Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. "ஹலசினஹன்னு கடுபு செய்யும் முறை (இது என்ன பெயர் என்று யாரும் என்னிடம் கேட்காதீர்கள்) தேவையான பொருள்கள் : பச்சரிசி - ஒரு கப் பலாச்சுளை - ஒரு கப் வெல்லம் - 1/4 - 1/2 கப் (சுவைக்கேற்ப) ஏலக்காய் - சிறிது மிளகு - 4 தேங்காய் துருவல் / பொடியாக நறுக்கியது - கால் கப் உப்பு - தேவையான அளவு வாழை இலை செய்முறை: பச்சரிசியை 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும். பலாச்சுளைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை துருவி வைக்கவும். அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு, மிளகு சேர்த்து அரைக்கவும். அத்துடன் பலாச்சுளைகளையும் சேர்த்து அரைக்கவும். அதனுடன் வெல்லம் சேர்த்து அரைக்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும். பிறகு தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கிய தேங்காய், ஏலக்காய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும். வாழை இலையை நறுக்கி லேசாக நெருப்பில் வாட்டி எடுக்கவும். (நெருப்பில் வாட்டுவதால் மடிப்பதற்கு சுலபமாக இருக்கும்). பிறகு வாழையிலையின் மேல் மாவுக் கலவையை பரப்பவும். படத்தில் உள்ளது போல இலையின் நான்கு பக்கமும் மடித்து மூடவும். இதே போல மீதமுள்ள மாவையும் தயார் செய்யவும். மாவு வைத்து மடித்த இலைகளை இட்லி பானையில் அடுக்கி, மூடி வைத்து வேக வைக்கவும். (20 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்கள் வரை ஆகலாம். மாவை எவ்வளவு கனமாக பரப்பியிருக்கிறீர்கள் என்பதை சார்ந்து நேரம் மாறுபடும்). சுவையான ஹலசினஹன்னு ஹிட்டு / கடுபு தயார்.
  2. மிளகு நண்டு தேவையானவை: நண்டு - ஒரு கிலோ முழு மிளகு - 3 டேபிள்ஸ்பூன் மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன் சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் அரைத்த விழுது - 2 கப் மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் செய்முறை: மிளகு, மல்லி (தனியா), சோம்பை தனித்தனியாக பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். பிறகு நன்றாக ஆறவிட்டு, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பொடித்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் பொடித்த மசாலாத்தூள், மஞ்சள்தூள், சுத்தம் செய்த நண்டு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 10, 15 நிமிடங்கள் வரை மூடிபோட்டு வேகவிடவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயை மற்றொரு வாணலியில் சேர்த்து, சூடாக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். அவித்த மிளகு, நண்டை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். சாதம், இட்லி, தோசையுடன் சூடாகப் பரிமாறவும். நண்டு ஆம்லெட் தேவையானவை: நண்டு - 3 (சுத்தம் செய்தது) இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் (நறுக்கவும்) - ஒன்று சின்னவெங்காயம் (தட்டவும்) - 4 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன் சோம்புத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கவும்) - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் ஆம்லெட்க்குத் தேவையான பொருட்கள்: முட்டை - 2 உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் வாணலியில் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். ஆறவிட்டு நண்டுத் துண்டுகளின் சதைப் பகுதியைப் பிரித்தெடுக்கவும். இனி நண்டு வேகவைத்த தண்ணீரை கிரேவி பதம்வரும் வரை வற்ற வைக்கவும். ஆம்லெட் செய்ய: ஒரு பவுலில் இரண்டு முட்டை, நண்டின் சதைப்பகுதி, 2 டேபிள்ஸ்பூன் நண்டு அவித்த கிரேவி மற்றும் தேவைப்பட்டால் உப்பு (நண்டு வேக வைக்கும் போதே உப்பு போட்டுதான் வேக வைத்திருக்கிறோம்) சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து நண்டு, ஆம்லெட் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்து சூடாகப் பரிமாறவும். நண்டு ரசம் ரசப்பொடிக்குத் தேவையானவை: மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 மல்லி (தனியா) - 3 டீஸ்பூன் பூண்டு - 4 பல் சின்னவெங்காயம் - 2 கறிவேப்பிலை - சிறிது செய்முறை: இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) ஆகியவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். பிறகு நன்றாக ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் ரசப்பொடி ரெடி. ரசத்துக்கு தேவையான பொருட்கள்: நண்டு - ஒரு கிலோ தக்காளி - 3 (அரைக்கவும்) கறிவேப்பிலை - சிறிது மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் சோம்பு - கால் டீஸ்பூன் வெங்காய வடகம் - 2 நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல் - கால் கப் தண்ணீர் - 4 கப் கொத்தமல்லித்தழை (நறுக்கவும்) - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து, சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அடிகனமான மற்றொரு வாணலியில் நல்லெண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும். இத்துடன் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் வெங்காய வடகம் சேர்த்துத் தாளிக்கவும். தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு புளிக்கரைசல், வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். உப்பு, காரம், புளிப்பு சரி பார்த்து தீயை மிதமாக்கவும். ரசம் நுரைகூடி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம். சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும். ரசத்தை சாப்பிடும்போது அதில் ஊறிய நண்டைச் சுவைக்க அருமையாக இருக்கும். கிராப் டெவில்டு எக்ஸ் தேவையானவை: வேகவைத்த முட்டை - 6 வேகவைத்த நண்டின் சதைப்பகுதி - அரை கப் கடுகுத்தூள் - ஒரு சிட்டிகை மயோனைஸ் - ஒன்றரை டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன் மிளகு - கால் டீஸ்பூன் சில்லி சாஸ் - கால் டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முட்டைகளை பாதி பாதியாக நறுக்கி, மஞ்சள் கரு அனைத்தையும் தனியாக பிரித்தெடுத்து உதிர்க்கவும். பிரித்தெடுத்தவற்றுடன் கடுகுத்தூள், மயோனைஸ், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு, சில்லி சாஸ் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். வேகவைத்த நண்டின் சதைப்பகுதியை மஞ்சள் கரு கலவையுடன் சேர்த்துக் கலக்கவம். உப்பு, காரம் சரிபார்க்கவும். இந்தக் கலவையை, முட்டையின் மஞ்சள் கரு இருந்த இடத்தில் வைத்து நிரப்பவும். ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். நண்டு லாலிபாப் தேவையானவை: நண்டு கால் - 6 (வேக வைத்தது) வேகவைத்த நண்டின் சதைப்பகுதி - ஒரு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு - அரை கப் பிரெட் துண்டு - ஒரு ஸ்லைஸ் பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சைமிளகாய் (நறுக்கவும்) - ஒன்று கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் முட்டை - ஒன்று (அடித்து வைக்கவும்) பிரெட் க்ரம்ஸ் - ஒரு கப் எண்ணெய் - ஒன்றரை கப் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த நண்டின் சதைப்பகுதி, மிளகாய்த்தூள், உப்பு, கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். ஒரு கப் தண்ணீரில் பிரெட்டை முக்கி பிழிந்து எடுக்கவும். இதை உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறி உப்பு, காரம் சரிபார்த்து அடுப்பை விட்டு இறக்கவும். ஆறிய நண்டுக் கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். முட்டையுடன் தேவைக்கேற்ப உப்பு, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கி வைக்கவும். உருட்டிய உருண்டைகளை முட்டையில் முக்கி எடுத்து, பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும். இதை நண்டுக் காலில் செருகி லாலிபாப் வடிவில் வருமாறு பிடித்து வைக்கவும். இதைபோல் எல்லா உருண்டைகளையும் செய்து, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயைச் சூடாக்கிப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். நண்டு லாலிபாப்பை ஸ்வீட் சில்லி சாஸ் சேர்த்துப் பரிமாறவும். நண்டு ஃப்ரைடு ரைஸ் தேவையானவை: பாஸ்மதி சாதம் - 4 கப் அவித்த நண்டு சதைப்பகுதி - ஒரு கப் லைட் சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் வினிகர் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி - ஒரு டீஸ்பூன் (துருவியது) பூண்டு - 3 பல் (துருவியது) சர்க்கரை - கால் டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் வெங்காயத்தாள் - 2 நறுக்கியது முட்டை - 2 (அடித்துக்கொள்ளவும்) வேகவைத்த பச்சைப் பட்டாணி - கால் கப் வேகவைத்த அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - கால் கப் குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - தலா ஒரு துண்டு நறுக்கியது செலரி - ஒரு டீஸ்பூன் செய்முறை: ஒரு பவுலில் சோயா சாஸ், வினிகர், வெள்ளை மிளகுத்தூள், சர்க்கரையை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். இதில் இஞ்சி, பூண்டு, செலரி சேர்த்து 5 விநாடிகள் வதக்கவும். இத்துடன் நறுக்கிய மூன்று நிற குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்க்கவும். 10 விநாடிகள் வதக்கி, பாஸ்மதி சாதத்தை உப்புடன் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பிறகு சாதக் கலவையை ஓரமாக ஒதுக்கிவிட்டு நடுவில் உள்ள பகுதியில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். பின்னர் முட்டை வேகும்வரை கிளறி, பாஸ்மதி சாதக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் அவித்த நண்டின் சதைப்பகுதி, பச்சைப் பட்டாணி, அமெரிக்கன் கார்ன் மற்றும் சாஸ் கலவையைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறி வெங்காயத்தூள் தூவி இறக்கவும். சூடான நண்டு ஃப்ரைடு ரைஸைப் பரிமாறவும். நண்டு கேசரோல் தேவையானவை: அவித்த நண்டு - 10 (சதைப்பகுதி மட்டும்) பெரிய வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்) இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன் தக்காளி - 2 (சுடுநீரில் சேர்த்து தோல் உரித்து நறுக்கவும்) உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - தேவைக்கேற்ப குடமிளகாய் - ஒன்று (நறுக்கவும்) செய்முறை: நண்டை ஓட்டுடன் வேகவைத்து தண்ணீரையும், சதைப்பகுதிகளையும் தனியாக பிரித்து வைக்கவும். வாய் அகன்ற வாணலியில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, உப்பு, மிளகு, குடமிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும். நண்டு அவித்த தண்ணீரை இத்துடன் சேர்த்து வேகவிடவும். பிறகு, அடுப்பை விட்டு இறக்கி நண்டு சதையை கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். வொயிட் சாஸ் செய்யத் தேவையானவை: வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன் பால் - 2 கப் கடுகுத்தூள் - ஒரு சிட்டிகை செய்முறை: வெண்ணெயை நான்ஸ்டிக் கடாயில் சேர்த்து சூடாக்கவும். இத்துடன் மைதா மாவு சேர்த்து கெட்டிபடாமல் பொன்னிறமாக மாறும்வரை கிளறவும். பிறகு, அடுப்பை குறைந்த தீயில் வைத்து சிறிது சிறிதாகப் பாலைச் சேர்த்து மைதா கலவை கெட்டியாகாமல், தொடர்ந்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி கடுகுத்தூள் தூவி ஆறவிடவும். மற்ற தேவையான பொருட்கள்: முட்டை - 2 (அடித்து கலக்கவும்) சீஸ் துருவியது - அரை கப் (இதிலிருந்து 2 டேபிள்ஸ்பூன் தனியாக எடுத்து வைக்கவும்) மூவர்ண குடமிளகாய் நீளமாக நறுக்கியது - அலங்கரிக்க செய்முறை: மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி செல்சியஸ் சூட்டில் 10 நிமிடங்கள் சூடாக்கவும். படத்தில் காட்டியுள்ளபோல நண்டின் ஓட்டை சுடுநீரில் 3 நிமிடம் போட்டு எடுத்து பிறகு துடைத்து உள்ளே வெண்ணெய் தடவி கொள்ளவும். ஆறிய நண்டுக் கலவை, வொயிட் சாஸ் கலவை, உடைத்த முட்டை கலவை மற்றும் துருவிய சீஸ் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். உப்பு, காரம் சரிபார்த்து நண்டு ஓட்டின் உள்ளே வைக்கவும். அவனின் உள்ளே வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பிறகு, மீதமுள்ள சீஸை வெந்த பகுதியின் மேல் துருவி விட்டு ஐந்து நிமிடம் உள்ளே வைத்து ‘பேக்’ செய்து எடுக்கவும். பிறகு, நறுக்கிய குடமிளகாய் வைத்து கார்லிக் பிரெட்டுடன் சூடாகப் பரிமாறவும். நண்டு ரங்கூன் தேவையானவை: அவித்த நண்டு சதை - ஒரு கப் மயோனைஸ் - அரை கப் க்ரீம் சீஸ் - ஒரு கப் வெங்காயத்தாள் - 3 (நறுக்கவும்) முட்டை - ஒன்று (அடிக்கவும்) ரெடிமேட் சமோசா பேட்டி - தேவைக்கேற்ப வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - பொரிக்க செய்முறை: க்ரீம் சீஸ், நண்டு சதைப்பகுதி, மயோனைஸ், வெங்காயத்தாள், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வைக்கவும். முட்டையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலக்கி நன்கு அடித்து வைக்கவும். சமோசா பேட்டிகளை சரிசம சதுர கட்டங்களாக துண்டுகள் போடவும். ஒவ்வொரு சதுர வடிவத்தின் நடுவிலும் ஒரு டீஸ்பூன் அளவு நண்டுக் கலவையை வைக்கவும். முட்டைக் கலவையைத் தொட்டு சதுர வடிவங்களின் ஒரங்களில் எல்லாம் தடவவும். இனி அகலமான இரண்டு நேரெதிர் ஓரங்களை ஒன்றாகக்க ஒட்டவும். இதே போல பக்கவாட்டில் இருக்கும் இரண்டு ஓரங்களையும் ஒன்றாக ஒட்டவும். இடைவெளிகள் தெரியும் இடங்களை முட்டை தொட்டு ஒட்டிவிடுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சட்டி பிடிக்குமளவுக்கு சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் மற்றும் ஸ்வீட் சில்லி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.
  3. இறால் மசாலா என்னென்ன தேவை? இறால் – அரை கிலோ சின்ன வெங்காயம் – 15 தக்காளி – 2 மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் இஞ்சித் துருவல் – சிறிதளவு பச்சை மிளகாய் – 5 மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு வதக்கி அரைக்க: மல்லி - 2 டீஸ்பூன் சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் தாளிக்க: நல்லெண்ணெய் / நெய் – தேவையான அளவு சோம்பு – அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு எப்படிச் செய்வது? இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைத்து எடுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு இறாலைச் சேர்த்து உப்பு பார்த்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இறால் வெந்ததும் தீயைக் குறைத்து, சுருளக் கிளறி மல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள். பிரெட் ஊத்தப்பம் படம்: எல்.சீனிவாசன் என்னென்ன தேவை? பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா அரை கப் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பு, உளுந்து - தலா கால் கப் பிரெட் துண்டுகள் - 10 நறுக்கிய வெங்காயம் - அரை கப் பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது? பச்சரிசி, புழுங்கலரிசி, வெந்தயம், துவரம் பருப்பு, உளுந்து இவற்றை ஊறவைத்து, அரையுங்கள். உப்பு சேர்த்துப் புளிக்கவிடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டியெடுங்கள். நறுக்கியவற்றையும், பிரெட் துண்டுகளையும் புளித்த மாவுடன் கலக்குங்கள். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த மாவைக் கனமான தோசையாக ஊற்றி, மேலே தேங்காய்த் துருவலைத் தூவுங்கள். சுற்றிலும் எண்ணெய்விட்டு, திருப்பிப் போட்டு நன்றாக வெந்ததும் எடுங்கள். சட்னியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும். உடனடி ஊத்தப்பம் வேண்டும் என்றால் தோசை மாவில் பிரெட் துண்டுகளைச் சேர்த்துச் செய்யலாம்.
  4. அரைக்கீரை பக்கோடா தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு கடலை மாவு - 300 கிராம் அரிசி மாவு - 100 கிராம் வனஸ்பதி - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - 2 சிட்டிகை உப்பு - தேவையான அளவு பெரிய வெங்காயம் - 2 கொத்தமல்லித்தழை - சிறிது கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு சமையல் சோடா - ஒரு சிட்டிகை செய்முறை: கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். வனஸ்பதியை உருக்கி வைக்கவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் அரிசி மாவைச் சேர்த்து பிசிறவும். இத்துடன் தேவையானவற்றில் கொடுத்துள்ள எண்ணெய் நீங்கலாக உள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் புரட்டிவிடவும். தீயை மிதமாக்கி பக்கோடாக்கள் பொன்னிறமாக, மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும். அகத்திக்கீரைக் குழம்பு தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கப் தேங்காய்த் துருவல் - ஒரு மூடி பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 காய்ந்த மிளகாய் - ஒன்று தக்காளி - ஒன்று அரிசி களைந்த நீர் - ஒரு கப் சம்பார் பொடி - தேவைக்கேற்ப மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: அகத்திக்கீரையை நீரில் அலசி நீரை, வடியவிட்டு கீரையை உருவி மீடியம் சைஸில் நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை வட்டமாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கி வைக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்து வைக்கவும். தேங்காய்த் துருவலில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து பால் எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து, வதங்கும்போது கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அரிசி களைந்த நீர் சேர்த்துக் கீரையை வேகவிடவும். கீரை வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும். குறிப்பு: மிளகுதக்காளிக் கீரையிலும் இதேபோல் குழம்பு செய்யலாம். இந்த இரண்டு கீரைகளும் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற அருமருந்து என்பது குறிப்பிடத்தக்கது. கீரைப் பணியாரம் தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு தோசை மாவு - ஒரு கப் பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லித்தழை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு (தோசைமாவில் உப்பு இருப்பதால் உப்பு தனியாக சேர்க்கத் தேவையில்லை) செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். சிறுகீரையை கழுவி இரண்டு கைப்பிடி அளவுக்கு பொடியாக நறுக்கி எடுத்துகொள்ளவும். இரண்டு கரண்டி தோசை மாவில் நறுக்கிய கீரையைக் கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துச் சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். தாளித்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சிறிதாக எண்ணெய் விட்டு சூடானதும், மிதமான தீயில் வைத்து பனியாரம் ஊற்றி திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். குறிப்பு: அரைக்கீரை, முளைக்கீரை, பாலக்கீரையிலும் பணியாரம் செய்யலாம். பச்சையாகக் கீரையை அரைத்துச் செய்வதால் சத்துகள் வீணாகாது. கீரையைத் தனியாக அரைத்தால் தோசை மாவில் தண்ணீர் அதிகமாகிவிடும். எனவே, தோசை மாவை சேர்த்தே அரைக்கவும்.
  5. பாகற்காய் வறுவல் தேவையான பொருட்கள் பாகற்காய் – 1 /4 கிலோ பெரிய வெங்காயம் – 2 நடுத்தரமானது மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி மல்லித்தூள் – 1 /2 தேக்கரண்டி சீரகத்தூள் – சிறிது வெல்லம் துருவியது – 4 தேக்கரண்டி எண்ணெய் – 1 1 /2 தேக்கரண்டி உப்பு தாளிக்க கடுகு – 1 /2 தேக்கரண்டி சீரகம் – 1 /2 தேக்கரண்டி கருவேப்பிலை – 10 – 12 இலைகள் பூண்டு நசுக்கியது – 3 பெருங்காயத்தூள் – 1 /4 தேக்கரண்டி செய்முறை 1.பாகற்காயின் ஓரங்களை வெட்டி விட்டு, நீளமாக நறுக்கி பின் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். 2.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடிக்க விடவும். 3.பின் சீரகம் சேர்த்து பொன்னிறமானதும், கருவேப்பிலை, பூண்டு நசுக்கியது அல்லது பெருங்காயத்தூள் சேர்த்து 10 வினாடிகள் வதக்கவும். 4.வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அனைத்து மசாலா தூள்களையும், வெல்லத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். 5.பின் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 6. வேண்டுமெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 7.மூடி போட்டு 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும். 8.இடையில் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். 9.10 நிமிடங்கள் கழித்து மூடியை எடுத்து விட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். 10.நன்கு வறுவலாகும் வரை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். 11.20 – 25 நிமிடங்கள் வரை ஆகும். 12.உப்பு சரி பார்த்து சாதத்துடன் பரிமாறவும்.
  6. ராஜஸ்தான் உணவுகள் பேசன் சக்கி பக்கோடி கி கடி சத்து மால் புவா பியாஸ் கி கட்சோரி தால் பாட்டி சாபுதானா வடா மிஸ்ஸி ரொட்டி கட்டே கி புலாவ் சில்டா சாட் ராஜஸ்தான் மாநில ரெசிப்பிகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர். பேசன் சக்கி ( Besan Chakki) தேவையானவை: கடலை மாவு - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் நெய் - கால் கப் + சிறிது இனிப்பு இல்லாத பால்கோவா - அரை கப் தண்ணீர் - அரை கப் செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர், சர்க்கரை சேர்த்துக் கரைத்து சர்க்கரைப் பாகு காய்ச்சிக்கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைச் சூடாக்கி, கடலை மாவைச் சேர்த்து கெட்டிபடாமல் வறுக்கவும். அதில் பால்கோவாவைச் சேர்த்துக் கிளறவும். பிறகு, காய்ச்சி வைத்துள்ள சர்க்கரைப் பாகைச் சேர்த்து, பர்ஃபி பதம் வரும்வரை கைவிடாமல் கிளறவும். ஒரு தட்டில் நெய்யைத் தடவி பர்ஃபி கலவையை அதில் கொட்டி, விரும்பிய வடிவங்களில் துண்டுகள் போட்டு பரிமாறவும். பக்கோடி கி கடி (Pakodi ki kadhi) தேவையானவை: பாசிப்பருப்பு - 400 கிராம் தயிர் - 200 மில்லி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சோடா உப்பு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கடுகு - ஒரு டீஸ்பூன் எண்ணெய்/நெய் - தேவையான அளவு உப்பு - சிறிதளவு செய்முறை: பாசிப்பருப்பை சுத்தம் செய்து 5 முதல் 6 மணி நேரம் வரை ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். தயிரைக் கட்டி இல்லாமல் அடித்து, அதில் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கலக்கி வைக்கவும். அரைத்த பாசிப்பருப்பில் உப்பு, மீதம் இருக்கும் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சோடா உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து உருண்டைகளாக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்/நெய் விட்டு சூடானதும் உருட்டிய உருண்டைகளைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய்/நெய் சேர்த்துச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கலக்கி வைத்திருக்கும் தயிர் கலவையைச் சேர்க்கவும். உப்பு போட்டு ஒரு கொதி வந்த பிறகு பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும். சத்து (Sattu) தேவையானவை: முழு கோதுமை - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் நெய் - 2 கப் செய்முறை: வாணலியில் முழு கோதுமையைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, அரைத்த கோதுமை மாவுடன் சூடாக்கிய நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து, விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும். குறிப்பு: கோதுமை மாவுக்குப் பதிலாக அரிசி மாவு அல்லது கடலை மாவைச் சேர்த்தும் ‘சத்து’ செய்யலாம். மால் புவா (Malpua) தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப் பால் - அரை கப் சோம்பு - ஒரு டீஸ்பூன் தயிர் - கால் கப் சர்க்கரை - ஒன்றரை கப் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பிஸ்தா - 2 டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய்/நெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து பாகு காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி வைத்துக்கொள்ளவும். அதில் சோம்பு, கோதுமை மாவு, மீதம் இருக்கும் சர்க்கரை, நறுக்கிய பிஸ்தா, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். அதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்/நெய் விட்டு சூடானதும் மாவை சின்னக் கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக இருபுறமும் வேகவைத்தெடுக்கவும். எண்ணெய்/நெய் வடித்து எடுத்து, தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவைத்து எடுத்துப் பரிமாறவும். பியாஸ் கி கட்சோரி (Pyaz ki katchori) தேவையானவை: மைதா மாவு - ஒரு கப் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஸ்டஃபிங் செய்ய: நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை - 1 வெங்காய விதை - ஒரு டீஸ்பூன் அல்லது (விருப்பத்துக்கேற்ப) கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மைதா மாவுடன் நெய், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, சிறிது நேரம் மாவை பிழிந்த ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சோம்பு, வெங்காய விதை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு, நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், பிரிஞ்சி இலை, கொத்தமல்லித்தழை, கடலை மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பின்னர் கலவையில் இருந்து பிரிஞ்சி இலையை நீக்கிவிட்டால் ஸ்டஃபிங் ரெடி. பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு உருண்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்கு உருட்டவும். பிறகு, சப்பாத்தி கட்டையில் வைத்து மாவை நான்கு விரல்களால் நன்கு தட்டவும். உள்ளங்கையில் வைத்து குழிவாக்கி நடுவே ஸ்டஃபிங்கை வைத்து வெளியில் வராதபடி மூடவும். பிறகு, சப்பாத்தி கட்டையில் மீண்டும் வைத்து கைகளால் தட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தட்டியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தால் பாட்டி (Dal baati) தால் செய்ய: கடலைப்பருப்பு - கால் கப் துவரம்பருப்பு - கால் கப் உளுத்தம்பருப்பு - கால் கப் பாசிப்பருப்பு - கால் கப் பச்சைப் பயறு - கால் கப் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் பிரிஞ்சி இலை - 1 சீரகம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் ஆம்சூர் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன் புளிக்கரைசல் - 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - தேவையான அளவு கிராம்பு - 4 உப்பு - தேவையான அளவு நெய் - தேவையான அளவு பாட்டி செய்ய: கோதுமை மாவு - ஒரு கப் ரவை - அரை கப் கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன் பால் - 8 டேபிள்ஸ்பூன் நெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க செய்முறை: கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, பால், நெய், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, நன்கு தேய்த்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டியவற்றைச் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும் பருப்பு வகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒன்றாக வேகவைத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் தேவையான அளவு தண்ணீர், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், புளிக்கரைசல் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்யைச் சூடாக்கி கிராம்பு, பிரிஞ்சி இலை, சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் ஆகிவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, கலந்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். இத்துடன் வேகவைத்த பருப்புக்கலவை, உப்பு, பொரித்த உருண்டைகள் ஆகிவற்றைச் சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும். சாபுதானா வடா (Saabudana vada)) தேவையானவை: ஜவ்வரிசி - கால் கிலோ வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒரு கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கு, ஊறிய ஜவ்வரிசி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒரு பவுலில் சேர்த்துப் பிசையவும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, பிசைந்த மாவை கட்லெட் வடிவத்தில் தட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தட்டிய கட்லெட்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் பொரித்து எடுத்து பச்சை நிற சட்னியுடன் பரிமாறவும். மிஸ்ஸி ரொட்டி( Missi roti) தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப் பாசிப்பருப்பு - ஒரு கப் உலர்ந்த கஸுரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் நெய் - தேவையான அளவு பெரிய வெங்காயம் - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: பாசிப்பருப்பை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்தெடுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், உப்பு, வேகவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், உலர்ந்த கஸுரி மேத்தி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி பதத்துக்கு பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய ரொட்டிகளாக தேய்த்துக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும், உருட்டிய ரொட்டிகளைச் சேர்த்து இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். கட்டே கி புலாவ் (Gatte ke Pulav) தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கப் நெய் - அரை கப் கடலை மாவு - ஒரு கப் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் ஓமம் - அரை டீஸ்பூன் பட்டை - 2 இஞ்ச் நீள துண்டு பிரிஞ்சி இலை - 2 கிராம்பு - 6 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் ஆப்ப சோடா - அரை டீஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 2 இஞ்சி விழுது - 3 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கப் வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப் நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் சேர்த்து, 2 அல்லது 3 விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரை டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், நறுக்கிய இஞ்சி உப்பு, ஓமம், தேவையான அளவு தண்ணீர் ஆகிவற்றைச் சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை நீளமாக உருட்டி கத்தியால் துண்டுகள் போட்டுக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி போட்டு வைத்த துண்டுகளை சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். ஒரு டூத் பிக் கொண்டு உருண்டைகளை குத்திப் பார்த்து வெந்துவிட்டதா என்பதை செக் செய்துகொண்டு பிறகு தண்ணீரை வடித்துவிடுங்கள். இதுதான் கட்டா. அடுப்பில் வாணலியை வைத்து சேர்த்துச் சூடானதும் வேகவைத்த உருண்டைகளைப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சேர்த்துச் சூடாக்கி பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பொடியாக நறுக்கிய புதினா, மீதமிருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, மல்லித்தூள் (தனியாத்தூள்), பெருங்காயத்தூள், இஞ்சி விழுது, பச்சைப் பட்டாணி, ஆப்ப சோடா சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, ஊறிய பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, வேகவைத்த கட்டா உருண்டைகள், தயிர் சேர்த்து கிளறி வேகவைத்து எடுத்தால் கட்டே கி புலாவ் ரெடி. சில்டா சாட் (Childa chat) தேவையானவை: கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - கால் கப் பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு துருவிய பனீர் - அரை டீஸ்பூன் ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லித்தழை சட்னி செய்ய: கொத்தமல்லித்தழை - ஒரு கப் பச்சை மிளகாய் - 3 சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கொத்தமல்லித்தழை சட்னி செய்யக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, ஒரு கரண்டி மாவெடுத்து ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். அதன் மேல் கொத்தமல்லித்தழை சட்னியைத் தடவி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, ஆம்சூர் பவுடர், ஓமப்பொடி, துருவிய பனீர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
  7. குமுட்டிக்கீரைக் கடையல் தேவையானவை: குமுட்டிக்கீரை - ஒரு கட்டு சின்ன வெங்காயம் - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 2 கடுகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கீரையை ஒவ்வொரு இலையாகப் 3 அல்லது 4 முறை தண்ணீரில் கழுவவும். வெங்காயத்தை வட்டமாக நறுக்கி வைக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கீரை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். 5, 10 நிமிடத்தில் கீரை வெந்துவிடும். பிறகு, தண்ணீரை வடித்து கீரையை தனியாக எடுத்துவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து, அதை வேகவைத்த கீரையில் சேர்த்து, தேவையான அளவு உப்புட சேர்த்துக் கரண்டியால் நன்கு கடைந்துவிடவும் (கரண்டியில் கடைந்தாலே நன்கு மசிந்துவிடும்). இத்துடன் வெந்த கீரையில் இருக்கும் வடித்த தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டிப்பட்டதும் இறக்கினால், கீரை கடையல் ரெடி. விரும்பினால் வேகவைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் சேர்க்கலாம். குறிப்பு: குமுட்டிக் கீரை ஜீரணத்துக்கு மிகவும் உகந்தது. கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரபலமான இந்தக் கீரை, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மட்டுமே கிடைக்கும். கீரை சாதம் தேவையானவை: பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப் புழுங்கலரிசி - 200 கிராம் துவரம்பருப்பு - 50 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று (பெரியது) பூண்டு - 5 பல் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் - ஒன்று சாம்பார் பொடி - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து நீரில் அலசி, எடுத்து வைக்கவும். அரிசியையும் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் தண்ணீரீல் ஊற்றி ஊறவைக்கவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதங்கும்போதே பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, ஒன்றிரண்டாக தட்டிய பூண்டு மற்றும் சீரகத்தூள், சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் கீரையைச் சேர்த்து லேசாக வதக்கி, ஊறிய அரிசி, பருப்புக் கலவை, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு 3 விசில் வந்த பிறகு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கலக்கிவிட்டுப் பரிமாறவும். குறிப்பு: பொன்னாங்கண்ணிக்கீரை சருமத்துக்கும் கண்களுக்கும் மிகவும் நல்லது. சிறுகீரை, தண்டுக்கீரையிலும் இந்தச் சாதம் செய்யலாம். இந்தச் சாதம் சாப்பிடும்போது உதிராக இருக்க வேண்டும். அதற்கேற்ப விசிலை முடிவு செய்து கொள்ளுங்கள் வல்லாரைத் தொக்கு தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கப் புளி - சிறிய எலுமிச்சை அளவு சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை செய்முறை: வல்லாரைக்கீரையின் அடிப்பாகத்தில் இருக்கும் ஒரு இஞ்ச் அளவிலான தண்டை நறுக்கி நீக்கிவிட்டு, மீதியுள்ள பாகத்தை தண்ணீரில் நன்கு கழுவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சையாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த கீரை விழுதைச் சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். இத்துடன் புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். அடுப்பைக் குறைத்தே வைக்கவும். கீரைக் கலவையில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி கொதிக்கவிடவும். கலவை புளிக்காய்ச்சல் போல நன்கு திரண்டு வரும் வரை வதக்கி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை சூடான சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் சைட்டுடிஷ் ஆக வைத்துப் பரிமாறலாம். குறிப்பு: வல்லாரை ஞாபகசக்தியை அதிகரிக்கும். இதே முறையில் கறிவேப்பிலையிலும் தொக்கு செய்யலாம்.
  8. 30 வகை சிறுதானிய உணவுகள்! இன்றைய தலைமுறையினர் ‘ஜங்க் ஃபுட்’டை தவிர்த்து ஹெல்த்தி உணவுக்கு மாறிவரும் இந்தச் சூழ்நிலையில் ஹெல்த்தி உணவு வகையில் முக்கிய இடம் வகிக்கும் நமது பாரம்பர்யமிக்க சிறுதானிய உணவு வகைகளை செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மி ஸ்ரீநிவாசன். மூங்கில் அரிசி பிரியாணி தேவையானவை: மூங்கில் அரிசி - 200 கிராம், பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி (எல்லாம் சேர்ந்து) - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப, நெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன். அரைக்க: பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி மற்றும் புதினா தழை இரண்டும் சேர்ந்து - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, தனியா, கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன். தாளிக்க: பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், லவங்கம் - தலா 3, பிரிஞ்சி இலை - சிறிது. செய்முறை: மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்க வும். அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதங்கி, பின் காய்கறி சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். கொதிவந்தந்தும் மூங்கில் அரிசியை சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். மூங்கில் அரிசி ஈஸி புளியோதரை தேவையானவை: மூங்கில் அரிசி - 200 கிராம், புளி - சிறிய எலுமிச்சை அளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைத்து, உதிரியாக சாதம் வடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்துத் தாளித்து, புளியை அரை டம்ளர் தண்ணீ ரில் கெட்டியாக கரைத்துச் சேர்க்க வும். கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியான பின் ஆறவைக்கவும். இதை மூங்கில் அரிசி சாதத்துடன் சேர்த்துக் கிளறிவிட, மூங்கில் அரிசி ஈஸி புளியோதரை ரெடி. ராகி கொழுக்கட்டை தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள், நெய் - தலா ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன். செய்முறை: முக்கால் கப் வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொதிக்க வைத்து இறக்கி ஆற விடவும். பிறகு வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்க வும். இதில் சிறிது சிறிதாக ராகி மாவைத் தூவி, கட்டியின்றிக் கிளறவும். கலவையை இறக்கி ஆற விடவும். ஆறிய மாவை சிறு சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து 5 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அபாரமான ருசியில் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை இரண்டு நாட்கள்வரை கெடாது. ராகி லட்டு தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்ப்பொடி - கால் டீஸ்பூன், சிறுசிறு பல்லாக நறுக்கிய தேங்காய் - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 150 மில்லி. செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடாக்கி அதில் தேங்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் ராகி மாவு சேர்த்து பச்சைவாசனை போக வறுத்து, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்துப் பிசிறி சுடச்சுட நெய்விட்டு விரும்பிய அளவில் உருண்டை களாகப் பிடிக்கவும். ராகி மெதுபக்கோடா தேவையானவை: ராகி மாவு - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், பச்சரிசி மாவு - 20 கிராம், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சிறிய வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) - அரைகப், நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் - தலா இரண்டு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் சோடா உப்பு, வெண்ணெய் சேர்த்து நுரைத்து வருமளவுக் குழைத்து விடவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அதில் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். ராகி சுண்டல் தேவையானவை: ராகி மாவு - அரை கப், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், துருவிய தேங்காய், கேரட் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - தேவையான அளவு, உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதை ராகி மாவில் ஊற்றி கெட்டியாகக் கிளறவும். ஆறியதும் கட்டியின்றி பிசைந்துகொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து சிறு சிறு பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி, 5 நிமிடம் ஆவியில் வேகவிடவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், அதில் ராகி உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி, தேங்காய் மற்றும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும். ராகி ஸ்வீட் சீடை தேவையானவை: ராகி மாவு - 5 டேபிள் ஸ்பூன் (75 கிராம்), பச்சரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன், வறுத்து அரைத்த உளுந்து மாவு - 2 டீஸ்பூன் (அனைத்து மாவுகளையும் சேர்த்து நன்கு சலிக்கவும்), பாகு வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளை எள் - தலா ஒரு டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் - கால் கிலோ, நெய் - 1 ஸ்பூன். செய்முறை: வெல்லத்தைப் பொடித்து 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, 1 டீஸ்பூன் நெய், ஏலக்காய்த்தூள், எள் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை இதில் சிறிது சிறிதாகத் தூவி கட்டியின்றிக் கிளறவும், ஆறிய பின் சிறு சிறு சீடைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். சத்தும் சுவையும் நிறைந்த சீடை இது. வரகரசி - மிளகு மினி இட்லி தேவையானவை: வரகரிசி - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், முழு உளுந்து - 100 கிராம், மிளகுத்தூள், அவல் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியுடன் அவல் சேர்த்துக் களைந்து ஊறவைக்கவும். வரகரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே ஊறவிடவும். அனைத்தும் 4 மணி நேரம் ஊறினால் போதும். எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து வைக்கவும். மாவு புளித்துப் பொங்கியவுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வரகரசி - கொள்ளு அடை தேவையானவை: வரகரிசி - 100 கிராம், கொள்ளு - 25 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8, சீரகம், பெருங்காயம் - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை தளிர் - நறுக்கியது - ஒரு சிறிய கப். உப்பு - தேவையான அளவு. செய்முறை: வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரவென அரைக்கவும். 2 மணி நேரம் கழித்து துருவிய கேரட் அல்லது நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கலந்து, தோசைக்கல்லை சூடாக்கி தேங்காய் எண்ணெய் விட்டு அடைகளாகச் சுட்டெடுக்கவும். வரகரசி ஆப்பம் தேவையானவை: வரகரிசி - அரை கப், புழுங்கலரிசி மற்றும் பச்சரிசி இரண்டும் சேர்த்து - அரை கப், வெந்தயம் - கால் டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், இளநீர் - கால் கப், துருவிய தேங்காய் - கால் கப், சோடா உப்பு - தேவையான அளவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை. செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்து கொள்ளவும். இக்கலவையுடன் தண்ணீர் விட்டு நன்கு களைந்த வரகரிசியை ஒன்றாகச் சேர்த்து மூழ்குமளவுக்கு நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிடவும். இதனுடன் தேங்காய் சேர்த்து கெட்டியாக மைபோல் அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலை இளநீர், சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து தோசை மாவைவிட சற்றுத் தளர்வாகக் கரைத்துக்கொண்டு, ஆப்பச் சட்டியில் ஆப்பமாக வார்த்து எடுக்கவும். வரகரசி தாளித்த பொங்கல் தேவையானவை: வரகரசி சாதம் - ஒரு கப், பச்சைப்பருப்பு - 50 கிராம் (குழைவாக வேகவிட்டது), மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நெய் - 50 கிராம், எண்ணெய் - 25 கிராம், புளிக்கரைசல் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய் - தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் இரண்டும் சேர்த்து - அரை டீஸ்பூன், முந்திரி - தேவையான அளவு. கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: குக்கரில் வைத்த வரகரிசி சாதம் வெந்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்காமல் அதனுடன் வெந்த பச்சைப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளிக்கரைசல், எண் ணெய் அனைத்தையும் சேர்த்து நன்கு சேர்ந்து வருமாறு (பொங்கல் பதம்) கிளறி எடுக்கவும். நெய்யில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து இதில் சேர்க்கவும். சுவையான பொங்கல் தயார். வரகரசித் தட்டை தேவையானவை: வரகரசி மாவு (கடைகளில் கிடைக்கிறது) - ஒரு கப், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், பொட்டுக் கடலை மாவு - கால் கப், ஊறவைத்த உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - தேவையான அளவு, கொத்த மல்லித்தழை மற்றும் பச்சைமிளகாய் விழுது இரண்டும் சேர்த்து - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 300 கிராம், தண்ணீர் மற்றும் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வரகரசி மாவைச் சலித்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறிய பின் எண்ணெய் தவிர பிற பொருட்கள் அனைத்தையும் கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்கு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கைகளில் எண்ணெயைத் தடவிக்கொண்டு, மாவை சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, தட்டையாகத் தட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். கம்பங்களி தேவையானவை: கம்பு நொய் (கடைகளில் கிடைக்கிறது) - ஒரு கப், பச்சரிசி நொய் - 3 டீஸ்பூன், - பச்சைமிளகாய் - 4 (நறுக்கியது), பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கியது), எண்ணெய் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை நறுக்கியது - சிறிது, தயிர் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு, எண்ணெய் சேர்த்து கொதி வருகையில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்க வும். பின் கம்பு நொய் மற்றும் பச்சரிசி நொய் சேர்த்து, அடிப்பிடிக்காதவாறு அடிக்கடி கிளறி கெட்டியாக வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறிய பின் பரிமாறவும். முதல் நாள் இரவு கம்பங்களி செய்து அது மூழ்குமாறு தயிர் விட்டு மறுநாள் காலை சாப்பிட, அமிர்தமாக இருக்கும். கம்பங்கூழ் தேவையானவை: கம்பு மாவு(கடைகளில் கிடைக்கிறது) - அரை கப், கைக்குத்தல் அவல் பொடித்தது - 2 டேபிஸ்ஸ்பூன், மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை, மோர் - 2 டம்ளர். செய்முறை: கம்பு மாவு, பொடித்த கைக்குத்தல் அவல் இரண்டையும், தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து கலவையில் சேர்க் கவும். இறுதியாக மோர் சேர்த்துக் கலந்து பருகவும். கம்பு ரொட்டி தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - கால் கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், மாங்காய்ப்பொடி (அமெச்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சுட்டு எடுக்க நெய் - தேவையான அளவு. செய்முறை: நெய் தவிர பிற பொருட்கள் அனைத்தையும் கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ரொட்டிகளாகத் தட்டி.. நெய் விட்டு இரு புறமும் வேகவைத்து எடுத்தால் ரொட்டி ரெடி. கம்பு - பனைவெல்லப் பணியாரம் தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - அரை கப், கரைத்து வடிகட்டிய பனை வெல்ல நீர் - ஒன்றரை கப்(150 கிராம் பனைவெல்லம் போதுமானது), ஒன்றிரண்டாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சுக்குப் பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, சோடா உப்பு - சிட்டிகை. செய்முறை: மாவு வகைகளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, வேர்க் கடலை, சோடா உப்பு, பனைவெல்ல நீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். அரை மணி நேரம் கழித்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு ஒவ்வொரு குழியிலும், அரைக்குழி அளவுக்கு மாவு விட்டு வெந்த பின் திருப்பி, வேக விட்டு எடுக்கவும். குதிரைவாலி கோகனட் பாத் தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கப், கெட்டியான தேங் காய்ப்பால் - ஒரு கப், தண்ணீர் - ஒரு கப், நெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, லவங்கம் - தேவையான அளவு, சர்க்கரை - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடிகனமான பாத்திரத்தில், தண்ணீரில் நன்கு களைந்த குதிரைவாலி அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும்... உப்பு, தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்க்கவும். சாதம் வெந்தவுடன்... நெய்யில் தாளித்த ஏலக்காய், பட்டை, லவங்கத்தை கோகனட் பாத்தில் சேர்த்துக் கிளறி இறக்கினால்... வெள்ளைவெளேர் குதிரைவாலி கோகனட் பாத் ரெடி. குதிரைவாலி கோஸ், கேரட் மசாலா தேவையானவை: குதிரைவாலி அரிசி - அரை கப், நறுக்கிய கோஸ் மற்றும் கேரட் - தலா கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை நறுக்கியது - சிறிது, மல்லித்தூள் (தனியா) - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் நறுக்கியது - 2 டீஸ்பூன். செய்முறை: குதிரைவாலி அரிசியை தண்ணீரில் களைந்து கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு சூடாக்கி கடுகு, சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் தண்ணீர் சேர்த்து கொதி வந்த பின் குதிரைவாலி அரிசியைச் சேர்த்து வெந்ததும் இறக்கி தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும். தினை கீர் தேவையானவை: தினை அரிசி - அரை கப், சர்க்கரை - 100 கிராம், கோவா (சர்க்கரையில்லாதது) - 50 கிராம், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், கசகசா - 10 கிராம், ஏலக்காய் - 2, பால் - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை. செய்முறை: தினை அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து, குக்கரில் குழைய வேக விடவும். கசகசாவுடன் ஏலக் காய், பால் சேர்த்து விழுதாக அரைக்க வும். கோவாவை உதிர்த்து நன்கு பிசையவும். வெந்த தினையில் அரைத்த விழுது, உதிர்த்த கோவா, சர்க்கரை சேர்த்து கொதிவந்தபின் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும். இறுதியாக குங்குமப்பூ தூவிப் பரிமாறவும். தினைத் தேன் உருண்டை தேவையானவை: தினை மாவு (கடைகளில் கிடைக்கிறது) - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன், உருக்கிய நெய் - கால் கப், தேன் - கால் கப். செய்முறை: மாவு வகைகளுடன் ஏலக்காய்த்தூள், வெள்ளரி விதை மற்றும் தேன் கலந்து பிசைந்து, உருக்கிய நெய் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான தினைத் தேன் உருண்டை ரெடி. தினை சர்க்கரைப் பொங்கல் தேவையானவை: திணை - 100 கிராம், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 25 கிராம், நெய் - 50 கிராம், ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த முந்திரி, தினை, பாதாம் - தலா ஒரு டீஸ்பூன், துருவிய கொப்பரை - 2 டீஸ்பூன், வெல்லம் - 150 கிராம். செய்முறை: தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர் விட்டு குழைய வேகவைக்கவும். வெல்லத் தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, தினைக் கலவையில் சேர்த்து, பொங்கல் பதம் வரும்வரையில் கிளறி இறக்கவும். சூடான நெய்யில் ஜாதிக்காய்ப் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து, பொங்கலில் சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரி, தினை, பாதாம் சேர்த்துப் பரிமாறவும். சாமை ஊத்தப்பம் தேவையானவை: சாமை - 100 கிராம், பச்சரிசி, ஜவ்வரி இரண்டும் சேர்த்து - 4 டேபிள்ஸ்பூன், உளுந்து - 25 கிராம், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. மேலே தூவ: பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது), பொடியாக நறுக்கிய கேரட், தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி - 25 கிராம், ஊறிய கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் (அனைத்தையும் கலந்து வைத்துக்கொள்ளவும்). செய்முறை: சாமை, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் தோசைக்கல்லைச் சூடுசெய்து எண்ணெய் விட்டு, மாவை தடிமனாக வார்த்து மேலே தூவவேண்டிய பொருட்களைத் தூவி, இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். சாமை குணுக்கு தேவையானவை: சாமை - 50 கிராம், பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை - தலா 25 கிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது), நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு, எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற விடவும். மறுநாள் சாமை, பச்சைப்பருப்பு, பச்சரிசி அனைத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து, இவற்றுடன் ஊறவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ரவை ரவையாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, சீரகம், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துப் பிசைந்து, சிறிது சிறிதாகக் கிள்ளி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். சாமை டிலைட் தேவையானவை: சாமை - 200 கிராம், பால் - அரை கப், கடைந்த தயிர் - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு மற்றும் பெருங் காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன். மேலே தூவ: துருவிய மாங்காய், கேரட் மற்றும் வெள்ளரி - ஒரு டேபிள் ஸ்பூன். நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு. செய்முறை: சாமையுடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக விட்டு ஆறியதும் தயிர், வெண்ணெய் சேர்க்கவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து, மேலே மாங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். கொள்ளு - பூண்டுப் பொடி தேவையானவை: சுத்தம் செய்த கொள்ளு - 200 கிராம், மிளகு - 20 கிராம், காய்ந்த மிளகாய் - 10, பூண்டுப்பல் - 10, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: சுத்தம் செய்த கொள்ளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆற விடவும். 2 டீஸ்பூன் நெய்யில் பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒருசேர வறுத்துக்கொள்ளவும். இக்கலவையை ஆறவைத்து வறுத்த கொள்ளுடன் சேர்த்து மிக்சியில் போட்டுப் பொடிக்கவும். சூடான சாதத்தில் நெய் விட்டு இப்பொடியைக் கலந்து ருசிக்கலாம். இட்லி மற்றும் தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். கொள்ளு வெஜ் சூப் தேவையானவை: ஊற வைத்த கொள்ளு - 100 கிராம், பூண்டு - 2 பல், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, வெண்ணெய் - சிறிது, மிளகுத்தூள், சர்க்கரை - தலா ஒரு சிட்டிகை, கேரட், கோஸ் நறுக்கியது - தலா ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப. செய்முறை: கொள்ளு, பூண்டு, பட்டை, லவங்கம் நறுக்கிய காய்கள் இவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு வடிகட்ட வும். வடிகட்டிய சூப் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துப் பருகவும். ஸ்வீட் கார்ன் வடை தேவையானவை: ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப், உளுந்து - ஒரு டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப் பில்லை - அனைத்தும் சேர்ந்து ஒரு கப் (நறுக்கியது), எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை மூழ்குமளவு நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றுடன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைக்கவும். அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சோம்பு சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுக்கவும். சோள அல்வா தேவையானவை: சோள மாவு - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், ஃபுட் கலர் (ஆரஞ்சு) - தேவையான அளவு, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை - தலா அரை டேபிள்ஸ்பூன், நெய் - 100, எண்ணெய் - தேவையான அளவு, பச்சை கற்பூரத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: சோளமாவுடன் ஃபுட் கலர், பச்சை கற்பூரம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும். கரைத்த மாவைச் சர்க்கரை பாகில் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் மற்றும் நெய்யைக் ஒன்றாக கலந்து, கிளறிக் கொண்டிருக்கும் மாவில் இடையிடையே சேர்த்துக் கெட்டியாகும்வரை கிளறவும். நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி வறுத்த முந்திரி, திராட்சை தூவி விரும்பிய வடிவில் கட் செய்யவும். வெள்ளைச்சோள பாப்கார்ன் தேவையானவை: காய்ந்த வெள்ளைச் சோளம் - 200 கிராம், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது. செய்முறை: குக்கரில் எண் ணெய் விடாமல், வெள்ளைச் சோளத்தைப் போட்டு மூடிவைக்க, சற்று நேரத்தில் வெடித்து பூவென மலரும். அடுப்பை அணைத்துவிட்டு, நெய், உப்பு சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும். சோளம் ரெடி மிக்ஸ்/கஞ்சிப் பொடி தேவையானவை: காய்ந்த வெள்ளை மற்றும் மஞ்சள் சோளம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பாசிப்பயறு, ராகி, ஜவ்வரிசி - தலா 100 கிராம், பச்சரிசி - 2 டீஸ்பூன், பார்லி - 50 கிராம். செய்முறை: மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களை யும் தனித்தனியே வெறும் வாணலி யில் சிவக்க வறுத்து, பின்னர் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். இதை சூடான பாலில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்தோ அல்லது மோரில் கலந்தோ சிறிது உப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
  9. சிக்கன் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : கோழி - ஒன்று நூடுல்ஸ் - 500 கிராம் காரட் - 2 லீக்ஸ் - ஒன்று வெங்காயம் - 3 பச்சைமிளகாய் - 4 முட்டை - 4 மிளகாய்த்தூள் - 2 மேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் கோழியை முழுதாக உப்பு சேர்த்து வேக வைக்கவும். கோழி வெந்ததும் எடுத்து ஆற விடவும். பிறகு தோல், எலும்பை நீக்கி விட்டு தசையை மட்டும் எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த சிக்கினுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி அரை மணிநேரம் வைக்கவும். காரட்டை துருவிக் கொள்ளவும். லீக்ஸ்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி வைத்துள்ள சிக்கினை போட்டு சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காரட் மற்றும் லீக்ஸினை உப்பு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். நூடுல்ஸை தயாராக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கி வரும் போது பச்சை மிளகாய், முட்டையை அடித்து ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வேக வைத்து தயாராக வைத்துள்ள நூடுல்ஸின் மேல் பொரித்த சிக்கன், வதக்கிய காரட், வறுத்த முட்டை வெங்காயக் கலவையைப் போட்டு நன்றாக பிரட்டிக் கலந்து கொள்ளவும்.
  10. பிரெட் மஞ்சூரியன் என்னென்ன தேவை? பிரெட் துண்டுகள் - 4 தக்காளி, வெங்காயம் – தலா 2 சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் - 2 மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன் பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் மைதா - ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு உப்பு, , எண்ணெய் - தேவைக்கேற்ப எப்படிச் செய்வது? சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள். தக்காளியை அரைத்து சாறெடுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்குங்கள். தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள். மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள்.
  11. பாலக் சீஸ் பால்ஸ் தேவையானவை: பாலக்கீரை - அரை கப் சீஸ் - 50 கிராம் பனீர் - 30 கிராம் கார்ன்ஃப்ளார் - 20 கிராம் மைதா மாவு - 10 கிராம் மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - 2 சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: பாலக்கீரையை எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சீஸ், பனீர், கார்ன்ஃப்ளார், மைதா மாவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், நறுக்கிய கீரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு, பிசைந்தவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கார்ன்ஃப்ளாரில் ஒரு புரட்டு புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். குறிப்பு: சீஸ் கியூப்களில் உப்பு சேர்ந்திருக்கும் என்பதால் நாம் செய்யப்போகிற கலவையில் உப்பு சேர்க்கத் தேவையில்லை. உருண்டை பிசையும்போது தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக பிசையவும். சீஸையும், பனீரையும் துருவிக்கொண்டால் பிசைய எளிதாக இருக்கும். பிசைந்தவுடனே எண்ணெயில் பொரித்துவிடவும். தாமதமானால் சீஸ் உருகிவிடும். முதலில் தீயை அதிகமாக்கியும், பிறகு குறைத்தும் சமைத்து, பால்ஸ் சிவந்ததும் எடுத்ததும் பரிமாறவும். மணத்தக்காளிக்கீரைத் துவையல் தேவையானவை: மணத்தக்காளிக்கீரை - ஒரு கப் குடமிளகாய் - ஒன்று (சிறியது) உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் புளி - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 3 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு செய்முறை: மணத்தக்காளிக்கீரையை ஆய்ந்து தண்ணீரில் கழுவி எடுத்து வைக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் உளுத்தம்பருப்பு சேர்த்து லேசாகச் சிவந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து, பிறகு கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் குடமிளகாய், புளி, உப்பு சேர்த்து அடுப்பைக் குறைத்து 3 நிமிடம் வதக்கி, இறுதியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். குறிப்பு: புளிப்பு, காரத்தை உங்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இந்தத் துவையலை கெட்டியாக அரைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தண்ணீர்விட்டுக் கரைத்தால் இட்லி, தோசைக்கு சட்னி போல மேட்ச் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. வெளிர் நிற கீரைகளாக பார்த்து வாங்கினால் கசப்பு இருக்காது. கரும்பச்சை நிற கீரைகள் சற்று கசப்பைத் தரும். சக்ரவர்த்திக்கீரைப் பொரியல் தேவையானவை: சக்ரவர்த்திக்கீரை - ஒரு கட்டு துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 5 கடுகு - ஒரு டீஸ்பூன் உளுந்து - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கீரையை ஒவ்வொரு இலையாக தண்ணீரில் கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும். பருப்பை குழையாமல் தனித்து தெரிவது போல வேகவைத்து எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து, அடுப்பைக் குறைத்து, மூடி போடாமல் வேகவிடவும். கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். குறிப்பு: கீரைகளின் ராஜா என்பதால் இக்கீரைக்கு ‘சக்ரவர்த்தி’ என்ற பெயர் வந்தது. மிகவும் சுவையாக இருக்கும். மசால் வடையிலும் இக்கீரையை சேர்க்கலாம்.
  12. இஞ்சி குழம்பு வயிற்று கோளாறுகளுக்கு இந்த் இஞ்சி குழப்பை வாரம் ஒருமுறை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு - 2 ஸ்பூன் கடலை பருப்பு - 2 ஸ்பூன் சாம்பார் பொடி - 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 3 புளி - சிறிதளவு பூண்டு - 20 பல் இஞ்சி - 25 கிராம் வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு செய்முறை : * முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். * புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும். * கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். * அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். * அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும். * நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். * நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார். * இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.
  13. கீரை - அவல் உப்புமா தேவையானவை: முருங்கைக்கீரை - ஒரு கப் சிவப்பு அவல் (கெட்டி அவல்) - ஒரு கப் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் - அரை மூடி கொத்தமல்லித்தழை - சிறிது கறிவேப்பிலை - சிறிது காய்ந்த மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - ஒன்று கடுகு - ஒரு டீஸ்பூன் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து லேசாக தண்ணீர் தெளித்து குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிட்டு எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். அவலை 20 நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம் நிறம் மாறியதும், வேகவைத்த முருங்கைக்கீரையை அந்தத் தண்ணீருடனேயே சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும். ஊறிய அவலை தண்ணீரை வடித்துவிட்டு இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் புரட்டி மூடி போட்டு அடுப்பைக் குறைத்து ஐந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையைச் சேர்த்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும். குறிப்பு: சிறுகீரை, முளைக்கீரை பயன்படுத்தி செய்யும்போது வெங்காயத்துடன் வதக்கியே செய்யலாம். முருங்கைக் கீரை வேக நேரமாகும் என்பதால் குக்கரில் வேகவிட்டால் விரைவில் செய்யலாம். ரத்த சோகைக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்து. மேத்தி பனீர் புர்ஜி தேவையானவை: வெந்தயக்கீரை - ஒரு கப் பனீர் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 முந்திரி - 10 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் சோம்புத்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பனீரை நீளமாக இருக்கும் பெரிய கண் துருவியில் துருவிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். முந்திரியை பேஸ்ட்டாக மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம், தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பச்சை வாசனை போன பிறகு கீரையையும் சேர்த்து வதக்கவும். பிறகு சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கீரை வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கீரை வெந்ததும் முந்திரி பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இறுதியாக பனீர் துருவலை சேர்த்து கரண்டியால் மெதுவாக ஒரு புரட்டுப் புரட்டவும். 2 டீஸ்பூன் நெய்விட்டு கொத்தமல்லித்தழை தூவி நல்ல கிரேவி பதத்தில் இறக்கவும். குறிப்பு: இது சப்பாத்தி மற்றும் தேங்காய்ப்பால் சாதத்துக்கு மேட்ச் ஆகும். பாலக்கீரை மற்றும் சண்டிக்கீரையிலும் இதுபோல் செய்யலாம். பனீரை அதிகமாக வதக்கினால் உடைந்து கரைந்து போகும். ஏற்கெனவே நாம் அதை துருவிதான் உபயோகப்படுத்துகிறோம் என்பதால் கவனம் தேவை. கீரை கபாப் தேவையானவை: முளைக்கீரை - ஒரு கப் அமெரிக்கன் கார்ன் - 100 கிராம் (வேக வைக்காதது) உருளைக்கிழங்கு - 2 பூண்டு - 5 பல் இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 2 பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று சீரகத்தூள் - 2 சிட்டிகை சோம்புத்தூள் - 2 சிட்டிகை பிரெட்தூள் - 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: கீரை, பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை நன்கு வேகவைக்கவும். அமெரிக்கன் கார்னை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய்ச் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், கீரை, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, இதனுடன் சோம்புத்தூள், சீரகத்தூள், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, அமெரிக்கன் கார்ன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும். கலவையை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி பிரெட்தூள், பனீர் துருவல் சேர்த்துப் பிசைந்து, படத்தில் உள்ளது போல் நீளவாட்டில் உருட்டி, சோள மாவில் உருண்டைகள் அனைத்தையும் புரட்டி எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் உருண்டைகளை சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். டொமேடா சாஸுடன் பரிமாறவும். குறிப்பு: இந்தக் கீரை கபாப், பாலக்கீரையிலும் செய்யலாம்.
  14. ஈஸி ப்ரெட் பீஸ் மசாலா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : ப்ரெட் - 6 பச்சை பட்டாணி - 250 கிராம் தக்காளி - 250 கிராம் பெரிய வெங்காயம் - 250 கிராம் பச்சை மிளகாய் - 6 எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி உப்பு - தேவையான அளவு நெய் - 2 தேக்கரண்டி கசகசா - ஒரு மேசைக்கரண்டி ஏலக்காய் - 2 கிராம்பு - 2 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 6 பல் செய்முறை : வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும். கசகசா, ஏலம், கிராம்பு, இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்து வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி குழைவாக வதங்கியதும் பட்டாணி, அரைத்த மசாலா விழுது மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி வைக்கவும். அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துவிடவும். ஒரு ப்ரெட்டின் மீது இந்த கலவையை வைத்து அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லித் தழை (அ) புதினா இலைகளை தூவி வட்டமாக நறுக்கிய வெங்காயத்தை வைத்து மேலே மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும். சுவையான ப்ரெட் பீஸ் மசாலா ரெடி
  15. நண்டு ரசம் ரசப்பொடிக்குத் தேவையானவை: மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 மல்லி (தனியா) - 3 டீஸ்பூன் பூண்டு - 4 பல் சின்னவெங்காயம் - 2 கறிவேப்பிலை - சிறிது செய்முறை: இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) ஆகியவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். பிறகு நன்றாக ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் ரசப்பொடி ரெடி. ரசத்துக்கு தேவையான பொருட்கள்: நண்டு - ஒரு கிலோ தக்காளி - 3 (அரைக்கவும்) கறிவேப்பிலை - சிறிது மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் சோம்பு - கால் டீஸ்பூன் வெங்காய வடகம் - 2 நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல் - கால் கப் தண்ணீர் - 4 கப் கொத்தமல்லித்தழை (நறுக்கவும்) - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து, சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அடிகனமான மற்றொரு வாணலியில் நல்லெண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும். இத்துடன் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் வெங்காய வடகம் சேர்த்துத் தாளிக்கவும். தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு புளிக்கரைசல், வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். உப்பு, காரம், புளிப்பு சரி பார்த்து தீயை மிதமாக்கவும். ரசம் நுரைகூடி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம். சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும். ரசத்தை சாப்பிடும்போது அதில் ஊறிய நண்டைச் சுவைக்க அருமையாக இருக்கும்.
  16. பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப் என்னென்ன தேவை? நறுக்கிய காளான் 20, காய்கறி வேக வைத்த தண்ணீர் 2 கப், மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் 1 கப், பூண்டு 6 பல், பொடியாக நறுக்கிய செலரி கால் கப், உப்பு தேவைக்கு, மிளகுத்தூள் சிறிது, சில்லி சாஸ் கால் டீஸ்பூன், சோயா சாஸ் 4 துளிகள், கறிவேப்பிலை சிறிது, வறுத்த முந்திரி 4, எண்ணெய் தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் சூடாக்கி, காளான், பேபி கார்ன் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சோயா சாஸ், சில்லி சாஸ், கறிவேப்பிலை சேர்க்கவும். கொதித்ததும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். செலரி இலைகள் மற்றும் வறுத்த முந்திரி தூவிப் பரிமாறவும்.
  17. சாக்லேட் ரெசிப்பி சாக்லேட்-பனீர் மோதக் தேவையானவை: ஃப்ரெஷ் பனீர் - 250 கிராம் பொடித்த சர்க்கரை - 250 கிராம் பால் பவுடர் - 250 கிராம் குக்கிங் சாக்லேட் - அரை கப் துருவிய தேங்காய் - கால் கப் நெய் - 3 டேபிள்ஸ்பூன் செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் உதிர்த்த பனீர், பொடித்த சர்க்கரை, பால் பவுடர் சேர்த்துக் கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கி மூடிவைக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைச் சேர்த்து, உருகியதும் துருவிய தேங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும். அதே சூட்டில் சாக்லேட்டை வாணலியில் சேர்த்துக் கிளறவும். வாணலியின் சூட்டில் சாக்லேட் உருகிவிடும். ஆறவைக்கவும். மோதகம் அச்சில் சிறிதளவு நெய்யைத் தடவி, அல்வா பதத்தில் இருக்கும் பனீரை அச்சில் வைத்து, அதன் மேல் சாக்லேட் கலவையை வைத்து மீண்டும், அதன் மேல் பனீர் கலவையை வைத்து மூடி, அச்சிலிருந்து மெதுவாக மோதகத்தை எடுத்தால்... சாக்லேட் பனீர் மோதக் தயார். கொழுக்கட்டை மாவில்கூட இதே சாக்லேட் பூரணத்தை வைத்து, சாக்லேட் கொழுக்கட்டை செய்யலாம். சாக்லேட் கேரட் அல்வா தேவையானவை: கேரட் - 4 (தோல் நீக்கித் துருவியது) கோகோ பவுடர் - ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் - ஒன்றரை கப் பால் - 2 கப் நெய் - 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய முந்திரி, பாதாம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டுச் சூடானதும் முந்திரி, பாதாமை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் கேரட்டைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் பால் சேர்த்து கேரட்டை வேகவிடவும். கேரட் வெந்த பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளற, கலவை அல்வா பதத்துக்கு வரும். பின்னர் கோகோ பவுடர் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறி, அதனுடன் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம் சேர்த்துக் கிளறினால் சாக்லேட் கேரட் அல்வா ரெடி. சாக்லேட் டோனட்ஸ் தேவையானவை: மைதா மாவு - ஒரு கப் பொடித்த சர்க்கரை - அரை கப் டார்க் சாக்லேட், வொயிட் சாக்லேட் - தலா 100 கிராம் வெண்ணெய் - அரை கப் ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை காய்ச்சிய பால் - அரை முதல் ஒரு கப் வரை எண்ணெய் - தேவையான அளவு சாக்லேட் ஸ்பிரிகிள்ஸ், சாக்லேட் பால்ஸ் - அலங்கரிக்க செய்முறை: மிதமான சூட்டில் இருக்கும் ஒரு டேபிள்ஸ்பூன் சுடுநீரில் ஈஸ்டைச் சேர்த்துக் கலக்கவும். ஓர் அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, வெண்ணெய், ஈஸ்ட் கரைந்த தண்ணீர், உப்பு, லேசான சூட்டில் இருக்கும் பால் சேர்த்துக் கிளறி, அரை மணி நேரம் மூடிவைக்கவும். உப்பியிருக்கும் மாவை சப்பாத்தி பதத்துக்கு உருட்டி, டோனட் கட்டரில் வைத்து படத்தில் உள்ள வடிவத்துக்கு கட் செய்து கொள்ளவும். பிறகு, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதன் உள்ளே மற்றொரு பாத்திரத்தை வைத்து வொயிட் சாக்லேட்டைச் சேர்த்து கரையவிடவும். இதுதான் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்குவது. இதே போல டார்க் சாக்லேட்டையும் உருக்கி கொள்ளுங்கள். உருக்கிய சாக்லேட்டை பொரித்த டோனட்ஸ் மீது தடவி, அலங்கரிக்க கொடுத்தவற்றால் அலங்கரிக்கவும். குறிப்பு: டோனட் கட்டர் இல்லையென்றால் வட்ட வடிவ மூடியை உபயோகித்து மாவை கட் செய்யலாம். சாக்லேட் பான் கேக் தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப் கோகோ பவுடர் - கால் கப் வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - அரை கப் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் ஸ்ட்ராபெர்ரி - அலங்கரிக்க செய்முறை: ஒரு மிக்ஸிங் பவுலில் கோதுமை மாவு, உப்பு, எலுமிச்சைச் சாறு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர், சர்க்கரை அனைத்தையும் சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடானதும் வெண்ணெய் தடவி, மாவை கனமாக வார்த்து இருபுறமும் சுட்டு எடுத்து, சாக்லேட் சாஸை மேலே ஊற்றி, ஸ்ட்ராபெர்ரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். சாக்லேட் ட்ரஃபிள்ஸ் தேவையானவை: டார்க் சாக்லேட் - 250 கிராம் ஃப்ரெஷ் க்ரீம் - 200 கிராம் கோகோ பவுடர் - 200 கிராம் மிக்ஸ்டு டிரை ஃப்ரூட்ஸ் - அரை கப் வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் தேன் - 3 டேபிள்ஸ்பூன் சாக்லேட் ரைஸ் - அரை கப் செய்முறை: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதன் உள்ளே மற்றொரு பாத்திரத்தை வைத்து டார்க் சாக்லேட்டைச் சேர்த்து கரையவிடவும். இத்துடன் ஃப்ரெஷ் க்ரீம், கோகோ பவுடர், டிரை ஃப்ரூட்ஸ், வெண்ணெய், தேன் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு, வெளியே எடுத்து உருண்டை பிடிக்கவும். அதை சாக்லேட் ரைஸ் மீது உருட்டி எடுத்துப் பரிமாறவும். சாக்லேட் சாட்ஸ் தேவையானவை: சாக்லேட் பிஸ்கட் - 7 டார்க் சாக்லேட் - 150 கிராம் ஃப்ரெஷ் க்ரீம் - 150 மிலி கோகோ பவுடர் - 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன் சாக்கோ சிப்ஸ் - 2 டீஸ்பூன் ஸ்ட்ராபெர்ரி - 4 சாக்லேட் பேப்பர் ரோல் - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்துச் சூடானதும் டார்க் சாக்லேட், பாதி அளவு ஃப்ரெஷ் க்ரீம், சிறிதளவு பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர் சேர்த்து உருக்கி, கலவை எல்லாம் ஒன்றானதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். மீதம் இருக்கும் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் பொடித்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலந்து அடித்துக்கொண்டு, திக்கான பதத்துக்கு வந்ததும் ஜிப்லாக் கவரில் போட்டு, 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும் கிளாஸில் முதலில் சாக்லேட் பிஸ்கட்களை உடைத்துப்போட்டுக்கொள்ளவும். இதன்மேல் உருகிய டார்க் சாக்லேட் கலவையை ஊற்றி(கெட்டியாகாமல் ஊற்றும் பதத்தில்தான் இருக்கும்), அதன் மேல் ஃப்ரெஷ் க்ரீம் - சர்க்கரைக் கலவையை வைத்து, மீண்டும் பிஸ்கட் வைக்கவும். இப்படி கிளாஸ் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு பிஸ்கட், சாக்லெட், ஃப்ரெஷ் க்ரீம் கலவையை மாற்றி மாற்றி வைக்கவும். இதன் மேல் ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் பேப்பர் ரோல், சாக்லேட் சிப்ஸ் வைத்து அலங்கரிக்கவும். சாக்லேட் சந்தேஷ் தேவையானவை: துருவிய ஃப்ரெஷ் பனீர் - ஒரு கப் கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - முக்கால் கப் பாதாம் - 10, 15 வெள்ளை சாக்லேட் - ஒரு டேபிள்ஸ்பூன் நெய் - சிறிதளவு செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்துச் சூடானதும் பனீர், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். சர்க்கரை உருக உருக, கலவை அல்வா பதத்துக்கு வரும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்தால், பர்ஃபி பதத்துக்கு வரும். பர்ஃபி பதம் வந்த கலவையை, நெய் தடவிய ஒரு பிளேட்டில் சேர்த்து, விரும்பிய வடிவில் கட் செய்யவும். இதன் மேல் உருக்கிய வெள்ளை சாக்லேட்டால் அலங்கரித்து, பாதாம் வைத்துப் பரிமாறவும். சாக்லேட் ஆப்பிள் ஸ்மூத்தி தேவையானவை: ஆப்பிள் - ஒன்று சாக்கோ சிப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் காய்ச்சி குளிர்ந்த பால் - 2 கப் பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: ஆப்பிளை தோல் நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்யவும். பாதாமை வெதுவெதுப்பான சுடுநீரில் ஊறவைத்து தோல் நீக்கவும். மிக்ஸியில் ஆப்பிள், சாக்கோ சிப்ஸ், பாதாம் அனைத்தையும் சேர்த்து அடிக்கவும். இத்துடன் காய்ச்சிய குளிர்ந்த பால் சேர்த்து மீண்டும் அடித்து, ஜில்லென்று பரிமாறவும். சாக்லேட் தின்வீல்ஸ் தேவையானவை: டைஜஸ்டிவ் பிஸ்கட் (டெசிகேட்டட் கோகனட்) - 30 உலர்ந்த தேங்காய்த்தூள் - அரை கப் கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் உருகிய வொயிட் சாக்லெட் - அரை கப் அலுமினியம் ஃபாயில் பேப்பர் - தேவையான அளவு செய்முறை: பிஸ்கட்டை உடைத்து மிக்ஸியில் பவுடராக அரைத்துக்கொள்ளவும். இதில் கோகோ பவுடர், கண்டன்ஸ்டு மில்க், உருகிய வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்த்தூள், உருக்கிய வெள்ளை சாக்லேட் சேர்த்துக் கலந்து வைக்கவும். இனி, பிசைந்து வைத்திருக்கும் மாவை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் வைத்து, அதன் மீது தேங்காய்த்தூள் கலவையை வைத்து இறுக்கமாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு படத்தில் காட்டியிருப்பது போல வட்டமான துண்டுகளாக கட் செய்து ஜில்லென்று பரிமாறவும். சாக்லேட் சமோசா தேவையானவை: மைதா மாவு - ஒரு கப் துருவிய சாக்லேட் - அரை கப் சாக்லேட் சிரப் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை பொடியாக நறுக்கிய மிக்ஸ்டு நட்ஸ் - அரை கப் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: மைதா மாவில் உப்பு, சிறிதளவு எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் நட்ஸ், துருவிய சாக்லேட் கலந்து தனியாக வைக்கவும். பிசைந்த மைதா மாவை முக்கோண வடிவில் செய்து, அதன் உள்ளே சாக்லேட் கலவை வைத்து, நன்றாக மூடி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். அந்த சமோசாவில் சாக்லேட் சிரப் ஊற்றி அலங்கரித்துப் பரிமாறவும். குறிப்பு: மாவைச் சரியாக மூடவில்லை என்றால் எண்ணெயின் சூட்டில் சாக்லேட் உருகி வெளியில் வந்துவிடும். அதனால், சாக்லேட் பூரணத்தை உள்ளே வைத்து மாவால் நன்றாக அடைத்துவிடுவது முக்கியம்.
  18. மட்டன் 65 தேவையானவை: போன்லெஸ் மட்டன் - 250 கிராம் கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன் சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் (அல்லது) வினிகர் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா, குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்). கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும் (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்). அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், ஆறிய மட்டன் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டில் தோய்த்து எடுத்து, பொரித்து எடுக்கவும். மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும்வரை பொரித்தால் போதும். வெங்காய ஸ்லைஸ்/லெமன் ஸ்லைஸ்களுடன் பரிமாறவும். குறிப்பு: நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும். காயாத எண்ணெயில் பொரித்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும். அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும், மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது என்பதை நினைவில்கொள்ளவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.