Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. மொகல் மட்டன் பிரியாணி பிரியாணியில் பல வகைகள் உண்டு. இன்று ரம்ஜான் ஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1/2 கிலோ பாசுமதி அரிசி - 2 கப் தயிர் - 1 கப் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 மிளகு - 6 கிராம்பு - 4 ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 1 குங்குமப்பூ - 1 சிட்டிகை முந்திரி - 10 உலர் திராட்சை - 10 நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை : * மட்டனை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். * வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைக்கவும். * மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும். * இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும். * அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும். * அடுத்து முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும். * மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் அதை எடுத்து குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும். * மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும். * சூப்பரான மொகல் மட்டன் பிரியாணி ரெடி.
  2. சன்டே ஸ்பெஷல் முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்துவது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ (தோல் நீக்கியது) வெங்காயம் - 3 பெரியது தக்காளி - 3 மீடியம் சைஸ் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சிக்கன் மசாலா தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தே.அளவு அரைத்த தேங்காய் விழுது - 1/2 கப் கறிவேப்பிலை - 2 கொத்து கொத்தமல்லி இழை - 10 தண்டுகள் வெங்காயத்தாள் - 1 தண்டு (optional) எண்ணெய் - 3 டே.ஸ்பூன் அரைக்க : இஞ்சி - 2 இஞ்ச் அளவு பூண்டு - 10 பெரிய பல் வரமிளகாய் - உங்கள் சுவைக்கு ஏற்ப கிராம்பு/லவங்கம் - 10 பட்டை - 2 இஞ்ச் சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கசகசா - 1/2 டீஸ்பூன் செய்முறை : * முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். * சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். * தக்காளி, வெங்காயத்தாள், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். * ஒரு அடி கனமான அழமான பத்திரத்துல 3 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். * பச்சை வாசனை போன பிறகு நீளமா நறுக்கி வச்ச வெங்காயம் கூட கொஞ்சமா உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கணும். * இப்போ மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா தூள் சேர்த்து 1 நிமிஷம் கிளறவும். * அடுத்து அதில் நறுக்கின தக்காளி, கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கணும். * இந்த ஸ்டேஜ்ல சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் விட தேவையில்லை. வேகும் போது சிக்கனில் இருந்து தண்ணீர் விடும். அதுவே போதுமானது. * சிக்கன் நன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்க விட்டு எண்ணெய் மிதக்கும் போது அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி மூடி வச்சுடுங்க. * சூப்பரான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி. * இது ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, குஸ்கா, பிரியாணி எல்லாத்துக்குமே நல்ல காம்பினேசன்.
  3. சூப்பரான மதிய உணவு வெஜிடபிள் புலாவ் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த வெஜிடபிள் புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புலாவ் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 2 கப் தனியாப் பொடி - 2 டீஸ்பூன் கரம் மசாலாபொடி - 1 டீஸ்பூன் சோம்பு - 2 டீஸ்பூன் தனி மிளகாய்ப் பொடி- தேவைகேற்ப உப்பு- தேவைகேற்ப கேரட் - 100 கிராம் குடைமிளகாய் - சிறியது 1 வெங்காயம் - 2 பீன்ஸ் - 100 கிராம் உரித்த பட்டாணி - 1/2 கப் தக்காளி - 3 காலிபிளவர் - பாதி கொத்தமல்லி - சிறிதளவு. அரிசியுடன் தாளிக்க : ஏலக்காய் - 6 பட்டை - 4 கிராம்பு- 6 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை : * கொத்தமல்லி, காலிபிளவர், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாய், கேரடை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். * பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்து கொள்ளவும். * கு‌க்க‌ரி‌ல் வெண்ணெயை போட்டு லேசாக உருகியதும் சோம்பு, ஏலக்காய் பட்டை கிராம்பு போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த அரிசியைப் போட்டு, வாசனைவரும் வரை லேசாக வறுக்கவும். 1 : 2 என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைக்க வேண்டும். அ‌ரி‌சியை உ‌தி‌ரியாக வேக வை‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். * வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதற்குள் காரட் பீன்ஸை குக்கரில் ஆவியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் சத்து வீணாகாமல், குழையாமல், நிறம் மாறாமல் இருக்கும். * .வெங்காயம் வதங்கிய பிறகு, குடமிளகாய், பட்டாணி, காலிபிளவர் போட்டு நன்கு வதக்கவும். நிறம் மாறாமல், மிருதுவாக ஆன பின் கேரட், பீன்ஸ் போட்டு, பொடி வகைகளையும் போட்டு வதக்கவும். காய்கறி கலவையை அதிகமா வதக்க கூடாது. * கடைசியில் தக்காளி சேர்த்து வதக்கி, உப்புப் போட்டு பின் கீழே இறக்கி வைக்கவும். * ஒரு அகன்ற பாத்திரத்தில் தயாராக இரு‌க்கு‌ம் சாதத்தையும், காய்கறிகளையும் போட்டு கலக்கவும். * நன்கு கலந்த பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். * சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி. சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 10 கத்திரிக்காய் - 1 புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு… மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 5 எண்ணெய் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு… எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் துவரம் பருப்பு - 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 1 பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது செய்முறை : * வெண்டைக்காய், கத்தரிக்காயை சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாதும் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். * அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். * பிறகு அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும். * சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த, பின் இறுதியில் அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். * சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெடி!!! சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் சாதம், தயிர் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 200 கிராம் வெங்காயம் - 1 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 2 அல்லது 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்றவாறு செய்முறை : * மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். * உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும். * அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும். * அனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும். * அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும். * சூப்பரான சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.
  4. சூப்பரான சிக்கன் - முட்டை பொடிமாஸ் ஞாயிற்றுக்கிழமைகளில் வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்பினால் சிக்கன் - முட்டை பொடிமாஸ் செய்யலாம். இந்த பொடிமாஸ் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எண்ணெய் - தேவையான அளவு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு வெங்காயம் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன் தக்காளி - 1 மஞ்சள்தூள் - 1/ 4டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் முட்டை - 2 கொத்தமல்லி - சிறிதளவு சிக்கனை வேக வைக்க : சிக்கன் - அரை கிலோ உப்பு - சுவைக்கேற்ப மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை : * தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் நிறைய நீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைக்கவும். * சிக்கன் நன்றாக வெந்ததும் தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து ஆறவைத்து உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும். * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், உப்பு, 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், சிக்கன் ஸ்டாக் சேர்த்து நன்றாக வதக்கவும். * அடுத்து அதில் சிக்கன் பொடிமாஸை சேர்த்து டிரையாக உதிரியாக வரும் வரை வதக்கவும். * இப்போது அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும். * சிக்கன் உதிரியாக பொடிமாஸ் போல் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். * சூப்பரான சிக்கன் பொடிமாஸ் ரெடி.
  5. ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன் சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் சாப்பிட கோங்கூரா சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று கோங்கூரா சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ புளிச்சக்கீரை / கோங்குரா - 1 கட்டு பெரிய வெங்காயம் - 1+1 பச்சை மிளகாய் - 6 இஞ்சி பூண்டு நறுக்கியது - தலா 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் குவியலாக மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு. செய்முறை : * கீரையை நன்றாக மண் போக அலசிக் கொள்ளவும். பின்பு இலையை மட்டும் உபயோகிக்கவும். * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். * ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் சுத்தம் செய்த கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இது வெண்டைக்காய் மாதிரியே கொஞ்சம் கொழ கொழன்னு வரும். கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். * அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும். * அடுத்து சிக்கனை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். * மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சிக்கன் சுவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும். * அரை கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும். * சிக்கன் வெந்த பின்பு தயார் செய்த கோங்குரா விழுதை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும். நன்றாக கொதித்து சிக்கனும் கீரை விழுதாக சேர்ந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். * கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம்,உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும். * சுவையான ஆந்திரா கோங்கூரா சிக்கன் ரெடி. * இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் கூட பரிமாறலாம். பருப்பு சோற்றுடன் சூப்பர்.
  6. ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா சப்பாத்தி, பூரி, நாண், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா சூப்பராக இருக்கும். இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு அரைப்பதற்கு… சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் ஏலக்காய் - 2 துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் முந்திரி - 8 பச்சை மிளகாய் - 4 கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் புதினா - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 3 1/2 கப் செய்முறை : * புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். * மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். * பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கிய பின்னர், தக்காளியை சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்து-5 நிமிடம் வதக்க வேண்டும். * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 8 நிமிடம் கிளறி விட வேண்டும். * பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கி பரிமாறவும். * சூப்பரான ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா ரெடி.
  7. சூப்பரான சைடிஷ் முட்டை பக்கோடா குழம்பு முட்டையில் ஆம்லெட், போண்டா, செய்து இருப்பீங்க. ஆனால் இன்று ஆனால் முட்டையைக் வைத்து பக்கோடா செய்து, அந்த பக்கோடாவை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பக்கோடாவிற்கு... முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2 கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு குழம்பிற்கு... வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை : * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு ஸ்பூன் கொண்டு கிளறி விட வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் முட்டைக் கலவையை ஊற்றி பக்கோடா போன்று, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் பக்கோடாக்களாக போட்டுக் கொள்ள வேண்டும். * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காய பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும். * பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனவுடன் அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். * பின்பு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரைட்டி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். * இறுதியில் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவி இறக்கி பரிமாறவும். * சுவையான முட்டை பக்கோடா குழம்பு ரெடி.
  8. சன்டே ஸ்பெஷல்: சூப்பரான சுறா புட்டு மிகவும் எளிதில் செய்யகூடியது இந்த சுறா புட்டு. இந்த சுறா புட்டை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். தேவையான பொருட்கள் : சுறா மீன் - 1/4 கிலோ வெங்காயம் - 2 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை : * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சுறா மீனை சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் வேக வைக்கவும். வெந்ததும் அதை ஆறவைத்து நன்றாக ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கி நன்றாக உதிர்த்து கொள்ளவும். * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும் பொடியாக பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். * பின்னர், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். * அடுத்து அடுப்பின் தீயை குறைத்து அதில், உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து நன்றாக கிளறவும். * மீன் நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விடவும். * கடைசியாக உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். * நாக்கை சுண்டி இழுக்கும் சுறா புட்டு ரெடி!
  9. சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் சாதம் வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெண்டைக்காயை வைத்து செட்டிநாடு முறையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் - 1 1/2 கப் வெண்டைக்காய் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் கெட்டியான புளிக்கரைசல் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் கடலை பருப்பு - 1 டீஸ்பூன் முந்திரி பருப்பு - 10 கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப செய்முறை : * வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும். * வெண்டைக்காய வெந்ததும் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும். * மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயை கலவையைச் சேர்க்கவும். * அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். * குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். * சூப்பரான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் ரெடி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.