Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. சத்து நிறைந்த கொள்ளு கார அடை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கொள்ளு - 2 கப், அரிசி - 1/4 கப், காய்ந்த மிளகாய் - 5, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க... எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், சோம்பு - 1/4 டீஸ்பூன், உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன், வெங்காயம் - பாதி இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயம் - சிறிதளவு. செய்முறை : * வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கொள்ளு, அரிசியினை சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். * அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து வைக்கவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். * சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.
  2. சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்) சின்னவெங்காயம் - 50 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் பச்சைமிளகாய் - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு மீனை ஊற வைப்பதற்கு: எலுமிச்சைச் சாறு - அரை டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் செய்முறை : * சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக்கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊறவிடவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும். * அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும். * மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். * மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும். * லெமன் ஃபிஷ் பிரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.
  3. காய்கறிகள் சேர்த்த பொரிச்ச குழம்பு வீட்டிற்கு திடீரென விருந்தாளி வந்து விட்டால் இந்த பொரிச்ச குழம்பை விரைவில் செய்து அசத்தலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காய்கறிகள் (கேரட், பீன்ஸ், புடலங்காய், உருளைக்கிழங்கு) - 1/4 கிலோ, பாசிப்பருப்பு - 1 கப், புளி - சிறிது, மஞ்சள் தூள், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு. அரைக்க... உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 3 செய்முறை : * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். * புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். * பாசிப்பருப்பை வேகவைத்து கடைந்து கொள்ளவும். * கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அனைத்து காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கவும். * காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் கடைந்த பருப்பை ஊற்றவும். * அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து, உப்பு, புளிக்கரைசல் ஊற்றவும். * எல்லாம் சேர்ந்து வரும் போது அரைத்த பொடியை 2 அல்லது 3 டீஸ்பூன் போடவும். * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து காய்கறிகள் கலவையில் கொட்டி கலக்கவும். * கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
  4. வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வாழைக்காயில் பொடிமாஸ் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வாழைக்காய் - 1, தேங்காய் - 3 பல், சீரகம் - 1/2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன், வெங்காயம் - 1, உப்பு - தேவைக்கு, கடுகு - சிறிது, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை : * குக்கரில் வாழைக்காயை தோல் உரிக்காமல் போட்டு வேகவைத்து, தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும். * தேங்காயை சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உதிர்த்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும். * வெங்காயம், வாழைக்காய் நன்றாக சேர்ந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவை, உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். * கடைசியாக கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும். * இந்த வாழைக்காய் பொடிமாஸ் சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும். கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். இப்போது கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நீளமான கத்திரிக்காய் - 5 (நறுக்கியது) தேங்காய் - 1/2 கப் (துருவியது) எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 மிளகாய் தூய் - 1 ஸ்பூன் தனியா தூள் - அரை ஸ்பூன் பூண்டு - 10 பற்கள் மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கிய பின் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும். * பிறகு அதில் மிளகாய் தூய், தனியா தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். * இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு ரெடி!!!
  5. உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப் முள்ளங்கியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். முள்ளங்கியை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்லகாம். தேவையான பொருட்கள் : முள்ளங்கி - 1 சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 இஞ்சி -1 டீஸ்பூன் பூண்டு - 1 டீஸ்பூன் மிளகு தூள் - தேவைக்கு கொத்தமல்லி தழை - சிறிது செய்முறை : * முள்ளங்கி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * குக்கரில் முள்ளங்கி, சீரகம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீரில் ஊற்றி குக்கரில் மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்கவும். * விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மத்து வைத்து வேகவைத்தை நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு வடிகட்டில் வைத்து சூப்பை தனியாக வடிகட்டி கொள்ளவும். * அடுப்பில் வடிகட்டிய சூப்பை வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும் * கடைசியாக மிளகுதூள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். * சத்தான முள்ளங்கி சூப் ரெடி.
  6. சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை மிகவும் எளிதில் செய்யகூடிய சிம்பிளான சிக்கன் பிரை இது. இந்த ஆந்திரா மசாலா சிக்கன் பிரையை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ வெங்காயம் - 1 (1/2 + 1/2) ப.மிளகாய் - 4 எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி கரம்மசாலாதூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கு மிளகு தூள் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு அரைக்க : தனியா - 1 ஸ்பூன் பட்டை - 1 துண்டு கிராம்பு - 2 பூண்டு - 5 பல் பெரியது இஞ்சி - 1 துண்டு வெங்காயம் - 1/2 (பாதி) செய்முறை : * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். * சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும். * கொத்தமல்லி, பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊற விடவும். * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும் * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதிஉள்ள பாதி வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும். * வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்த விழுதினை போட்டு 5 நிமிடம் வதக்கவும். * அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கிய பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். * சிக்கன் நன்றாக வெந்தவுடன் மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். * கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். * சுவையான எளிதில் செய்யக்கூடிய ஆந்திரா மசாலா சிக்கன் பிரை ரெடி. * இதை சாதம், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
  7. சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா 65 குழந்தைகளுக்கு சோயா மிகவும் பிடிக்கும். மாலையில் காபியுடன் சாப்பிட சூப்பரான சோயா 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சோயா உருண்டைகள் - 100 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 - 2 டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா - 3 டீஸ்பூன் கெட்டித் தயிர் - 1 டேபிள்ஸ்பூன் சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவைக்கு. உப்பு - தேவைக்கு. செய்முறை : * சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 30 நிமிடம் போட்டு நன்றாக ஊறி பெரிதாக வந்ததும் நன்கு பிழிந்து எடுக்கவும். * ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சோளாயை போட்டு அத்துடன் தயிர், சிக்கன் 65 மசாலா, சோளமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்.. * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சோயா உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். * சூப்பரான சோயா 65 ரெடி. * சூடாகப் பரிமாறவும். ஸ்நாக்ஸ் போலும் சாப்பிடலாம்,
  8. சூப்பரான மசாலா வடை குழம்பு வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மசாலா வடை - 10 வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 மல்லிப் பொடி - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் முந்திரி - 5 இஞ்சி - சிறு துண்டு எண்ணெய் - 2 டீஸ்பூன் கிராம்பு - 2 மிளகு - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுத்த பின் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்த பின் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும். * பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். * அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். * குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை துவி இறக்கினால், மசால் வடை குழம்பு ரெடி!!! * இந்த குழம்பை சாதம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.
  9. அகஸ்திகன் நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. காரசாரமான பச்சை மிளகாய் சட்னி இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள காரசாரமான சட்னி இருந்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் - 10 பூண்டு - 10 பல் வெங்காயம் - 1 பெரியது புளி - நெல்லிக்காய் அளவு எண்ணெய் - 1 ஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க : எண்ணெய் - 1 ஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு - கால் தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * பூண்டை தோல் நீக்கி வைக்கவும். * வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். * அடுத்து அதில் புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற வைக்கவும்.. * நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும். * சுவையான பச்சைமிளகாய் சட்னி ரெடி. * இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்,
  11. சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு! இட்லிக்கு, தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் இட்லி பொடியை மட்டுமே சுவைத்தவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவில், மேல ரதவீதி மற்றும் எஸ்.பி. கோவில் தெருவிலுள்ள, இரவு நேர சாலையோர கடைகளுக்கு சென்றால், இட்லிக்கு தொட்டுக் கொள்ள, சுவைமிகுந்த கத்தரிக்காய் கொத்சை ருசிக்கலாம். மிதக்கும் நல்லெண்ணெய்க்கு நடுவே, கடுகு, கறிவேப்பிலை கலந்த மசாலுடன் மிதக்கும் கத்தரிக்காயை பார்த்தாலே, நாவில் நீர் ஊறும். தோசை, சப்பாத்தி, அடை தோசை என, எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். புளியோதரை, தயிர் சாதம் மற்றும் பழைய கஞ்சிக்கு ஏற்ற, பொருத்தமான சைடு டிஷ் இது! சிதம்பரம் நடராஜருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில், கொத்சுவும் உண்டு; சாம்பார் சாதத்தோடு சேர்த்து படைப்பர். அவ்வகையில், சிதம்பரத்தில் இந்த உணவு பிரபலம். சிறிதளவு தனியா, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்க வேண்டும். நல்லெண்ணெயில் சிறிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, நான்கு துண்டாக நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காயையும் சேர்த்து, வதக்க வேண்டும். அதில், இடித்து வைத்த பொடி, புளி கரைத்த நீர், மிளகாய் பொடி, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து, வேக விட வேண்டும். நன்கு வெந்து, கத்தரிக்காய் மசிந்து, மசாலாவோடு, சேர்த்து தொக்கு போல இருக்கும். அப்பதத்தில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கினால், மணமணக்கும் கொத்சு தயார்! தினமும் சட்னி, சாம்பார் செய்ய அலுத்துக் கொள்பவர்கள், கொத்சு செய்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். புளிச் சேர்ப்பதால் கெட்டுப் போகாது.
  12. செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். இன்று செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காளான் - 300 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன் சீரகம் - 3/4 ஸ்பூன் சோம்பு - 1/2 ஸ்பூன் பட்டை- 2 இன்ச் துண்டு கிராம்பு - 2 ஏலக்காய் - 2 காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்துக்கேற்ப தேங்காய் - கால் மூடி எண்ணெய் உப்பு கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை செய்முறை : * ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். * காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். * குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். * குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். * சூப்பரான காளான் குழம்பு ரெடி. * இந்த குழம்பு சாதம், தோசை, இட்லி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.
  13. மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ் மாலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள் : பிஞ்சு வெண்டைக்காய் - 20, கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 டீஸ்பூன், சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) - கால் டீஸ்பூன், கடலை மாவு - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது. * நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். * கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும், இந்த சிப்ஸ்.
  14. பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட் பட்டாணியில் போலிக் ஆசிட், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பச்சைப் பட்டாணியை வைத்து கட்லெட் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள் : பச்சை பட்டாணி - 3/4 கப் அரிசி மாவு - 1/2 கப் கடலை மாவு - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பன்னீர் - 1/4 கப் (துருவியது) வெங்காயம் - 2 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும். * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பன்னீரை துருவிக்கொள்ளவும். * ஒரு பௌலில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். * இப்போது பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட் ரெடி!!! * இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
  15. குடல் ரெசிப்பி திவ்யா பிரமிள் * குடல் மிளகு வறுவல் * குடல் பிரியாணி * குடல் மசால் தோசை * மிளகாய் - வெங்காயம் *குடல் வதக்கல் * ஸ்பைஸி குடல் மசாலா * குடல் தேங்காய்ப்பால் குழம்பு * குடல் 65 தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞரும் உணவுப் புகைப்பட நிபுணருமான திவ்யா பிரமிள், விதவிதமான மட்டன் ரெசிப்பிகளை வழங்கியிருக்கிறார். குடல் மிளகு வறுவல் தேவையானவை: குடல் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 10 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் முழு மிளகு - கால் டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் சோம்பு – கால் டீஸ்பூன் சிறிய பச்சை மிளகாய் - ஒன்றில் பாதி எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் பட்டை - சிறிய துண்டு கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு பேஸ்ட், உப்பு - சிறிதளவு செய்முறை: குக்கரில் குடலோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும். வெந்த குடலை தனியாக எடுத்துவைக்கவும். குடல் வேகவில்லை என்றால், மீண்டும் குக்கரில் தண்ணீர் ஊற்றி (தேவையெனில்) வேகவைக்க வேண்டும். குடல் வெந்தது போக மீதம் உள்ள தண்ணீரை நான்-வெஜ் உணவுகள் செய்யப் பயன்படுத்தலாம். வெறும் வாணலியில் கால் டீஸ்பூன் சீரகம் மற்றும் முழு மிளகைச் சேர்த்து லேசாக வறுத்து தட்டிவைக்கவும். பொடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வறுத்தால் குடல் வறுவல் மணம் நன்றாக இருக்கும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லேசாக தட்டிய சோம்பு, பட்டை, பச்சை மிளகாய், மீதமிருக்கும் கால் டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த குடல் மட்டும் சேர்த்து, 3 நிமிடங்கள் வதக்கி, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பிறகு, தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். குடல் மிளகு வறுவலில் எண்ணெய்க்கேற்ப சுவை கூடும். கொழுப்பு நிறைந்த குடலாக இருந்தால், எண்ணெய் குறைவாகச் சேர்த்தால் போதும். குடல் பிரியாணி தேவையானவை: சீரகச் சம்பா அரிசி - 450 கிராம் மட்டன் எலும்புத்துண்டுகள் - 250 கிராம் குடல் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 2 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் சீரகத்தூள் - 2 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - அரை கப் புதினா - அரை கப் பட்டை - ஒரு பெரிய துண்டு கிராம்பு - 5 ஏலக்காய் - 8 பிரிஞ்சி இலை - 2 பிரியாணி பூ - 2 கடல்பாசி - 2 துண்டுகள் இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன் தயிர் - அரை கப் தேங்காய்ப்பால் - 1 கப் எலுமிச்சை - ஒன்றில் பாதி எண்ணெய், உப்பு - தேவையான அளவு ஊற வைக்க: இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தயிர் - கால் கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் செய்முறை: குடல் மற்றும் மட்டனை ஒரு பாத்திரத்தில் இட்டு, ஊறவைக்க கொடுத்தவற்றோடு பிசிறி ஊறவைக்கவும். சீரகச் சம்பா அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கடல்பாசி, பிரியாணி பூ சேர்த்து வதக்கவும். அதிகம் வதக்கிவிட வேண்டாம். நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் கீறிய மிளகாய், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி தயிர், கொத்தமல்லித்தழை, புதினா சேர்க்கவும். புதினா இலைகள் சுருங்கியதும் ஊறவைத்த குடலைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து எலுமிச்சைச் சாறு பிழிந்து உப்பு போட்டு குக்கரை மூடி 20 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். பிறகு, குக்கரை திறந்து ஊறவைத்த சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி, குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிடவும். பிறகு திறந்து பரிமாறவும். குடலில் இருந்து வெளிப்படும் கொழுப்பே போதுமானது. தனியே நெய் சேர்க்கவேண்டிய அவசியமில்லை. குடல் மசால் தோசை தேவையானவை: புளிக்காத தோசை மாவு - 2 கப் குடல் மிளகு வறுவல் - 3 டேபிள்ஸ்பூன் (பக்கம் 108-ல் உள்ள ரெசிப்பி பார்க்க) நெய்/எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய்/எண்ணெய் விட்டு, ஒரு பெரிய கரண்டி மாவெடுத்து வட்டமாக ஊற்றவும். அதன்மீது குடல் மிளகு வறுவலை வைத்துப் பரப்பவும். பிறகு, மூடியால் மூடி மிதமான தீயில் நிமிடங்கள் வேகவிடவும். பிறகு திருப்பிப் போட்டு சுற்றிலும் நெய்/எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுத்து, குடல் குழம்பு அல்லது சால்னாவோடு பரிமாறினால் சுவை அள்ளும். குறிப்பு: குடல் உள்ள பகுதியை அதிகம் வேகவிட வேண்டியதில்லை. மிளகாய் - வெங்காயம் குடல் வதக்கல் தேவையானவை: குடல் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள்தூள் - சிறிது மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: குடலை நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு போட்டு வேகவிட்டு, எடுத்து வடிகட்டி தனியாக வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் வேகவைத்த குடலை இத்துடன் சேர்த்து வதக்கவும். மிளகுத்தூள், உப்பு சேர்த்து 4 நிமிடங்கள் நன்கு வதங்கியதும் இறக்கி, ரசம் சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு: குடலை வதக்கும்போது தீயை மிதமாக்கிக் கொண்டால் குடல் சட்டியில் ஒட்டாது. காரம் அதிகம் வேண்டாம் எனில், பச்சை மிளகாயை குறைத்துக்கொள்ளலாம். காரம் வேண்டும் எனில் மிளகாயை அதிகப்படுத்திக்கொள்ளலாம். ஸ்பைஸி குடல் மசாலா தேவையானவை: குடல் - 150 கிராம் சின்ன வெங்காயம் - 5 தக்காளி - 1 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பட்டை - சிறிய துண்டு கிராம்பு - 1 சீரகம் - அரை டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: குடலை சிறிது சுடுநீர் ஊற்றி நன்கு கழுவி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, வெங்காயம், சேர்த்து நிறம் மாற வதக்கி அத்துடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், குடல் சேர்த்து வதக்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு, தீயைக் குறைத்து 15 நிமிடம் வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து, தண்ணீர் அதிகம் இருந்தால் கிரேவி பதத்துக்கு வற்றவைத்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். குறிப்பு: குடலில் இருக்கும் கொழுப்பு, கலவையில் பிரிந்து மிதக்கும் என்பதால், எண்ணெயைக் குறைவாகவே சேர்க்கலாம். குடல் தேங்காய்ப்பால் குழம்பு தேவையானவை: குடல் - அரை கிலோ தேங்காய் - அரை கப் (துருவியது) தக்காளி - 1 சின்ன வெங்காயம் - 15 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன் தனியாத்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை - ஒரு சிறிய துண்டு ஏலக்காய் - 3 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - சிறிதளவு செய்முறை: தேங்காயை மிக்ஸியில் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, பால் எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தில் ஐந்தை எடுத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மீதம் உள்ள வெங்காயத்தை உரித்து தனியே வைக்கவும். இந்த வெங்காயத்துடன் சீரகம், சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து வதக்கவும். விழுதில் பச்சை வாசனை நீங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும். பிறகு, தேவையான உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் கழுவி வைத்துள்ள குடலைச் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு, தீயை முற்றிலும் குறைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் குடல் வெந்துவிட்டதா என்று பார்த்து, வேகவில்லை என்றால் மீண்டும் சிறு தீயில் வேகவிடவும். வெந்த குடலில் அதிக தண்ணீர் இருந்தால், சிறிது வற்றவிடவும். பிறகு, எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை குடலில் ஊற்றி 4 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும். அதிகம் கொதிக்க விட வேண்டாம். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். குழம்பு கெட்டியாக வேண்டுமானால் தேங்காய் சிறிதளவு விழுதாக அரைத்து குழம்பில் சேர்க்கலாம். குடல் 65 தேவையானவை: குடல் - 100 கிராம் கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன் சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 2 டீஸ்பூன் சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் வினிகர் - 1 டீஸ்பூன் சோடா உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு குடல் வேகவைக்க: இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் செய்முறை: குடலை குக்கரில் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறு தீயில் வேகவைக்கவும். வெந்ததும், குடலை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். குடல் வேகவில்லை என்றால், கூடுதலாக 5 அல்லது 10 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும். தேவையானவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சிறிது நீர்விட்டு பேஸ்ட்டாகக் கரைக்கவும். பிறகு, கரைத்தவற்றில் வெந்த குடல் துண்டுகளைப் புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  16. பசியை தூண்டும் சீரகம் - தனியா சூப் வயிற்று கோளாளு, அஜீரணம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த சீரகம் - தனியா சூப் மிகவும் நல்லது. இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சீரகம் - கால் கப் தனியா (மல்லி) - கால் கப் இஞ்சி - சிறிய துண்டு மிளகு - 2 ஸ்பூன் எலுமிச்சைப்பழம் - 2 கறிவேப்பிலை - 2 ஆர்க்கு உப்பு - தேவைக்கு செய்முறை : * இஞ்சியை தோல் சீவி வைக்கவும். * எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து வைக்கவும். * தனியா (மல்லி), சீரகம், மிளகை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். * ஊறவைத்த பொருட்களுடன் கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். * அரைத்த இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பின் வடிகட்டி சக்கையை எடுத்து விடவும். * வடிகட்டிய கரைசலை அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் இறக்கவும். * கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும். * இந்த சூப் பசியை தூண்டும். உணவு நன்று செரிமானம் ஆகும். இந்த சூப் கெட்டியாக இருக்காது. கெட்டியாக வேண்டுமானால் சோளமாவு சேர்த்து கொள்ளலாம்.
  17. ‘வாலன்டைஸ் டே’ ஸ்பெஷல் ஹசினா செய்யது * மாதுளை மாக்டெய்ல் * ரோஸ் மூஸ் * லவ் ரோஸ் * லப்டப் பீட்சா * பனீர் சாலட் * பிரான் பெஸ்டோ ஸ்பெகட்டி * ரெட் ஹார்ட்ஸ் * பொட்டேட்டோ லவ் கேக் வருகிறதே வாலன்டைன்ஸ் டே! பிப்ரவரி 14 அன்று அன்புகலந்து பரிமாற அசத்தலான ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசினா செய்யது. மாதுளை மாக்டெய்ல் தேவையானவை: மாதுளைச் சாறு – 300 மில்லி சர்க்கரைப் பாகு – 10 மில்லி சோடா - 180 மில்லி ஸ்ட்ராபெர்ரி - 2 மாதுளை முத்துகள் - அலங்கரிக்க செய்முறை: சோடாவைக் குளிரவைக்கவும். ஸ்ட்ராபெர்ரியை இதய வடிவில் நறுக்கவும். மாதுளைச் சாறு, சர்க்கரைப் பாகு உடன் குளிர்ந்த சோடா சேர்த்து கலக்கவும். பின்பு ஸ்ட்ராபெர்ரி, மாதுளை முத்துகள் போட்டு ஜில்லென்று பரிமாறவும். ரோஸ் மூஸ் தேவையானவை: கட்டித் தயிர் - 2 கப் குங்குமப்பூ – சிறிதளவு தேன், குல்கந்து - தலா 2 டேபிள்ஸ்பூன் பால் - 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் ஜெலட்டின் - அரை டீஸ்பூன் சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன் அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் – சிறிதளவு பாதாம்பருப்பு – சிறிதளவு ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன் செய்முறை: கட்டித் தயிரை ஒரு துணியில் கட்டி, இரவில் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். மறுநாள் காலையில் தயிரை நன்றாக அடித்து கட்டி இல்லாமல் கடையவும். இதில் குல்கந்து, குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும். ஜெலட்டினுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரைச் சேர்த்து கொதிக்க விடவும், அடுப்பைவிட்டு இறக்கி ஜெலட்டினை பாலுடன் சேர்த்து கட்டித் தட்டாமல் கலக்கவும். பின்பு தயிர் கலவையுடன் சேர்த்து கலக்கவும். பின்பு ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர் கலந்து, எண்ணெய் தடவிய புட்டிங் டீரேயில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். செட்டான புட்டிங்கை ஒரு தட்டில் கவிழ்த்து, ரோஜா இதழ், பாதாம், தேன் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும். லவ் ரோஸ் தேவையானவை: மாவு செய்ய: மைதா மாவு - ஒன்றேகால் கப் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - கால் டீஸ்பூன் குளிர்ந்த வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) - 8 டேபிள்ஸ்பூன் குளிர்ந்த நீர் - 3 டேபிள்ஸ்பூன் பூரணம் செய்ய: ஆப்பிள் - 2 (தோலுடன் நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது) சர்க்கரை - அரை கப் உருக்கிய வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) - 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு - 3 டேபிள்ஸ்பூன் மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - கால் கப் செய்முறை: மாவுக்குத் தேவையான, மைதா மாவு மற்றும் உப்பு, சர்க்கரை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். அதன் மேல் குளிர்ந்த வெண்ணெய் சேர்த்து, உதிரியாகப் பிசைந்து எடுக்கவும். பின்பு குளிர்ந்த நீரையும் சேர்த்து லேசாக பிசைந்துக் கொள்ளவும். இதை மூடிபோட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த மாவை, மைதா மாவுத் தூவி கால் இன்ச் தடிமனில் பரப்பிக் கொள்ளவும். பரத்திய மாவை வட்டமான மூடியை வைத்து வட்ட வட்டமாக வெட்டி எடுக்கவும். வெட்டிய வட்ட வடிவ மாவை, வெண்ணெய் தடவிய கப் கேக் டிரேயில் கப் வடிவத்தில் அழுத்தி வைக்கவும். பின்பு இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். பூரணம் செய்முறை: நீளவாக்கில் வெட்டிய ஆப்பிள் துண்டுகளை, எலுமிச்சைச்சாற்றில் பிரட்டி எடுக்கவும். சிறிது வெண்ணெயையும், கால் கப் சர்க்கரையையும் ஆப்பிளின் மேல் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வேக விடவும். மீதமுள்ள வெண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த கப்பின் உள்பக்கமாக தடவிக் கொள்ளவும். பின்பு ஆப்பிள் துண்டுகளை (18) நீளவாக்கில் அடுக்கி வைத்து, மெதுவாக உருட்டி, ரோஜாப்பூ போல வடிவமைத்து, அதை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த கப்பின் உள்ளே வைக்கவும்.அதை 25-30 நிமிடங்கள் அவனில் வைத்து வேக விடவும். ஆறியவுடன் ஜாமை (அவனில்) வைத்து லேசாகச் சூடாக்கி, பிரஷ் கொண்டு ஆப்பிளின் மேல் தடவிப் பரிமாறவும். லப்டப் பீட்சா தேவையானவை: மைதா மாவு - 2 கப் ஈஸ்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான வெந்நீர் - 2/3 கப் + 2 டேபிள்ஸ்பூன் உப்பு - அரை டீஸ்பூன் டாப்பிங் செய்ய: தக்காளி சாஸ் - கால் கப் குடமிளகாய் (பச்சை, மஞ்சள் சிவப்பு ) – தேவைக்கு மொசேரல்லா சீஸ் துருவல் - அரை கப் பேசில், ஆரிகனோ, திரித்த மிளகாய் - தூவுவதற்கு செய்முறை: குடமிளகாயை இதய வடிவில் நறுக்கவும். ஒரு கப் மைதா மாவு, ஈஸ்ட், உப்பு, சர்க்கரை, வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசையவும். மீதமுள்ள ஒரு கப் மைதா மாவை சிறிது சிறிதாக கலந்து பிசைந்து புரோட்டா மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை 15 நிமிடத்துக்கு துண்டில் சுற்றி வைக்கவும். பின்பு இதய வடிவில் தேய்க்கவும். எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டின் மேல் வைத்து, அதன் மேல் தக்காளி சாஸ் தடவி, சீஸ் துருவல் தூவி, இதய வடிவில் வெட்டிய குடமிளகாய்களை நன்றாக அடுக்கவும். பின்பு பேசில், ஆரிகனோ, திரித்த மிளகாய் ஆகியவற்றைத் தூவி, பின்பு இதை, 180 டிகிரி ஃபாரன்ஹீட் ஃப்ரீஹீட் செய்த அவனில் 12-15 நிமிடங்கள் பேக் செய்து சூடாக பரிமாறவும். குறிப்பு: ஆரிகனோ, திரித்த மிளகாய் இல்லையெனில், ரெடிமேட் பீட்சா ஆர்டர் செய்யும்போது கிடைக்கும் பாக்கெட் தூளைப் பயன்படுத்தலாம். பனீர் சாலட் தேவையானவை: பனீர் - 200 கிராம் தர்பூசணி - 200 கிராம் லெட்டீஸ் இலை – 6 கொத்துமல்லித் தழை – சிறிதளவு ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன் பால்சாமிக் வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, மிளகு – தேவைக்கு செய்முறை: பனீர், தர்பூசணியை இதய வடிவில் நறுக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். லெட்டீஸ் இலையின் மேல் சிறிதளவு உப்பு தூவி வைக்கவும். ஆலிவ் ஆயில், பால்சாமிக் வினிகர், மிளகு சேர்த்து, நன்றாகக் கலக்கவும். லெட்டீஸ் இலையை தட்டில் பரப்பி அதன் மேல் தர்பூசணி, பனீர் என மாற்றி மாற்றி இரண்டு வரிசைகளாக அடுக்கவும். ஆலிவ் ஆயில் கலவையை அதன் மேல் பகுதியில் ஊற்றவும். இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும். பிரான் பெஸ்டோ ஸ்பெகட்டி தேவையானவை: ஸ்பெகட்டி - 250 கிராம் ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன் புதினா இலை – சிறிதளவு தக்காளி – பாதி இறால் மீன் - கால் கிலோ பெஸ்டோ சாஸ், உப்பு, துளசி இலை, புதினா இலை, மல்லித்தழை – தேவைக்கு சீஸ் துருவல் - கால் கப் வால்நட் (அக்ரூட்) - கால் கப் பூண்டு - 4 பல் ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன் செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பெஸ்டோ சாஸ், துளசி இலை, புதினா இலை, மல்லித்தழை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தண்ணீருடன், ஆலிவ் ஆயில், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் ஸ்பெகட்டி சேர்த்து வேகவிடவும். வெந்த ஸ்பெகட்டியை வடிகட்டவும். தண்ணீரையும் ஸ்பெகட்டியையும் தனியாக எடுத்துவைக்கவும். ஆலிவ் ஆயிலைச் சூடாக்கி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இறால் மீன், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் மேல் பெஸ்டோ சாஸ் ஊற்றி 2 நிமிடம் கொதிக்கவிடவும். ஸ்பெகட்டி சேர்த்து நன்றாகக் கலக்கவும். 4 டேபிள்ஸ்பூன் ஸ்பெகட்டி, வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புதினா, சீஸ் துருவல், வால்நட் துருவல் தூவிப் பரிமாறவும். ரெட் ஹார்ட்ஸ் தேவையானவை: மைதா மாவு - ஒரு கப் பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன் உப்பு - கால் டீஸ்பூன் ஆரிகானோ - 2 டேபிள்ஸ்பூன் பூண்டு - 2 பல் சீஸ் ஸ்பிரட் - கால் கப் சிவப்பு குடமிளகாய் - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: பூண்டு, சிவப்பு குடமிளகாயை நறுக்கவும், மைதா மாவு, பேக்கிங் பவுடர், ஆரிகானோ ஆகியவற்றுடன் வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். குடமிளகாய், சீஸ், வெண்ணெய், பூண்டு சேர்த்துக் கலந்துவைத்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை கால் இன்ச் தடிமனில் சதுரமாகத் தேய்க்கவும். அதன் மேல் சீஸ், குடமிளகாய் கலவையைச் சரிசமமாகப் பரப்பவும். சப்பாத்தி மாவின் மேல் சீஸ் தூவி, வலதுபுற ஓரத்தை உள்புறமாக மடிக்கவும். இதேபோன்று இடதுபுறமும் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் பரப்பி, அதன் மேல் இதை வைக்கவும். இதை 20 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். அவனை 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யவும். ஃப்ரீசரில் வைத்த மாவை எடுத்து, அதனுடைய கீழ்பகுதியை அழுத்தி ஹார்ட் வடிவில் கொண்டு வரவும். அரை இன்ச் கனமான துண்டுகளாக கூர்மையான கத்தியை வைத்து ரோலை வெட்டி எடுக்கவும். வெட்டி எடுத்த துண்டுகளை கால் இன்ச் இடைவெளி விட்டு ஃபாயில் பேப்பர் மேல் வைத்து, அதன் மேல் வெண்ணெய் தடவி 10 நிமிடங்கள் (பொன்னிறமாகும் வரை) அவனில் வைத்தெடுக்கவும். 10 நிமிடங்கள் ஆறவிட்டு பரிமாறவும். பொட்டேட்டோ லவ் கேக் தேவையானவை: உருளைக்கிழங்கு - ஒன்றரை கிலோ வெங்காயம் - 2 வெண்ணெய் - 60 கிராம் சீஸ் - 2 கப் மல்லித்தழை – சிறிதளவு உப்பு, மிளகு – தேவைக்கு செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சீஸைத் துருவவும். உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக மெல்லிதாகத் தோலுடன் நறுக்கவும். வெண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். அவனை 200 டிகிரிக்கு சூடாக்கவும். ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தின் ஓரங்களில் வெண்ணெய் தடவவும். வட்டவடிவில் உருளைக்கிழங்குத் துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதன்மேல் உப்பு, மிளகு, வெங்காயம், சீஸ், கொத்துமல்லித்தழை தூவவும். இதை போலவே பாத்திரம் மேல் பாகம் நிரம்பும் வரை அடுக்கடுக்காக வைக்கவும். மேல்பாகத்தில் வெண்ணெய் தடவி வைக்கவும். ஃபாயில் பேப்பர் வைத்து மூடி ஒன்றரை மணி நேரம் அவனில் வைத்து பேக் செய்யவும். பின்பு ஃபாயில் பேப்பரை எடுத்து 30 நிமிடங்கள் அவனில் வைத்து முறுக விடவும். 10 நிமிடங்கள் ஆறவிட்டு வெளியே எடுத்துப் பரிமாறவும். குறிப்பு: ஸ்பிரிங் / பொம் (Spring Foam) என்னும் பாத்திரத்தில் செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.'' - படங்கள்: எல்.ராஜேந்திரன்
  18. காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல் தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் சேனைக்கிழங்கை வறுவல். இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சேனைக்கிழங்கு - 1/2 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் (தனியா தூள்) - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... வரமிளகாய் - 2 மல்லி(தனியா) - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் பூண்டு - 4 செய்முறை : * சேனைக்கிழங்கை சமமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். நறுக்கிய சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். * வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்த தூள் சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். * சூப்பரான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!!
  19. ஓட்ஸ் ரெசிப்பி அன்னம் செந்தில்குமார் * ஓட்ஸ் - கேரட் ரொட்டி * ஓட்ஸ் - வல்லாரை பக்கோடா * ஓட்ஸ் கீர் * ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா * ஓட்ஸ் - புரோக்கோலி சூப் * ஓட்ஸ் - மாதுளம்பழ ஸ்மூதி * ஓட்ஸ் - டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ் * ஓட்ஸ் - க்ரனோலா பார்ஸ் * ஓட்ஸ் லட்டு * ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக் ஓட்ஸ் என்றால் கஞ்சி மட்டும்தானா? சூப், கீர், ஸ்மூதி, பக்கோடா, லட்டு, ரொட்டி என விதவிதமாகச் சமைத்து ருசிக்க ரெசிப்பிகள் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார். ஓட்ஸ் - கேரட் ரொட்டி தேவையானவை: ஓட்ஸ் பவுடர் - அரை கப் கோதுமை மாவு - ஒரு கப் கேரட் துருவல் - கால் கப் மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு, மல்லித்தழை, நெய் - தேவையான அளவு. செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கோதுமை மாவு, கேரட் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மல்லித்தழை சேர்த்து கையால் நன்கு கலக்கவும். தன்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவாகப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு நெய் விட்டு, இரு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும். சூடாக தயிர்ப் பச்சடி அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும். ஓட்ஸ் - வல்லாரை பக்கோடா தேவையானவை: ஓட்ஸ் மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு -கால் கப் வெங்காயம் - ஒன்று வல்லாரைக் கீரை – 1 கட்டு இஞ்சித்துருவல் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: வல்லாரைக் கீரையை சுத்தம்செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு கலக்கவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கலந்துவைத்துள்ள மாவை கைகளால் சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்துப் போடவும். நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். குறிப்பு: மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்துவிட்டால் பக்கோடா கரகரப்பாக (Crispy) இருக்காது. அதனால், தண்ணீர் பார்த்துச் சேர்க்கவும். வல்லாரை இலை சேர்த்திருப்பதால், இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். தேர்வு காலத்தில் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும். ஓட்ஸ் கீர் தேவையானவை: ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் பால் - ஒரு கப் பாதாம் பவுடர் - 2 டீஸ்பூன் சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன் முந்திரி - 10 குங்குமப்பூ - சிறிதளவு நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள்-2 சிட்டிகை செய்முறை: முந்திரியை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே நெய்யில் ஓட்ஸைச் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். பிறகு பால், தண்ணீர் ஒரு கப் சேர்த்து வேக விடவும். ஓட்ஸ் நன்றாக வெந்தவுடன் பாதாம் பவுடர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறு தீயில் வைத்து அடிபிடிக்காமல் ஓட்ஸை வேகவைக்கவும். பிறகு முந்திரி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். குறிப்பு: கீர் கெட்டியாகிவிட்டால், காய்ச்சிய பால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா தேவையானவை: ஓட்ஸ், கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப் வெண்ணெய், மிளகாய்த்தூள், எள் - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயம் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், எள், பெருங்காயம், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துப் பிசையவும். முறுக்கு பிழியும் அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு மாவை நிரப்பவும். எண்ணெயைக் காயவிட்டு ரிப்பன்களாகப் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு 7 முதல் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். ஓட்ஸ் - புரோக்கோலி சூப் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் புரோக்கோலி - 10 பூக்கள் வெங்காயம் - ஒன்று பூண்டு - 3 பல் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். புரோக்கோலியை சிறிய பூக்களாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது உப்பு போட்டு கொதிக்கவைக்கவும். பிறகு புரோக்கோலியைச் சேர்த்து வேகவிடவும். பிறகு, வடியவிட்டு எடுக்கவும். மூன்று பூக்களை எடுத்து அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு, வெங்காயம், புரோக்கோலி போட்டு வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதுடன், தண்ணீர், உப்பு, ஓட்ஸ் பவுடர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் மிளகுத்தூள், அலங்கரிக்க வைத்துள்ள பூக்களை மேலே சேர்த்துப் பரிமாறவும். குறிப்பு: தேவையென்றால், சிறிது பால் அல்லது ஃப்ரஷ் கிரீமும் சேர்த்துக்கொள்ளலாம். ஓட்ஸ் - மாதுளம்பழ ஸ்மூதி தேவையானவை: ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் மாதுளம்பழம் - ஒன்று பால் - அரை கப் நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன் செய்முறை: மாதுளம்பழத்தை நறுக்கி முத்துகளை உதிர்க்கவும். முத்துகளை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். ஓட்ஸுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஒரு ஃப்ளண்டரில் வேகவைத்த ஓட்ஸ், மாதுளம்பழ ஜூஸ், காய்ச்சி ஆறிய பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து சில்லென்று பரிமாறவும். குறிப்பு: மாதுளம்பழத்துக்குப் பதில் ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா போன்ற பழங்கள் சேர்த்தும் ஸ்மூதி செய்யலாம். ஓட்ஸ் - டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ் தேவையானவை: ஓட்ஸ் - முக்கால் கப் கோதுமை மாவு - கால் கப் டேமராரா சுகர் - கால் கப் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் பால் - 2 டேபிள்ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி - அரை கப் ஜாதிக்காய்த்தூள்- 2 சிட்டிகை முந்திரி - 4 செய்முறை: முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும். டேமராரா சுகரை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, டேமராரா சுகர், வெண்ணெய், டூட்டி ஃப்ரூட்டி, ஜாதிக்காய்த்தூள், முந்திரி சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். வெளியே எடுத்து, ஒரே அளவுள்ள சிறிய உருண்டைகளாக உருட்டவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து ஒரே அளவாக கையால் அழுத்தி விடவும். அல்லது சப்பாத்தி போல தேய்த்து, குக்கி கட்டரால் விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்து, பேக்கிங் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும். அவனை 180 டிகிரியில் 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயை அவனில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வைத்து பேக் செய்யவும். 10 நிமிடம் கழித்து குக்கீஸை மறுபக்கம் திருப்பி பேக் செய்யவும். ஆறியவுடன் டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். குறிப்பு: பேக்கிங் நேரம் அவரவர் அவனிற்கு ஏற்ப மாறுபடும். டேமராரா சுகருக்கு பதில் பழுப்பு சர்க்கரை உபயோகப்படுத்தலாம். ஓட்ஸ் - ஃக்ரனோலா பார் தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப் பாதாம், கேன்டிட் செர்ரி - தலா கால் கப் கறுப்பு உலர் திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன் தேன், பழுப்புச் சர்க்கரை - தலா 3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன் செய்முறை: செர்ரி, பாதாமை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாதாம், ஓட்ஸை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேன், வெண்ணெய், பழுப்புச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அது நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு, ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஓட்ஸ், பாதாம், செர்ரி, உலர் திராட்சை சேர்த்து நன்றாகக் கிளறவும். பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரைப் போட்டு, அதில் இந்த ஓட்ஸ் கலவையைக் கொட்டி, ஒரு கரண்டியால் நன்றாக அழுத்திவிடவும். 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து துண்டுகள் போடவும். ஓட்ஸ் ஃக்ரனோலா பார் ரெடி. ஓட்ஸ் லட்டு தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப் நாட்டுச் சர்க்கரை - அரை கப் நெய் - கால் கப் தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை முந்திரி - 10 செய்முறை: முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும்.தேங்காய்த்துருவல், ஓட்ஸை வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். ஓட்ஸ் ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை உருக்கி, முந்திரி சேர்த்து வறுக்கவும். பிறகு, அதே நெய்யில் ஓட்ஸ் பவுடர், தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். குறிப்பு: உலர் பழங்கள், பருப்புகளை நெய்யில் வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம். ஓட்ஸ் ஸ்பைஸி பான்கேக் தேவையானவை: ஓட்ஸ் பவுடர் - ஒரு கப் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று மல்லித்தழை - சிறிதளவு மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி அதில் மாவை சிறிய பான்கேக்குகளாக ஊற்றவும். எண்ணெய் ஊற்றி, இரு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். விருப்பமான சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
  20. குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. தேவையான பொருட்கள் : பரோட்டா உதிர்த்தது - 2 (பெரியது) வெங்காயம் பெரியது - 1 தக்காளி பெரியது - 1 பச்சை மிள்காய் - 1 குடமிளகாய் - பாதி டொமட்டோ சாஸ் - 2 ஸ்பூன் அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை (விரும்பினால்) சில்லி பவுடர் - கால் டீஸ்பூன் கரம் மசாலா பவுடர் - கால் டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் - 1-2 டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு. ஸ்பிரிங் ஆனியன் அல்லது கொத்தமல்லி தழை அலங்கரிக்க - சிறிது. செய்முறை : * வெங்காயம், குடமிளகாய், தக்காளியை நீளவாக்கி வெட்டிகொள்ளவும் * ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பரோட்டாவை உதிர்த்து கொள்ளவும். * கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, டொமட்டோ சாஸ், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். * தேவைக்கு உப்பு சிறிது அஜினமோட்டோ சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும். நன்கு மசிந்து விடும். * அடுத்து அதில் கரம்மசாலா, சில்லி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும். * அடுத்து பொடியாக உதிர்த்த பரோட்டாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். புளிப்பு தேவையென்றால் 1-2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும். * கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறவும். * சுவையான சில்லி பரோட்டா ரெடி.
  21. செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல் உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 200 கிராம் பச்சை பட்டாணி - 1 கப் பூண்டு - 5 பல் வெங்காயம் - 2 தக்காளி - 1 இஞ்சி - சிறிய துண்டு உப்பு - ருசிக்கு தனி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிது கொத்தமல்லி - சிறிதளவு தாளிக்க : எண்ணெய் - தேவைக்கு கடுகு - 1/4 ஸ்பூன் உ.பருப்பு - 1/2 ஸ்பூன் சோம்பு - 1/4 ஸ்பூன் + 1/4 ஸ்பூன் செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். * பூண்டு, இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை போட்டு கிளறவும். * அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு வதக்கவும். * அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும். * அனைத்து சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். * செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல் ரெடி.
  22. சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்பில்தான் போடுவோம். ஆனால் முருங்கைக்காயை வைத்து கூட்டு வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் - 5 பெரிய வெங்காயம் - 2 பூண்டு - 10 பல் பெரிய தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன். தாளிக்க : எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது. அரைக்க : தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன் செய்முறை : * தேங்காயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். * வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * முருங்கைக்காயை இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவுக்கு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். * முதலில் வெங்காயம், பூண்டை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும். அடுத்து அதில் தக்காளியையும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அடுத்து அரைத்த வெங்காயம், பூண்டு, போட்டு நன்றாக வதக்கவும்.. * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு சிறிது வதக்க வேண்டும். * அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். * அடுத்து அதில் முருங்கைக்காய், சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். * கொதி வந்தவுடன் கொர கொரப்பாக அரைத்த தேங்காயை சேர்க்கவும். * இப்போது குக்கரை மூடி ஒரு விசில் விடவும். ஒரே விசில் தான் பக்குவமாக வெந்து விடும். அடுப்பை அணைக்கவும். * வெந்ததும் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும். * சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.
  23. காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு கருணைக்கிழங்கில் பொரியல், வறுவல் செய்து இருப்போம். இன்று கருணைக்கிழங்கை வைத்து காரசாரமான காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கருணைக்கிழங்கு - கால்கிலோ தேங்காய் - கால் முடி தக்காளி - ஒன்று வெங்காயம் - ஒன்று பூண்டு - ஒன்று புளி - எலுமிச்சையளவு மிளகாய்த்தூள் - ஒரு மேசைக் கரண்டி மஞ்சத்தூள் - அரைத் தேக்கரண்டி தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - இரண்டு கொத்து கடுகு - ஒரு தேக்கரண்டி காய்ந்தமிளகாய் - இரண்டு எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி செய்முறை : * கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும். * தேங்காயுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். * புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். * பூண்டை நசுக்கி வைக்கவும். * தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து புளிக்கரைசலில் சேர்த்து நன்கு கரைத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு தேவையான நீரை ஊற்றி கலக்கி வைக்கவும். * கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் பூண்டைப் போட்டு நன்கு வதக்கிய பின் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். * புளி கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் எல்லாத் தூள்வகைகளையும் போட்டு பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும். * பின்பு அதில் கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு தேவையான உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும். * குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும், ஒரு கொத்து கறிவேப்பிலையைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். * காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு ரெடி.
  24. சிக்கன் சிந்தாமணி என்னென்ன தேவை? சிக்கன் - ஒரு கிலோ காய்ந்த மிளகாய் - 25 சின்ன வெங்காயம் - 200 கிராம் நல்லெண்ணெய் - 150 கிராம். எப்படிச் செய்வது? வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடானதும் சின்ன வெங்காயத்தை முழுதாகப் போட்டு வதக்குங்கள். காய்ந்த மிளகாயில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு, மிளகாயை மட்டும் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள். அதன் பின் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட கோழிக்கறியைப் போட்டு, வதக்குங்கள். பத்து நிமிடங்களில் கறி முழுமையாகத் திரண்டுவிடும். பிறகு கல் உப்பு சேர்த்து, கறி முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மூடிவைத்து வேகவிடுங்கள். 10 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியைத் திறந்து கிளறிவிடுங்கள். சிறிது நேரத்தில் நீர் முழுவதும் வற்றி, மிளகாயின் காரம் முழுவதும் சிக்கன் துண்டுகளில் முழுமையாக பரவிவிடும். இறக்கிவைத்து, சிக்கன் சிந்தாமணியைச் சூடாகப் பரிமாறுங்கள். சிக்கன் லாலிபாப் என்னென்ன தேவை? சிக்கன் தொடைப்பகுதி - 4 துண்டுகள் முட்டை - 1 எலுமிச்சை - பாதி பழம் மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன் கடலை மாவு - 3 டீஸ்பூன் சோள மாவு - 2 டீஸ்பூன் மைதா மாவு - அரை டீஸ்பூன் சிவப்பு கலர் பவுடர் - 4 சிட்டிகை இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் அனைத்து மாவு வகைகளையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதனுடன் மிளகாய்ப்பொடி, சிவப்பு கலர் பொடி ஆகியவற்றைக் கலந்துவையுங்கள். முட்டையை அதில் உடைத்து ஊற்றி, எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவைவிட கெட்டியான பதத்தில், கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். சிக்கன் துண்டுகளை லேசாகக் கீறி, கரைத்துவைத்துள்ள மசாலாவில் நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் மூடிவையுங்கள். குறைந்த தீயில் வேகவிடுங்கள். பிறகு முடியைத் திறந்து, மீண்டும் புரட்டிப் போட்டு எடுத்தால் மொறுமொறுப்பான சிக்கன் லாலிபாப் தயார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.