Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8223
 • Joined

 • Days Won

  37

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. ஆண்களை வளர்க்கும் தாய்மாரும் கூட ஆண்களின் இந்த மனோநிலைக்கு ஒரு காரணம் அண்ணா. கட்டமைப்பே இல்லாத வெளிநாடுகளில் வளர்ந்த தமிழ் பிள்ளைகளிடம் ஏன் இந்த மனோநிலை வருகிறது ??
 2. நான் குறிப்பிட்டது உடலமைப்பையோ அலகையோ அல்ல. பெண்களுக்கு மட்டும் இயற்கை கொடுத்த உபாதைகளைச் சொன்னேன். அத்தார் லண்டனை விட்டு எங்க போறது ??? இங்கையேதான்.
 3. சரியாகச் சொன்னீர்கள். இனிமேல் முழுப் பட்டினிதான் அவர்களுக்கு ஏன் பெண்களுக்கும் போக ஆசைதான். ஆனால் அந்தக் கேடுகெட்ட கடவுள் எங்களைப் பல சிக்கல்களுடன் படைச்சிட்டாரே
 4. எங்கள் ஊரவர்கள் தான் இவர்கள். அது அவையின் பிரச்சனை. ஏதோ உங்களையும் மாட்டுவண்டியில ஏறச் சொன்ன மாதிரி .. ............
 5. கோவின் இழப்பு பெரியது. யாழ் இணையத்துடன் முரண்பாடுகள் இருந்தாலும் தன்னை ஆளாக்கியது யாழ் இணையம் தான் என்று பல இடங்களில் கூறியுள்ளார். யாழ் இணையத்தின் ஊடாக அவருக்கு அறிமுகமான தமிழ்ப் பெடியன் ஒஸ்ரேலியாவிலிருந்து வந்த அன்றே கோவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவந்து "அண்ணை உங்களை உயிருடன் ஒருமுறைகூடப் பார்க்க முடியவில்லையே" என்று கலங்கி அழுததாக சுசீலா கூறினார். வாத்தியாரும் யாழ் இணையசார்பில் மலர்வளையம் வைத்ததையும் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.
 6. யோவ் குமாரசாமி! மூட்டை இல்லை என்று அப்பவே சொல்லியாச்சு எலி கூட இல்லாத சுத்தமான வீடு
 7. கூட்டிக் களிச்சுப் பார்த்தால் வீட்டை இலைகுழைகள் போட்டு குப்பையாக்கச் சொல்லுறியள்
 8. அதெல்லாம் குடும்ப இரகசியம். உப்பிடிப் பப்பிளிக்கில வச்சுக் கேட்கப்படாது உங்களிலும் பாக்கவோ ???? நீங்கள் சொல்லுறது உண்மைதான். உந்தச் சனத்தின்ர தொல்லை தாங்க முடியாமல் எழுதி முடிச்சது. அந்த டொக்டருக்கு என் கதை நல்லாப் பிடிக்கும். நான் என்ன செய்ய?? நானும் அதைத்தான் யோசிக்க நீங்களே சொல்லியாச்சு
 9. அதன்பின்னர் ஒருநாள் வைத்தியாரிடம் தொலைபேசியில் கதைப்பதற்கான நேரத்தை பதிவு செய்துவிட்டுக் காத்திருக்க அழைப்பு வருக்கிறது. அந்த வைத்தியர் மிக இயல்பாக என்னுடன் கதைப்பார். “உமக்கு என்ன பிரச்சனை? “எனக்கு கொஞ்ச நாட்களாக சரியான கடி” “சிறீலங்கா அல்லது இந்தியா போய் வந்தீரா? தலையெல்லாம் பேனோ?” “எனக்கு ஏன் பேன் வருது? அதோடை உந்தக் கோவிட்டுக்குள்ளை நான் ஏன் போகப்போறன் அங்கை எல்லாம்?” “பேன் இல்லை எண்டால் அப்ப எங்க கடி?” நான் 2019 கம்போடியா போனபோது ................................................. .......தொடங்கி எல்லாம் சொல்லி முடிச்சன். “உமக்கு ஏதும் ஒவ்வாமை இருக்கோ? “இல்லை” “இதுக்கு முதல் அதுக்கான டெஸ்ட் செய்தனீரே?” “எதுக்கும் ஒருக்கா அதையும் செய்து பார்ப்பம்.” “ஆனால் அவங்கள் வந்து போன பிறகு எனக்கு ஒரு கடியும் இல்லை.” “அப்ப என்னத்துக்கு எனக்கு அப்பொயின்ற்மென்ட் வச்சநீர்” “இவ்வளவு நாளும் ஏன் எனக்குக் கடி இருந்தது எண்டு தெரிய வேணுமெல்லோ” “இது வடிவாத் தெரியுதுதானே உம்மட நினைப்பு என்று. சிலநேரம் தற்காலிகமா ஏதாவது ஒவ்வாமை கூட உமக்கு வந்திருக்கலாம். உந்த சோப், வோசிங் பவுடர் இதுகளுக்கும் கடிக்கும். றால் நண்டு நல்லாச் சாப்பிடுறநீரோ?” “ஓம் அது நல்லாப் பிடிக்கும்” “சிலபேருக்கு அது கனக்கச் சாப்பிட்டாலும் கடிக்கும். “இரவில நித்திரை ஒழுங்கா வருதா? வேணுமெண்டா ஒரு கடிதம் தாறன். சைகாட்டிஸ்ற் ஒருவரைப் போய் பாருமன்.” “என்னைப் பயித்தியம் ஆக்கப் போறியளோ? எனக்கு நல்லா நித்திரை வருது. ஆளை விடுங்கோ” “நீரா வைத்தியத்துக்கு வந்திட்டு நீரே மருந்தையும் சொல்லுறீர். சரி அப்ப ஒரு மாதம் பாரும். கடிக்காட்டில் சரி. திரும்பவும் கடிக்கிறபோல இருந்தால் வாரும்.” அதோட எல்லாம் முடிஞ்சுது।
 10. அதெல்லாம் சோதிச்சுப் பாக்காமலா இருப்பம் அண்ணா. கம்மல்கள் எல்லாமே திருக்காணியோடுதான் இருக்கின்றன. இன்று இரவு சொல்லிவிடுகிறேன்.
 11. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று யாரும் சொன்னால் நன்றி என்று கடந்து போய்விடும் எனக்கு கடவுளர்களின் பெயர் சொன்னால் மட்டும் கோபம் வந்துவிடுகிறது. அவன் சொல்வதும் ஒருவகைத் திணிப்புத்தானே. எனக்கு மத வெறி இல்லை. ஆனாலும் இப்படியான விடயங்களை ஆமோதிக்கவும் முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர பலரும் உங்களையும் என்னையும் போலத் தான் யாயினி. ஓ நான் அதிகம் அந்தப் பக்கம் போகாததானால் கவனிக்கவில்லை. ஆனாலும் அந்தத் தாய் இறந்துவிட்டார் என்றவுடன் மனதில் ஏதோ செய்ததுதான். இந்தக் குளிரில் நீட்டி நிமிர்ந்து படுக்காது எப்படித்தான் தொடர்ந்து கதிரையில் இருக்கிறார்களோ என்று அவர்களைக் கடந்து செல்லும் போது எண்ணியிருக்கிறேன். கட்டாயம் தொடருமாக்கும் உந்த உதாரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
 12. என்ன செய்ய என தலைவிதி அது உது தானே கூடாது இது வேறு அண்ணா ...... சீச்சீ அவ்வளவு பெருந்தன்மை எல்லாம் எனக்கு இல்லை. அண்ணா
 13. நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் போகும்போதோ வரும்போதோ சட்டை செய்யவில்லை. அவன் நடந்து வரும்போது ஒரு நளினம் இருக்கும். இவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளனாகத்தான் இருப்பான் என நான் நம்பினேன். அடுத்த வாரம் என்னை நோக்கி வந்து நமஸ்தே கிறிஷ்ணா என்றபடி ஒரு தாளை நீட்டினான். நான் வேண்டுமென்றே வணக்கம் என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் நிற்க நான் அந்தத் தாளை விரித்தேன். அது கவுன்சில் வீடற்றவர்களுக்கு வாராவாரம் கொடுக்கும் உதவித் தொகைக்கானது. ஆனால் அதைக் கொண்டு வருபவர் தன் அடையாள அட்டையைக் காட்டினால்த்தான் நாம் பயணம் கொடுக்கலாம். ஏனெனில் வேறு ஒருவரினதை எடுத்துக்கொண்டு வந்து மற்றவர்கள் பணமாக்காதிருக்க அப்படியான முறையை வைத்திருந்தனர். “உனது ஐடியைத் தருகிறாயா?” “என்னிடம் ஐடி இல்லை, ஜோன் ஒன்றுமில்லாமல் எனக்குப் பணம் தருவான்” “யார் அது ஜோன்? அப்படி யாரும் இங்கு இல்லையே” “ இந்தக் கடையின் ஓனர் தான். உனக்குத் தெரியாதா?” எனக்குக் குழப்பமும் கோபமும் ஒன்றாக வர கொஞ்சம் பொறு என்றுவிட்டு எனது முதலாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தைக் கூற அவரும் வீடியோவில் அவனைப் பார்த்துவிட்டு “அவனுக்குக் கொடுங்கோ. அவன் காசை என் கடையில் தான் செலவழிக்கிறவன் என்று சொல்ல, யார் அந்த ஜோன் என்றேன். “ நான் தான். என்னை உந்த வெள்ளைச் சனங்கள் அந்தப் பெயரால்த்தான் அழைப்பார்கள்” என்று கூறி அவர் போனை வைக்க, தமிழராய் இருந்துகொண்டு உவருக்கு ஆங்கிலப் பேர் கேட்குது என மனதுள் கறுவினாலும் வெளியே சொல்லவில்லை. அதன்பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்லும்போது “நன்றி. கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்றான். “நான் கிரிஷ்ணரை வணங்குவதில்லை” என்றேன். அவன் எதுவும் சொல்லாது போய்விட்டான். அடுத்த வாரம் நான் வேலைக்குச் செல்லும்போது கால்மேல் கால் போட்டபடி கடையின் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தான். என்ன பிறப்பு இவன். இவனுக்குக் குளிர்வதே இல்லையா என எண்ணியபடி உள்ளே வந்தேன். சிறிது நேரத்தில் நான் என் அலுவல்களைப் பார்க்க அவன் கடைக்குள் வந்து அங்கும் இங்குமாக நடக்க எனக்கு எரிச்சல் அதிகரித்தது. எதையாவது களவெடுத்துக்கொண்டு போக எண்ணுகிறானோ என எண்ணியபடி அவன் எங்கு செல்கிறான் என என் அறையின் உள்ளே இருக்கும் கமராவின் ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் எதையும் எடுக்காது பொறுமையின்றி நடந்து திரிந்துவிட்டு என் பக்கமாக வந்தான். நீ அஞ்சலகத்தைத் திறந்துவிட்டாயா என்றபடி நிற்க, வா என்றபடி அவனின் தாளை வாங்கி அவனிடம் எதுவுமே கேட்காது பணத்தைக் கொடுத்தேன். மீண்டும் அவன் “கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூற “நன்றி உன்னை சிவா ஆசீர்வதிப்பார்” என்றேன். அவன் எதுவுமே கூறாமல் செல்ல என மனதில் எத்தனையோ கேள்விகள் எழுந்தது. அடுத்தடுத்த வாரங்களில் வரும்போது அவனைப் பார்த்ததும் காலை வணக்கம் சொல்ல, என்னை ஆச்சரியமாகப் பார்த்து தானும் சொன்னான். அன்று அவன் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை. ஏன் அவன் வரவில்லை என்று எண்ணியபடி ஆட்கள் வராத நேரத்தில் நான் வெளியே சென்று அவன் இருக்கிறானா என்று பார்த்தபோது அவனைக் காணவில்லை. கடையில் வேலை செய்தவர்களைக் கேட்க தமக்குத் தெரியாது என்றுவிட்டு அப்படித்தான் அவன் அடிக்கடி காணாமல் போவான் பின் வருவான் என்றனர். நானும் அதன் பின் அவனைப் பற்றி மறந்துவிட்டேன். ஒரு வாரத்தின் பின்னர் வந்தவன் இரண்டு காசோலைகளை என் முன்னே நீட்டினான். ஒவ்வொன்றும் 100 பவுண்கள் பெறுமதியானவை. அவனுக்குப் பணத்தை வழங்கிவிட்டு “எங்கே சென்றாய் உன்னைக் காணவில்லையே ஒரு வாரமாக என்றேன். தனக்கு மன அழுத்தம் கூடியதால் ஒருவாரம் வைத்தியசாலையில் இருந்தேன் என்றதும் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாது அவனை அனுப்பிவிட்டு மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் வேலைசெய்யும் கடையிலே சூடான உணவுப் பொருட்களும் உண்டு. நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு தேவை எனில் குளிரான உணவுகளை சூடாக்கிக் கொடுப்பார்கள். பிரியாணி சமோசா போன்றவற்றை அவன் சூடாக்கித் தரும்படி வாங்கி உண்பான். தேனீரும் கோப்பியுமாக அவன் பணம் அங்கேயே கரையும். ஆனால் ஒருநாள் கூட மலிந்த பியரைக் கூட அவன் வாங்குவதில்லை என அங்கு வேலை செய்பவர்கள் கூறுவார்கள். அன்று ஒரு மூன்று மணியிருக்கும். பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி முடிந்து மாணவர்கள் வருவதும் போவதுமாக இருக்க, நான் காலையில் அவனுக்குக் கொடுத்த 20 பவுண்டஸ் தாள்களைக் கொண்டுவந்து பத்துப் பவுண்டஸ் தாள்களைத் தருகிறாயா என்றான். நானும் கொடுத்துவிட்டு எனக்கு வாடிக்கையாளர்கள் வாராதாபடியால் அறையை விட்டு வெளியே வந்து வீதியைப் புதினம் பார்க்கச் சென்றேன். அங்கே கூட்டமாக ஒரு ஏழு பள்ளி மாணவர்கள் நிற்க இவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாளைக் கொடுத்துக்கொண்டிருந்தான். எனக்குப் பார்த்தவுடன் சுள் என்று கோபம் தலைக்கேறியது. கவுன்சில் அவனுக்குத் தரும் காசைச் சேமித்து வைத்துச் செலவழிக்காது இப்பிடி கொடுத்துக் கரைக்கிறானே என்று. ஏனெனில் அந்த வாரம் பணம் முடிந்தவுடன் எமது கடையில் கடன் சொல்லிவிட்டுத்தான் பொருட்களை வாங்குவான். ஆனாலும் அடுத்த நிமிடம் அவனின் செயலை எண்ணிய வியப்புத் தோன்றியது. எதுவும் இல்லாதவன். இருப்பவர்களே கொடுக்க யோசிக்கும் இந்தக் காலத்தில் தனக்கு என வைத்திருக்காமல் இவர்களுக்குக் கொடுக்கிறான் எனில் எத்தனை பெரிய மனது வேண்டும் என எண்ணியவுடனேயே எனக்குள் ஒரு கூச்சம் எழ நான் உள்ளே நகர்ந்தேன். அடுத்த வாரம் பணம் மாற்ற வருவதற்கு முன்னர் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். ... ........
 14. இப்ப நீங்கள் சொல்லத்தான் யோசித்தேன். மூட்டை கடிக்கிறது என்று எண்ணியவுடனேயே மெத்தையைத் தான் மூர்க்கமாக விறாண்டினேனே தவிர என உடலில் எந்தவித காயங்களும் இல்லை.
 15. சரியாய் கண்டுபிடித்து விட்டீர்கள். எனக்கு மூட்டை கடிக்காமல் விட்டிட்டுது. மனிசன் தான் 100 போச்சே எண்டு கடுப்பேத்திறார் மனிசன் துள்ளி விளையாடுற கொடுமையும் குறையேல்லைத்தான் நான் மூட்டைஇருப்பதாக நம்பியதில் தான் கடி சித்தெறும்பு என வீட்டுத் தோட்டத்தில இருக்குத்தான். ஆனால் கட்டிலுக்குமா வரும்.????
 16. வன்னியில் தமிழ் அகராதி உருவாக்கியதாக நான் அறியவில்லையே. ஆனால் இவர் போட்டுள்ள சொற்கள் பலவும் பயனுள்ளவையாகத்தானே இருக்கின்றன.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.