Jump to content

Siva Sinnapodi

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    14
  • Joined

  • Last visited

Recent Profile Visitors

1746 profile views

Siva Sinnapodi's Achievements

Rookie

Rookie (2/14)

  • Reacting Well Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done

Recent Badges

22

Reputation

  1. வல்லரசு நாடான பிரான்சினது பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை 304,000. பிரான்சுடன் ஒப்பிடும்போது சுண்டக்காய் நாடான சிறீலங்காவின் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை 346700. ஜெர்மனி 184,000 பிரித்தானியா 149,000 இஸ்ரேல் 178,000 ஜப்பான் 261,000 உலகின் செல்வந்த நாடுகள் பாதுகாப்பு செலவினத்தைக் குறைத்து பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையையும் மட்டுப்படுத்தி வைத்திருக்கும்போது வங்குரோத்து நிலையடைந்துள்ள கடன்கார நாடான சிறீலங்கா அதிகளவு படையினரை வைத்திருப்பதும் பாதுகாப்புக்கு அதிகம் நிதி ஒதுக்குவதும் ஏன்? இலங்கையின் பொருளாதார நெருக்கடியை உண்மையிலேயே தீர்க்க வேண்டுமானால்நாட்டை இராணுமயமாக்கும் முயற்சி முற்றுமுழுதாகக் கைவிடப்பட வேண்டும்
  2. யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதை வரவேற்று மகிழும் இந்தி(ய)விசுவாசிகள், இப்போது பிரெஞ்சு, டொச்(ஜேர்மன்) கற்பிக்கப்படுவதை யாரும் கண்டிக்கவில்லை என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.“எங்கோ தொலைவில் இருக்கும் அந்திய மொழியைக் கற்கலாம், எங்கள் அயலில் இருக்கும் இந்தியை கற்கக் கூடாதா” என்றும் இவர்கள் கேட்கிறார்கள்? மொழியைக் கற்பது என்பது வாழ்வியல் சார்ந்தது.மொழியைக் கற்பிக்க வைப்பது என்பது கலாச்சார ஆக்கிரமிப்பின் அடையாளம் சார்ந்தது. மேற்கு ஐரோப்பாவிலே அதிக மக்களால் பேசப்படுகிற மொழி டொச்.(9 கோடி 70 இலட்சம் பேர்) அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பிரெஞ்சு(7கோடியே 15இலட்சம் பேர்) முன்றாம் இடத்தில் இத்தாலி உள்ளது.(6கோடி 50 இலட்சம்) நான்காம் இடத்தில்ஆங்கிலம்உள்ளது.(6கோடி 30இலட்சம் பேர்) இவை 2022 ‌ஜூன் மாத நிலவரம். மேற்கு ஐரோப்பாவிலே அதிக நாடுகளில் பேசப்படும் மொழியாக முதலிடத்தில் பிரெஞ்சு இருக்கிறது.(பிரான்ஸ் -பெல்ஜியம் -சுவிஸ் -லுசேம்பேர்க் -இத்தாலியின் வடபகுதி-ஸ்பெனின் பாஸ்க் பகுதி.)அடுத்து டொச்.(ஜெர்மனி -ஓஸ்ரியா -சுவிஸ்-பெல்ஜியம்) ஆங்கிலம் மூன்றம் இடத்தில் உள்ளது(ஐக்கிய இராட்ச்சியம் -அயர்லாந்து). பிரான்சிலும் ஜெர்மனியிலும் சுவீசிலும் இத்தாலியிலும் பெல்ஜியத்திலும் ஏறக்குறைய 4 இலட்சம் இலங்கைத்தமிழர்கள் வாழ்கிறார்கள்.இந்த நாடுகளில் வாழும் ஏறக்குறைய ஒரு இலட்சம் தமிழ் பிள்ளைகள் பிரெஞ்சு, டொச் ஆங்கிலம் தமிழ் ஆகிய 4 மொழிகளில் தேர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறர்கள்.ஏறக்குறைய 5ஆயிரம் பிள்ளைகள் அதி உயர்கல்வி பட்டப்படிப்புகளை முடித்திருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த 5 நாடுகளிலும் மருத்துவர்களாக விஞ்ஞானிகளாகப் பொறியிலாளர்களாக உலக பெரு வணிக நிறுவனங்களில் உயரதிகாரிகளாக, காவல்துறை இராணுவம் விமானப்படை கடற்படைஅதிகாரிகளாக இருக்கிறர்கள்.இங்கே இவர்கள் மீதுஅகதிகள் தமிழர்கள் என்று எந்தப் பாரபட்சமும் காட்டப்படவில்லை. ஆனால் இந்தியாவிலே நிலைமை என்ன ? 50 வருடங்களாக அங்கே எங்கள் மக்கள் அகதிகளாகத்தான் இன்னும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.அங்கே இலங்கை தமிழ் அதிகளின் குழந்தைகள் உயர் கல்வி கற்பதற்கு தடை, அதை மீறிக் கற்றாலும் வேலை வாய்ப்பு பெற முடியாது.(யாரும் வரதராசப் பெருமாளின் மகள் விமானியாக வர முடிந்தது தானே என்று சொல்ல வேண்டாம்.)இங்கே பிரான்சிலே தொடரூந்துகளிலே திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்புடன் எழுதப்பட்டிருக்கிறது.ஆனால் வட இந்தியாவிவே திருவள்ளுவருக்கு சிலை வைக்க முடியாத நிலை தானே இருக்கிறது.இங்கே ஐரோப்பாவில் 5 முதல் 8 வருடங்கள் இருந்து இந்த நாட்டு மொழிகளைக் கற்றுத் தேறினால் குடியுரிமை பெறலாம். இந்தியயை கற்றால் இந்திய குடியுரிமை கொடுப்பார்களா?நாங்கள் எந்தவொரு மொழிக்குமோ அந்த மொழியைக் கற்பதற்குமோ எதிரானவர்கள் அல்ல.எங்கள் மொழியைச் சிறுமைப்படுத்தி எங்கள் கலாச்சர அடையாளங்களை அழிக்க முற்படும் ஆக்கிரமிப்பையே நாங்கள் எதிர்க்கிறோம். https://www.facebook.com/photo.php?fbid=6042967482385408&set=a.132576320091250&type=3&notif_id=1661323997248453&notif_t=feedback_reaction_generic&ref=notif
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.