உப்பு எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? தேங்காயைத் துருவி, 2 முறை பால் எடுக்கவும். தேங்காய்ப்பாலுடன் சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சுத்தம் செய்த காரல் மீன் இவற்றுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை அதில் சேர்த்து இறக்க வேண்டும். எலுமிச்சம்பழத்தை ருசிக்கு ஏற்ப பிழியலாம். வடைச் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு மூன்றையும் சேர்த்துத் தாளித்து, சொதியில் ஊற்றினால் சுடச்சுட காரல் மீன் சொதி தயார். அப்புறமென்ன சோற்றில் ஊற்றிப் பிசைந்து ஒரு கட்டுக் கட்டினால்... காரல் மீனை பிட்டு உண்டால்.. அடடா... நாக்கை விட்டு ருசி போக நாளாகுமுங்க!- சமையல் செய்முறைகள் சில
சித்திரை ஸ்பெஷல் ரெசிப்பி கல்கண்டு சாதம் கேரட் ரைஸ் பாசிப்பயறு மசியல் பீன்ஸ் பொரியல் மைசூர் ரசம் தட்டப்பருப்பு போண்டா வெஜிடபிள் உருண்டைக் குழம்பு சேப்பங்கிழங்கு வறுவல் நீர்பூசணிக் கூட்டு மாங்காய் - வேப்பம்பூ பச்சடி எலுமிச்சைத் தொக்கு முக்கனிப் பாயசம் புத்துணர்வு பிறக்கும்... கோடை கொண்டாட்டம் தொடங்கும்... சித்திரை என்றாலே சிறப்புதானே? தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவின் பல மாநிலங்களில் சித்திரைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்நன்னாளில் ரசித்து ருசித்து மகிழும் வகையில் தலைவாழை விருந்து ரெசிப்பிகளை அளிக்கிறார் கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன். கல்கண்டு சாதம் தேவையானவை: பச்சரிசி, கல்கண்டு - தலா 200 கிராம் பால் - 200 மிலி (காய்ச்சி ஆறவைத்தது) முந்திரி, திராட்சை - தலா 10 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே வைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கல்கண்டை மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். குக்கரில் பச்சரிசியுடன் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும். ஆறியதும் குக்கரைத் திறந்து வெந்த சாதத்தை நன்கு மசிக்கவும். இதனுடன் பொடித்த கல்கண்டு, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும். குறிப்பு: பால் சேர்க்காமல் பச்சரிசியைக் குழைய வேகவைத்தும் செய்யலாம். கேரட் ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - கால் கிலோ தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன் கேரட் துருவல் - ஒரு கப் கேரட் துண்டுகள் - ஒரு கப் பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சைமிளகாய் - 3 (இரண்டாகக் கீறவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பட்டை, கிராம்பு - தலா 2 ஏலக்காய் - ஒன்று பிரியாணி இலை - சிறிதளவு நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியைக் கழுவி, களைந்து வைக்கவும். கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். இதனுடன் கேரட் துருவல், கேரட் - தேங்காய்ப் பால், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதி வரும்போது அரிசியைச் சேர்த்து மூடி, இரண்டு விசில் விட்டு இறக்கவும். குறிப்பு: ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் போதுமானது. பாசிப்பயறு மசியல் தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம் பூண்டு - 6 பல் (ஒன்றிரண்டாகத் தட்டவும்) சின்ன வெங்காயம் - 15 (தோல் உரித்து வட்டமாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்) சீரகம் - அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வெறும் வாணலியில் பச்சைப் பயறை லேசாக வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய்சேர்த்து... கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வெந்த பயறு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி மசிக்கவும். பீன்ஸ் பொரியல் தேவையானவை: பீன்ஸ் - கால் கிலோ பாசிப்பருப்பு - 25 கிராம் காய்ந்த மிளகாய் - 2 தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: பீன்ஸைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். குக்கரில் பீன்ஸ், உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த காய் கலவையைச் சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கி, தேங்காய்த்துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். மைசூர் ரசம் தேவையானவை: தனியா (முழு மல்லி) - 3 டீஸ்பூன் துவரம்பருப்பு - 5 டீஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 புளி - எலுமிச்சை அளவு தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை துவரம்பருப்பு - 50 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் வெல்லம் - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் நெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வெறும் வாணலியில் தனியா (முழு மல்லி), 5 டீஸ்பூன் துவரம்பருப்பு, மிளகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துப் பவுடராகப் பொடிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம்பருப்பை வேகவைத்து எடுக்கவும். வாணலியில் புளிக்கரைசல், தக்காளி, உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த துவரம்பருப்பு, வறுத்து அரைத்தப் பொடி, வெல்லம் சேர்த்து நன்கு கொதிவந்ததும் இறக்கவும். மற்றொரு வாணலியில் நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி அலங்கரிக்கவும். தட்டப்பருப்பு போண்டா தேவையானவை: தட்டப்பருப்பு - 250 கிராம் பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்) கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு சீரகம் - 2 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் தோல் சீவி துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: தட்டப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சித் துருவல், தேங்காய்த்துருவல், சீரகம், உப்பு, அரைத்தப் பருப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். குறிப்பு: காராமணியில் இருந்து பெறுவதே தட்டப்பருப்பு. வெஜிடபிள் உருண்டைக் குழம்பு தேவையானவை: சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 7 பல் (தட்டவும்) கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் புளி - எலுமிச்சை அளவு மல்லித்தூள் (தனியாத்தூள் ) - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - தேவையான அளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு உருண்டைகள் செய்ய: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம் கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் முட்டைக்கோஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 10 பல் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு சோம்பு - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு குழம்புக்கு அரைக்க: தேங்காய்த்துருவல் - ஒரு கப் சோம்பு - ஒரு டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 (தோல் உரிக்கவும்) செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, ஊறிய பருப்பில் ஒரு கைப்பிடி தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, பின்னர் மீதமுள்ள பருப்பு, தேவையான உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அரைத்த விழுது, கேரட் துருவல், முட்டைகோஸ், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும். வாய் அகன்ற வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), புளிக்கரைசல், உப்பு, அரைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு நான்கு உருண்டைகளை மட்டும் போட்டு, இரண்டு நிமிடங்கள் கழித்து நான்கு உருண்டைகள் சேர்த்து என எல்லா உருண்டைகளையும் சேர்த்து உருண்டைகள் நன்கு வெந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். குறிப்பு: உருண்டைகளை ஆவியில் வேகவைப்பதை விட குழம்பில் நேரடியாகப் போட்டால் மிருதுவாக இருக்கும். சேப்பங்கிழங்கு வறுவல் தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் பூண்டு - 5 பல் சோம்பு - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பட்டை - சிறிதளவு கிராம்பு - 2 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: சேப்பங்கிழங்கை மண் போக கழுவி, குக்கரில் சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும். ஆறிய பின் தோல் உரித்து நீளவாக்கில் துண்டுகளாக்கவும். தேங்காய்த் துருவலுடன் சோம்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் சற்று கூடுதலாக எண்ணெய் சேர்த்து சேப்பங்கிழங்கைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதங்கி, பொரித்த சேப்பங்கிழங்கு சேர்த்துப் புரட்டி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். நீர்பூசணிக் கூட்டு தேவையானவை: நீர்பூசணிக்காய் - ஒரு கீற்று (நறுக்கி வைக்கவும்) கடலைப்பருப்பு - 50 கிராம் பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் - அரை கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள் - 2 சிட்டிகை பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை. தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: குக்கரில் கடலைப்பருப்புடன் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். தேங்காய்த்துருவலுடன், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, தண்ணீர் தெளித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பூசணிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய் நன்கு வெந்தவுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். குறிப்பு: கூட்டு, அவியல் செய்யும்போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சுவை கூடும். மாங்காய் - வேப்பம்பூ பச்சடி தேவையானவை: மாங்காய் - 2 (தோல், கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்) வேப்பம்பூ - 2 டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு வெல்லம் - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளி வைக்கவும்) பெருங்காயத்தூள் - சிட்டிகை எண்ணெய் - 2 டீஸ்பூன் நெய் - சிறிதளவு உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை: குக்கரில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு தண்ணீர் தெளித்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். ஆறிய பின் மசிக்கவும். வாணலியில் நெய் விட்டு வேப்பம்பூ சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் மசித்த மாங்காய், உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே நெய்யில் வறுத்த வேப்பம்பூ சேர்த்து இறக்கவும். குறிப்பு: வேப்பம்பூவை நிறைய கிடைக்கும் சீஸனில் அதை நிழலில் காயவைத்து பக்குவப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். நாட்டு மருந்துக் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கும். எலுமிச்சைத் தொக்கு தேவையானவை: எலுமிச்சைப் பழம் - 15 கடுகு - 4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் - 150 மிலி பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு செய்முறை: எலுமிச்சைப் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, விதை நீக்கி, உப்பு சேர்த்து ஒரு ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு 10 நாட்கள் ஊறவிடவும். ஜாடியின் மேல் பகுதியை மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி வைக்கவும். தினமும் ஒருமுறை குலுக்கிவிடவும். 10 நாள்கள் கழித்து நன்கு ஊறியதும் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் வெந்தயத்தூள், மிளகாய்த்தூள், அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். எலுமிச்சைத் தொக்கு ரெடி. முக்கனிப் பாயசம் தேவையானவை: மாம்பழம் - 2 (தோல், கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்) வாழைப்பழம் - 3 (தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்) பலாச்சுளை - 6 (கொட்டை எடுத்து பொடியாக நறுக்கவும்) வெல்லத்தூள் - தேவையான அளவு தேங்காய்த்துருவல் - ஒரு கப் ஏலக்காய் - 4 முந்திரி - 10 திராட்சை - 15 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை துண்டுகளில் சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதியுள்ள பழங்களை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து உருக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து, தனியாக எடுத்து வைத்த பழங்கள் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும் இறக்கி வடிகட்டவும். தேங்காய்த்துருவலுடன் ஏலக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்து கெட்டியான பால் எடுக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து, அரைத்த பழ விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இதில் வெல்லக் கரைசல், தேங்காய்ப்பால் ஊற்றி, நன்கு கொதித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் தனியாக எடுத்து வைத்த பழங்கள் சேர்க்கவும். இந்தக் கலவை நன்கு கொதிவந்ததும் இறக்கவும்.- சமையல் செய்முறைகள் சில
பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி இட்லி மற்றும் தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் வடகறி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. இன்று இந்த வடகறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு - 1 கப் சோம்பு - 1 டீஸ்பூன் வரமிளகாய - 2 உப்பு - தேவையான அளவு கிரேவிக்கு... வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கொத்தமல்லி - சிறிது தேங்காய் பால் - 1 கப் தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 2 பிரியாணி இலை - 1 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது செய்முறை: * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். * கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். * அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆறியதும் துண்டுகளாக பிய்த்து வைக்கவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். * அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி வதக்கவும். * அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். * நன்றாக கொதிக்கும் போது தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும். * திக்கான பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள வடைகளை போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். * சூப்பரான சைடு டிஷ் வடைகறி ரெடி!!!- சமையல் செய்முறைகள் சில
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும். இன்று சர்ச்சரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோவக்காய் - 1 கப் தக்காளி - 3 தனியா தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிதளவு சீரகம் - சிறிதளவு மிளகாய்த்தூள் - சிறிதளவு உப்பு - சுவைக்கேற்ப கரம் மசாலா தூள் - சிறிதளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் முந்திரி பருப்பு - 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்) மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் - 1 பத்தை செய்முறை : * கோவக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். * வடிகட்டிய அதே சுடுதண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். * தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். * அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும். * அடுத்து அதில் வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும். * அடுத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, கரம் மசாலா தூள் போட்டு சப்ஜி திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். * சூப்பரான கோவக்காய் சப்ஜி ரெடி!- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா மாலையில் காபி, டீயுடன் சூடாக ஏதாவது சாப்பிட விரும்பினால் முட்டை போண்டா செய்து சாப்பிடலாம். இன்று இந்த முட்டை போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை - 6 (வேக வைத்தது) கடலை மாவு - 1 கப் பேக்கிங் சோடா - 1 சிட்டிகை பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: * முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து வைக்கவும். * ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். * அதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும். * இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா ரெடி!!!- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன் சைனீஸ் உணவுகளிலேயே மஞ்சூரியன் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது காளானை வைத்து மஞ்சூரியனை எப்படி சுவையான ருசியில் செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பட்டன் காளான் - 250 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் சோள மாவு - 4-5 டேபிள் ஸ்பூன் மைதா - 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - 2 கப் எண்ணெய் - தேவையான அளவு தாளிப்பதற்கு... இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) வெங்காயம் - 1 சோயா சாஸ் - 1 டீஸ்பூன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் தக்காளி கெட்சப் - 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். * காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும். * ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். * கழுவி தனியாக வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். * பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு போட்டு சிறிது வதக்கிய பின்னர் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும். * இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!!- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான வெந்தய மசாலா சாதம் ஆந்திராவில் இந்த வெந்தய மசாலா சாதம் மிகவும் பிரபலம். ஸ்பைசியாக சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அரிசி - 300 கிராம் வெந்தயம் - 2 டீஸ்பூன் கீறிய பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 பூண்டு - 10 பல் சின்ன வெங்காயம் - 15 சோம்பு - ஒரு டீஸ்பூன் தேங்காய் - ஒரு மூடி சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் செய்முறை : * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். * தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். * அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். * பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வெந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும். * இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். * இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும். * கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். * சூப்பரான வெந்தய மசாலா சாதம் ரெடி.- சமையல் செய்முறைகள் சில
சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம் கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகை வைத்து ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : முழு ராகி - 1 கப் or ராகி மாவு 1 ½ கப் பச்சரிசி - 1/2 கப் இட்லி அரிசி - 1/2 கப் தேங்காய் துருவல் - 1/ 4 கப் அவல் - 1/2 கப் உளுந்து - 1/4 கப் உப்பு - சிறிது செய்முறை : * ஊற வைத்த பச்சரிசி, இட்லி அரிசி, தேங்காய் துருவல், அவல், முழு ராகி or ராகி மாவு ஆகியவற்றை முதல் நாளே அரைத்துக் கொள்ளுங்கள். முழு ராகி இல்லாவிடில், ராகி மாவை அரிசி உடன் சேர்த்து அரைத்து புளிக்க வைக்க வேண்டும். அரிசி மற்ற பொருகள் அரைத்த பின் ராகி மாவாக தான் இருக்கிறது கலந்து விடலாம் என்று நினைக்காமல், மிக்ஸியில் அரிசி உடன் ராகி மாவு போட்டு அரைக்க வேண்டும். * அடுத்த நாள் காலையில், தண்ணீர் விட்டுத் தோசை மாவு போலக் கரைத்துக் கொள்ளுங்கள். * ஆப்பச் சட்டியை அடுப்பில் வைக்கவும். ஒரு கரண்டி மாவை எடுத்து, அதில் ஊற்றவும். சட்டியை இரு புறமும் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்றுச் சுற்றினால், அதன் மத்தியில் ஊற்றப்பட்டிருக்கும் மாவு, நடுவில் கனமாகவும், ஓரங்களில் மென்மையாகவும் படியும். உடனே சட்டியை மூடி, அளவாகத் தீயை எரிய விட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆப்பம் வெந்தவுடன் எடுக்கவும். * தேங்காய்ப் பாலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து, ஆப்பத்தில் ஊற்றிச் சாப்பிடவும். * தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகக் கருப்பு சுண்டல் குருமா சேர்த்துக் சாப்பிட நன்றாக இருக்கிறது * ராகி ஆப்பம் தேங்காய் பால் உடன் சாப்பிடுவதை விட கருப்பு கொண்டக்கடலை குருமா சாப்பிட அருமையாக இருக்கிறது.- சமையல் செய்முறைகள் சில
சைவ பிரியர்களுக்கான காளான் சாதம் சைவ உணவாளர்களுக்கு காளான் ஒரு அருமையான உணவுப் பொருள். அத்தகைய காளானைக் கொண்டு மதியம் உணவு செய்ய நினைத்தால், காளான சாதம் செய்யுங்கள். தேவையான பொருட்கள்: சாதம் - 2 கப் வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 மிளகு தூள் - 1 ஸ்பூன் காளான் - 200 கிராம் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை: * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் தீயை குறைவில் வைத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் காளானை போட்டு கிளறி, மிளகு தூள், சிறிது தண்ணீர் ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும். * காளான் நன்கு வெந்து, தண்ணீர் சுண்டியதும், அதில் சாதத்தைப் போட்டு கிளறி, அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைக்கவும். * அடுத்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி பரிமாறவும். * சுவையான காளான் சாதம் ரெடி!!!- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரி இன்று இரவு ஸ்பெஷலாக வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளதா? சரி அப்படியானால் உருளைக்கிழங்கு மசாலா பூரி செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள் : கடலை மாவு - ஒரு கப் கோதுமை மாவு - ஒரு கப் உருளைக்கிழங்கு - 2 தயிர் - அரை கப் மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி ஓமம் - அரை தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை : * உருளைக்கிழங்கை வேகவைத்து மிக்சியில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, உப்பு, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், ஓமம், சீரகம், கரம்மசாலா தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். * இந்த மாவுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசைந்து அரை மணிநேரம் ஊற விடவும். * பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டையளவு மாவை எடுத்து தேய்த்து பூரியாக திரட்டவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த மாவை போட்டு பூரியை பொரித்து எடுக்கவும். * சுவையான உருளைக்கிழங்கு மசாலா பூரி தயார். * இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. - சமையல் செய்முறைகள் சில
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.