Search the Community
Showing results for tags 'கரும்புலி'.
-
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவில் உள்ள அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் ஊடுருவி கரும்புலிகளும் – வான்புலிகளும் தகர்த்தழித்த வரலாற்றுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய 21 கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தேசத்தின் புயல்கள்… தேசப்புயல்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், தமிழீழ தேசமும்… தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்… கரும்புலி லெப். கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. கரும்புலி லெப். கேணல் வீமன் பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். கரும்புலி லெப். கேணல் மதிவதனன் என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். கரும்புலி மேஜர் இளம்புலி இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு…, கரும்புலி மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், கரும்புலி மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கரும்புலி மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கரும்புலி மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கரும்புலி கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கரும்புலி கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், கரும்புலி கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கரும்புலி கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், கரும்புலி கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கரும்புலி கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கரும்புலி கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கரும்புலி கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், கரும்புலி கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கரும்புலி கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கரும்புலி கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன், கரும்புலி லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். நீளும் நினைவுகளாகி…. தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/memorial-day-of-black-tigers-soldiers-who-died-in-the-operation-ellalan/
- 6 replies
-
- 1
-
- வான்புலி
- கரும்புலிகள்
-
(and 5 more)
Tagged with:
-
"வேர்கள் வெளியில் தெரிவதில்லை - சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை!" சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை. ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை கொலை செய்வதன் மூலம் அச்ச உணர்வினை ஏற்படுத்தி இம்மண்ணையும் பறித்து, பண்பாட்டையும் பறித்துவிட முடிவு செய்தது. சிங்கள பேரினவாதத்தின் இந்த முடிவின் விளைவுதான் கொக்கட்டிச்சோலைப் படுகொலை (28,29,30-01-1987 – மூன்று நாட்களில் 233 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்), சத்துருக்கொண்டான் படுகொலை (09-09-1990 – 42 சிறுவர்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட 150க்கும் மேல் கொல்லப்பட்டனர்) , வந்தாறுமூலைப்படுகொலை (05-09-1990 – 158 தமிழ் இளைஞர்கள் வெட்டியும், சுட்டும், தீயிட்டு கொழுத்தியும் படுகொலை செய்யப்பட்டனர்), புல்லுமலைப்படுகொலை, உடும்பன்குளப் படுகொலை, தோணிதாண்டான்மடுப் படுகொலை என நீண்டுசெல்கின்றது. இத்தனை படுகொலைகளிற்கும் மூலமாக செயற்பட்ட சூத்திரதாரி அவன் வேறு யாரும் அல்ல .மேஜர் ஆக இருந்து இறப்பின் பின் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற லறி விஜேரட்ன ( Uttama Seva Padakkama, Sri Lanka Armed Services Long Service Medal, North and East Operations Medal, Purna Bhumi Padakkama, Operation Wadamarachchi Medal, Riviresa Campaign Services Medal, and 50th Independence Anniversary Commemoration Medal for his service during the course of his military career) அவன் மனைவியும் ஒரு இராணுவ அதிகாரியே பிரிகேடியர் இந்திரா விஜேரட்னா(.Brigadier Indira Wijeratne of the Sri Lanka Army Legal Branch) பல படுகொலைகளுக்கு திட்டமிடலினை நிகழ்த்தி ,நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்ட சிங்கள தீவிரவாத அதிகாரியான மேஜர் லறி விஜேரட்னவை எம் மண்ணிலே கணக்கு தீர்ப்பதென புலனாய்வு போராளிகள் கங்கணம் கட்டி தீவிரமான புலனாய்வு தகவல் சேகரிப்புகளை மேற்கொண்ட வேளை தான் மாற்றலாகி வடமராட்சி மண்ணில் வந்திறங்கினான் லறி விஜேரட்ன. மக்களுடனான தொடர்பாடல்களில் லறி விஜேரட்ன வித்தியாசமானவன் மக்களின் வீட்டு விசேஷங்கள் ,உட்பட மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதாக வெளிவேஷம் போட்டு அம்மக்களிடத்திலேயே புலனாய்வு தகவல்களை சேகரிப்பதில் வல்லவனாகினான் . மக்களோடு மக்களாக வாழ்ந்த எம் போராளிகளை இனம் காண்பதற்கு பல பொது மக்கள் கட்டமைப்புகளை லறி விஜேரட்ன ஏற்படுத்தி இருந்தான் .பிரஜைகள் குழுக்கள், விழிப்பு குழுக்கள் என்பனவற்றுள் தனக்கு தகவல் தரும் முகவர்களை ஊடுருவ செய்து மறைமுக இயக்க உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை பெற முயற்சி செய்தான். அதன் விளைவாக வடமராட்சி புலனாய்வு துறைக்கு பொறுப்பாக இருந்த இளஞ்செழியன் இனம் காணப்பட்டு இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு நடந்த மோதலில் மேஜர் இளஞ்செழியனாக இம் மண்ணை முத்தமிட்டான் . அதனை தொடர்ந்து வதிரி பகுதியில் எம் தாக்குதல் படையணி தளபதிகளான லெப் கேணல் அர்ச்சுனா ,மேஜர் செல்வம் உட்பட ஏழு போராளிகளின் தங்குமிட பதுங்கு குழியின் தகவல்களை பெற்று சுற்றிவளைப்பு தாக்குதல் மூலம் அப் பதுங்கு குழியினை தகர்த்து நேரடி சமரின் மூலம் அவ் ஏழு போராளிகளும் வடமராட்சி வதிரி மண்ணில் விதையாகி போகினர். வடமராட்சி மண்ணில் நின்ற புலனாய்வு போராளிகள் பலருக்கு மிகச் சவாலான காலகட்டமாக மாறிய தருணங்கள் அந்த கொடியவனை வழி அனுப்ப வேண்டிய கால கட்டமான வேளை அது. மறைமுக போராளிகள் தமது புலனாய்வு தகவல்களை திரட்டிய வண்ணம் வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தலைமைக்கு தெரிவித்து வந்தனர். அதன் பிரகாரம் ஒரு மாதத்திற்கு முன்னராகவே உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்றால் , கயவன் மீது மறைமுக கரும்புலி தாக்குதல் ஒன்றின் மூலம் தாக்குதல் நடத்துவதென முடிவாகின. அதன் பிரகாரம் கடற்புலிகள் அமைப்பில் செயற்பட்ட போராளி “எமர்சன் ” என்பவர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் ஆரம்பமாகின .அதனை மேற்பார்வை செய்வதற்கும் , நெறிப்படுத்துவதற்கும் , புலனாய்வுத் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான ” சோழன்” நியமிக்கப்படுகிறான். இச் சோழனே லறி விஜேரட்ன மீதான தகவல் சேகரிப்புகளை மேற்கொண்டு துல்லியமான தகவல்களை பெற்ற தள பொறுப்பாளர் ஆவார். இருவருக்குமான பயிற்சிகள் முல்லைத்தீவில் அமைந்த புலனாய்வுத்துறையின் பயிற்சி முகாம் ஒன்றின் நடந்தேறின. துடியாட்டமும் ,எந்நேரமும் நகைசுவை உணர்வும் நிறைந்த எமர்சன் எம் எல்லோராலும் செல்லமாக சீனி மாமா என்றே அழைக்கப்பட்டான் அதே வேளை அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரன் சோழன் மிக நேர்த்தியான உயர்ந்த மெல்லிய உருவம் .போராளிகளை மிக அமைதியான செயலாக்கத்திற்கும், வழி நடத்தலிற்கும் நன் வழிபடுத்தலுக்கும் ஏதுவானவன். அவனின் அமைதியான சுபாவமே எம்மால் நகைச்சுவைக்கு ஆள்பட்டது. அவரோ அதை பெரிது படுத்தாமல் எம்முடன் இணைந்து தானும் அந்த இடங்களை கலகல படுத்தும் மனப்பாங்கு. எமர்சனின் தாக்குதல் வியூகங்களை நெறிப்படுத்திய தள பொறுப்பாளர் சோழன் மற்றும் அவர்களிற்கான பாதுகாப்பு புலனாய்வு அணி என்பன புறப்பட தயாரானது . 1998ம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வுத்துறையின் யாழ்ப்பாணத்திற்கான நகர்வு பாதை யாழ் கடல் நீரேரி பகுதியாகவே இருந்தது. மிகவும் நெருக்கடியான இராணுவ பாதுகாப்பு அரண்கள் அமைந்த யாழ்ப்பாணத்தின் கிழக்கு அரியாலை பகுதியை ஊடறுத்து வடமராட்சி பகுதியை அடைவதே அணியின் நோக்கயிருந்தது. அதன்படி அணி நகர்வுகளை யாழ் மாவட்ட புலனாய்வுத்துறையின் அப்போதைய பொறுப்பாளர் திரு. ஞானவேல் மற்றும் உதவி பொறுப்பாளர் திரு. பிரதீப் ஆகியோரின் வழி நடத்தலின் பேரில் தாக்குதல் அணி நகர்வை ஆரம்பித்தது. யாழ் கடல் நீரேரியூடாக கிழக்கு அரியாலை பகுதியை சென்றடைந்து மட்டுவில் ஊடாக வரணி பகுதியில் தாக்குதலாளி எமர்சனை நிலைப்படுத்திய பின் பருத்தித்துறை நோக்கி தள பொறுப்பாளர் சோழனுடன் நகர்வு ஆரம்பித்தது .வெற்றிகரமான பயணத்தில் தள பொறுப்பாளர் சோழன் பருத்தித்துறை பகுதியில் நிலை படுத்த படுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே எமர்சன் வரணி பகுதியில் நிலை நிறுத்தபட்டார். நகர்வு அணியின் பணிகள் திறம்பட நிறைவுற்ற பின் பாதுகாப்பு அணி வன்னி திரும்பியிருந்தது. முன்னர் குறிப்பிட்டது போன்று லறி விஜேரட்ன தொடர்பான முக்கிய தகவல் தான் என்ன? தாக்குதல் திட்டம் தான் என்ன ? என்பதை இப்போது பார்க்கலாம். வடமராட்சி மண்ணின் மக்களை தனது புலனாய்வு தந்திரத்தால் கவர்ந்திழுத்து வைத்திருந்த லறி விஜேரட்ன பதவி உயர்வு பெற்று கொத்தலவெல இராணுவ கல்லூரி பணிப்பாளராக நியமிக்கப்பட்டதும், மாற்றலாகி செல்லும் அன்றைய தினமே யாழ் பருத்தித்துறை வர்த்தக சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிந்துபசார (பிரியாவிடை) நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வரவுள்ளார் என்பதே ஆகும். ஆம் அன்றையதினம் மே 14 ,1998 தாக்குதல் திட்டமிட்டதை தள பொறுப்பாளர் உறுதி தகவல்களுடன் தளத்தில் நேரடியாக உறுதி செய்ததுடன் தாக்குதல் நடத்தவென வரணி பகுதியில் நிலைப்படுத்திய கரும்புலி போராளி எமர்சனை பருத்தித்துறை பகுதிக்கு அழைப்பதற்கான முயற்சியினை மேற்கொண்டார். எனினும் எமர்சன் பருத்தித்துறை பகுதிக்கு வர முடியாதவாறு அன்றைய தினம் இராணுவத்தால் வரணி பகுதி தேடுதல் நடவடிக்கை ஒன்றிற்க்காக சுற்றிவளைக்க பட்டிருந்தது. எமர்சன் தனது மறைமுக இருப்பிடத்தில் மறைந்து கொண்டார். தள பொறுப்பாளர் சோழனிற்கு மேற்படி எமர்சனின் நகர்வு தடையான விடயம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலை புரிந்து கொண்ட சோழன் உடனடியாக தானே கரும்புலியாக வெடிமருந்து கந்தக பொதியை சுமந்து செல்ல தயாரானான். தலைமையுடனான பல உரையாடல்களின் பின் சோழன் செல்ல வேண்டாமெனவும், இலக்கு பின்னர் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம் எனவும் ,பொறுப்பாளர்களினால் பல தாக்குதல்கள் நிகழ்த்த முடியும், பல இலக்குகளை அழிக்க முடியும் ஆகவே தாக்குதலினை பிற்போடுமாறும் ,பல வேண்டுகைகள் சோழனிற்கு விடப்பட்ட போதும் சோழனினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தாக்குதலை தானே செய்ய போவதாகவும் பயிற்சி ஒத்திகையின் போது தானும் தாக்குதல் நடவடிக்கையினை ஒத்திகை பார்த்ததாகவும், தாக்குதல் நடவடிக்கை இலகுவாகவும், வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் எனவும், இலக்கை தவறவிட்டால் குறித்த இலக்கினால் பல இழப்புகளை எம்மவர்கள் சந்திக்க வேண்டும் எனவும் தானே வெடிமருந்துடன் செல்கிறேன் என உறுதியாக கூறி தனது தொலைத் தொடர்பை துண்டித்து கொண்டான். பருத்தித்தித்துறை பஸ் நிலைய பகுதியில் அமைந்த அந்த கட்டிடம் விடை பெறும் இராணுவ அதிகாரியை வரவேற்க வர்த்தக சங்க உறுப்பினர்கள் மாலையுடன் காத்திருந்து வரவேற்கும் நிகழ்வினை சோழன் பொறுமையாகவும் ,அவதானிப்புடனும் பருத்தித்துறை முதலாவது குச்சொழுங்கை பகுதியில் நின்று பார்த்துக்கொண்டு இலக்கிற்காய் காத்திருக்கிறான். தடல்புரளான நிகழ்வு கவிதை புகழாரங்கள், மாலை சூடலுடன் தங்க சங்கிலி ஒன்றும் பரிசளிப்பு, அப்பாவி எம் மக்களின் மனங்களை மாற்றி, பல இன்னல்களை கொடுத்து, காணாமல் ஆக்கப்பட்ட எம் இளைஞர்களை மனதில் சுமந்து காத்திருக்கிறான் சோழன். நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது மதியம் 1.45 லாண்ட் ரோவர் வாகனத்தில் பாதுகாப்பு அணியினால் சூழப்பட்டு வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது தான் கட்டியிருந்த கந்தக வெடி மருந்து அங்கியுடன் மோதுகிறான் சோழன், சிங்களம் சிதறியது எங்கும் புகை நெடி ,சிதறுண்ட வாகனத்தின் நடுவே லறி விஜேரட்ன உட்பட நான்கு இராணுவத்தினர் சிதறினர். ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் முதல் சந்திரிக்கா பண்டாரனாயக்க காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க தீவிரமாக 15 ஆண்டுகள் சேவையாற்றியமையை கெளரவித்தே (இதில் இரண்டரை வருடங்கள் வடமராட்சியில் 514 ஆவது பிரிகேட் கொமாண்டராக பணியாற்றியிருந்தார்) மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று கொத்தலாவள இராணுவ பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று இடம் மாறி செல்லும் முன்னரே அக் கொடியவனான லறி விஜேரட்ண மீதான தாக்குதல் தமிழர் தாயக்த்திலேயே இடம்பெற்று அவன் அழிக்கப்பட்டான். காத்திருந்து பகையின் கதை முடித்த எங்கள் சோழன் “லெப் கேணல் சோழனாக “கரும்புலி மனம் கொண்ட முதல் மறைமுக கரும்புலியாய் வரலாறாகி போனான். போராளியாய் ,பொறுப்பாளனாய் ,தாக்குதலை வழிநடத்துபவனாய் ,செயற்பட்ட சோழன் சூழல் அறிந்து கரும்புலியாய் உருமாறி வீரகாவியமான வரலாறு இவனையே சாரும். நீங்கா நினைவுகளுடன்… -அபிராமி-
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தற்கொடைப்படையும் & சிறப்புப்படையுமான 'கரும்புலிகளின்' படிமங்கள் உள்ளன. என்னிடம் இருக்கின்ற கரும்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "உயிரின் திரியில் தீமூண்டிட பகையே முடியும் ! உயரும் மலையே கரும்புலிகளின் வெடியில் தகரும் ! பகையின் திமிரும் வெடியதிர்வுடன் முழுதாய் அழியும் ! தலைவன் விழியும் கரும்புலிகளின் கதையில் கசியும் !" --> 'விடியும் திசையில்' பாடல், 'புயல் புகுந்த பூக்கள்' திரைப்படத்திலிருந்து தரைக்கரும்புலிகளின் இலச்சினை | Ground Black Tigers Logo. 1996 - end of LTTE era:- கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1996 - 1998:- தரைக்கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1998 - end of LTTE era:- மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை & வில்லை | Undercover Black Tigers Logo & Badge: "எம் தேசத்திற்காய் எங்கெங்கும்" கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge & Logo. Wored only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge & Logo. Wored from 2001- end of LTTE era. "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 272 replies
-
- 3
-
- sri lankan army
- ltte commandos
-
(and 77 more)
Tagged with:
- sri lankan army
- ltte commandos
- ஈழ சிறப்புப் படை
- ஈழத் தமிழ் சிறப்புப் படை
- சிறிலங்கா கொமாண்டோ
- சிறீலங்கா கொமாண்டோ
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- புலிகளின் அதிரடிப்படை
- விடுதலை அதிரடிப்படை
- தமிழ் ஈழ கொமாண்டோ
- eelam special force
- sri lanka commandos
- சிறப்பு படை
- கரும்புலி
- தமிழ் சிறப்புப் படை
- விடுதலைப்புலிகளின் அதிரடிப்படை
- ltte black tigers
- உயிராயுதங்கள்
- தடைநீக்கிகள்
- மீளா அதிரடிப்படை
- tamil commandos
- தேசப்புயல்கள்
- non returnable mission commandos
- tamil eelam commando
- eelam tamil commando
- tamil commond
- ltte air commandos
- ltte commando
- தமிழ் அதிரடிப்படை
- ltte naval commandos
- sri lankan rebel commandos
- தமிழீழ அதிரடிப்படை
- srilankan rebel commandos
- tamil eelam commandos
- tamil eelam army
- வான் கரும்புலிகள்
- ltte special commandos
- சிறப்புப்படை
- சிறப்பு அதிரடிப்படை
- srilanka special force
- கொமாண்டோ
- இலங்கை அதிரடிப்படை
- நீரடி நீச்சல் கரும்புலிகள்
- கடற்கரும்புலிகள்
- தமிழீழ சிறப்புப் படை
- தமிழ் கொமாண்டோக்கள்
- ஈழத் தமிழ் கொமாண்டோக்கள்
- ltte self benefaction force
- சிறீலங்கா அதிரடிப்படை
- அதிரடிப்படை
- sri lanka special force
- தமிழீழ கொமாண்டோ
- tamil naval commandos
- balck tigers
- கரும்புலிகள்
- ltte special force
- மறைமுகக் கரும்புலிகள்
- தமிழீழ சிறப்பு அதிரடிப்படை
- tamil army
- சிங்கள கொமண்டோ
- சிறப்புப் படை
- self-benefaction force
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam
- eelam images
- ltte images
- eelam commando
- tamil commando
- tamil eelam special force
- ltte black tigers images
- கொமாண்டோக்கள்
- liberation tigers of tamileelam
- ltte
- tamil tigers
- ltte special forces
- tamil special forces
- ground black tigers
- tamil ground commandos
-
கடற்கரும்புலி கப்டன் மாலிகா டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து நெஞ்சில் பூத்த மலர்கள் கடற்கரும்புலி கப்டன் மாலிகா. கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள். இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு மிகுந்த கவலை. ‘நீ முன்னால் போ. நான் வருகிறேன்’ என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டாளோ! அதன்பிறகு அவளிடம் நீண்ட எதிர்பார்ப்பு. தனக்கு இலக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று அவளிடம் இருந்த துடிப்பு, அதுவே அவளது கனவும் நினைவுமாக இருந்தது. மாலிகா, சிறந்த நீச்சற்காரியாக ஆரம்ப நீச்சற் பயிற்சியின்போதே இனங்காணப்பட்டவள். ஆரம்பப் பயிற்சியின் பின் சிறிதுகாலம் தொலைத்தொடர்பு வேலையில் நின்றபோது, தான் ஒரு கரும்புலியாக வேண்டும் என்ற நீண்ட கனவு அவளிடம் இருந்தது. சுலோஜன் நீரடிநீச்சற் பிரிவுக்குச் சென்றவள், அங்கு தனது திறமைகளாலும் பண்புகளாலும் எல்லோரையும் கவர்ந்தாள். வேகமாக நீந்துவாள். அதிகவலுவுள்ள எந்தப் படகையும் ஒட்டக்கூடிய திறமையை அவள் பெற்றிருந்தாள். மைல் கணக்காக நீந்தி, திறமையாகச் சுழியோடி, தன் குழுவிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் நீச்சல் பழக்கி, படகு ஓட்டக் கற்றுக்கொடுத்து அவள் செய்தவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். உயரக்கிளம்பும் இராட்சத அலைகளுக்குக் கீழால் நீந்துவது கடினம்தான். அந்த அலைகளை ஊடுருவி நீந்துவதற்குச் சிரமப்படும் பிள்ளைகளையும் நீந்திக்கொண்டே இழுத்து நீந்தப் பழக்கி………… அலைகள் அவளிடம் பணிந்துவிடும். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். அவளது குழு எல்லாவற்றுக்கும் முன் நிற்கும். எந்தக் கடுமையான பயிற்சியையும் இலகுவாக்கி சிரித்தபடி செய்து முடிப்பதில் மாலிகா கெட்டிக்காரி. பெரிய பழுவுள்ள இயந்திரங்களையும், வலுவுள்ள பொருட்களையும், தூக்கி தோளில் அடித்து, அவளது உடல் வலுவானதில் வியப்பில்லை. தசைகள் இறுகித் தெரியும். அவளது கம்பீரத் தோற்றத்தால் தோழிகள் அவளைச் செல்லமாகக் ‘கட்ஸ்’ என்று அழைப்பதுண்டு. அந்தச் சம்பவம் அவளது உறுதியை நினைக்கத் தோன்றும். அவள் பயிற்சி முடித்தவுடன் இருபது கடல்மைல் நீந்துவதற்காக அவளின் குழு கடலில் இறக்கியது. இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்த பயிற்சி காலை எட்டு மணிக்கு மேலாகியும் முடிந்தபாடில்லை. மாலிகாவின் வாயிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவளை கரையேறுமாறு பணிக்கப்பட்டது. மாலிகாதான் நீந்தி முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாள். முழுவதும் நீந்தி முடித்த பின்னரே அவள் கரை ஏறினாள். எந்த நோய்வந்தாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துமுடித்த பின்னரே ஓய்வாள். அவளது கடற்சண்டைக் களங்களைக் கூறிக்கொண்டே போகலாம். கிளாலியில் மக்கள் பாதுகாப்புப் பணியிலும், இன்னும் பூநகரி மீதான தவளைத் தாக்குதலிலும் அவளது படகு கடலில் இறங்கியது. கரும்புலியாய் இருளில் அவள் இலக்குத்தேடி அலைந்த நாட்கள் மெய்சிலிர்க்க வைப்பாள். இறுதியாக அங்கையற்கண்ணி நீராடி நீச்சற் பிரிவிலிருந்துதான் திருமலைத் துறைமுகத்துக்குப் போனாள். அவள் தனது இலக்கை அண்மிப்பதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பாதை முழுவதும் சேறு. காலடிகளை ஒழுங்காக எடுத்து வைக்க முடியாதபடி முழங்காலளவு சேறு இருந்தது. அட்டைக் கடிக்குள்ளால் சிலிண்டரையும் தோளில் சுமந்தபடி செல்வது சாதரணமாக நினைத்துப்பார்க்க முடியாதது. கரும்புலிக்கேயுரிய அசத்திய துணிவும், தன்னம்பிக்கையும்தான் எல்லாவற்றையும் செய்யக்கூடிய வலுவை நிறையவே தந்தன. கூட வழியனுப்பச் சென்ற தோழிகள் அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்கள். “கடைசியா எங்களுக்கெல்லாம் சாப்பாடு குழைச்சுத் தந்தாள். அடிபட்டுச் சந்தோசமாய்ச் சாப்பிட்டம்.” இறுதியாக வழியனுப்பிய அந்தத்தோழியின் கன்னத்தில் தட்டி, “நான் போய் வெடிக்கிறபோதுதான் இந்த நோ மாறும்” என்று கூறிவிட்டுச் சென்றாள். கூடவே வந்த வேவு எடுத்துக்கொடுத்த கடற்புலித் தோழர்களிடம் இருநூறு மீற்றரிலேயே விடைபெற்றுப் போனாள். இலக்குப் பெரியது. சாதனையும் பெரியதுதான். நகர்ந்து கொண்டிருந்த கடற்படையினரின் டோறா அவளது இலக்கானது. 1996.12.08 அன்று அந்த இலக்கினோடு, துறைமுகத்தினுள் புகுந்து மாலிகாவும் இல்லாமற்போனாள். அவளுக்குப் பணிந்த அந்த அசுர அலைகள் அவளை அள்ளிச் சென்றிருக்கக் கூடும். நாங்கள் இக்கரையில் நின்றிருந்தோம். அலைகள் மட்டும் திரும்பி வந்தன. நன்றி: களத்தில் இதழ் (04.06.1997). https://thesakkatru.com/black-sea-tiger-captain-maliga/
-
கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி கடலன்னையின் பெண் குழந்தை: முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும். தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள். தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை. ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை. கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள். ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது. லெப். கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம். ‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. ‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது. கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள். எல்லாம் தயார். கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள். இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன். என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள். 1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? எல்லோருக்குமே பரபரப்பு, தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது. ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர். ‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர். சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது. அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள். ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள். தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது. இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள். நன்றி: உயிராயுதம் பாகம் 01 நூல். https://thesakkatru.com/black-sea-tiger-captain-angaiyarkanni/
- 6 replies
-
- அங்கயற்கண்ணி
- கடற்கரும்புலி
-
(and 1 more)
Tagged with:
-
மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும் - கரும்புலி மேஜர் டாம்போ கரும்புலி மேஜர் டாம்போ காசிப்பிள்ளை தயாபரன் நாச்சிக்குடா சந்தி, கிளிநொச்சி வீரப்பிறப்பு:17.08.1967 வீரச்சாவு:19.03.1991 நிகழ்வு:மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி: சிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. “அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் என்பது முடிவானது. சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். “எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. ”முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ ஊர்தியில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்” கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது. மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, ஊர்தியை இலாவகமாக ஓட்டும் திறமையே. கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு நாள் குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். “டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்” என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான். “நான் போறன், வருவனோ தெரியாது” என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும். டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்… அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன – அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்…. “வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா… சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.” ”இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.” ”நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.” ”நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது…” ”ஆம்! டாம்போ! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.” https://www.thaarakam.com/news/1ccbdf82-250e-4be7-b50b-02a1427711ca
-
கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் நவம்பர் 12, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கனவை நனவாக்கியவன் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். 1991ம் ஆண்டு 9ம் மாதம் மணலாற்றில் ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் போராளிகளும் சண்டைக்கத் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தார்கள. சத்துருக்கன் சின்னவன் என்ற காரணத்தால் பொறுப்பாளர் அவனைச் சண்டைக்கு அனுப்பவில்லை. உடனே அவரிடம் சென்ற, “நீங்கள் ஏன் என்னைக் கழித்துவிட்டீர்கள்? ஏன் நான் சண்டை பிடிக்காமாட்டேனோ? இப்படித்தான் நீங்கள் என்னைப் பலமுறை ஏமாற்றி விட்டுச் சண்டைக்கு சென்றீர்கள் ஆனால் இந்த முறை என்னையும் கூட்டிக்கொண்டு போகவேணும்” என்று அடம் பிடித்து சண்டைக்குச் சென்றான். இவன் பிறந்த இடம் கூடலும் கடல் சார்ந்த நிலமுமான ஒரு நெய்தல் நிலமுமான ஒரு நெய்தல் கிராமமாகும். உடுத்துறைக் கடல் அலையின் நுரை சிதறிக் காய்ந்த பெரும் மணல் வெளியில், காலைக் கதிரவன் கண் விழிக்கும் வேளையில், நவரத்தினம் தம்பதிகளின் புதல்வனாய் 1975ம் ஆண்டு ஆவணி மாதம் 24 ம் திகதி தமிழீழ மண்ணில் வந்துதித்தான். தாய் தந்தையர் இவனுக்கிட்ட பெயர் நேசகுலேந்திரன். வீட்டில் செல்லமாக வசந்தன் என அழைக்கப்படுவான். இவனது குடும்பமோ ஒரு வறிய குடும்பமாக இருந்தது. 1981ம் ஆண்டு உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தான். இவன் படிப்பில் மிகவும் அக்கறையாகவும், விளையாட்டில் சுறுசுறுப்பாகவும் இருந்தான். சமூக வேளைகளிலும் முன்னின்று செயற்படுவான். பள்ளியில் படிக்கும் போது வீட்டு வறுமையின் காரணத்தால், தனது அண்ணனுடன் கடற்தொழிலுக்குப் போய் வருவான். ஆனாலும் இவன் தனது படிப்பை கைவிடவில்லை. வசந்தனின் அண்ணன் எமது இயக்கத்திற்குப் படகோட்டியாகச் செல்வார். ஒரு நாள் ஒட்டியாகச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. என்ன நடந்தது என்று இன்றுவரையும் தெரியவில்லை. தாய், தனது மகனைக் கடற்கரையில் வழிமேல் விழிவைத்துப் பார்த்தவாறு சிலநாட்கள் காத்திருந்தாள்; ஆனால் இன்னமும் தான் வரவில்லை. அதன் பின்னர் அவன் தனியாகவே கடற்தொழிக்குச் சென்றுவருவான். ஒருநாள் வசந்தன் கடற்தொழிலுக்குச் செல்லும்போது தாய் மறித்தார் “நீ தனியாகக் கடலுக்குப் போகவேண்டாம்” என்றார். அப்போது அவன் அம்மாவுக்குச் சொன்னார். “நேவி வந்தால் நான் நீந்தி வந்துவிடுவன் நீங்கள் கொஞ்சம் பேசாமல் இருங்கோ” இவ்வாறு கூறிவிட்டு அவன் வழமைபோல் கடலுக்குச் சென்று வருவான். அந்தவேளையில் தான் இந்திய ஆக்கரமிப்புப்படை எமது மண்ணில் காலடி வைத்தது இந்திய தமிழீழப்போர் ஆரம்பமாகியது. அவ்வேளையில் அவனது குடும்பத்தினர் எமது இயக்கத்தின் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எமது இயக்கத்தின் வெடி மருந்தகளை வீட்டு வளவினுள் பதுக்கிவைத்துப் பாதுகாத்துக் கொடுப்பார்கள். ஒரு நாள் இந்திய இராணுவமும், தேசத் துரோகிகளும், உடுத்தறைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். அன்று வசந்தனின் வீட்டிற்கு இராணுவம் வந்து, அவனது தகப்பனை “எல்.ரி.ரி.ஈ இங்கு வந்ததா?” எனக்கட்கும் போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தேசத்துரோகி, “இவங்கள் இயக்கத்திற்கு ஆதரவு; இவங்களை விடாதையுங்கோ” என்று சொன்னான். ஆத்திரமடைந்த இந்திய இராணுவத்தான் ஒருவன் வசந்தன் தகப்பனுக்க அடித்தான். உடனே வசந்தன் “அப்பாவுக்கு அடியாதையுங்கோ” என்று கத்தியபடி தகப்பனைக் கட்டிப்பிடித்தான். அதன் பின் இந்திய இராணுவம் அவனது வீட்டை விட்டு வெளியே சென்றது. அதன் பின்னும் அவனது குடும்பத்தினர் இயக்கத்திற்கு உதவிகள் பல செய்துவந்தனர். இப்படித்தான் ஒருநாள் வசந்தன் ஆடு மேய்க்கச் செல்லும்போது, வசந்தனின் கிராமத்து கோயிலுக்குச் அருகிலுள்ள பற்றை ஊடாக ஒரு போராளி ஓடி வந்தான். அப்போது வசந்தன் அந்தப்போராளியைப் பார்த்த, “என்ன அண்ணை ஓடி வாறியள்? என்ன நடந்தது?” எனக் கேட்டான். அதற்கு அந்த போராளி, “என்னை ஆமி கலைச்சுவாறான்” என்று கூறவே, உடனே வசந்தன் அந்தப் போராளியைத் தனது வீட்டுக்குச் கூட்டிச் சென்று, வீட்டின் மூலையில் இருக்கவிட்டு, வலையினால் மூடிவிடுகிறான். அப்போது இந்திய இராணுவம், தேசத்துரோகிகளும் காலடிகளைப் பார்த்து வசந்தனின் வீட்டிற்கு வந்தனர். வசந்தனின் வீட்டிற்கு இராணுவம் வந்ததும் வீட்டைச் சோதனையிட்டார்கள். அப்போது ஒரு தேசத்துரோகி வசந்ததைப் பிடித்து, “முலையில் ஏனடா வலையைக் குவித்து வைத்திருக்கிறாய்? வலைக்கள் என்னடா இருக்காது?” என்று அதட்டிக் கேட்டான். அதற்கு வசந்தன் “வலைக்குள் ஒண்டும் இல்லை… அப்படியெண்டால் நீங்கள் எடுத்துப்பாருங்கோ” எனத் தளராது பதில் கூறினான். அதன் பின் தேசத்துரோகி வசந்தனின் தாயாரிடம், “இஞ்சை இயக்கம் வாறது என்று அறிஞ்சனாங்கள்; உங்களைக் கவனிக்கிறம்” என்று சொல்லிவிட்டு சென்றான். அதன் பின் 1990ம் ஆண்டு முற்பகுதியில், இந்திய இராணுவம் எமது மண்ணை விட்டு வெளியேறியது. எமது மக்கள்பட்ட இன்னல்களைக் கண்டு வசந்தனின் உள்ளம் குமுறியது. துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தினிலே தூய விடுதலைக்காய் துப்பாக்கியினைத் தோளில் ஏந்தத் துணிந்துவிட்டான். அந்த வகையில்தான் 1990ம் ஆண்டு பங்குனி மாதம், எமது இயக்கத்தில் தன்னை முழுநேர உறுப்பினாராக இணைத்துக்கொள்கிறான். சத்தருக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டு, பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பயிற்சி பாசறையில் சிறுவனாக இருந்தாலும், எந்தப் பயிற்சியினையும் ஓர்மத்துடனும் சலிப்பிலாமலும் எடுத்து முடித்தான். பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்ததும், இவனும் இன்னும் சில போராளிகளும் ஒரு முகாமில் இருந்தார்கள். பின்னர் இவனுடைய திறமையைக் கண்ட பொறுப்பாளர், இவனைப் பலாலி காவலரணுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே இவன் இருக்கும்போது, எமது கண்ணிவெடிப் பிரிவினர் கண்ணிவெடி வைக்க போகும்போது அவர்களுடன் சென்று கண்ணிவெடிகள் வைப்பான். கண்ணிவெடிகளைப் பற்றி அறியும் ஆர்வத்தில் மற்றைய போராளிகளிடம் கேட்டு அறிவான். 1991 ஆம் ஆண்டு 12 ம் மாதம் பலாலி இராணுவம் வளலாய்ப் பகுதியை நோக்கிய ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தச் சண்டையில் திறமையடன் சண்டை செய்தான் சத்துருக்கன். அதன் பின் ஒரு காவலரனுக்கு தலைமை தாங்கி, அங்கு ஒரு சில மாதங்கள் இருந்தான். அதன் பின்னர் வடமராட்சிக் கிழக்கு பகுதி காவலரணுக்கு அழைத்த செல்லப்பட்டு, வெற்றிலைக்கேணி காவலரண் பகுதியில் இடம் தெரியாத போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தான். அவன் எல்லாப் போராளிகளிடமும் அன்பாக பேசிப் பழகுவான். போராளிகளுடன் சேர்ந்து சிரிப்பூட்டும் பகிடிகளும் விடுவான். அங்கே போராளர்களுக்கு இடங்களைக் காட்டியபின், 1992ம் ஆண்டு 7ஆம் மாதமளவில், வடமராட்சி கோட்ட பொறுப்பாளர் மேஜர் பிறேமநாத் அண்ணாவால் இவனும் இன்னும் சில செய்யப்பட்டு வேவுப் பயிற்சி அளிக்கப்பட்டு வளலாய்க் காவலரணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவன், தனக்குக் கொடுக்கப்பட்ட வேவுப்பணியில் மிகவும் திறமையடன் செயற்பட்டான். இவன் வேவுக்குச் சென்று எதிரியின் காவலரணுக்கு முன்னுள்ள கம்பிவேலிக்கு உட்பகுதியில் எதிரி புதைத்து வைத்த மிதிவெடிகளை எடுத்து வருவான். வேவுக்கு சென்று எதிரியின் நடமாட்டத்தை அவதனிக்கும் போது இராணுவம் சத்தம் போட்டுக் கதைத்தால், மற்றைய போராளிகளுக்குச் சொல்லுவான். “இப்ப கதைக்கிறார்; இன்னும் கொஞ்ச நாளிலை தெரியும் எங்கட விளையாட்டு” என்று. இவன் வேவுக்குச் செல்லும் போது பல நாட்கள் சாவின் விளிம்பில் ஏறி நடந்தான். ஊருறங்கும் நேரத்தில் எதிரியின் பாசறையில் தகவல் பெற்றிட சிறந்த வேவு வீரனாக இவன் திகழ்ந்தான். வேவுக்குச் செல்லும் போது பல தடைவைகள் மரணம் இவளோடு மல்லுக்கட்டியது; வெல்ல முடியவில்லையே என்று வேதனைப்பட்டது சத்துருக்கனின் ஆசை போல், பலாலி கிழக்கு வளலாய்ப் பகுதியில் 150 காவலரண்கள் எம்மவர்களால் தாக்கி அழிக்கப்பட்டன. அந்தச் சண்டை முடிந்தவுடன் தனது பொறுப்பாளரிடம் சென்று, “நான் கரும்புலிக்குப் போகபோறன்” என்று கேட்டு, அவன் கரும்புலிக்குச் சென்றான். கரும்புலிகளுக்கான பயிற்சியினை முடித்துவிட்டு கரும்புலி அணியின் ஒரு குழுத் தலைவானக தொண்டமனாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவர்களது இலக்கு பலாலி விமான நிலையத்தை ஊடுருவித் தாக்கி அழிப்பதே! சத்துருக்கன் என்னை இறுதியாக தொண்டமனாற்றில் வைத்துச் சந்தித்ததான். அப்போது என்னுடன் கதைக்கும் போது “இனி எங்கட மக்கள் சுதந்திரமாக வாழப்போகிறார்கள். தமிழன் தலைநிமிர்ந்து நடக்கப் போகிறான். அதற்கு நாங்கள்தான் வழிகாட்டியாக இருக்கப்போகிறோம் “ என்று சொன்னான். அன்று மாலை; கடல் அலைகள் ஓய்வ எடுத்தக்கொண்டிருந்தன. ஆனால் கரும்புலிகள் ஓய்வெடுக்கவில்லை; தமது இலக்கை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டனர். என்னவோ கடலன்னைக்கு பொறுக்கவில்லை போலும். திடிரென நீரோட்டம் அதிகமா இருந்தது. ஆனாலும் கரும்புலிகள் தமது முயற்சியைக் கைவிடவில்லை. விடியற் காலை 4.00 மணியிருக்கும் ஈ கூட நுழையமாட்டாது எனக் கூறிக்கொண்டிருந்த அந்தச் சிங்கத்தின் குகைக்குள், சிறுத்தைக் கூட்டம் நுழைந்து கொண்டிருந்தது. இவர்கள் தாக்குதலுக்கச் சென்ற நேரம் தவறிவிட்டது. இவர்களின் தாக்குதல் திட்டமும் மாறிவிட்டது. மறுநாள் காலை 9 மணி இவர்கள் விமான நிலையத்தில் இருந்து சற்றுத் தொலைவில் எதிரியை அவதானித்தபடி இருந்தார்கள். அப்போது ஒரு நாய் அவர்களை நோக்கி வந்தகொண்டிருந்தது. அதன் பின்னால் ஒரு இராணுவம் சிப்பாயும் வந்துகொண்டிருந்தான். அதன் பின்னால் ஒரு இராணுவச் சிப்பாயும் வந்து கொண்டிருந்தான். இவர்களைக் கண்டுகொண்டான். அவன் இவர்களைக் காணாது மாதிரி பின்னுக்குச் சென்று பின்னர் பல இராணுவத்தினரை கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்தான். தங்கள் கிளையோடு கிளம்பிய அவர்கள், ஆயிரம் ஆயிரம் கைகளில் ஆயுதங்களைப் பிடித்தபடி, ஆகாயத் ‘தும்பிகளின்’ துணையோடு அந்த இடத்திற்கு வந்தனர். அப்போதுதான் போர் மூண்டது. சத்துருக்கனின் அணியினர் தாக்குதலை தொடுத்தனர். அந்த இடத்திலேயே பல இராணுவத்தினர் கொல்லபப்பட்டனர். அப்போது எதிரி தாக்கிய 40 எம் எம் பிஸ்டல் குண்டு ஒன்று சத்துரக்கனின் இரு கால்களையும் பதம் பார்த்து உடனே மற்றைய போராளிகளுக்கு சத்துருக்கன் கட்டளையிட்டான். “எனது இரண்டு கால்களும் போய்விட்டன. நான் குப்பி கடிக்கப் போகிறேன். நீங்கள் மூவ் பண்ணுங்கோ.” சாவையே குப்பியில் அடைத்த – மரணத்தையே கழுத்தினில் மாலையாக சுமத்தி – சரித்திரம் படைத்துவிட்டான். சாவை முறியடிக்க சிலர் சாத்திரம் பார்க்கும் நேரம், சாவையே முதுகிலேந்தி பாலாலி மண்ணில் சரித்திரம் படைத்தவிட்டான் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். சாவு அவனைச் சந்தித்த போதும் கூட எமது தாய் நாட்டையும், தலைவனையும் தான் அவன் நினைத்திருப்பான்! நன்றி: எரிமலை இதழ் (மாசி, 1996). https://thesakkatru.com/black-tiger-lieutenant-kannan/
-
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து என்னினிய தமிழீழ மக்களுக்கு, நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இப்படிக்கு போராளி இன்னிசை 1996.05.16 ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம் வெற்றிலைக்கேணியிலிருந்து பருத்தித்துறைக்கு இடம் பெயர்ந்தது. இந்த இடப்பெயர்வுதான் இவளுள் போராட்ட உணர்வை விதைத்தது. வீட்டிலே மூத்தவள் இவள். பின்னால் ஆறு பேர். குடும்பப்பொறுப்பு அவளை இழுத்துப் பிடித்தாலும், வீட்டார்மேல் அவளுக்கிருந்த பாசமே நாளடைவில் அவளைப் போராடத் தூண்டியது. 1992இல் கடற்புலிகள் மகளிர் படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமில் இன்னிசைக்கும் பாரதிக்கும் இடையில்தான் பயிற்சியில் போட்டி. இருவரும் நல்ல நண்பிகள். ஆனால் எதிலும் போட்டிதான். பயிற்சி முடிந்ததும் மருத்துவப் போராளியாகக் கடமையாற்றிய போதே நீச்சற் பயிற்சியையும் எடுத்தாள். எந்த நேரமும் சண்டைக்குப் போகக்கூடிய தயார் நிலையில் தன்னை வைத்திருந்தாள். மருத்துவ முகாமிலே மருந்துகளை விட இன்னிசையின் கதைதான் காயங்களை, நோயை விரைவில் ஆற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும். கரும்புலியாகப் போகும் தன்விருப்பத்தைத் தெரிவித்து, நளாயினி படையணிக்கு வந்ததும் பாரதியை மீண்டும் சந்தித்தாள். இடையிலே பிரிந்த தோழிகள் தமது இலக்கினால் மீண்டும் ஒன்றாகினார்கள். தனது படகைத் தானே கழுவுவாள். தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே செய்து கொள்வாள். தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு எது தெரியாதோ, அதைச் சொல்லிக் கொடுப்பாள். தன்னைப் போலவே எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டும் என்று விரும்புவாள். இரவு நேரங்களில் தென்னை மரங்களில் ஏறி, தேங்காய் திருடி இளநீர் குடிப்பதைப்போல் அவளுக்கு சுவாரசியமான விடயம் வேறொன்றுமில்லை. கரும்புலியாகப் போகும் போது, ஒரு பெண் போராளியுடன் போவதுதான் தனது விருப்பம் என்று பொறுப்பாளரிடம் அடிக்கடி சொல்வாள். வெடிமருந்தேற்றிய படகுடன் கடலில் அலைந்து விட்டு, இலக்குக் கிடைக்காமல் திரும்பும்போது தோழிகளின் அபாரமான அறுவைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ”இந்தமாதிரி இழுபடுகிறாய். இனி உனக்குத் தொண்ணூற்றி ஏழில்தான் சான்ஸ்” 1996-07-19 ஓயாத அலைகள் தாக்குதலின் இரண்டாம் நாள், மிதுபாலனையும் இன்னிசையையும் சுமந்த கரும்புலிப் படகு ‘ரணவிரு’வுடன் மோதியது.ஏதோ பிசகி விட்டது. படகு வெடிக்கவில்லை. ‘ரணவிரு’வின் எதிர்த்தாக்குதலால் இன்னிசை காயமுற்றாள். தவிர்க்கமுடியாமல் இருவரும் கரை திரும்ப நேரிட்டது. இன்னிசை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, 1996-07-24 அன்று மிதுபாலன், சயந்தனுடன் போய் மற்றொரு தரையிறங்கு கப்பலைத் தாக்கி காவியம் படைக்க, தனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லையே என்ற கவலை அவளை வாட்டியது. இன்னிசைக்கும் பாரதிக்கும் இலக்குக் கொடுக்கப்பட்டபின்னர், அவள் தன் வீட்டுக்கு விடுமுறைக்குப் போனாள். நோயால் வாடியிருந்த தாய் மகளை வீட்டுக்கு வந்து குடும்பப் பொறுப்பை ஏற்குமாறு கேட்டாள். இன்னிசை மெல்லச் சிரித்தாள். ”கொஞ்ச நாளில வருவன் அம்மா” நீண்ட கால அலைச்சலின் பலன் 1996-11-11 அன்று அதிகாலை இன்னிசைக்குக் கிட்டியது. காரைநகர் கடற்படைத்தளமருகே அதிவேக டோரா பீரங்கிப் படகுமீது இன்னிசையையும் பாரதியையும் சுமந்த படகு பாய்ந்தது. தன் மகள் கடைசியாகத் தனக்குச் சொன்ன வரிகளின் பொருள் அப்போதுதான் அந்தத் தாய்க்குப் புரிந்தது. இன்னிசை தன் குடும்பத்தினருக்கு எழுதிய கடைசிக் கடிதத்திலிருந்து ஒரு கவிதை: நீலக்கடல் வற்றினாலும் என் மழலைச் சகோதரர்களின் முகங்கள் என் மனதில் அலை மோதுகின்றது நிலவு வந்து ஒளிபரப்புகின்ற நேரத்தில் என் பெற்றோர் அரவணைத்த பாசப் பிணைப்பு நெஞ்சத்தில் ததும்புகின்றது. நெஞ்சம் மறப்பதில்லை தொகுப்பிலிருந்து… நன்றி: களத்தில் இதழ் (12.02.1997). https://thesakkatru.com/black-sea-tiger-captain-innisai/
- 1 reply
-
- கடற்கரும்புலி
- கரும்புலி
-
(and 1 more)
Tagged with:
-
கடற்கரும்புலி மேஜர் பாரதி நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து பெண்களதும் ஆண்களதும் கலகலவென்ற கதம்ப ஒலியால் அந்தச் சிறிய ஒன்றுகூடல் மண்டபம் அதிர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் கரிய உடைகள் அணிந்தவர்களாக இருந்தாலும், முகங்களெல்லாம் ஆயிரம் வோல்ற் மின்விளக்குகளைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன. மண்டபத்தில் இருந்த ஒலி – ஒளிப்பதிவுக் கருவிகள், புகைப்படக் கருவிகளெல்லாம் அவர்களை விழுங்கிக் கொண்டிருந்தன. கலகலப்பை மீறி, இடையிடையே வாசலைப் பார்ப்பதும் பின்னர் கதைப்பதும் சிரிப்பதுமாக இருந்தனர். அவர்கள் கரும்புலிகள்.தமக்கு எல்லாமுமாக இருந்து நெறிப்படுத்தி அன்பு காட்டி அரவணைத்த அந்தப் பெரும் தலைவனை இறுதியாகச் சந்திப்பதற்கு காத்திருந்தார்கள். கலகலத்த மண்டபமும் ‘சட்’டென அமைதியானது. கண்களில் பெருமிதமும் வேதனையும் போட்டியிட கம்பீரமான சின்னப் புன்னகையுடன் தலைவர் வந்தார். விழிகளில் ஒளியோடு நின்ற அந்த நெருப்புகளை நோக்கி வணக்கம் என்றார். மீண்டும் கலகலப்பு. மகிழ்ச்சிப் பெருக்கு. கதைக்கிடையில் யாரோ பாரதியை ‘சாண்டோ’ என்று கூப்பிட, தலைவர் ஏன் என்று வினவினார். பாரதியின் மேல் படகுகள் ஏற்றப் பயன்படுத்தும் பாரவண்டி படகுடன் தவறுதலாக ஏறியதை எல்லோரும் கதைகதையாக அவருக்குச் சொல்ல, அவர் சிரித்தவாறு பாரதியை ‘சாண்டோ’ என்று தானும் கூப்பிட்டார். பாரதி புன்னகைத்தாள். வீட்டில் கடைக்குட்டி. செல்லப்பிள்ளை. கதையும் செல்லக்கதைதான். இயக்கத்திலும் அவள் அப்படியே கதைப்பதால், தோழிகள் அவளை ‘நயினா’ என்றுதான் கூப்பிடுவார்கள். தாயும் மகளும் சரியான நெருக்கம். வெளியே போன பாரதி வரக் கொஞ்சம் தாமதமானாலும் தேடித் போய்விடுவார் அம்மா. ஒருநாள் பாரதி வீட்டுக்கு வரவேயில்லை. தேடித்தேடி கடைசியாக முகாமிற்குப் போய் அழுத அம்மாவிடம், ”நீங்க அழவே கூடாது அம்மா.நான் உங்களிடம் வரவேணுமெண்டால் நீங்க அழக்கூடாது” என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டாள். பயிற்சி எடுக்க முன், சிலகாலம் அவள் இடம்பெயர்ந்த தீவக மக்களிடையே அரசியல் வேலை செய்தாள். இடப்பெயர்வு வாழ்வின் அவலங்களை அங்கே அவள் கண்டாள். அந்த மக்களின் கண்ணீர்தான் அவளைக் கரும்புலி ஆக்கியிருக்க வேண்டும். பயிற்சி ஆசிரியர் ஒருமுறை, இவளின் அணியினரை ‘சோம்பேறிகள்’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் அன்றிலிருந்து எதிலுமே பாரதியின் அணிதான் முன்னின்றது. ”பாரதியக்கா இல்லாவிட்டால் நாங்கள் இப்பவும் சோம்பேறியாத்தான் இருந்திருப்பம்” என்று நினைவு கூர்ந்தார் அந்தநேரத்தில் பாரதியின் அணியிலிருந்த ஆரணி. ஆரம்பப் பயிற்சி முடிந்ததும் வெடி மருந்துப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டாள். அதுமுடிய நீச்சல், படகோட்டம் என்பவற்றில் ஈடுபட்ட பாரதி ஒரு கலைஞராகவும் இருந்தார். நிகழ்ச்சிகளைத் தயாரிப்பாள். கவிதை எழுதுவதிலும் பெரும் ஆர்வம் இருந்தது. ”நாங்க ஒரு சண்டை செய்ய வேணும். அதுக்கு ‘அலைவேகத் தாக்குதல்’ எண்டு பெயர் வைக்க வேணும்” என்று அடிக்கடி சொல்வாள். கிளாலியில் மக்கள் பாதுகாப்புச் சேவையில் ஈடுபட்டபோது, பாரதியின் A.K.L.M.G பல தடைவைகள் முழங்கியிருக்கின்றது. சுகன்யா படையணியின் பொறுப்பாளராக இருந்து மண்டைதீவுச் சண்டைக்கு ஓட்டியாகச் செயற்பட்டாள். பூநகரி மீதான தவளைத் தாக்குதலின் போது, இவளது படகையும் அருகில் வந்த இன்னொரு படகையும் உலங்கு வானூர்தி தாக்க, எல்லோருமே கடலுக்குள் குதித்து நீந்தத் தொடங்கினார்கள். ஒரு போராளி நீரில் மூழ்கித் தத்தளித்தபடி, ”என்னைக் காப்பாற்றக்கா” என்று கத்த, திரும்பி நீந்திய பாரதி அவனின் தலையில் ஒரு குத்துவிட்டு, மயங்கியதும் கரைக்கு இழுத்தவாறு நீந்தினாள். பின்னர், கடலில் ஐந்து கடல் மைல் நீச்சல் முடிந்ததும் அவனின் செய்தி பாரதியை வந்தடைந்தது. “அக்கா உன்னாலதான் நான் இண்டைக்கு இப்படியொரு நிலைக்கு வந்திருக்கிறன்”. பின்னர் அவன் முல்லைத்தீவில், ‘ஓயாத அலைகள்” தாக்குதலில் வீரச்சாவடைந்தது பாரதியை உலுக்கிவிட்டது. 1996இல் நளாயினி படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பாரதி ‘ஓயாத அலைகளுக்கு’ ஓட்டியாகச் செயற்பட்டாள். படகு ஏற்றும் பாரவண்டி படகுடன் ஏறி உடல் பலவீனமாக இருந்தபோதும், தனக்குரிய வெடிமருந்துப் படகை பிடிவாதமாகக் கேட்டு வாங்கினாள். “படகை நான்தான் ஓட்டுவன். என்னோட ஒரு பெண் போராளி வரட்டும்” என்று பொறுப்பாளரைக் கேட்டாள். அவளின் விருப்பப்படியே, மேஜர் மங்கைக்கு அடுத்ததாக, வெடிமருந்துப் படகை ஓட்டிய பாரதி, 1996.11.11 அன்று அதிகாலை காரைநகர் கடற்படைத்தளமருகே அதிவேக டோரா பீரங்கிப் படகு மீது மோதினாள். கூடவே இன்னிசையும். நெஞ்சம் மறப்பதில்லை தொகுப்பிலிருந்து… நன்றி: களத்தில் இதழ் (12.02.1997). https://thesakkatru.com/black-sea-tiger-mejor-bharathi/
- 1 reply
-
- மாவீரர்
- கடற்கரும்புலி
-
(and 2 more)
Tagged with:
-
கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி. தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று. “இந்த வாறன். இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ” என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான். தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் “பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது” எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை. சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், “அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்” என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள். “அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்.” கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது. இந்தக் காலம் அமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம். முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன. முறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு. இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு: “அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்.” அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது. முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள். அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர ‘பிறைற் ஓவ் சவுத்’ என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள். அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள். நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து ‘பிறைற் ஒவ் சவுத்’ என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள். சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள். ‘பிறைற் ஒவ் சவுத்’ மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுதத சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள். கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், “அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வார்.” எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது. வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை… கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு. பொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்… பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை. எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களத படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது. மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை. ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது. அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். “படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ…? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ…?” இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது. மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம். அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய். “அமுதசுரபி” பெயர் தாங்கிய ஒரு சண்டைப் படகு தமிழீழ கடற்புலிகள் அணியில் பல வரலாற்றுச் கடற்சமரில் பங்கு பற்றி பல வெற்றிக்கு வழி வகுத்தன பல வீரரின் தியாகத்துடன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/black-sea-tiger-lieutenant-colonel-amuthasurabi/
- 1 reply
-
- மாவீரர்
- கடற்கரும்புலி
-
(and 2 more)
Tagged with:
-