Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்வெளிநாட்டில் இருந்துகொண்டு சொந்த ஊரில் வீடு வாங்கினால் எந்தப் பயமும் இன்றி இருக்கலாம். நான் வேறு ஊரில் வாங்கியதுதான் பிரச்சனையே. இப்ப மூன்று ஆண்டுகளாக நிம்மதி இல்லா வாழ்வுதான். ஊரில் என்ன நடக்கிறதோ என்ற கவலை. இப்ப கமறா பார்ப்பதை நிறுத்தியதால் கொஞ்சம் நிம்மதி. உதுவும் நல்ல யோசனைதான். கன்றுகாலி நாட்டதுதான் இன்னும் பிரச்சனை. அது ஒன்றும்இல்லை என்றால் வீட்டைப் பூட்டிவிட்டு வந்துபோகலாம். எமது ஊரில் வீடு இருந்தாத்தான் அதுவும். இல்லை என்றால் உடைத்தும்விடுவார்கள்.
-
நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்எட்டு ரதி அக்கா வீட்டுக்குப் போகிறேன். அவரின் முகத்தைப் பார்த்தாலே கடுகு போட்டால் வெடிக்கும் போல இருக்கு. அவருக்கு என்ன பிரச்சனையோ என எண்ணியபடி அவருக்காகக் கொண்டுபோன Nescafe போத்தலையும் சொக்ளற் பிஸ்கற் அடங்கிய பையையும் நீட்டுகிறேன். அதன் பின்தான் இருங்கோ என்கிறார். “ரஜிதன் என்னவாம்” “அவர் எனக்கும் சேர்த்து தான் சமைக்கப் போறன் எண்டவர். நான் வேண்டாம் எண்டிட்டன்” “அவன் மூண்டு நேரமும் சாப்பிடுறதில்லை. ஒருநேரச் சாப்பாடுதான். “ஏனக்கா ஆள் வேலை செய்யிது தானே” “ஓ மாதம் 40 ஆயிரம்தான் குடுக்கிறாங்கள்” “சம்பளம் பத்தாட்டில் வேற வேலையும் செய்யப்போறதுதானே? வெளிநாட்டில ஓராள் இரண்டு மூன்று வேலைகள் கூடச் செய்கிறார்கள்” “ஆளை வீட்டில இருத்துற முடிவில இருக்கிறியளோ” “இன்னும் நான் முடிவு செய்யேல்லை அக்கா. எதுக்கும் ஒரு கிழமை பாக்கிறன். கட்டியிருந்த கொடியைக் கூடக் காணேல்லை” “முந்தி இருந்ததுகள் அறுத்துக்கொண்டு போட்டுதுகளே? “ஆர் அறுத்தது எண்டு தெரியேல்லை” “ஏன் நீங்கள் கமராவில பாக்க ஏலாதே” இந்த நாள் நடந்தது எண்டால் சுத்திப் பார்க்கலாம். எப்ப அறுத்தவை எண்டு தெரியாமல் உந்த நயிலோன் கயிறுக்காக இருந்து இரண்டு மாதக் கமராவைப் பார்க்க ஏலுமே. மாமரத்தில கட்டியிருந்த ஊஞ்சால் கயிறும் இல்லை” “கள்ளச் சனங்கள். நாங்கள் போய் பாற்கேக்குள்ளையும் கயிறு இருக்கேல்லை” “அந்தப் பெடியும் விஷயம் தெரியாமல் கமறாவுக்குப் போடுற வயரை எடுத்துக் கொடி கட்டி வச்சிருக்கு” “அவன் பாவம். அவனுக்குத் தெரியாதுதானே, நீங்கள் எல்லாத்தையும் வடிவாச் சொல்லிக் குடுத்தால் அப்பிடியே செய்வன். அவனுக்கொரு எலெற்றிக் கேற்றில் வாங்கிக் குடுங்கோ. அவன் இப்ப வச்சிருக்கிறது நான் குடுத்தது” “நான் நாளை வரேக்குள்ள உரும்பிராயில் உள்ள கடையில் வாங்கிவந்து குடுக்கிறன்” “சரி அக்கா நாளை வாறன்” என்றபடி என் வீட்டுக்குச் செல்கிறேன். சமையல் வாசனை வீதிவரை வருகிறது. அக்கா சாப்பிடுங்கோவன் என்கிறார். நான் முதலே எனக்குச் சாப்பாடு வேண்டாம் எண்டு சொன்னான்தானே. இடியப்பத்தை எறியிறதோ? என்றுவிட்டு நான் என் கன்றுகளுடன் ஐக்கியமாகிவிடுகிறேன். திரும்ப வரும்போது “அக்கா நல்ல புல்லு இருக்கக்கா விளவில. என்ர மாட்டைக் கொண்டுவந்து கட்டட்டே அக்கா” “ஏற்கனவே 2 தென்னங்கன்றுகளைக் கடிச்சுவச்சிருக்கு. மாட்டை உள்ளுக்குள்ள கொண்டுவர ஏலாது” “அப்ப புல்லுகளை உப்பிடியே வளர விடப் போறியளோ” “இல்லை. ஆரும் இருந்தால் சொல்லும். மருந்தை வாங்கி அடிப்பம்” “இப்ப மருந்தை அடிக்க ஏலாது அக்கா. மழை நல்லாப் பெய்தால்தான் மருந்து வேரில சுவறும்” “சரி அப்ப உமக்கு ஆரையும் புல்லுப் பிடுங்குகிற ஆட்களைத் தெரிந்தால் கூட்டிவாரும். நானும் ரதி அக்காட்டை கேட்டுப் பாக்கிறன்” “இல்லை அக்கா நானே இரண்டு பேரைக் கூட்டிவாறன்” சரி என்று நான் கிணற்றைப் பார்க்கப் போனால் கிணற்றின் மேலே கட்டியிருந்த உழண்டியை மட்டுமல்லாமல் கயிற்றையும் வாளியையும் கூடக் கிணற்றடியில் காணவில்லை. நான் திரும்பி வீட்டின் வாசலைப் பார்க்க ரஜிதன் என்னைப் பார்த்தபடி நிற்பது தெரிய, “எங்க உழண்டியும் கயிறும் வாளியும்? கழற்றி வைத்திருக்கோ? “எனக்குத் தெரியாது அக்கா. நான் வரேக்குள்ள ஒண்டும் இருக்கேல்லை. இருந்த சனங்கள் கொண்டு போட்டுதுகள் போல” “இன்னும் என்னென்ன காணேல்லை எண்டு போகப் போகத்தான் தெரியும். எழிய சனங்கள். கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லை” அதன் பின்னர் அவரைப்பற்றி விசாரித்தபின் நான் என் ஓட்டோவை அழைக்கிறேன். ஓட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போது ஸ்கூட்டிக்கு பற்றி கொழுவ வேண்டும். யாரையாவது தெரியுமா என்று கேட்க, தானே பூட்டிவிடுவதாகக் கூறுகிறார். வீட்டுக்குச் சென்று பற்றியைக் கொழுவியபின் அவரே ஸ்டார்ட் செய்து பார்த்துவிட்டு நீங்கள் நாளை இதிலேயே போகலாம் என்கிறார். அவர் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல நான் 1000 ரூபாய்களைக் கொடுக்கிறேன். அடுத்தநாள் மச்சாளிடம் மிளகாய்த் தூளையும் கடையில் பலசரக்குப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபின் நான் சமைப்பதற்கு ஆயத்தங்களைச் செய்கிறேன். தேநீர் ஒன்று போட்டுக் குடிப்போம் என்று கேற்றிலை எடுத்துக் கழுவி நீரை ஊற்றும்போது பார்த்தால் எமது கேற்றில் போலவே இருக்கிறது. அட அக்காவும் எமது கேற்றில் போலவே வாங்கியிருக்கிறா என்று எண்ணியபடி தேனீரை ஊற்றிக்கொண்டு வெளியே வந்து அமர்கிறேன். கேற்றில் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். நாளைக்குக் கட்டாயம் வாங்கிக்கொண்டுவந்து அக்காட கேற்றிலைக் குடுத்திடவேணும் என எண்ணிக்கொள்கிறேன். நான் கடந்த தடவை வாங்கியது உள்ள கிடக்குத்தான். அது விலைகூடியது. அது நாம் வந்து இருக்கும்போது மட்டும் பாவிக்கலாம். இவர் பெடிபிள்ளைக்கு வேறு ஒன்றை வாங்கிக் குடுப்பம் எனவும் எண்ணிக்கொள்கிறேன். புலுனிக் கூட்டம் ஒன்று சத்தமிட்டபடி பறந்துவந்து கீழே எதையோ பொறுக்குகின்றன. தேங்காய்ப் பாலுக்காக தேங்காயை எடுத்துக்கொண்டு வந்தால் எப்படி உரிப்பது என யோசனை ஓடுகிறது. மனிசனை நித்திரையால் எழுப்பிக் கேட்க, அந்தப் பெடியன் வரும்வரை பொறு என்கிறார். ரஜிதன் வந்ததும் நான் சமைக்கப்போறன். தேங்காய் உரிக்கத்தான் உங்களைப் பார்த்துக்கொண்டு நிக்கிறன் என்றவுடன் உரித்துத் தந்துவிட்டு நான் சமைக்கட்டோ அக்கா என்கிறார். நானே சமைக்கிறேன் என்றுவிட்டு எமது அடுத்த அறையைத் திறந்து கடுகு சீரகம் போன்றன போட்டு வைக்கும் வட்டமான சில்வர் பாத்திரத்தை எடுத்துவந்து கழுவிவிட்டு துடைத்து எல்லாவற்றையும் போட்டு முடிய அவரின் திருவுபலகையை எடுத்து வைத்து தேங்காய் துருவி முடிக்கிறேன். எமக்காக வைத்திருந்த இரண்டாவது அறையுள் அனைத்துப் பொருட்களையும் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தோம். அந்த அறையைத் திறந்து வைத்திருந்த காஸ்சிலிண்டர், அடுப்பு என்பனவற்றைக் கொண்டுவந்து சமையலறையில் வைத்துப் பொருத்தி விடுங்கோ தம்பி என்றால் “அக்கா நான் மண்ணெண்ணை அடுப்புத்தான் பாவிக்கிறனான். இதுபற்றித் தெரியாது என்று சொல்கிறார். அன்ரிக்கு போன் செய்து எப்படிப் பூட்டுவது என்று கேட்டுப் பூட்டி முடிய, கடந்தமுறை நானும் கணவரும் சென்றிருந்தபோது வாங்கிவந்த கிறைண்டறை எடுத்து தேங்காய்ப் பூவைப் போட்டு அடிப்போம் என்று அறைக்குள் சென்று தேடுகிறேன். அதைக் காணவில்லை. ரஜிதனும் வந்து அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு இவ்வளவு சாமான்கள் வைச்சிருக்கிறியளோ என்கிறார். எல்லாம் வச்சிருக்கத்தானே வேணும். பக்கத்து வீட்டுக்கு கடன் வாங்கப் போறதோ என்றபடி தேட என்ன அக்கா தேடுகிறீர்கள் என்று கேட்க கிறைண்டர் வாங்கி வச்சனான் காணேல்லை என்கிறேன். என்னுடன் சேர்ந்து அவரும் தேடிவிட்டு “ஒரு இடமும் காணேல்லையே அக்கா. வடிவா யோசிச்சுப் பாருங்கோ. நீங்கள் வாங்கினதுதானோ என்கிறார். நாம் இந்தியாவில் இருந்து இரண்டை வாங்கிவந்து ஒன்றை அங்கு வைத்துவிட்டு மற்றதை லண்டனுக்குக் கொண்டுவந்ததாக நினைவுவர அதை அவருக்குச் சொல்கிறேன். சிலவேளை ஒண்டுதான் வாங்கினீர்களோ? அண்ணனிட்டை ஒருக்காகக் கேளுங்கோ என்கிறார். சரி இப்ப உதைத் தேடாமல் கையால பிழிவம் என்றபடி சமையலை ஆரம்பிக்கிறேன். சமைத்து முடிய அவரையும் உண்ணவைத்து உண்டுமுடிய நாளை புற்களைப் பிடுங்க இருவர் வருகிறார்கள் என்று சொல்லிவிட்டு அவைக்கு நாளை சமைத்து கொடுப்போம் அக்கா என்கிறார். என் னால் முடியாது என்று கூற தானே சமைக்கிறன் அக்கா என்கிறார். கடையில வாங்கிக் குடுப்பம் என்றதற்கு சாப்பாடு குடுக்காட்டில் அவை வரமாட்டினம் அக்கா என்கிறார். அப்ப அவையை வரவேண்டாம் எண்டு சொல்லுங்கோ. கடைசச் சாப்பாடு சாப்பிட உடன்படுறவையைக் கூப்பிடுவம் என்றவுடன், நான் இன்னொருக்காக கதைக்கிறான் என்றுவிட்டு அவர் வெளியே செல்ல, நான் எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு என் அறையைத் திறந்துகொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தபடி கணவருக்கு போன் செய்கிறேன். நாங்கள் இரண்டு கிறைண்டர்கள் தான் வாங்கி ஒன்றை உங்கே வைத்துவிட்டு மற்றதை இங்கு கொண்டுவந்தோம் என்கிறார் கணவர். மீண்டும் அறையைத் திறந்து மேசைக்குக் கீழே எல்லாம் பார்த்தால் கிரைண்டர் இல்லை. கணவருக்கு போன் செய்ய கணவர் ஒவ்வொன்றாகச் சொல்கிறார். “சாச்சபிள் டோச் லைட் இரண்டும் கிடக்கோ பார்” என்று கூறத் தேடிப் பார்த்தால் காணவில்லை. “ஐக்கியாவில் வாங்கிய கத்தி செட் இருக்கோ பார்” அதையும் காணேல்லை. “டாய்லெட் கதவைத் திற” அதுக்குள்ள மூன்று மண்வெட்டிகள், ஒரு புத்துவெட்டி, ஒரு அலவாங்கு, சுவருக்கு துளையிடும் கருவி எல்லாம் இருக்கோ பார். அவையெல்லாம் இருக்கு. நாங்கள் வடிவா டாய்லெட் திறப்பையும் பூட்டி எங்கள் அறையுள் வைத்ததனால் அதெல்லாம் அப்படியே இருக்கு என்கிறேன். “உந்த அறை திறந்து கிடந்ததா? “இல்லையே” அப்ப எப்பிடிக் காணாமல் போயிருக்கும் பொருட்கள் என்று கேட்க எனக்கு எப்பிடித் தெரியும் என்றுவிட்டு முன்பு இருந்தவர்களைக் கூட்டி வந்த எம்மூரவரிடம் விடயத்தைச் சொல்லி போலீசுக்குப் போகப்போகிறேன் என்கிறேன். நான் ஒருக்கா அவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். ஆனால் அவை கதவை எப்பிடி அக்கா திறந்து எடுக்க முடியும் என்கிறார். அந்த நேரம் பார்த்து ரதி அக்கா போன் செய்கிறார். நான் கவலையுடன் எமது பொருட்கள் களவு போனது பற்றிக் கூறுகிறேன். ஆர் உவையைக் கொண்டுவந்து இருத்தினாரோ அவரைத்தான் கேளுங்கோ. உவையை நம்பி இருக்க விட்டதுக்கு உங்களுக்கு இந்த வேலை செய்யிறதே என்கிறா. சரி அக்கா நான் பிறகு வாறன் என்றுவிட்டு ரஜிதன் வேலைக்குச் சென்றபின்னர் மீண்டும் எமது அறைகள் இரண்டிலும் தேடுகிறேன். எங்கள் படுக்கை அறையுள் ஒரு சிறிய பொருட்கள் வைக்கும் அலுமாரியும் உண்டு. அதைத் திறந்து பார்க்க அங்கு கிறைண்டரின் மூன்று அரைக்கும் கப்புகளில் ஒன்றுமட்டும் கிடக்கிறது.
-
நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்ஏழு கணவரை வரும்படி கேட்டால் மனிசன் கணக்குப் பார்த்திட்டு நீ மட்டும் போட்டுவா. நான் நெடுக லீவு எடுக்கேலாது என்றுவிட, எனக்கு மட்டும் ஏர் லங்காவில் டிக்கற் போடுகிறேன். நேரம் அதிகம் என்றாலும் 40 கிலோ கொண்டு போகலாம். அங்கு வருவதாக மச்சாளுக்கும் அன்ரிக்கும் மட்டும் சொல்கிறேன். ரதி அக்காவுக்கோ வீட்டில் இருக்கும் பெடிக்கோ எதுவும் சொல்லவில்லை. விடியக் காலை ஐந்து மணிக்கு இணுவிலில் போய் இறங்கி குளித்து மச்சாள் வீட்டில் சென்று உணவருந்திவிட்டு ஓட்டோவில் மச்சாளிடம் திறப்புகளை வாங்கிக்கொண்டு என் வீட்டுக்குச் செல்கிறேன். கேற் பூட்டாமல் சாத்தியிருக்க திறந்துகொண்டு ஓட்டோக்காரரையும் உள்ளே வரும்படி கூறிவிட்டு செல்கிறேன். வீட்டுத்திண்ணையில் இருவர் கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதில் எவர் வீட்டில் இருப்பவர்? அனேகமா இவராகத்தான் இருக்கும் என்று எண்ண, அக்கா நீங்கள் வீட்டுக்காற அக்காவா வாங்கோ என்று மற்றவர் என்னை எழுந்து வரவேற்கிறார். இவர் என் நண்பர் அஜந்தன் என்று அறிமுகம் செய்தும் வைக்கிறார். “இவர் வேலைவெட்டிக்குப் போறதில்லையோ” “நான் வேலைக்குப் போறதில்லை அக்கா. எட்டு மாடுகள் வளர்க்கிறன். அதோடையே நேரம் போயிடும்” “ஓ அப்பிடியே” ரஜிதன் – அவர்தான் என் வீட்டில் இருப்பவர், கதிரை ஒன்றைக் கொண்டுவந்து போட நான் ஓட்டோக்காரருக்கும் ஒரு கதிரை கொண்டு வாங்கோ என்கிறேன். ஒரு கதிரை தானக்கா இருக்கு என்கிறார். ஏன் நான் இரண்டு கதிரைகளை வெளியே வைத்துவிட்டுத்தானே சென்றேன் என்கிறேன். நான் இதிலேயே இருக்கிறேன் என்று திண்ணையில் அமர்கிறார் ஓட்டோக்காரர். அவர் எம்மூரவர். அவரின் ஓட்டோவில் தான் நாம் எப்போதும் திரிவது. கொஞ்சநேரம் வீட்டைப் பார்த்துவிட்டு அவருடனேயே திரும்பிப் போவதாக எண்ணம். ரஜிதன் தேநீர் போட்டுக்கொண்டு வருவதாகக் கூற வேண்டாம் என்கிறேன். பரவாயில்லை அக்கா குடியுங்கோ என்று என்வீட்டிலேயே என்னை உபசரிக்க, நான் சுற்றிவரப் பார்க்கிறேன். முன்பக்க வளவு சுத்தமாக இருக்க நான் என் பூங்கன்றுகள் மற்றும் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். மீண்டும் வரத் தேனீரைக் கொண்டுவந்து எல்லோருக்கும் தருகிறார். நீங்கள் வந்தது ரதி அன்ரிக்குத் தெரியுமோ என்கிறார். இன்னும் சொல்லவில்லை. போகும்போது அவவிடம் போய்விட்டுத்தான் போவேன் என்கிறேன். அவர் ஊற்றிய தேநீர் நன்றாக இருக்கிறது. ஓட்டோவை அனுப்பிவிடுங்கோவன் அக்கா என்கிறார். நான் ரதி அக்காவோட கதைச்சிட்டுப் போகபோறன். நாளை வாறன் என்கிறேன். நான் காலை ஆறரைக்கு வேலைக்குப் போய் 11 மணிக்கு வருவன். பிறகு 3 மணிக்குத் திரும்ப வேலை. 2.30 இக்கு போயிடுவன் என்கிறார். நீங்கள் உங்கள் அலுவலைப் பாருங்கோ. என்னட்டைத் திறப்பு இருக்கு. நான் என்பாட்டில வருவன் என்கிறேன். தனிய நிக்கப் பயம் இல்லையோ என்கிறார். என் வீட்டில் நிக்க என்ன பயம் என்றுவிட்டு தேநீர் கோப்பைக் கழுவ சமையலறைக்குச் செல்ல, என்னட்டைத் தாங்கோ அக்கா என்கிறார். நான் குடித்த கப்பை நானே கழுவிகொள்கிறேன் என்றபடி குசினுக்குள் செல்கிறேன். குசினி சுத்தமாக இருக்க மனம் நிம்மதியாகிறது. அதன் பின்னர் ரதி அக்காவிடம் சென்று அவருடன் பேசிவிட்டு நாளை வருவதாகக் கூற, பெடியன் என்ன மாதிரி என்கிறா. ஒரு அரை மணித்தியாலம் பாத்து முடிவு செய்ய ஏலாது தானே அக்கா என்றுவிட்டுக் கிளம்புகிறேன். நாம் லண்டன் வரும்போது மனிசன் ஸ்கூட்டியின் பற்றியைக் கழற்றிவிட்டு வந்தார். முன் வீட்டில் இரண்டு ஆண்கள் இருக்கின்றனர். அவர்களை பற்றியைப் பூட்டித் தரும்படி கேட்க, தமக்குத் தெரியாது என்கின்றனர். தாயார் முன்னால் வந்து ஓடுற வாகனம். அரைகுறையாய்ப் பூட்டி ஏதும் நடந்தாலும் வீண்பழி. எதுக்கும் மெக்கானிக் ஆரையன் கூப்பிட்டுப் பூட்டுங்கோ என்கிறா. எனது ஸ்கூட்டியின் மெக்கானிக் சுண்ணாகத்தில் இருக்கிறார். அவருக்குப் போன் செய்ய, தான் எலெக்சன் வேலையில் மும்மரமாக இருப்பதாகக் கூற, எந்தப் பார்ட்டிக்கு ஆதரவாக வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு “நான் சுயேட்சையா நிக்கிறன் அக்கா. அதனால வேறு யாரையும் கூப்பிடுங்கோ” என்கிறார். அடுத்தநாள் மீண்டும் ஓட்டோவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறேன். போகும் வழியில் மருதனார் மடத்தில் உள்ள கடையில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவை மீண்டும் மாலை 5 மணிக்குவரும்படி கூறிவிட்டு கேற்றைத் திறந்து மீண்டும் பூட்டால் பூட்டிக்கொண்டு வீட்டையும் திறந்து உள்ளே செல்கிறேன். சுவாமி அறை, மற்ற அறை எல்லாம் சுத்தமாகவே இருக்கு. எங்கள் அறையைத் திறக்கிறேன். அது பூட்டி இருந்தபடியால் கொஞ்சம் காற்றோட்டம் இன்றி இருக்க யன்னல்களைத் திறந்துவிட்டு கூட்டுகிறேன். கட்டில் விரிப்பை அலம்பி வெளியே காயவிடச் சென்றால் நாம் கட்டியிருந்த கயிற்றைக் காணவில்லை. ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டு 11.00 இக்கு பெடிப்பிள்ளை வருவார் தானே கேட்போம் என்றுவிட்டு அலுவல்களைப் பார்க்கிறேன். எமது இரண்டாவது அறையையும் திறந்து யன்னல்கள் எல்லாம் திறந்துவிட்டு மேலோட்டமாகப் பார்க்க எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கிறது. மீண்டும் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்று கன்றுகளைப் பார்க்க இரண்டு தென்னங்கன்றுகளை மாடு கடித்து மொட்டையாக்கிவிட்டிருக்கு. இரண்டு வாழைகள் குலையுடன் முறிந்துகிடக்கின்றன. பின்பக்கம் முழுதும் புற்கள் காடாய் வளர்ந்துபோய் கிடக்கின்றன. 11.30 மணி போல் பெடியன் வருகிறார். அக்கா என்ன சாப்பிடுறியள்? நானே சமைக்கிறன் என்கிறார். நான் வரும்போதே இடியப்பம் உமக்கும் சேர்த்து வாங்கி வந்தனான் என்கிறேன். நான் மத்தியானம் சோறுதான் சாப்பிடுறனான் என்கிறார். சரி நீர் உமக்கு மட்டும் சமையும். எனக்கு வேண்டாம் என்கிறேன். ”நாளைக்கு கட்டாயம் என்ர கையாலதான் நீங்கள் சாப்பிடவேணும்” “எனக்கு நான் சமைத்து சாப்பிடுவதுதான் விருப்பம்” “அக்கா நான் லீவு எடுத்துவிட்டு உங்களை எங்க வேணுமெண்டாலும் என்ர ஸ்கூட்டியில கூட்டிக்கொண்டு போறன்” “அதுக்கு அவசியமே இல்லை. என்னட்டையும் ஸ்கூட்டி இருக்கு” “அப்ப உங்கட ஸ்கூட்டியிலேயே போவம்” நான் மனிசனைத் தவிர வேறை யாருக்கும் ஸ்கூட்டியைக் குடுக்கமாட்டன். அதோடை எனக்கு ஒரிடமும் போகத் தெரியாது எண்டு நீர் எனக்கு ஊர் சுத்திக்காட்டப் போறீரோ? என்னைப் பற்றி உமக்குத் தெரியேல்லை” “இல்லை அக்கா நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கிறியள்.. அதுதான்” “அதுசரி பிலாமரத்துக்கும் மாமரத்துக்கும் இடையில கட்டியிருந்த கொடியைக் காணேல்லை. நான் பெட்சீற்றை அலம்பிப்போட்டுப் பார்த்தால் ஒண்டும் இல்லை” “எனக்கு அதைப்பற்றித் தெரியாது அக்கா. நான் அந்தக் கறாச்சுக்குள்ளதான் கொடி கட்டி காயப் போடுறன்” நான் கறாச்சுக்குள் போய் பார்க்கிறேன். இரு பக்கத் தூண்களிலும் வயர் கட்டியபடி இருக்கு. இந்த வயரை எங்கிருந்து எடுத்தீர் என்று கேட்க உதில் கொழுவி இருந்தது என்கிறார். என்னை ஒருக்காக கேட்டிருக்கலாமே. உது கமராவுக்குப் போடுற வயர். உதின்ர விலை தெரியுமே உமக்கு. அருமந்ததை வீணாக்கிப்போட்டீர். அப்பவும் உள்ளே கொண்டுபோய் வையுங்கோ எண்டு இந்த மனிசனுக்குச் சொன்னனான் என்கிறேன் கடுப்புடன். அவர் எதுவும் பேசாமல் அப்பால் செல்ல நான் சீற்றைக் காயவிட்டுவிட்டு உள்ளே வருகிறேன். வரும்போது பார்த்தால் மாமரத்தில் ஊஞ்சலையும் காணவில்லை. ஊஞ்சல் எங்கே என்று கேட்கத் தனக்குத் தெரியாது என்கிறார். முன்பு இருந்த சனங்கள் அதையும் அறுத்துக்கொண்டு போய்விட்டார்கள் போல என்று சொல்ல, இருக்கும் அக்கா என்கிறார். சரி தம்பி நீர் உம்மடை சமையல் அலுவலைப் பாரும் நான் ரதி அக்காவிடம் போட்டு வாறன் என்று சொல்லிவிட்டுக் கிளம்ப, அவருக்கு ஒரு போன் வருகிறது. “அக்கா வந்து நிக்கிறபடியால் நான் இண்டைக்கு வரேலாது. இப்ப நான் சமைக்கப்போறன் என்று அவர் சொல்வது எனக்குக் கேட்கிறது.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்உண்மையில் மனித உரிமை மீறல்தான். ஆனால் எந்தநேரமுமா பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பார்த்தபடியால் தானே அவர்களின் தில்லுமுல்லு தெரிந்தது. இல்லாததற்கு ஆசை கொள்வது மனித இயல்பு தானே அண்ணா. சட்டப்படி அவருக்கு வாடகை ஒப்பந்தம் எழுதவே இல்லையே . அதுவும் வீட்டுக்குள் அத்துமீறி நான் நுழையவே இல்லையே.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்வீடு நீங்களும் கட்டலாம். அதில ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் நீங்கள் போய் நிண்டு விலைகள் விசாரித்து நாட்கூலி கொடுத்துச் செய்வது இலாபம். ஆனால் அந்தப் பொறுமை உங்களுக்கு இருக்கவேண்டும். கொன்றாக் குடுக்கலாம். என்ன சில இலட்சங்கள் கூடக் கொடுக்க வேண்டும். அத்தோடு சீமெந்துக் கலவையை கலக்கும்போது நீங்கள் நின்று என்ன ரேசியோவில் போடுகிறார்கள் என்று கவனிக்கவேண்டும். மற்றும் முக்கியமான பொருட்கள் உங்கள் தெரிவாக இருக்கும்படி செய்தால் நல்ல வீடு கட்டலாம். இரண்டும் பெடிதான். நல்லா சூம் பண்ணிப் பார்த்தது. 😂- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்அதுவும் கனக்க நடக்கிதுதான். உண்மையில பாவம் செய்த சனங்கள் நாங்கள் தான்.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்ஆறு நாம் லண்டன் வந்து ஒரு வாரம் வரையில் அவர்கள் வீட்டில் இருக்க வரவில்லை. அவர்களைக் கூட்டிவந்தவரிடம் கேட்டால் அவர்கள் சுண்ணாகத்தில் சகோதரி வீட்டில் இருந்தார்களாம். அடுத்த கிழமை வருவார்கள் என்கிறார். வீட்டில் ஆட்கள் இருக்கவேண்டும் என்றுதானே வாடகைக்குக் குடுத்தது. இதென்னடா இவர்கள் என்கிறேன். எல்லாத்துக்கும் நுணுக்கம் பாக்காதை. அவர்கள் வருவார்கள்தானே என்று மனிசன் வக்காலத்து வாங்குகிறார். இரண்டு வாரங்கள் செல்ல எல்லோரும் பொருட்களையும் லாண்ட் மாஸ்டரில் கொண்டுவந்து வந்து இறங்குகிறார்கள். ஒரு ஓட்டோவும் நிற்க உங்கள் கணவர் ஓட்டோ ஓடுபவரோ என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, இல்லை. எமது தேவைக்காக வைத்திருக்கிறோம் என்கிறார். அதன்பின் ஒரு மாதம் எந்தப் பிரச்சனையும் இன்றிப் போகிறது. அதன்பின் ஒருவாரம் மீண்டும் ஒருவரையும் காணவில்லை. தொலைபேசியில் மகளை அழைத்தால் வெப்பம் காரணமாக விடுமுறையில் கண்டி, நுவரெலியா சென்றிருக்கிறார்களாம். நீ வாடகைக்குக் கொடுத்தால் அவர்கள் ஒரு இடமும் போகக் கூடாதா என்கிறார் கணவர். தாய் சுண்ணாகத்தில் ஒரு கடையில் வேலை செய்வதாகவும் மகளும் கணவனும் இல்லாதபடியால் இங்கு தனிய இருக்கப் பயந்து மீண்டும் தமக்கை வீட்டில் போய் இருக்கிறாராம். மகளும் கணவனும் வந்தபின் மீண்டும் என் வீட்டில் வந்து இருப்பார் என்கிறார் அவர்களை அழைத்து வந்தவர். மீண்டும் இரு வாரங்களில் வீட்டில் நடமாட்டம் தெரிகிறது. பின் ஒரு மாதத்தின் பின்னர் தாயும் மகனும் மட்டும் இருக்க மகளையும் கணவரையும் ஓட்டோவையும் காணவில்லை. மக்களுக்குப் போன் செய்தால் போன் போகவில்லை. அவர் என் இலக்கத்தை புளொக் செய்துவிட்டாரோ என எண்ணி அவரின் தொலைபேசி இலக்கத்தை மச்சாளிடம் கொடுத்து போன் செய்து பார்க்கும்படி சொல்கிறேன். அவர்கள் சிம்மை மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் மச்சாள். அவர்களைக் கூட்டி வந்தவருக்கு போன் செய்து தாயின் தொலைபேசி இலக்கத்தை வாங்கித் தரும்படி கேட்க அவவுக்கு தொலைபேசி இல்லையாம் என்கிறார். இரண்டு வாரங்களில் தாயையும் சின்ன மகனையும் கூடக் காணவில்லை. மீண்டும் கூட்டி வந்தவருக்கே போன் செய்து என்ன பிரச்சனை என்கிறேன். மருமகன் மகளுக்கு அடித்ததில் மாமியார் ஏசிவிட்டாராம். மருமகன் கோபித்துக்கொண்டு மனைவியைக் கூட்டிக்கொண்டு வேறு வீடு சென்றுவிட்டாராம் என்று கூற, என்னடா தலைவலி மீண்டும் என்று யோசனை அதிகரிக்கிறது. கடைசி வீடும் வளவும் மிச்சம் இருக்கும்தானே. கவலைப்படாதை என்று சிரிக்கிறார் மனிசன். ஊரிலிருந்து வந்து இப்ப நான்கு மாதங்கள்தான். உடனே திரும்ப போவது செலவு. நடப்பது நடக்கட்டும். கமராவைப் பார்க்காமல் இரு என்று கணவர் சொல்ல பல்லைக் கடித்துக்கொண்டு இரு வாரங்கள் இருக்கிறேன். சரி இன்று ஒருக்காப் பார்ப்போம் என்று போனில் கமராவைப் பார்த்தால் வீட்டின் முற்றத்தில் ஆறேழுபேர் நிற்கின்றனர். ஒரு ஓட்டோ, ஒரு சயிக்கிள், இரு ஸ்கூட்டிகள் என்பன நிற்கின்றன. என்னடா இது என்று கணவருக்கு போன் செய்தால் தான் பிசி. இப்ப கமராவைப் பார்க்க முடியாது என்கிறார். வீட்டின் கதவுகள் எல்லாம் திறந்திருக்கு. ஒரு ஓட்டோவும் நிக்குது. இருவர் ஆறேழு பலாப் பழங்களைக் கொண்டுவந்து ஓட்டோவில் வைக்கிறார். இன்னொருவர் இரண்டு உரைப் பைகளில் உரித்த தேங்காய்களைக் கொண்டுவந்து ஏற்றுகிறார். இருந்தாற்போல் தொலைபேசி அழைப்புக் கேட்க, வந்தவர்கள் யாரினதோ போன் என நான் நினைக்க, அம்மா உங்களுக்கு போன் என்று கத்தியபடி பொடியன் தாயிடம் போனைக் கொண்டுவந்து கொடுக்கிறார். கொஞ்சம் வயசானவர் போலிருந்த ஒருவர் “இந்த நல்ல வீட்டில இருக்க உங்களுக்கு வருத்துது” என்று கூறுகிறார். நல்ல கறிவேப்பிலை என்று மரத்தை மேலால் முறித்துக்கொண்டு ஒருவர் வர மற்றவர் ஒரு கட்டு வேப்பிலையை வெட்டிக்கொண்டு வந்து தன் மோட்டார் சயிக்கிளில் வைத்துக்கட்ட வீட்டின் மற்றப் பக்கத்தில் ஒரு ஐம்பது தேங்காய்களாவது உரித்த தென்னம் பொச்சுகள் குவிக்கப்பட்டிருக்கு. உடனே நான் வீடு எடுத்துத் தந்தவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறி அவர்களை இனி இருக்கவிட முடியாது. அவர்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லச் சொல்லுங்கள் என்கிறேன். ஒரு வாரத்தில் அவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல, கொஞ்சம் தள்ளி இருக்கும் ரதி அக்கா என்று சொன்னேன் தானே. அவர் போன் செய்கிறார். “என்ன நிவேதா உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எழும்பிவிட்டார்கள் போலிருக்கே” “எப்பிடித் தெரியும் அக்கா” “நான் உங்கள் வீட்டடியால் போகேக்குள்ள லாண்ட் மாஸ்டரில் சாமான்கள் ஏத்தினபடி போச்சினம்” “ஓமக்கா அது பெரிய பிரச்சனை. வீட்டில இருக்காமல் தேங்காய் பிலாக்காய் மட்டும் ஆய்ந்தால் .......... “அப்ப இனி ஆரை இருத்தப்போறியள்” “அதுதான் அக்கா என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. இரண்டு பேரிட்டைச் சொல்லியிருக்கிறன். நீங்களும் ஆரன் இருந்தால் சொல்லுங்கோ” “நான் ஆரையன் கேட்டுப் பாக்கிறன். திறப்பு இப்ப ஆரிட்டை இருக்கு? “அந்தச் சனத்தைக் கூட்டிவந்த எங்கடை ஊர் பெடியன் தான் மச்சாளிட்டைக் குடுத்துவிட்டிருக்கு” “நீங்கள் எப்ப வாறியள்? “இப்ப உடனே வேலையில லீவு சொல்லிவிட்டு வரமுடியாதக்கா. ஐந்து மாதத்துக்கு முன்னம்தானே வந்தது” “ஒரு இரண்டு மாதம் வேணுமென்டால் நான் அப்பப்ப எட்டிப் பாக்கிறன்.அதுக்குள்ள நீங்கள் வரப்பாருக்கோ. ஆரன் நல்லவை அம்பிட்டால் உங்களுக்குச் சொல்லுறன்” “மிக்க நன்றி அக்கா. அப்ப அந்தத் தம்பியை திறப்பைக் கொண்டுவந்து உங்களிடம் கொடுக்கச் சொல்லுறன்” எனக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி. தானே உதவுவதாகக் கூறுகிறார் என்கிறேன் மனிசனிடம். ஆரும் சும்மா வந்து மற்றவைக்கு உதவ முன்வரமாட்டினம். அதுவும் சிலோனில. ஏதோ திட்டத்தோடதான் ரதி அக்கா தான் பாக்கிறன் எண்டு சொல்லுறா என்கிறார் மனிசன். உங்களுக்கு எப்பவும் சந்தேகம்தான். யேர்மனியில இருக்கிற அவவின் சொந்தக்காரர் எல்லாம் நல்ல சனங்கள் தானே. அவ என்ன காணியைத் தன்ர பெயரில மாத்தி எழுதவா போறா? சும்மா எல்லாத்துக்கும் தடை சொல்லிக்கொண்டு. எங்களுக்கு வேறை வழி இல்லை இப்ப. பேசாமல் இருங்கோ என்கிறேன். ஏதோ நீயும் அவையும் பட்டபாடு என்று சொன்னதோடு அவர் எதுவும் கதைக்கவில்லை. அந்த எலெக்ரீசியன் தம்பியை திறப்பை மச்சாளிடம் வாங்கிவந்து கொடுக்கமுடியுமா என்று கேட்க, சம்மதிக்கிறார். மச்சாளிடம் ஒரு வெளிக் கதவுச் சாவியும் பட அறைச் சாவியையும் மட்டும் கொடுக்கும்படி கூறுகிறேன். அதன்பின் கமராவில் அப்பப்ப பார்ப்பதும் அக்காவுடன் வைபரில் கதைப்பதுவுமாகப் போகிறது. ஒருநாள் அக்காவின் கணவர் சென்று பார்த்துவிட்டு எல்லாக் கன்றுகளுக்கும் தண்ணீர் போகவில்லை என்கிறார். அடுத்த நாளே சொட்டுநீர் பாசனம் செய்தவருக்கு போன் செய்ய, தான் நாளை சென்று பார்க்கிறன் என்கிறார். அவர் வந்து பார்த்துவிட்டு என்னக்கா இது சில லைனை கழற்றி வீட்டிருக்கு. சிலதை பூட்டி வீட்டிருக்கு. ஆரும் சின்னப் பெடியள் வீட்டில இருந்தவையோ என்று கேட்கிறார். நான் ஓம் என்கிறேன். அவர்தான் கழட்டிப் பூட்டி விளையாடியிருக்கிறார். மீண்டும் அவர் இரண்டு மணிநேரம் நின்று எல்லாவற்றையும் சரி செய்கிறார். ஒரு வாரம் செல்ல ரதி அக்கா போன் செய்கிறார். “நிவேதா ஒரு எனக்குத் தெரிந்த பெடியன் இருக்கிறார். அவரைக் கேட்டனான். அவர் வீடு வந்து பாக்கிறன் எண்டவர்” “தனிப் பெடியன் எண்டா பிரச்சனை அக்கா. அந்தப் பெடியன் வேலைக்குப் போறவரோ” “ஓம் ஒரு பால் கொம்பனியில வேலை செய்யிறவர்” “அவருக்கு வீடு வாசல் இல்லையோ” “சிறிய தாயோடைதான் இருக்கிறார், மற்றச் சகோதரங்களோட பிரச்சனை. அதுதான் உங்கட வீட்டை இருக்க ஓம் என்டிறார். நீங்கள் பயப்பிடாதைங்கோ. நான் பாத்துக்கொள்ளுறன். ஆள் முதல் வந்து இருக்கட்டும். நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு ஓகே எண்டால் தொடர்ந்து இருக்கட்டும்” “அவரின் போன் நம்பரை போட்டுவிடுங்கோ அக்கா” “அவருக்கு ஸ்மாட் போன் இல்லை. மற்ற போன் தான் இருக்கு” இந்தக் காலத்தில ஸ்மாட் போன் இல்லாத பெடியனா? நம்பவே முடியேல்லை அக்கா” “நீங்கள் வரேக்கை ஒண்டைக் கொண்டுவந்து குடுங்கோவன்” “உதெல்லாம் சரிவராதக்கா” நானே ஐந்து ஆண்டுகளா ஒரு போனை வச்சிருக்கிறன்” “சரி நீங்கள் முதல் வாங்கோவன்” சரி அக்கா என்கிறன். இரண்டு வாரங்கள் அந்தப் பெடி ஸ்கூட்டியில் வருவதும் போவதுமாக இருக்க, ஒருநாள் பார்த்தால் நான் வாங்கி வைத்த 25 மீட்டர் கோஸ் பைப்பை எடுத்து வீட்டு கேற்றடியில் கன்றுகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, அவரின் இலக்கத்துக்கு போன் செய்தால் போன் றிங் போனாலும் அவர் எடுக்கவில்லை. பின்னர் ரதி அக்காவுக்கு போன் செய்து சொட்டுநீர் பாசனம் செய்திருக்கு. பிறகு எதுக்கு உந்தப் பெடியன் பைப்பைப் பிடித்துத் தண்ணீர் விடுகிறார் என்று கேட்க, தான் அவனுக்குச் சொல்லுறன் என்கிறா அக்கா. இனிமேல் பைப் எதிலும் கை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ என்கிறேன். அடுத்த வாரம் பார்த்தால் எம் வளவில் இரண்டு மாடுகள் மேய்ந்துகொண்டிருக்க, பார்த்த எனக்குப் பகீர் என்கிறது. உடனே ரதி அக்காவுக்குப் போன் செய்ய, அவர் இரண்டு மாடுகள் வளர்க்கிறார். அதுதான் கொண்டுவந்து கட்டியிருக்கிறார் என்கிறா. அக்கா என்னைக் கேட்காமல் எதுக்கு வளவிலை மாடுகளைக் காட்டச் சொன்னீர்கள்? எனக்கு கன்றுகள் முக்கியம். பார்த்துப் பார்த்துக் கன்றுகளை நட்டிருக்கிறன். உடனடியா மாடுகளை வெளியேற்றச் சொல்லுங்கோ என்கிறேன். நீங்கள் கவலைப்படாதேங்கோ மாடுகளை எங்கள் வளவில கொண்டுவந்து கட்டச் சொல்லுறன் என்கிறா. அடுத்த நாளில் இருந்து மாடுகளைக் காணவில்லை ஆயினும் உவர் என் வளவுக்கு ஏற்ற ஆள் இல்லை என்று மனம் அடித்துக் கூற, வேறு வழியில்லை. நாம் ஊருக்குப் போகத்தான் வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. அதன்பின் அந்தப் பெடியன் வீட்டில் வந்து தங்கி இருக்க ஆரம்பிக்கிறார். இரவில் ஒன்பது மணிவரை லைட் எரிகிறது. சிலவேளைகளில் இன்னொரு பெடியும் வந்திருந்து கதைத்துவிட்டு போகிறது. நீ கமறாவைப் பார்க்காமல் இரு என்கிறார் கணவர். வேலை செய்யும் இடத்திலும் எனக்குப் பதிலாக வேலை செய்ய ஒருவரும் இல்லை என்று முதலாளி மறுக்க வேறு வழியின்றி யோசனையுடன் இரண்டு மாதங்கள் ஓடிப்போக, இனி நீர் விடுமுறையில் செல்வதனால் செல்லலாம் என்கிறார் முதலாளி.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்எனக்கு அவர்கள் என் வளவையும் வீட்டையும் கன்றுகளையும் கவனமாகப் பார்த்தால் சரி என்ற நினைப்பு. 10000 வரை வாடகை வாங்கலாம். எனக்கு அப்படி வாங்க மனம் வரவில்லை. எனக்காக இரண்டு அறைகளைப் பிடித்துக்கொண்டுதானே கொடுத்தது. அதனால் ஓகே. உண்மையில் சிரித்துவிட்டேன். தண்ணீர் அவர்கள் விடத் தேவை இல்லை. எல்லாம் தானியங்கி. பல வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சும்மா வீட்டை மட்டும் பாராமரிக்கவே 30000, 60000 என்று கொடுக்கிறார்கள் என்று கேள்வி.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்அதென்னவோ உண்மைதான் அண்ணா. எம் நாட்டில் அடக்குமுறையும் போரும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஏன் இங்கு வரபோகிறோம் . சரி அங்கு போய் இருக்கவேண்டிய தேவை இன்றியும் நான் ஏன் அங்கு போக வேண்டும்?- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்ஐந்து நான் மீண்டும் வந்து வேலைவெட்டி என்று ஆரம்பித்தாலும் காணியைப் பற்றிய சிந்தனையே எந்நாளும் இருந்துகொண்டிருந்தது. அவர்கள் அந்தக் கன்றுக்கு நீர் விட்டார்களா? இல்லையா என்னும் யோசனையே எப்போதும் குடைந்துகொண்டிருக்க, வாரம் ஒருதடவை அந்தப் பெண்ணுக்கு போன் செய்து கன்றுகள் பற்றி விசாரிப்பது தொடர்ந்தது. மூன்று மாதங்கள் செல்ல புற்கள் எல்லாம் மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன என்கிறார். நான் என் மச்சாளிடம் இதுபற்றிக் கேட்க இரண்டு மூன்று மாதங்கள் நல்ல வெயில். மழையும் பெய்யவில்லை. யூலை ஓகஸ்ட் தான் இனி மழை. அதன்பின் தான் வேகமாக வளரும். இப்ப புல்லுப் பிடுங்கத் தேவை இல்லை என்கிறார். அதனால் நான் இன்னும் கொஞ்ச நாட்கள் செல்லட்டும் பிடுங்கலாம் என்கிறேன். அடுத்து ஒருமாதம் செல்ல வளவில் புற்களைப் புடுங்கவேண்டும். பாம்பு வந்துவிடும். சின்னப் பிள்ளையை வைத்திருக்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதும் சரி ஆட்களை ஒழுங்கு செய்யுங்கோ என்றுவிட்டுப் பணம் அனுப்புகிறேன். நான்கு நாட்கள் இருவர் வந்து முழுப் புல்லையும் பிடுங்குவதற்கு 16000 ரூபாய் முடிய மனிசன் புறுபுறுக்க ஆரம்பிக்கிறார். அவைக்குக் கரண்ட் காசும் கட்டி வாடகையும் வாங்காமல் இப்ப வளவும் நீற்றாக்கிக் குடு என்கிறார். கண்டறியாத கண்டுகாலி. நாங்கள் போய் இருந்துகொண்டு உதுகளைச் செய்யலாம். சொல்லச் சொல்லக் கேட்காமல் நட்டுப்போட்டு வந்திருக்கிறாய் என்கிறார். இப்ப நட்டால்த்தானே நாங்கள் போய் இருக்கேக்குள்ள வளர்ந்திருக்கும் என்றுவிட்டு என் அலுவலைப் பார்க்கிறேன். அக்கா நீங்கள் கன்றுகளுக்குக் கட்டிய பாத்திகள் தண்ணீர் விட நீண்ட நேரம் எடுக்குது. நான் வேறை மாதிரிக் கட்டி விடட்டோ என்கிறா. நீங்கள் பாத்தி கட்டுவீங்களோ என்றதற்கு, தன் மாமியின் மகன் கட்டிவிடுவார் இரண்டு நாள் கூலி குடுக்கிரியளோ என்றதற்கு சரி என்கிறேன். எனக்கோ கன்றுகளுக்கு நீர் போனால் சரி என்ற நிலை. இன்னும் ஒரு மாதம் செல்ல, “உங்கள் கன்றுகளுக்கு நீர் இறைக்க மூன்று மணிநேரம் செல்கிறது” “நானும் ஒருமாதம் இறைத்தேன் தானே. ஒருமணித்தியாலம்தானே முடிந்தது. என்ன புதுக்கதை சொல்கிறீர்கள்? “எனக்கு பிள்ளையுடன் சரியான கரைச்சலாக கிடக்கு” “அப்ப ஒரே நாளில இறைக்காமல் பகுதி பகுதியாப் பிரிச்சு தண்ணியை விடுங்கோ” “நீங்கள் எப்ப வருவியள் அக்கா” “ஒவ்வொரு ஆண்டும் வர சரியான செலவு தங்கச்சி, ஏன் கேட்கிறீர்கள்? “இது பெரிய வளவாக் கிடக்கு அக்கா. எங்களுக்கு இதைப் பாராமரிக்கக் கஷ்டமா இருக்கு” “வளவில என்னத்தைப் பாராமரிக்கக் கிடக்கு? “மாமரக் குப்பையே கூட்டி அள்ள ஏலாமல் கிடக்கு” “அப்ப வளவு கூட்டவும் ஓராளைப் பிடிச்சுவிடட்டோ? பெரிய வளவு என்று தெரிந்துதானே வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு ஆண்டு வாடகை ஒப்பந்தம் செய்திருக்கிறன். அதுவரையும் நீங்கள் இருக்கத்தான் வேணும்” “சரி அக்கா. எவ்வளவு கெதியா வர ஏலுமோ வாங்கோ” சரியாக அவர்களுக்கு வாடகை ஒப்பந்தம் முடிய ஒருவாரத்துக்கு முன்னர் நானும் கணவரும் ஊருக்குச் செல்கிறோம். செல்லும்போது இங்கிருந்து ஒரு ஆப்பிள், பியேஸ், ஒலிவ் மூன்றின் கன்றுகளை யும் லகேச்சுக்குள் வைத்துக் கொண்டுபோகிறேன். இணுவிலில் போய் இறங்கி தங்கையின் வீட்டில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு எமது வீட்டுக்குச் சொல்கிறோம். கேற்றைத் திறந்து கமுகின் அழகைக் காண எண்ணினால் முன்பக்க வேலியோரம் நட்ட கமுகுகளில் அரைவாசித்தான் செழிப்பாக வளர்ந்திருக்க மிகுதி ஏனோதானோ என்று நிற்க ஐந்தாறு கமுகுகள் பட்டுப்போயும் இருக்க எனக்கு அழுகை வராத குறை. தண்ணீர் விட்டோம். தண்ணீர் விட்டோம் என்றார்கள். ஒழுங்காகத் தண்ணீர் வீட்டிருந்தால் ஏன் வாடுது என்று கணவனுக்குக் கூற, இது ஒன்றும் அவர்கள் காணி இல்லை. அவர்களுக்கு வீடு தேவை வந்து இருந்தார்கள். உன் கண்டுகாலிகளையும் கவனிக்க அவர்களுக்கு என்ன விசரா என்கிறார் மனிசன். அந்தப் பெண்ணிடம் கேட்க, நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இறைத்தது. இதுக்கு மிஞ்சி நாங்கள் ஒன்றும் செய்ய ஏலாது என்று சொல்கிறார். இனிக் கதைத்துப் பயன் இல்லை என்று அறிந்தபின் நானும் கணவரும் வளவைச் சுற்றிப் பார்க்கிறோம். தேக்குகள் மட்டும் செழிப்பாக வளர்ந்திருக்க எனது பூங்கன்றுகளும் சில பட்டுப்போய் நிற்கின்றன. புற்கள் எல்லாம் வளர்ந்து, தென்னை மரங்களின் கீழே தேங்காய்கள் விழுந்து பார்க்கவே கோபம் வருகிறது. என்ன தங்கச்சி தேங்காய் விக்கிற விலையில பொறுக்காமல் விட்டிருக்கிறியள் என்கிறேன். பிள்ளையோட கஸ்டம் அக்கா எனக்கு. இவரும் விடியப் போனால் பின்னேரம்தான் வருவார் என்கிறார். “எப்ப தங்கச்சி எழும்புறியள்” “வார கிழமை திறப்புத் தாறம்” “வாறகிழமை சரி. என்ன நாள் என்று சொல்லுங்கோ” என்கிறேன். அவர் சொன்ன நாளுக்கு முன்னராக அங்கு சென்று முதல் நாள் தங்குகிறோம். பஞ்சி பிடித்தவர்களே தவிர சொன்னதுபோல் அடுத்தநாள் வீட்டை விட்டுக் கிளம்ப, வீட்டைக் கழுவிச் சுத்தப்படுத்தி அங்கேயே தொடர்ந்து இருவாரம் தங்க, அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது. காலையில் எழும்போதே அழகான குருவிகளின் ஓசை மனதை மயங்க வைக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களின் கோழிகள் சிலது வந்து போகின்றன. காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தாமல் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டிப்போட்டு உடன் துருவிய தேங்காய்ப் பாலும் விட்டு பழஞ்சோற்றுக் கஞ்சி அமிர்தமாக இருக்கிறது. அதைக் குடித்தவுடன் அடிக்கடி பசிக்கும் எனக்கே நீண்டநேரம் பசியே எடுக்கவில்லை. காலையிலேயே புலுனி கூட்டம் முற்றத்தில் வந்து இரை பொறுக்க நாமும் தானியங்கள் போடுகிறேன். மாமரத்தில் அணில்கள் ஓடி விளையாட, அட இத்தனை காலம் இவற்றையெல்லாம் இழந்து நான்கு சுவருக்குள் அடைபட்டு குளிரிலும் விறைத்துப் போனோமே என்று எண்ணம் எழுகிறது. வீட்டின் வெளியே மாமர நிழலில் மூன்று கற்களை வைத்து எண்ணைச் சட்டியில் சந்தையில் வாங்கிவந்த மீன்களைப் பொரித்துத் தருகிறார் மனிசன். சுடச்சுட அதை உண்டு முட்களை வெளியே எறிந்துகொண்டிருக்க ............... சோறு கறி சமைக்கவேண்டிய தேவை குறைந்துபோக நெஞ்சு நிறைந்துபோகிறது. ஒருவரைக் கூப்பிட்டு செவ்விளநீர் இறக்கி வைத்து ஒரு நாளைக்கு இவ்விரண்டு குடிக்கிறோம். கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்வோம் என்று கூற, உனக்கு ஏதும் சிலவளிக்காட்டில் நித்திரை வராது என்கிறார் மனிசன். கன்றுகள் முக்கியம். ஒருக்காச் செய்துவிட்டால் பிறகு தண்ணி விடும் பிரச்சனை இல்லை என்று மனிசனைச் சம்மதிக்கச் செய்து சிலரிடம் விசாரித்தால் ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகின்றனர். வந்து வளவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே பெரிய பைப் தாட்டிருக்கிறபடியால் ஒன்றரை இலட்சத்துள் செய்து தரலாம் என்கிறார். ஏற்கனவே நாம் 2 குதிரை வலுக்கொண்ட மோட்டரையே போட்டிருந்தோம். அதன் வேகம் கூட என்று இன்னொரு மோட்டரைப் போட்டு அதில் இணைப்போம் என்கிறார். சரி என்று இரண்டாவது மோட்டரை 1.5 வழுவுள்ளதாக வாங்கி இணைத்து சொட்டுநீர்ப் பாசனம் ஒழுங்காக இயங்க வைக்கிறார். இரண்டு மோட்டார்கள் இருப்பதனால் சரியான பாதுகாப்பு வேண்டும் என்று பெலப்பான சுவருடன் ஒரு அறையைக் கட்டி அதனுள் இரு மோட்டார்களையும் வைத்து விசேட பூட்டு முறையையும் வடிவமைக்கிறார் கணவர். பின்னர் காணிக்குள் கமரா பூட்டுவோம் என்று மனிசன் தொடங்கி அதற்கு 8 கமரா பூட்ட 136000. அதன்பின் சிறிது நிம்மதி ஏற்பட இருவாரம் இந்தியா சென்று வருகிறோம். வளவில் இருந்த கற்களை அடுக்கி மனிசன் பார்பிக்கியூ கிறில் செய்து இங்கிருந்து கொண்டுசென்ற துருப்பிடிக்காத கம்பிகளையும் வைத்து அப்பப்ப உண்டு மகிழ்கிறோம். அதன் பின் மீண்டும் ஆட்களைத் தேடும் படலம் ஆரம்பிக்க வீட்டுக்குள் டாய்லெட் உள்ள அறைகள் வேண்டும் என்கின்றனர் சிலர். எமக்காகக் கட்டியதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது என்கிறேன். வெளியேயும் நவீன களிப்பறையும் உண்டு என்பதால் அதற்கு ஏற்றவர்களைத் தேட, யாரும் கிடைக்காமல் நாம் கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னதாக ஒரு குடும்பம் வந்து பார்க்கின்றனர். தாய், மகள், மகளின் கணவர், பெண்ணின் தம்பி மற்றும் மகளின் பிள்ளை ஐந்துபேர். தந்தை இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர். என்று கமராவில் நாங்கள் கதைப்பது எல்லாம் கேட்குமோ என்கிறார் அவர்களுடன் வந்த ஒரு 12 வயதுப் பெடி. சத்தம் எமக்குக் கேட்காது என்கிறேன் நான். இவர்களைக்கூட்டி வந்தவர் எமக்கு எலெக்றிக் வேலை செய்து தந்தவர் தான். அதனால் அவர்களுக்கு மாதம் 3000 வாடகையில் வீட்டைக் கொடுத்து மின் கட்டணத்தையும் கட்டும்படி சொல்கிறோம். அவர்களின் அடையாள அட்டையையும் படம் எடுத்து லோயரிடமும் கொடுத்து ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.- “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்”
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்நன்றாக எழுதியுளீர்கள் அண்ணா.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்இருக்கலாம்😂ஆனால் போய் இருக்கும்போது பாலுக்காகவும் இயற்கை உரத்துக்காகவும் இரண்டு ஆடுகள் வளர்ப்பதாகத்தான் எண்ணம். மாட்டு எருதான் இன்னும் சிறப்பு. ஆனால் மாட்டுக்கு பெரிய மேய்சல் நிலம் தேவை. வேலையும் கூட 🤣- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்நானே அந்த ஐடியாவிலதான் இருக்கிறன். சிலவேளை ஏர் பி&பி கூட ஐடிஎயா இருக்கு. எல்லாம் நான் போய் இருந்துதான். 😃 இப்ப சந்தோஷமாக்கும்?😀 திறப்பு கையில் தரவேண்டும் என்று எழுதவில்லை. ஒன்று நடந்தபின்புதானே அனுபவம் கிடைக்கிறது. நாங்கள் தான் வெளிநாட்டில மாஞ்சு மாஞ்சு பிரேக் இல்லாமல் வேலை செய்யிறது. அவர்களை உருக்கினால் வராமல் விட்டுவிடுவார்கள். அதனால் கண்டும் காணாமல் இருப்பதுதான். நன்றி அல்வாயான் வரவுக்கு.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்நான்கு அதன்பின்னர் கிணற்றுக்கு மேலே கம்பி வலை போட்டு குப்பைகள் விழாதவாறு மூட 10000 ரூபாய்கள். ஆனால் இரண்டு நாட்களில் தருவதாகக்கூறி ஒரு பத்துதடவை போன் செய்து, ஒருவாரத்தின் பின்னர் தான் கொண்டுவந்து பூட்டினார்கள். ஒரு பெண்ணைக் கூப்பிட்டு வீடு முழுதும் நன்றாகக் கழுவித் துடைத்து சுத்தம் செய்தபின்தான் மனம் நிம்மதியடைகிறது. அதன்பின்னர் மரங்கள் நடலாம் என எண்ணி கணவருக்கு போன் செய்ய சுற்றிவர கமுகை நடு. பார்க்க அழகாய் இருக்கும் என்கிறார். தேக்கு மரமும் நடுங்கோ அம்மா. காணி ஒருகாலத்தில விக்கிறது என்றாலும் பெறுமதி என்று வேலைக்கு வந்தவர்கள் கூற 100 கமுகுகள் மற்றும் ஐம்பது தேக்கமரம் என்று சுற்றிவர நட்டுவிட்டு கறுவா, ரமுட்டான்,மங்கோஸ்டீன், கசு, அவகாடோ மற்றும் மூலிகைக் கன்றுகள் பூங்கன்றுகள் என்று ஆசைப்பட்ட கன்றுகள் எல்லாம் வாங்கி நடுகிறேன். வெட்டிய தென்னைகளுக்குப் பதிலாக 15 தென்னங்கன்றுகளும் நாட்டபின்னும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. அதன்பின்னர் வளவைச் சுற்றி நான்கு புறமும் மரங்களுக்குத் தண்ணீர் விடுவதற்காக பைப்புகளைத் தாட்டு ஆசைதீரத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். எல்லாவற்றுக்கும் நீர் விட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிகிறது. நான் வந்து நான்கு மாதங்கள் முடிந்து இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கு. காணியை சும்மா விட்டுவிட்டு வர முடியாது. ஆரையன் வீட்டில் வாடகைக்கு இருத்தப் பார் என்கிறார் மனிசன். என் வீடு மெயின் ரோட்டில் இருந்து கொஞ்சம் உள்ளுக்குள் இருக்கு. இரு பக்கம் 30 பரப்பு கலட்டுக் காணிகள். உரிமையாளர்கள் மூவர் ஒஸ்ரேலியாவில். அவர்களின் தொடர்பை எடுக்க முடியவில்லை இதுவரை. ஒருபுறம் தோட்டக்காணி. இருவர் குத்தகைக்குத் தோட்டம் செய்கின்றனர். பின்னால் நான்கு குடும்பங்கள். எனது வளவு பெரிது என்பதால் பலரும் வந்து பார்த்துவிட்டு அதிக வீடுகள் இல்லை. தனிய மனிசியையோ அல்லது அம்மாவை விட்டுவிட்டு வேலைக்குப் போக முடியாது. உந்த வளவைப் பாராமரிப்பதும் கஸ்டம் என்று செல்லி சாட்டுகளைச் சொன்னபடி போக, வீட்டில என்ன பெரிய பொருட்களா கிடக்கு. ஆட்களை வாடகைக்குப் போடுறதை விட பூட்டிப்போட்டு வாறன் என்றுசொல்ல, கணவர் பாதைப்புடன் கட்டாயம் ஆரையும் இருத்தாமல் வராதை என்று கண்டிப்புடன் கூற மீண்டும் ஆட்களைத் தேடுகிறேன். இன்னும் ஒன்றரை மாதமிருக்கே. இரண்டு அறைகளுக்கு அட்டாச் டொயிலற் கட்டவோ என்று கேட்க, அதற்கும் மனிசன் தடைபோடுகிறார். அது நானும் வந்து நிக்கும்போது கட்டலாம். உனக்கு சரிபிழை தெரியாது என்கிறார். அடுத்து இரண்டு நாட்களின் பின்னர் வெளியே உள்ள டொயிலற்றுக்கு போய் கதவைத் திறக்கமுதல் பார்த்தால் வெளியே ஊசி போன்று வால் ஒன்று தெரிகிறது. நீளமாக இருப்பதால் பாம்பாகத்தான் இருக்கும் என நினைத்து முன்பக்கமாக ஓடுகிறேன். வீட்டின் உள்ளே சென்று கதவைச் சாற்றிவிட்டு கடைசி அறையைத் திறந்து யன்னல் வழியாகப் பார்த்தால் எதையும் காணவில்லை. வீட்டில் என்னைத் தவிர யாரும் அந்த நேரம் இல்லை. வேலை செய்பவர்கள் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காது டொயிலற் வாசலையே பார்த்துக்கொண்டு நிற்க ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் ஒரு சிறிய பாம்பு வெளியே தலையை நீட்டுகிறது. ஒரு இரண்டு நிமிடமாக அங்குமிங்குமாக தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு வெளியே வந்து பின்பக்கமாகப் போகிறது. அதன்பின் வேலை ஆட்கள் வரும்வரை நான் வெளியில் வரவேயில்லை. வண்டனில் அதிகாலை நேரம் என்பதால் கணவர் நித்திரையால் எழும்பியபின் கட்டாயம் அட்டாச் டொயிலற் கட்டியே தீரவேண்டும் என்கிறேன். கணவரும் வேறு வழியின்றிச் சம்மதிக்க இரண்டு மூன்று பேரைக் கூப்பிட்டு கதைத்தால் வெளிநாட்டுக்காரர் என்று தெரிந்து அதிகமாகச் சொல்கின்றனர். பின் வீட்டுக்கு வரும் வழியில் கல்லரியும் யாட் ஒன்று உண்டு. அந்தத் தம்பியுடன் கதைக்க நீங்கள் வெளிநாடு எண்டு எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாங்கள். கூடத்தான் கேட்பார்கள். நான் உங்களுக்கு நல்ல மேசனைப் பிடித்துத் தருகிறேன். நாட்கூலி குடுத்துக் கட்டுங்கோ அக்கா என்று கூற நானும் சம்மதிக்கிறேன். அடுத்த நாளே மண், கல், சீமெந்து எல்லாம் அந்தத் தம்பியின் யாட்டில் இருந்தே வந்திறங்க, மற்ற இடங்களில் விசாரித்தால் அவர் கூட்டி வைக்காமல் தருவதை அறிய மனதில் நிம்மதி பிறக்கிறது. இரண்டு அறைகளுக்குத் தனித்தனியாக அட்டாச் டொயிலற். ஆனால் கட்டடம் ஒன்றாகக் கட்டி இடையில் சுவர் வைத்து பிரிப்பதான அமைப்பு இரு அறைகளுக்கிடையில் இருந்தது எமது அதிட்டமாகிறது. காலையில் நான்குபேர் வேலைக்கு வருவார்கள். சில நேரம் ஆறுபேர். மெயின் மேஷனுக்குக் கூலி 3500. மற்றவர்களுக்கு 3000. 10.30 க்கு மாப்பால் கரைத்து ஒரு தேநீர் மற்றும் ஏதாவது ஒரு சிற்றுண்டி. 11.30 வெறும் தேநீர். 12.30 இக்கு மதிய உணவு இடைவேளை. ஒருவர் சென்று எல்லோருக்கும் பக்கத்திலிருந்த கடையில் உணவுப் பொதிகள் வாங்கிவருவார். வீட்டுக்குச் சிறிது தள்ளி ஒரு கார் நிறுத்துவதற்குக் கட்டிய ஒரு ஓடு வேய்ந்த சீமெந்துக் கட்டிடம். அதற்குள் இருந்து உண்டு முடிய பாயைப் போட்டுச் சிலர் சாய சிலர் போனில் அல்லது நேரில் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு 1.30 அல்லது 2.00 மணிக்கு மீண்டும் வேலையை ஆரம்பிப்பார்கள். எனக்கும் மத்தியான வெயிலும் ஓடித் திரிந்ததும் அலுப்பாக இருக்க, நானும் வீட்டுக் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு மதிய உணவு உண்டு முடிய நான் வாங்கிப் போட்ட கட்டிலில் ஒரு மணி நேரத்துக்கு போனில் அலாம் செட் பண்ணி வைத்துவிட்டுத் தூங்கி எழுவேன். என் எலாம் அடிக்கமுதலே மனிசன் வேலைக்குப் போகமுதல் எழுந்து எனக்குப் போன்செய்து ஏதும் ஆலோசனை சொல்வதோடு நடப்பவை பற்றிக் கேட்பார். பின்னர் 3.30 இக்கு அவர்களுக்கு மீண்டும் ஒரு பால் தேநீர். ஐந்து மணிக்கு வேலைமுடிந்து போக நானும் கதவுகள் யன்னல்கள் எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து இணுவிலுக்கு வந்துவிடுவேன். ஒரு மாதத்தில் இரு அட்டாச் டொயிலற்றும் கட்டி முடித்து மாபிள்கள் பதித்துமுடிய களைத்தே போய்விட்டேன். ஆனாலும் தனிய இந்தப்பெரிய வேலையைச் செய்து முடித்துவிட்டேன் என்னும் பெருமிதமும் கூடவே வர அடுத்தடுத்த நாட்களில் தேவையான பொருட்கள் பாத்திரங்கள் என்று வாங்கி காஸ் அடுப்பில் நானே தனியாகச் சமைத்து மிக நெருக்கமான உறவுகள் ஒரு இருபத்தைந்து பேர்களை அழைத்து என் கையால் அந்தாறு கறிகளுடன் உணவு சமைத்துக் கொடுத்தபின்தான் மனம் நிம்மதியானது. அதன் பின்னும் யாராவது வீட்டுக்கு வாடகைக்கு வரமாட்டார்களா என்று தேடியதில் ஒரு குடும்பம் இரண்டு வயதுக் குழந்தையுடன் வருகின்றது. எமக்காக இரண்டு அறைகளை வைத்துக்கொண்டு மிகுதியாய் அவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்ல அவர்களும் சம்மதிக்கின்றனர். நீங்கள் வாடகை தரவேண்டாம். கரண்ட் காசு இந்த இரண்டு மாதங்களும் 1200 ரூபாய்தான் வந்தது. மூன்று நாட்களுக்கு ஒருக்கா நீங்கள் என் கன்றுகளுக்குத் தண்ணீர் திறந்து விட்டால் போதும். நானே உங்கள் கரண்ட் காசையும் கட்டுகிறேன் என்கிறேன். அவர்களும் சம்மதிக்கின்றனர். லோயரைக் கொண்டு ஒரு ஆண்டுக்கு வாடகை ஒப்பந்தம் எழுதி அவர்களுக்கு ஒருபிரதி எனக்கு ஒருபிரதி தர 2000 ரூபாய்கள் மட்டும் எடுக்கிறார் கோண்டாவிலில் உள்ள ஒரு லோயர். ஒருவித நிம்மதியுடன் இருக்க எனக்கோ திரும்ப போகவே மனமில்லை. கட்டடம் கட்டும் வேலை இழுபட்டாலும் என்று எனது விமான டிக்கற்றை மூன்று வாரங்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தேன். அடுத்தநாள் மதியம் என் கடைசி மகள் போன் செய்து “அம்மா உங்கள் கஸ்பண்டுக்குச் சமைத்துக் கொடுத்து நான் களைத்துவிட்டேன். நீங்கள் உடனே வாருங்கள். இனிமேல் போவதென்றால் அவரையும் அழைத்துக்கொண்டே செல்லுங்கள் என்கிறாள். எனக்கோ கணவரையும் பிள்ளைகளையும் நினைக்கப் பாவமாக இருக்கிறது. இன்னும் மூன்று வாரத்தில் வந்துவிடுவேன் என்கிறேன்.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்யேர்மனியில் மட்டுமல்ல லண்டனிலும் ஐரோப்பா முழுதும் கஷ்டம்தான். இலங்கையில் 50 இல் எடுக்கலாம். அல்லது 60 வயதுவரை வேலை செய்யலாம்.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்அவர்கள் மோட்டாயரைக் களற்றுவார்கள் என்று எனக்கு எப்படி அண்ணா தெரியும்? அத்துடன் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களைக் கண்டுபிடித்து பொருட்களை மீட்க போலீசுக்கும் பணம் கொடுக்கவேண்டி வரும். அல்லது கேஸ் இழுபடும். அதுதான் விட்டுவிட்டேன். ஊருக்குப் போய் இருப்பது 2026 கடைசியில் தான். இலங்கையில் சாதாரண ஒரு அலுவல் அரச அதிகாரிகளைக் கொண்டு செய்விப்பது அத்தனை இலகுவல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா ?- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்அதைக் கைவிட்டுக் காண நாட்கள் ஆச்சு. ஊரில போய் இருக்கும்பொது திரும்பத் தொடங்குவன். 😃- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்மூன்று வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்தம் எல்லாம் எழுதி முடிந்து வெளியே வருகிறோம். “ஏனக்கா அந்தப் பலா மரத்தை வெட்டினீர்கள்? நல்ல பழம். காய்த்துக் கொட்டுற மரம். அதைவிட வீட்டுக்கு நல்ல குளிர்ச்சி” “உங்கள் தங்கைதான் அது பலவருடங்களாகக் காய்க்கவில்லை என்று கூறினா” “அவ என் தங்கை இல்லை. என் அம்மாவைப் பாராமரிப்பதற்கு நான் வைத்திருப்பவர், என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவ வந்து இப்ப ஒரு வருடம்தான்” “நாம் முதல்முதல் வந்தபோது புரோக்கர் உங்கள் தங்கை என்று சொன்னார். அதன் பின்னும் அவ அண்ணா என்றுதான் சொன்னா. நான் நம்பிவிட்டேன்” சரியக்கா என்று அவர் கிளம்ப, அந்தப் பெண்ணுக்கு இரண்டு திட்டுத் திட்டவேணும் என்ற கோபம் எழுகிறது. தீர விசாரிக்காத என் அவசர புத்தியை எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன். அடுத்த நாளே வீட்டுக்குப் போகும்போது ஒரு மீற்றர் உயரமான பலாக்கன்று ஒன்றை வாங்கிச் சென்று வெட்டிய இடத்துக்குப் பக்கத்தில் நட்டு சுற்றிவர தடிகளை ஊன்றி ஆடு கடிக்காதவாறு பாதுகாப்புக் கொடுத்தபின் மனம் சிறிது ஆறுகிறது. அடுத்து வந்த நாட்களில் மிகுதி இடங்களில் இருந்த புற்களை ஆட்களைக் கொண்டு பிடுங்கிவித்து தென்னை மரங்களுக்குத் தாட்டு பாத்திகளையும் கட்டுவிக்கிறேன். ஓர் ஆணுக்கு ஒருநாள் கூலி 3000. பெண்ணுக்கு 2500. இது தோட்ட வேலையோ கடின வேலையோ செய்பவர்களுக்கு. சாதாரணமாகப் புல் புடுங்குபவர்களுக்கு 1400. அத்துடன் காலை 9 மணிக்குப் பின்னர்தான் வேலைக்கு வருவார்கள். அவர்களுக்கு 10.30 - 11.00 க்குள் ஏதும் வடை அல்லது மிக்சரோ முறுக்கோ ஏதோவொன்று கொடுத்து தேனீரும் கொடுக்கவேண்டும். மதியம் உணவையும் கேட்டார்கள். என்னால் சமைக்க முடியாது என்று 500 ரூபாய்கள் மேலதிகமாகக் கொடுத்து அவர்களே கொண்டுவரும்படி கூறிவிடுவேன். இப்படியே மூன்று மாதங்கள் முடிய அவர்கள் தாம் ஒரு வாரத்தில் எழுந்துவிடுவதாகக் கூற எனக்கோ அளவில்லா மகிழ்ச்சி. அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் தாம் நிற்கமாட்டோம் என்று கூறியதால் நான் வீட்டுப்பக்கம் செல்லவில்லை. நான்காம் நாள் போன் செய்தால் யாருமே போனை எடுக்கவில்லை. அடுத்தநாள் ஓட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டின் வெளிவாசலில் பூட்டுத் தொங்க, அதில் நின்றபடி அந்தப் பெடியனுக்குத் தொடர்ந்து போன் செய்தபடி இருக்க, என் வற்சப்புக்கு மெசேச் ஒன்று வந்து விழுகிறது. “வீட்டில் இருந்த பெண்ணின் தந்தை கிளிநொச்சியில் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் அங்கே போய்விட்டார். மூன்று நாட்களின் பின்னர் திறப்புத் தருகிறேன்” முதலே எனக்கு அந்த செய்தியைச் சொல்லியிருந்தால் நான் தேவையில்லாமல் வந்திருக்கத் தேவை இல்லை என்று செய்தி அனுப்புகிறேன். அதன்பின் மூன்றாம் நாள் காலை மீண்டும் ஓட்டோக்காரருடன் வந்தால் அப்போதும் பூட்டுத்தான் தொங்குது. திரும்ப போன் செய்ய, திறப்பை இன்ன இடத்தில் வைத்திருக்கு, எடுங்கோ என்று செய்தி வற்சப்பில் வருகிறது. ஓட்டோக்காரர் தேடித் திறப்பை எடுத்து வருகிறார். திறந்துகொண்டு உள்ளே செல்ல, அக்கா மோட்டார் இருக்காது போய் பாருங்கோ என்கிறார். போய்ப் பார்த்தால் மோட்டார் கிடங்கினுள் இல்லை. “எப்பிடி உங்களுக்கு மோட்டர் இருக்காது எனத் தெரிந்தது தம்பி? “அவர்கள் இரண்டு நாட்களும் போன் எடுக்காது உங்களை அலைக்களித்தவுடன் எனக்கு விளங்கிவிட்டுது. பைப்பைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வருக்கிறதுதான். ஆனாலும் அது எப்ப முடியும் என்று தெரியாதுதானே. எம் மூரில் ஒரு தெரிந்த எலெக்ரீசியன் இருக்கிறார். அவருக்குத் தொலைபேசியில் விபரம் சொல்ல, இன்று வரமுடியாது அக்கா. நாளை வருகிறேன் என்கிறார். வீட்டை நன்றாகக் கழுவிவிட்டுத்தான் உள்ளே பயன்படுத்த வேண்டும். ஆனால் தண்ணீர் இல்லாது இன்று வீட்டில் நின்று பயனில்லை. ஆகவே ஓட்டோவில் உடனேயே திரும்ப வீடு செல்கிறேன். எப்ப வந்தாலும் இங்கு சாப்பிடலாம் என்று மச்சாள் கூறினாலும் சிலவேளைகளில் மட்டுமே நான் அங்கு உண்பது. உண்மையில் கொஞ்சம் சமையலில் இருந்து விடுதலை வரும் என்று நம்பித்தான் லண்டனில் இருந்து வரும்போது நினைத்தது. ஆனால் அன்ரியின் வயது காரணமாக அவர் சமைத்து நான் உண்பது ஏற்புடையதாக இல்லை. காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை உணவு சமைத்து மதியத்துக்கும் ஏதாவது இரண்டு கறிகளை வைத்துவிட்டு எனக்கு மதிய உணவையும் கட்டிக்கொண்டு சென்று உண்பது தொடர்ந்தது. பஞ்சி வரும் நேரங்களில் மட்டும் காலை உணவை மட்டும் செய்துவிட்டு எனக்கு மதிய உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு கடைகளில் வாங்கி உண்பதும் சிலவேளைகளில் நடந்ததுதான். அடுத்தநாள் வழமைபோல் எல்லாம் செய்துவிட்டு புதிய பூட்டுகள் மூன்றும் வாங்கிக்கொண்டு செல்கிறேன். எலெக்ரீசியன் தானே மோட்டரை வாங்கி வருவதாகக் கூறி வாங்கி வருகிறார். அவர் மோட்டரை மாற்றும்போது பார்த்தால் கிணற்றினுள் ஒரே பாசியும் தென்னோலைகளுமாக இருக்க, பக்கத்து வீட்டுக்குச் சென்று கிணறு கலக்கி இறைக்க யாரும் இருக்கிறார்களா என்று கேட்க ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகிறார். அந்த வீட்டுக்காரியின் பெயர் ரதி. கணவனும் மனைவியும் மட்டுமே அங்கு இருக்கின்றனர். ஆண் பிள்ளைகள் மூவர். திருமானமாகிவிட்டது. இருவர் வெளிநாட்டில். கதைத்துக்கொண்டு போக யேர்மனியில் வசிக்கும் அவரின் உறவினர்கள் எமக்குத் தெரியவருகின்றனர். எனக்கு நல்ல ஒரு துணை அயலில் என்ற மகிழ்ச்சி. அதன்பின் அப்பப்ப அவருடன் சென்று கதைப்பதும் விபரங்களை அறிவதுமாகி நெருக்கமாகிவிடுகிறார் ரதி அக்கா. புதிய மோட்டார் போட்டபின் அடுத்த நாளே கிணற்றைக் கலக்கி இறைக்க இருவர் வருகின்றனர். முன்னர் பலா மரம் வெட்ட வந்தவர்களை தென்னைக்குப் பாத்தி கட்டவும் அழைத்திருந்தேன். அவர்களும் வந்தபடியால் புதியவர்களுடன் நிற்க பயம் ஏற்படவில்லை. முதலில் இரண்டு மணிநேரம் எமது மோட்டறினால் இறைத்துவிட்டு பின்னர் அவர்கள் கொண்டுவந்த மோட்டரைப் போட்டு கலக்கி இறக்கின்றனர். மூன்று பெரிய ஊற்றுகள் இருந்ததனால் மூண்டு வாழைக் குற்றிகளை வெட்டி ஊற்றை அடைத்தபின் பாசிகளை எல்லாம் அள்ளுகின்றனர். அக்கா கிணற்றுக்குள் இரண்டு பாம்பு இருக்கு என்றவுடன் நான் பாய்ந்து ஓடுகிறேன். “ஐய்யோ அக்கா பாம்பு செத்துப்போய் கிடக்கு” “தண்ணீர் குடிக்கத்தான் பாம்பு கிணற்றுள் வந்ததோ தம்பி” இல்லை அக்கா கிணற்றுள் ஒரு ஓட்டை இருக்கு. முட்டையும் இருக்கு. ஏதும் பறவைகள் வந்து இருந்திருக்கும். முட்டையைக் குடிக்கத்தான் பாம்பு வந்து தவறி விழுந்திருக்கும் என்கிறார். ஆக், உந்த செத்தபாம்பு கிடந்த தண்ணியில் தான் தேநீர் ஊற்றிக் குடிச்சதோ என்கிறேன். நல்லகாலம் நான் ஒரு போத்தலுக்குள் இணுவிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து குடித்ததில் மனம் நிம்மதியாகிறது. கிணறு கலக்கி இறைக்க மூன்று மணித்தியாலம். 3000 ரூபாய்கள் தான். அடுத்தடுத்த கிழமைகளில் ஸ்கூட்டியும் வாங்கி ஓடிப் பழகி விழுந்தெழும்பிய கதை முதலே எழுதியாச்சு.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்அவர் இந்தப்பக்கம் வாறதில்லை. வந்தாலும் பொய்யா எழுதுகிறேன். என்ன இரண்டு திட்டு விழும். அவ்வளவுதான்.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்புலம்பெயர்ந்த பலரும் சரியான ஏமாளிக்களாகத்தான் இருக்கிறோம். கணனியில் எழுதும்போது அச்சொட்டாக சொற்கள் வாராதுதானே. எத்தனை என்று திருத்துவது.- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்ததை விரைவாக்க முடித்துவிட்டீர்களே அண்ணா.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்நன்றி யாயினி. பிழைகளைத் திருத்தியுள்ளேன்.- நானும் ஊர்க் காணியும்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்எழுதத்தானே போறன் 😂 - நானும் ஊர்க் காணியும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.