Search the Community
Showing results for 'கேழ்வரகு'.
Found 29 results
-
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
தமிழக இடைக்கால வேளாண் பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் என்னென்ன? சென்னை: தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.17) சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்: > தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 21 லட்சம் பழச்செடிச் தொகுப்புகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. > நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 70,000 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. > நெல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் ரூ.5.482 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். > 2021-22 முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் மூலம் 456 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. > தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2023-24-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், இதுவரை 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதியில் பயனடைந்துள்ளனர். 20 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. > தேசிய அளவில், தமிழ்நாடு கேழ்வரகு உற்பத்தித் திறனில் முதல் இடம், கேழ்வரகு உற்பத்தியில் இரண்டாம் இடம், குறுதானியங்கள் உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. > கம்பு சாகுபடிப் பரப்பு 113 லட்சம் ஏக்கரிலிருந்து 133 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. > வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 77,499 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்களும் நிறுவப்பட்டன. இதற்கென மானியமாக மொத்தம் ரூ.783 கோடி வழங்கப்பட்டது. > 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டு ரூ.83 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5,954 புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளும் ரூ.7.67 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. > கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை சுமார் 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. > கடந்த 5 ஆண்டுகளில், தோட்டக்கலைத் துறை மூலம் 68 லட்சம் பனை விதைகள், 1 லட்சத்து 28 ஆயிரம் பனங்கன்றுகள் விநியோகம், 354 பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் ஆகிய செயல்படுத்தப்பட்டன. > சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.156/-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ.131/-ம் ஊக்கத்தொகையாக வழங்கி அவற்றின் கொள்முதல் விலை முறையே ரூ.2,545 மற்றும் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. > 5 ஆண்டுகளில் இதுவரை 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. > பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 5 ஆண்டுகளில் 184 லட்சம் ஏக்கர் பரப்பு, சுமார் 80 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில், மகசூல் இழப்பிற்கு 38 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் ரூ.6,063 கோடி வழங்கப்பட்டுள்ளது. > தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில், இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 16.20 லட்சம் ஹெக்டரில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.2.045 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். > நாகப்பட்டினம். சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் மூன்று அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தோட்டக்கலைக்கல்லூரி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. > கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் ரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. > வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது. > கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 83 இலட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு 69.457 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 16 இலட்சத்து 9 ஆயிரம் நபர்களுக்கு 8,938 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு. மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான கடனும் வழங்கப்பட்டுள்ளன. > உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை, 6.47 இலட்சம் பயனாளிகளுக்கு கல்வி, திருமணம், விபத்து நிவாரணம், மரணம் போன்றவற்றிற்கு உதவித்தொகையாக ரூ. 819 கோடி வழங்கப்பட்டுள்ளது. > 2011-12 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் வேளாண்மையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 9.97 சதவீதம் உயர்ந்துள்ளது. > 2011-12ஆம் ஆண்டில், 53,75,639 லட்சம் ரூபாயாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2024-25 ஆம் ஆண்டில், 59,11,708 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. > 2021-22 ஆம் ஆண்டில், வரவு செலவுத்திட்டத்தில் ரூ.34,220 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2025-26 ஆம் ஆண்டில், ரூ.45,661 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. > 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், வேளாண்மை உழவர்நலத் துறைக்கு 47,248.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/tamil-nadu-interim-budget-2026-for-agriculture-highlights
-
தமிழக வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்த 2 யானைகள் இறந்தது ஏன்? சிறப்புக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி
தமிழக வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்த 2 யானைகள் இறந்தது ஏன்? சிறப்புக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 10 டிசம்பர் 2025 தமிழ்நாட்டில் சமீபத்தில் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டுயானைகள் இறந்ததன் எதிரொலியாக யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இரு மாதங்களில் இந்த குழு இதற்கான வரைவு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்க வேண்டுமென்று காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யானைகள் காட்டை விட்டு வெளியில் வருவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இத்தகைய குழுக்களை அமைப்பதால் எந்த பயனுமில்லை என்று காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் மனிதர் வாழும் பிரதேசத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை இடப்பெயர்வு செய்வதே தீர்வு என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் யானைகளை இடப்பெயர்வு செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறை அவசியம் என்கின்றனர் அரசு நிர்ணயித்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள். நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழு அமைப்பு மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டத் தரவுகளின்படி, இந்தியாவிலுள்ள 29 ஆயிரம் ஆசிய யானைகளில் தமிழகத்தில் 10 சதவிகிதம், அதாவது 2,961 யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளின் வலசைப் பாதைகளில் ஏற்படும் பலவித தடங்கல்களால் யானை–மனித மோதல்கள் பதிவாகின்றன. இதன் காரணமாக, அதில் தொடர்புடைய யானைகளை இடமாற்றம் செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு இடமாற்றம் செய்வதற்கு, இந்திய காட்டுயிர் மையம் (Wildlife Institue of India) வழங்கியுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SoP) கடைபிடிப்பது அவசியம். சமீபத்தில் தமிழக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டு யானைகள் உயிரிழந்தன. அதன் தொடர்ச்சியாகவே யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க 6 பேர் கொண்ட சிறப்புக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், சென்னை உயர்நிலை வனஉயிரினப் பாதுகாப்பு நிறுவன இயக்குநருமான உதயன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் வனத்துறை சிறப்புச் செயலாளர் அனுராக் மிஷ்ரா, மாவட்ட வன அலுவலர்(கூடலுார்) வெங்கடேஷ் பிரபு, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் கலைவாணன், முதுமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபத்தில் 2 காட்டு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது உயிரிழந்ததன் காரணமாகவே, தற்போதுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகளைப் பிடிப்பதில் துவங்கி, அவற்றைக் கையாள்வது, இடமாற்றம் செய்து விடுவிப்பது, அந்த புதிய இடத்தில் கண்காணிப்பது பற்றிய நடைமுறைகள் சார்ந்து அறிவியல் அடிப்படையில் மதிப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது என்று கூறும் அந்த அறிக்கை, யானைகளை இடமாற்றம் செய்யும் நடைமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தெளிவான நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது. படக்குறிப்பு,கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒரு காட்டுயானை உயிரிழந்தது. காட்டு யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான விரிவான, செயல்படுத்தக்கூடிய நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SoP) உருவாக்க வேண்டுமென்று கூறியுள்ள தமிழக அரசு, அந்த நெறிமுறை தேசிய மாதிரியாகக் கருதப்படுவதற்கு ஏற்ற தரநிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட இரு காட்டு யானைகள் இறந்ததைக் காரணம் காட்டியே, இந்த குழுவை அமைத்துள்ளதாக அரசே கூறியிருப்பது ஒரு வகையில் விவாதப்பொருளாகியுள்ளது. இவ்விரு யானைகளும் பிரச்னைக்குரிய யானைகளாக (problematic elephant) அடையாளம் காணப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்பு இடமாற்றம் செய்யப்பட்டவை. நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் கடந்த செப்டம்பரில் பிடிக்கப்பட்ட காட்டுயானை ஒரு மாதம் க்ரால் எனப்படும் பலமான மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, சாந்தப்படுத்தப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அந்த யானை, அடுத்த 45 நாட்களில் மலையிலிருந்து கீழே விழுந்து இறந்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்பகுதியில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி பிடிக்கப்பட்ட மற்றொரு காட்டுயானை (ரோலக்ஸ் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது), ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அந்த யானை கடந்த நவம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தது. 2 யானைகள் உயிரிழப்புக்கு வன அதிகாரிகள் கூறும் காரணமென்ன? படக்குறிப்பு,நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் ஒரு காட்டு யானை, கடந்த செப்டம்பரில் பிடிக்கப்பட்டது. இரு யானைகளின் இறப்புக்கும், அவை இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். இயற்கையான விபத்து மற்றும் உடல்நலக்குறைவே இறப்புக்கு காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர். கூடலூர் பகுதியில் பிடிபட்ட யானை இறந்ததற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) வெங்கடேஷ் பிரபு, ''ஒரு யானை பிடிக்கப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. 45 நாட்கள் கழித்து, கனமழை பெய்தபோது மலையில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரு பக்கத் தந்தம் உடைந்து ரத்தம் பெருமளவில் வெளியேறி இறந்துவிட்டது. அது ஒரு விபத்து.'' என்றார். கூடலுார் பகுதியில் 2024 டிசம்பர் மாதத்தில் பிடிக்கப்பட்டு, அதே அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை ஒன்று இப்போது வரை அங்கே நன்றாகவுள்ளது என்றார் வெங்கடேஷ் பிரபு. இவ்விரு யானைகளுக்கும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிடிக்கப்பட்ட காட்டு யானை இறந்ததற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ், ''அந்த யானைக்கு 50 வயதாகிவிட்டநிலையில், இதயம், நுரையீரல் இரண்டிலும் பிரச்னை இருந்துள்ளது. முதற்கட்ட பிரேத பரிசோதனையில் இதய செயலிழப்பே உயிரிழப்புக்குக் காரணமென்று தெரியவந்துள்ளது. உடற்கூறு மாதிரிகள், சென்னை, கேரளா உள்ளிட்ட 5 ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை வந்த பின்பே முழு காரணத்தை அறியமுடியும்.'' என்றார். வழக்கமாக ஒரு காட்டு யானை 3.5 டன் முதல் 4 டன் வரை எடையிருக்கும். ஆனால் இந்த யானையின் எடை 6.5 டன் ஆக இருந்ததாக கூறிய களஇயக்குநர் வெங்கடேஷ், இது அதீதமான எடை என்பதாலும் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றார். படக்குறிப்பு,முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ் யானைகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு ஆனால், இத்தகைய யானைகளை இடமாற்றம் செய்வதே தவறு என்று வைல்ட்லைஃப் ரேங்க்ளர்ஸ் (Wildlife Wranglers) அமைப்பின் நிறுவனர் கிறிஸ்டோபர் கூறுகிறார். அந்த யானைகள் மயக்க நிலையில் பிடிக்கப்பட்டு, அவற்றின் வாழ்விடங்களை விட்டு இடமாற்றம் செய்யப்பட்டு புதிய இடங்களில் விடப்படுவதால் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாவதும் அவற்றின் இறப்புக்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''யானைகளை இடமாற்றம் செய்வதில் வனத்துறை தவறு செய்கிறது. வளர்ந்த யானைகளால் புதிய வாழ்விடங்களின் இயற்கை அமைப்புடன் ஒன்றுவது எளிதானது அல்ல. அதில் ஏற்பட்ட சிக்கலால் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம்.'' என்றார். 'இடமாற்றம் செய்யும் யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிப்பதாகக் கூறும் வனத்துறை, அந்த யானையை பிடித்த பகுதியிலேயே அடர்ந்த வனத்தில் விடுவித்து அதனை கண்காணிப்பதில் என்ன பிரச்னை என்று கிறிஸ்டோபர் கேள்வி எழுப்பினார். 'இடமாற்றம் செய்வதே தீர்வு' இந்த கருத்துடன் ஓசை சூழலியல் அமைப்பின் தலைவர் காளிதாசன் உடன்படவில்லை. பிரச்னைக்குரியவையாக கருதப்படும் யானைகளை இடமாற்றம் செய்வதே தீர்வு என்பது அவரது கருத்து. தமிழ்நாட்டில் 1985 முதல் இதுவரை 22 ஆண் காட்டு யானைகள் மட்டுமே பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடியேற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து யானைகள் காட்டை விட்டு வெகு தூரம் வெளியே வந்ததால் பிடிக்கப்பட்டு மீண்டும் அதே காட்டில் விடப்பட்டவை. மற்ற யானைகள் வேறு காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்கிறார் அவர். ''இவற்றில் பெரும்பாலான யானைகள் விடப்பட்ட சில நாட்களிலேயே காட்டை விட்டு வெளியே வந்து பயிர் சேதம் விளைவித்தல், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் மீண்டும் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றப்பட்டன. சில யானைகள் இறந்து போயின. சில யானைகளைப் பற்றிய தகவல் இல்லை.'' என அவர் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''யானைகளை இடமாற்றம் செய்யும் பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் 2 காட்டுயானைகளை பிடித்து 200 கி.மீ. தள்ளி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் விட்டனர். ஆனால் அந்த இரு யானைகளும் ஹாசன் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டன.'' என்றார். ''பிரச்னைக்குரிய யானைகளை கும்கியாக மாற்ற வேண்டும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். யானைகளை இடமாற்றம் செய்யும்போது, வழக்கமான கூட்டத்தின் தொடர்பற்ற புதிய காட்டில் தனித்துவிடப்படும்போது அவை மன அழுத்தத்துக்கு உள்ளாவதும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளால் இறந்து போவதற்கும் சாத்தியம் அதிகமுள்ளது. அதனால் யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான நெறிமுறைகளை மறுஆய்வு செய்து புதிதாக உருவாக்குவது நல்ல முயற்சிதான்.'' என்றார் காளிதாசன். யானைகளை இடமாற்றம் செய்வதற்கு தற்போது கடைபிடித்து வரும் இந்திய காட்டுயிர் மையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில்லாமல் புதிதாக உருவாக்குவதன் அவசியம் என்ன என்ற கேள்வியையும் பலரும் முன் வைக்கின்றனர். ஆனால் தேசிய அளவில் மட்டுமின்றி, மாநிலத்துக்குள்ளேயே யானைகளால் ஏற்படும் பிரச்னை, பகுதிக்குப் பகுதி வெவ்வேறாக இருக்கும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறினார். ''ஓசூரில் 30–60 யானைகளைக் கொண்ட யானைக்கூட்டம் அதிகமாக இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கேழ்வரகு (ராகி) உண்பதற்காக தனது கூட்டத்தை மூத்த பெண் யானை வழிநடத்தி வரும். அவற்றைக் கையாள்வது ஒரு சவாலாக இருக்கும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலேயே பவானி சாகரில் ஒரு விதமாகவும், கடம்பூரில் வேறு விதமாகவும் பிரச்னை இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஒற்றை ஆண் யானைகளால்தான் பிரச்னை ஏற்படும்.'' என்றார் அவர். ஒற்றை யானைகளை இடமாற்றம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கும் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன், ''ஆப்ரிக்காவில் மிகவும் அறிவியல்பூர்வமாக யானைகளை இடமாற்றம் செய்கிறார்கள். முதலில் அதன் குணாதிசயத்தைக் கவனிப்பார்கள். பின் மன அழுத்தத்தை சோதிப்பார்கள். இடமாற்றத்துக்கு முன்னும் பின்னும் அந்த யானைகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.'' என்கிறார். யானை ஆராய்ச்சியாளரும், உதவி பேராசிரியருமான பாஸ்கரன், தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். ''அத்தகைய அறிவியல்பூர்வமான நெறிமுறைகளை உருவாக்கும் நோக்கத்தில்தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். காட்டுயானைகளை இடமாற்றம் செய்கையில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.'' என்கிறார் பாஸ்கரன். "ஒரு யானை கூட இறக்கக் கூடாது என்பதே நோக்கம்" படக்குறிப்பு,வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தற்போது யானைகளை இடமாற்றம் செய்வதற்கு கடைபிடிக்கப்படும் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான வழிகாட்டுதல் நெறிமுறைகள், தமிழகத்தின் காட்டுயிர் பிரச்னைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்கிறார் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ. அந்த காரணத்தால்தான் தனியாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை (Sop) உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, ''எக்காரணத்திற்காகவும் இடமாற்றத்தின்போது அல்லது அதற்குப் பின் ஒரு யானை கூட இறக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம். கடந்த ஓரிரு ஆண்டுகளில் 8–9 காட்டு யானைகளை இடமாற்றம் செய்த நிலையில், இந்த 2 யானைகள் மட்டும் இடமாற்றத்திற்குப் பின் இறந்துள்ளன என்பதால், அதில் ஏதாவது தவறு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதும், அப்படியிருந்தால் அது எதிர்காலத்தில் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுப்பதும் நம் பொறுப்பு என்பதால்தான் தகுந்த நிபுணர்களால் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நிலை வனஉயிரினப் பாதுகாப்பு நிறுவனம், இத்தகைய விஷயங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யும் நிறுவனம் என்பதால்தான் அதன் இயக்குநர் உதயனை இதற்கு தலைவராக நியமித்துள்ளோம்.'' என்றார் சுப்ரியா சாஹூ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c075mge92gko
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 21 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" பண்டைய தமிழர் நிலம் ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த அந்த திணைகளில் வாழும் மக்களின் உணவு முறை அவர்களின் உழைப்புக்கும் சூழலிற்கும் ஏற்ப இருந்தன என்பதை அறிகிறோம். முல்லை நிலத்து இடையர், பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். ஆட்டுக்கறி, உடும்புக்கறி ஆகியவற்றை சமைத்தும், குச்சியில் கோர்த்து சுட்டும் உண்டனர். விருந்தினர் வந்தால், தினையும் பாலும் சேர்த்து சமைத்த சோறு பரிமாறினர். மற்றும் சோளம்,அவரை, துவரை, தயிர், மோர், நெய் போன்றவற்றையும் உண்டு மகிழ்ந்தனர். மருதத்தில், வாழ்ந்த விவசாயிகள், நெல்லு, கரும்பு, மற்றும் காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். முல்லை மலர் போன்ற முனை முறியா அரிசி சோறு, கோழி பொரியல் ஆகியவற்றை வாழை இலை, ஆம்பல் இலையில் வைத்து உண்டனர். மற்றும் கஞ்சி, தேன், பால், நெய் போன்றவற்றுடன் சேர்த்து பலவகை பதார்த்தங்கள், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், கரும்பு போன்றவற்றையும் உணவிற்கு பாவித்தனர். உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே. ஆகவே, இந்த மருத நிலத்து மக்கள் கட்டிடங்களையும் மாளிகைகளையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள். நெய்தல் நிலம், ஒரு மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளையவில்லை. ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்தார்கள். கடலில் சுறா, இறால், திருக்கை முதலான மீன் வகைகள் அவர்களுக்கு உணவாக அங்கு கிடைத்தன. அவற்றைப் பிடித்து வந்து, தேவைக்கு அதிகமானவற்றை, அயல் ஊர்களில் பண்டமாற்று செய்து, அதற்குப் பதிலாக தானியங்களைப் பெற்றார்கள். மேலும் இவர்கள் அகன்ற வாயை உடைய ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி கஞ்சி அல்லது வடிசாறையும் கள்ளையும் குடித்தார்கள். குறிஞ்சி நில குறவர், மலைகளிலும் மலைச் சாரல்களிலும் நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும், தினையையும் அரிசியையும், மற்றும் பழங்கள், காய்கறி பயிர் செய்தார்கள். மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று.பலா மரங்களிலே பலாப்பழங்கள் கிடைத்தன. மற்றும் ஆட்டுக்கடா இறைச்சியும் அரிசியில் அல்லது தினை யரிசியிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு வகை கள்ளையும் குடித்தனர். அத்துடன் தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள். பாலை நில வேடுவர், சிவப்பு அரிசியும் வேட்டையாடிய விலங்குகளையும் பொதுவாக உண்டனர். இவர்கள் சிலவேளை கடன் வாங்கி "கள்" குடித்தும் உள்ளனர் என்பதை சங்க பாடல் மூலம் அறிகிறோம். சங்க காலத்தில், தமிழ்க்குடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பு மிக்கதாகும். அங்கு பணக்கார மற்றும் ஏழை மக்கள், இருவரும் விருந்தினர்களை புன்முறுவலுடன் உபசரித்தனர். ஆனால் இப்போது அதன் சிறப்பு குறைந்து கொண்டே வருகின்றது. "விருந்தினரைக் கண்டால் அவர்களுக்கு ஒன்றும் அளிக்க முடியாததால் ஒளிந்து கொள்கிறேன். என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது" - என புறநானுறு 266, வரிகள், 11-13, "விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப், பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன், அறிவுகெட நின்ற நல்கூர் மையே." என்று கூறுவதில் இருந்து அதன் சிறப்பை அறிய முடிகிறது. மகிழ்ச்சி நிரம்பிய விழாக்களில், அரசனும் செல்வந்தரும், பொதுமக்களுக்கு பல வகை இனிக்கும் ஆகாரம் வழங்கினர். இப்படி இவர்கள் கொடுத்த உணவு வகைகளைப் பற்றி, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்கள் வர்ணிக்கின்றன. இந்த பாடல்கள், பொது மக்களின் உணவையும் மற்றும் அரண்மனை விழாக்களில், கொண்டாடங்களில், திருமண விழாக்களில் சமைக்கப்பட்ட உணவையும் எடுத்து கூறுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியம், கி மு 700 இல் இருந்து அறியப்பட்டு இருந்தாலும், கி மு 300 - கி பி 300 இடைப்பட்ட ஆண்டிலேயே தமிழரின் உணவு பண்பாடு பற்றி சங்க இலக்கியத்தில் அறியமுடிகிறது. "கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்" [63-64] மற்றும் “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178] போன்ற பட்டினப்பாலை அடிகள், அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும், பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் கடை முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக அது எடுத்து கூறுகிறது. மேலும் விளைந்த நெல்லை - மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், மாலை சிற்றுண்டியாக பொரி, என நெல்லை தேவைக் கேற்றபடி தயாரிக்கவும் அறிந்து இருந்தது மட்டுமல்ல, இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பமும், நீண்ட வெள்ளை சரங்களை போன்று அவிக்கப் பட்ட இடி அப்பமும் பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் கூறப் பட்டுள்ளது. என்றாலும் இன்று அவிப்பது போன்ற நீராவியில் சமைத்த வட்ட வடிவ இடியப்பம் அன்று இருக்கவில்லை. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 22 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 21 "Food Habits of Ancient Sangam Tamils continuing" We know that the ancient Tamil land was divided into five divisions and the diet of the people living in those divisions was according to their labor and environment. The herdsmen of mullai (forest tracks) region raised cows, goats and buffaloes. They ate lamb and iguana cooked and grilled. If a guest came, rice cooked with millet and milk was served. And they enjoyed eating corn, Lablab purpureus [is a species of bean / avarai], The pigeon pea (Cajanus cajan / is a perennial legume / Tuvarai) , curd, buttermilk, ghee etc. In marudham, Farmers cultivated food items such as paddy, sugarcane, and vegetables. They ate end unbroken rice and fried chicken on banana leaves and the water lily [ambal] leaves. And along with porridge, honey, milk, ghee etc., they used to eat various foods like mango, jackfruit, banana, sugarcane etc. History tells us that people in all countries of the world have been civilized on the banks of rivers and lakes. In Tamil Nadu too, the people have been civilized on the banks of rivers and lakes. So the people of this marudham land built buildings, mansions and palaces and lived civilized and well. The Neidhal land is a sandy land, so grains such as paddy and millet are not grown here. So the people of Neythal land went far out into the sea in rafts and boats and caught fish. Fish like sharks, prawns, and shrimps. Whatever extra, they bartered them in the neighboring towns for grain in return. And they drank rice gruel or toddy [Arici kañci, vaṭicāṟaiyum kaḷḷaiyum / Rice porridge or the naturally alcoholic sap of some kinds of palm, used as a beverage in tropical countries] kept in wide-mouthed jars. The Kurinji land cultivator used to plow the land in the hills and slope of hills only with a spade and cultivated crops of paddy [Mountain paddy, wild rice / ஐவன நெல் Aivaṉa nel], millet and rice [Arici], and fruits and vegetables. Mountain honey was found on the rocks at the top of the hill. Sweet potato was grown. Jackfruits were found. And they had mutton and drank toddy, distilled from rice or a type of millet. They also poured honey into bamboo pipes and processed it to make a kind of wine. In Palai land, Veddas usually ate red rice and wild animals meat hunted by them. We learn from the Sangam poems that Veddas sometimes take loans from others and drank toddy. Hospitality was considered virtue and both the rich and the poor delighted in serving their guests, and ate what was left. In Purananuru 266, lines,11-13,The poet requests the king to help him immediately to remove his poverty. He feels his poverty is shameful that made him hide him while the host approaches as: "O Chenni with strong horses! Please grant me rapid relief from this poverty, like you are listening to a request for help in an assembly of noble men. My thoughts are muddied within my body with all the senses, my life is twisted, and I hide myself whenever I see my guests!" On festive occasions the king and the rich held free feasts and several delicacies were offered. The food that the king provided to his court poets, soldiers and subjects is often descried in detail in over 2000 years olds Sangam poems. Several of these poems describe of foods of the common people and feasts that were prepared and served at the palaces, at festivals, and at weddings. Though, the earliest Tamil writings are traced to about 700 BC, but references to edibles and food habits abound in literature between 300 BC and 300 AD. Pattinap - Palai mentions fish being sliced at the port of Pukar in the mouth of the Kaveri, and fishermen partaking of dishes of fried sweet prawns and boiled field tortoise. The staple food of the Tamils then as now seems to have been rice, supplemented with various vegetables and meats. Milk, butter and honey also seem to have been in common use. Many forms of rice were already known, like parched or flattened rice, puffed rice [is made by heating rice in a sand-filled oven], and parboiled rice [is rice that has been partially boiled in the husk]. Rice appam, a pancake soaked in sweetened milk was already well established and Idi-appam, cooked rice in the form of long white strings rather like fine noodles, is also mentioned even at this early date in ancient Sangam poems Perumpanattuppadai, Mathuraikanchi and Silappathikaram. However, Idiyappam, as traditionally known as fresh steam-cooked, a circular pattern fine rice noodles was not existed at that time. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 22 WILL FOLLOW
-
சமையல் செய்முறைகள் சில
சிறுதானியச் சிறப்பு ரெசிப்பி படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தே.அசோக்குமார் பழந்தமிழர் உணவில் பெரும்பங்கு வகித்தவை சிறுதானியங்களே. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைச் சிறுதானியங்கள் சிறப்பான முறையில் அளிக்கின்றன. வரகு, கேழ்வரகு, கம்பு, தினை ஆகிய சிறுதானியங்களிலிருந்து சுவையான இனிப்பு, காரம், பானம் ஆகியவற்றைத் தயாரிக்கும் ரெசிப்பிகளை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. வரகு காரத் தட்டை தேவையானவை: வரகு அரிசி - 2 கப் பொட்டுக்கடலை - அரை கப் கடலைப் பருப்பு - கால் கப் தேங்காய் - அரை மூடி (துருவியது) மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வரகு அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கிச் சலித்து எடுக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். அரைத்த வரகு அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஊறவைத்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்துத் தட்டைகளாகத் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். வேர்க்கடலை - கம்பு சிப்ஸ் தேவையானவை: கம்பு - ஒரு கப் வேர்க்கடலை - அரை கப் கோதுமை மாவு - அரை கப் பொட்டுக்கடலை - கால் கப் பொடித்த மிளகு - சீரகம் - ஒரு டீஸ்பூன் வெண்ணெய் - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: கம்பு, வேர்க்கடலையைத் தனித்தனியே வறுத்து மிக்ஸியில் மாவாக்கவும். பொட்டுக் கடலையையும் மாவாக்கிக்கொள்ளவும். இவற்றுடன் பொடித்த மிளகு - சீரகம், கோதுமை மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். சிறிதளவு மாவை எடுத்து உருண்டையாக்கி, சற்று கனமான சப்பாத்தியாக இட்டு வட்டம், சதுரம் எனத் தேவையான வடிவில் சிப்ஸாகச் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மாவு முழுவதையும் இதுபோல செய்து கொள்ளவும். சுவையான, கரகரப்பான வேர்க்கடலை - கம்பு சிப்ஸ் ரெடி. கேழ்வரகு இனிப்புப் புட்டு தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப் நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப் தேங்காய்த் துருவல் - அரை கப் ஏலக்காய் - ஒன்று (தூளாக்கவும்) நெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - கால் டம்ளர் உப்பு - அரை டீஸ்பூன் செய்முறை: கேழ்வரகு மாவுடன் சிறிதளவு உப்பு கலந்த நீரைத் தெளித்துப் பிசையவும். கட்டிகள் இல்லாதவாறு நன்கு உதிர்த்து எடுக்கவும். அனைத்து மாவும் நீருடன் கலந்து மென்மைத் தன்மை வந்ததும், காட்டன் துணியை நனைத்து நன்கு பிழிந்துவிட்டு, அதில் இந்த மாவைக் கொட்டி, மூடி இட்லித் தட்டில் வைத்து, 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். இதை முதல்நாள் இரவு செய்து வைத்து கொள்ளவும். அடுத்த நாள் காலை மீண்டும் இந்த மாவில் உப்பு கலந்த நீரைத் தெளித்து, உதிர்த்துக் கலந்து, 20 நிமிடத்தில் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதில் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நெய்விட்டுப் பரிமாறவும். குறிப்பு: முளைகட்டிய கேழ்வரகு மாவாக இருந்தால் கூடுதல் சத்து கிடைக்கும். உடனே சாப்பிட வேண்டும் என்றால் ஒருமுறை ஆவியில் வேகவைத்தால் போதுமானது. இருமுறை வேகவைப்பதால் சுவை அதிகரிப்பதுடன் புட்டு, பூ போன்று மென்மையாகும். தினை அப்பம் தேவையானவை: தினை - 2 கப் தேங்காய் - அரை மூடி பொடித்த வெல்லம் - ஒரு கப் வாழைப்பழம் - ஒன்று ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் நெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: தேங்காயைத் துருவி கெட்டியாகப் பால் எடுத்துக்கொள்ளவும். தினை அரிசியை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப்பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாகக் கரைக்கவும். பணியாரக் கல்லில் நெய்விட்டு ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடிவைத்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். கம்பு - தேன் லட்டு தேவையானவை: கம்பு மாவு - 1 கப் கேழ்வரகு மாவு - கால் கப் பொட்டுக்கடலை மாவு - கால் கப் தேன் - முக்கால் கப் ஏலப்பொடி - அரை டீஸ்பூன் நெய் - கால் கப் முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன் (நறுக்கியது) செய்முறை: கம்பு மாவு, கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் கலந்துகொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து லேசாக வதங்கியதும் மாவையும் சேர்த்து வறுத்து இறக்கி, சில நிமிடங்கள் ஆறவிடவும். சூடு குறைவதற்குள் மேலும் சிறிது நெய் விட்டு கலந்து, தேனும் ஊற்றி மாவை உருண்டையாகப் பிடித்து வைக்கவும். ஆறவிட்டு டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் வரை கெடாது. காலை நேரப் பசிக்கு மிகவும் ஏற்றது. வரகு இலை அடை தேவையானவை: வரகு மாவு - 1 கப் வெல்லம் - 200 கிராம் நெய் - 2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் வாழை இலை - 5 சதுரங்கள் உப்பு - அரை டீஸ்பூன் செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் வடிவட்டி வைக்கவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைப் போடவும். நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதில் வெல்லத்தை ஊற்றவும். நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள் போட்டு நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விட்டு கெட்டி பதம் வந்ததும் நெய்விட்டு பூர்ணமாக்கி இறக்கிவிட்டு ஆறவிடவும் வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு பாத்திரத்தில் வரகு மாவை இட்டு அதில் நெய்விட்டு, கொதிக்கும் நீரை வேண்டிய அளவு ஊற்றி வேகமாகக் கிளறவும். மாவு இறுக்கமாக கொழுக்கட்டைப் பிடிக்கும் பதம் வந்ததும் நெய் தடவிக்கொண்டு, பந்து போல் பிடித்து வைக்கவும். வாழை இலையில் நெய் தடவி வரகு பந்தை வைத்து வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் தேங்காய் பூர்ணத்தை வைத்து இலையோடு சேர்த்து மடித்து வைத்துக்கொள்ளவும். இட்லிக் குக்கரில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வாசமான வரகு இலை அடை ரெடி. தினை மில்க் ஷேக் தேவையானவை: தினை மாவு - அரை கப் தண்ணீர் - ஒரு கப் பால் - 1 கப் பேரீச்சம் பழம் - 5 ஏலத்தூள் - அரை டீஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - அரை கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தினை மாவைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி கலந்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் ஆறவிட்டு 20 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர், எடுத்து அதில் ஏலத்தூள், பேரீச்சம் பழம், நாட்டுச் சர்க்கரை, பால், தண்ணீர் சேர்த்து ஜூஸரில் நன்கு அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பரிமாறவும். சுவைகேற்ப சர்க்கரையின் அளவைக் கூட்டிக்கொள்ளவும். கேழ்வரகு கொள்ளு கருப்பட்டி பானம் தேவையானவை: கேழ்வரகு - கால் கப் கொள்ளு மாவு - கால் கப் கருப்பட்டி - 1 கப் (தூளாக்கியது) ஏலத்தூள் - அரை டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: குக்கரில் கேழ்வரகு மாவு, கொள்ளு மாவு, கருப்பட்டி, ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர்விட்டு கரைத்து, குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விட்டு வேகவைத்து எடுக்க, சுவையான கேழ்வரகு - கொள்ளு - கருப்பட்டி பானம் ரெடி தினை பாயசம் தேவையானவை: தினை மாவு - 1 கப் வெல்லம் - 1 கப் பாசிப்பருப்பு - கால் கப் ஏலத்தூள் - அரை டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் முந்திரி, திராட்சை - தலா 1 டீஸ்பூன் செய்முறை: வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து அடுப்பில் வைக்கவும். முழுவதும் கரைந்தவுடன் வடிகட்டிக்கொள்ளவும். பாசிப்பருப்பை வேகவிடவும். பருப்பு பாதி வெந்ததும் தினை மாவை வெல்லத்துடன் கலந்து அதில் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து வெந்து வரும்போது, ஏலத்தூள் தூவி, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்க்கவும். தினை பூரணக் கொழுக்கட்டை தேவையானவை: தினை மாவு - ஒரு கப் பச்சரிசி மாவு - கால் கப் உப்பு - கால் டீஸ்பூன் சுடுநீர் – தேவையான அளவு பூரணம் செய்ய: வறுத்த எள் - ஒரு கைப்பிடி அளவு தேங்காய் - அரை மூடி (துருவவும்) வெல்லம் – அரை கப் செய்முறை: தினை மாவுடன் பச்சரிசி மாவு, உப்பு, சுடுநீர் சேர்த்து நன்கு கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்குப் பிசையவும். எள்ளுடன் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதுவே பூரணம். பிசைந்து வைத்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் தட்டி, நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு, ஒரு கொதிவிட்டு கரைந்தபின் வடிகட்டி, அதிலும் மாவைப் பிசைந்துச் செய்யலாம்.
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 04 "அறிமுகம் தொடர்கிறது" / "Introduction continuing" பொதுவாக தமிழர்களின் பாரம்பரிய உணவாக, பிறந்த பிள்ளைக்கு [குழந்தைக்கு] முதன் முதலாக ஆறாம் அல்லது ஏழாவது மாதத்தில் சக்கரைப் பொங்கல் அல்லது தேனும், தயிரும் நெய்யும் கலந்த சோறு ஊட்டப்படும். அதே போல குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும், பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக் கட்டை அவித்து, அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள். முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தி அடைதல் [சாமத்திய சடங்கு], பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல், மஞ்சள் நீராட்டு விழா எனும் பெயர்களால் இன்னும் பாரம்பரியமாக தமிழர்களும் வேறு பிரிவினரும் [ஆப்பிரிக்கா] கொண்டாடு கிறார்கள். உளுந்தக் களி, நல்லெண்ணெய் என உணவே மருந்தாக, உடல்நலத்தை மையமாகக் கொண்டு, உணவு அங்கு கொடுக்கப்படுகின்றன. முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு, ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது. அங்கு பல வித சாதம் / பொங்கல் [புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், ...] இடம் பெறுகின்றன. இதே போல வெயில் காலத்தில் உழவர்களும் மற்றும் வெயிலில் நெடுநேரம் வேலை செய்ய வேண்டியுள்ள தொழிலாளிகளும் ஒடியல், கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து தயிர் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூழ்ம நிலையிலுள்ள உணவான 'கூழ்' உணவை விரும்பி உண்கின்றனர். அண்மைக் காலங்களில் உடல் நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழர் வாழும் இடங்களில், உணவு பழக்கங்கள் மிக மந்தமாகவே மாற்றம் அடைகின்றன. என்றாலும் மாற்றத்தின் சில அறி குறிகள் இப்ப தெளிவாகக் தென்படு கின்றன. பொதுவாக கோதுமை மா, தாராளமாக நகர்ப்புற பகுதிகளில் பாவிக்கப்படுகின்றன, அவர்கள், கோதுமை மாவில் சூடுபடுத்தி தயாரிக்கப்படும் சப்பாத்தியை பெரும்பாலும் இரவு சாப்பாட்டாகவும், கோதுமை மாவில் பொறித்து தயாரிக்கப்படும் பூரியையும், அதனுடன் உருளைக்கிழங்கையும் காலை சாப்பாட்டாகவும் அரிசிக்கு பதிலாக பாவிக்கிறார்கள். இன்றைய நவீனமயமாக்கல், தமிழரின் சமையல் அறையிலும் மெல்ல மெல்ல மாற்றங்களை கொண்டு வருகின்றன. விட்டுக் கொடுப்பும் இணக்கமும் கண்டு மாற்றி அமைக்கப் படுகின்றன. விரிவாக மிகுந்த அக்கறையுடன் நிதானமாக சமைக்க வேண்டிய பாரம்பரிய உணவு செய்முறை மறைந்து வருகின்றன. முன்னமே தயாரிக்கப்பட்ட [ரெடிமேட்] இட்டலி கலவை, தயார் செய்து பெட்டியில் அடைக்கப்பட்ட கறித்தூள், போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்ப நகர்ப்புற சமையல் அறைகளை ஆட்டிப்படைக்கின்றன. அது மட்டும் அல்ல மின்னாற்றலால் இயங்கும் மேசை மேலான ஈரமாவு அரவைப் பொறி, இப்ப ஆட்டுக்கல்லிற்குப் பதிலாக இட்லி, தோசை, வடை போன்றவை தயாரிக்கப் பயன்படு கின்றன. கூட்டுக் குடும்பம் மறைந்து இன்று தனிக் குடும்பம் எங்கும் பரவலாகக் காணப் படுவதும், தொழில் புரியும் பெண்கள் அதிகரித்து இருப்பதும், இப்படியான தவிர்க்க முடியாத இன்றைய சூழ்நிலை, தமிழர்களின் சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துள்ளது. அவர்கள் இன்று இலகுவான சில உணவு வகைகளை நாடு கின்றனர். எனினும் தமிழர் உணவு நடைமுறைகள், அவர்களின் பண்பாட்டு தாக்கங்கள், ஈடுபாடுகள் இன்னும் அவைகளின் அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளன. முதலாம் நூற்றாண்டு சில உணவு செய்முறைகளை இன்னும் அப்படியே அவ்வளவு பெரிய மாற்றம் இன்றி இன்னும் பின்பற்றுகிறார்கள். "பெரு மனிதக் குரங்குகள்" என அழைக்கப்படும் சிம்ப்பன்சிகள், அண்மைக் காலம் வரை குறள சிம்ப்பன்சி அல்லது குட்டிச் சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்ட, பொனொபோ, இவைகளின் பரம்பரையில் ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய மனிதனின் பொது முதாதையர் தொடக்கம் இன்றுவரை உணவு பழக்க வழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடைந்துள்ளன. இந்த தொடர் கட்டுரையில் , குறிப்பாக திராவிடர் முதாதையர்களிடம் எப்படி உணவு பழக்கங்கள் வளர்ச்சி அடைந்தன, அவை எப்படி இன்றைய திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களை வடிவமைத்தன என அலச உள்ளோம். மனுவேந்தனின், தீபம்.கொம் [Theebam.com] இலும், என் வலைத்தளம் "A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, இலும், 82 பகுதிகளாக "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" என்ற எமது தொடரில் நாம் விரிவாக ஏற்கனவே விளக்கியவாறு, மெசொப்பொதாமியா சுமேரியர்கள், ஹரப்பா - மொகெஞ்சதாரோ போன்ற பகுதிகளை சேர்ந்த சிந்து சம வெளி மக்கள், தமிழக சங்கம் மக்கள், தமிழக மத்திய கால அல்லது பக்தி கால மக்கள் - இவர்கள் எல்லோரும் இன்று திராவிடர்களிடம் / தமிழர்களிடம் காணப்படும் உணவு பழக்க வழக்கங் களுக்கும், அவைகளை வடிவமைப் பதற்கும் காரணமாக இருந்து உள்ளனர். ஆகவே இந்த தொடரை ஆரம்பத்தில் இருந்து எல்லா கால கட்டங்களிற்கும் ஊடாக நகர்த்தவுள்ளோம். அநேகமாகக் 'கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் ...’ என்ற திரைப் பாடல் தமிழர்களின் இன்றைய அறுசுவை விருந்து உணவு ஒன்றை கட்டாயம் படம் பிடித்து காட்டுகிறது. அதனால் அந்த பாடலை இந்த அறிமுகத்தின் முடிவாக இங்கு பதிக்கிறோம். "கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம் அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே சந்தோஷ மீறிப் பொங்க இதுவே எனக்குத் திங்க புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு பூரி கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு ஏராளமான தட்டு இனி இஷ்டம் போல வெட்டு" [திரைப்படம்: மாயா பஜார் / 1957] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 04 "Introduction-continuing" Generally as a traditional food of Tamils, The first rice meal given to a baby in the seventh month is 'sarkarai pongal', a combination of rice-milk, sugar and ghee. The teething of a child calls for 'pal kozhukattai' (tiny rice flakes resembling teeth, cooked in milk with sugar). The coming of age of a daughter is an important family event, as it is in all traditional communities. A kind of pasty pottage made with urad dal [ulutham kali / Black gram porridge] & gingelly oil are the main part of the food. Ulutham kali is usually made with black urad dal with skin as it is supposed to be more healthy and this used to give to the teen age girls, at the time of puberty to make the bones strong. 'Valaikappu' ['Bangle Ceremony'] or 'Seemandam', celebrated in the seventh or ninth month of pregnancy to bless a pregnant woman, calls for a variety of rice preparations such as 'Puli Sadham' ['Puliyodharai' or 'Tamarind Rice'], 'sakkarai pongal' ['Sweet Rice dish'], 'ven pongal' [Rice and Lentil Pudding]. Also during hot summer, among the Tamils mainly from south India and Sri Lanka, a porridge called Koozh made from millet such as 'Kezhvaragu' [finger millet, also known as ragi] or 'Cumbu' [Pearl millet] flour and broken rice is very popular and farmers and other workers who worked under the burning sun enjoy this tasty cool food with curd. Also it is served on special occasions and family gatherings too. But the traditional 'koozl' recipe from the North of Sri Lanka is mainly made from a palmyrah product called 'Odiyal' [a healthy and nutritious root of the palmyrah]. It almost tastes like a spicy seafood soup but the varieties of ingredients give an extra taste which you never get from an ordinary spicy seafood soup. It combines tamarind - based broth [குழம்பு] with seafood such as cuttlefish, prawns, crayfish, crabs, as well as different types of fish. Apart from seafood, the dish also incorporates various spices and vegetables, and it is traditionally thickened with odiyal — the flour made from palmyra tuber. Change in food habits is slow in coming to Tamil lands, but some signs of it can be seen. Wheat is being increasingly used in urban areas. 'Chappathi' (wheat flour pancake) may be substituted for rice, especially for dinner, and poori (a deep - fried wheat pancake) and potato be served as breakfast. Modernization is also slowly bringing changes to the culinary scene. Compromises and adaptations are being made. Traditional recipes that call for elaborate and leisurely cooking are disappearing. Processed foods such as ready - made idli - mix and pre - packed curry powders have invaded urban kitchens. Mechanical aids such as motorized idli - grinders are also being used in traditional cooking. The break - up of the joint family and the increase in the number of career women have inevitably changes some Tamil Eating habits. A movement towards a simpler cuisine can be sensed. However, Tamil food practices and their cultural implications still retain their basic character. Some of the recipes that were in use in the first century AD are still being followed today, pretty much unchanged. Since the last common ancestor shared by modern humans, chimpanzees and bonobos, the lineage leading to Homo sapiens has undergone a substantial change in food habits. In this article, we try to review the evolutionary changes that occurred in the food habit of human beings, mainly on dravidian ancestors & how it shaped up the food habits of the present Dravidians, particularly Tamils. As we have already explained in detail in our former article, "Origins of Tamils? [Where are Tamil people from?]", published in 82 parts in Theebam.com as well as "A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, Sumerians of Mesopotamia, Indus valley people of Harappa, Mohenjo-Daro. Sangam people of South India, Medieval period people of south India are all found linked with the shaping up of present Dravidians / Tamils as we seen today. Hence we will present this article in serials covering all these periods starting from the first Human. The Tamil movie song from "Maya Bajar", which describe the present day Tamilians six taste wedding feasts, starting line with "wedding cooking rice and vegetable curries are amazing, That honor offering is enough for me ... " is given below as a conclusion of this introduction: "kalyaaNa samaiyal saadham kaai kaRikaLum pramaadham andha kowravaprasaadham idhuvE enakkup pOdhum andhaara pajji angE sundhaara sojji ingE sandhOsha meeRip ponga idhuvE enakkuth thinga puLiyOdharaiyin sORu veku poruththamaai saampaaru poori kizhangu paaru idhuvE enakku jOru jOraana sEni lattu suvaiyaana seeni puttu EraaLamaana thattu ini ishtam pOla vettu" "கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம் அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே சந்தோஷ மீறிப் பொங்க இதுவே எனக்குத் திங்க புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு பூரி கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு ஏராளமான தட்டு இனி இஷ்டம் போல வெட்டு" [Movie:MAYA BAJAR 1957-Songs about Wedding Feast] Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 05 WILL FOLLOW
-
எலும்பு வலு இழப்பது ஏன்?
எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு. காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு. இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு. என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி? முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம். என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
-
பாலாறு அழியப் போகிறதா? கடும் அச்சத்தில் விவசாயிகள் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டை வளப்படுத்தும் முக்கிய ஆறுகளுள் ஒன்றான பாலாறு, கழிவுகள் கலந்து முற்றிலும் காணாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு, அம்மாநிலத்தில் இருந்து 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ கடந்து தமிழகத்தை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 222 கி.மீ தூரம் ஓடும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கி.மீ. தமிழ்நாட்டில் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாற்றினால் தமிழகத்தில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள், நீர் பெற்று அவற்றின் கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. பாலாற்றின் துணை நதிகளாக மலட்டாறு, பொன்னையாறு, சேயாறு, கள்ளாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பாலாற்றில் மொத்தம் 606 ஆற்றுக் கால்வாய்கள் இருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக (வட ஆற்காடு மாவட்டம்) ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டம்தான் அதிக அளவில் நெற்பயிரிடும் பகுதியாக இருந்தது. மேலும் தென்னை, வாழை, கரும்பு, கேழ்வரகு, பருத்தி உள்ளிட்ட பல பயிர்களும் பயிரிடப்பட்டிருக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த பாலாற்றில், பல்வேறு கழிவுகள் கலப்பதால் மோசமான நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். வேலூர் தொகுதி மக்களின் இந்த முக்கியப் பிரச்னை வரப்போகும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா? பாலாற்றில் கலக்கப்படும் கழிவு நீர் பாலாற்றில் கலக்கப்படும் கழிவுகளில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள், உதயந்திரம் பேரூராட்சியின் 15 வார்டுகள், ஜாப்ரபாத், கிரிசமுத்திரம், வளையம்பட்டு ஊராட்சிகளின் ஒட்டு மொத்த கழிவுநீரும் பாலாற்றில்தான் விடப்படுகிறது. இதுமட்டுமின்றி பாலாற்றின் படுகையில் உள்ள மேலும் சில கிராம ஊராட்சிகளில் இருந்தும் நேரடியாக கழிவு நீர் பாலாற்றில் விடப்படுகிறது. இதேபோல குப்பைகள், தோல் கழிவுகள், மருத்துவக் கழிவுகளையும் கொட்ட பாலாற்றைப் பயன்படுத்துவதாக இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மையில் தமிழ்நாடு அரசு நடத்திய புற்றுநோயைக் கண்டறியும் சோதனையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 541 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அசோகன் கூறுகிறார். தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தோல் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதிகளில் பெண்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலாற்றை நம்பியுள்ள நாலரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் எதிர்ப்பைக் கடந்து 22 தடுப்பணைகளை ஆந்திரா அரசு கட்டியுள்ளது. அதையும் தாண்டி பாலாற்றில் தமிழக விவசாயிகளுக்காக ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரில் இதுபோன்ற பொருட்கள் கொட்டியும் தீயிட்டுக் கொளுத்துவதாலும் பாலாறு முற்றிலும் மாசடைகிறது என்கின்றனர் இந்தப் பகுதி விவசாயிகள். பாலாற்றில் நடக்கும் இந்த விதிமீறல் தொடர்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் அசோகன் பிபிசியிடம் பேசினார். “தமிழகத்தில் 222 கி.மீ. பாய்கின்ற பாலாற்றை நம்பி நாலரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருந்தன. ஆனால் இப்போது இந்தப் பகுதியில் விவசாயம் பல மடங்கு குறைந்துவிட்டது." பாலாற்றில் உள்ள குரோமியம் கழிவுகளை ஆய்வு செய்து எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறியக்கூட இதுவரை நீர்வளத்துறை அமைச்சகம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாலாற்றில் உள்ள தண்ணீரில் குடிக்க முடியாத அளவிற்கு உப்பு கலந்துள்ளது. அதை சரி செய்ய தமிழக அரசு எப்போது முன் வரும் என்று தெரியவில்லை என்கிறார் அசோகன். “சில வருடங்களுக்கு முன்புவரை பாலாற்றில் எப்பொழுதுமே மணலுக்கு அடியில் ஊற்று வந்து கொண்டிருக்கும். ஆனால் இன்று இந்தப் பகுதியில் அதிக மணல் அள்ளப்படுகிறது. இது நிலத்தடி நீரை மேலும் குறைக்கிறது.“ இதனால் தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வெற்றிலைக்குப் புகழ்பெற்ற ஆம்பூர் படக்குறிப்பு, வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உறுப்பினர் அசோகன். நெல் விவசாயம் தவிர, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் வெற்றிலை விவசாயம் நடந்த நிலங்கள் அனைத்தும் இப்போது வளமிழந்து பயன்பாடில்லாமல் இருப்பதாக ஆம்பூர் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ”இதனால் வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து, சராசரியாக ஒரு வீட்டில் ஐந்து கால்நடைகள் இருந்த நிலை மாறி வெகு சில வீடுகளில் மட்டுமே கால்நடைகளை மக்கள் வளர்க்கின்றனர்.” பாலாற்றில் தண்ணீர் மாசடைந்துள்ளதால், புகழ்பெற்ற ஆம்பூர் சீரக சம்பா அரிசி விவசாயமும் தற்போது இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட தேங்காய் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி முதல் செங்கல்பட்டு வரை பாலாற்றின் படுகையில் இருந்த விளைநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது விவசாயம் நடைபெறவில்லை. பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வணிகப் பயன்பாட்டு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முல்லை. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதியை ஒதுக்கி பாலாற்றைக் காப்பாற்றவில்லை என்றால் காலப்போக்கில் பாலாறு காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கிறார் அசோகன். அவரது கூற்றுப்படி, பாலாற்றில் 28 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அளவீடுகளை வைத்துக்கொண்டு இதுவரை 10 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. "இன்னும் அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளைக் கட்டினால், வெள்ளம் ஏற்படும்போது வரும் தண்ணீரைச் சேமித்து பாலாற்றில் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும். அதனால் விவசாயமும் இந்தப் பகுதியில் வளம் பெறும்." தொன்மையான ஆறு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் முல்லை பிபிசியிடம் பேசியபோது, “பாலாறு இருக்கின்ற ஆறுகளிலேயே மிகவும் தொன்மையானது. பாலாற்றை நம்பித்தான் குடிநீருக்காக இருக்கிறோம். ரயில் நீர் என்று சொல்லி கோடிக்கணக்கான நீரை சதுரங்கப்பட்டணத்திற்குப் பக்கத்தில் இருந்து எடுத்து வருகிறார்கள். கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு பாலாற்றில் இருந்துதான் தண்ணீரை உபயோகம் செய்து வருகின்றனர்,” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பாலாறு. ஒரு லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அளிக்கிறது. பாலாற்றைப் பாதுகாத்தால் மட்டும்தான் தமிழகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். கூட்டுக் குடிநீரை சென்னை வரை எடுத்துக்கொண்டு போனது அனைத்துமே ரசாயனம் கலந்த தண்ணீர். அனைத்து கழிவுகளும் பாலாற்றில் கலக்கப்படுகிறது. கிருஷ்ணா நீரை ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து வரக்கூடிய உபரி நீரைச் சேமித்து வைப்பதற்காக தற்பொழுது தடுப்பணை கட்டி வருகின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் தமிழகத்திற்கு சுத்தமாக தண்ணீர் வராது. காவிரிக்கு ஒப்பந்தம் போட்டது போன்று ஆந்திரா அரசுடன் தமிழக அரசு 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட ஒப்பந்தம் போட வேண்டும்,” எனத் தெரிவித்தார். வாணியம்பாடி நகராட்சியிடம் இந்தப் பிரச்னை தொடர்பாக கருத்து கேட்டபோது, 37 கோடி ரூபாய்க்கு 83 கி.மீ. தொலைவில் 7 இடங்கள் கண்டறியப்பட்டு ஆறு மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை அமைப்பதற்கான இரண்டு ஏக்கர் இடம் வேண்டி மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி தெரிவித்தது. மேலும் வாகனங்களில் சேமிக்கப்படும் மலக்கழிவுகள் சுத்திகரிக்கப்படுவதற்காக 49 லட்சம் மதிப்பீட்டில் வளையம்பட்டு பகுதியில் 30 எம்எல்சி (Mlc) கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு, 10 எம்எல்சி தற்பொழுது முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் பயன்பாட்டிற்கு வருவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. துரைமுருகனின் பதில் பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து பிபிசியிடம் பேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோபாலகிருஷ்ணன், "நகராட்சிகளுக்கு கழிவுநீரை வெளியேற்ற வேறு வழியில்லாததால் பாலாற்றில் கொட்டுகின்றனர். ஆனால் இப்போது ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் பாதாள சாக்கடை திட்டம் வரவுள்ளது. ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வாணியம்பாடியில் இதற்கான பணிகள் பேச்சுவார்த்தை அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக" கூறினார். தோல் கழிவுகள் தொடர்பான கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்னையைக் கண்காணித்து வருவதாகவும் கூறினார். "பாலாற்றை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலரசம்பட்டி, கோவிந்தம்பாடி, செம்பாக்கம், அரும்பருத்தி, பொய்கையில் இறையன்காடு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது. கோட்டாறு பகுதி ஆறு தடுப்பணைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. அதில் தற்போது வரை மூன்று தடுப்பணைகளின் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள மூன்று தடுப்பணைகளின் பணி நடந்து வருவதாக வேலூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன் பிபிசியிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாலாறு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கும் நிதிகளின் அடிப்படையில் பணிகள் நடந்து வருவதாக" தெரிவித்தார். பாலாறு மேம்பாடு தொடர்பாகப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "பாலாற்றில் மழை அதிகம் பெய்தால் மட்டுமே வெள்ளம் வரும். மற்ற நேரங்களில் பாலாறு, காலியாகத்தான் இருக்கும். தென்பெண்ணையாற்றில் வெள்ளம் வரும்பொழுது, வெள்ளநீர் சாத்தனூருக்குச் சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. அப்படிப் போகிற வெள்ளத்தின் ஒரு பகுதியை காக்கங்கரை ஏரிக்குக் கொண்டு வந்து அங்கிருந்து கால்வாய் மூலமாகப் பாலாற்றில் சேர்த்து விட்டால் வருடம் முழுவதும் பாலாற்றில் நீர் இருக்கும். இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்,” என வாணியம்பாடியில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசினார். https://www.bbc.com/tamil/articles/c51mx72mnj8o
-
ரோடமைன் பி நச்சுப் பொருள், நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் இருக்கிறது தெரியுமா?
பஞ்சு மிட்டாயில் உள்ள நச்சுப் பொருள், நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் இருக்கிறது தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2024, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் சிறார்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரோடமைன் பி எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. அதனால் 90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான இனிப்பு வகைகளின் ஒன்றான இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சோதித்து பார்த்தபோது, அவற்றிலும் ரோடமைன் பி இருப்பது தெரியவந்ததால், அங்கும் பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? இதனை உட்கொள்வதால் என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது ரோடமைன் பி என்பது என்ன? ரோடமைன் பி என்பது ஒரு செயற்கை சாயம் ஆகும். இது பளிச் என்ற சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கக்கூடியதாகும். இந்த வேதியியல் நிறமி, தண்ணீரில் கலக்கக்கூடியத் தன்மை அதிகம் கொண்டதாலும், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது என்பதாலும், ஜவுளித்துறை, காகிதத் துறை, தோல் துறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. ரோடமைன் பி- யில் உள்ள வேதிப் பொருட்கள் மக்கும் தன்மையற்றவை ஆகும். வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தாங்கக் கூடியவை. படக்குறிப்பு, ரோடமைன் பி-யை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது ரோடமைன் பி தடை செய்யப்பட்டதா? ரோடமைன் பி, ஜவுளி, தோல் உள்ளிட்ட துறைகளில் நிறமியாக பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களில் செயற்கையாக நிறம் கொடுக்கும் பொருட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே. ஆனால், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம், எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ளது. ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிப்பதில், பதப்படுத்துவதில், விநியோகிப்பதில் ரோடமைன் பி பயன்படுத்துவோர் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் (2006)-ன் படி தண்டிக்கப்படுவர். ரோடமைன் பி எந்தெந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது? சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை தரக்கூடிய ரோடமைன் பி, அந்த நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மற்றொரு உணவுப் பொருளான ரோஸ் மில்க்-ல் ரோடமைன் பி கலக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தெரிவிக்கிறார். பிபிசி தமிழிடம் அவர் பேசும் போது, "பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்ட ரோடமைன் பி, ரோஸ்மில்க், கொட்டைப் பாக்கு, சிவப்பு முள்ளங்கி ஆகியவற்றிலும் சேர்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மில்க் பேடா என்ற இனிப்பு வகையின் மீது தூவப்படும் இளஞ்சிவப்பு துகள்களிலும் உள்ளது" என்கிறார். "உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிறமிகள் உள்ளன. உதாரணமாக சிவப்பு நிறத்துக்கு அலூரா ரெட், பச்சை நிறத்துக்கு ஆப்பிள் கிரீன். அவையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவுப் பொருளில் இருக்க வேண்டும். ஆனால், இந்த ரோடமைன் பி எந்த உணவுப் பொருளிலும் துளி அளவும் இருப்பதற்கு அனுமதி இல்லை" என்று அவர் மேலும் எடுத்துரைத்தார். சர்க்கரை வள்ளி கிழங்கின் மேற்பரப்பில் சிவப்பு நிறம் கூடுதலாக வெளிப்படுவதற்கு ரோடமைன் பி பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, மிளகாய் பொடி, கேழ்வரகு, சாஸ் வகைகளிலும் சிவப்பு நிறம் பெறுவதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ரோஸ் மில்க்கில் ரோடமைன் பி கலக்கப்படுகிறது ரோடமைன் பி இருப்பதை நுகர்வோர் கண்டறிய முடியுமா ? ரோடமைன் பி கலக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் நுகர்வோர் பார்த்த உடனேயே ரோடமைன் பி இருக்கிறதா இல்லையா என கண்டறிய முடியாது. எனினும், சில உணவுப் பொருட்களில் ரோடமைன் பி உள்ளதா என கண்டறிய வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய சோதனைகள் உள்ளன. ரோடமைன் பி தண்ணீரிலும் எண்ணெயிலும் எளிதில் கலக்கக்கூடியதாகும். இந்த தன்மையை கொண்டு ரோடமைன் பி இருப்பதை கண்டறியும் வழிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது. உதாரணமாக சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத்தை வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம். சிறிதளவு பஞ்சை தண்ணீர் அல்லது எண்ணெயில் நனைத்துக் கொள்ள வேண்டும். அதை கிழங்கின் மேற்பரப்பில் லேசாக தடவிப் பார்க்கும் போது, அந்த பஞ்சு இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதில் ரோடமைன் பி கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். பஞ்சு நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் ரோடமைன் பி கலக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். இதே போன்ற பரிசோதனை மூலம், கேழ்வரகில் ரோடமைன் பி கலந்திருப்பதையும் கண்டறிய முடியும். ரோடமைன் பி மற்றும் இது போன்ற தடை செய்யப்பட்ட வேறு வேதிப் பொருட்கள் உணவுப் பொருளில் இருப்பதை எப்படி கண்டறிய வேண்டும் என்று விளக்கும் வீடியோக்களை இந்திய அரசின், https://www.youtube.com/@fssai_india என்ற தளத்தில் காணலாம். பட மூலாதாரம்,FSSAI படக்குறிப்பு, சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத்தை வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம் பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருப்பதை நுகர்வோர் கண்டறிய முடியுமா? பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருக்கிறதா இல்லையா என்பதை நுகர்வோர் உறுதி செய்ய முடியாது. அந்த மாதிரிகளை உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் சோதித்த பிறகே, ரோடமைன் பி உள்ளதா என்று உறுதி செய்ய முடியும். சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவை பாதுகாப்பற்றவை என்று உணவுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. "ஒரு உணவுப் பொருளில் தடை செய்யப்பட்ட நிறமி இருக்கிறதா இல்லையா என்று குறிப்பிட்டு ஒருவரால் பார்த்த உடனே துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட், கேக் என எதுவாக இருந்தாலும் உங்கள் கண்களை கவரும் வண்ணம் பளிச்சென்று உணவுப் பொருட்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இயற்கையான நிறங்கள் பளீரென்று இருக்காது" என்கிறார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார். படக்குறிப்பு, இயற்கையான நிறங்கள் பளீரென்று இருக்காது என்கிறார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார் ரோடமைன் பி ஏன் தடை செய்யப்படுகிறது? ரோடமைன் பி புற்றுநோய் மற்றும் மரபணு பிறழ்வு ஏற்படுத்தக்கூடியது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோல் வியாதிகள், சுவாச பாதிப்புகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக சிதைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே மனித உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது என்பதால், ரோடமைன் பி உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரோடமைன் பி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. ரோடமைன் பி-யினால் புற்றுநோய் ஏற்படுமா? ரோடமைன் பி உட்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருந்தியல் துறைத் தலைவர் எஸ். சந்திரசேகர் தெரிவிக்கிறார். “ரோடமைன் பி தொடர்ந்து உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ரோடமைன் பி-க்கும் கல்லீரல் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதே” என்றார். பட மூலாதாரம்,மருத்துவர் சந்திரசேகர் படக்குறிப்பு, ரோடமைன் பி தொடர்ந்து உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனை மருந்தியல் துறைத் தலைவர் எஸ். சந்திரசேகர் ரோடமைன் பி-யினால் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படும் ? ரோடமைன் பி உட்கொள்வதால், கல்லீரல் தவிர நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, சிறு மூளை செயல்பாடுகளில் தடை ஏற்படும். மேலும் நரம்பு தளர்ச்சி, முதுகு தண்டுவட பாதிப்பு ஆகியவையும் ஏற்படும் என்று மருத்துவர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார். ரோடமைன் பி ஒரு முறை உட்கொண்டாலே பாதிப்பு ஏற்படுமா? பொதுவாக ஒரு பொருளை ஒரு முறை உட்கொள்வதாலேயே தீவிர பாதிப்புகள் உடனே ஏற்படாது. எந்த பொருளாக இருந்தாலும் அதை தொடர்ந்து உட்கொள்ளும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படும். ஆனால், “சில நேரங்களில் ஒரு முறை உட்கொண்டாலே உடலில் தீவிர நச்சுத்தன்மை ஏற்படக்கூடும். ஒவ்வொருவரின் உடல் எதிர்ப்பு சக்தி பொருத்தும், உணவுப் பொருளில் எவ்வளவுன் ரோடமைன் கலக்கப்படுகிறது என்பதை பொருத்தும் இது ஏற்படும். அப்படி தீவிர நச்சுத்தன்மை உடனடியாக ஏற்பட்டால் அது மூளையை பாதிக்கும்” என்று பிபிசியிடம் பேசிய போது விளக்கினார் மருத்துவர் சந்திரசேகர். https://www.bbc.com/tamil/articles/ce7lkdkwzd3o
-
குட்டிக் கதைகள்.
Kongu Food Club · Rejoindre Prabhushetty · · மும்பையில் உள்ள மாஹிம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து அருகில் இருந்த குஜராத்தி உணவகத்தில் மதியம் சாப்பிட கிளம்பினேன். மழைநீர் படாமல் ஒரமாக சென்று அடைந்து மேஜையில் அமர்ந்த போது பீகாரை சேர்ந்த உடன் பணி புரியும் நண்பன் அமர்ந்து இருந்தான். என்னை பார்த்து சிரித்தான் பேசியபடியே சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். மழை வலுத்திருந்தது. அருகில் இருந்த பீடா கடையில் ஒதுங்கி நின்றோம். அவன் பீடா போடும் வழக்கம் உள்ளவன் அவனுக்கு பீடா தயார் செய்ய சொன்னான். உடன் எனக்கும் ஒன்று சேர்த்தான். நான் வேண்டாம் என கூறினேன். அதற்கு அவன் உனக்கு தயாரிக்க சொன்னது இனிப்பு பீடா தான் சாப்பிடு ஒன்றும் செய்யாது என்று கூறினான். (இப்படித்தான் பிறரை கெடுப்பார்கள்) நான் கடைக்காரரை பார்த்தேன் அவரும் எனது நண்பர் தான் கர்நாடகா மங்களூரை சேர்ந்தவர் அவர் என்னிடம் ஆமாம் இது இனிப்பு பீடா தான் ஒன்றும் செய்யாது என்று கன்னடத்தில் கூறினார் சரியென்று நானும் வாங்கி சாப்பிட்டேன் நன்றாக இருக்கிறது என கூறிவிட்டு மீண்டும் மழையிநீர் படாமல் ஓரமாக சென்றுவிட்டோம் எங்கள் அலுவலகத்திற்கு. மறுநாள் அவன் இல்லை நான் மட்டும் தனியாக சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன் மழைதான் மீண்டும் ஒரு பீடா கடையில் ஒதுங்கினேன். கடைக்காரர் என்னை பார்த்தவுடன் ஒரு பீடாவை தயாரித்து கையில் கொடுத்து விட்டார் பேசாமல் சாப்பிட்டேன். (இது அந்த பீடா வாயனுடனான கூடா நட்பினால் வந்த வினை) மூன்றாம் நாள் மழை இல்லை சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் எனது கால்கள் பீடா கடையை நோக்கி தானாக சென்றது. சட்டென்று திடடுக்கிட்டேன். இது மூன்றாம் நாள் எனது அப்பா கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது வேடிக்கை வாடிக்கை தேடிக்கை நீ எந்த விஷயத்தையும் வேடிக்கையாக ஆரம்பித்து பின்னர் அதை வாடிக்கையாக்கி அதன் பின் நீ இருக்கும் இடத்தில் அந்த செயலை செய்ய முடியாவிட்டால் அதைத் தேடிச் சென்று செய்வாய் இதுதான் அதற்கு அர்த்தம். சற்று யோசித்துப் பார்த்தேன் அதற்குள் பீடா கடைக்காரர் பீடாவை தயார் செய்து என் கையில் கொடுத்தார் நான் அதை மடித்து தருமாறு கேட்டேன் பார்சல் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து மடித்து கொடுத்தார் அலுவலகத்துக்கு வந்து அதை பிரித்து பார்த்தேன் ஒரு ஏலக்காய் துண்டு துண்டாக வெட்டப்பட்ட முழு பாக்கு சிறிது சிகப்பு நிற பழத் துண்டுகள் மற்றும் சிறிய மணி போன்ற இனிப்பு வகைகள் இவைதான் அதிலிருந்தன சிறிது ரோஜா குல்கந்து இருந்தது இதில் என்னை அடிமை ஆக்கியது எது என யோசித்து ஒவ்வொன்றாக தனித்தனியாக எடுத்து சாப்பிட்டு பார்த்தேன் எல்லாம் சுவையாக தான் இருந்தது ஆனால் எதிலும் பிடித்தமான சுவை இல்லை சாதாரணமாக இருந்தது பிறகு அந்த வெற்றிலையில் ஒரு பேஸ்ட் போல தடவியது நினைவுக்கு வந்தது அதை விரலால் எடுத்து சுவைத்து பார்த்தேன் சரிதான் அதில் தான் அந்த சுவை இருந்தது நம்மை பீடாவிற்க்கு அடிமை படுத்தும் சுவை. பிறகு வெற்றிலையை கழுவி விட்டு எனது உதவியாளரை அழைத்து சிறிது மிளகு வாங்கி வர சொல்லி நான்கு மிளகுடன் அந்த வெற்றிலையை கடித்து சாற்றை விழுங்கினேன் அது சளியை முறிக்கும் என்பதால். இதில் நான் கற்றுக்கொண்டது எந்த ஒரு கெட்ட பழக்கங்கள் இருப்பவர்கள் கூட அவர்கள் அதை செய்யும் பொழுது நாம் அருகில் இருந்தால் நமக்கு கற்றுக் கொடுத்து விடுவார்கள் என்பது தான். இந்த சுவையூட்டிகள் நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். பெரும்பாலான ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் அஜுனோமோட்டோ என்னும் ஒரு சுவையூட்டி சேர்க்கப்படுகிறது அதனால் தான் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதை சாப்பிடுகிறார்கள் இதே போல தான் குழந்தைகளுக்கான உணவு வகைகளையும் தயார் செய்கிறார்கள் அதனால் தான் அதை சாப்பிட்ட அந்த குழந்தைகள் சுவையூட்டிகளின் சுவையினால் கவரப்பட்டு குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதுவே வேண்டும் என்று கேட்டு அடம் பிடிக்கிறது. குழந்தைகளுக்கு பாக்கெட்டு களில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவு வகைகளும் இவ்வாருதான் தயாரிக்கபடுகின்றன. செரிலாக் பேரக்ஸ் லாக்டோ ஜென் போன்ற உணவு வகைகளை குழந்தைகள் மீண்டும் மீண்டும் சாப்பிடுவதற்கு இதுதான் காரணம். அதாவது அத்துடன் கலந்து செய்யப்படும் சுவையூட்டிகளால். இதைத் தவிர்க்க நாம் நம் வீட்டிலேயே அது போன்ற உணவு வகைகளை தயாரித்துக்கொடுத்து விடலாம். அதற்கு 1 கோதுமை. 1/4 கிலோ 2 கொண்டைக்கடலை 100கிராம் (கருப்பு) 3 பாதாம் பருப்பு 100கிராம் 4 பிஸ்தா பருப்பு. 100கிராம் 5 சோயாபீன்ஸ். 100கிராம் 6 பச்சை பயிர். 100கிராம் (பாசிப்பயறு) 7 முந்திரிப் பருப்பு. 100கிராம் 8 சாமை அரிசி. 100கிராம் 9 தினை அரிசி. 100கிராம் 10வரகு அரிசி. 100கிராம் 11 மக்காசோளம். 100கிராம் 12 வேர்கடலை. 100கிராம் 13நாட்டு கொள்ளு. 100கிராம் 14 கேழ்வரகு. 100கிராம் முதலியவற்றை தனித்தனியாக நன்றாக தீய விடாமல் பொன் நிறமாக வறுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்த இந்த தானியங்களை ஒன்றாக நன்கு கலந்து அரைத்து காற்று போகாமல் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும் இதை குழந்தைகள் மட்டுமல்ல உடல் சற்று பலகீனமான அனைவருமே சாப்பிடலாம். இதில் உள்ள தானியங்கள் அனைத்துமே நாம் நன்கு அறிந்தது தான். ஒரு சிலருக்கு (குழந்தைகளுக்கு கூட)தோல் ஒவ்வாமை இருக்கும் அவர்கள் அவர்கள் வேர்கடலை மட்டும் தவிர்க்கவும். கொள்ளு தேவைப்படுபவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் அதை தவிர்த்தாலும் தவறில்லை இந்த மாவை பாலிலோ அல்லது சுடுநீரிலோ வேகவைத்து சற்று கெட்டியான பதத்தில் கஞ்சி மாதிரி காய்ச்சிக் கொள்ள வேண்டும். சுவைக்கு நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம் அஸ்கா சக்கரை என்று நமது கொங்கு பகுதியில் அழைக்கப்படும் வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் முதலில் அனைத்து தானியங்களையும் 10 கிராம் அளவிற்கு எடுத்து மேலே கூறியுள்ளவாறு தயாரித்து கொடுத்து பாருங்கள் குழந்தைக்கு நன்றாக சாப்பிட்டால் நிறைய தயாரித்து கொடுங்கள். இது உடல் பலவீனமான பெரியோர்களுக்கும் உரிய குறிப்பாகும் Voir la traduction Toutes les réactions : 228228
-
சமையல் செய்முறைகள் சில
எடையைக் குறைக்கும் சிறுதானியங்கள்! ஜெ.கலைவாணி - படங்கள்: தே.அசோக்குமார் சிறுதானிய உணவே நம் பாரம்பர்ய உணவுமுறை. அது மட்டுமல்ல... சிறுதானியங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அளிக்கும். எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இனிமை சேர்க்கும். நல்லவை எல்லாம் அள்ளித்தரும். இனிவரும் காலம் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய சிறு தானியங்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த அளவு மக்களிடத்தில் சிறுதானியங்களின் சிறப்பு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வத்துக்குச் சுவை சேர்க்கும் அருமையான, துல்லியமான மில்லெட் ரெசிபிகள் நம் கைவசம் இருந்தால்தானே சமையலறை கமகமக்கும்? அதற்கான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. எளிமையாகச் செய்யக்கூடிய இந்த உணவுகளுக்கு ஏராளமான பலன் உண்டு. தினை - பச்சைப்பயறு ஊத்தப்பம் தேவையானவை: தினை அரிசி - அரை கப் முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப் காய்ந்த மிளகாய் - நான்கு இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது) பெருங்காயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) எண்ணெய், உப்பு - தேவையான அளவு துருவிய கேரட் - அரை கப் செய்முறை: தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். முளைகட்டியப் பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை வார்க்கவும். தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும். சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை தேவையானவை: கேழ்வரகு சேமியா - ஒரு கப் கொள்ளு மாவு - அரை கப் கடலைப்பருப்பு - அரை கப் வெங்காயம் - ஒன்று (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது) இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது) செய்முறை: கேழ்வரகு சேமியாவை மூன்று நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கொள்ளுவை வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். ஊறிய முழுப் பருப்பை ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலை மாவுடன் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொள்ளு மாவு ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் விட்டு வடை மாவுப் பதத்துக்குக் கலந்து கேழ்வரகு சேமியாவைச் சேர்த்து வடையாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு வடையைப் போட்டு முறுகலாகப் பொன்னிறத்துடன் வறுத்து எடுக்க, சுவையான கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை ரெடி. குறிப்பு: இஞ்சி - பூண்டு விழுது சேர்த்தும் செய்யலாம். வரகு - கம்பங்களி தேவையானவை: வரகரிசி - கால் கப் கம்பு மாவு - 2 கப் தண்ணீர், உப்பு - தேவையான அளவு செய்முறை: வரகரிசியைத் தண்ணீரில் வேகவிடவும். முக்கால்வாசி வெந்து வரும்போது அதில் உப்பு மற்றும் கம்பு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளற வேண்டும். மாவு கட்டியாக ஆகாதவாறு கிளறி, தேவைப்பட்டால் சுடுநீர் சிறிது சேர்த்து, கரண்டியால் கிளறி பின் கைகளில் சுடச்சுட உருட்டினால், களி ரெடி. இதற்குக் காரக் குழம்பு, கீரைக் குழம்பு தொட்டுக்கொள்ள ஏற்றது. களியைப் பொறுத்தவரை சுடச்சுடச் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், வெங்காயப் பச்சடி மற்றும் மொச்சைக்குழம்புடன் சாப்பிட மிகவும் ஏற்றது. உடல் பலமடையும். வியாதிகள் அண்டாது. கம்பு - பீர்க்கங்காய்த் துவையல் தேவையானவை: கம்பு - கால் கப் பீர்க்கங்காய்த் தோல் - ஒரு கப் (நறுக்கியது) காய்ந்த மிளகாய் - ஐந்து உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறிய துண்டு புளி - பெரிய நெல்லி அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் தேங்காய் - இரண்டு துண்டுகள் செய்முறை: கம்பு தானியத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் உளுத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு பீர்க்கங்காய்த் தோல், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய், உப்பு ஆகியவற்றை வறுத்து ஐந்து நிமிடங்கள் ஆறவைக்கவும். இத்துடன் புளியையும் சேர்த்து வறுத்து மொத்தமாக எடுத்து உப்புச் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்க, சுவையான கம்பு - பீர்க்கங்காய்த் துவையல் ரெடி. அப்பளக்கூட்டுக் கம்பு ஊறல் தேவையானவை: கம்பு மாவு - அரை கப் சோள மாவு - அரை கப் சமையல் சோடா - ஒரு சிட்டிகை தயிர் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: பாத்திரத்தில் கம்பு மாவு, சோள மாவு, சமையல் சோடா, தயிர், உப்பு, கொத்துமல்லித்தழை சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து உருட்டி இரண்டு அளவாகப் பிரித்து இட்லித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்பு இதை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். சிறு சிறு வட்டமாக நறுக்கி, தோசைக்கல்லில் எண்ணெய்விட்டுச் சிவக்க வைத்து எடுத்துக்கொள்ளவும். அல்லது வட்டமாக நறுக்கிய கம்பு கட்லெட்டை வாணலியில் எண்ணெய்விட்டுப் பொரித்தும் எடுத்துக்கொண்டு அப்பளக்கூட்டுடன் சாப்பிடலாம். அப்பளக்கூட்டு செய்ய தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப் பெருங்காயம் - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தண்ணீர் - ஒரு கப் சுட்ட அப்பளம் - 8 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: குக்கரில் கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து, நான்கு விசில் விட்டு இறக்கவும். சோம்புத்தூள் சேர்த்து, தேவைக்கேற்ற அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவந்ததும் உப்பு சேர்க்கவும். கொத்துமல்லித்தழை தூவி, அதில் அப்பளத்தை உடைத்துப்போட்டுக் கிளறி, கம்பு வறுவலின் மீது வைத்துப் பரிமாறவும். கம்பு ஃப்ரை செய்யாமலும் அப்பளக்கூட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம். குதிரைவாலி - பாசிப்பருப்புக் கஞ்சி தேவையானவை: குதிரைவாலி - ஒரு கப் பாசிப்பருப்பு - அரை கப் கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று (தாளிக்க) கறிவேப்பிலை - இரண்டு ஈர்க்கு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப மிளகு - ஒரு டீஸ்பூன் (பொடித்தது) பெருங்காயம் - சிறிதளவு செய்முறை: பாசிப்பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வேகும்போது, குதிரைவாலி அரிசியைச் சேர்த்துக் குழைய வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கஞ்சியில் ஊற்றவும். ஊறுகாய் மற்றும் துவையலுடன் பரிமாறவும். பசி நேரத்துக்கு ஏற்ற சிறந்த கஞ்சி இது. காரத்துக்குக் காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு, மிளகு ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்த்துக் கொள்ளலாம். கம்பு - பச்சைப்பயறு - வெல்ல மசியல் தேவையானவை: கம்பு - அரை கப் பச்சைப்பயறு - அரை கப் துருவிய வெல்லம் - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் செய்முறை: பச்சைப்பயறையும் கம்பையும் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் அதை குக்கரில் வைத்துக் குறைவாகத் தண்ணீர்விட்டு, நான்கு முதல் ஐந்து விசில் வரை அடி பிடிக்காமல் வேகவைக்கவும். பிறகு குக்கர் மூடியை ரிலீஸ் செய்துவிட்டுத் தண்ணீரை வடித்து, பருப்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, அதில் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மசித்துக்கொள்ளவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து தினமும் சாப்பிடலாம். நான்கு நாள்கள் வரை கெடாமல் இருக்கும். பனிவரகு - மஷ்ரூம் - டொமேட்டோ சூப் தேவையானவை: பனிவரகு - கால் கப் (வேகவைத்தது) கார்ன் மாவு - 2 டீஸ்பூன் தக்காளிச் சாறு - ஒரு கப் கொத்தமல்லி - அரை கப் (நறுக்கியது) மஷ்ரூம் - 10 (நறுக்கியது) பூண்டு - 10 பல் நெய் - 2 தேக்கரண்டி சோயா சாஸ் - அரை டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை: மஷ்ரூமைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பூண்டுப் பல்லைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மிளகைப் பொடி செய்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் பட்டை சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். சோயா சாஸ் விடவும். வேகவைத்த மஷ்ரூமை இதில் புரட்டி எடுக்கவும். தக்காளிச் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிடவும். பின், மூன்று கப் நீர் விட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வேகவைத்த பனிவரகைச் சேர்க்கவும். மஷ்ரூம் வெந்ததும் கார்ன் மாவை நீரில் கரைத்து ஊற்றவும். மிளகைத் தூவி ஒரு கொதிவிட்டுக் கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி எடுக்கவும். சுவையான சூப் தயார். சோளம் - கோதுமை அல்வா தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப் சோள மாவு - அரை கப் வெல்லம் - ஒரு கப் முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன் நெய் - கால் கப் செய்முறை: வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் கோதுமை மாவு, சோள மாவை நெய்விட்டு தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் இரண்டு மாவையும் ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்த வெல்லத் தண்ணீரை மாவில் ஊற்றி, வேகமாகக் கிளறிக் கொண்டே இருக்கவும். நெய்விட்டு கிளற கிளற அல்வா பதத்தில் சுருண்டுவரும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கி வைத்துப் பரிமாறவும். சாமை - பச்சைப்பயறு - நல்லெண்ணெய் சாதம் தேவையானவை: சாமை சாதம் - 2 கப் பச்சைப்பயறு - கால் கிலோ தக்காளி - 2 (அரைத்த ஜூஸ்) வெங்காயம் - 2 (நறுக்கியது) கறிவேப்பிலை - ஒரு கொத்து இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு தாளிக்க: பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், மராத்தி மொக்கு, கிராம்பு - தலா 2 நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: பச்சைப்பயறை வாணலியில் இட்டு, பொன்னிறமாக வறுத்து குக்கரில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு நான்கு முதல் ஐந்து விசில் வரை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்க வேண்டியதைச் சேர்த்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்துக் கிளறி, சோம்புத்தூள், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும், வேகவைத்த பயறை மட்டும் சேர்த்து கரண்டியால் மசித்துக் கிளறிவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும். வேகவைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். சாமையை 10 நிமிடம் ஊறவைத்து, பின் சாதமாக வடித்து ஆறவிடவும். இலையில் சாமை சாதத்தை வைத்துச் சூடான பச்சைப்பயறு மசாலாவைச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும். https://www.vikatan.com/
-
சமையல் செய்முறைகள் சில
சம்மர் ஸ்பெஷல்: 30 வகை ஊறுகாய் & தொக்கு ஊறுகாய்ப் பொடி தேவை: காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 25 கிராம், பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன் , கடுகு - 2 டீஸ்பூன் (விரும்பினால்). செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள், கடுகு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறுகாய் செய்யும்போது இந்தப் பொடியில் தேவையான அளவு சேர்க்கலாம். சிறப்பு: இந்தப் பொடி மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும். மாங்காய் இஞ்சி ஊறுகாய் தேவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம் (கழுவி, தோல் சீவி, வட்டமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்), சிறிய எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்) , மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இறக்கி ஆறவிடவும் நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவிடவும். ஒருநாள் கழித்துப் பயன்படுத்தலாம். நன்றாக ஊறியதும் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். மாங்காய் இஞ்சி - மாங்காய்த் தொக்கு தேவை: மாங்காய் இஞ்சித் துருவல், மாங்காய்த் துருவல் - தலா ஒரு கப் (250 மில்லி கப்), நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் , கடுகு - முக்கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், மாங்காய் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். தோசைக்காய் ஆவக்காய் ஊறுகாய் தேவை: விதைகள் நீக்கி நறுக்கிய தோசைக்காய்த்துண்டுகள் (மஞ்சள் வெள்ளரிக்காய்) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: உப்புடன் மிளகாய்த்தூள், கடுகு சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அகலமான பீங்கான் பவுலில் தோசைக்காய்த் துண்டுகள், அரைத்த பொடி, நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 24 மணி நேரம் ஊறியதும் பரிமாறவும். இதைச் சாதம், சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். சிறப்பு: ஆந்திராவில் மாங்காய் கிடைக்காத சீஸனில் தோசைக்காய் வைத்து ஆவக்காய் ஊறுகாய் செய்வார்கள். இது ஆவக்காய் ஊறுகாய் போலவே இருக்கும். இந்த ஊறுகாயைச் சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். எலுமிச்சை ஊறுகாய் தேவை: சதுரத்துண்டுகளாக நறுக்கிய எலுமிச்சைப்பழம் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - முக்கால் கப். செய்முறை: எலுமிச்சைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். பிறகு, இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மறுநாள் வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும். குறிப்பு: உடனடியாக எலுமிச்சை ஊறுகாய் தேவையானால் எலுமிச்சைப்பழத் துண்டுகளைத் தண்ணீரில் வேகவைத்தும் செய்யலாம். மிளகாய்த் தூளுக்குப் பதிலாக காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்தும் சேர்க்கலாம். பச்சை மிளகு ஊறுகாய் தேவை: பச்சை மிளகு - 50 கிராம் (அரை இன்ச் துண்டுகளாக்கவும்), எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒன்றரை டீஸ்பூன். செய்முறை: எலுமிச்சைச் சாற்றுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் பச்சை மிளகுத்துண்டுகளைச் சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவைத்துப் பயன்படுத்தலாம். மாகாளிக்கிழங்கு ஊறுகாய் தேவை: மாகாளிக்கிழங்கு - 300 கிராம், எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 , கடைந்த தயிர் - 125 மில்லி (அரை கப்) , உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாகாளிக்கிழங்கை மண்போக கழுவி, 12 மணி நேரம் (இரவு முழுவதும்) ஊறவைக்கவும். மறுநாள் தோல் சீவி, நடுவில் உள்ள தடிமனான வேரை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும். கடுகுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரத்தில் மாகாளிக்கிழங்கு, அரைத்த பொடி, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். சிறப்பு: இது நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும். மாவடு தேவை: மாவடு - அரை கிலோ, விளக்கெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 20, உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாவடுவின் காம்பை நீக்கி, கழுவித் துடைக்கவும். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசிறவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். இதை மாவடுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். (தேவையானால் சிறிதளவு தண்ணீரைச் சூடாக்கி ஆறவைத்துச் சேர்க்கலாம்). இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு: காம்புள்ள வடுவாக வாங்கவும். அப்போதுதான் ஊறுகாய் நன்றாக இருக்கும். ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த்துண்டுகள் - இரண்டரை கப், உப்பு, மிளகாய்த்தூள் - தலா கால் கப், வெல்லத்தூள் (அ) சர்க்கரை - கால் கப், கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன் (தேவையானால்), கறிவேப்பிலை, பூண்டு - சிறிதளவு. செய்முறை: மாங்காயுடன் உப்பு சேர்த்து ஊறவைக்கவும். இரண்டு நாள்கள் கழித்து மாங்காயைப் பிழிந்து எடுத்து வெயிலில் காயவைக்கவும். தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். மறுநாள் மாங்காயை மட்டும் வெயிலில் வைக்கவும். மாங்காய்த் தண்ணீரை லேசாகக் கொதிக்க வைக்கவும். ஆறியதும் அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துச் சேர்க்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மாங்காய்த் தண்ணீர்க் கலவையில் சேர்க்கவும். அதனுடன் காயவைத்த மாங்காய்த்துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தவும். குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த் துருவல் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்). அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும். சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும். மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: பட்டைத்தூள், லவங்கத்தூள் ஆகியவற்றை விருப்பப்பட்டால் சேர்க்கலாம். ஃப்ரெஷ் மஞ்சள் ஊறுகாய் (குஜராத்தி ஹல்டி பிக்கிள்) தேவை: ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய எலுமிச்சைப்பழம் 4 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), உப்பு - முக்கால் டீஸ்பூன். செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் எடுத்துப் பயன்படுத்தலாம். குறிப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த ஊறுகாயை நான்கு நாள்கள் வெளியே வைத்து உபயோகிக்கலாம். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். சிறப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இது மாங்காய் இஞ்சி ஊறுகாய் போல இருக்கும். ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஃப்ரெஷ் மஞ்சள் - இஞ்சி ஊறுகாய் (குஜராத்) தேவை: ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, வட்டமான வில்லைகளாக நறுக்கவும்), தோல் சீவிய இஞ்சி - 2 இன்ச் துண்டு (வட்டமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சை - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் எலுமிச்சைச்சாற்றுடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒருநாள் முழுவதும் ஊறவிடவும். மறுநாள் பயன்படுத்தலாம். பூண்டு ஊறுகாய் தேவை: தோலுரித்த பூண்டு - 250 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), எலுமிச்சைப்பழம் - 6 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்), மல்லி (தனியா), வெந்தயம், சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 25, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் தனியா, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு சிறிதளவு வதங்கியதும் அரைத்த பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து வேகவிடவும். பூண்டு முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும். குறிப்பு: அவரவர் விருப்பத்துக்கேற்ப மிளகாயைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம். கடா நார்த்தங்காய் ஊறுகாய் தேவை: கழுவி, விதை நீக்கி நறுக்கிய கடா நார்த்தங்காய்த்துண்டுகள் (கிடாரங்காய்) - 3 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12 வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் ,நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை கப். செய்முறை: கடா நார்த்தங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு ஊறவிடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறவைத்த நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பயன்படுத்தவும். நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய் தேவை: நெல்லிக்காய் - 10 (கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும்), சர்க்கரை - அரை கப் , குங்குமப்பூ - 2 சிட்டிகை, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், கறுப்பு உப்பு - தலா கால் டீஸ்பூன். செய்முறை: வாணலியில் நெல்லிக்காயுடன் சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நெல்லிக்காய் பாதியளவு வெந்ததும் குங்குமப்பூ, மிளகுத்தூள், கறுப்பு உப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை வெளியிலேயே வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து உதிர்த்தும் சேர்க்கலாம். சிறப்பு: சப்பாத்தி, தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. நெல்லிக்காய் கார ஊறுகாய் தேவை: நெல்லிக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன் உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்துக் கொட்டைகளை நீக்கி, சுளைகளாகத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் நெல்லிக்காய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு இறக்கி தயிர் சாதத்துடன் பரிமாறவும். ஆவக்காய் ஊறுகாய் தேவை: மாங்காய் - அரை கிலோ, கடுகு - 30 கிராம் (3 டேபிள்ஸ்பூன்), காய்ந்த மிளகாய் - 30 கிராம் (20), வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளைக் கொண்டைக்கடலை - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாங்காயைக் கழுவி தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை எடுத்துவிடவும்). வெறும் வாணலியில் பாதியளவு வெந்தயத்தைச் சேர்த்து வறுத்து அரைத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், கடுகை வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஜாடியில் வெந்தயப்பொடி, மிளகாய் - கடுகுப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மீதமுள்ள வெந்தயம், வெள்ளைக் கொண்டைக்கடலை, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை வெயிலில் மூன்று நாள்கள் வைக்கவும். தினமும் ஊறுகாயைக் கிளறிவிடவும். அப்போதுதான் மாங்காய் நன்றாக மசாலாவுடன் கலந்து ஊறும். 10 நாள்கள் ஊறிய பிறகு பயன்படுத்தலாம். பிரண்டைத் தொக்கு தேவை: இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்). இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். நாரத்தை இலைப்பொடி (வேப்பிலைக் கட்டி) தேவை: இளசான நாரத்தை இலை - 25 (நடு நரம்பை நீக்கவும்), காய்ந்த மிளகாய் - 15, ஓமம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டேபிள்ஸ்பூன். செய்முறை: நாரத்தை இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விடாமல் அரைத்தெடுக்கவும். இந்தப் பொடியைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்துச் சேகரிக்கவும். தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: நாரத்தை இலை கிடைக்காவிட்டால், எலுமிச்சை இலையிலும் செய்யலாம். உப்பு எலுமிச்சை ஊறுகாய் தேவை: எலுமிச்சைப்பழம் - 10 (ப்ளஸ் போல நான்கு துண்டுகளாக லேசாக நறுக்கவும்; முழுவதுமாக நறுக்க வேண்டாம்), உப்பு - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: எலுமிச்சைப்பழத்துக்குள் உப்பை அடைக்கவும். இதை பாட்டில் (அ) ஜாடியில் சேகரித்து மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைத்து எடுக்கவும். (வீட்டின் உள்ளேயும் வைக்கலாம்). பழம் நன்றாக ஊறிவிடும். இந்த ஊறுகாய் இரண்டு வருடங்கள் வரை நன்றாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்து எலுமிச்சைத் தொக்கு செய்துகொள்ளலாம். நன்றாக ஊறியதும் எலுமிச்சையில் இருந்து உப்பு நீர் கசிந்து மிருதுவாக இருக்கும். குறிப்பு: இதேபோல நாரத்தங்காயிலும் செய்யலாம். நன்றாக ஊறியவுடன் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். இரண்டு வருடங்கள் நன்றாக இருக்கும். இஞ்சி - புளி ஊறுகாய் தேவை: தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப், பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை , வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , உப்பு - தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும். அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். சிம்பிள் மாங்காய் ஊறுகாய் தேவை: கிளிமூக்கு மாங்காய் - 2 (தோலுடன் சிறிய துண்டுகளாக்கவும்) மிளகாய்த்தூள், கல் உப்பு - தலா 2 டீஸ்பூன். செய்முறை: மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வெயிலில் மூன்று முதல் நான்கு நாள்கள் வரை வைத்தெடுக்கவும். பிறகு, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். தேவையானால் கடுகு தாளித்துச் சேர்க்கலாம். குறிப்பு: கிளிமூக்கு மாங்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் வெளியே வைத்தால் கெட்டுவிடும். சிறப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஆரஞ்சுத்தோல் பச்சடி தேவை: ஆரஞ்சுத்தோல் - ஒரு கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) , கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஆரஞ்சுத்தோல் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல் ஊற்றி நன்கு வேகவிடவும். இறுதியாக வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மாங்காய் இஞ்சித் தொக்கு தேவை: மாங்காய் இஞ்சி - கால் கிலோ (தோல் சீவி, துண்டுகளாக்கவும்) , எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் , மஞ்சள்தூள், வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன், கடுகு - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் , உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காய் இஞ்சியுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தொக்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நாரத்தங்காய் ஊறுகாய் தேவை: நாரத்தங்காய் - 3 (சதுரத்துண்டுகளாக்கி, விதைகளை நீக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் , உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஜாடியில் நாரத்தைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும். வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு: நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும். தக்காளித் தொக்கு தேவை: தக்காளி - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இறுதியாக வெல்லம் சேர்த்து, கலவை சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் சேகரிக்கவும். செட்டிநாட்டு வெந்தய மாங்காய் தேவை: புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 15, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: மாங்காயைத்தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை நீக்கவும்). மிளகாய், உப்பைத் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் மாங்காய்த்துண்டுகளுடன் வெந்தயப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வெயிலில் 10 முதல் 15 நாள்கள் வரை வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம். செட்டிநாட்டுப் பல ஊறுகாய் தேவை: பிஞ்சு வெள்ளை மிளகாய், தோலுரித்த பூண்டு, பிஞ்சு சுண்டைக்காய் - தலா 50 கிராம், எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்), காய்ச்சி ஆறவைத்த நீர் - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் (தேவையானால்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெள்ளை மிளகாய், சுண்டைக்காயின் காம்பை நீக்கி கீறிவிடவும். பீங்கான் ஜாடியில் எலுமிச்சைச்சாறு, காய்ச்சி ஆறவைத்த நீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து உப்பு கரையும் வரை கலக்கவும். அதனுடன் சுண்டைக்காய், பூண்டு, வெள்ளை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, ஜாடியின் வாய்ப்பகுதியை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் நான்கு நாள்கள் வைத்து எடுக்கவும். குறிப்பு: இதனுடன் பிஞ்சு முருங்கைக்காய், பிஞ்சு கொத்தவரங்காய் ஆகியவற்றை அரை இன்ச் அளவுக்கு நறுக்கி சேர்க்கலாம். செட்டிநாட்டு மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த்துண்டுகள் - 4 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன் , கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். மூன்றாவது நாள் அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து ஊறுகாயுடன் சேர்க்கவும். ஆப்பிள் ஊறுகாய் தேவை: ஆப்பிள் - ஒன்று (விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்), மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் , மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன் , கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஆப்பிள் துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும். குறிப்பு: கிரீன் ஆப்பிள் பயன்படுத்தினால் எலுமிச்சைச்சாறு குறைவாகச் சேர்க்கவும். ஊறுகாய் இல்லாத உணவு மேஜையா? நினைக்கும்போதே நாவில் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளில் ஊறுகாய்க்குத் தனி இடம் உண்டு. கையால் தொட்டு வாயில் இடும்போதே `சுர்ர்ர்’ என்று சுண்டியிழுக்கும் சுவை ஊறுகாய்க்கே உரித்தான சிறப்பு. உணவு காம்பினேஷன்களில் தயிர் சாதம் - ஊறுகாய்க்கு ஈடு இணை கிடையாது. ஊறுகாய்களில் ஒரு வாரம் முதல் இரண்டாண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய வகைகள் உள்ளன. ஊறுகாய், தொக்கு வகைகளை சப்பாத்தி, தோசைக்கும்கூட சைடிஷ்ஷாகப் பயன்படுத்தலாம். இப்படி உணவு மேஜையில் ஆபத்பாந்தவனாக விளங்கும் ஊறுகாய், தொக்கு வகைகள் பலவற்றை இந்த இணைப்பிதழில் படங்களுடன் வழங்குகிறார் சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்... ``மாங்காய், மாவடு, எலுமிச்சை, மாங்காய் இஞ்சி, கடாரங்காய், தோசைக் காய், பூண்டு, மாகாளிக்கிழங்கு, நெல்லிக்காய், பச்சை மிளகு, தக்காளி, பிரண்டை எனப் பலவற்றிலும் தயார் செய்யக் கூடிய ஊறுகாய், தொக்கு வகைகளின் ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். இவை உங்கள் டைனிங் அறையை `யம்மி ஏரியா’வாக மாற்ற உதவும். சாப்பாட்டு நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அழைப்பு விடுக்காமலே அங்கு ஆஜராகிவிடுவார்கள்’’ என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார். ஹேப்பி ஈட்டிங்! https://www.vikatan.com
-
சமையல் செய்முறைகள் சில
பாகற்காய் பக்கோடா என்னென்ன தேவை? பாகற்காய் - 1/4 கிலோ, கேழ்வரகு மாவு - 1/4 கிலோ, மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? பாகற்காயை சிறு சிறு வில்லைகளாக நறுக்கிகொள்ளவும். கேழ்வரகு மாவில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பாகற்காயை கேழ்வரகு கலவையில் கலந்து பக்கோடா போல் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும். கருணைக்கிழங்கு பொரியல் என்னென்ன தேவை? கருணைக்கிழங்கு - 1/4 கிலோ, தக்காளி - 2, வெங்காயம் - 2, முழு பூண்டு - 1, மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? குக்கரில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், கருணைக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விடவும். விசில் சத்தம் அடங்கியதும் கருணைக்கிழங்கு பொரியலை சாதத்துடன் பரிமாறவும். வாழைப்பூ கூட்டு என்னென்ன தேவை? சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப், துவரம் பருப்பு - 1/2 கப், தேங்காய்த்துருவல் - 1 கப், தக்காளி - 2, முழு பூண்டு - 1, வெங்காயம் - 2, காய்ந்தமிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? நறுக்கிய வாழைப்பூ, துவரம் பருப்பு இவற்றை தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய், நறுக்கிய தக்காளி, இடித்த பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கி சாதத்துடன் பரிமாறவும். அத்திக்காய் பொரியல் என்னென்ன தேவை? அத்திக்காய் - 1 கப், பயத்தம் பருப்பு - 1/4 கப், தக்காளி - 2, முழு பூண்டு - 1, வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? அத்திக்காயை இடித்து விதைகளை நீக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, இடித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, பின்பு பயத்தம்பருப்பு, அத்திக்காய் சேர்த்து வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் அத்திக்காய் பொரியலை சாதத்துடன் பரிமாறவும். http://kungumam.co.in
-
சமையல் செய்முறைகள் சில
30 வகை டேஸ்ட்டி & ஹெல்த்தி டூ இன் ஒன் சமையல் கறிவேப்பிலைப் பச்சடி தேவை: ஆய்ந்த கறிவேப்பிலை - 2 கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு. வறுக்க: எள் - ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் - அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு, கறுப்பு உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன் தனியா (மல்லி) - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய் - ஒரு டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை இலைகள் - 6 காய்ந்த மிளகாய் - ஒன்று மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பூண்டு - 3 பல் (தோலுடன் தட்டவும்) கடுகு - ஒரு டீஸ்பூன். செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து மொறுமொறுப்பாக வறுக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புளி சேர்த்து வறுத்து இறக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் அரைத்த பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கி இறக்கவும். கறிவேப்பிலைப் பச்சடி தயார். இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: கறிவேப்பிலையில் இரும்புச் சத்து உள்ளது. தலைமுடி வளர்ச்சிக்கும், தலைமுடி கருமைக்கும் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கும் கறிவேப்பிலைப் பச்சடி உதவும். வாரத்தில் இரு முறையாவது இந்தக் கறிவேப்பிலைப் பச்சடியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி தால் தேவை: தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்) குழைய வேகவைத்த பாசிப்பருப்பு - 8 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 6 (நறுக்கவும்) பூண்டு - 3 பல் (நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து மேலும் வதக்கி, ஒரு கப் நீர்விட்டு நன்கு வேகவிடவும். பிறகு, வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதிவந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி நன்றாகக் கலக்கிவிடவும். சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் இந்தத் தக்காளி தால் ஏற்றது. குறிப்பு: தக்காளிக்கு உடல் எடையைக் குறைப்பதில் பங்கு உண்டு. சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். சிறுநீரகங்களில் கல் சேருவதைத் தடுக்கிறது. பிண்டி மசாலா தேவை: வெண்டைக்காய் - 200 கிராம் (ஒரு இன்ச் நீள துண்டுகளாக்கவும்) பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 தயிர் - கால் கப் ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன் சீரகம், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 25 கிராம் உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காய்த் துருவலுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, தனியாக வைக்கவும். அதே வாணலியில் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தயிர், ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த வெண்டைக்காய் சேர்த்து 2 கொதிவிட்டு இறக்கவும். இது சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. குறிப்பு: வெண்டைக்காய் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும். கேரட் லட்டு தேவை: கேரட் துருவல் - 4 கப் தேங்காய்த் துருவல் - ஒரு கப் சர்க்கரை - 2 கப் நெய் - 6 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் முந்திரி, பாதாம் - தலா 10 பாசிப்பருப்பு - 10 டேபிள்ஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் பாதாம், முந்திரி சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதே வாணலியில் நெய்யை ஊற்றி கேரட் துருவலைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறி, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நன்கு ஆறியதும் பாசிப்பருப்பு மாவு, பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு லட்டுகளாகப் பிடிக்கவும். மற்ற லட்டுகள் மாதிரி இது நீண்ட நாள்கள் இருக்காது. விரைவிலேயே பயன்படுத்திவிட வேண்டும். குறிப்பு: கேரட் பிரகாசமான பார்வைக்கு வழிவகுப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. புதினா தவா கட்லெட் தேவை: புதினா இலைகள் - 2 கப் குழைவாக வேகவைத்த சாதம் - ஒரு கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் - அரை கப் சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - 4 டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் ஓமம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: புதினாவுடன் கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். சாதத்தை நன்கு மசிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், சோள மாவு சேர்த்துப் பிசையவும். பிறகு விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை அடுக்கி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. குறிப்பு: வாய் துர்நாற்றத்தைப் போக்குவதுடன் பற்கள் மற்றும் ஈறுகளின் உறுதிக்கும் உதவுகிறது. தொண்டையில் தொற்று ஏற்பட்டால் நீக்கி மீண்டும் வராமல் தடுக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை ரசம் தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப் புளிக்கரைசல் - கால் கப் தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 2 பல் (தட்டவும்) மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வறுக்க: துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று மிளகு, தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்தெடுக்கவும். புளிக்கரைசலுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், பொன்னாங் கண்ணிக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். கீரை அரை வேக்காடு பதத்தில் வெந்த பிறகு தக்காளி, பூண்டு சேர்த்து வேகவிடவும். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, நுரை வரும்போது இறக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். இதை டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம்; சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். குறிப்பு: இதைத் தொடர்ந்து 45 நாள்கள் சாப்பிட்டு வர... தோல் பளபளப்பாகும். நல்ல நிறம் கிடைக்கும். கண்களும் நல்ல ஒளியுடன் மின்னும். மணத்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு தேவை: நறுக்கிய மணத்தக்காளிக்கீரை - 2 கப் தேங்காய்ப்பால் - அரை கப் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் நெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நெய்விட்டு உருக்கி மிளகு - சீரகத்தூள் சேர்த்து வறுக்கவும். இரண்டு கப் தண்ணீருடன் உப்பு, வெங்காயம், மணத்தக்காளிக்கீரை சேர்த்து வேகவிடவும். அதனுடன் வறுத்த மிளகு - சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்கவும். இதுவே மணத்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு. பாத்திரத்தில் மணத்தக்காளிக்கீரைத் தண்ணிச்சாற்றை ஊற்றவும். ஸ்பூனால் கீரையை எடுத்து நன்றாக மென்று சாப்பிட்ட பிறகு சாற்றைக் குடிக்கவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். குறிப்பு: இதைத் தொடர்ந்து ஒரு வாரம் அருந்தி வர... வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய்ப்பாலுக்குப் பதிலாகப் பால் சேர்த்தும் அருந்தலாம். சுரைக்காய் பொரியல் தேவை: தோல், விதை நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய சுரைக்காய் - 2 கப் தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சுரைக்காய் சேர்த்து வதக்கி மூடி வைக்கவும். எட்டு நிமிடங்களில் வெந்துவிடும். பிறகு திறந்து, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும். இதை சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளலாம்; சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் உள்ள பாஸ்பரஸ்... பற்கள், எலும்புகளுக்குப் பலம் கொடுக்கும். சுரைக்காய் பொரியலை வாரம் மூன்று முறை சாப்பிட்டால், உடல் நன்கு இளைக்கும். வேர்க்கடலை சப்ஜி தேவை: பச்சை வேர்க்கடலை - ஒரு கப் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) பூண்டு - 3 பல் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.அரைக்க: பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப் பச்சை மிளகாய் - 2 தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு. அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: பச்சை வேர்க்கடலையுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாக அரைத்துத் தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பூண்டு, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கொதிவிடவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். குறிப்பு: வேர்க்கடலை சப்ஜியை வாரம் மூன்று முறை செய்து இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிட, உடலில் சதை பிடிக்கும். இளநீர் பானம் தேவை: வழுக்கையுடன் சேர்ந்த இளநீர் - 2 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன் தயிர், தேன் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயப்பொடி - ஒரு சிட்டிகை. செய்முறை: இளநீரைத் தனியாக எடுத்து வைக்கவும். வழுக்கையை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். இளநீருடன் அரைத்த வழுக்கை, தயிர், தேன், எலுமிச்சைச் சாறு, வெந்தயப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை டம்ளர்களில் ஊற்றிப் பருகவும். நிறைய நீருடன் இருந்தால் ஒரு இளநீர் போதுமானது. இந்த இளநீர் பானத்தை வெறும் வயிற்றில் பருகக் கூடாது. காலை உணவு உண்டபின்தான் பருக வேண்டும். குறிப்பு: தொடர்ந்து 10 நாள்கள் இந்த இளநீர் பானத்தை அருந்தி வந்தால், ஆரம்ப நிலை குடற்புண் குணமாகும்; இந்தப் பானம் இதயக்கோளாறுகள் வருவதைத் தடுக்கும். கருணைக்கிழங்குத் துவையல் தேவை: கருணைக்கிழங்கு - 150 கிராம் (தோல் சீவி, கேரட் துருவியில் துருவவும்) புளி - சிறிதளவு (சுண்டைக்காய் அளவு) உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 வெங்காய வடகம் (சிறியது) - ஒன்று பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெங்காய வடகம் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, கருணைக்கிழங்குத் துருவலைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். ஆறியவுடன் வறுத்த பொருள்களை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விடாமல் இரண்டு சுற்று சுற்றவும். அதனுடன் வதக்கிய கருணைக்கிழங்குத் துருவல், புளி, உப்பு தேவையான தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். (விரும்பினால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்). இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசை, உப்புமா போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: கருணைக்கிழங்கில் இரும்புச் சத்து, வைட்டமின்-சி உள்ளது. மூலநோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்குத் துவையலைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். முடக்கத்தான் கீரை அடை தேவை: சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரை - 2 கப் புழுங்கல் அரிசி - ஒரு கப் துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து அதனுடன் கீரை, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, கேரட் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை அடைகளாக ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த முடக்கத்தான் கீரை அடையைச் செய்து பூண்டு சட்னியுடன் பரிமாறலாம். குறிப்பு: மூட்டுவலி, இடுப்புப்பிடிப்பு, முழங்கால்வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாய்வு தொல்லை, பித்தம் குறையும். பத்தியக்குழம்பு தேவை: முருங்கைக்காய் - ஒன்று (விரல் நீள துண்டுகளாக்கவும்) பூண்டு - கால் கப் மணத்தக்காளி வற்றல் - கால் கப் கத்திரிக்காய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) புளிக்கரைசல் - கால் கப் தட்டிய விரலி மஞ்சள் - ஒரு டீஸ்பூன் மிளகு - 3 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 சீரகம், தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காய வடகம் - ஒன்று நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா சேர்த்து வறுத்தெடுக்கவும். சூடாக இருக்கும்போதே அதனுடன் விரலி மஞ்சளைச் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள நல்லெண்ணெய்விட்டு பூண்டு, மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலுடன் உப்பு, முருங்கைக்காய் சேர்த்து வேகவிடவும். முருங்கைக்காய் பாதியளவு வெந்ததும் வறுத்த பூண்டு கலவை, கத்திரிக்காய், அரைத்த விழுது, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். பிரசவித்த பெண்கள் இதைக் குழைவாக வெந்த, சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து நல்லெண்ணெய்விட்டு 15 நாள்கள் சாப்பிட வேண்டும். புளியைக் குறைந்த அளவுதான் சேர்க்க வேண்டும். குறிப்பு: கத்திரிக்காயில் இரும்புச் சத்து, வைட்டமின்-சி உள்ளது. கத்திரிக்காய் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். பிரசவித்த பெண்கள் இந்தக் குழம்பைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும். நல்லெண்ணெய், மஞ்சள் வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ் தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் பாசுமதி அரிசி (அ) பச்சரிசி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப் மெல்லியதாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன் மோர் - 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாழைப்பூவுடன் மோர், சிறிதளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு எடுத்துத் தனியாக வைக்கவும். அரிசியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் வாழைப்பூ, சிறிதளவு உப்பு சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும். பிறகு, சாதத்தைச் சேர்த்துக் கிளறவும். வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ் தயார். முள்ளங்கி தயிர்ப் பச்சடியுடன் வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த வாழைப்பூ ஃப்ரைடு ரைஸைச் சுவைக்கலாம். குறிப்பு: வாழைப்பூ இரும்புச் சத்து, கால்சியம், புரதச் சத்து நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். பெண்களுக்குக் கருப்பை பலம் பெற உதவும். நூல்கோல் ஃப்ரைடு ரைஸ் தேவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய நூல்கோல் - ஒரு கப் உதிர் உதிராக வேகவைத்த சாதம் - 2 கப் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட் (சேர்த்து) கால் கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு பெரிய வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கி, பிறகு பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, இறுதியில் நூல்கோலைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து எல்லா காய்களும் வதங்கியதும் (நூல்கோல் அதிகமாக வேகக் கூடாது) மிளகுத்தூள் தூவி, வெந்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் இந்த நூல்கோல் ஃப்ரைடு ரைஸ் செய்து சாப்பிடலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள பீன்ஸ் பொரியல் ஏற்றது. குறிப்பு: நூல்கோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. பக்கவாதம், புற்றுநோய் வராமலும் இது தடுக்கிறது. கொத்தமல்லிப் புளி தேவை: கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு காய்ந்த மிளகாய் - 2 உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் புளி - சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கொத்தமல்லித்தழையை வேர் நீக்கி தழையை மட்டும் நறுக்கி, அலசி உலரவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, புளியையும் சேர்த்து வதக்கி இறக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி, பிறகு உலர்ந்த கொத்தமல்லித்தழை சேர்த்துச் சுற்றவும் (துளிகூட நீர் விடக் கூடாது). கொத்தமல்லிப் புளி தயார். ஃப்ரிட்ஜ் இல்லாதவர்களும் இதைச் செய்து வெளியில் வைத்தே மூன்று நாள்கள் வரை பயன்படுத்தலாம். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: இது சோர்வை நீக்கி, மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட உதவுகிறது. பீட்ரூட் குழிப்பணியாரம் தேவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப் இட்லி மாவு - 3 கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். சிறிதளவு ஆறியதும் உப்பு, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து மாவைக் குழிகளில் ஊற்றி, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சட்னி (அ) சாம்பாருடன் பரிமாறலாம். குறிப்பு: ரத்தம் விருத்தி அடைய பீட்ரூட் உதவுகிறது. இது இரும்புச் சத்து, கால்சியம் உட்பட பல்வேறு சத்துகளைக்கொண்டுள்ளது. பாதாம் மிக்ஸர் தேவை: பாதாம்பருப்பு - 30 கெட்டி அவல் - கைப்பிடி அளவு பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா 3 டேபிள்ஸ்பூன் உலர் திராட்சை - 4 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் பூண்டு - 4 பல் (தோலுடன் தட்டவும்) பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் பாதாம்பருப்பு, அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் பாதாம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை புரட்டி அடுப்பை அணைக்கவும். மேலே மிளகுத்தூள் தூவி, உலர் திராட்சை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாதாம் மிக்ஸர் ரெடி. இதை நான்கு நாள்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். குறிப்பு: பாதாம்பருப்பு ஞாபக சக்தியை அதிகரிக்கும். சுண்டைக்காய் கொத்சு தேவை: பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கப் (கழுவி தட்டவும்) புளிக்கரைசல் - கால் கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: எள் - 2 டீஸ்பூன் வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன் தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன் சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிடவும். பிறகு வெல்லத்தூள், தாளித்த பொருள்களைச் சேர்த்து இறக்கவும். இந்தச் சுண்டைக்காய் கொத்சு இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. குறிப்பு: சுண்டைக்காயில் இரும்புச் சத்து, புரதம், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. சுண்டைக்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். மிதி பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பார் தேவை: மிதி பாகற்காய் - ஒரு கப் புளிக்கரைசல் - கால் கப் மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன் குழைவாக வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப் கொத்த மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 தனியா (மல்லி) - 3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: வறுத்து அரைக்கக்கொடுத்துள்ளவற்றை வறுத்து விழுதாக அரைக்கவும். மிதி பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், 4 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல், கால் கப் தண்ணீர் சேர்த்து அரை வேக்காடாக வேகவிட்டுத் தனியாக வைக்கவும். மீதமுள்ள புளிக்கரைசலைக் கொதிக்கவிடவும். அதனுடன் வேகவைத்த மிதி பாகற்காய் சேர்த்து நன்றாக வேகவிடவும். பிறகு, துவரம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிடவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த மிதி பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பாரை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். குறிப்பு: பாகற்காய் புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து மிக்கது. இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது; வயிற்றிலுள்ள பூச்சிகளையும் ஒழிக்கிறது. வாழைத்தண்டுப் பொரியல் தேவை: நார் நீக்கிப் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒன்றரை கப் உதிர் உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் கெட்டியான மோர் - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் மோர், உப்பு, மஞ்சள்தூள், வாழைத்தண்டு சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். வாழைத்தண்டு வெந்ததும் பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த வாழைத்தண்டுப் பொரியலை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். சாலட் போலவும் சாப்பிடலாம்; சாம்பார், ரசம் சாதங்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம். குறிப்பு: வாழைத்தண்டு வைட்டமின் - ஏ மற்றும் வைட்டமின் - சி கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் சேருவதைத் தடுக்கிறது. ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரகக் கற்களை வாழைத்தண்டு கரைத்துவிடும். இஞ்சி ஊத்தப்பம் தேவை: தோல் சீவி துருவிய இஞ்சி - கால் கப் இட்லி மாவு - 2 கப் கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா 3 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இஞ்சித் துருவலைச் சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும். இட்லி மாவுடன் இஞ்சித் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக் கல்லில் மாவை ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப் போடாமல் வேகவைத்து எடுக்கவும். வாரத்தில் ஒருமுறை இரண்டு இஞ்சி ஊத்தப்பங்களைச் சட்னி (அ) சாம்பாருடன் சுவைக்கலாம். குறிப்பு: இஞ்சி சாப்பிடுவது ஜீரணத்துக்கு மிகவும் ஏற்றது. பித்தத்தையும் இஞ்சி குறைக்கிறது. இட்லி மாவிலேயே உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கத் தேவையில்லை. விருப்பப்பட்டால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு சூப் தேவை: பொடியாக நறுக்கிய பூண்டு - 8 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - ஒரு டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பூண்டு சூப் ரெடி. வாரம் மூன்று முறை இந்தப் பூண்டு சூப்பை அருந்தலாம். குறிப்பு: பூண்டு கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது. வெங்காயத்தாள் சப்பாத்தி தேவை: கோதுமை மாவு - 2 கப் வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் ஓமம் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வெங்காயத்தாள், உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி கவனமாக மசாலா பிரிந்து வராதவாறு மெதுவாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். வாரம் இருமுறை இந்த வெங்காயத்தாள் சப்பாத்தியை முள்ளங்கி தயிர்ப் பச்சடியுடன் சுவைக்கவும். குறிப்பு: வெங்காயத்தாள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதுடன் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி அளிக்கிறது. வாழைப்பழ மில்க்ஷேக் தேவை: நன்கு பழுத்த வாழைப்பழம் - 2 துருவிய வெல்லம் - 4 டேபிள்ஸ்பூன் காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் உலர்திராட்சை - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: துருவிய வெல்லத்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். அதனுடன் வாழைப்பழம், சிறிதளவு பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடிக்கவும். பிறகு, மீதமுள்ள பாலை ஊற்றி அடித்தெடுக்கவும். இதை டம்ளர்களில் ஊற்றி, மேலே உலர்திராட்சை தூவி அலங்கரித்துப் பருகவும். ஐஸ்கட்டிகளையும் சிறிதளவு மேலே சேர்க்கலாம். வாரம் இருமுறை இந்த வாழைப்பழ மில்க் ஷேக் பருகலாம். வாழைப்பழமாகக் கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகள்கூட இதை மிகவும் விரும்பி அருந்துவார்கள். குறிப்பு: வாழைப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து அடங்கியுள்ளது. வாழைப்பழமும் உலர்திராட்சையும் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். மிக்ஸ்டு தயிர்ப் பச்சடி தேவை: கெட்டித் தயிர் - ஒரு கப் ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் மெல்லியதாக நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் - கால் கப் மாதுளை முத்துகள் - 6 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை, உப்பு, வெள்ளரித் துண்டுகள், மாதுளை முத்துகள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். மேலே மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறவும். வாரம் இரண்டு மூன்று முறை இந்த மிக்ஸ்டு தயிர்ப் பச்சடி செய்து சாப்பிடலாம். குறிப்பு: இந்தப் பச்சடி எலும்பு, நகங்களை உறுதியாக்கும். வெள்ளரிக்காயில் இரும்புச் சத்து, வைட்டமின்கள் அடங்கியுள்ளன. கேழ்வரகு அடை தேவை: கேழ்வரகு மாவு - 2 கப் வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன் துருவிய வெல்லம் - ஒன்றரை கப் நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப். செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி கல், மணல் போக வடிகட்டவும். இதை மீண்டும் கொதிக்கவிட்டு தேங்காய்த் துருவல், எள், கேழ்வரகு மாவு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் மாவை நன்கு பிசையவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாகத் தட்டி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. விருப்பப்பட்டால் வெண்ணெய் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: இரும்புச் சத்து மிகுந்த இந்த அடையை வாரம் இருமுறை சுவைத்தால், உடல் உறுதியுடன் இருக்கும். மசாலா மோர் தேவை: மோர் - 2 கப் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. அரைக்க: துருவிய வெள்ளரி - 4 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். மோருடன் உப்பு, பெருங்காயத்தூள், அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மோருடன் சேர்க்கவும் (விருப்பமில்லாவிட்டால் தாளிக்கத் தேவையில்லை). கோடைக்காலத்தில் இதை வாரத்தில் மூன்று முறை அருந்தலாம். குறிப்பு: தாகத்தையும் உடல் சூட்டையும் தணிக்கும். ஆந்திரா வெங்காய தோசை தேவை: இட்லி மாவு - 2 கப் சாம்பார் வெங்காயம் - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 3 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: சாம்பார் வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். தவாவில் ஒரு கரண்டி இட்லி மாவை ஊற்றி, தேய்த்து அரைத்த வெங்காய விழுதை 3 டீஸ்பூன் போட்டு, தோசைத் திருப்பியால் தோசை முழுவதும் பரவலாகத் தேய்த்து ஓரங்களில் நல்லெண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவை இல்லை. வாரத்தில் மூன்று நாள்கள் ஆந்திராவின் பிரசித்தி பெற்ற இந்த தோசையைச் சாப்பிடலாம். குறிப்பு: வெங்காயம் நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும்; கொழுப்பைக் குறைக்கும்; ஞாபக சக்தியை அதிகரிக்கும். கொண்டைக்கடலை - சோளம் சுண்டல் தேவை: கொண்டைக்கடலை - ஒரு கப் இனிப்புச் சோளம் - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் அரிசிப் பொரி - கால் கப் எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்துச் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். இனிப்புச் சோளத்தையும் வேகவைத்துத் தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, கொண்டைக்கடலை, இனிப்புச் சோளத்தை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவல் சேர்க்கவும். இதனுடன் அரிசிப் பொரி, கொத்தமல்லித்தழை சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்துவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சுவைக்கவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்தச் சுண்டலைச் செய்து சுவைக்கலாம். குறிப்பு: இந்தக் கொண்டைக்கடலைச் சுண்டல் சாப்பிடுவதால் வைட்டமின்-சி கூடுதலாகக் கிடைத்து, சுறுசுறுப்பாக இருக்கலாம். சோளம் பார்வைக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கிறது. கேரட் எலும்பு மெலிவடைவதைத் தடுக்கிறது. உணவே மருந்து கூந்தல் முதல் நகங்கள் வரை உள்ள அனைத்துப் பகுதிகளிலும் எந்தவிதக் கோளாறும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதும், ஒருவேளை ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்துகொள்வதும் நாம் உண்ணும் உணவில் காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்வதிலேயே அடங்கியிருக்கிறது. இவற்றில் இரும்புச் சத்து, உயிர்ச் சத்து எனப்படும் வைட்டமின்கள் உட்பட பல்வேறு சத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. தலைமுடி வளர்ச்சி, கண்ணுக்குக் குளிர்ச்சி, ரத்த விருத்தி, இதயத்துக்கு பலம், வயிற்றுக்கு இதம் எனப் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய உணவு வகைகளை, ஆரோக்கியத்துடன் சுவையிலும் அக்கறை செலுத்தி `டூ இன் ஒன்’ ரெசிப்பிகளாகத் தயாரித்து வழங்கியிருக்கிறார் சமையல் கலைஞர் எஸ்.ராஜகுமாரி. ``உணவுகளை எண்ணெயில் பொரிக் காமல் சமைக்கும்போது முழுமையான பலன் கிடைக்கும் என்பதைக் கவனத்தில்கொண்டு இந்த ரெசிப்பிகளைத் தயாரித்துள்ளேன். இவற்றை அடிக்கடி செய்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்’’ என்று உற்சாகம் பொங்க கூறுகிறார். https://www.vikatan.com
-
சமையல் செய்முறைகள் சில
சத்தான கேழ்வரகு - முடக்கத்தான் ரொட்டி மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற அடிக்கடி உணவில் முடக்கதான் கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, முடக்கத்தான் வைத்து ரொட்டி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை - ஒரு கப், ராகி மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முடக்கத்தான் கீரையை கழுவி பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முடக்கத்தான் கீரை, ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து பிசறவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்து கலக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறிய அடைகளாக தட்டி தோசை கல்லில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சத்தான கேழ்வரகு - முடக்கத்தான் ரொட்டி ரெடி.
-
சமையல் செய்முறைகள் சில
30 வகை ஹெல்த்தி ரெசிப்பி சாப்பிடும் உணவு சுவையாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. குடும்பத்தில், குழந்தைகள் முதல் சீனியர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழ ஆரோக்கியமான உணவு வகைகளை இங்கே பட்டியலிட்டு, செய்துகாட்டுகிறார் சமையல்கலைஞர் ஹரிதா படவா கோபி. பீட்ரூட் சாப்ஸ் தேவையானவை: பெரிய பீட்ரூட் - 2 (வேகவைத்து, தோல் உரித்து, சதுர துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (நறுக்கவும்), தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கவும்), பூண்டு - 8 பல், மிளகு - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, கடுகு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு பீட்ரூட், உப்பு சேர்த்துக் கிளறி மூடி, சிறிது நேரம் வேகவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதைச் சூடான சாதத்துடன் பரிமாறலாம். பொட்டேட்டோ - கேஷ்யூ கிரேவி தேவையானவை: குட்டி உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து, தோலுரிக்கவும்), வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை- சிறிய துண்டு, தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 50 கிராம், ஏலக்காய் - 2, லவங்கம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) இலைகள் - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தயிர் - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கொத்த மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: முந்திரிப்பருப்புடன், ஏலக்காய், தனியா, பட்டை, லவங்கம், சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு உருளைக்கிழங்கை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு... பெருங்காயத்தூள், பிரிஞ்சி இலை, இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் மிக்ஸியில் அரைத்த பொடி, தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். தயிர் நன்கு கலந்தவுடன் மிளகாய்த் தூள், சர்க்கரை, உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கஸூரி மேத்தி (வெந்தயக்கீரை) இலைகள், கொத்தமல்லித்தழை தூவவும். இதைச் சூடான சாதத்துடனோ, சப்பாத்தி, பூரியுடனோ பரிமாறலாம். பனீர் பசந்தா தேவையானவை: பனீர் - 500 கிராம், தக்காளி - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - பாதியளவு, வெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பனீரை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் பனீருடன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி தனியே எடுத்துவைக்கவும். கடாயில் வெண்ணெய் ஊற்றி சூடாக்கி, பனீர் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன பின் மீதமுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), சோம்புத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் பனீர் துண்டுகளை சேர்த்து மேலும் நன்கு வதக்கி இறக்கவும். மேலே எலுமிச்சைப் பழம் பிழிந்து பரிமாறவும். கருணைக்கிழங்கு - லெமன் ஃப்ரை தேவையானவை: கருணைக்கிழங்கு - 250 கிராம், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கருணைக்கிழங்கை தோல் சீவி, டைமண்ட் வடிவத்தில் நறுக்கி, வேகவைத்து எடுக்கவும். பாத்திரத்தில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலக்கவும். இதில் கருணைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துப் பிசிறி, எலுமிச்சைச் சாற்றை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு, கருணைக்கிழங்கு துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பேக்டு காலிஃப்ளவர் தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, மெக்ஸிகன் ஹெர்ப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், ஆரிகானோ - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - சிறிதளவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். காலிஃப்ளவர் பூக்கள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சுடுநீரில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, நீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி காலிஃப்ளவர் துண்டுகளைப் பரப்பவும். மெக்ஸிகன் ஹெர்ப்ஸ், ஆரிகானோ, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து மேலே தூவவும். 108 டிகிரியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசைக்கல்லில் சமைக்கலாம். பீன்ஸ் - பனீர் டிலைட் தேவையானவை: பீன்ஸ் - 250 கிராம், பனீர் - 250 கிராம், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பீன்ஸ், பனீரை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி தனியே வைக்கவும். பனீருடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசிறி தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கி, பனீரைப் போட்டு பொரித்து எடுத்து, தனியே வைக்கவும். பிறகு, அதே வாணலியில் மேலும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் பீன்ஸ் கலவை, தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, பனீர் கலவை சேர்த்து மூடி வேகவிட்டு இறக்கவும். வெண்டைக்காய் - வேர்க்கடலை ஸ்டஃப்பிங் தேவையானவை: வெண்டைக்காய் - 500 கிராம், வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெண்டைக்காயின் மேல், கீழ் பாகங்களை நறுக்கிவிட்டு நடுவில் ஒரு கீறல் போட்டு உள்ளிருக்கும் விதைகளை எடுக்கவும். வெறும் வாணலியில் கடலை மாவைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறிய பின் கடலை மாவுடன் வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். இந்தப் பொடியை கீறிய வெண்டைக்காய் உள்ளே நிரப்பவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்னர் அதே வாணலியில் சற்று கூடுதலாக எண்ணெய்விட்டு, வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுக்கவும். பொரித்த வெண்டைக்காய் மீது வறுத்த வெங்காயம் சேர்த்துக் கலந்து பரிமாறவும். கேழ்வரகு - பனீர் சேமியா தேவையானவை: கேழ்வரகு சேமியா (ராகி சேமியா) - 250 கிராம், பனீர் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பனீரை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும். நன்கு கொதிக்கும் நீரில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு வடிகட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பனீரைச் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை மேலும் வதக்கவும். பிறகு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சேமியா, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும். பச்சைப் பயறு சமோசா தேவையானவை: பச்சைப் பயறு - 200 கிராம், மைதா மாவு - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பச்சைப் பயறை நன்றாக வேகவைத்து மசிக்கவும். இதனுடன் வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா உருண்டைகளை முக்கோண வடிவத்தில் திரட்டவும். ஒவ்வொரு முக்கோணத்தையும் கப் போல செய்து, நடுவே பச்சைப் பயறு மசாலாவை வைத்து ஓரங்களைத் தண்ணீர் தொட்டு மூடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, செய்துவைத்த சமோசாக்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். சௌசௌ பொடிமாஸ் தேவையானவை: சௌசௌ (பெங்களூரு கத்திரிக்காய்) - 2 (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு, காய்ந்த மிளகாய் - 6, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். சௌசௌவைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக மொறுமொறுவென்று வரும்வரை வறுக்கவும்.. இதனுடன் வேகவைத்த சௌசௌ சேர்த்துக் கிளறி இறக்கவும். மஷ்ரூம் - பூண்டு மசாலா தேவையானவை: மஷ்ரூம் - 200 கிராம், பூண்டுப் பல் - 10, பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - தேவையான அளவு. செய்முறை: மஷ்ரூமின் அடிப்பாகம் நீக்கி இரண்டாக நறுக்கி, கழுவி சுத்தம் செய்யவும். பூண்டைத் தோல் உரித்து தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி... வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஷ்ரூம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்கு வதங்கி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், மஷ்ரூம் - பூண்டு மசாலா ரெடி. பனீர் சில்லி ஃப்ரை தேவையானவை: பனீர் - 250 கிராம் (டைமண்ட் வடிவில் நறுக்கவும்), குடமிளகாய் (சிவப்பு, மஞ்சள்) - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - சிறிதளவு, சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் பனீருடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசிறி தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, அஜினமோட்டோ, சோயா சாஸ், சில்லி சாஸ், குடமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். குடமிளகாய் பாதி வெந்த பின்பு பனீரை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக வேகவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சோயா கபாப் தேவையானவை: மீல் மேக்கர் (சோயா சங்க்ஸ்) - 250 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், மிளகு - 8 (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மீல் மேக்கரை வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்திருந்து நீரைப் பிழிந்து எடுக்கவும். கடலைப்பருப்பை நன்கு வேகவைக்கவும். ஆறிய பின் கடலைப்பருப்புடன் மீல் மேக்கர் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டவும். பிறகு, தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி, செய்து வைத்த கபாப்களைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். குறிப்பு: எண்ணெயில் பொரித்து எடுத்தும் தயாரிக்கலாம். கோதுமை சேமியா பிரியாணி தேவையானவை: கோதுமை சேமியா - 250 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பீன்ஸ் - 3, கேரட் - ஒன்று, பிரிஞ்சி இலை - ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு, காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்), உருளைக்கிழங்கு - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, கோதுமை சேமியா சேர்த்துக் கிளறி இறக்கவும். பூசணிக்காய் கோஃப்தா கறி தேவையானவை: வெள்ளை அல்லது மஞ்சள் பூசணிக்காய் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடலை மாவு - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பூசணிக்காயை விதை, தோல் நீக்கித் துருவவும். இந்தத் துருவலில் உள்ள நீரை கைகளால் பிழிந்து வடித்துவிடவும். துருவிய பூசணிக்காயோடு சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கடலை மாவு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு இந்த உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.. பிறகு, அதே வாணலியில் மீதமிருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மீதமுள்ள மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்றாக கொதித்து கிரேவி பதத்துக்கு வரும்போது பொரித்து வைத்த கோஃப்தா உருண்டைகளைப் போடவும். மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சன்னா புலாவ் தேவையானவை: சன்னா (கொண்டைக்கடலை) - 100 கிராம், பாசுமதி அரிசி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சன்னா மசாலா பொடி - 2 டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சன்னாவை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து, வேகவைத்து எடுக்கவும். பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அரிசியைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சன்னா மசாலா பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, வேகவைத்த சன்னா சேர்த்து நன்கு வதக்கவும். சன்னாவில் மசாலா நன்றாக சேர்ந்த பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். பேபி கார்ன் பெப்பர் ஃப்ரைடு ரைஸ் தேவையானவை: பேபி கார்ன் - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), பாசுமதி அரிசி - 100 கிராம், வெள்ளை மிளகு - 4 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), அஜினமோட்டோ (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து வேகவைத்து எடுக்கவும். பேபி கார்னை தனியாக வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வும். இதனுடன் பேபி கார்ன், மிளகுத்தூள், உப்பு, (விருப்பப்பட்டால்) அஜினமோட்டோ சேர்த்து வதக்கவும். பிறகு, வடித்து வைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து கிளறி இறக்கவும். சொதி தேவையானவை: தக்காளி - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் (முதல் பால், இரண்டாவது பால்) - தலா ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, இரண்டாவது தேங்காய்ப் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும், முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். கேப்ஸிகம் - வேர்க்கடலை கறி தேவையானவை: குடமிளகாய் (பச்சை, சிவப்பு) - தலா ஒன்று (விரும்பிய வடிவில் நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேர்க்கடலை - 100 கிராம், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் அரைத்த பொடி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். குறிப்பு: குடமிளகாய் நன்கு வேகாமல், கொஞ்சம் `நறுக் நறுக்’கென்று இருந்தால், மிகவும் சுவையாக இருக்கும். இன்ஸ்டன்ட் கோஃப்தா கறி தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து வைக்கவும். பாத்திரத்தில் கடலை மாவு, ஒரு பாகம் வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மீதம் உள்ள வெங்காயம் மற்றும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்ப்பாலை சேர்த்து, பொரித்து வைத்த உருண்டைகளைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். லேடிஸ் ஃபிங்கர் - கேஷ்யூ மசாலா தேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 100 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். சுடுநீரில் முந்திரிப் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் வெண்டைக்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த முந்திரிப் பருப்பு விழுது, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியாக வந்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கலக்கவும். காலிஃப்ளவர் பூரி தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, கோதுமை மாவு - 200 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். சூடான நீரில் காலிஃப்ளவர் பூக்கள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல பிசையவும். காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்கவும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். குறிப்பு: இது சாதாரண பூரி போல உப்பி வராது. தட்டையாகவே இருந்தாலும், ருசி நன்றாக இருக்கும். மீல் மேக்கர் மஞ்சூரியன் தேவையானவை: மீல் மேக்கர் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தக்காளி சாஸ் - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சூடான நீரில் மீல் மேக்கரைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து எடுக்கவும். அதைப் பிழிந்துவிட்டு, துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், மீல் மேக்கர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிட்டு இறக்கவும். கொள்ளு சாம்பார் தேவையானவை: கொள்ளு - 200 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), விரும்பிய காய்கறிகள் கலவை (முருங்கைக்காய், மாங்காய், பூசணிக்காய்) - ஒரு கப், தனியா (மல்லி) - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடியளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெல்லம் - 50 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த் துருவல், கடலைப்பருப்பு, வெந்தயம், புளி, வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். கொள்ளுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளைச் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் வேகவைத்த கொள்ளு, அரைத்து வைத்த விழுது, உப்பு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும். இதைச் சாதத்துடன் பரிமாறலாம். ஸ்பானிஷ் ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - 200 கிராம், டொமேட்டோ ப்யூரி - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டுப் பல் - 10 (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் ஊறவைத்து தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் வெண்ணெயைவிட்டு உருக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வேகவைத்த சாதம், டொமேட்டோ ப்யூரி, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பாகற்காய் மசாலா தேவையானவை: சிறிய பாகற்காய் - 250 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாகற்காயின் ஓரங்களை நறுக்கிவிட்டு, நடுவில் சிறு கீறல் போட்டு, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவும். (முழுவதுமாக நறுக்கக் கூடாது). வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். ஆறிய பின் இந்தக் கலவையைப் பாகற்காயின் நடுவே அடைக்கவும். பிறகு பாகற்காயை நூலால் கட்டி சிறிது நேரம் ஊறவிடவும் (உள்ளிருக்கும் மசாலா வெளியில் வராமல் இருப்பதற்காக). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பாகற்காய்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் (நூல் தானாகப் பிரிந்து வந்துவிடும்). சுவையான பாகற்காய் மசாலா ரெடி. பொட்டேட்டோ கப்ஸ் தேவையானவை: உருளைக் கிழங்கு - 250 கிராம் (தோல் சீவி துருவவும்), க்யூப் சீஸ் - 6 (துருவவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: துருவிய உருளைக் கிழங்கில் இருந்து தண்ணீரைப் பிழிந்தெடுக்கவும். இதனுடன் சீஸ் துருவல், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிய கப்களில் எண்ணெய் தடவி, இந்தக் கலவையை உள்ளே போட்டு நன்றாக அழுத்தவும். பின்னர் கப்பை திருப்பித் தட்டினால், சிறு சிறு கப் வடிவில் கலவை வெளியே வரும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொட்டேட்டோ கப்புகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தானியம் - சம்பா பிசிபேளாபாத் தேவையானவை: சம்பா ரவை - 200 கிராம், தானியக் கலவை (பச்சைப் பயறு, மொச்சை, வெள்ளைக் காராமணி, சிவப்புக் காராமணி, வெள்ளைக் கொண்டைக்கடலை, கறுப்புக் கொண்டைகடலை) - ஒரு கப், துவரம்பருப்பு - 2 கப், வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, புளிக்கரைசல் - ஒரு சிறிய கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: முதல் நாள் இரவே தானியங்களைத் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் களைந்து அரைவேக்காடு பதத்தில் வேகவைத்து எடுக்கவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தானியங்கள், உப்பு, மஞ்சள்தூள், துவரம்பருப்பு, புளிக்கரைசல், சம்பா ரவை, சாம்பார் பொடி சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். ராஜ்மா பிரியாணி தேவையானவை: ராஜ்மா - 200 கிராம், பாசுமதி அரிசி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறிய ராஜ்மாவைக் களையவும். குக்கரில் ராஜ்மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி பத்து விசில்கள் வரை விட்டு இறக்கவும். பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைத் தனியாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு உருக்கி, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், ராஜ்மா பிரியாணி ரெடி. சோயா பக்கோடா தேவையானவை: சோயா - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கி, சோயாவைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு சோயாவைப் பிழிந்து எடுக்கவும். பிறகு, சோயாவைக் கையால் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு மசித்து தனியே எடுத்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சோயா, கடலை மாவு, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சோயா கலவையைச் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
-
சமையல் செய்முறைகள் சில
இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ் இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - சுவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 10, தயிர் - கால் கப், தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: * தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும். * குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும். * அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும். * தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும். * பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும். * உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது.
-
சமையல் செய்முறைகள் சில
தக்காளி தோசை தேவையானவை: தோசை மாவு அரை கிலோ பழுத்த தக்காளி கால் கிலோ பச்சைமிளகாய் ஒன்று மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு செய்முறை: தக்காளியை வேகவைத்து தோலுரித்து ஆறவிடவும். தக்காளியுடன் பச்சைமிளகாய், மிளகுத்தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பதமாக வார்த்தெடுக்கவும். கேழ்வரகு ரவா தோசை தேவையானவை: கேழ்வரகு மாவு 200 கிராம் ரவை 50 கிராம் கோதுமை மாவு 50 கிராம் பச்சை மிளகாய் ஒன்று இஞ்சி ஒரு துண்டு கறிவேப்பிலை சிறிதளவு மிளகுத்தூள் அரை டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் பெருங்காயம் சிறிதளவு உப்பு தேவையான அளவு செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேழ்வரகு, ரவை, கோதுமை மாவை ஒன்றாகக் கலந்து எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி ரவா தோசை பதத்துக்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
-
சமையல் செய்முறைகள் சில
ஒவ்வொரு நாளும் கேழ்வரகு மாவை சமைத்து சாப்பிட்டால் உடம்பு குறையும் என்று ரதிக்கு ஒரு நண்பி சொன்னார். எனக்கு தானியங்கள் பற்றிய அறிவு இல்லை.கேழ்வரகு என்று அடித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் ராகி என்று வந்தது. அதை ஒரு மாதிரி தமிழ்க் கடையில் வாங்கி வந்து விட்டேன். அந்த மாவில் புட்டு,களி,ரொட்டி,கூழ் ஆகியன செய்யலாம் என்று இருக்குது.இந்த மாவில் எப்படி புட்டு அவிப்பது சாதரண அரிசி மாவில் அவிப்பது மாதிரியா?...கூழ்,களி என்பன எப்படிச் செய்வது என யாராவது செய்முறை தந்து உதவ முடியுமா?...குரக்கன் மாவும்,கேழ்வரகு மாவும் ஒன்றா என்ட சந்தேகத்தையும் தீர்த்து வைக்கவும்.
-
சமையல் செய்முறைகள் சில
சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி சத்தான கேழ்வரகை வைத்து வித்தியாசமான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று கேழ்வரகு சேமியாவை வைத்து சூப்பரான பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ராகி சேமியா - ஒரு கப், பச்சைப் பட்டாணி - 50 கிராம், பீன்ஸ் - 10 கேரட் - 1 தக்காளி - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - சிறிதளவு பட்டை - சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 பூண்டு - 6 பல், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: * வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சேமியாவை வெறும் கடாயில் போட்டு சிறிது வதக்கி கொள்ளவும். * வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். * காய்கறிகள் சற்று வதங்கியதும் இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள், உப்பு சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்). * தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும். * சூப்பரான ராகி சேமியா பிரியாணி ரெடி.
-
சமையல் செய்முறைகள் சில
சிறுதானிய கார அடை! குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி! பலன்கள்: கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அடிக்குற வெயிலுக்கு கேழ்வரகு கூழ்.😎 (பாண்டிசேரி)
-
சமையல் செய்முறைகள் சில
முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள் அ-அ+ முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. * மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. * ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். * குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. * முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. * முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது. குறிப்பு: மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு. https://www.maalaimalar.com மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு அ-அ+ பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. பழைய சோறு... தமிழர்களின் பாரம்பரிய உணவு. கஞ்சி உணவு அரிசிச் சோறும் தண்ணியும் கலந்த ஒரு கலவை. கஞ்சியில் உள்ள நீரை மட்டும் காலையில் அருந்துவார்கள். இதை நீராகாரம் என்பார்கள். பழைய கஞ்சியை நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது, கஞ்சித்தண்ணி என்பார்கள். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியா உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு செரிமானக்கோளாறுகளைப் போக்கி செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். நீண்டநாள் இளமையுடன் இருக்கவும், முதுமை ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை வலிமைப்படுத்தவும், உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், சோர்வு நீக்கி சுறுசுறுப்பு தரவும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும், வாதம், பித்தக் கோளாறுகளில் இருந்து விடுதலை தரவும் உதவக்கூடியது பழைய சோறு. சத்துகள் நிறைந்த, தாது உப்புகள் நிறைந்த பழைய சோற்றுக்கு சம்பா அரிசி ஏற்றது. அதிலும் கைக்குத்தல் அரிசி மிகவும் சிறப்பு. முதல் நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணக்கூடியதே பழைய சோறு. முதல் நாள் சமைத்த உணவில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக்கொடுக்கும். பழைய சோற்றைச் சாப்பிட்டு வந்தால் எந்தவிதக் காய்ச்சல்களும் நம்மை நெருங்காது. கோடை காலத்தில் கண் நோய்கள், அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் பல நோய்கள் பாதிக்காமல் இருக்க பழைய சோறு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நோய்கள் வரும்முன் காக்க சிறந்த உணவு. அரிசி சோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்றவற்றை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். முதல்நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம். https://www.maalaimalar.com/
-
சமையல் செய்முறைகள் சில
பீட்சா ரெசிப்பி இளைய தலைமுறையின் நவீன அடையாளம் பீட்சா. இதன் மேல் அடுக்கில் வைக்கப்படும் டாப்பிங்ஸைப் பொறுத்து இதன் ஊட்டச்சத்துகளும் கலோரிகளும் மாறுபடும். காளான், சீஸ், கீரை, சாஸேஜ், அன்னாசி... இப்படி எதுவும் பீட்சாவுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு ஸ்லைஸ் பீட்சாவின் எடை 100 கிராம் என்றால், அதில் 250 கலோரிகள் இருக்கும். பீட்சாவையும் சுவைக்க வேண்டும், கலோரியும் அதிகமாகக் கூடாது என்றால் என்ன செய்வது? வீட்டிலேயே பீட்சா செய்யும்போது சீஸ் அளவைப் பாதியாகக் குறைக்கலாம். ரெஸ்டாரென்ட்டுகளிலும் `ஹாஃப் சீஸ்’ என்று கேட்டு வாங்கலாம். இதோ... இந்தியத் தன்மையுடன் இன்டர்நேஷனல் சுவை பீட்சா வகைகளை வீட்டிலேயே செய்து ருசிக்கும் விதமாகப் புதுப்புது வொரைட்டிகளில் அழகிய படங்களோடு நமக்களிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ். ஹரியாலி வீட் பீட்சா தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய: கோதுமை மாவு – ஒன்றரை கப் ஈஸ்ட், சர்க்கரை, உப்பு – தலா ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் – அரை கப் ஆய்ந்த கீரை – ஒரு கப் பச்சை மிளகாய் – 2 எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் டாப்பிங் செய்ய: பேசில் இலைகள் – ஒரு கப் பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் – ஒரு கப் பைன் நட்ஸ் – கால் கப் மொசரல்லா சீஸ் – கால் கப் ஆலிவ் எண்ணெய் – கால் கப்பிலிருந்து அரை கப் வரை ராக்கெட் இலைகள் - சிறிதளவு ஆலிவ் - 10 (நறுக்கவும்) மொசரல்லா சீஸ் துருவல் – ஒன்றரை கப் அலங்கரிக்க: பேசில் இலைகள், ராக்கெட் இலைகள், பார்ஸ்லே இலைகள், பீட்சா சீஸனிங் – சிறிதளவு செய்முறை: கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீருடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய்விட்டு மிருதுவாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு, மூடி இரண்டு மடங்காகப் பொங்கி வரும் வரை அப்படியே வைக்கவும். பேசில் இலைகளுடன் பார்ஸ்லே இலைகள், பைன் நட்ஸ், கால் கப் மொசரல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதுதான் பெஸ்டோ. மாவை நன்கு அழுத்திப் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை 6 இன்ச் அளவு விட்டத்துக்குச் சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் மேலே போர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு பெஸ்டோவைப் பரப்பவும். அதன் மீது சீஸ் துருவலைத் தாராளமாக தூவி, நறுக்கிய ஆலிவ், ராக்கெட் இலைகள் தூவவும். அதன்மீது சிறிதளவு சீஸ் துருவலைத் தூவி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 – 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்த பிறகு அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி, சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும். பீட்ரூட் ஹம்மஸ் நோ ஈஸ்ட் பான் பீட்சா தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய: மைதா மாவு - 2 கப் பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன் பீட்சா சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன் பால் – முக்கால் கப் எண்ணெய் – கால் கப் உப்பு – ஒரு டீஸ்பூன் ஹம்மஸ் செய்ய: கொண்டைக்கடலை – முக்கால் கப் பீட்ரூட் – ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்) எள் - 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் - 4/5 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் உப்பு – அரை டீஸ்பூன் டாப்பிங் செய்ய: பேசில் இலைகள் - சிறிதளவு ஆலிவ் - 10 (நறுக்கவும்) மொசரல்லா சீஸ் துருவல் - 2 கப் சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங் - சிறிதளவு செய்முறை: கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் கொண்டைக்கடலையுடன் பீட்ரூட் சேர்த்து வேகவைத்து, 6 - 7 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் திறந்து நீரை வடியவிட்டு, சிறிதளவு கடலையை அலங்கரிக்க தனியாக எடுத்துவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வறுத்து எடுத்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, நடுநடுவே எண்ணெய்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும் (தண்ணீருக்குப் பதிலாக, கடலையை வேகவைத்த தண்ணீரை ஊற்றியும் அரைக்கலாம்). மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு, பீட்சா சீஸனிங், பால், எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து மூடிவைக்கவும். அரை மணி நேரம் கழித்து மாவை எடுத்து மீண்டும் பிசையவும். பிறகு, மாவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகம் மாவை எடுத்து, சப்பாத்தி போல திரட்டவும். பானை (Pan) சூடாக்கி, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதன்மீது கடலைக் கலவையைத் தடவி, மேலே சிறிதளவு சீஸ் துருவலைத் தூவவும். அத்துடன் எடுத்த வைத்த கடலை, ஆலிவ், பேசில் இலைகளைப் பரப்பவும். இறுதியாக மீதமுள்ள சீஸ் துருவலைத் தாராளமாக தூவி அதே பேனில் வைத்து மூடி, மூன்று நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். மேலே சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங்கால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும். சாக்லேட் - ரசகுல்லா பீட்சா தேவையானவை: மைதா மாவு – ஒன்றரை கப் சர்க்கரை - 2 டீஸ்பூன் ஈஸ்ட், உப்பு – தலா ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் – அரை கப் முதல் முக்கால் கப் வரை எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் சாக்லேட் கலவை செய்ய: ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப் சாக்லேட் துருவல் – ஒரு கப் டாப்பிங் செய்ய: ரசகுல்லா - 10 (இரண்டாக நறுக்கவும்) உலர்பழக் கலவை – அரை கப் கிவிப்பழத் துண்டுகள் - சிறிதளவு செய்முறை: வாணலியில் க்ரீம் சேர்த்துச் சூடு செய்து இறக்கவும் (அதிகமாகச் சுட வைக்க வேண்டாம்). அதனுடன் சாக்லேட் துருவல் சேர்த்துக் கிளறி உருக்கவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கரைத்து, பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் எண்ணெய் சேர்த்து மாவாகப் பிசைந்து மூடி வைக்கவும். மாவு இரு மடங்காக ஆன பிறகு மீண்டும் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். பிறகு, ஒரு பாகம் மாவை எடுத்துக் கனமான சப்பாத்தியாகத் திரட்டவும். மேலே ஃபோர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 முதல் 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். அதன்மீது சாக்லேட் கலவையைப் பரப்பவும். இறுதியாக டாப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி அலங்கரித்து முக்கோண வடிவில் வெட்டிப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள இன்னொரு ஒரு பாகம் மாவிலும் தயாரிக்கவும். சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா தேவையானவை: பீட்சா பேஸ் செய்ய: மைதா மாவு - 2 கப் முட்டை - ஒன்று வெதுவெதுப்பான பால் – கால் கப் சர்க்கரை, ஈஸ்ட், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன் உப்பு – ஒரு டீஸ்பூன் டாப்பிங் செய்ய: வெண்ணெய், மைதா மாவு – தலா 2 டேபிள்ஸ்பூன் காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப் இத்தாலியன் சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன் மொசரல்லா சீஸ் – கால் கப் பேசில் இலைகள் - சிறிதளவு பொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு முட்டைப் பணியாரம் செய்ய: முட்டை - 3 பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - சிறிதளவு சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உடைத்த முட்டை, ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் நன்கு பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். உடைத்த முட்டையுடன் பார்ஸ்லே இலைகள், உப்பு, சீஸ் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து முட்டைக் கலவையைக் குழிகளில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் வெண்ணெயை லேசாக சூடாக்கி மைதா மாவு சேர்த்து வறுக்கவும். (மைதா மாவு நிறம் மாறக் கூடாது), அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டி தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம், பேசில் இலைகள், உப்பு, இத்தாலியன் சீஸனிங், மொசரல்லா சீஸ் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுவே வொயிட் சாஸ். ஒரு பங்கு மாவைக் கனமான சப்பாத்தியாகத் தேய்த்து அதன் மீது வொயிட் சாஸ் தடவவும். பிறகு, அதன் மேலே கலர் குடமிளகாய், பேசில் இலைகள், குழிப்பணியாரம், சீஸ் துருவலைப் பரப்பி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 15 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, சூடாகப் பரிமாறவும். இதேபோல மீதமுள்ள இன்னொரு பாகம் மாவிலும் தயாரிக்கவும். மசாலா வடகறி வீட் பீட்சா பீட்சா பேஸ் செய்ய: கோதுமை மாவு - 2 கப் ஈஸ்ட், உப்பு – தலா ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் – ஒரு கப் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன் மசாலா வடகறி செய்ய: வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) மசால் வடை - 7 (உதிர்க்கவும்) பாவ் பாஜி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு மொசரல்லா சீஸ் துருவல் – சிறிதளவு (அலங்கரிக்க) எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வெதுவெதுப்பான நீருடன் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு கோதுமை மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் எண்ணெய்விட்டு மாவாகப் பிசைந்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பங்கு மாவை ஆறு இன்ச் விட்டம், அரை முதல் ஒரு இன்ச் கனம் கொண்ட சப்பாத்தியாகத் தேய்த்து 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். இதுவே பீட்சா பேஸ். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் பாவ் பாஜி மசாலாத்தூள், உதிர்த்த மசால் வடை, தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வடகறி தயார். பீட்சா பேஸ் மீது வடகறியைப் பரப்பவும். அதன் மேலே சீஸ் துருவல் தூவி, மறுபடியும் 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்துச் சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள இன்னொரு பங்கு மாவிலும் தயாரிக்கவும். மில்லட் பான்கேக் மஷ்ரூம் பீட்சா தேவையானவை: டார்ட் பேஸ் செய்ய: சிறுதானிய கலவை மாவு – ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப் முட்டை - ஒன்று பேக்கிங் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் ஆனியன் பவுடர் – ஒரு டீஸ்பூன் பீட்சா செய்ய: பீட்சா சாஸ் - 4 டேபிள்ஸ்பூன் நறுக்கிய மஷ்ரூம் – ஒரு கப் சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன் ஆலிவ் – 6 (வட்டமாக நறுக்கவும்) வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்) துருவிய பீட்சா சீஸ் – ஒரு கப் பேசில் இலைகள் - சிறிதளவு செய்முறை: சிறுதானிய மாவுடன் ஆனியன் பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். உடைத்த முட்டையுடன் பால், எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மஷ்ரூம் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துக் கரைத்த சிறுதானிய மாவை எடுத்துச் சிறிய கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதுதான் பான் கேக். மாவு முழுவதையும் இதேபோல் செய்துகொள்ளவும். ஒரு பான் கேக் மீது சிறிதளவு பீட்சா சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றைத் தடவவும். அதன்மீது வதக்கிய மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, ஆலிவ், பேசில் இலைகள் ஆகியவற்றைப் பரப்பவும். இதன் மேலே சீஸ் தூவி அலங்கரிக்கவும். தவாவைச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து, பான் கேக்கை வைத்து சீஸ் உருகி வந்த பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும். மற்ற பான் கேக்குகளையும் இதேபோல் செய்துகொள்ளவும். எக் - ராகி டார்ட் பீட்சா தேவையானவை: டார்க் பேஸ் செய்ய: ராகி மாவு (கேழ்வரகு மாவு) – அரை கப் கோதுமை மாவு – ஒரு கப் ஈஸ்ட், சர்க்கரை, உப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் – அரை கப் முதல் முக்கால் கப் வரை டார்ட் டின் - தேவைக்கேற்ப பீட்சா செய்ய: பீட்சா சீஸனிங் - 3 டீஸ்பூன் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப் ஆலிவ் – 7 (வட்டமாக நறுக்கவும்) முட்டை – 4 அல்லது 5 சீஸ் துருவல் – ஒரு கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு பீட்சா சாஸ் - சிறிதளவு செய்முறை: வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் தனியாக வைக்கவும். ராகி மாவுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் வைத்து மூடி போட்டு ஒரு மணி நேரம் அல்லது மாவு இரண்டு மடங்காக ஆகும் வரை அப்படியே வைக்கவும். பிறகு, மாவை மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி வட்டமாகத் தேய்த்து டார்ட் டின்னின் அளவுக்கு ஏற்ப வெட்டிக்கொள்ளவும். இதை டார்ட் டின்னில் வைத்து ஆங்காங்கே போர்க் ஸ்பூனால் குத்திவிடவும். 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனில் (oven) இதை வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். மீதமுள்ள மாவிலும் இதே போல் செய்துகொள்ளவும். இவைதான் டார்ட் பேஸ். டார்ட் டின்னில் உள்ள ஒரு டார்ட் பேஸ் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன் மீது சீஸ் துருவல், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், ஆலிவ், பீட்சா சீஸனிங் ஆகியவற்றைப் பரப்பவும். மேலே சிறிதளவு சீஸ் தூவி மைக்ரோவேவ் அவனுள் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை 180 டிகிரி டெம்பரேச்சரில் பேக் செய்து எடுக்கவும். அதன்மீது முட்டையை உடைத்து ஊற்றி மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழையைத் தூவவும். இதை மீண்டும் ஐந்து நிமிடங்கள் அல்லது முட்டை செட்டாகும் வரை பேக் செய்து, டார்ட் டின்னைவிட்டு எடுத்துச் சூடாகப் பரிமாறவும். மற்ற டார்ட் பேஸ்களையும் இதே போல் செய்துகொள்ளவும். அக்கி ரொட்டி பீட்சா தேவையானவை: அக்கி ரொட்டி செய்ய: அரிசி மாவு – ஒரு கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 டீஸ்பூன் கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு பீட்சா செய்ய: பீட்சா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன் உதிர்த்த சோள முத்துகள் – அரை கப் செர்ரி – 10 (இரண்டாக நறுக்கவும்) நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள்) கலவை – அரை கப் ஆலிவ் – 10 (வட்டமாக நறுக்கவும்) துருவிய பீட்சா சீஸ் – அரை கப் பேசில் இலைகள் - சிறிதளவு பீட்சா சீஸனிங் - சிறிதளவு செய்முறை: அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், சீஸ், உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, எண்ணெய் தடவி, ஓர் உருண்டையை வைத்து வட்டமாகக் தடிமனான ரொட்டி போல தட்டவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்துச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதேபோல மற்றோர் உருண்டையையும் தட்டி வேகவிட்டு எடுக்கவும். வேகவைத்த ரொட்டியின் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன்மீது சோள முத்துகள், செர்ரி, ஆலிவ், குடமிளகாய் ஆகியவற்றை அடுக்கவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு ரொட்டி பீட்சாவை வைத்து மூடி, அடுப்பை சிறு தீயில் வைத்து, சீஸ் உருகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே சிறிதளவு பீட்சா சீஸனிங் தூவி, சூடாகப் பரிமாறவும். மற்றொரு ரொட்டியையும் இதேபோல் செய்துகொள்ளவும். டோஃபு - மஷ்ரூம் பன் பீட்சா தேவையானவை: ஸ்வீட் பன் (அ) பர்கர் பன் - 4 வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் – அரை கப் பொடியாக நறுக்கிய மஷ்ரூம் – அரை கப் துருவிய டோஃபு – அரை கப் பீட்சா சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிதளவு எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 6-8 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சீஸ் துருவல் - தேவையான அளவு செய்முறை: தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு வெண்ணெய் தடவவும். அதன்மீது பன்னை வைத்து அடுப்பைச் சிறு தீயில் வைக்கவும். `மேஷர்’ கொண்டு பன்களின் மேற்பகுதியை அழுத்தி, பன்னை பீட்சா பேஸ் போல ஆக்கவும். மற்ற பன்களையும் அதேபோல செய்யவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் குடமிளகாய், மஷ்ரூம், டோஃபு துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, சீஸனிங் தூவிக் கிளறி இறக்கவும். பன்களின் மீது இந்தக் கலவையைப் பரப்பி, மேலே சீஸ் துருவலைத் தாராளமாகத் தூவவும். தோசைக்கல்லைச் சூடாக்கி பன் பீட்சாக்களை ஒவ்வொன்றாக வைத்து மூடி போட்டு சீஸ் உருகத் தொடங்கும்போது எடுத்து, மேலே சில்லி ஃப்ளேக்ஸ், சீஸனிங் தூவிப் பரிமாறவும். பனீர் அண்டு பைனாப்பிள் காக்ரா பீட்சா தேவையானவை: சிறிய காக்ரா - 6 (ரெடிமேடாகக் கடைகளில் கிடைக்கும்) விதை நீக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி – கால் கப் கலர் குடமிளகாய் கலவை – கால் கப் வேகவைத்த சோள முத்துகள் – கால் கப் பொடியாக நறுக்கிய பனீர் துண்டுகள் – கால் கப் பொடியாக நறுக்கிய அன்னாசித் துண்டுகள் – கால் கப் பச்சை மிளகாய் - 2 பீட்சா சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன் துருவிய பீட்சா சீஸ் – கால் கப் பீட்சா சாஸ் - 5 டீஸ்பூன் பேசில் இலைகள் - சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: தக்காளியுடன் குடமிளகாய், சோள முத்துகள், பனீர் துண்டுகள், பச்சை மிளகாய், அன்னாசித் துண்டுகள், பீட்சா சீஸனிங், உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். காக்ராவின் மீது சிறிதளவு பீட்சா சாஸைத் தடவவும். அதன்மீது தக்காளி கலவையைப் பரப்பவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். மைக்ரோவேவ் அவனில் காக்ரா ஒரு நிமிடம் அல்லது சீஸ் உருக ஆரம்பிக்கும் வரை வைத்து, பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும். எல்லா காக்ராக்களையும் இப்படியே செய்துகொள்ளவும். https://www.vikatan.com
-
சமையல் செய்முறைகள் சில
புட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு தேவை: கோதுமை - ஒரு கப் நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு நெய் - சிறிதளவு தேங்காய்த் துருவல் - தேவையான அளவு. செய்முறை: கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி வெயிலில் நன்கு காயவிடவும். வெறும் வாணலியில் கோதுமையைச் சிறிது சிறிதாகப் போட்டு, படபடவென வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் புட்டு மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும். புதினா பொடி புலாவ் தேவை: புதினா பொடி செய்ய: புதினா - ஒரு கட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு - 100 கிராம் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் – தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. புலாவ் செய்ய: பாசுமதி அரிசி சாதம் - ஒரு கப் வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு - தேவையான அளவு. செய்முறை: புதினாவை நன்கு அலசி ஒரு துணியில் பரப்பி ஈரம் போக உலரவிடவும். வாணலியில் கறுப்பு உளுந்தைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு புதினா சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். ஆறியதும் உளுந்து கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். புதினா பொடி ரெடி. அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து இறக்கவும். இதை ஆறிய சாதத்துடன் சேர்த்து உப்பு, புதினா பொடி சேர்த்து சாதம் உடையாமல் நன்கு புரட்டிவிடவும். குறிப்பு: பொடியில் உப்பு இருப்பதால் சாதத்துடன் உப்பைக் கவனமாகச் சேர்க்கவும். பொடியை அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். முருங்கைக்கீரை சூப் தேவை: சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 5 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 6 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு தேங்காய்ப்பால் - ஒரு கப் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். குக்கரில் கழுவிய முருங்கைக்கீரை, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரின் மூடியைத் திறந்து நன்கு மசித்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால், மிளகுத்தூள் சேர்த்துச் சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கிப் பரிமாறவும். முருங்கைக்காய் சூப் தேவை: முருங்கைக்காய் - 4 (சிறிய துண்டுகளாக்கவும்) பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக அரைத்தது) சாம்பார் பொடி - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 சிட்டிகை தேங்காய்ப்பால் (ஒரு மூடியில் எடுத்தது) - ஒரு கப் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: முருங்கைக்காயை நன்கு வேகவிட்டு, சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து நன்றாக மசிக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம் - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு முருங்கைக்காயின் சதைப்பகுதி, உப்பு சேர்த்து வேகவிடவும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் சூப் ரெடி. காலிஃப்ளவர் - புதினா ரைஸ் தேவை: ஆய்ந்த காலிஃப்ளவர், சாதம் - தலா ஒரு கப் பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - தேவையான அளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி அளவு எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் - புதினா ரைஸ் ரெடி. முள்ளங்கி - சீரக சாதம் தேவை: முள்ளங்கி - ஒன்று (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்) சாதம் - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்) மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: முள்ளங்கியுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துத் தனியாக வேகவைத்து எடுக்கவும். சாதத்தை உதிர் உதிராக வேகவிட்டு ஆறவைக்கவும். வாணலியில் நெய் - எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பூண்டு, முள்ளங்கி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு சாதம், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சிவப்பரிசி ஆப்பம் தேவை: சிவப்பரிசி, பச்சரிசி - தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு - தேவையான அளவு. செய்முறை: சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: சிவப்பரிசி சேர்ப்பதால் ஆப்ப சோடா தேவையில்லை. நன்கு மிருதுவாக வரும். ருசியாகவும் இருக்கும். சிவப்பரிசியில் சத்துகள் பல அடங்கியுள்ளன. பசும் மஞ்சள் சூப் தேவை: பசும் மஞ்சள் - ஒன்றரை இன்ச் அளவு துண்டு ஓமவல்லி இலைகள் - 4 துளசி இலைகள் - 10 சீரகம் - அரை டீஸ்பூன் மிளகு - 4 பூண்டு - 2 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 3 தண்ணீர் - ஒரு லிட்டர் உப்பு - தேவையான அளவு. செய்முறை: பசும் மஞ்சளைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். அதனுடன் ஓமவல்லி, துளசி, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் அரைத்த விழுது சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து முக்கால் லிட்டர் ஆன பிறகு இறக்கவும். தேவையானபோது லேசாக சூடாக்கி உப்பு சேர்த்துப் பருகலாம். குறிப்பு: இந்த சூப் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். முளைகட்டிய பயறு கொழுக்கட்டை தேவை: கொழுக்கட்டை மாவு - 200 கிராம் முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் - தலா 2 (பொடியாக நறுக்கவும்) கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன் கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய்த் துருவல் (அ) பல்லு பல்லாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் முளைகட்டிய பயறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கொழுக்கட்டை மாவுடன் வதக்கிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிறகு மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சத்தான பயறு கொழுக்கட்டை ரெடி. குறிப்பு: இடியாப்ப மாவு (அ) சிவப்பரிசி புட்டு மாவிலும் தயாரிக்கலாம். சிவப்பரிசிக் கஞ்சி தேவை: சிவப்பரிசி - 100 கிராம் பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் சிவப்பரிசியை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சன்ன ரவையாக உடைத்தெடுக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு வெந்தயம், சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு: விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம். மொசுமொசு அவரைக் கறி தேவை: மொசுமொசு அவரை - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு (வட்டமாக நறுக்கவும்) பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்) சாம்பார் பொடி - தேவையான அளவு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அவரைக்காய், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். காய் வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். குறிப்பு: மொசுமொசு அவரை மருத்துவக் குணம் கொண்டது. இந்த அவரைக்காய் கிடைக்காதவர்கள் சாதாரண அவரைக்காயிலும் இதேபோல் செய்யலாம். முள்ளங்கி பருப்புப் பச்சடி தேவை: முள்ளங்கி - 2 (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்) துவரம்பருப்பு - 100 கிராம் தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி – தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை மஞ்சள்தூள் - சிறிதளவு எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும். அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும். குறிப்பு: இது சாதம், டிபனுக்கு ஏற்ற சைடிஷ். பீட்ரூட் ஜூஸ் தேவை: பீட்ரூட், நெல்லிக்காய் - தலா ஒன்று தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (துருவவும்) மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு. செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி, பொடியாக நறுக்கவும். பீட்ரூட்டுடன் நெல்லிக்காய் துண்டுகள், இஞ்சித் துருவல், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும் (வடிகட்டும்போது சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்க்கவும்). அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பருகலாம். குறிப்பு: இதை அருந்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். செங்கீரைக் கூட்டு தேவை: நறுக்கிய சிவப்பு தண்டுக்கீரை - ஒரு கப் பாசிப்பருப்பு - 100 கிராம் (வேகவைக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 4 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) சாம்பார் பொடி - தேவையான அளவு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பூண்டுடன் சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு - சீரக விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, கீரை சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாக வேகவிடவும். அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான கீரைக் கூட்டு ரெடி. குறிப்பு: சாதத்துடன் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். மற்ற கீரைகளிலும் இதேபோல் செய்யலாம். குடமிளகாய் சம்பல் தேவை: குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 2 (சதுர துண்டுகளாக நறுக்கவும்) பூண்டு - 10 பல் (ஒன்றிரண்டாகத் தட்டவும்) சீரகத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - தேவையான அளவு மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, பூண்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு குடமிளகாய், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். குறிப்பு: தக்காளி சேர்த்தும் செய்யலாம். தண்ணீர் தேவையில்லை. நன்கு சுருள வதக்குவதிலேயே வெந்துவிடும். பூண்டு - வெங்காய வதக்கல் தேவை: பூண்டு - 100 கிராம் (தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தேவையான அளவு கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி, கலவை சுருண்டு வந்த பிறகு இறக்கவும். குறிப்பு: இது தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஸ்வீட் பொட்டேட்டோ - நட்ஸ் மில்க் ஷேக் தேவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - தேவையான அளவு காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி துருவவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும். அதனுடன் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்தெடுக்கவும். அதில் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறவும். குறிப்பு: இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம். சிவப்பரிசி கார சேவை தேவை: சிவப்பரிசி - 250 கிராம் தக்காளி - 6 (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - தேவையான அளவு மஞ்சள்தூள் - சிறிதளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு சோம்பு - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: சிவப்பரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இட்லிகள் சூடாக இருக்கும்போதே சேவை அச்சில் போட்டுப் பிழிந்தெடுத்து ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்து ஆறிய சேவை சேர்த்து நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மிகவும் சத்தான டிபன் ரெடி. குறிப்பு: தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து இனிப்பு சேவையும் செய்யலாம். இந்த சேவையைச் ‘சந்தவை’ என்றும் சொல்வார்கள். பீட்ரூட் தயிர்ப் பச்சடி தேவை: பீட்ரூட் - 200 கிராம் (தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்) தயிர் - 200 மில்லி கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பீட்ரூட் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தயிர்க்கலவையுடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். தானிய தோசை தேவை: ராகி, கம்பு, கோதுமை, வரகு - தலா 100 கிராம் கொள்ளு - 50 கிராம் கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி அளவு கறுப்பு உளுந்து - 100 கிராம் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: மாவைச் சிறிய ஊத்தப்பமாக ஊற்றி, மேலே வெங்காயம் தூவி சுட்டெடுக்கலாம். கொத்தமல்லி - புதினாத் தொக்கு தேவை: கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி - தலா 2 கைப்பிடி அளவு குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – தேவையான அளவு பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை கடுகு - ஒரு டீஸ்பூன் புளி - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லித்தழையுடன் புதினா, கறிவேப்பிலை, குடமிளகாய், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். இதை சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். சிவப்பு அவல் - நட்ஸ் மசாலா தேவை: சுத்தம் செய்த சிவப்பு அவல் - ஒரு கப் கொத்தமல்லித்தழை - சிறிதளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நெய் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் நெய்விட்டு வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை, வறுத்த நட்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும். வரகு - கொள்ளு பொங்கல் தேவை: வரகு அரிசி - 200 கிராம் கொள்ளு - 50 கிராம் சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - 15 நெய் - 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கறிவேப்பிலையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை விழுது சேர்த்துக் கிளறவும். அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானி யங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும். ராகி - பருப்பு அடை தேவை: ராகி (கேழ்வரகு) - 100 கிராம் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம் சோம்பு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 4 பல் காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு முருங்கை இலை - சிறிதளவு. மேலே தூவ: வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு செய்முறை: ராகி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும். மேலே வேர்க்கடலைப் பொடி, கொத்தமல்லித்தழை தூவி எடுத்துப் பரிமாறவும். மிக்ஸட் வெஜ் புர்ஜி தேவை: நறுக்கிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், காலிஃப்ளவர்) - ஒரு கப் பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்) கரம் மசாலாத்தூள் - சிறிதளவு பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - தேவையான அளவு தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். தினை - கேரட் ரைஸ் தேவை: தினை - 200 கிராம் கேரட் - 4 (துருவவும்) பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப் பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: தினையை நன்கு களைந்து ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கி ஆறவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கேரட் துருவல் சேர்த்துக் கலந்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு ஆறிய தினை சாதம், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து உடையாமல் புரட்டி, நன்கு சூடேறியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும். காராமணி - தேங்காய் - மாங்காய் சுண்டல் தேவை: காராமணி - 200 கிராம் தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) சீரகத்தூள் - கால் டீஸ்பூன் இஞ்சித் துருவல் - சிறிதளவு பெரிய வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகுத்தூள் - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: காராமணியை ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல் சேர்த்துக் கிளறி, காராமணி, சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு புரட்டி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஐந்து நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து, இறுதியாக தேங்காய், மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். முப்பருப்புப் பாயசம் தேவை: பாசிப்பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் துவரம்பருப்பு - 50 கிராம் வெல்லம் - 200 கிராம் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 3 முந்திரி, திராட்சை - தேவையான அளவு நெய் - 2 டீஸ்பூன் பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும். பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்து வைக்கவும். வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும். பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம். பச்சைப் பயறு - கொத்தமல்லி பெசரட் தேவை: பச்சைப் பயறு - 100 கிராம் பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழை - தேவையான அளவு சீரகம் - 2 சிட்டிகை பச்சை மிளகாய் - ஒன்று எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பயறு, பச்சரிசி இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து, தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும். வேர்க்கடலை - அவல் உப்புமா தேவை: கெட்டி அவல் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு (வேகவைக்கவும்) பச்சை மிளகாய் - 2 சீரகத்தூள் - 2 சிட்டிகை தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வேர்க்கடலையை 12 மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். அவலை நன்கு அலசி தண்ணீரை வடியவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அவலைச் சேர்த்து மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு புரட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு வேகவைத்த வேர்க்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும். தினம் தினம் வித்தியாசம்! காலையில் வழக்கமான சில டிபன் வகைகள் அல்லது பிரெட் ஜாம்; மதியம் சாதம், சாம்பார், ரசம், பொரியல்; இரவில் சாதம் அல்லது சாப்பாத்தி... இதுதான் நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டு மெனு கார்டில் இடம்பெறும் உணவு அயிட்டங்கள். சாய்ஸா... மூச்! என்னதான் மெனக்கெட்டுச் சமைத்தாலும், ருசியாக இருந்தாலும்... ‘நிரந்தர மெனுதான் சாத்தியம்’ என்ற சமையலறைக் கொள்கை, குடும்ப உறுப்பினர்களை சில நேரங்களில் சலிப்படைய வைத்துவிடுகிறது; சாப்பாடு மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. ``இதற்காக, இத்தாலியன், அமெரிக்கன், மெக்ஸிகன், சைனீஸ் என அகில உலக டிஷ்களைச் செய்து குவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நம்மிடம் கைவசம் உள்ள மளிகைப் பொருள்கள், அருகிலேயே கிடைக்கும் காய்கறிகள், ஆரோக்கியத்துக்கு உறுதுணை புரியும் சில தானியங்கள் ஆகியவற்றைக்கொண்டு சற்று வித்தியாசமான ரெசிப்பிகளைச் செய்து பரிமாறலாம்’’ என்று சொல்லும் சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்... காலிஃப்ளவர் - புதினா ரைஸ், சிவப்பரிசி ஆப்பம், முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு, பீட்ரூட் ஜூஸ், பசும் மஞ்சள் சூப், ஸ்வீட் பொட்டேட்டோ - நட்ஸ் மில்க் ஷேக், மிக்ஸ்டு வெஜ் புர்ஜி, கொத்தமல்லி - புதினாத் தொக்கு எனப் பல்வேறு சுவையான, சத்தான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார். https://www.vikatan.com/
-
சமையல் செய்முறைகள் சில
முளைகட்டிய பயறு உணவுகள் சத்துகள் நிறைந்த முளைகட்டிய பயறுகளில் செய்யக்கூடிய சுவையான பல்வேறு உணவு வகைகளை வழங்கும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர், முளைகட்டும் முறையைக் கூறுகிறார்... ``பயறு வகைகளைக் கழுவி முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி, சுத்தமான துணியில் போட்டு மூட்டைகட்டித் தொங்கவிடவும். அடுத்த நாள் மூட்டையைத் திறந்து பார்த்தால் பயறு நன்கு முளைவிட்டிருக்கும்.’’ சுண்டல், சூப், கஞ்சி, தால், சாலட் என இங்கே வரிசைகாட்டி நிற்கும் ரெசிப்பிகளை செய்துபாருங்கள்... ருசியோடு ஆரோக்கியத்தையும் அள்ளுங்கள். பச்சைப் பயறு - மாதுளை சாலட் தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கேரட் துருவல் - கால் கப் மாதுளை முத்துகள் - கால் கப் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு செய்முறை: முளைக்கட்டிய பச்சைப் பயறுடன் வெங்காயம், தக்காளி, கேரட், மாதுளை முத்துகள், உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து காலை நேரச் சிற்றுண்டியாகப் பரிமாறலாம். நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. குறிப்பு: முளைகட்டிய பயறை வேகவைத்தும் சேர்க்கலாம். கறுப்பு உளுந்து தால் தேவையானவை: முளைகட்டிய கறுப்பு உளுந்து - ஒரு கப் வெண்ணெய் - 2 டீஸ்பூன் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் பட்டை - சிறிய துண்டு சீரகம் - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, முளைகட்டிய கறுப்பு உளுந்து, மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். ஆறிய பின் திறந்து, உப்பு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும். மிக்ஸ்டு ஸ்பிரவுட்ஸ் அடை தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப் முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப் முளைகட்டிய கொண்டைக்கடலை - கால் கப் முளைகட்டிய கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன் முளைகட்டிய கொள்ளு - 5 டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3 தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கேரட் துருவல் - கால் கப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசி, முளைகட்டிய பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கொரகொரவென அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். முளைகட்டிய சன்னா சாட் தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை (வெள்ளை) - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) உருளைக்கிழங்கு - ஒன்று மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும். கொண்டைக்கடலையை வேகவைத்து, நீரை வடிக்கவும். கொண்டைக்கடலையுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலே ஓமப்பொடி தூவிப் பரிமாறவும். கறுப்புக்கடலை சூப் தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை (கறுப்பு) - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு செய்முறை: கொண்டைக்கடலையை வேகவைக்கவும். சிறிதளவு கொண்டைக்கடலையைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்துவைத்த கொண்டைக்கடலை சேர்த்துக் கலந்து பருகவும். குறிப்பு: இந்த சூப், வளரும் குழந்தைகளுக்கு நல்லது. முளைகட்டிய கோதுமை சுண்டல் தேவையானவை: முளைகட்டிய கோதுமை - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கோதுமையை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கோதுமை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே தேங்காய்த் துருவலைத் தூவிப் பரிமாறவும். குறிப்பு: இந்தச் சுண்டல், நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் மாலை நேர உணவாகச் சாப்பிட ஏற்றது. முளைகட்டிய கொள்ளு கஞ்சி தேவையானவை: முளைகட்டிய கொள்ளு - ஒரு கப் புழுங்கல் அரிசி - கால் கப் மோர் - 2 கப் சின்ன வெங்காயம் - 5 (தோல் உரிக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: குக்கரில் கொள்ளு, அரிசி, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து, வெந்த கொள்ளு - அரிசி கலவையுடன் சேர்க்கவும். ஆறிய பின் இதனுடன் மோர், உப்பு சேர்த்துக் கலந்து பருகலாம். குறிப்பு: இது, உடல் எடையைக் குறைக்க உதவும். முளைகட்டிய பயறு சத்து மாவு தேவையானவை: முளைகட்டிய கேழ்வரகு, கம்பு, சோளம் (வெள்ளை) - தலா ஒரு கப் முளைகட்டிய கறுப்பு உளுந்து, கோதுமை, பச்சைப் பயறு - தலா கால் கப் சிவப்பரிசி - ஒரு கப் பொட்டுக்கடலை - 5 டீஸ்பூன் பாதாம், முந்திரி - தலா 10 ஏலக்காய் - 3 செய்முறை: முளைகட்டிய பயறு வகைகளை நன்கு வெயிலில் காயவைக்கவும். வெறும் வாணலியில் முளைகட்டிய பயறு வகைகள், சிவப்பரிசி, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மெஷினில் கொடுத்து பவுடராக அரைக்கவும். இதுவே சத்து மாவு. குறிப்பு: சிறிதளவு மாவுடன் தண்ணீர்விட்டுக் கரைத்து, கொதிக்கவைத்து இறக்கி பால், சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மிக்ஸ்டு ஸ்பிரவுட்ஸ் போஹா தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப் முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப் முளைகட்டிய கொண்டைக்கடலை - கால் கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) கேரட் துருவல் - 5 டீஸ்பூன் பச்சைப் பட்டாணி - சிறிதளவு கடுகு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: அவலைக் கழுவி, தண்ணீர் தெளித்து சிறிது நேரம் வைக்கவும். பச்சைப் பயறு, கொண்டைக்கடலையை வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, உப்பு, அவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஸ்பிரவுட்ஸ் மசால்வடை தேவையானவை: முளைகட்டிய பயறு கலவை (பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, காராமணி) - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லித்தழை - கால் கப் சோம்பு - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: முளைகட்டிய பயறு வகைகள், இஞ்சி, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.