Jump to content

Search the Community

Showing results for tags 'கறுப்பு ஜூலை'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 17 results

  1. கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு ஜூலை 23, 2024 ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் நிர்வாணத்தாலும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அதனை சிறிலங்கா அரசு கலவரம் என்று அழைத்து தன்னைக் காக்க முயன்றது. சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் வளம், பொருளாதாரம், இனப்பரம்பல், கலாசாரம் என்று ஒரு இனத்தின் வாழ்வியல்மீது தொடுத்த மிட்டமிட்ட படுகொலையாக போராக ஜூலைப்படுகொலை நிகழத்தப்பட்டது. இதுவே ஈழத் தமிழ் மக்களின் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய பின்னணியுமானது. மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம் ஈழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடாத்தி வந்தார்கள். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இலங்கை இராணுவத்திற்கு எதிரான சமர் ஒன்று இடம்பெற்றது. விடுதலைப் புலிகளை தாக்கும் நோக்கில் வந்த இராணுவ அணியொன்றை இடைமறித்து புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இதனால் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமர் மூண்டது. இதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் இதில் வீர மரணமடைந்தார். புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழர்களால் சிங்களவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று திட்டமிட்டு கதை பரப்பட்டது. இதனால் கொழும்புவில் இருந்த தமிழர்களை கொன்று அழிப்போம் என்றும் இனவெறி பரப்பட்டது. இதனால் சிங்கள வன்முறையாளர்கள், தமிழர்களை தாக்கத் தொடங்கினர். வீதிகளில் சென்ற தமிழ் மக்கள் வீதிகளிலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்ட்டார்கள். எரியும் நெருப்பில் உயிரோடு தமிழர்கள் போட்டப்பட்டார்கள். தமிழ் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அவர்களை அடித்துக் கொலை செய்தார்கள். நிர்வாணத்தாலும் நனைந்த இலங்கைத் தீவு ஜூலை 23இல் தொடங்கிய வன்முறை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தது. கொழும்புவில் மாத்திரம் சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கொழும்புவில் சிங்கள வன்முறையாளர்கள் படுகொலைகளை நிகழ்த்திய தருணத்தில், வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவமும் தமிழ் மக்களை கொன்று குவித்தது. யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழ் மக்கள் புலிகள் என்ற பெயரில் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய ஈழ விடுதலைப் போராளிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கை தீவு ஈழத் தமிழர்களின் குருதியாலும் நிர்வாணத்தாலும் நனைந்தது. கொழும்பு வீதிகளில் இருந்து தமிழர்களின் உடல்களில் மூட்டப்பட்ட தீ உயர எழுந்தது. தமிழர்களைப் பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை அவமதிப்பு செய்து வன்முறையாளர்கள் மகிழ்ந்தார்கள். மிக மிக கோரமான முறையில் மனித குலத்திற்கு விரோதமான முறையில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவாலோ, அல்லது ஒரு தரப்பாலே இப்படி பரவலாகவும் நீண்ட நாட்களுக்கும் வன்முறைகளை மேற்கொள்ள முடியாது. கறுப்பு ஜூலைப் படுகொலை அன்றைய அரசால்தான் மிக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. 1958இல் நடந்த இனப்படுகொலை கறுப்பு ஜூலை இலங்கையின் முதல் படுகொலையல்ல. அதற்கு முன்னர் 1958களிலும் இத்தகைய இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. எழுதுபகளிலும் நிகழ்த்தப்பட்டன. அப்போது விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம்மீது தாக்குதல்கள் எவற்றையும் நடாத்தவும் இல்லை. 1956இல் தனிச்சிங்கள சட்டத்தை அன்றைய பிரதமர் பண்டார நாயக்கா கொண்டு வந்த வேளையில் அன்று நாடாளுமன்றத்தில் இருந்த சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழ்நாடு ஒன்றை உருவாக்கப் போகிறீர்கள் என்றும் தமிழர்கள் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்றும் எச்சரித்தார்கள். இலங்கை அரசின் தமிழ் இன ஒடுக்குமுறை செயற்பாடுகளாலும் உரிமை மறுப்புக்களாலும் தனித் தமிழீழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் சென்றனர். அதுவே அன்றைய இளைஞர்கள் தமிழீழத்தை அமைக்க ஆயுதம் ஏந்தவும் காரணமானது. தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்த வேளையில்தான் 1958களில் மூந்நூறு ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு அறிவுமீதும் புத்தகங்களின் மீதும் மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்ட்டது. ஆக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் எழுச்சியை மக்களை படுகொலை செய்து அழிக்கவும் திசை திருப்பவும் அன்றைய இலங்கை அரசு தீர்மானித்தது. இதனால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய மறுகணமே ஈழ மக்கள்மீது பெரும் வன்முறைப் போர் நடாத்தப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முற்கூட்டிய பேச்சு ஜூலைப் படுகொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, “யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார். இப்பிடி பேசி சில நாட்களிலேயே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து மாபெரும் மகிழ்ச்சி தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டது. இன்று இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்காவின் மாமனார்தான் அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கத்தை கண்டும் வடக்கு கிழக்குமீது வெறுப்பைக் கொண்டும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், தமிழர் தரப்புமீது வன்முறையை மேற்கொள்ள நேரிடும் என்ற தொனியில் எச்சரித்தும் இருந்தார். கறுப்பு ஜூலைப் படுகொலையை அன்று ஜெயவர்த்தனா அரசில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ உள்ளிட்ட அரச தரப்பினரால்தான் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை இலங்கை அரசியல் கட்சிகள் கூறின. தனிநாடு கோரக் கூடாது என்ற நோக்கம் குறுகியதொரு காலப் பகுதியில் இவ்வாறு பெரும் வன்முறை நடக்கிறது என்றால் அதற்குப் பின்னால் அரசின் திட்டம் இருந்திருக்கிறது என்பதையும் உணராலாம். ஏற்கனவே இனவழிப்புக்கள் நடந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு 83 ஜூலை இனப்படுகொலையை நடாத்தியுள்ளார்கள். சிறில் மத்யூ போன்றவர்கள் குறுகிய குழுவில் வன்முறையாக இல்லாமல் சிங்கள பொதுமக்களின் பற்கேற்புடன் நடாத்த நினைத்தார்கள். அதன் ஊடாக ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது, தனிநாடு கோரக் கூடாது, தமது உரிமைகளை கேட்கக்கூடாது என்ற எச்சரிக்கைகளை விடுக்க நினைத்தார்கள். கொழும்புவில் இருந்து ஈழ மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்த தமிழ் மக்கள் கூட அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். வடக்கு கிழக்குதான் உங்கள் நாடு அங்கே சென்றுவிடுங்கள் என்றால் போல் தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டதும், தென்னிலங்கையில் ஈழ மக்கள் சிந்திய குருதியும் அனுபவித்த நிர்வாணங்களும் எரியூட்டப்பட்ட நெருப்பும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒற்றைத் தீர்வு தனித் தமிழீழம் என்பதை நிர்பந்தித்தது. கறுப்பு ஜூலை இலங்கையில் இரண்டு நாடுகள்தான் தீர்வு என்ற நிலைக்கு ஆளாக்கியது. நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை தந்த நினைவுகள் அழியவில்லை. மிகப் பெரிய வன்முறை ஒன்று விட்டுச் செல்லும் வடுவின் தடம் அகல்வது அவ்வளவு எளிதல்ல. இப்போது சிங்கள மக்களின் மத்தியில் சில மனமாற்றங்களும் உருவாகியுள்ளன. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டும், தமிழ் மக்களையும் புலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துநிலைகளும் உருவாகி வருகின்றன. ஆனால் சிங்கள மக்களை இன்றும் பிழையான வழிக்கு தூண்டும் அரசியல்வாதிகளும் உள்ளனர். சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பேரினவாத்தை பேசுகின்றபோதும்கூட எமக்கு ஜூலைப்படுகொலைகளே நினைவுக்கு வருகின்றன. https://www.battinatham.com/2024/07/blog-post_959.html
  2. 21 JUL, 2024 | 02:09 PM டி.பி.எஸ். ஜெயராஜ் 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறை சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு அத்தியாயம். அந்த இருண்ட மாதத்தின் பெருங்கேடான நிகழ்வுகள் இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களின் வாழ்வை கடுமையாகப் பாதித்தன. இலங்கையின் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளன் என்ற வகையில், கறுப்பு ஜூலை என்னை தனிப்பட்ட முறையிலும் தொழில்சார் அடிப்படையிலும் பாதித்தது. மேலும், ஆயிரக்கணக்கான ஏனைய தமிழ்க் குடும்பங்களைப் போன்று எனது குடும்பமும் கொந்தளிப்பான அந்த நாட்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தது. அப்போது நான் வடக்கில் மன்னார் சென்றிருந்ததால் அந்த வன்முறையின் முழுத் தாக்கத்தையும் நான் அனுபவிக்கவில்லை. மனானாரில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மகாநாட்டு செய்திகளை சேகரிக்கும் பணிக்காக நான் மன்னாருக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். எனது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வேறு சில தமிழ்க் குடும்பங்கள் அனுபவித்ததைப் போன்ற கொடூரங்களையும் அவலங்களையும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அனுபவிக்கவில்லை. எமது குடும்பத்தில் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை. அந்த வகையில் ஏதோ ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தோம். சுமார் நான்கு தசாப்தங்களாக கறுப்பு ஜூலை குறித்து தனிப்பட்ட நோக்கில் நான் ஒருபோதும் எழுதவில்லை. வேதனையான நிகழ்வுகளை மீட்டிப்பார்க்க நான் விரும்பவில்லை.ஆனால் கறுப்பு ஜூலையின் 40 வது வருடாந்த நினைவாக கடந்த வருடம் எழுதியிருந்தேன். தங்களுக்கு நேர்ந்த சோதனைகள் பற்றி எனது குடும்பத்தவர்கள் கூறியவற்றின் அடிப்படையில் இதை எழுதுகிறேன். 1983ஆம் ஆண்டில் எனது குடும்பம் ஆறு பேரைக்( எனது பெற்றோர், இரு சகோதரிகள், சகோதரன், நான்) கொண்டதாக இருந்தது. அப்போது பிள்ளைகளில் எவரும் திருமணம் செய்திருக்கவும் இல்லை. எனது தந்தையார் குருநாகலையில் இருந்து செயற்பட்ட ஒரு சட்டத்தரணி.எனது தாயார் ஒரு ஆசிரியை. எனது இரு சகோதரிகளில் முத்தவரும் ஒரு ஆசிரியையே. எனது சகோதரனும் நானும் கொழும்பில் வேலை செய்துகொண்டு தனித்தனியாக தங்கியிருந்தோம். எனது இளைய சகோதரி கல்வி பொதுத்தராதர பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தார். எனது தாயார் 1982 ஆம் ஆண்டில் குருநாகலையில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்கு பிறகு தனது பிற்ளைகளுடன் அவர் கொழும்புக்கு குடிபெயர விரும்பினார். முன்னதாக கொழும்பில் பதினேழு வருடங்கள் படிப்பித்ததால் அதை அவர் எப்போதும் சொந்த ஊர் போன்று உணர்ந்தார். அதனால் இரத்மலானையில் கசீயா அவனியூவில் உள்ள ஒரு வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்தோம்.தாயாரும் சகோதரனும் இளைய சகோதரியும் அங்கு வசித்தனர். குருநாகலையில் தொடர்ந்தும் தங்கியிருந்த தந்தையாரும் மற்றைய சகோதரியும் வார இறுதிகளில் கொழும்புக்கு வந்துபோவார்கள். ' த ஐலண்ட் ' பத்திரிகையில் நான் இரவு கடமைகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் கொட்டாஞ்சேனையில் உள்ள அறையிலேயே தங்கியிருந்தேன். இரத்மலானைக்கும் கொட்டாஞ்சேனைக்கும் இடையே நான் 155 ஆம் இலக்க பஸ்ஸில் சென்றுவருவேன். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மகாநாட்டுக்காக 1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை காலை நான் மன்னாருக்கு புறப்பட்டுச் சென்றேன். தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்த வார இறுதியில் நான் மன்னாரில் இருந்தேன். குருநாகலை தமிழ்ப்பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருந்த எனது சகோதரி குருநாகலைக்கு திரும்புவதற்காக ஜூலை 25 காலை புறக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டார். செவ்வாய்க்கிழமை குருநாகலைக்கு திரும்பும் எண்ணத்தில் தந்தையார் கொழும்பிலேயே இருந்தார். இரத்மலானை இரத்மலானையில் எமது வீட்டு உரிமையாளரான சிங்களவர் அருகாக ஒரு்பகுதியில் வசித்துவந்தார். பொரளையிலும் திம்பிறிகஸ்யாயவிலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக கேள்விப்பட்டதாக அவர் எமது குடும்பத்தவர்களிடம் கூறினார். குண்டர்கள் தாக்குதல் நடத்த வந்தால் வீட்டின் பின்முறமாக பற்றைகள் நிறைந்த சதுப்புநிலப் பகுதியில் மறைந்திருக்குமாறு அவர் எமது குடும்பத்தவர்களுக்கு ஆலோசனை கூறினார். யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தினால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட செய்தியை காலையில் பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அதே தினம் அந்த செய்தி தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அறிவிக்கப்பட்டது. வன்முறை தீவிரமடைந்து பரவியது. குண்டர்கள் இரத்மலானையிலும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்கள். காசீயா அவெனியூவில் குண்டர்களுக்கு தலைமைதாங்கி வந்தவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன். எனது பெற்றோரும் சகோதரனும் சகோதரியும் சதுப்புநிலப் பகுதிக்கு சென்று பற்றைகளுக்குள் மறைந்திருந்தனர். அங்கு கபறக்கொய்யாவும் பாம்புகளும் ஊர்ந்துகொண்டு திரிந்தன. எனது தந்தையாரும் சகோதரரும் பெரிய சமையலறைக் கத்தியையும் மண்கிண்டியையும் ஆயுதமாக எடுத்துக் கொண்டனர். தாயார் சில வாரங்களுக்கு முன்னர் சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் பற்றைக்குள் பதுங்கியிருப்பதற்கு பெரிதும் கஷ்டப்பட்டார். குண்டர்களின் தலைவர்கள் எமது வீட்டு உரிமையாளரிடம் வந்து எமது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்களின் விபரங்கள் அவர்களிடம் இருந்தன. தனது வீட்டு வாடகைக் குடியிருப்பாளர்கள் குழப்பங்கள் பறாறி கேள்விப்பட்டதும் காலையிலேயே அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாக உரிமையாளர் குண்டர்களிடம் கூறினார். எமது வீட்டு வாயிலுக்கு சென்ற குண்டர்கள் கதவை உடைக்க முயற்சித்தனர். தீவைக்கும் ஒரு முயற்சியாக தரைவிரிப்புக்கு பெற்றோலை ஊற்றினர். அதை உரிமையாளர் ஆட்சேபித்தபோது எமது தளபாடங்களை எரிக்கப்போவதாக குண்டர்கள் கூறினார்கள். அவையெல்லாம் வாடகைக்கு இருப்பவர்களுக்கு சொந்தமானவை அல்ல தன்னுடையவை என்று அவர் கூறவே எமது குடும்பம் திரும்பிவந்தால் தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவரை எச்சரித்துவிட்டு குண்டர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இரவானதும் எனது குடும்பம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து வெளியே வந்து பின்பக்கத்தால் வீட்டுக்குள் நுழைந்தனர். மின்விளக்கு எதையும் போடாமல் இரவு முழுவதும் அவர்கள் அங்கே இருந்தனர். ஜூலை 26 செவ்வாய்கிழமை விடிந்ததும் எல்லாமே அமைதியாக இருப்பதைப் போன்று தோன்றியது. தனது வீட்டில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்று உரிமையாளர் விரும்பினார். எனது பெற்றோரும் சகோதரங்களும் பாதுகாப்பு தேடி கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அது அதிகாலை வேளை. வழியில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. பல தமிழ்க் குடும்பங்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்தன. சிறிது நேரம் கழித்து பொலிசார் எனது குடும்பம் உட்பட சகல குடும்பங்களையும் இரத்மலானை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமுக்கு கூட்டிச் சென்றனர். எதிர்பார்க்கப்பட்தைப் போன்றே ஆட்கள் நிரம்பிவழிந்த விமான நிலைய முகாமில் நிலைமை படுமோசமானதாக இருந்தது. போதிய இடவசதியின்மை, மலசலகூட வசதிகள் போன்ற சுகாதார வசதிகள் இல்லாமை, போதிய உணவின்மை ஆகியவை பெரிய பிரச்சினையாக இருந்தது. குருநாகல் குருநாகலையில் இருந்த எனது சகோதரி பற்றியே எமது குடும்பம் அப்போது பெருங்கவலை கொண்டிருந்தது. தமிழ்பேசும் மக்கள் வாழும் மன்னாரில் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். கொழும்பில் இருந்து குருநாகலை நோக்கி சென்ற பஸ் ஒன்று அளவ்வ பகுதியில் இடைமறிக்கப்பட்டு அதில் இருந்த சகல தமிழ்ப் பயணிகளும் கொல்லப்பட்டதாகவும் சடலங்கள் பாலத்தில் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதனால் எனது சகோதரி பாதுகாப்பாக இருப்பாரா இல்லையா எமது குடும்பம் கவலைப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் மன்னாரில் பாதுகாப்பாக இருக்கும்போது எனது குடும்பத்துக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று பெரும் வேதனையாக இருந்தது. ஆனால், எனது சகோதரி பாதுகாப்பாக குருநாகலை போய்ச் சேர்ந்தார். வெளியில் தலைகாட்டாமல் அவர் வீட்டுக்குள்ளேயே அமைதியாக இருந்தார். குடும்பத்தின் ஏனையவர்கள் பற்றியே அவருக்கு கவலை. குருநாகலையில் எமது அயலவர் ஒரு சிரேஷ்ட சிங்கள பொலிஸ் அதிகாரி. அதனால் அயலில் இருந்த தமிழர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டார்கள். மன்னார் எனது குடும்பத்தின் கதி பற்றியே எனக்கு மனக்கலக்கமும் அச்சமும். அந்த நாட்களில் கைத்தொலைபேசி இருக்கவில்லை. கொழும்பு போன்ற தொலைதூர இடக்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுப்பதும் மன்னாரில் ஒரு பிரச்சி னயாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் அன்றைய மன்னார் மாவட்ட அமைச்சராக இருந்த மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஈ. எச். மஹ்ரூப்பின் செயலாளராக இருந்த ரெறன்ஸ் பிலிப்புப்பிள்ளை என்ற தமிழ் அரசாங்க அதிகாரியுடன் தொடர்புகொண்டேன். அந்த நாட்களில் நான் ' சண்டே ஐலண்ட் ' பத்திரிகையில் ' கிடுகு வேலிக்கு பின்னால் ' ( Behind the Cadjan Curtain) என்ற வாரஇறுதிப் பத்தியொன்றை எழுதிக்கொண்டிருந்தேன். மன்னார் மாவட்ட அமைச்சரின் செயலாளர் ரெறன்ஸ் அதை தவறாது வாசிக்கும் ஒரு எனது ரசிகர் என்பதை அறிந்ததும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதற்கு பிறகு தொலைபேசி அழைப்பை எடுப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மன்னாரில் இருந்து ' த ஐலண்ட் ' ஆசிரிய பீடத்துடன் கிரமமாக தொடர்பில் இருந்தேன். வன்முறை வெடித்தபோது பத்திரிகையின் ஆசிரியர் நாட்டில் இருக்கவில்லை. அன்றைய பிரதி ஆசிரியர் காமினி வீரக்கேன் பொறூப்பாக இருந்தார். ஆசிரிய பீடத்துடன் கிரமமாக தொடர்புகொண்டு எ்்ன நடக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன். எனது ஆசிரிய பீடச் சகாக்களும் நண்பர்களுமான அஜித் சமரநாயக்கவும் பிரசாத் குணவர்தனவும் அலுவலக வாகனத்தில் இரத்மலானைக்கு சென்று எனது குடும்பத்தவர்கள் இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை வீட்டு உரிமையாளரின் மூலமாக அறிந்து கொண்டனர். அதேவேளை , இரத்மலானை விமான நிலைய அதிகாரிகள் ஆட்கள் உள்நாட்டு தொலைபேசி அழைப்புக்களை எடுப்பதற்கு அனுமதிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் அந்த நாட்களில் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கு நெருக்கமாக இருந்தவருமான எமக்கு சகோதரர் உறவுமுறை கொண்ட நோபல் வேதநாயகத்துடன் எனது பெற்றோர் தொடர்பு கொண்டனர். நோபல்அண்ணா பம்பலப்பிட்டியில் புதிய வீட்டு்க்கு மாறி புதுக்கடையில் இருந்த முன்னைய வீட்டை தனது அரசியல் அலுவலகமாக மாற்றியிருந்தார். அவரின் புதுக்கடை வீடு ஒரு மினி அகதிமுகாமாக மான்றப்பட்டிருந்தது. உறவினர்கள் அங்கு ' தஞ்சம் ' அடைந்தார்கள். அதற்கு பொலிஸ் பாதுகாப்பு இருந்தது. கொழும்பு 12 இல் இருந்த நோபல் அண்ணாவின் அந்த வீட்டுக்கு எனது குடும்பத்தை கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனது குடும்பமும் உறவினர்களில் பெரும்பாலானவர்களும் மெதடிஸ்காரர்கள். ஜூலை 29 வெள்ளிக்கிழமை மூன்று மெதடிஸ் மதகுருமார் எனது குடும்பத்தை புதுக்கடைக்கு கூட்டிச் செல்ல ஒரு வானில் வந்திருந்தனர். வாகனத்தில் நிறைய ஆட்கள் இருந்ததால் தாயாரும் சகோதரியும் அதில் செல்வது என்றும் தந்தையாரும் சகோதரனும் பஸ்ஸில் பின்தொடர்ந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜூலை 28 வியாழக்கிழமை கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வன்முறை தணிந்து நிலைவரம் மெல்லமெல்ல வழமைக்கு திரும்புவதைப் போன்று தோன்றியது. ஆனால் திடீரென்று நிலைவரம் மாறியது. மயிரிழையில் உயிர்தப்பினர் விடுதலை புலிகள் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்துவதாக வதந்தி ஒன்று பரவத்தொடங்கியது. இது வதந்தி மாத்திரமே. ஆனால் தமிழர்களை மீண்டும் தாக்குவதற்கு சாக்குப்போக்காக அமைந்தது. ஓரளவு பாதுகாப்பாக இருந்த அகதி முகாம்களை விட்டு வெளியேறிய பல தமிழர்கள் அந்த களங்கம் மிக்க 'கொட்டி தவசவ' வில் (புலிகள் தினத்தில்) கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவை பெருங்கவலைக்குரிய சம்பவங்கள். அந்த வெள்ளிக்கிழமை எனது தந்தையாரும் சகோதரரும் மயிரிழையில் உயிர்தப்பினர். விமான நிலைய முகாமில் இருந்து புறப்பட்டு, புதுக்கடைக்கு வருவதற்கு பஸ்ஸையோ, டாக்சியையோ அல்லது முச்சக்கர வண்டியையயோ பிடிப்பதற்காக அவர்கள் இருவரும் காலி வீதி நோக்கி நடந்துவந்தனர். ஆனால் காலி வீதியை அவர்கள் அடைந்தபோது தமிழர்களை மீண்டும் ஆவேசத்துடன் தேடிக்கொண்டிருந்த குண்டர்கள் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டனர். அந்த களேபரத்தில் தந்தையாரும் சகோதரரும் பிரிந்துவிட்டனர். சகோதரர் வன்முறைக் கும்பலுக்குள் கலந்து சிறுது நேரம் அதன் ஒரு்பகுதியாகவே மாறியிருந்தார். வன்முறைக் கும்பலில் ஒரு பிரிவினர் தமிழ்்அகதிகளை ஒழித்துக்கட்டப்போவதாக அச்சுறுத்திக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். எனது சகோதரரும் அவர்களுடன் சேர்ந்து சுலோகங்களை எழுப்பிக்கொண்டு சென்றார். கும்பல் விமான நிலையத்தை அடைந்ததும் எனது சகோதரர் கும்பலிடமிருந்து நழுவி தனது முகாம் அடையாள அட்டையைக் காண்பித்து முகாமுக்குள் சென்றுவிட்டார். கும்பல் சீற்றத்துடன் அங்கு காவல் கடமையில் இருந்த கடற்படை வீரர்களை நோக்கி தூஷண வார்த்தைகளினால் திட்டியது. ஆனால் கடற்படை வீரர்கள்உறுதியாக நிற்கவே கும்பல் படிப்படியாக கலைந்து சென்றது. எனது தந்தையார் இன்னொரு பிரிவு கும்பலுடன் மோசமான அனுபவத்தைச் சந்தித்தார். சிலர் அவரைத் தமிழர் என்று சந்தேகித்து பயமுறுத்தினர். அவர் சரியான உச்சரிப்புடன் கச்சிதமாக சிங்களத்தை பேசியதால் அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதை குண்டர்களினால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. பௌத்த கதை ஒன்றைக் கூறுமாறு அவர் கேட்கப்பட்டார். தான் ஒரு பௌத்தர் அல்ல கிறிஸ்தவர் என்று உண்மையாக அவர் பதிலளித்தார். சிலர் அவரது கழுத்தை நெரித்தனர்." என்னைப் போன்ற வயோதிபனைக் கொலை செய்வதில் உங்களுக்கு என்ன பிரயோசனம்" என்று மூச்சுவிடக் கஷ்டப்பட்ட வண்ணம் தந்தையார் சிங்களத்தில் அவர்களைக் கேட்டார். அவர்கள் விடுவித்ததும் அவரும் நேரடியாக விமானநிலைய முகாமுக்கே சென்றார். மெதடிஸ் மதகுருமார் மெதடிஸ் மதகுருமாருடன் சென்ற வாகனத்தையும் குண்டர்கள் வழிமறித்து பயமுறுத்தினர். சிங்கள போதகர் பேசி ஒருவாறாக பேசி அவர்களிடமிருந்து விடுபடக்கூடியதாக இருந்தது. ஆனால் கொழும்பு நோக்கிப் போவது ஆபத்து என்ற உணரப்பட்டதால் தசையை மாற்றி வாகனம் மொரட்டுவையைச் சென்னடைந்தது. வார இறுதி முழுவதும் தாயாரும் சகோதரியும் சிங்கள மெதடிஸ் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை மாலை மெதடிஸ் மதகுருமார் தாயாரையும் சகோதரியையும் புதுக்கடைக்கு கூட்டிவந்தனர். அவர்களுக்கு அங்கு மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. குருநாகலையில் இருந்த எனது மற்றைய சகோதரி நோபல் அண்ணாவின் பாதுகாப்பான புதுக்கடை வீட்டுக்கு வந்துவிட்டார். குருநாகலையில் அயலில் இருந்த சிங்கள பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் சகோதரி பொலிஸ் ஜீப் ஒன்றில் அங்கு கடடிவரப்பட்டார். தந்தையாரும் சகோதரரும் கூட புதுக்கடைக்கு திங்களன்று வந்துசேர்ந்தனர். என்னைத் தவிர முழுக் குடும்பமும் மீண்டும் இணைந்துவிட்டது. மேலும் உறவினர்கள் படையெடு்க்கவே புதுக்கடை வீடு நிறைந்துவிட்டது. அதனால் பெண்களையும் சிறுவர்களையும் மாத்திரம் அங்கு தங்கவைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தந்தையாரும் சகோதரனும் அங்கிருந்து வெளியேறி கல்கிசை சென். தோமஸ் கல்லாரியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் தங்குவதற்கு வாய்ப்பைத் தேடிக்கொண்டனர். தாங்கள் சகலரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாயாரும் சகோதரியும் புதுக்கடையில் எமது நோபல் அண்ணாவின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் எனது குடும்பம் ' த ஐலண்ட் ' ஆசிரிய பீடத்துக்கு அறிவித்தது. மன்னார் மாவட்ட அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து நான் தொலைபேசியில் அவர்களுடன் பேசினேன். கொழும்புக்கு திரும்பினேன் 1983 ஆகஸ்ட் 4 ஆம் திகதி நான் கொழும்புக்கு திரும்பினேன். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு உள்ளூர் நிருபராக இருக்கும் மன்னாரைச் சேர்ந்த முஹமட் என்ற ஒரு பத்திரிகையாளர் நண்பர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடன் பேசி அவரது சொந்த இடமான கண்டிக்கு என்னை வாகனத்தில் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்தார். வழியில் பிரச்சினை ஏதாவது வருமென்றால் நான் அவரின் ஒரு முஸ்லிம் உறவினராக என்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். அந்த நேரம் வன்முறை தணிந்திருந்தது. அதனால் மன்னாரில் இருந்து கண்டிக்கான கார்ப்பயணம் சம்பவம் எதுவுமின்றி இனிதே அமைந்தது. கண்டியில் இருந்து கொழும்பு பஸ் ஒன்றில் ஏறி நேரடியாக கொட்டாஞ்சேனையில் புளூமெண்டால் வீதியில் அமைந்திருக்கும் ' த ஐலண்ட் ' அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தேன். என்னைக் கண்டதும் சகாக்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்தனர். நான் உடனே வேலையில் மூழ்கி உடனடியாகவே எனது பெயரில் எழுதத் தொடங்கினேன். நடந்துமுடிந்த சம்பவங்களைச் சமாளிப்பதற்கு நான் கையாண்ட வழி அது. பத்திரிகையில் எனது பெயரைக் கண்டதும் நண்பர்களும் என்னுடன் தொடர்புகளைப் பேணுகிறவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னுடன் பேசத்தொடங்கினர். நான் 'த ஐலண்ட்' வளாகத்திலேயே தங்கியிருந்து அலுவலகத்துக்கு அருகாமையில் இருந்த சிங்கள, முஸ்லிம் உணவகங்களில் சாப்பிட்டேன். சாரதிகளின் விடுதியில் குளித்தேன். செய்திப்பத்திரிகைக் கோவைகளை தலையணையாக பயன்படுத்தி ஆசிரியபீட மேசைகளில் இரவில் நித்திரைகொள்வேன். இரவில் என்னுடன் அஜித்,பிரசாத் மற்றும் குலே ( கே.சி. குலசிங்க ) ஆகியோர் என்னுடன் கூட இருப்பர். நாடு்திரும்பிய ஆசிரியர் விஜிதா யாப்பா அலூவலகத்தில் இரவில் தங்குவதையும் சாதிகளின் விடுதியில் குளிப்பதையும் கண்டு பெரிதும் கவலையடைந்தார். எம்.ஆர்.ஏ. (Moral Re - armament) அமைப்பின் ஒரு நீண்டகால உறுப்பினரான விஜிதா எனது பாதுகாப்பு குறித்து அக்கறைகாட்டினார். அவர் ஒரு மற்றவர்களின் துன்பங்களைக் கண்டு இரங்குகின்ற சுபாவமுடைய உணர்ச்சிபூர்வமான ஒரு ஆன்மா. என் முன்னால் கண் கலங்கி அழுது சில சிங்களவர்களினால் தமிழர்களுக்கு செய்யப்பட்ட கொடுமைக்காக மன்னிப்புக் கேட்டார். விஜிதா தனது மாமாயாரின் வீட்டில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு அறையில் என்னை தங்கவைத்தார். காலையில் தனது காரில் அலுவலகத்துக்கு என்னை கூட்டிச்சென்று பிறகு இரவில் கொண்டுவந்து இறக்கிவிடுவார்.இது பண்பட்ட ஒரு ஆசிரியரின் நல்லெண்ண வெளிப்பாடு. அவரது மாமியாரும் கூட பரிவிரக்கம் கொண்ட ஒரு பெண்மணி. அவர்களது இரக்ககுணத்தை நான் மெசிசினாலும் , அங்கு தொடர்ந்தும் தங்கியிருப்பது எனக்கு எதோ அசௌகரியமானதாக இருந்தது. அதனால் நான் எனது கொட்டாஞ்சேனை அறைக்கு திரும்பினேன். அது முப்பதுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கியிருந்த ஒரு பெரிய விடுதியின் ஒரு பகுதி. இப்போது தனந்தனியனானேன். எனது அறையில் தனியாக படுத்திருந்து 'த ஐலண்ட்' ஆசிரிய பீடத்துக்கு தொடர்ந்து வேலைக்குச் சென்று வந்தேன். படிப்படியாக விடுதிக்கு மற்றையவர்களும் வரத்தொடங்கினார்கள். கட்டைவேலி அதேவேளை எனது குடும்பம் இரத்மலானைக்கு திரும்பிச் செல்வதற்கு முயற்சித்தது. ஆனால் எங்களது இருப்பிடம் குறித்து தன்னிடம் அடிக்கடி விசாரிக்கப்படுவதாகவும் அதனால் திரும்பிவரவேண்டாம் என்று வீட்டு உரிமையாளர் எச்சரிக்கை செய்தார். அதனால் தாயாரும் இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் உள்ள தாயாரின் பூர்வீக கிராமமான கரவெட்டிக்கு ரயிலில் சென்றார்கள். எமது முன்னாள் வீட்டு உரிமையாளர் எமது தளபாடங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டதால் சில வாரங்கள் கழித்து அவற்றை நாம் இரத்மலானையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் சென்றோம். தந்தையார் குருநாகலைக்கு திரும்பிய அதேவேளை நானும் சகோதரனும் கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்தோம். சில மாதங்கள் கழித்து எனது சகோதரி குருநாகலையில் வேலைக்கு வரவேண்டியிருந்தது. அல்லது ஆசிரியை தொழிலை அவர் இழக்கவேண்டி வந்திருக்கும். இந்த சூழ்நிலைகளில் தாயாரும் இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தை விட்டு மீண்டும் குருநாகலைக்கு திரும்பிவந்தனர். இதுவே எனது குடும்பத்தின் கறுப்பு ஜூலை அனுபவம் பற்றிய கதை. இது அந்த நாட்களின் பல கதைகளில் ஒன்று. ஒவ்வொன்று வெவ்வேறு விபரங்களைக் கொண்டவை. ஆனால் சாராம்சத்தில் ஒரே மாதிரியானவை.எமது குடும்பத்தின் கதையை அக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கூறுவதற்கு நான் முயற்சித்திருக்கிறேன். ஆனால் நினைத்துப் பார்க்கும்போது அது உணர்ச்சிவசப்பட வைப்பதாகவும் வேதனையானதாகவும் இருக்கும். https://www.virakesari.lk/article/189003
  3. கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு. 83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..?? கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி என்பது பாரிய திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்ட நாள் என்றே கூறவேண்டும். நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை, அரசாங்கம் உருவாகியுள்ளதா என்பதே தற்போதைய காலகட்டத்தில் முதலாவது கேள்வியாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்றது. 1983ஆம் ஆண்டு 23ஆம் திகதியை கறுப்பு ஜூலை என பிரகடனப்படுத்தியுள்ள, இந்த பௌத்த மேலாதிக்க அதிகாரவர்க்த்தினர் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுப்படுகின்றது. நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒருசில அரசியல்வாதிகள், மற்றும் அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதன்முறையாக வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இனகலவரம் அரங்கேற்றப்பட்டது. இந்த இனகலவரம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை வலுவாக தோற்றுவித்தது. 1983 ஜூலை 23 ஆம் திகதியன்று அதிகாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவச் வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த 13 இராணுவத்தினரின் சடலங்களும் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் அதிகமான ஒன்றுகூடியிருந்தனர். அதனால் கொழும்பில் 41 வருடங்களுக்கு முன்னர் இதே ஒரு நாளில் பதற்றமும் நிலவியது. இதன் பின்னரே தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமானது. கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, வீடுகள், மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் எரிக்கப்பட்டன. நிலைமை மோசமடைந்ததை போதும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜேஆர்.ஜயவர்தனவினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது இன்றளவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த கிளர்ச்சிச் சூழலை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜே.வி.பி உட்பட மூன்று கட்சிகளுக்கு அப்போதைய அரசாங்கம் தடை விதித்திருந்தது. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என வர்னிக்கப்படுகின்ற இந்த கலவரத்தை இன்றும் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2024/1393294
  4. "கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... " "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருப்பை தனதாக்கி மற்றவனை தாழ்த்தி இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்லவே !" "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமற்ற காட்டு மிராண்டிகள் அவர்களல்ல இந்நாட்டின் பூர்வீக குடிகளில் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் இன்பமாக வாழ உரிமை உடையவர்களே ! " "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற கறுப்புமனமே ! இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " "இன்பபுகழை அழியாது கொடுக்கும் அடக்கத்தை இருஅடி திருக்குறள் கூறியவாறு ஏற்று இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து இருகைகூப்பி மன்னிப்புகேள் உலகம் போற்றும்! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [On the night of 24 July 1983, anti-Tamil rioting started in the capital city of Colombo and then spread to other parts of the country. Over seven days, mainly Sinhalese mobs attacked, burned, looted, and killed Tamil civilians. Estimates of the death toll range between 400 and 3,000. and 150,000 people became homeless. Around 8,000 homes and 5,000 shops were destroyed.The economic cost of the riots was estimated to be $300 million. Even I was personally left Colombo, on Indian cargo ship from Colombo harbour to KKS harbour with family and many others as an internal displaced refugees. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும். இதில் நானும் என் குடும்பமும் மற்றும் பலரும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளாக , கொழும்பு துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை முகத்துக்கு [KKS] இந்தியாவின் ஒரு சரக்கு கப்பலில் சென்றது இன்னும் மறக்க முடியாது.]
  5. கறுப்பு ஜூலை நினைவுகள்!… முருகபூபதி. July 22, 2024 1 ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை பிறந்தேன். சில நாடுகளில் ஆங்கிலேயர்கள் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்தால், அதனை கறுப்பு வெள்ளி துரதிர்ஷ்டமான நாள் எனச்சொல்லிக்கொண்டு வேலைக்கும் செல்ல மாட்டார்களாம் ! இது எப்படி இருக்கிறது..? கவியரசு கண்ணதாசன் “ நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..?“என்று தொடங்கும் பாடலை இயற்றியிருக்கிறார். அவர் இந்த வரிகளை தனது சொந்த அனுபவத்தில்தான் எழுதியிருப்பார். எனக்கும் இந்த ஜூலை மாதத்தை பல காரணங்களினால் மறக்க முடியவில்லை. எனது முதல் சிறுகதையும் ( கனவுகள் ஆயிரம் ) 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் மல்லிகையில் வெளியானது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் எனக்கு நன்கு தெரிந்தவர்களான தமிழ்த் தலைவர்கள் அ. அமிர்தலிங்கமும், வெ. யோகேஸ்வரனும் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்றைய தினம் நான் கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடவில்லை. அந்தத் துயரச்சம்பவம் தொடர்பான செய்தியை அறிவதில் முனைப்போடு இருந்தேன். கடந்த ஆண்டு ( 2023 ) ஓகஸ்ட் மாதம் லண்டனில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் அமிர்தலிங்கம் – மங்கையர்க்கரசி தம்பதியரின் இரண்டாவது புதல்வர் மருத்துவர் பகீரதனை சந்தித்தபோதும், அவரது அப்பாவினது மறைவுத் திகதியை என்னால் என்றைக்குமே மறக்கமுடியாது என்றேன். இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத கறை படிந்த கறுப்பு ஜூலை பற்றிய எனது நனவிடை தோய்தல் குறிப்புகளை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகின்றேன். “ தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு “ இது திருவள்ளுவர் வாக்கு. இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப் படித்தார்களா..? என்பது தெரியவில்லை ! 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு பதவியேற்ற காலப்பகுதியில்தான், அவர் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பிறந்த இல்லத்தில் பின்னாளில் அமைந்த வீரகேசரியில் நிரந்தர ஊழியனாகச் சேர்ந்தேன். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவரது பதவிக்காலத்தில்தான் 1958 இன்பின்னர் மற்றும் ஒரு கலவரம் வந்தது, அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கும் வீரகத்தி தனபாலசிங்கத்திற்கும் வேறு சிலருக்கும் அங்கே நேர்முகத்தேர்வு நடந்தது. கலவரம் வந்தமையால் அந்த நேர்முகத் தேர்வின் முடிவும் தாமதமாகியது. அக்கலவர காலத்தில்தான் ஜே.ஆர், “ போர் என்றால் போர்- சமாதானம் என்றால் சமாதானம் “ என்று வானொலியில் திருவாய் மலர்ந்தருளிமுரசறைந்தார். ஜே.ஆரின் பதவிக்காலத்தில் அடுத்தடுத்து மூன்று கலவரங்கள் நிகழ்ந்தன. அந்த ஆண்டுகள் 1977 – 1981 – 1983. இரண்டாவது கலவரம் வந்தபோது வீரகேசரியில் அவர் திருவாய் மலர்ந்தருளும் கருத்துக்களை செய்தியாக ஒப்புநோக்க நேர்ந்தது. திருவள்ளுவர் என்ன சொல்கிறார்..? ஒரு செயலைப்பற்றி பலவழிகளிலும் ஆராய்ந்து அறியவேண்டும். சந்தர்ப்பம் வரும்போது ஆராய்ந்தவாறு செய்யவேண்டும். அதிலும் நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லவேண்டும். இதில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனே சிறந்த அமைச்சனாக இருப்பான். ஜே.ஆர். அரசியலில் பழுத்த அனுபவசாலி. சட்டம் படித்த பரீஸ்டர். அமைச்சராக – ராஜாங்க அமைச்சராக – பிரதமராகவிருந்து ஜனாதிபதியானவர். அரசியலில் இராஜதந்திரி. அவர் எதிர்க்கட்சியிலிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் சென்று ஒரு கூட்டத்தில்பேசும்போது, அவமானப்படுத்தப்பட்டு தாமதிக்காமலேயே, தனது காரில் கொழும்பு திரும்பியவர். நான் நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி நிருபராக பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த அச்சம்பவம் பற்றி, எங்கள் ஊர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.ஆரின். கட்சியைச்சேர்ந்தவருமான டென்ஸில் பெர்னாண்டோவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக்கலாசாரம் என்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை சொல்லியிருக்கிறார். அத்தகைய கலாசாரப்பிடிப்புள்ள வடபுலத்தில் ஒரு தென்னிலங்கை அரசியல் தலைவரை அவ்வாறு அவமதித்தமை கண்டனத்துக்குரியதுதான். அதன் விலையை பின்னாளில் அறுவடை செய்யநேர்ந்தது. அந்த அறுவடைக் காலத்தில் எனது பத்திரிகை உலகப்பிரவேசம் வீரகேசரிக்குள் நிகழ்ந்தது. ஜே.ஆரின் மனதில் வஞ்சம் குடியிருந்திருக்கவேண்டும். வடபகுதி தமிழ் மக்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம். இலங்கையில் தமிழ் மக்கள் 1977 இல் அனுபவித்த இன்னல்களை சொல்வதற்கு எமது தமிழ் தலைவர்கள் இந்தியாவில் அப்போது எதிரணியிலிருந்த இந்திரகாந்தியிடம் ஓடினர். அதற்கு அவர், “ இரண்டு கிழட்டு நரிகளும் என்ன நினைக்கின்றன என்பது தெரியவில்லை. நீங்கள் பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் முறையிடுங்கள் “ என்று திருப்பியனுப்பினார். எமது தமிழ்த்தலைவர்கள் தேசாயிடம் முறையிட்டனர், அவரோ, “ அது இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை. பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் “ என்று கைவிரித்தார். போர் என்றால் போர் – சமாதானம் என்றால் சமாதானம் என்றவரிடம் எதனைத்தான் பேசித்தீர்ப்பது..? 1978 இல் பாரதப்பிரதமர் தேசாய் இலங்கை வந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவரை சந்தித்தார். மீண்டும் 1979 இல் தனது மனைவி மங்கையற்கரசியுடன் அரச விருந்தினராக டில்லிக்குச் சென்றார். அங்கு அமிர் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இந்தச்செய்திகளையெல்லாம் வீரகேசரியில் ஒப்புநோக்கியிருக்கின்றேன். ஏற்கனவே இலங்கை – இந்திய ஒப்பந்தங்கள் பலவற்றை எனது பாடசாலைக்காலத்திலிருந்தே பார்த்து வளர்ந்தமையாலும், சரித்திர பாடம் எனக்கு மிகவும் பிடித்தமானதாலும், அந்த ஒப்பந்தங்கள் பற்றி அறிந்திருந்தேன். மலையக இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம், கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்க இந்திராகாந்தியுடன் ஶ்ரீமா செய்துகொண்ட ஒப்பந்தம் என்பனவற்றையும் அறிந்திருந்தமையால், பின்னாளில் வீரகேசரியில் செய்திகளை ஒப்புநோக்கும்போது, எதிர்காலத்தில் எமது தாயகத்தினுள் இந்தியாவின் தலையீடு தவிர்க்கப்படமுடியாததே என்ற தீர்க்கதரிசனமும் வந்தது. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கிறது. “Experience without education better than education without Experience “ அனுபவமற்ற கல்வியை விட, கல்வியற்ற அனுபவமே மேலானது. கர்மவீரர் காமராஜர் அதற்குச் சிறந்த உதாரணம். பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பினை சிறுவயதிலேயே இழந்தவர் அவர். எனினும் தமிழ்நாட்டில் ஏழை மாணவர்களின் கல்விக்கண்ணை திறந்தவர். அவர் முதலமைச்சராகவிருந்தபோது, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிக்கும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக அவரிடம் வருகிறது. அவர் மிகவும் குறுகிய நேரத்தில் தெரிவுசெய்து அதிகாரிகளிடம் கொடுத்துவிடுகிறார். “எப்படி அய்யா இவ்வளவு சீக்கிரம் தேர்வுசெய்தீர்கள்…? “ என்று அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது, “ இந்த மாணவர்களின் தந்தைமாரின் கையொப்பங்களை பார்த்தேன். அவர்கள் அனைவரும் கைநாட்டுத்தான் இட்டுள்ளார்கள். இவர்களின் பிள்ளைகளாவது படித்து நல்ல நிலைக்கு வரட்டும். , நான் இந்த விண்ணப்பங்களில் அதனைத்தான் முதலில் பார்த்தேன் “ என்றார் அந்த தீர்க்கதரிசி. விருதுநகரில் செக்கிழுத்து எண்ணெய் வடித்து வயிற்றைக்கழுவிய ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த காமராஜரையும், செல்வந்த குடும்பத்திலிருந்து வந்து லண்டன் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்றுத்திரும்பிவந்து அரசியல்வாதியாகி, நாட்டின் அதிபராகிய ஜே.ஆர். ஜெயவர்தனாவையும் அக்காலப்பகுதியில் ஒப்பிட்டுப்பார்த்தேன். எழுத்துப்பிழைகளை திருத்தும் ஒப்புநோக்காளராகியபோதே, உலகத்தலைவர்களையும் ஒப்புநோக்குவதற்கும் கற்றுக்கொண்டேன். தான் பதவியேற்ற காலப்பகுதியிலேயே ஒரு இனக்கலவரம் நாட்டில் வந்துவிட்டிருந்தால், அந்த நாட்டின் தலைவர் என்ன செய்திருக்கவேண்டுமோ, அதனைச்செய்யத்தவறியதால், கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்ந்தபாடாயில்லை. தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவென ஜே.ஆர் காலத்தில்தான் முதலில் மாவட்ட சபை திட்டமும் பின்னர் மாகாணசபை முறைமையும் வந்தன. இறுதியில் ஒரு பிரயோசனமும் இல்லை. 1981 இல் மாவட்ட சபைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த யோசனையை வரைந்த தந்தை செல்வநாயகத்தின் மருமகனும் பிரபல சட்ட மேதையுமான ஏ. ஜே. வில்சனும் அமைச்சர் தொண்டமானும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை போட்டியிட அனுமதிக்கவேண்டாம் என்றுதான் ஜே.ஆருக்கு ஆலோசனை கூறினார்கள். இங்குதான் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எமது திருவள்ளுவரின் வாக்கை நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது. இந்தியாவில் ஜாகிர் உசேன், அப்துல் கலாம் முதலான இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், இலங்கையில் சபாநாயகராக ஒரு சிறுபான்மை இனத்தவர் வருவதற்கும் சங்கடம் இருக்கிறது. பாக்கீர்மார்க்காரும் எம். எச். முகம்மதுவும் சொற்ப காலமே சபாநாயகர்களாக இருந்தார்கள். இந்நிலையில் ஒரு தமிழர் எவ்வாறு எதிர்க்கட்சித்தலைவராக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற சிந்தனைதான் பேரினவாதிகளிடத்தில் குடியிருந்தது. அதன் எதிரொலிகளை அக்காலப்பகுதியில் செவிமடுக்கமுடிந்தது. யாழ்ப்பாணம் மாவட்ட சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தமது கட்சியின் பிரசாரப்பணிகளுக்காக ஜே.ஆர். அனுப்பிய அமைச்சர்கள் காமினி திஸாநாயக்காவும் சிறில் மத்தியூவும். சுமார் 180 சிங்கள அரசுப்பணியாளர்கள் தேர்தல் ஆணையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அத்துடன், யாழ். மாவட்டத்தில் போதியளவு பொலிஸார் இருக்கத்தக்கதாக தென்னிலங்கையிலிருந்து மேலதிகமாக 250 பொலிஸார் சென்றனர். இவர்களுடன் பாதுகாப்பு இணை அமைச்சர் வெரபிட்டிய, செயலாளர், மற்றும் பொலிஸ் மா அதிபரும் சென்றனர். ஒரு மாவட்டத்தில் நடக்கவிருந்த தேர்தலுக்கு இத்தனைபேர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது மிஸ்டர் தர்மிஸ்டர் ஜே.ஆருக்கே வெளிச்சம். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் மத்தியில்தான் ஜே.ஆரின். அன்றைய அரசை ஆதரித்த வட்டுக்கோட்டை முன்னாள் எம். பி.யான ஆ. தியாகராஜா இளைஞர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாச்சிமார் கோவிலடியில் நடந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரசாரக்கூட்டத்தில் நான்கு பொலிஸ்காரர்கள் இளைஞர்களின் வேட்டுக்கு பலியாகினர். அதன்பிறகு நடந்த அனர்த்தங்கள் பற்றி இலங்கை தமிழர் அரசியல் வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன. 1981 மே 31 ஆம் திகதி, யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிந்தது. யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதை அறிந்த வண.பிதா தாவீதுஅடிகள் மாரடைப்பால் காலமானார். யாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. நூல் நிலையத்தை எரித்தவர்கள், யாழ். எம். பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டையும் ஈழநாடு அலுவலகத்தையும் எரித்திருந்தார்கள். யோகேஸ்வரனும் அவரது மனைவி சரோஜினியும் பின்புறத்தால் தப்பி ஓடினர். 1981 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முற்பகல் எரிந்துகொண்டிருந்த யாழ். பொது நூலகத்தைப்பார்க்கச்சென்றபோது அங்கு மிலிட்டரி பொலிஸார்தான் காவலுக்கு நின்றார்கள். “ இனிமேல் அங்கே எரிப்பதற்கு என்ன இருக்கிறது…? ஏன் இவர்கள் இங்கு காவலுக்கு நிற்கிறார்கள்..? “ என்று உடன் வந்த மல்லிகை ஜீவாவிடம் கேட்டேன். காவலுக்கு நின்ற ஒரு மிலிட்டரி பொலிஸ்காரரிடம் சிங்களத்தில், “புவத்பத், புஸ்தகால கறபு வெறத்த குமக்த?” (பத்திரிகைகளும் நூல்நிலையமும் செய்த குற்றம் என்ன? ) என்று சிங்களத்தில் கேட்டேன். அந்த மிலிட்டரி பொலிஸ்காரர் என்னை விநோதமாகப் பார்த்தார். யாழ்ப்பாணத்தில் தன்னோடு சிங்களத்தில் பேசும் இவன் யாராகவிருக்கும் என்ற பார்வை அதில் தெரிந்தது. அன்று மாலை உரிய நேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் எனக்கு விடை கொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச் சென்றுவிட்டார். இரவு பத்துமணிக்குத்தான் அந்தமெயில்வண்டி வந்தது. விரல் விட்டு எண்ணத் தக்க பயணிகளுடன் பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத் தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன். யாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜி. செனவிரத்தின உட்படசில மனிதஉரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதிய நகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது. ஏதும் குழப்பம் நேரலாம் என்று இறுதி நேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அமிர்தலிங்கம் அந்தச்சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றில் நிகழ்த்திய உரை மிகவும் முக்கியமானது. அவர் அன்று இவ்வாறு சொன்னார்: “ இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, ஹிட்லர் தனது படைகளிடத்தில்,“ மருத்துவமனைகள் நூல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் “ என்று கட்டளை இட்டார். கொடுங்கோலன் சர்வாதிகாரி எனப் பெயரெடுத்த ஹிட்லருக்கும் கூட நூல் நிலையத்தின் பெறுமதி தெரிந்திருக்கிறது. ஆனால், இலங்கையில் எமது நாட்டைப்பாதுகாக்கவேண்டிய பொலிஸாருக்கு இந்த அடிப்படை அறிவும் தெரியவில்லை “ பொலிஸாரின் அடாவடித்தனத்தால், அன்று யாழ். ஈழநாடு பத்திரிகை அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்திலிருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை உட்பட பல கட்டிடங்கள் எரிந்தன. அதனைப்பார்க்க யோகர்சுவாமிகள்தான் இல்லை. இருந்திருப்பின், ஈழநாடு முதல் பிரதி தன்வசம் தரப்பட்டபோது, எதற்காக, “ ஏசுவார்கள், எரிப்பார்கள் “ என்று சொன்னேன். எனது நாக்கு கரிநாக்கா..? “ என்றும் யோசித்திருக்கக்கூடும். வில்சனும், தொண்டமானும் சொன்ன சொல்லை கேளாமல் எதுவித தீர்க்கதரிசனமுமற்று யாழ். மாவட்ட தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சியை போட்டியிடவைத்து, இத்தனை அநர்த்தங்களுக்கும் வித்திட்ட ஜே.ஆர். சர்வதேச அழுத்தங்களினாலும் கூட்டணித்தலைவர்களின் நெருக்குதலினாலும், இறுதியில் யாழ். நூலக எரிப்புக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு தருவதற்கு சம்மதித்தார். யாழ். எம்.பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டதற்கும் இழப்பீடு வழங்கப்பட்டது. நிகழ்ந்த அநர்த்தங்களை விசாரிக்க சர்வதேச ஜூரிமார் சபை நியமிக்கப்பட்டது. அந்தச்சபை Ethnic Conflict and Violence in Srilanka என்ற தலைப்பில் நீண்ட அறிக்கை தயாரித்து ஜே.ஆரிடம் கொடுத்தது. அவர் கண்துடைப்பில் பெரிய வித்தகர். அதற்கு முன்னர் 1977 இல் நடந்த கலவரம் பற்றியும் சன்சோனி என்ற நீதியரசர் தலைமையில் ஆணைக்குழு வைத்து விசாரித்து அறிக்கை பெற்றவர். இழப்பீடுகள், ஜே.ஆரின் குடும்பச்சொத்திலிருந்து வழங்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வெளிநாட்டு கடனுதவியிலிருந்தும்தான் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்புடன், அந்த 1981 ஆம் ஆண்டு கடந்துவிடவில்லை. அந்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக மேற்கிலங்கையிலும் மலையகத்திலும் பரவியது. அதற்கு காலிமுகத்திடலுக்கு முன்பாக பிரிட்டிஷாரின் காலத்தில் அமைந நாடாளுமன்றத்தில் அரசு தரப்பு அமைச்சர்களும் எம். பி. க்களும் பேசிய பேச்சுக்கள்தான் பின்னணிக் காரணம். முக்கியமாக பாணந்துறை எம். பி. நெவில் பெர்னாண்டோ, அமைச்சர் சிறில் மத்தியூ ஆகியோர் கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாதம்தான். அமிரை காலிமுகத்திடலில் கழுவேற்றிக்கொல்லவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். விவாதங்கள் இரவு வரையில் தொடர்ந்தன. அந்தச்செய்திகளை வீரகேசரியில் இரவு நேரப்பணியில் ஒப்புநோக்கினேன். என்னுடன் பணியாற்றிய கனகசிங்கத்தின் குடும்பத்தினர் 1977 இல் கொழும்பு முகத்துவாரத்தில் குடியிருந்தபோது, சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டனர். கனகசிங்கத்தின் மனைவி கத்தி வெட்டுக்காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டவர். இந்தக்குடும்பம், அந்தக்கலவரம் தொடர்பாக விசாரித்த சன்சோனி ஆணைக்குழுவின் முன்பாகத் தோன்றி சாட்சியம் வழங்கியிருக்கிறது. 1981 ஜூலை மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் அமிருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத்தீர்மான விவாதம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தோ தெரியாமலோ அதிபர் ஜே.ஆரும், பிரதமர் பிரேமதாசாவும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதித்திருந்தனர். பிரேமதாசா அன்றைய விவாதத்தின்போது, வெளியூர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு, அகன்றுவிட்டார். அதிபர் ஜே.ஆர். நாடாளுமன்றத்திற்கு சிம்மாசனப்பிரசங்கத்திற்கு மாத்திரமே வருவார். அந்த விவாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடந்தது. வாய்க்கு வந்தபடி ஆளும்தரப்பு எம்.பி.க்கள் சிலர் பேசினார்கள். எதிரணியிலிருந்த ஏழு சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள், அதனைக் கண்டித்து அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல எனக்கூறி வெளிநடப்புச்செய்தார்கள். அரசு எம்.பி.க்கள் 121 பேர் ஆதரித்து வெற்றிகொண்டனர். அமைச்சர் தொண்டமானும் துணை நீதியமைச்சர் ஷெல்டன் ரணராஜாவும் வாக்களிக்க மறுத்தனர். இரண்டுபேரும் கண்டி, செங்கடகல மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவை சுதந்திரமாக பேசவிட்ட ஜே.ஆர், அவரது வரம்புமீறிய பேச்சைக்கேட்டபின்னர், அவரை பதவியிலிருந்து தூக்கினார். ஐக்கியதேசியக்கட்சியின் தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் பெருந் தலைவராகவிளங்கிய பலம்பொருந்தி சக்தியான சிறில் மத்தியூவை முன்னால் விட்டு வீழ்த்திய சாணக்கியர் பிரேமதாசா, தனது எதிர்காலத் தலைமைத்துவத்திற்கான பாதையை செப்பனிடத் தொடங்கிய காலமும் அதுதான். இந்த சம்பவங்களின் எதிரொலியாக நிகழ்ந்த தொடர் அநர்த்தம்தான் 1981 ஆம் ஆண்டு கலவரம். அந்த ஆண்டு ஜூன் மாதம் யாழ்ப்பாணம் எரிந்தது. ஜூலை மாதம் இரத்தினபுரி மாவட்டமும் கம்பகா மாவட்டத்தில் எங்கள் ஊரும் எரிந்தது. இவ்வளவும் நடந்தபின்னர்தான் பொலிஸார் வெளியே வந்தனர். பொலிஸை நம்பிப்பிரயோசனம் இல்லை. யாழ்ப்பாணத்தில் தீவைத்தது பொலிஸ்தானே! ஆனால், எங்கள் ஊரில் அந்தவேலையை பேரினவாதிகளின் ஏவல் சக்திகள் பொறுப்பெடுத்திருந்தன. எமது ஊரில் 1966 இல் இடைத்தேர்தல் நடந்தபொழுது பாடசாலை மாணவனாக இருந்த நான், அந்த இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்தான் பிரதமர் டட்லியையும், அதே மேடையில் கல்குடா எம்.பி தேவநாயகத்தையும் வவுனியா எம்.பி. தா.சிவசிதம்பரத்தையும் ஜே.ஆரையும் பார்த்திருக்கின்றேன். இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் தேன்நிலவு கொண்டாடிய ( தேவநாயகம் தவிர்ந்த ) தமிழரசுக்கட்சி எம்.பி.க்கள், அமிர், மற்றும் இரண்டு சிவசிதம்பரங்களும் 1983 அதே ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்தனர். அந்தக்காட்சியையும் 1984 ஆம் ஆண்டு சென்னைசென்றபோது நேரடியாகப் பார்த்தேன். அதிபர் ஜே.ஆர், பிரதமர் பிரேமதாசாவுடன் ஒருநாள் எங்கள் ஊருக்கு வந்து எரிக்கப்பட்ட கடைத் தொகுதிகளை பார்த்தார். அத்துடன் தொண்டமான், செல்லச்சாமியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டு நிலைமையின் தீவிரத்தை அறிந்தார். அன்றும் ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் தமிழகத்தில் முதல்வர் எம்.ஜி. ஆரின் அரசும் இந்திய மத்திய அரசும் அழுத்தங்களை பிரயோகித்ததையடுத்து ஜே.ஆர். எதிர்காலத்தில் தனக்கு வரப்போகும் நெருக்கடிகளை உணர்ந்தார். அவர் எங்கள் ஊருக்கும் இரத்தினபுரி உள்ளிட்ட மலையகப்பகுதிகளுக்கும் சென்று நேரடியாக அநர்த்தங்களை பார்த்துவிட்டு திரும்பிய பின்னர், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆளும் கட்சியின் நிருவாகக்குழுவின் கூட்டத்தை நடத்திப்பேசிய பேச்சுக்களையும் வீரகேசரியில் ஒப்பு நோக்க நேர்ந்தது. அதிலிருந்து சில வசனங்கள்: “ நான் ஆத்திரத்தில் அல்ல. மனம் நொந்து பேசுகிறேன். நாடெங்கும் அண்மையில் நடந்திருக்கும் வெறிச்செயல்கள் நாம் மதித்துப்போற்றிப் பின்பற்றுகின்ற உயர் சமய நெறிகள், நம்மில் சிலரை பண்புள்ள மனிதர்களாக மாற்றவேயில்லை. சில மிருகங்கள் – இதைச்சொல்லவே வெட்கப்படுகின்றேன். அதிலும் நம் கட்சியினர் சிலர் கூட இந்த வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர். எமது எம்.பி.க்கள் நாடாளுமன்றின் உள்ளும் புறமும் பேசிய பொறுப்பற்ற பேச்சுக்கள் நாடெங்கும் கொலை , கொள்ளை, கொள்ளி வைப்பு பாலியல் வன்முறை முதலான கொடுஞ்செயல்களுக்கு காரணமாகியுள்ளன. ஒரு கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் நான் அது குறித்து பெருமையாக நினைக்கவேண்டும். அந்நிலை இல்லையாயின் நான் எதற்காக அதற்கு தலைவராக இருத்தல் வேண்டும். வன்முறைகளை ஏவிவிட்டு, அதன்மூலம்தான் பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும் என்று எவரேனும் கருதினால், அவர்களே வந்து இந்த தலைமைப் பதவியை ஏற்கட்டும். நான் ஒதுங்கிக்கொள்கின்றேன். “ அவரது ஆதங்கம் நிரம்பிய உரையை எமது வீரகேசரி அலுவலக நிருபர் எழுதிக்கொண்டு வந்தார். கெமராமேன் படம் எடுத்துக்கொண்டு வந்தார். செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ செம்மைப்படுத்தினார். அதனை அச்சுக்கோப்பாளர்கள் அச்சுக்கோர்த்தனர். நாம் ஒப்புநோக்கினோம். பத்திரிகை அச்சாகி தமிழ் மக்களிடம் சென்றது. அந்த மக்கள், “ ஆகா…. ஜனாதிபதி நல்லவர்தான். அவருக்கு கீழே இருப்பவர்கள்தான் கெட்டவர்கள் “ என்ற முடிவுக்கு வந்தார்கள். ஜே.ஆர். அன்று பேசிய பேச்சு அச்சில் வெளியானாலும், வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகில் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலிருந்து நிகழ்த்தப்பட்டமையால், கடல் காற்றோடு இரண்டறக்கலந்து காணாமல் போய்விட்டதோ என்றும் யோசித்தேன். இலங்கையில் அடுத்தடுத்து நடந்த கலவரங்களின் அதிஉச்சம்பெற்றதுதான் ஆவணி அமளி என்றும் கறுப்புஜூலை எனவும் சொல்லப்பட்ட கலவரம். 1958 முதல் நடந்த கலவரங்கள் குறித்து பல நூல்கள், ஆவணங்கள், சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் வெளிவந்துவிட்டன. 1958 ஆம் ஆண்டு கலவரம் வந்தபோது நான்கு வயது பாலகனாக இருந்த பிரபாகரன், பாணந்துறையில் ஒரு இந்து மத கோயில் ஐயர் கொதிக்கும் தாரில் எறியப்பட்டு துடிதுடிக்க கொல்லப்பட்ட செய்தியைக்கேட்டு, தனது தந்தையிடம், ஏன் தமிழரை அடிக்கிறார்கள். நாம் திருப்பி அடிக்கமுடியாதா..? எனக்கேட்டதாகவும் ஒரு செய்தியை பின்னணியாகக்கொண்டு மேதகு திரைப்படம் வருகிறது. அந்த மேதகுவின் தீர்க்கதரிசனம் அடிக்கு அடி என்றிருந்தமையாலும், அன்றைய இலங்கை அதிபரின் தீர்க்கதரிசனம் அடித்துத்தான் அடக்கவேண்டும் என்று இருந்ததாலும் 1983 கலவரத்தின் ரிஷிமூலம் திருநெல்வேலியில் பரமேஸ்வராச் சந்தியில் அந்த ஆண்டு இதே ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 13 இராணுவத்தினர் புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டதுதான் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் சொன்னாலும், ஜே.ஆரின் இராஜதந்திரம் அதனை எவ்வாறு கையாண்டது என்பது கவனத்திற்குரியது. அதற்கு முன்னர் அதே ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி, கொழும்பில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் மாபெரும் மேதின எழுச்சிப் பேரணியையும், ஏனைய கட்சிகளுக்கில்லாத பேராதரவில் அந்த இயக்கத்தின் மேதினக்கூட்டத்திற்கு கொழும்பு நகரசபை மண்டபத்திடலில் திரண்ட மக்களையும் மதிப்பீடு செய்த ஜே.ஆரின். புலனாய்வாளர்கள் அவருக்குச்சொன்ன செய்திகளையடுத்து, அந்த இயக்கத்தை மீண்டும் தடைசெய்வதற்கான கணக்கினை மனதில் வரைந்தார். அந்த சித்திரத்தை பொறுத்திருந்து ஜூலை மாதம் இறுதியில் தருணம் பார்த்து வெளியிட்டார். முதல்நாள் ஜூலை 22 இல் கொழும்பில் ஆடிவேல்விழா. மறுநாள் 23 ஆம் திகதி சனிக்கிழமை திருநெல்வேலியில் தாக்குதல். அடுத்த நாள் ஞாயிறு போயா தினம் பௌத்தர்கள் சில் அனுட்டிக்கும் நாள். அதிபர் ஜே.ஆரும் சில் அனுட்டித்தார். திங்கட்கிழமை தமிழர்களை கில் ( Kill ) செய்யும் படலம் தொடங்கியது. கொல்லப்பட்ட 13 இராணுவ சிப்பாய்களின் சடலங்களையும் பொறுப்பேற்க இராணுவத் தளபதி யாழ்ப்பாணம் விரைந்தார். அதற்கிடையில் இராணுவத்தினர் பலாலி வீதியில் பல அப்பாவித் தமிழர்களை வீடு புகுந்து சுட்டுக் கொன்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் எழுத்தாளர் கலா. பரமேஸ்வரனும் அவரது மாமனாரும் அடங்குவர். அவர்கள் அன்று ஆடி அமாவாசை விரதம் அனுட்டித்துக் கொண்டிருந்தவேளையில் குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதை அவதானித்த ஜே.ஆர். தனது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சேபால ஆட்டிகலவிடம், யாழ்ப்பாணத்தில் நிற்கும் இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம், “ இராணுவ வீரர்கள் சண்டையில் சாவது பெரிய விடயம் அல்ல. அந்த 13 சடலங்களையும் அங்கேயே புதைத்துவிடச்சொல்லுங்கள் “ என்றுதான் முதலில் சொல்லியிருக்கிறார். “ சிங்கள வீரர்களை யாழ்ப்பாணத்தில் புதைப்பது சிங்கள இனப்பெருமைக்கு இழுக்கு. எனவே கொல்லப்பட்டவர்களின் சடலங்களை அவர்களது உறவினர்களிடமே ஒப்படைப்போம் “ என்கிறார் திஸ்ஸ வீரதுங்க. இந்தச் செய்தி ஜே.ஆரிடம் வருகிறது. அவர் முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடுகிறார். 13 ஊர்களுக்கு சடலங்கள் சென்றால் , 13 ஊர்களில் கலவரம் வெடிக்கலாம், அதனால், பொரளை கனத்தை மயானத்திலேயே புதைக்கத் தீர்மானிக்கின்றனர். அன்று ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி கனத்தைக்கு சடலங்கள் வந்தன. கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் இறுதிச்சடங்கிற்காக அழைக்கப்பட்டனர். அவர்களுடன் கோபக்கனல் கொப்பளிக்க வந்து குவிந்த கும்பல் தனது கைவரிசையை காண்பிக்கத்தொடங்கியது. கனத்தையில் வந்து நின்று பொலிஸாருக்கு உத்தரவுகளை பிறப்பித்தவர் அன்றைய பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம். கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கான இறுதி மரியாதை செலுத்த வந்த பாண்ட் வாத்தியக்குழுவின் தலைவர் மற்றும் ஒரு தமிழ் இராணுவ அதிகாரி ஜோர்ஜ் தேவசகாயம். ஜே.ஆரும் வரவிருந்தார். பாதுகாப்புத்தரப்பு அவரை வரவேண்டாம் எனச்சொல்லியிருக்கிறது. கனத்தையில் தொடங்கிய கலவரம் தலைநகர் எங்கும் தலைவிரித்தாடியது. அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடிந்து நான் வீடு திரும்பிவிட்டேன். மறுநாள் திங்கள் எனக்கு விடுமுறை நாள். அன்று மாலை தினபதி – சிந்தாமணியில் துணை ஆசிரியராகவும் நாடாளுமன்ற நிருபராகவும் பணியாற்றிய எனது நண்பர் செல்வரத்தினம் கொழும்பிலிருந்து விரைந்து வருகிறார். நேரே தனது வீடு செல்லாமல் என்னிடம் வந்து கொழும்பில் அன்று கண்ட காட்சிகளை பதற்றத்துடன் விபரிக்கிறார். “ நாளை முதல் வேலைக்குச்செல்லவேண்டாம் “ என்றார். அன்று முதல் பல நாட்கள் வீரகேசரியும் வெளிவரவில்லை. ஜே.ஆரின் இராஜதந்திர மூலை , அந்தக்கலவரத்தை தூண்டியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரும் மற்றும் இடதுசாரிக்கட்சியினரும்தான் என்று பெரிய அபாண்டத்தை சுமத்தி அவற்றை தடைசெய்யும் உத்தரவை பிறப்பித்தது. அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் வரலாற்று ஏடுகளில் தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. எங்கள் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் ஆகியோரின் வெள்ளவத்தை வீடுகளும் தாக்கப்பட்டன. அவர்களின் சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான நூல்கள் எரிக்கப்பட்டன. சிவகுருநாதன் தனது முதுமானிப்பட்டத்திற்காக பல இரவுகள் கண்விழித்திருந்து எழுதிய ஆய்வேடு உட்பட பல ஆவணங்களை தீ அரக்கன் அழித்தான். பின்னாளில்,அந்த அமளியின்பொழுது தான் அனுபவித்த கொடுந்துயர் பற்றி அவர் விரிவாக எழுதுகிறார். “ அமைதியாகவிருந்து எழுத வீடுவாசலில்லை. உடுக்க உடையில்லை. நான் படித்த நூல்களில்லை. சிறுபராயத்திலிருந்தே சேர்த்துவந்த சுமார் ஐயாயிரம் நூற் பிரதிகளுக்கு மேல் இன்றில்லை. நான் எழுதிய பேனாவே இல்லையென்றால் என் நிலை என்ன? நடுத்தெரு நாராயணனாக ஒரு சில மணிநேரத்துக்குள் என்னை ஆக்கிவிட்டார்கள் அந்தக்குண்டர்கள். தியாகப்பிரம்மத்தின் சமாதியில் நல்லை ஆதினகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் பூஜை செய்து எமது மகளுக்குத்தந்த ருத்ர வீணையை காடையர்கள் முறித்து குப்பையில் போட்டிருந்தார்கள். “ என்று எழுதுகிறார். கொழும்பில் ஏற்பட்ட அழிவுகள் உயிர்ச்சேதம் பற்றி புதிதாக ஒன்றும் இங்கே பதிவுசெய்யவேண்டியதில்லை. வீரகேசரியின் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் அகதி முகாம்களிலும் சிலர் பாதுகாப்பான வீடுகளிலும் இடங்களிலும் முடங்கினர். சிவப்பிரகாசம் அவர்களது வீடும் காரும் சேதமானது. அந்த இனசங்காரம் பற்றியும் அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். தனதும் குடும்பத்தினரதும் எதிர்காலம் பற்றி அவர் தீவிரமாக சிந்தித்திருக்கவேண்டும். 1983 பலருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை முன்வைத்தது. அவரும் தமது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு புலம்பெயரநேரிட்டது. எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது அனுபவங்களை நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 என்ற நாவலாக படைத்துள்ளார். எழுத்தாளர் அருளர் 1958 கலவரம் பற்றி லங்கா ராணி என்ற நாவலை எழுதியுள்ளார். வ. ந. கிரிதரன் 1983 கலவரத்தின் பின்னணியில் குடிவரவாளன் என்ற நாவலை வரவாக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நடேசன் உனையே மயல்கொண்டு என்ற நாவலை எழுதிள்ளார். நேற்றை செய்திகள் வரலாறுகளாகவும் படைப்பிலக்கியங்களாகவும் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. 41 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இக் கலவர காலத்தின்போது பிறந்த குழந்தைகளுக்கும், அதன்பின்னர் பிறந்தவர்களுக்கும் இவைதான் எமது தேசத்தின் வரலாறாக விளங்கப்போகிறது. சிங்கள இனவாத தீயசக்திகள் தமிழருக்கு எதிராக தாக்குதல் நடத்தின. தமிழ் விடுதலை இயக்கங்கள் சிங்கள இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தின. இந்தப்போராட்டமும் கடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. “ அகிம்சைப்போராட்டம், ஆயுதப்போராட்டமாகி தற்போது ராஜ தந்திரப் போராட்டமாக மாறியிருக்கிறது “ என்று சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனுக்கு வருகை தந்து உரையாற்றிய தற்போதைய தமிழ்த்தலைவர் நாடாளுமன்ற யாழ். மாவட்ட உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 1964 இல் பிறந்த அவருக்கு 1983 இல் 19 வயது. இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் ஈழப்போராட்டமும் அவரை அரசியல்வாதியாக்கியதுடன் அரசியல் தலைவருமாக்கியது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினருமாக்கியது. 1951 – ஜூலையில் இல் பிறந்த நான், 1958 – 1977 – 1981 – 1983 கலவரங்களை பார்த்துவிட்டு, 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்று இந்தக் கலவரங்களை நனவிடை தோய்ந்தவாறு, நீடித்தபோரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் தன்னார்வத்தொண்டுப் பணிகளில் ஈடுபட்டவாறு தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இனிச்சொல்லுங்கள்: என்னால். இந்த ஜூலை மாதத்தை மறக்க முடியது அல்லவா..? முருகபூபதி. எனது கறுப்பு ஜூலை நினைவுகள் ஆக்கத்தில் நேர்ந்துள்ள தகவல் தவறை பிரான்ஸில் வதியும் தோழர் ராயப்பு அழகிரி சுட்டிக்காண்பித்துள்ளார். அவர் சொல்லும் தகவல் இதோ: தோழர் அருளர் எழுதிய ‘லங்காராணி’ நாவல் முதல் பதிப்பு 1978 இல் வெளிவந்தது. 1977 கலவரத்தின் போது கொழும்பில் அகதிகளை ஏற்றி யாழ்ப்பாணத்தில் இறக்கிய கப்பலின் பெயர் தான் ‘லங்காராணி’. அதில் தோழர் அருளரும் ஒரு அகதியாகப் பயணித்த அனுபவங்கள் நாவலில் பிரதிபலிக்கின்றன. அதனை அச்சிட்டுப் புத்தகமாக வெளியிட்ட பொறுப்பு சென்னையில் என்னுடையது. நீங்கள் கட்டுரையில்1958 கலவரம் என்று குறிப்பிட்டுள்ளது பிழையாகும். தோழர் அழகிரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. முருகபூபதி. https://akkinikkunchu.com/?p=284951
  6. "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" பகுதி 02 மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகமும் சிந்து வெளி நாகரிகமும் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது .அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத் தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழு ப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது . இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்ய, அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த, ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்! இச் சின்னஞ் சிறிய இலங்கை தீவு சில இனக் கலவரங்களைக் கண்டு மனித வளம், பொருளாதார வளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற் கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால் தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று இன்னும் அழைக்கப்படுகிறது. இது 37 / 38 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24 தொடக்கம் ஜூலை 30, 1983 வரை அரங்கேறியது. இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். நானும் என் குடும்பமும் உட்பட கப்பலில் யாழ் சென்றோம். இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது . ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? . இது போலவே இந்தியாவிற்குள் 1700 கி மு ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள், இங்கே வாழ்ந்த பழங்குடியினரை திட்டி, கேவலபடுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார். மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள், அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன என Dr ராதாகுமுத முகர்ஜி Phd " இந்து நாகரீகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலை கிழே தருகிறோம். "இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் [தமிழர்களை] கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்." மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான் , இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள் .அங்கு பரசுராமர் இல்லாததால் , அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர் . தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர் . அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும். என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது. ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாக எல்லோரும் அறிய விரும்புவது : *உண்மையில் என்ன நடந்தது ? *இது ஏன் நடந்தது ? *இதற்கு யார் பொறுப்பு ? *இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ? *நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ? இதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும் ,தனது திருக்குறள் 548 இல்: "எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்." என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார். இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !! *"உண்மைகளை வெளிபடுத்துவது " *"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது" *"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது " அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம் . அடுத்த பரம்பரைக்கும் இந்து சம வெளி மற்றும் மாயன் ? போல் தொடராமல் இருக்க . அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும் . இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "Crimes against humanity" Part 02 When we think about Crimes against humanity or genocide, in our past or ancient history , Both Mayan civilization and Indus valley civilization comes into our minds. The Mayan Civilisation thrived during 3000 BC & It reached improbable heights between 300 AD to 700 AD. The Spanish conquered Yucatan (1526-46) of Mayans with their guns. If you want to destroy a racial group , destroy their language. Similarly If you want to destroy the their language, destroy their books It is a indirect form of Genocide!! This is what Spanish done to mayans. This cruelty was done by Spanish Bishop "Diego de Landa" , whose initial assignment was to convert the Mayas to Catholicism after the Spanish conquest. We too encountered such situation in the name of Jaffna public library on the night of May 31, 1981. Over 95,000 unique and irreplaceable Tamil palm leaves (ola), manuscripts, parchments, books, magazines and newspapers, housed within an impressive building inspired by ancient Dravidian architecture, went up in flames like Mayan literature! & were destroyed during the burning that continued unchecked for two nights. The library was one of the largest in Asia. This event was one of the worst book burning events in the 20th century!! Again in 1983, the state- sponsored mobs, in a frenzy, obviously under the influence of alcohol , killed about 3000 people and property damages or loots worth over $300 million U.S. Tamils throughout the world, remember the victims of Black July ’83- 37 / 38 years ago, the state- sponsored pogrom against Tamils in Sri Lanka. The days between July 24 and July 30, 1983, were tragic, and unforgettable, for the Tamils. Even we were in Colombo at that time and had seen all atrocities by our own eyes. When you speak about Genocide, We immediately remember the names of Adolf Hitler & Benito Mussolini. Because they were directly killed over hundred thousands people. However history has many evidences who were more cruel than them. One of them was Spanish Bishop "Diego de Landa". On July 12, 1562, at the main square of the town of Maní, just outside the Franciscan church, Spanish Bishop "Diego de Landa" burnt several thousand objects / about 5000 'idols ' worshiped by the Maya and 27 precious folding books in Maya writing to destroy the Mayan language and culture. This one act deprived future generations of a huge body of Mayan literature in various subjects such as: their history, beliefs, astronomy, science, mathematics , cultivation . Also Many of the so-called idols were Maya sacred books. Only three survived the fires. Scholars consider the destruction of these sacred Maya texts among the most tragic losses of accumulated human knowledge in world history. This was done by a so called religious leaders !! Similarly, Sometime around 1700 BC, ancient Indigenous people of India were attacked and destroyed by invading barbaric tribes- Aryans who were a tribe of Indo-European- speaking, horse- riding nomads. The Rig-Veda, which contains over 1,000 hymns directed to the gods includes praises, blessings, sacrifices, and Curse Against their Enemies, also talk about their conquest of great cities. One such example from Rig veda is given below: "Destroy the fiend shaped like an owl or owlet, destroy him in the form of dog or cuckoo. Destroy him shaped as eagle or as vulture as with a stone, O Indra, crush the demon." [The Rig Veda/Mandala 7/Hymn 104] Let us consider Mahabharata or Vishnu purana as one more last example. Here We find Parasurama also known as the "axe-wielding Rama who is considered as the sixth incarnation of Lord Vishnu & The son of the forest- dwelling sage Jamadagni. The word Parasu means 'axe' in Sanskrit and therefore the name Parasuram means 'Ram with Axe'. One day when sage Jamadagni had away from home, King Kartaveeryarjuna came to the hermitage with his soldiers & and forcefully carried the special cow which served all the needs of the sage for his rituals. Soon Parasurama arrived, hearing what happened from his mother Renuka ,He rushed to Kartaviryarjuna and challenged him for a battle. Parasurama killed him & brought back the special cow home. Kartaveeryarjuna's sons got angry & came to the hermitage . As Parasurama was away, They took revenge for the killing of their father with the life of sage Jamadagni by chopping his head. Parasurama was deeply saddened to know about the killing of his father. He thought that the entire Kshatriya (royal or ruling class) community had become arrogant beyond limit. He took an oath that he would teach them a lesson. It is said that he went around and killed all the kings whom he could find. This he did to twenty one generations of kings. It is said that five rivers of blood started as a result from that place. He alone killed very much more people than combined total people killed by Mongolian king Genghis khan, Adolf Hitler, Joseph Stalin, Benito Amilcare Andrea Mussolini & Mao Zedong However, even after killing of twenty one generations of kings, Kshatriya community again started to grow with one king called mulakan of surya dynasty [Suryavam(n)sham or Solar Dynasty], who escaped from Parasurama as women hide him by surrounding him. He is 8th generation prior to Lord Rama of same Solar Dynasty. As such We can see that A racial group whose have intelligent, valour & power can not be completely destroyed at all . It will always come up again .However It is definitely a set back in the progress of the said racial group Because of this only , every one want know: *What did really happen? *Why did this happen?. *Who were responsible? *Who were supported/behind this atrocities /genocide *Whom to blame/corporate accountability for this human rights violations/International crime? Because of these,Even Valluar who born 2000 years before said in his famous Thirukkural 548: "A ruler inaccessible, un probing and unjust Will sink and be ruined" The king or the ruler who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace. What they ask is very simple. *"Bring the truth to all" *"Punish all culprit who involved directly or indirectly" *"Make this as an example for all" So that it would not continue/repeat further any more , any more generations such as Indus valley people, Mayans etc? It could also stop a serial killer like Parasurama from killing -generations by generations .Also we do not want to wait for another twenty one generations to welcome another Mulakan ,the Saviour ! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  7. Published By: VISHNU 30 JUL, 2023 | 11:07 AM ஹரி­கரன் 1983 ஜூலையில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொ­லைகள் அரங்­கேற்­றப்­பட்டு நாற்­பது ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும், தமிழர் விரோத மன­நிலை தெற்கில் மாற்­ற­ம­டை­ய­வில்லை. 1983 ஜூலை 24ஆம் திகதி மாலையில், தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட இடம் பொர­ளையில் உள்ள கனத்தை மயானம் தான். திரு­நெல்­வேலி தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட 13 படை­யி­னரின் சட­லங்­களும் அங்கு கொண்டு வரப்­பட்டு அடக்கம் செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்ட நிலையில் - கனத்­தையில் கூடி­யி­ருந்­த­வர்­களால் தான் கறுப்பு ஜூலை கல­வ­ரங்கள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. அதே இடத்தில் கடந்த வாரம் நினைவு கூரலை முன்­னெ­டுக்க முயன்ற போது, சிங்­களப் பேரி­ன­வா­திகள் அதனைத் தடுத்­தனர். அவர்­க­ளுடன் சேர்ந்த சில பொலிஸ் அதி­கா­ரி­களும் தீபத்தை காலால் உடைத்து, 40 ஆண்­டு­களைக் கடந்தும், அவர்­களின் மன­நிலை மாற­வில்லை என்­பதை உணர்த்­தினர். கறுப்பு ஜூலையில் கொல்­லப்­பட்­ட­வர்கள் தமிழ் மக்கள் அல்ல, விடு­தலைப் புலிகள் தான் என்று இப்­போது சிலர் புது நியாயம் கற்­பிக்­கின்­றனர். கொழும்­பிலும், தென்­னி­லங்­கை­யிலும் அப்­பாவித் தமி­ழர்­களைக் கொன்று குவித்து விட்டு, அவர்­களை புலிகள் என்று கூறு­கின்­ற­வர்கள், முள்­ளி­வாய்க்­காலில் இனப்­ப­டு­கொலை நடக்­க­வில்லை. கொல்­லப்­பட்­ட­வர்கள் எல்லாம் புலிகள் தான் என்று கூறி­யதை ஆச்­ச­ரி­யத்­துடன் பார்க்க முடி­யாது. உண்­மையை மறைப்­பதும், குற்­ற­வா­ளி­களை பாது­காப்­பதும் இலங்­கையில் நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட கொள்­கை­யாக பின்­பற்­றப்­ப­டு­கி­றது. அதனால் தான் தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைத்து, பாதிக்­கப்­பட்ட சமூ­கங்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கப் போவ­தாக அர­சாங்கம் கூறு­கின்­றதை தமிழ் மக்­களால் நம்ப முடி­ய­வில்லை. நல்­லி­ணக்க ஆணைக்­குழு நம்­ப­க­மா­ன­தாக இருக்க வேண்டும் என்­ப­துடன், அது குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டிக்கும் அதி­காரம் கொண்­ட­தா­கவும் இருக்க வேண்டும். அது பொறுப்­புக்­கூ­றலை உறுதி செய்யும் பொறி­மு­றை­யாக இருக்க வேண்­டுமே தவிர, இணக்­க­சபை போல அமைந்து விடக் கூடாது என்றே பாதிக்­கப்­பட்ட சமூ­கங்கள் வலி­யு­றுத்­து­கின்­றன. கறுப்பு ஜூலையில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களை புலிகள் என அடை­யா­ளப்­ப­டுத்தும் இலங்­கை­யினால், எவ்­வாறு பொறுப்­புக்­கூ­றலை உறுதி செய்ய முடியும் என்ற கேள்வி நீடிக்­கி­றது. கறுப்பு ஜூலையை நினைவு கூரவே அனு­ம­திக்­காத நாட்டில் எவ்­வாறு கறுப்பு ஜூலையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்? கறுப்பு ஜூலைக் கல­வ­ரங்கள் பல்­வேறு அர­சியல் பொரு­ளா­தார, வாழ்­வியல் மாற்­றங்­களை தமி­ழர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யது. தனி­நாடு தான் தீர்வு என்று நம்­பிய தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்திப் போரா­டி­னார்கள். இந்த நாட்டில் வாழவும் முடி­யாது, வாழவும் விட­மாட்­டார்கள் என்ற நிலைக்கு உள்­ளான தமி­ழர்கள், வெளி­நா­டு­க­ளுக்குப் புலம்­பெ­யர்ந்­தார்கள். அவர்கள் இன்று வலு­வான புலம்­பெயர் சமூ­கங்­க­ளாக- பொரு­ளா­தார பலம் படைத்­த­வர்­க­ளாக மாறி­யுள்­ளனர். அந்த மாற்­றத்­துக்கு அடிப்­படைக் கார­ணமே, கறுப்பு ஜூலை கல­வரம் தான். கனே­டியப் பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டு தோறும் இலங்கை அர­சுக்கு எரிச்­ச­லூட்­டு­கின்ற அறிக்­கை­களை வெளி­யி­டவும் அதுதான் காரணம். அண்­மையில் கூட கறுப்பு ஜூலையை முன்­னிட்டு கனே­டியப் பிர­தமர் வெளி­யிட்ட அறிக்­கையும், கொழும்பில் உள்ள கனே­டிய தூதுவர் எரிக் வோல்ஷ் சமூக ஊட­கங்­களில் இட்­டி­ருந்த பதிவும், சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியும் அதனை கண்­டித்­தி­ருக்­கிறார். வெளி­நா­டுகள் உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் தலை­யிட முனை­வ­தாக அவர் குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கிறார். சரத் வீர­சே­க­ரவும் அதே­கு­ர­லில் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருக்­கிறார். உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் தலை­யி­டு­வ­தற்கு கனே­டிய தூது­வ­ருக்கு உரி­மை­யில்லை என்றும், அவரை வேண்­டாத நப­ராக அறி­வித்து நாட்டை விட்டு வெளி­யேற்ற வேண்டும் என்றும் அவர் கோரி­யி­ருக்­கிறார். அண்­மைக்­கா­ல­மாக அர­சாங்கம் கன­டாவின் நிலைப்­பாட்­டுக்கு எதி­ரா­கவே கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­கி­றது. இதனை கன­டாவும் அறிந்­தி­ருக்­கி­றது என்­பதை கனே­டியப் பிர­த­மரின் கறுப்பு ஜூலை அறிக்கை உணர்த்­தி­யி­ருக்­கி­றது. “இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரி­மைகள் மீறல்­க­ளுக்கும், அத்­து­மீ­றல்­க­ளுக்கும், பொறுப்பு கூறப்­பட வேண்டும் என நாம் இன்றும் தொடர்ந்து கோரு­கின்றோம். மனித உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்­பதை கனடா ஒரு­போதும் நிறுத்­த­ மாட்­டாது.” என்று கனே­டியப் பிர­த­மரின் அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது. இது இலங்கை அரசின் அண்­மைய அறிக்­கைகள், பிர­தி­ப­லிப்­பு­களின் விளைவுதான். தென்­னி­லங்­கையில் வெளி­யி­டப்­படும் கருத்­துக்கள், எதிர்ப்­புகள், மத்­தியில் கனடா தனது நிலைப்­பாட்டில் உறு­தி­யா­கவே இருக்­கி­றது. கறுப்பு ஜூலைக் கல­வ­ரங்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கடந்த வாரம் சந்­தித்துப் பேசி­யி­ருந்தார் பிர­தமர் ட்ரூடோ. இதற்குப் பின்னர் தான், கன­டாவின் அறிக்­கை­களும், செயற்­பா­டு­களும் நல்­லி­ணக்­கத்­தையும் அமை­தி­யையும் ஏற்­ப­டுத்த உத­வாது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி கூறி­யி­ருக்­கிறார். இலங்கை அர­சாங்­கத்­துக்கும் கன­டா­வுக்கும் இடையில் ஒரு இரா­ஜ­தந்­திர மோதல் உரு­வாகி வரு­கி­றது என்­பதை வெளிப்­ப­டுத்தும் இன்­னொரு விட­யமும் அரங்­கே­றி­யி­ருக்­கி­றது. கடந்த புதன்­கி­ழமை தனது அ­மைச்­ச­ர­வையை மாற்­றி­ய­மைத்த கனே­டியப் பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்­சியின் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான கெரி ஆனந்­த­சங்­க­ரியை சுதேச உற­வுகள் அமைச்­ச­ராக நிய­மித்­துள்ளார். இந்த அமைச்சர் நிய­மனம் இடம்­பெற்ற சூழல் முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டிய ஒன்று. ஏனென்றால், கறுப்பு ஜூலை கல­வ­ரங்கள் நிகழ்ந்த 40 ஆண்­டுகள் நிறை­வ­டையும் சூழலில், அந்தக் கல­வ­ரத்­தினால் கன­டாவில் குடி­யேறி சக்­தி­வாய்ந்த புலம்­பெயர் சமூ­கங்­களில் ஒன்­றாக மாறிய தமி­ழர்­களின் சார்பில் தெரி­வான உறுப்­பி­னரை அமைச்­ச­ராக்­கி­யி­ருக்­கிறார் ட்ரூடோ. கனே­டிய அர­சியல் வர­லாற்றில் இலங்கைத் தமிழர் ஒருவர் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டது இதுவே முதல்­முறை. அதுவும், கெரி ஆனந்­த­சங்­க­ரிக்கு இலங்கை அர­சாங்கம் வீசா வழங்க மறுத்த பின்னர் தான் இந்த நிய­மனம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. க‍னே­டிய நாடா­ளு­மன்­றத்தில் இனப்­ப­டு­கொலை நாள் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­தற்கு காரணம் என்று கெரி ஆனந்­த­சங்­கரி மீது இலங்கை அர­சாங்கம் வெறுப்­புடன் உள்­ளது. முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்­டா­பய ராஜபக்ஷ ஆகி­யோ­ருக்கு எதி­ராக பயணத் தடையை கனடா அறி­வித்த பின்னர், இந்த வெறுப்பு இன்னும் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. பொறுப்­புக்­கூ­ற­லையும், நீதி­யையும் கனடா வலி­யு­றுத்­து­வதும் கொழும்­புக்கு கடும் எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இதனால் தான், கன­டாவின் செயற்­பா­டு­க­ளுக்கு கார­ண­மா­னவர் என்று கெரி ஆனந்­த­ சங்­க­ரியை இலங்­கைக்கு வரு­வ­தற்கு அர­சாங்கம் தடை­வி­தித்­தது. இலங்­கைக்கு வரு­வ­தற்­கான தடை தொடர்­பான தக­வலை கெரி ஆனந்தசங்கரி, வெளியிட்ட நிலையில் தான் அவரை அமைச்சராக நியமித்திருக்கிறார் பிரதமர் ட்ரூடோ. கனேடிய அமைச்சர் ஒருவர் இலங்கை வருவதற்கு அரசாங்கத்தினால் தடை போட முடியாது. அவ்வாறு தடை போட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். கெரி ஆனந்தசங்கரி அமைச்சராக நியமிக்கப் பட்டது, இலங்கைக்கு அழுத்தங்களை இன்னும் அதிகரிக்கும். இது கனடாவின் ஒரு இராஜதந்திர நடவடிக்கை மாத்திரம் அல்ல. அவர் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப் பட்ட தடைக்கு எதிரான ஒரு எதிர்வினையும் கூட. பொறுப்புக்கூறலையும் நீதியையும் கனடா வலியுறுத்துகின்ற நிலையில், கனடாவுடன் இலங்கை முரண்படுவதும் முட்டிக் கொள்வதும், கொழும்புக்கு சிக்கலையே ஏற்படுத்தும். கெரி ஆனந்தசங்கரியின் அமைச்சர் நியமனமும் அதற்கான அறிகுறிகளையே வெளிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/161245
  8. 13 படும்பாடு August 4, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு 45 வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதுவரையில் அதற்கு 21 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தங்களது அரசியல் நலன்களுக்கு வசதியான முறையில் கொண்டுவந்த திருத்தங்களே — அடிப்படையில் ஜனநாயக விரோதமான ஏற்பாடுகளைக்கொண்ட திருத்தங்களே அவற்றில் அதிகமானவை எனலாம். ஆனால், அத்தகைய ஜனநாயக விரோத திருத்தங்களையும் விட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்ட — ஜனநாயக பரிமாணத்தைக் கொண்ட 13 வது திருத்தமே மிகவும் நீண்டகாலமாக கடுமையான அரசியல் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை 29 இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் மாகாணசபைகளை அமைப்பதற்கு வசதியாக அதே வருடம் நவம்பர் 14 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த திருத்தம் தற்போது 36 வருடங்களுக்கு பிறகு முன்னென்றும் இல்லாத அளவுக்கு பெரும் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கென்று கூறிக்கொண்டு முன்னெடுக்கும் முயற்சிகளே இதற்கு காரணமாகும். இந்த சர்ச்சை குறித்து ஆராய்வதற்கு முன்னதாக மாகாணசபைகளின் வரலாற்றை சுருக்கமாக நோக்குவது பொருத்தமாக இருக்கும். 13வது திருத்தத்துடன் சேர்த்து மாகாணசபைகள் சட்டமும் நிறைவேற்றப்பட்டு முதன்முதலாக 1988 ஏப்ரில் 28 வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணசபைகளுக்கும் அடுத்து அதே வருடம் ஜூன் 2 மத்திய, தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக1988 செப்டெம்பரில் இணைக்கப்பட்டன. ஒரே இணைந்த மாகாணத்துக்கு (இந்திய அமைதி்காக்கும் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியில்) 1988 நவம்பர் 19 தேர்தல் நடத்தப்பட்டது. இந்தியப் படைகள் 1990 மார்ச் இறுதியில் இலங்கையில் இருந்து முற்றாக வாபஸ் பெறப்படுவதற்கு முன்னதாக இணைந்த மாகாணத்தின் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் ‘ஒருதலைப்பட்ச சுதந்திர பிரகடனத்தை’ செய்துவிட்டு இந்தியாவுக்கு சென்ற பிறகு அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அந்த மாகாணசபையைக் கலைத்துவிட்டு நேரடி ஆட்சியைக் கொண்டுவந்தார். இணைந்த மாகாணம் 2008 வரை ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர்களினாலேயே நிருவகிக்கப்பட்டுவந்தது. இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு பிறகு இணைப்பு தொடரவேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சர்வஜனவாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடு சமாதான உடன்படிக்கையில் இருந்தது. அந்த வாக்கெடுப்பை முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினாலோ அல்லது அவருக்கு பிறகு பதவிக்கு வந்த வேறு எந்த ஜனாதிபதியினாலுமோ நடத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் இணைப்பை நீடிக்கும் பிரகடனங்களை ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக பிறப்பித்துக்கொண்டே வந்தனர். தற்காலிக இணைப்பு சுமார் இருபது வருடங்கள் நீடித்தது. ஆனால், இணைப்பை துண்டித்து இரு மாகாணங்களுக்கும் தனித்தனியான மாகாணசபைகள் அமைக்கப்படவேண்டும் என்று கோரி ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) 2006 ஜூலை 14 தாக்கல்செய்த மூன்று மனுக்களை விசாரணைசெய்த உயர்நீதிமன்றம் இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு ஜனாதிபதி ஜெயவர்தன செய்த பிரகடனங்கள் செல்லுபடியற்றவை என்றும் சட்டரீதியாக வலுவற்றவை என்றும் கூறி 2006 அக்டோபர் 16 தீர்ப்பளித்தது. 2007 ஜனவரி முதலாம் திகதி வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் உத்தியோகபூர்வமாக பிரிக்கப்பட்டன. தனியான கிழக்கு மாகாணசபைக்கு 2008 மே மாதத்திலும் நீண்டகால இழுபறிக்கு பிறகு வடக்கு மாகாணசபைக்கு 2013 செப்டெம்பரிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாகாணசபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் இரண்டாவது தடவையாக 1993 ஆம் ஆண்டிலும் மூன்றாவது தடவையாக 1999 ஆம் ஆண்டிலும் நான்காவது தடவையாக 2004 ஆம் ஆண்டிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஐந்தாவது தடவையாக 2008/09 ஆண்டுகளில் கிழக்கு மாகாணம் உட்பட எட்டு மாகாணங்களில் கட்டங்கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆறாவது தடவையாகவும் 2012/14 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் ( 25 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ) உட்பட எட்டு மாகாணங்களுக்கு கட்டங்கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. இறுதியாக தேர்தல்கள் நடந்த மாகாணசபைகளின் பதவிக்காலங்கள் முடிவடைந்த பிறகு தற்போது ஒன்பது மாகாணங்களும் ஐந்து வருடங்களாக — அதிகாரப்பலவலாக்க கோட்பாட்டை அவமதிக்கும் வகையில் — ஆளுநர்களின் நிருவாகத்தின் கீழ் இருந்துவருகின்றன. மாகாணசபை முறையை எதிர்க்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் இவ்வளவு நீண்டகாலத்துக்கு மாகாணசபைகள் ஆளுநர்களினால் நிருவகிக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழவில்லையே என்று கூறுவதையும் காண்கிறோம். உள்ளூராட்சி சபைகளைப் போன்று மாகாண சபைகளுக்கும் கலப்பு தேர்தல் முறையை ( விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் தொகுதி முறையும் ) அறிமுகம் செய்வதற்கு ‘ நல்லாட்சி ‘ அரசாங்க காலத்தில் 2017 செப்டெம்பரில் மாகாணசபை தேர்தல்கள் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. எல்லை நிர்ணயக்குழு 2018 ஆகஸ்டில் சமர்ப்பித்த அறிக்கையை பாராளுமன்றம் அங்கீகரிக்க மறுத்ததை அடுத்து மீளாய்வுக்கு பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவும் சட்டத்தின் பிரகாரம் இரு மாதங்களுக்குள் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கத் தவறியது. அதனால் மாகாணசபை தேர்தல்கள் ஐந்து வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்றன. இத்தகையதொரு பின்புலத்திலேயே 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முயற்சிகள் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் மீண்டும் வாதங்களை மூளவைத்திருக்கின்றன. கடந்த வருட பிற்பகுதியில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது இனப்பிரச்சினைக்கு இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு (2023 பெப்யவரி 4) முன்னதாக அரசியல் தீர்வைக் காணப்போவதாக அறிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க டிசம்பரிலும் இவ்வருடம் ஜனவரியிலும் இரு தடவைகள் பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டினார். எமது இனப்பிரச்சினை திகதி குறித்து தீர்வு காணக்கூடிய ஒரு விவகாரம் அல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு அவர் அரசியல் அனுபவம் இல்லாதவர் அல்ல என்றபோதிலும், அவ்வாறு தன்னை ஒரு பொருந்தாத் தன்மைக்கு ஏன் உட்படுத்தினார் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை. பாராளுமன்ற கட்சிகளின் அந்த மகாநாட்டில் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்த போதிலும் அதில் முன்னேற்றம் காணமுடியாமல் போய்விட்டது. அதனால் மகாநாட்டில் தொடர்ந்தும் பங்கேற்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு அந்த கட்சிகள் வந்தன. தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை,விக்கிரமசிங்கவின் முயற்சிகளின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் அல்ல, அவரின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற பழி தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மகாநாட்டில் பங்கேற்பதற்கு முன்வந்ததாக வெளிப்படையாகவே கூறத்தவறவில்லை. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் உரையாற்றிய விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த தனது அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று அறிவித்தார். அவரின் அந்த ‘ தைப்பொங்கல் பிரகடனத்துக்கு ‘ தென்னிலங்கையில் குறிப்பாக மகாசங்கம் மற்றும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முன்னைய ஜனாதிபதிகளில் எவருமே 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதால் விக்கிரமசிங்கவும் அவர்களைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும் என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக அவருக்கு கடிதம் எழுதினர். அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை முன்னென்றும் காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்ற விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல் வாதிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எச்சரிக்கை செய்தனர். கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கிய ஜனாதிபதி சுதந்திர தினத்தன்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையிலும் பெப்ரவரி 8 பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து நிகழ்த்திய கொள்கைவிளக்க உரையிலும் 13 வது திருத்தத்தை பற்றி வாய்திறக்கவேயில்லை. கொள்கைவிளக்க உரையை அவர் நிகழ்த்திக்கொண்டிருந்தபோது பாராளுமன்றத்துக்கு அண்மையாக கூடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பிக்குமார் 13 வது திருத்தத்தின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியதைக் கண்டோம். அரசியலமைப்பில் ஏற்கெனவே இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற முறையில் தனக்கு இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று கூட்டத்தில் கூறிய விக்கிரமசிங்க, ஒன்றில் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதை இல்லாதொழிக்கவேண்டும் என்று அதை எதிர்க்கும் சிங்கள அரசியல்வாதிகளைப் பார்த்துக் கூறினார். அந்த திருத்தத்தை இல்லாதொழிக்க பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச்சட்ட மூலத்தை தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரலாம் என்று யோசனை சொல்லிக்கொடுத்தார். சிங்கள தேசியவாத சக்திகளைப் பொறுத்தவரை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு குறிப்பாக 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை கிடையாது என்பதும் அவ்வாறு அவர் செய்யவிரும்பினால் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் மக்களிடம் புதிய ஆணையைப் பெறவேண்டும் என்பதுமே நிலைப்பாடாக இருக்கிறது. கடந்த வாரம் கூட ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்களுக்கு நிவாரணங்களை அளிக்கவுமே விக்கிரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக பாராளுமன்றத்தின் மூலம் தெரிவுசெய்ததாக கூறியிருந்தார். சிங்கள பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் மூலமாக ராஜபக்சாக்கள் கட்டியெழுப்பிய ஒரு கட்சியின் பாராளுமன்ற ஆதரவில் தனது ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஜனாதிபதி எந்த நம்பிக்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் முயற்சிகளை முன்னெடுக்கத் தைரியம் கொண்டார் என்பது புரியவில்லை. ஜெயவர்தனவும் அவருக்கு பிறகு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளும் வெறுமனே மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்தினார்களே தவிர 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகள் முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த ஒருபோதும் முன்வந்ததில்லை. மாறாக இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதில்தான் அவர்கள் அக்கறையாக இருந்தார்கள் எனலாம். ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிய பின்னர், ராஜீவ் காந்தி பற்றி அவரின் நெருங்கிய சகாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு வைபவத்தில் கலந்துகொள்ளச் சென்ற முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க அதை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் இந்திய அரசாங்கத்தினால் கூட இலங்கை ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவையும் கடந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் வாயிலாக அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமூகத்தின் ஒரு வலியுறுத்தலாக மாறிய பின்னரும் கூட இலங்கை அரசாங்கங்கள் அவற்றின் போக்கை மாற்றவில்லை. அதேவேளை, முன்னைய ஜனாதிபதிகளைப் போலன்றி 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கூடுதலானளவுக்கு வெளிப்படையாகப் பேசுகின்ற விக்கிரமசிங்கவினால் கூட நிலைவரத்தில் நேர்மறையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. தனது முயற்சிகளுக்கு எதிரான சிங்கள தேசியவாத சக்திகளின் நெருக்குதல்களின் விளைவாக அவர் தனது முன்னைய நிலைப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து வியூகங்களை வகுக்கும் அவர் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பெரிய நகர்வுகளைச் செய்வது சாத்தியமில்லை என்பது தெளிவானது. அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னதாக ஜூலை 18 தமிழ்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசிய விக்கிரமசிங்க தேசிய நல்லிணக்கம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்த 16 பக்கங்கள் கொண்ட திட்டத்தை சமர்ப்பித்து பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் யோசனையை முன்வைத்தார். அதை திட்டவட்டமாக நிராகரித்த தமிழ்க்கட்சிகள் ‘ அபிவிருத்திக்கும் அதிகாரப்பரவலாக்கலுக்குமான ‘அவரது யோசனையை’ இன்னொரு வெற்று உறுதிமொழி ‘ என்று வர்ணித்தன. அரசியலமைப்பில் ஏற்கெனவே இருப்பதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராயில்லையானால், 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்கும், அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கும் அதற்கு அரசியல் விருப்பமோ துணிவாற்றலோ இல்லை என்பதே உண்மையாகும் என்றும் தமிழ்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. தங்களால் இனிமேலும் ஏமாறமுடியாது என்று இரா. சம்பந்தன் அவர்கள் நேரடியாகவே ஜனாதிபதியிடம் கூறவும் தவறவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடன் பேசவிரும்பினால் பேசலாம் அல்லது வெளியேறிச் செல்லலாம் என்று ஆவேசமாகக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் யோசனையை தமிழ்க்கட்சிகளுக்கு முன்வைத்ததன் மூலம் தற்போதைய சூழ்நிலையில் தன்னால் செய்யக்கூடியதாக இருப்பதைப் பற்றிய செய்தியை தனது புதுடில்லிக்கு விஜயத்துக்கு முன்னதாக இந்திய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தினார். புதுடில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் எமது இனப்பிரச்சினை மற்றும் உத்தேச தீர்வு குறித்து பின்வருமாறு கூறினார் ; ” தமிழர்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்துக்கான செயன்முறையை முன்னெடுக்கும் என்றும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் கௌரவத்துடனும் கண்ணியத்துடனுமான வாழ்வை உறுதிப்படுத்தும் என்றும் நம்புகிறோம்.” அதற்கு பதிலளித்த விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக அந்த வாரம் தன்னால் முன்வைக்கப்பட்ட பரவலாக்கம் மற்றும் வடக்கு அபிவிருத்தி திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் ஊடாக நல்லிணக்கத்தையும் அதிகாரப்பகிர்வையும் முன்னெடுப்பதற்கான யோசனைகளை இந்திய பிரதமருடன் பகிர்ந்துகொண்டதாக கூறினார். “இந்த முன்னெடுப்புகள் தொடர்பில் கருத்தொருமிப்பைக் கண்டு தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதை நோக்கி பணியாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். அதற்கு பிறகு பொருத்தமான அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் ” என்றும் அவர் கூறினார். இந்த முயற்சிகளுக்கான தனது ஒருமைப்பாட்டையும் நல்லெண்ணத்தையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தியதாக அவர் முன்னிலையில் செய்தியாளர்களுக்கு விக்கிரமசிங்க தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து விசேட செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் வினாய் குவாட்ரா தமிழ்ச் சமூகத்தின் அபிலாசைகளை, ஐக்கியப்பட்டதும் சுபிட்சமுடையதுமான இலங்கை கட்டமைப்புக்குள் சமத்துவம்,நீதி மற்றும் சுயமரியாதைக்கான அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசியல் தீர்வை இந்தியா தொடர்ந்து எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டார். “அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கமும் 13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படு்த்தலும் இலங்கையில் நல்லிணக்கச் செயன்முறையை வசதிப்படுத்துவதற்கு அவசியமான அம்சங்கள் என்ற எமது நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார். இதுவே எமது உறுதியான நிலைப்பாடாக இருந்துவருகிறது. இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது முன்வைக்கப்பட்டது ” என்றும் வெளியுறவு செயலாளர் கூறியிருந்தார். ஆனால், விக்கிரமசிங்கவின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட எந்தவொரு எழுத்துமூல ஆவணத்திலும் இந்த விடயங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதை சுட்டிக்காட்டி ஆசிரிய தலையங்கம் தீட்டிய இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து ‘ விக்கிரமசிங்க டில்லியில் வெளியிட்ட கருத்துக்களிலோ அல்லது கூட்டு அறிக்கையிலோ இந்த முக்கிய விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாதமையே இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் மூலமான முக்கியமான செய்தியாக இருக்கக்கூடும் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்சினை தொடர்பிலான வரலாற்று ரீதியான அக்கறைகளை இந்திய அரசாங்கம் கொண்டுவருவதை இனிமேலும் கொழும்பு வரவேற்கப்போவதில்லை என்பதே பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு கூறும் மிகப்பெரிய செய்தி என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. அதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எதிர்காலத்துக்கான எந்தவொரு நோக்கும் இனப்பிரச்சினைக்கு இணக்கமான ஒரு தீர்வை உள்ளடக்காத பட்சத்தில் பூரணத்துவமானதாக இருக்கப்போவதில்லை என்று கூறிவைக்கவும் ‘இந்து ‘ தவறவில்லை. இதை வெறுமனே ஒரு பத்திரிகையின் கருத்தாக மாத்திரம் நோக்கிவிடமுடியாது. தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவிடம் இருந்து இனிமேலும் நெருக்குதல்களோ அல்லது நல்லெண்ண அடிப்படையிலான வேண்டுகோள்களோ வருவதை இலங்கை ஆட்சியாளர்கள் இனிமேல் விரும்பமாட்டார்கள் என்ற ஒரு கசப்பான புரிதல் இந்திய அரசின் உயர்மட்டத்தில் ஏற்படத் தொடங்கியிருப்பதன் ஒரு பிரதிபலிப்பாகவே நோக்கவேண்டியிருக்கிறது. இலங்கை திரும்பிய கையோடு கடந்த வாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்க பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டினார். தேசிய நல்லிணக்கத் திட்டத்தையும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டத்தையும் ஆராய்ந்து கருத்தொருமிப்புக்கு வருவதே மகாநாட்டின் நோக்கமாக கூறப்பட்டாலும் 13 வது திருத்தம் தொடர்பில் தற்போது தோன்றியுள்ள சர்ச்சையை கையாளுவதே அதன் உண்மையான நோக்கமாகும். அந்த திருத்தத்தை அதுவும் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் நீங்கலாக நடைமுறைப் படுத்துவதாக இருந்தாலும் பாராளுமன்றத்தின் ஆதரவுடன்தான் தன்னால் செய்யமுடியும் என்பதே மகாநாட்டில் ஜனாதிபதி வெளிப்டுத்திய கருத்துக்களின் மூலமான செய்தியாகும். அதேவேளை தமிழ்க்கட்சிகள் உட்பட எதிரணிக்கட்சிகளின் தலைவர்கள் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தவேண்டும் என்று விடுத்த கோரிக்கை ஜனாதிபதிக்கு ஆவேசத்தை ஏற்படுத்தியது. ஒன்றில் அதிகாரப் பரவலாக்கத்தைப் பற்றி பேசவேண்டும் அல்லது மாகாணசபை தேர்தல்களைப் பற்றி பேசவேண்டும். இரண்டையும் ஒன்றாக பேசமுடியாது என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது. உண்மையில் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் பற்றி அவர் சிந்திக்கத் தயாராக இல்லை. இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நோக்கும்போது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, பொலிஸ் அதிகாரம் உட்பட பல அதிகாரங்கள் இல்லாமல் கூட அதை நடைமுறைப்படுத்துவதும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. கறுப்பு ஜூலைக்கு பிறகு 40 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கையில் அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒரேயொரு சட்டரீதியான ஏற்பாடாக இருந்துவரும் அந்த திருத்தத்தின் இலட்சணம் இவ்வாறாக இருக்கிறது. தமிழர்களுக்கு எவற்றைக் கொடுக்கக்கூடாது என்பதில் தென்னிலங்கையில் சிங்கள அரசியல் சமுதாயத்திற்குள் ( பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ) ஒரு கருத்தொருமிப்பு காணப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு எது தேவை என்பதை கேட்பதில் ஒருமித்து நிற்க முடியாததாக தமிழ் அரசியல் சமுதாயம் சிதறுண்டு காணப்படுகிறது. இந்தியாவினாலும் கூட எதையும் செய்ய இயலாமல் போயிருக்கும் நிலையில், மிகவும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் சமுதாயத்துக்கு இருக்கக்கூடிய மாற்று வழி என்ன என்ற கேள்வி முன்னால் வந்து அச்சுறுத்துகிறது. https://arangamnews.com/?p=9878
  9. ஜூலை 83 தமிழின அழிப்பு: 40 ஆண்டுகளின் பின்னரும் கூட அதற்கு வழிகோலிய மூல காரணங்கள் இன்னும் கவனத்தில் எடுக்கப்படவில்லை Photo, SRILANKA GUARDIAN 2023 ஜூலை 23ஆம் திகதி 1983 ஜூலை இன அழிப்பின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் நமது தேசத்தின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட யுகத்தின் பூதாகரமான ஒரு நிழலாக வியாபித்திருப்பதுடன், அதனையடுத்து இடம்பெற்ற நீண்ட உள்நாட்டுப் போரில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. இந்த வன்முறைக்கான விதைகள் நீண்ட காலத்துக்கு முன்னரேயே விதைக்கப்பட்டிருந்தன. 1956, 1958, 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981 ஆகிய வருடங்களையும் உள்ளடக்கிய விதத்தில் 1983 வரையில் தமிழர்களுக்கெதிரான பகைமையுணர்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருந்தது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் கீழான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வடக்கிலும், கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியையும் ஒடுக்குவதற்கு முயற்சித்தது. இந்தக் கொடூர உத்தியின் விளைவாக சுமார் 200,000 மக்கள் (பெரும்பாலும் சிவிலியன்கள்) உயிரிழந்தார்கள். வன்முறைச் சம்பவங்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் இடம்பெயர்ந்ததுடன், அவர்கள் தமது சொந்த நாட்டிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக மாறினார்கள். இந்தச் சம்பவங்களின் பின்னர் பெருந்தொகையான குடும்பத் தலைவிகள், பெற்றோரை இழந்தோர் மற்றும் உடல் ரீதியான, உள ரீதியான காயங்களைக் கொண்ட தனிநபர்கள் பெரும் எண்ணிக்கையில் எஞ்சியிருந்தார்கள். பெண்கள் மற்றும் பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் பல கிராமங்கள் முற்று முழுவதும் நிர்மூலமாக்கப்பட்டன. சிறப்புச் சலுகையுடன் கூடிய சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை ஏனைய குடிமக்கள் மீது பிரயோகிக்கும் நோக்கத்துடனேயே இவை அனைத்தும் முன்னெடுக்கப்பட்டன. இப்பொழுது 40 வருடங்கள் கழிந்திருக்கும் நிலையிலும் கூட, ஒன்றன் பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசியல் கூட்டணிகளுடன் கூடிய அரசாங்கங்கள் இந்த வன்முறையைத் தூண்டிய தேசிய பிரச்சினையின் மூல காரணங்களை கவனத்திலெடுக்கத் தவறியுள்ளன. இந்த இன அழிப்பின் பின்னணியிலிருந்த காரணங்களைப் புரிந்துகொள்ளும் பொருட்டு பெரும்பான்மை சாராத சமூகங்களுக்கு – குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு – எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரபட்ச இயல்பிலான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றை எடுத்து விளக்கும் சுருக்கமான ஒரு வரலாற்றுக் குறிப்பை வழங்குவது அவசியமாகும். பத்து இலட்சம் மலையகத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்த 1948ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமை மசோதாவுடன் பாரபட்சம் காட்டும் கொள்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. குடியுரிமை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாக அது சமர்ப்பிக்கப்பட்டிருந்த அதேவேளையில், அந்த மசோதாவின் உண்மையான நோக்கம் பிரதானமாக இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வந்த இந்தத் தொழிலாளர்களின் குடியுரிமையை மறுப்பதாகும். பல தலைமுறைகளைச் சேர்ந்த மலையகத் தொழிலாளர்கள் நாட்டுக்கு வழங்கிய பொருளாதார பங்களிப்புக்கள் உதாசீனப்படுத்தப்பட்டது. அவர்கள் வழங்கி வரும் பங்களிப்பு இது வரையில் உரிய விதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. அரசு வன்முறைக்கூடாக தமிழர்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டமை தமிழர்களின் குடித்தொகையிலும், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும் ஒரு குறைவை எடுத்து வந்தது. இது சிங்கள மேட்டுக்குடியினர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளித்ததுடன், தம்மை மிகவும் மோசமாகப் பாதித்த கொள்கைகளைத் தடுப்பதற்கு அதிகாரமற்ற ஒரு சமுதாயமாக தமிழர்கள் கைவிடப்பட்டிருந்தார்கள். தெற்கில் அரசியல் போட்டி தீவிரமடைந்து வந்த நிலையில் தமது இன, மொழி மற்றும் சமயப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு சமூகங்களை வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கும் ஒரு போக்கு தோன்றியது. இந்தப் பிரிவினை இன்று வரையில் தொடர்ந்து நிலவி வருவது கவலைக்குரியதாகும். எஸ்.டப்பிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் என்பவற்றினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட 1956 இன் சிங்களம் மட்டும் கொள்கை வரலாற்று ரீதியாக ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களத்தை எடுத்து வந்ததுடன், உத்தியோகபூர்வ பாவனையிலிருந்து தமிழ் மொழியை வெளியேற்றியது. ஏற்கனவே பலர் விருப்பத்துடன் பாடசாலைகளில் சிங்கள மொழியைக் கற்றிருந்த போதிலும், இந்த நகர்வு தமிழர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் என்பவற்றுக்கு சிங்கள மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எடுத்து வந்தது. மேலும், அது சிங்கள மக்களை ஒரு மொழியை மட்டும் பயன்படுத்துபவர்களாக ஆக்கியதன் மூலம் பிரதிகூலமான ஒரு நிலைக்குள் தள்ளியது. மேட்டுக்குடியினர் அல்லாத பல தலைமுறைகளைச் சேர்ந்த சிங்களவர்கள்; சமூகத்தில் மேல் நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக்களை அது வரையறை செய்தது. பண்டாரநாயக்க – செல்வநாயகம் மற்றும் டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தங்கள் போன்ற அரசாங்கத்துக்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையில் நல்லிணக்கத்தை எடுத்து வருவதற்கான முயற்சிகள் தீவிர சிங்கள பௌத்த தேசியவாத அழுத்தங்கள் காரணமாக இறுதியில் கைவிடப்பட்டன. இந்தக் கால கட்டம் நெடுகிலும் சிங்கள மக்கள் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்பட்டு வந்தனர். இது சிங்கள ஆதரவு தேர்தல் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் குடிசனவியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிகோலியது. பண்டாரநாயக்க ஆட்சி 1950 களில் தமிழர்களின் அஹிம்சை வழியிலான எதிர்ப்புக்களை அடக்குவதற்கென கும்பல் வன்முறையைப் பயன்படுத்தியது. 1958 கும்பல் வன்முறை காரணமாக சுமார் 300 மரணங்கள் இடம்பெற்றன. சிங்கள பௌத்தத்துக்கு சாதகமான 1972 இன் புதிய அரசியல் யாப்பு மற்றும் கல்வியை தரப்படுத்துவது தொடர்பான கொள்கையின் அறிமுகம் என்பன பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு மேலும் பாரபட்சத்தை எடுத்து வந்திருந்தன. இந்தப் பாரபட்ச இயல்பிலான வழிமுறைகள் வன்முறையுடன் கூடியதான ஒரு சூழலில் அமுல் செய்யப்பட்டன. இதனை ஒரு சாக்காகக் கொண்டு பண்டாரநாயக்க அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதுடன், தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தை சேவையில் அமர்த்தியது. தீவிரவாத கூறுகள் அகற்றப்பட வேண்டுமென்றும், அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டாவது இதனை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேர்ணல் ரிச்சர்ட் உடுகம கண்டிப்பான விதத்தில் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். 1972 இன் சிங்கள பௌத்த ஆதரவு அரசியல் யாப்பிற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கறுப்புக் கொடி காட்டிய பொழுது அவசரகால சட்ட விதிகளின் கீழ் அவர்கள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். 1977 ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆறு மாத காலத்துக்குள் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிய வேண்டுமென்ற கட்டளையுடன் பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தது. 1980 களுக்கு முற்பட்ட காலப் பிரிவின் போது வடக்கிலும், கிழக்கிலும் நிகழ்த்தப்பட்ட பெருந்தொகையான அட்டூழியச் செயல்களுக்கு உடுகம மற்றும் வீரதுங்க ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனைக் காட்டும் நம்பகமான சான்றுகள் கிடைத்துள்ளன. அதன் விளைவாக, தமிழ் மக்கள் எதிர்கொண்டு வந்த பாரபட்சம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தமிழ் அரசியல் கட்சிகளினால் தீர்த்து வைக்க முடியவில்லை. தெற்கில் 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்டது. வடக்கிலும், கிழக்கிலும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி வட்டுக்கோட்டை பிரகடனத்தை வாக்காளர்கள் முன்னால் எடுத்துச் சென்று, தமிழ் ஈழம் எனப்படும் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை தமக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது. அதனையடுத்து அவர்களுக்கு அமோகமான ஒரு மக்களாணை கிடைத்தது. தேர்தலுக்குப் பிற்பட்ட காலப் பிரிவின் போது தமிழ் குடிமக்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. அந்த வன்முறைச் சம்பவங்கள் அரச அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட காரணத்தினால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வடக்கை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தின் மீதான முதலாவது தாக்குதல் 1981 அக்டோபர் மாதம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனத்துவ பயங்கரவாதம் காரணமாக பதவியுயர்வு பெற்று, புதிய இராணுவ கமாண்டராக பதிவியேற்ற திஸ்ஸ வீரதுங்கவை வரவேற்பதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிவகுப்பு மரியாதையுடன் இணைந்த விதத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது போல் தெரிந்தது. அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் விதத்தில் இராணுவ வாகனத் தொடரணிகள் மற்றும் ரோந்துப் படையணிகள் என்பவற்றை இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்தன. பாதுகாப்புப் படையினரால் தாக்குதல் தொடுக்கும் நபர்களை தேடிப் பிடிக்க முடியாதிருந்த காரணத்தினால் அவர்கள் சிவிலியன்களை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் புதியவை அல்ல. உலகளாவிய ரீதியில் பல மோதல்களின் போது தாக்குதல் தொடுப்பவர் யாராக இருந்தாலும் வன்முறையின் விளைவுகளை பெருமளவுக்கு சிவிலியன்களே ஏற்க வேண்டியிருந்தது என்பதனை வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இலங்கையில் நிகழும் சம்பவங்களுக்குப் பதிலடியாக தமிழ் இளைஞர்கள், தமக்குத் தோல்வியை எடுத்து வந்த வாக்குச் சீட்டுக்களுக்குப் பதிலாக ஆயுதங்களை ஏந்தத் தொடங்கினார்கள். தீவிரவாத தமிழ் இளைஞர்களின் நோக்கம் தாம் உள்ளாக்கப்பட்டிருந்த பாரபட்ச நிலையிலிருந்து தமது மக்களை விடுவிப்பதாகவே இருந்து வந்தது. சமூகங்களை இன, மொழி மற்றும் சமயப் பிரிவினைகளின் அடிப்படையில் பிரித்து வைப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுப்பதில் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கை/ ஸ்ரீ லங்கா தோல்வியடைந்திருந்த நிலைமை காரணமாகவே தமிழ் இளைஞர்கள் அவ்விதம் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள். 1981 இல் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்துடன் இணைந்த விதத்தில் நிலைமை மேலும் மோசமடைந்தது. அது 1983 ஜூலையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு வழிகோலியது. இந்த வன்முறை தமிழ் சிவிலியன்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் விளைவாக ஆயிரக்கணக்கான மரணங்கள், இடப்பெயர்வுகள், காயங்கள் மற்றும் வன்புணர்வுகள் என்பன நிகழ்ந்தன. மேலும், அம்மக்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. அரசாங்கம் இதற்கான பழியை வேறு தரப்புக்களிடம் போட முயற்சித்தது. ஆனால், இந்த வன்முறை சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்குள் இருந்த இனத்துவ தீவிரவாதத் தலைமைத்துவம் 1983 ஜூலை கலவரங்களைத் திட்டமிட்டு நிகழ்த்தியதன் மூலம் ஏற்கனவே கொந்தளிப்பாக இருந்து வந்த நிலைமையை மேலும் மோசமாக்கியது. அக்கலவரங்கள் சிறில் மெத்தியூ போன்ற அமைச்சர்கள், எல்லே குணவங்ச தேரர் போன்ற மதகுருக்கள் ஆகியோரினால் மிகவும் நுட்பமான விதத்தில் திட்டமிடப்பட்டிருந்தன. எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதி ஜயவர்தன மற்றும் ஏனைய சிங்கள தீவிரவாதிகள் ஆகியோரின் ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்தார். மெத்தியூ போன்ற அமைச்சர்கள் தமது சொந்த ஆயுதக் குழுக்களை பராமரித்து வந்ததுடன், சட்டத்துக்கு அப்பால் அவர்கள் செயற்பட்டு வந்தார்கள். இன்னமும் அத்தகைய நிலைமைகள் நிலவி வருவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். எவ்வாறிருப்பினும், இன அழிப்பின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம் வாய்ந்த இயக்கமாக வளர்ச்சியடைந்ததுடன், இன அழிப்பு காரணமாக தென்னிலங்கையிலிருந்து தப்பிச் சென்ற பெருந்தொகையான இளைஞர்கள் அந்த இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள். சமூகங்களுக்கிடையிலான நிலவரம் அப்போது ஒரு வெடி மருந்து கிடங்கு போல் இருந்து வந்தது. ஒரு தீக்குச்சியை கொளுத்துவதே செய்ய வேண்டியிருந்த ஒரே காரியமாக இருந்து வந்தது. இதற்கான பொறி 1983 மே மாதம் கிடைத்தது. ஒரு இராணுவ வாகன அணி மீது மறைந்திருந்து நிகழ்த்தப்பட்ட ஒரு தாக்குதலை அடுத்து பாதுகாப்புப் படையினர் கடும் அட்டூழியங்களை நிகழ்த்தினார்கள். யாழ்ப்பாண தீபகற்பத்தின் பல்வேறு இடங்களில் அவர்கள் 51 அப்பாவி தமிழ் சிவிலியன்களை கொலை செய்தார்கள். ஜூன் மாதம் இடம்பெற்ற அத்தகைய ஒரு தாக்குதலின் போது வவுனியாவில் கடற்படை அதே விதத்தில் பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டது. தமிழ் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதற்கான இறுதித் தீர்வை அரசாங்கம் அமுல் செய்யப் போகின்றது என்ற விதத்திலான வதந்திகள் கொழும்பில் பரவியிருந்தன. திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மறைந்திருந்து நிகழ்த்திய ஒரு தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது அந்தத் திட்டத்தைத் துவக்கி வைப்பதற்கான வாய்ப்பு அரசாங்கத்துக்குக் கிடைத்தது. அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், வடக்கில் செயற்பட்டு வரும் அதனையொத்த ஏனைய இயக்கங்களையும் தடை செய்தது. தொடக்கத்தில் அவசரகால சட்டங்களின் கீழ் 1983 ஜூலை மாதத்தில் தெற்கில் ஜே.வி.பி, நவ சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என்பனவும் தடை செய்யப்பட்டன. பின்னர் அத்தடை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இச்சட்டம் கைது செய்யப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அவ்விதம் கைதுசெய்யப்பட்டவர்களை குற்றப் பத்திரிகையோ அல்லது வழக்கு விசாரணையோ இல்லாமல் பதினெட்டு மாதங்கள் வரையில் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய வாய்ப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தது. மேலும், சித்திரவதையின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட குற்ற வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்கத்தக்கவையாகவும் ஆக்கப்பட்டது. தமிழ் மக்களை சரணடையச் செய்வதற்கு நிர்ப்பந்திப்பதற்கென அம்மக்கள் மீது தொடர்ந்தும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை என்பவற்றை கட்டவிழ்த்து விடுவதே அரசின் கொள்கையாக இருந்து வந்தது. தமிழ் மக்களுக்கெதிரான 1983 இன அழிப்புக்குத் தலைமைத்துவம் வழங்கியதாக ஒரு போலிக் குற்றச்சாட்டின் பேரில் நான் தவறான விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அதற்கு முன்னர், கொழும்பிலிருந்த பல ஜே.வி.பி. தோழர்கள் இன அழிப்பின் போது என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு விளக்கமளித்திருந்தார்கள். தமிழர்கள் வாழும் இடங்களைக் கண்டறிந்து கொள்வதற்காக வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்துதல், தாக்குதல்களுக்கென கும்பல்களை அணி திரட்டுதல் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் என்பவற்றுக்குச் சொந்தமான வாகனங்களில் அவர்களை அந்தந்த இடங்களுக்கு எடுத்துச் சென்றமை போன்ற விடயங்கள் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. கொழும்பு வீதிகளில் அத்தகைய கும்பல்கள் செய்த காரியங்களை தனிப்பட்ட ரீதியில் பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த இன அழிப்பின் போது ஐயாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தமிழ் சிவிலியன்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதுடன், பல நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்ததுடன், சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது ஒரு சிலர் கொல்லப்பட்டார்கள். கும்பல்கள் ஒரு சில தமிழ் மக்களை உயிருடன் எரித்தன. பல நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களின் வீடுகள், வியாபாரங்கள் மற்றும் கைத்தொழில்கள் போன்ற சொத்துக்கள் தாக்கி அழிக்கப்பட்டதுடன், பாதுகாப்புப் படையினரின் கண்களுக்கெதிரிலேயே அவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வணிகத் துறை தலைவர்கள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் ஏனையோர் ஆகியோரை உள்ளடக்கிய 200,000 க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் இடம்பெயர நேரிட்டதுடன், வேறிடங்களில் அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்கள்; அவர்களில் ஒரு சிலர் இன்னமும் இந்திய அகதி முகாம்களில் மிகவும் வசதிகளற்ற நிலைமைகளின் கீழ் வாழ்ந்து வருகின்றார்கள். அரசியல் யாப்புக்கான ஆறாவது திருத்தம் நிரூபித்துக் காட்டியதைப் போல அரசாங்கம் தொடர்ந்தும் அதிகளவில் எதேச்சாதிகார இயல்பையும், பொறுப்புக் கூறாத இயல்பையும் முன்னெடுத்து வந்தது. இந்த ஆறாவது திருத்தம் தமிழீழம் தொடர்பான கோரிக்கையை சட்ட விரோதமான ஒரு செயலாக ஆக்கியதன் மூலம் நாடாளுமன்றத்திலிருந்த தமிழ் தலைவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. கறுப்பு ஜூலை 1983 நிகழ்வை அதன் போர் முயற்சியை தீவிரப்படுத்துவதற்கும், சட்டபூர்வமாக்குவதற்கும் அரசினால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஒரு முயற்சியாக நோக்க முடியும். இந்த இன அழிப்பின் பின்னர் வடக்கு கிழக்கில் அடிக்கடி தொடர்ச்சியாக கொடூரமான சம்பவங்கள் நிகழத் தொடங்கின. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009 மே மாதம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதுடன் இணைந்த விதத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், போருக்கு வழிகோலிய காரணங்கள் இன்னமும் அதே விதத்தில் இருந்து வருகின்றன. இனப் படுகொலையைத் தடுத்தல் மற்றும் அதற்கு தண்டனையளித்தல் தொடர்பான ஐ.நா. சமவாயத்தில் இலங்கையும் கையொப்பமிட்டிருக்கின்றது. இந்தச் சமவாயம் இனப் படுகொலை என்பதற்கு ஒரு தேசிய இனத்துவ, இன அல்லது சமயக் குழுவை முழுமையாக அல்லது ஒரு பாகமாக அழிப்பதனை நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் ஒரு செயல் என வரைவிலக்கணம் வழங்குகிறது. இலங்கையில் இனப் படுகொலை இடம்பெறவில்லை எனக் கூறுபவர்கள் அதனை பொய்யென நிரூபித்துக் காட்டுவதற்கு எவையேனும் விடயங்களையோ அல்லது சம்பந்தப்பட்ட வாதங்களையோ ஒருபோதும் முன்வைத்திருக்கவில்லை. இந்த வரைவிலக்கணம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை; ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, அரச சிறைக்கூடங்களில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழ் மக்களின் கலாசார சமய அடையாளங்கள் அழிக்கப்பட்டமை, வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள் விநியோகத்தைத் தடுக்கும் நோக்கிலான பொருளாதார தடைகள் போன்ற அமுல் செய்யப்பட்ட கொள்கைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட செயன்முறைகள் என்பவற்றின் நோக்கம் இங்கு கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். 1983 ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட தமிழர் இன அழிப்பு மற்றும் அதன் பின்னர் அரசினால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படாத செயல்கள் என்பனவும் அந்த விவரணத்தின் கீழ் வருகின்றன. ஜனாதிபதி ஜயவர்தனவும், அவருடைய அரசாங்கமும் இன அழிப்புக்கான பழியை சிங்கள மக்கள் மீது போட்டாலும் கூட, தீவிரவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைக் கும்பல்களின் தாக்குதல்களை எதிர்கொண்ட மக்களுக்கு தஞ்சமளிப்பதற்கும், அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பதற்கும் தமது உயிரைப் பணயம் வைத்து பல சிங்களவர்கள் முன்வந்திருந்தார்கள். தேசிய தீவிரவாதிகள் இந்த வன்முறைக்கு ஆதரவளித்திருக்க முடியும்; ஆனால், பெரும்பாலானவர்கள் எதனையும் செய்ய முடியாத நிலையில் வெறும் பார்வையாளர்களாக இருந்து வந்தது போல் தெரிகிறது. எவ்வாறிருப்பினும், இந்த வன்முறை சர்வதேச சமூகத்தின் – இந்தியா மற்றும் அதன் மக்களின் – கவனத்தை ஈர்த்தது. அரசாங்கத்தின் மீதான அவப் பெயர் அகற்றுவதற்கென அது ஒட்டுமொத்தமாக சிங்கள மக்கள் மீது அதற்கான பழியைப் போட்டதுடன், அதன் பின்னர் ஒரு சில இடதுசாரி அரசியல் அமைப்புக்களையும் குறை கூறியது. இன அழிப்பின் காரணமாக பத்து இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் முக்கியமாக மேலைய நாடுகளில் குடியேறினார்கள். மருத்துவம், பொறியியல், கணக்கீடு, ஆசிரியர், சட்டம் மற்றும் வர்த்தகம் போன்ற பன்முக அறிவுத்துறைகளைச் சேர்ந்த தொழில்வாண்மை நிபுணர்களாக அவர்களில் பலர் இருந்தார்கள். அதன் விளைவாக, இலங்கை அதன் சமூக அபிவிருத்திக்கான அந்த மக்கள் பிரிவினரின் பங்களிப்புக்களை இழந்தது. இலங்கையின் இழப்புக்களிலிருந்து பல நாடுகள் பயனடைந்தன. தாம் புதிதாக குடியேறிய நாடுகளின் அபிவிருத்திக்கு அத்தகைய தொழில்வாண்மையாளர்கள் பரந்தளவிலான பங்களிப்பை வழங்கினார்கள். இலங்கை தமிழ் இளைஞர்கள் மட்டும் அத்தகைய நிலைமாற்றத்தை எதிர்கொண்டிருக்கவில்லை. சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களும் அரச பயங்கரவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். எனக்குத் தெரிந்த வரையில் கறுப்பு ஜூலை இன அழிப்பு அல்லது அதற்கு முன்னரும், பின்னரும் நாட்டின் பல்வேறு பாகங்களில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து வினைத்திறன் மிக்க புலன்விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கான அலுவலகம் போன்ற பெருந்தொகையான பொறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டன. அப்பொறிமுறைகள் ஒரு சில பிரச்சினைகளை ஓரளவுக்குக் கவனத்தில் எடுத்திருக்க முடியும். ஆனால், இந்த ஆணைக்குழுக்களினால் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இறுதியில் இப்பொறிமுறைகள் செயல்முடக்கமடைந்தன. ஆணைக்குழுக்களின் பக்கச்சார்பான உருவாக்கம், பல்வேறு அரசாங்கங்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட தலையீடுகள் என்பனவே இதற்கான காரணமாகும். அது தவிர, இன முரண்பாட்டின் ஒரு சில பிரச்சினைகளை கவனத்தில் எடுப்பதற்கென முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக ஓர் உதாசீன உணர்வும் காணப்பட்டது. நிபுணர்களைக் கொண்ட ஐ நா குழு, மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இந்தப் பொறிமுறைகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அவற்றின் வரையறுக்கப்பட்ட பணிப்பாணைகள், சுயாதீனம் குறைவாக இருந்த நிலை மற்றும் குறைந்தபட்ச சர்வதேச தரநியமங்களை நிறைவேற்றி வைக்கத் தவறியமை அல்லது சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறியமை போன்ற காரணங்களாலேயே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது 2017 பெப்ரவரி அவுஸ்திரேலிய விஜயத்தின் போது, மீண்டும் நாடு திரும்பி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவுமாறு புலம்பெயர் சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தான் ஓர் அமைச்சராக இருந்து வந்த 1980 களின் அரசாங்கம் முதலாவது தமிழ் தலைமுறையினருக்கும், இரண்டாவது சிங்கள தலைமுறையினருக்கும் நிகழ்த்திய சேதம் குறித்து அவர் அறிந்திருந்தாரா? அல்லது அது குறித்த ஒரு விளக்கத்தை கொண்டிருந்தாரா? இந்த இரு தரப்பினரும் தலைமுறைகளுக்கிடையிலான பேரதிர்ச்சியின் விளைவாக தமது தாய் நாட்டிலிருந்து வெளியேற நேரிட்டது. அந்தப் பேரதிர்ச்சி எதிர்கால தலைமுறையினருக்கும் கடத்தப்படுமா? அவர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டுமென அரசாங்கம் எவ்வாறு வெறுமனே கேட்டுக் கொள்ள முடியும்? இது அவர்கள் நாடு திரும்புவதற்கு உசிதமான நிலைமைகளை நாட்டில் உருவாக்குவதற்கென நிலவரங்களை கவனத்தில் எடுக்காது விடுக்கப்பட்ட ஒரு வேண்டுகோளாகும். பலர் அவ்விதம் நாடு திரும்புவதற்கான அவாவைக் கொண்டிருப்பதுடன், தமது தாய்நாட்டு மக்களுக்கு சேவையாற்றும் விருப்பினையும் கொண்டுள்ளார்கள். ஆனால், நாட்டு நிலவரங்கள் அவ்வாறு அவர்கள் திரும்பி வருவதற்கு உசிதமானவையாக இருந்து வரவில்லை. தமது இனத்துவம், மொழி மற்றும் சமயம் என்பன என்னவாக இருந்து வந்தாலும், அனைத்து மக்களும் ஒப்புரவுடனும், சமத்துவத்துடனும், கண்ணியத்துடனும் நடத்தப்படும் சகிப்புத்தன்மை, ஒத்துணர்வு, பத்திரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கொண்ட ஒரு சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை. அதே போல, அதற்கு உசிதமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார சூழலொன்று உருவாக்கப்படவுமில்லை. ஆயுதப் போராட்டத்தின் முடிவின் பின்னர் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அதன் மூலம் தமக்கு பொருளாதார பயன்கள் கிட்டும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், சமூக – பொருளாதார மற்றும் அரசியல் அனுகூலங்கள் பெருமளவுக்கு மேல்தட்டு மக்களை நோக்கிச் சென்ற காரணத்தினால் சாதாரண மக்களின் அத்தகைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை. இன அழிப்பு ஏற்படுத்திய சேதங்கள் தொடர்பாக அரசு முற்றுமுழுதாக நட்ட ஈடுகளை வழங்கவில்லை. இந்த இன அழிப்பு ஒரு பாரிய குடிசனவியல் நகர்வை தூண்டியதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வடக்கு கிழக்குக்கு வெளியில் மீள் குடியமர்ந்தார்கள். சுமார் 150,000 தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றார்கள். மீண்டும் ஒரு முறை எதேச்சாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சி என்பன தேசபக்தி என்ற போர்வையுடன் வெளியில் வந்திருக்கின்றன. அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் ஆகிய தரப்புக்கள் தற்போதைய பொருளாதார, கட்டமைப்பு ரீதியான, நிறுவன ரீதியான மற்றும் அரசியலமைப்பு ரீதியான சகதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதன் மூலம் இனத்துவ மற்றும் சமயப் பதற்ற நிலைமைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடு இருண்ட ஓர் எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளது. ஆளும் மேட்டுக்குடியினரும், அவர்களுடைய அடிவருடிகளும் மீண்டுமொரு முறை இலங்கையிலும், வெளிநாடுகளிலும் புதிய எதிரிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது சமூக நீதி, வெளிப்படைத்தன்மை, உச்ச மட்டத்தில் பொறுப்புக் கூறும் நிலை என்பவற்றைக் கொண்ட ஜனநாயக நல்லிணக்க தேசமொன்றின் மிக முக்கியமான பணியினை சாதித்துக் கொள்வதனை மேலும் சிரமமாக்கும். இந்த இருண்ட சித்திரத்தை எதிர்கொள்ளும் பொருட்டு இலங்கை மக்கள் 1983 ஜூலை இன அழிப்பு, அதன் பின்னர் இடம்பெற்ற பெரும் துயரச் சம்பவங்கள் மற்றும் தொடர்ச்சியான வன்முறை நிகழ்வுகள் என்பவற்றை ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும். அத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழ்வதைத் தடுக்கும் தேவையை இலங்கை பிரஜைகள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும். 1983 ஜூலை இன அழிப்பு தென்னிலங்கையில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு கடும் பாதிப்பை எடுத்து வந்தது. அவர்கள் தமிழர்களாக இருந்து வந்ததே அதற்கான ஒரேயொரு காரணமாகும். தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு மற்றும் ஏனைய பெரு நகர மையங்களில் தமிழர்களின் பொருளாதார அடித்தளத்தை நிர்மூலமாக்குவதும், அந்தப் பொருளாதார அடித்தளத்தை சிங்கள ஆளும் மேட்டுக்குடியினர், அவர்களுடைய தோழமைக் குழுக்கள் மற்றும் அடிவருடிகள் ஆகியோர் சட்ட விரோதமாக, கொடூரமாகக் கைப்பற்றச் செய்வதுமே இதன் நோக்கமாக இருந்து வந்தது. (அவ்வாறு சட்ட ரீதியாக செய்ய முடியுமாக இருந்தால்) தான் விரும்பும் எந்தவொரு இடத்திலும் ஒரு தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை நல்லிணக்கம் நிலவும் இலங்கையில் ஒவ்வொரு பிரஜையும் கொண்டிருத்தல் வேண்டும். இந்த இன அழிப்பு அடிப்படையில் – தமிழர்களாக, முஸ்லிம்களாக அல்லது செட்டி சமூகத்தினராக எந்த இனத்தவராக இருந்தாலும் – ஏனைய தேசிய இனங்களின் பொருளாதார வாழ்வாதாரங்கள் மற்றும் வணிகங்கள் என்பவற்றை அழித்தொழிப்பதற்கென சிங்கள ஆளும் மேட்டுக்குடியினரால் தொடுக்கப்பட்ட ஒரு பொருளாதார போர் தவிர வேறெதுவுமல்ல என்பதனை இங்கு குறிப்பிடுதல் வேண்டும். இந்த இன அழிப்பும், அதன் விரிவாக்கமாக சுமார் முப்பது வருடங்கள் நீடித்த ஆயுதப் போராட்டமும் தெற்கிலும், வடக்கிலும் தமிழர் பொருளாதார அடித்தளத்தை மேலும் நிர்மூலமாக்கின. எனவே, தமிழ் சமூகம் அதிகாரப் பகிர்வு, பன்முகப்படுத்தல் – பிரிவினை என்பவற்றைக் கூட – கோருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பேராசை, ஆற்றலின்மை, ஊழல் மற்றும் தீவிரவாதம் என்பவற்றின் ஒரு கூட்டு விளைவாக சுதந்திரத்தின் பின்னர் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. திருப்பிச் செலுத்த முடியாத கடன்களை அதிகரித்தளவில் பெற்றுக் கொள்ளும் நிலையுடன் இணைந்த விதத்தில் இலங்கை மேலும் மேலும் கடன் பொறிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருந்தாத அரசு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தருநர்கள் பெருந்தொகையினருடன் பல எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை அடகு வைத்திருக்கிறது. இலங்கை தற்பொழுது கடந்து செல்வதைப் போன்ற தற்காலிக மற்றும் குறுங்கால நிவாரண நிலைமைகளுக்கும் மத்தியிலும் கூட, அடிப்படை கட்டமைப்பு ரீதியான காரணங்கள் இன்னமும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்ந்தும் இலங்கையின் எதிர்காலத்தின் மீது அச்சமூட்டும் ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்கும். அரசு அதன் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் பொருளாதார நெருக்கடியையோ அல்லது தேசிய பிரச்சினையையோ தீர்த்து வைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். கொந்தளிப்புடன் கூடிய ஒரு சமூகச் சூழ்நிலையைப் பராமரித்து வருவது ஆளும் மேட்டுக்குடியினருக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும், அடிவருடிகளுக்கும் தமது வழமையான ஊழல் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கும். அறகலய மக்கள் இயக்கம் ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சகிப்புத்தன்மையுடன் கூடிய ஒரு சமுதாயம் என்பவற்றுக்கான பெரும்பாலான இலங்கை மக்களின் அபிலாசைகளின் ஒரு வெளிப்பாடாகும். ஆனால், அந்த அபிலாசைகளை சாதித்துக் கொள்ளும் விடயத்தில் அரசு பாரிய இடையூறுகளை கட்டியெழுப்பி வரும் நிலையில் அவை இன்னமும் நிறைவேறியிருக்கவில்லை. இந்நிலைமைக்கு மத்தியிலும் கூட, ஒரு சிறந்த, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைத் தேசத்துக்கென போராடுவதற்கு பல வாயப்புக்கள் இருந்து வருகின்றன. மக்களின் அபிலாசைகளை முறியடிப்பதற்கென ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசாங்கங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலனித்துவ கட்டமைப்புக்களை அழித்தொழிப்பதற்கு நாடும், அதன் பன்முகச் சமூகங்களும் ஒன்றாக இணையும் சந்தர்ப்பத்தில் அதனை சாதித்துக் கொள்ள முடியும். பொருளாதாரத்தின் இயல்பு மற்றும் அரசின் வடிவம் என்பவற்றின் அடிப்படையில் தம் மீது திணிக்கப்பட்டிருக்கும் அத்தகைய காலனித்துவ கட்டமைப்புக்களை அகற்ற வேண்டுமென மக்கள் தீர்மானித்தாலேயொழிய தொடர்ந்தும் எதிர்காலம் இருள்மயமானதாகவே இருந்து வர முடியும். பல்வேறு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், முரண்பாடுகளை தூண்டிய மூல காரணங்கள் போதியளவில் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. வரையறுக்கப்பட்ட பணிப்பாணைகளும், அரசியல் தலையீடுகளும் இது தொடர்பான முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன. தற்போதைய இனத்துவ மற்றும் சமய பதற்றங்களினால் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான சவால்களுடன் இணைந்த விதத்தில் இலங்கையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே இருந்து வருகின்றது. அரசாங்கத்தினால் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கான வசதியான ஒரு சாக்காக அத்தகைய பொறிமுறைகள் உருவாக்கப்பட்டனவா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. அனைத்து கட்சித் தலைவர்களும் உடன்படுமிடத்து அரசியல் யாப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்படும் என்ற தற்போதைய அரசாங்கத்தின் பிரகடனத்தை இந்தப் பின்னணியிலேயே கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இலங்கை பிரஜைகள் 1983 ஜூலை பேரனர்த்தச் சம்பவங்களை நினைவில் வைத்திருப்பதுடன், அத்தகைய வன்முறைச் சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். ஒரு சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் ஒன்றாக இணைந்து, பிரிவினை மற்றும் ஏற்றத்தாழ்வு என்பவற்றை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் காலனித்துவ கட்டமைப்புக்களை நிர்மூலமாக்க வேண்டும். சமூக நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறும் நிலை என்பவற்றுடன் கூடிய நல்லிணக்கம் நிலவும் தேசமொன்றுக்கான பாதையை நிர்மாணிப்பதற்கு இன, மொழி, மதப் பேதங்களை மறந்து அனைத்து பிரஜைகளினதும் ஒரு கூட்டு முயற்சி தேவைப்படுகின்றது. அந்த நிலையில் மட்டுமே இலங்கை பெருமளவுக்கு அனைவரையும் உள்ளடக்கிக் கொண்ட ஒரு தேசமாக, வளமார்ந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி உண்மையில் நகர்ந்து செல்ல முடியும். லயனல் போப்பகே https://maatram.org/?p=10974
  10. ‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு என்.கே. அஷோக்பரன் போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று. சித்திரவதை முகாம், யூதர்கள் விஷவாயு செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விஷவாயு அறைகளைக் கொண்டதும், சுவரோடு நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்படும் கொலைச் சுவரைக் கொண்டதுமான கொலைக்களம் அது. இன்று, அந்த முகாம் ஒஷ்விட்ஸ் ஞாபகார்த்த முகாமாக, வரலாற்றின் கொடுமையான பக்கங்களை, அடுத்து வரும் சந்ததிகள் அறிந்துகொள்வதற்காக, பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யூதர்களின் வெட்டப்பட்ட தலைமுடிகள், அவர்கள் கொண்டு வந்த பயணப் பெட்டிகள், அவர்களது உணவுத் தட்டுகள், தண்ணீர்க் கோப்பைகள், காலணிகள் என்பவை மாபெரும் மண்டப அளவிலான கண்ணாடிப் பெட்டிக்குள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு உள்ளமை எந்த உறுதியான இதயத்தையும் அதிர்ச்சியடைய வைக்கக்கூடியவை. அங்கு, அடைத்து வைக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம் அறைகள், உடனடித் தீர்ப்பு வழங்கப்படும் அறை, அதற்கடுத்து, சுட்டுக்கொல்லப்பட முன்பு உடைமாற்றித் தம்மைக் கழுவிக்கொள்வதற்கான அறை, அடுத்து காத்திருப்பு அறை, அதற்கு அப்பால் கொலைச் சுவர் என அந்த முகாமினூடாக நடக்கும் போதே, கால்கள் நடுங்கும்! ஒரு கட்டடத்தின் அடிப்பகுதியில் சில அறைகள்; அவைதான் விஷவாயு அறைகள் என அங்கிருந்த வழிகாட்டி சொன்னபோது, முதுகுத்தண்டினூடாக மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த முகாமினூடாக நடந்தபோது, ஏதோ பெரும் அவல ஓலச்சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருப்பதாகவே காதுகள் உணர்ந்தன. கண்டவை தந்த அதிர்ச்சியால் வந்த மனப்பிரம்மையாக அது இருக்கலாம். முதலாவது முகாமைப் பார்த்துவிட்டு வௌியே வந்தபோது, இரண்டாவது முகாமுக்குச் செல்லும் மனப்பலம் இருக்கவில்லை. இந்தச் சித்திரவதை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் (குழந்தைகள் உட்பட) புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வந்திருந்தவர்களில் சிலர், தமது மூதாதையர்களின் படங்களை அடையாளம்கண்டு, கண்ணீர் மல்கினார்கள். அது மனதை நொறுக்கும் காட்சியாக இருந்தது. அன்றைய தினம், மனம் உறக்கம் கொள்ளவில்லை; சிந்தனைகள் எங்கெங்கோ சென்றன. இன்று ஞாபகச் சின்னமாக மாறியிருக்கும் ‘ஒஷ்விட்ஸ் முகாம்’, எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு, வார்த்தைகளுக்குள் அடங்காது. நாஸிகளின் கொடுமைகள் பற்றி, பல ஆயிரம் பங்கங்களில் எழுதிய எழுத்தின் மூலம் உணரப்பட முடியாததை, அந்த ஞாபகச்சின்னம் உணர்த்தியது என்றால் அது மிகையல்ல. அந்த உணர்வு, நாஸிகளின் கொடுமைகள் பற்றிய உணர்வு மட்டுமல்ல; அது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எல்லா மனிதர்களின் மீதுமான உணர்வு; உலகில் இதுபோன்ற கொடுமைகள், இனி அரங்கேறவே கூடாது என்ற உணர்வு; அதனை உணர்வதற்கு யூதனாக இருக்க வேண்டியதில்லை; மனிதனாக இருந்தால் போதும். நிற்க! இன்று ஞாபகார்த்த இடமாக மாற்றப்பட்டுள்ள ஒஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் ஒரு கட்டடத்துக்குள் நுழையும் போது, ‘வாழ்வுக்கான காரணம்’ (The Life of Reason) எனும் நூலின் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா, தனது நூலில் எழுதியிருந்த, ‘வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், வரலாற்றை மீள அரங்கேற்றுவதற்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்’ என்ற வாசகம், அதன் வாசலில் எழுதப்பட்டிருந்தது. எத்தனை உண்மையான, பலம் மிக்க வசனம் அது. அன்று ஜேர்மனியை ஆண்ட, முதலாவது உலக யுத்தத்தில் தோல்வியடைந்த ஜேர்மனியை, சில தசாப்தங்களில் மீண்டும் உலகத்தோடு போரிடும் வல்லரசாக மாற்றிய நாஸிகளின் கொடுமைகளைப் பற்றி, இன்று ஜேர்மனியில் கற்பிக்கிறார்கள்; நாஸிகள் நாயகர்கள் அல்ல என்பதைக் கற்பிக்கிறார்கள்; அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளைப் பற்றி, சித்திரவதைகளைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். இதன் நோக்கம், இனி இதுபோல் ஒரு கொடுமை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுதான். யூதர்கள், உரோமானியர், நாடோடிகள் ஆகியோரை நாஸிகள் வெறுத்தார்கள். தூய ஜேர்மானிய இனத்தை, இந்த ‘அந்நியர்’கள் அசுத்தப்படுத்துவதாக பரப்புரை செய்தார்கள். அந்த வெறுப்பின் காரணமாக, அவர்களை சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பி, பட்டினிபோட்டு, கடும் வேலைகளைச் செய்யவைத்து, சித்திரவதைகளைச் செய்து, அவர்களைத் தமது மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு விலங்கைப் போல பயன்படுத்தி, சுட்டுக்கொன்று, விஷவாயு செலுத்திக் கொன்று என, நாஸிகள் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் வெறுப்பு. 1983இல், இலங்கையில் அரங்கேறிய ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் அடிப்படையும் வெறுப்புத்தான். உதாரணமாக, 1983 மே 19 ஆம் திகதி, ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் பிரசுரமான, டி சில்வா என்ற ஒரு வாசகர் எழுதிய கடிதமானது, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான வழிகளை முன்வைத்தது. அவர் முன்வைத்த வழிமுறையின் சுருக்கமானது: ‘வடக்கு, கிழக்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும். பொலிஸ், இராணுவம் ஆகிய படைகள் மேலதிகமாக அனுப்பப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். அவர்களைக் கண்டவுடன் சுட வேண்டும். பாரம்பரிய தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில், சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ஈழம்’ என்ற ஒன்று வழங்கப்படாது என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும். வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பதற்கான மேலதிக செலவானது, அங்கு வதிவோரின் மீது விசேட வரியொன்றை விதிப்பதனூடாக ஈடுசெய்யப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோருக்கு எந்த நட்டஈடும் வழங்கக் கூடாது’ என்றவாறாகக் காணப்பட்டது. 1983ஆம் ஆண்டு, கறுப்பு ஜூலைக் கலவரத்தின் பின்னணியில், இதுபோன்ற கடும் தமிழின வெறுப்பு மனநிலை இருந்தது. இது ஒரே நாளில் வந்ததல்ல; கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டது. இதில் இலங்கை அரசியலின் பங்கு முக்கியமானது. 1956ஆம் ஆண்டு முதல், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பும் வன்முறைகளும் இதற்குச் சாட்சி. இதில் அரச இயந்திரத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. 1983ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி, லண்டன் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு குறுஞ்செவ்வியை அளித்திருந்தார். அதில், “யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம், அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று, அப்பட்டமான இனவெறி அரசியலை, வௌிப்படையாக உலகுக்கு அவர் சொல்லியிருந்தார். ஆனால், இந்த வரலாறுகள் இலங்கையில் கற்பிக்கப்படுவதில்லை. இன்று கூட, தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் பற்றிய கருத்தியலை ‘கறுப்பு ஜூலை’ பற்றிப் பேசும் போது பலரும் முன்வைக்கிறார்கள். தம்முடைய உயிரைப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். அது உண்மை! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ என்பது அவர்களைப் பற்றியது அல்ல. தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த அந்த நல்ல உள்ளங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டியவையே! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ அவர்களைப் பற்றியது அல்ல. ‘கறுப்பு ஜூலை’யின் கருத்தியலை, அவ்வாறு மாற்ற முனைவது பெரும் வரலாற்றுத் துரோகமாகும். ‘கறுப்பு ஜூலை’ என்பது, இந்த நாட்டில் வேர் கொண்டுள்ள இனவெறியைப் பற்றியது. ஆதிக்க மனநிலை கொண்ட பேரினவாதம், சிறுபான்மை இனத்தை இன அழிப்புச் செய்ததன் வரலாறு. இதில் பெருஞ்சோகம் என்னவென்றால், இதைப் பற்றி முறையான நீதி விசாரணை இடம்பெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. இது பற்றி, நாம் பேசுவது கூட இல்லை. குறைந்த பட்சம், ஞாபகார்த்த நிகழ்வுகளை அரசு நடத்துவதும் இல்லை. ஒரு ஞாபகார்த்த சின்னம் கூட இல்லை. ஜேர்மனியோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்! தமது பிழைகள், தாம் இழைத்த கொடுமைகளை மறைத்துவிட்டு, வரலாற்றுக்கு வௌ்ளைச் சாயம் அடிப்பதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. வரலாற்றின் தவறுகளை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரயாச்சித்தம் தேடுவதுடன், இனி இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காக அந்த வரலாற்றுத்தவறைப் பற்றி, அடுத்த சந்ததிக்குக் கற்பிப்பதுதான் இந்த நாட்டுக்கும் அதன் எதிர்காலத்துக்கும் நாம் செய்யக்கூடிய பெருந்தொண்டு ஆகும். மறக்கமுடியாத வரலாறு இது. மனிதத்துக்கு எதிரான இந்தப் பெரும் குற்றத்துக்கு எவரேனும் பொறுப்பேற்றுக்கொண்டால்தான், மன்னிப்பது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்கக் கூட முடியும். யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாத குற்றத்துக்கு யாரை மன்னிப்பது? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலை-மறக்கக்கூடாத-வரலாறு/91-277447
  11. கனேடிய பிரதமரின் தமிழ் இனப்படுகொலை என்ற கூற்றை நிராகரித்தது இலங்கை அரசாங்கம் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 23ஆம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. மேலும் இது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேநேரம் இலங்கையில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும் என வெளிவிவகார அமைச்சு கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2023/1341661
  12. கருப்பு ஜூலை: கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும் இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 25-7-1983-இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள். தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின. வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன. ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது. குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர். பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர். சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து ""சில்'' அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர். 👍🔔
  13. கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு Veeragathy Thanabalasingham on July 23, 2023 Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்குப் பிறகு இந்த வாரத்துடன் நான்கு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலைவிரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை. 1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கெனவே திட்டமிட்டுவந்த வல்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவுமே இருக்காது என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (BLACK JULY ) என்று வர்ணித்தார். அரசாங்கத்தின் மனநிலை கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக லண்டன் ரெலிகிராவ் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அளித்த பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது. “இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்கமுடியாது. வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று அவர் சொன்னார். ஜெயவர்வர்தனாவின் அந்தக் கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச் சக்திகள் நீண்ட நாட்களாக தீட்டிவந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது. உள்நாட்டுப்போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்கமுடியாத அளவுக்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது என்பதால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதற்கு பித்தியேகமான ஒரு எதிர்மறைக் குறியீடு இருக்கிறது. அந்த வன்செயல்களில் நாடுபூராவும் சொல்லொணா அவலங்களைச் சந்தித்து ஆயிரக்கணக்கில் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையையேனும் கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை. வன்செயல்களை நியாயப்படுத்திய ஜனாதிபதி வன்செயல்கள் மூண்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு ஜூலை 28 வியாழக்கிழமை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கிஞ்சித்தேனும் நினைக்கவில்லை. வன்செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிஸாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். அரசாங்க அரசியல்வாதிகள் பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டிவிட்டார்கள். வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜெயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது, “படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும். சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப்படுத்தியதையும் கண்டோம் ” என்று பதிலளித்தார். கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ உயிருடன் இருந்தவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை. மன்னிப்புக் கோரிய சந்திரிகா பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். கறுப்பு ஜூலையின் 21ஆவது வருட நினைவைக் குறிக்குமுகமாக கொழும்பில் வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர், “அந்த வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இலங்கை அரசு மற்றும் இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்புக்கோரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். இந்தியத் தலையீடு இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு கறுப்பு ஜூலை வழிவகுத்தது. அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார். அவர் வந்திறங்கிய தினமான (29 ஜூலை 1983) கொழும்புக்கு விடுதலைப் புலிகள் வந்துவிட்டதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்கள் மீது மீண்டும் படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே பெருமளவு கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதுண்டு. தமிழர்கள் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு சிங்களவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே நரசிம்மராவ் கொழும்பில் இருந்தவேளை இனவாதச் சக்திகள் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. கறுப்பு ஜூலைக்குப் பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி திசாநாயக்க இந்தியா இலங்கை மீது படையெடுத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத்தீர்விலேயே அக்கறை காட்டின. ஐரிஷ் குடியரசு அரசியல்வாதியும் சின் ஃபீன் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெரி அடம்ஸ் வட அயர்லாந்து நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது, “சமாதான முயற்சிகள் வேறு மார்க்கங்களிலான போர்தான்” (Peace process are war by other means) என்று குறிப்பிட்டார். இலங்கையின் சமாதான முயற்சிகளும் அவ்வாறே அமைந்தன என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டோம். போர்ப்பிரமை சிங்கள அரசியல் தலைவர்கள் அடிப்படையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனையில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு இரு உதாரணங்களை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். 1977 ஜூலை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்ற சில வாரங்களில் தலைநகர் கொழும்பு உட்பட பல நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர். அந்த வன்செயல் நாட்களில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர் ” என்று கூறினார். அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கத்தின் தூண்டுதலுடன் காடையர்கள் பொலிஸார் பார்த்துக்கொண்டு நிற்க சத்தியாக்கிரகிகளை கொடூரமாக தாக்கினார்கள். அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் தலையில் தனது காயத்துக்கு கட்டுப்போட்டுக்கொண்டு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது அவரை விளித்து “கௌரவ போர்க்காயங்களே” (Honourable Wounds of War) என்று பண்டாரநாயக்க பேசினார். தமிழர்கள் ஆயுதமேந்துவதற்கு வெகு முன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்குப் பின்னரானவை அண்மைக்கால வரலாறு. இராணுவத் தீர்வு சகல ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர இராணுவத் தீர்வை காணும் முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைந்து இறுதியில் முழுவீச்சிலான போர் மூளுவதையே உறுதிசெய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றிபெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று உரிமைகோரிய ராஜபக்‌ஷ போர்வெற்றியை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார். இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்‌ஷர்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி உண்மையில் பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியைப் பறைசாற்றியது எனலாம். நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பவும் தவறான ஆட்சிமுறையை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே இலங்கை வரலாறு காணாத படுமோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்தி நிற்கும் முக்கிய படிப்பினையாகும். ஆனால் அண்மைக்காலமாக மீண்டும் இனவாத அரசியல் அணிதிரட்டல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதைக் காண்கிறோம். இன அடிப்படையிலான பிரச்சினை இப்போது தீவிரமாக மதங்களுக்கு இடையாலான பிரச்சினையாகவும் திசை திருப்பப்படுகிறது. மீண்டும் இனக்கலவரம் பற்றிய பேச்சுக்கள் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்ற விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய பின்னணியிலே, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கறுப்பு ஜூலையில் இருந்தும் அதற்குப் பின்னரான நான்கு தசாப்தகால அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயம் எதாவது படிப்பினையை பெற்றிருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகிறது. தமிழ் மக்களின் இன்றைய நிலை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதினான்காவது வருடமாகும். இந்தக் கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது? நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினராக இலங்கை தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமைமிக்கவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் குறிப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன. வடக்கு கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி, வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது. கறுப்பு ஜூலைக்குப் பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாண சபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் 36 வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதிசெய்துகொண்டன . இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. சமாதான உடன்படிக்கை்குப் பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றி திரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார். இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றைப் பற்றி சிலாகித்தார். ஆனால், ஜனாதிபதி அவற்றில் அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை. சம்பந்தனைப் பொறுத்தவரை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் இனப்பிரச்சினைக்கு அதிகபட்ச அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வொன்றைக் வகுப்பதற்குப் புதிதாக எதையும் ஆராயத் தேவையில்லை, மேற்கூறப்பட்ட முயற்சிகளின்போது வரையப்பட்ட யோசனைகளை பரிசீலனைக்கு எடுத்தால் போதும் என்பதே நிலைப்பாடாக இருந்தது. அண்மைக்காலமாக தமழ்க்கட்சிகளுடன் ஜனாதிபதி விக்கிரமசிங்க நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றத்தைக் காணமுடியாமல் இருக்கிறது. இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு விக்கிரமசிங்க கடந்த டிசம்பரிலும் ஜனவரியிலும் இரு தடவைகள் சர்வகட்சி மகாநாடு என்ற பெயரில் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டை கூட்டினார். அந்த முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல்போன நிலையில் இறுதியாக தமிழ்க்கட்சிகளுடன் மாத்திரம் அவர் பேசினார். 13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ். நகரில் தைப்பொங்கல் விழாவில் விக்கிரமசிங்க அறிவித்தார். அரசியலமைப்பில் இருக்கும் அந்தத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதி என்ற வகையில் தனது கடமை என்று அதை எதிர்க்கும் அரசியல் சக்திகளுக்கு கூறிய அவர் ஒன்றில் அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது அதை ஒழித்துவிட எவராவது நாடாளுமன்றத்தில் புதிய திருத்தச்சட்டம் ஒன்றை தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரவேண்டும் என்றும் கூட குறிப்பிட்டார். பொலிஸ் இல்லாத பதின் மூன்று ஆனால், தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அவர் பிறகு பதின் மூன்றைப் பற்றி பேசுவதைத் தவிர்த்துக்கொண்டார். இப்போது இறுதியாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக கடந்தவாரம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர் யோசனையை முன்வைத்தார். ஆனால், தமிழ்க்கட்சிகள் அதை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன. இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னதாக அந்த யோசனையை விக்கிரமசிங்க வெளியிட்டதற்கு ஒரு அந்தரங்க நோக்கம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. புதுடில்லியில் இந்திய அரசாங்கத்திடமிருந்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி விரைவில் மாகாண சபை தேர்தல்களை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தல் வரும்போது தன்னால் அது விடயத்தில் செய்யக்கூடியது என்ன என்பதை அவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தும் நோக்குடன்தான் பொலிஸ் இல்லாத 13 பற்றி ஜனாதிபதி கொழும்பில் பேசினார். தமிழ்க்கட்சிகள் அதை நிராகரித்துவிட்ட நிலையில் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் விக்கிரமசிங்க தமிழர்களை வென்றெடுப்பதை விடவும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதிலேயே கூடுதல் அக்கறை காட்டக்கூடும். கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் ஒரு திருத்தத்தைக் கூட கைவிடவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு நழுவிக்கொண்டே போகிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=10953
  14. Published By: VISHNU 23 JUL, 2023 | 06:22 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது. ஒரு சில அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தோளில் சுமந்து இனக்கலவரத்தை தோற்றுவித்தார்கள் என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் 'மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியில் பல விடயங்கள் கடுமையாக தாக்கம் செலுத்தியுள்ளது. கறுப்பு ஜூலை சம்பவத்தை துரதிஷ்டவசமானதாக கருத வேண்டும். பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இருந்து அரசியலமைப்பு ஊடாக இனவாரி ரீதியில் மக்கள் வேறுப்படுத்தப்பட்டார்கள், பிரதேசவாரியாக மக்கள் வேறுப்படுத்தப்பட்டார்கள். மக்கள் மத்தியில் இனவாதம் தோற்றம் பெறுவதற்கு அது ஆரம்பமாக இருந்தது. சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒரு சில அரசியல்வாதிகள், அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்துக் கொண்டு சென்றார்கள். இதனால் இலங்கையில் வாழ்ந்த மக்கள் இலங்கையர் என்ற அபிமானத்துடன் வாழ முடியாமல் போனது. 1977 ஆம் ஆண்டு தேர்தல் இடம்பெற்ற போது நாட்டில் பல்வேறு பகுதியில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இடம்பெற்ற இனக்கலவரம் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை அமைத்தது. இலங்கையர் என்ற அடிப்படையில் இருந்து கொண்டு சிந்திப்பதை விட சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற வரையறைக்குள் இருந்துக் கொண்டு செயற்படும் நிலை தோற்றம் பெற்றது. இவ்வாறான நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னேற்ற முடியாது. புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு, தேசிய நல்லிணக்கம் உள்ளிட்ட காரணிகளுக்காக பல்வேறு திட்டங்களுக்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல், ஊழல் எதிர்ப்பு சட்டம் என்பனவற்றை இயற்றிக் கொண்டோம். கறுப்பு ஜூலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி வழங்குதல் பிரதான சவாலாக உள்ளது. இதற்காக காணாமல் போனோர் அலுவலகம், நல்லிணக்க காரியாலயம் மற்றும் நட்ட ஈடு வழங்கல் காரியாலயம் ஆகியன ஆரம்பிக்கப்பட்டன. தென்னாபிரிக்கா நாட்டின் மாதிரியிலான வகையில் உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட நடவடிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கு விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது. நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளினால் பல தீர்மானங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது. கறுப்பு ஜூலை சம்பவம் இலங்கையில் அல்ல உலகில் எந்த நாட்டிலும் தோற்றம் பெற கூடாது என்றார். https://www.virakesari.lk/article/160736
  15. உலகில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் திரைநீக்கம்! Vhg ஜூலை 15, 2023 பிரான்சில் ஓர் வரலாற்று நிகழ்வாக உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது. சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழின அழிப்பான “கறுப்பு யூலை” 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் நடும் நிகழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றது. உலகப் பரப்பில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வு குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்தமையால் எங்களுடை அழைப்பை ஏற்று இவ் வரலாற்று நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிற்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். காலம்:18/07/2023 நேரம்:18h30 இடம்: Parc de la mare à la veuve Rue de Metz, 93140 Bondy https://www.battinatham.com/2023/07/blog-post_961.html
  16. இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 01 சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை, இனமுரண்பாடு நிறைத்திருப்பது தற்செயலானதல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே இனமுரண்பாட்டுக்கான வித்துகள் இருந்தன. மகாவம்சம் என்ற புனைவு வரலாறாகக் கருக்கொண்டதும், அதன் வழிப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இதன் தொடக்கப் புள்ளிகள். 19ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் ‘கொச்சிக்கடை கலவரம்’ எனப்படும் பௌத்த-கத்தோலிக்க மோதலும் 1915இல் நடந்தேறிய சிங்கள (பௌத்த) - முஸ்லிம் கலவரங்களும் இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மைத் தேசியவாதம் சகிப்புத் தன்மையற்றது என்பதையும் இனத்தை விட மதம், அரசியலில் முக்கிய பங்கு வகித்ததை நாம் உணரலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கை தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட முரண்பாடுகள், சுதந்திர இலங்கையில் பன்மைத்துவ சமத்துவ சமூகம் என்பது சவால் நிறைந்தது என்பதைக் காட்டி நின்றது. சுதந்திர இலங்கையின் முதலாவது அபிவிருத்தித் திட்டங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மையப்படுத்தி இருந்தன. மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு, ஜனநாயகப் படுகொலையின் தொடக்கத்துக்குக் கட்டியம் கூறியது. இந்தப் பின்புலங்களில், சுதந்திரமடைந்து 35 ஆண்டுகளின் பின்னர், 1983 இல் நடந்தேறிய இனக்கலவரம், இலங்கையை முழுமையாகத் திருப்பிப்போட்டது. ‘ஆடிக்கலவரம்’, ‘ஜூலைக் கலவரம்’ எனப் பலவாறு இது அழைக்கப்படுகிறது. இந்தக் கொடுநிகழ்வை, ‘கலவரம்’ என்று சுட்டுவதே தவறானது. ஆனால், வரலாற்றில் அது அவ்வாறு தான் அழைக்கப்பட்டு, பொதுப்புத்தி மனநிலையில் ஒரு கலவரவமாகவே நிலைபெற்றுள்ளது. இதன் பின்னாலுள்ள அரசியலும் வரலாறும் கவனிப்புக்கு உள்ளாகவில்லை. இக்கொடூரம் நடந்தேறி இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 40 ஆண்டுகால வரலாற்றை இணைக்கின்ற ஒரு பொது இழை, இனமுரண்பாடு ஆகும். இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் இனமுரண்பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கவியலாது. இன்றைய நெருக்கடியை, வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால், அதை அவ்வாறு பார்க்கவே அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் விரும்புகிறது. கதையாடல்கள் அதன் வழிப்பட்டே அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தேசியவாத எழுச்சியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வர்க்கப் பரிமாணத்தையும் ஒடுக்கப்பட்டோரின் பார்வையில் வரலாறு சொல்லப்படாமையையும் அவதானிக்கலாம். இது தற்செயலானதல்ல; வரலாறு என்பது வெறுமனே நிகழ்வுகளின் பதிவு அல்ல. அதில் எது பதியப்படுகிறது, எது விடுபடுகிறது, எது திரித்தோ மாற்றியோ எழுதப்படுகிறது என்பன எல்லாம் அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையவை. நமக்குச் சொல்லப்படுகிறவை உண்மைகளா, பொய்களா என்பது ஒரு புறமிருக்க, அவை ஏன் குறிப்பிட்ட விதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்தும் சொல்லப்பட்டு வருகின்றன என்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். எழுதப்பட்ட வரலாறு குறிப்பிட்ட சில வர்க்க நலன்களால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளது. சமூக விடுதலைக்கான போராட்டம் தவிர்க்க முடியாமலே வரலாற்றையும் விடுவிக்கிற ஒரு போராட்டமாகவும் அமைய நேருகிறது. நாம் விரும்புகிற மனித சமத்துவமுள்ள ஒரு சமூகத்தை அடைய வேண்டுமாயின், சமூக மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்தன? அந்த மாற்றங்களின் பின்னாலிருந்த இயங்கு சக்திகள் எவை? அவற்றை இயலுமாக்கிய சூழ்நிலைகள் எவை என்ற உண்மைகளின் அடிப்படைக் கூறுகளை, எழுதப்பட்ட வரலாற்றுக்குள் இருந்து வடிகட்டி எடுக்க வேண்டிய தேவை நமக்குள்ளது. வரலாற்றுத் திரிப்பும் மறைப்பும் நலன்களைப் பேணும் முக்கிய கருவிகளாக உள்ளன. இனங்களுக்கு இடையிலான பகைமையாக வரலாறு சித்திரிக்கப்படுகிற போது, உண்மையாகவே சமூக முரண்பாடுகளின் வேராக இருந்து வந்துள்ள அடிப்படையான சமூகப் பிரிவுகள், அதாவது சமூக ஏற்றத்தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற பிரிவுகள் மறைக்கப்படுகின்றன. இந்தப் பின்புலத்திலேயே இத்தொடர் 1983இல் நடந்தேறிய திட்டமிட்ட வெறிச்செயலின் பின்னணி, அதை சாத்தியமாக்கிய காரணிகள், அது ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றை நோக்க விளைகிறது. எல்லாவற்றிலும் மேலாக, இலங்கையர்களாக நாம் இந்தக் கொடுஞ்செயலில் இருந்து கற்றுக் கொள்ளாத பாடங்கள் எவை? சிறுபான்மைச் சமூகங்கள் இன்னமும் மோசமான குறுந்தேசியவாத அரசியலின் வழிப்பட்டு சீரழிவதற்கான அடிப்படைகள் எவை? ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் மேலும் ஒடுக்கப்படுவதையும் அதற்கு சிறுபான்மைத் தேசியவாதங்களின் முக்கியமான பங்கு யாது ஆகிய கேள்விகளையும் ஆழ நோக்க விளைகிறது. சமூகத்தில் ஆழ வேரூன்றிய பண்பாட்டு வேர்களைக் களைவதில் நேரடியாகக் குறுக்கிடுவதால் வரக்கூடிய எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே இலங்கையின் கொலனிய நிர்வாகம் பௌத்த, சைவ மறுமலர்ச்சி இயக்கங்களுக்குத் தடையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. கொலனியத்தைத் தூக்கி எறியாமல், சமூக அடையாளங்களையும் நலன்களையும் வற்புறுத்துகிற நோக்கிலேயே பௌத்த, சைவ, இஸ்லாமிய மீளெழுச்சிகள் நிகழ்ந்தன. இவற்றிடையே குறிப்பிடத் தக்க ஒற்றுமைகள் இருப்பினும் முக்கியமான வேறுபாடுகளும் இருந்தன. இது பேசப்பட வேண்டியதொன்று. அதைப்போலவே, இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி வரை சிங்களவரிடையே சாதி அடிப்படையிலான அரசியல் போட்டி இருந்த போதும், தமிழ்-சிங்களவர் என்ற அடிப்படையிலான முரண்பாடு முன்னணிக்கு வரவில்லை. இனத்தை விட, மதம் அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. சாதியும் மதமும் மொழியை விட முக்கியமான அடையாளங்களாகச் செயற்பட்டன. தமிழர் - சிங்களவர் என்ற மொழிவழி வேறுபாட்டின் அடிப்படையில் அரசியல் விருத்தி பெறாமைக்கான காரணம், எந்த விதமான பண்பாட்டு ஒற்றுமைகளையும் விட மேலாக, அந்த இரு அடையாளங்களுக்கும் உட்பட்ட மேட்டுக் குடிகளுக்கும் ஓரளவு வசதி படைத்த பகுதியினருக்கும் இடையே போட்டிக்குரியதாகப் பொதுவாக எதுவுமே இல்லாமை என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிங்கள கொவிகம, தமிழ் வேளாள மேட்டுக் குடிகளிடையே வலுவான நல்லுறவு இருந்தது. இது இன்றுவரை பேசப்படாமல் தவிர்க்கப்படுகின்ற ஒன்று! பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் தேசிய அரசியல் உருவாக்கத்தில் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழரும் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமும் சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதை, கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள், தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவுபடுத்துகிற சூழ்நிலை ஏற்பட்ட போது, அவ்விரிவாக்கத்தில் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன. ஏன் அவை முன்னின்றன? அதற்கான காரணம் என்ன? இது எவ்வாறு இலங்கை இனமுரண்பாட்டில் சாதாரண உழைக்கும் மக்களைப் பாதித்தது என்ற வினா விரிவான ஆய்வுக்கு உட்பட்டதில்லை. இவற்றைத் தவிர்த்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையோ அதைப் புதிய திசைவழிக்கு இட்டுச்சென்ற 1983 வன்செயல்களையோ நோக்கவியலாது. இவ்வன்செயல்கள் தவிர்த்திருக்கக் கூடியவை; ஆனால், அதை அரசாங்கம் விரும்பவில்லை. இந்நிகழ்வு, இலங்கையின் அயலுறவுகளில் பாரிய மாற்றங்களை உண்டுபண்ணியது. மேற்குலகக் கவனம், தமிழர்களுக்கு ஆதரவானது என்ற மாயை வலுப்பட்டதன் கொடிய விளைவுகளை, முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஆயுதப்போராட்டம் தெட்டத் தெளிவாகக் காட்டியது. ஆனால், இன்று அந்தக் கொடிய நினைவுகளின் 14 ஆண்டுகளின் பின்னரும் மேற்குலகின் மீதான மாயை இன்னும் வலுவாகவுள்ளது; இது வருந்தத்தக்கது. தமிழ்ச் சமூகம், இந்த கையறு நிலைக்கு ஏன் வந்தது? இதற்கு வெறுமனே சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத அகங்காரம் மட்டுமே காரணமா? இது கவனமாகவும், பொறுப்புணர்வுடன், சுயவிமர்சனத்துடனும் தமிழ்ச் சமூகம் கேட்கவேண்டிய கேள்வி. இக்கேள்வியை அமைதியாகக் கடந்துபோவது, கொல்லப்பட்ட மக்களுக்கும் விடுதலைக்காக உயிர்நீர்த்தோருக்கும் இழைக்கும் அநீதி. சிங்கள-பௌத்த பேரினவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்? இதில் நமது தலைமைகளின் பங்கென்ன? இன்னமும் தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என்று புதிய கதைகளோடு தொடரப்போகிறோமா? உடல்களின் மீது அரசியல் செய்வது புதிதல்ல. அதைத் தொடக்கி வைத்ததும் 1983 தான். நாம் கற்காத பாடங்களையே கடந்த 40 ஆண்டுகால வரலாறு காட்டி நிற்கிறது என்பதே பெருந்துயர். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கை-இனமுரண்பாட்டின்-திருப்புமுனை/91-317786
  17. ஆதிக்க நெருப்பு தின்ற அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற நாள்காட்டியின் சாபமிந்த மறக்கமுடியா – கருப்பு ஜூலை! மனிதக் – கருப்பு மனத்தின் கொலைவெறி முற்றி முற்றும்; முடியாதோரையே அழித்த வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை! சுயநல வெறி சிகப்பாய் ஓடி தாமிரபரணியின் உடம்பெல்லாம் பிணங்களாய் மிதந்து – மனிதமின்மையை மனிதனே நிரூபித்த; கறுத்த பேரவலம் – கருப்பு ஜூலை! காக்கிச் சட்டையில் போதையுற்று கொலைகளில் மெடல் அணியத் துடித்து கொண்று குவித்த உடல்களின் மீதேறி வெற்றி கூப்பாடு போட்ட பாதக வீரர்களின் நினைவொழியா – சோகப் பதிவு; கருப்பு ஜூலை! மாஞ்சோலைக்கு நீதி கேட்டு போய் மரணத்தை மீதப் படுத்திக் கொண்ட பாட்டாளிகளின் கதறல்களையும் நிர்வாணமாய் சரிந்த உடற்கட்டைகளையும் ஊரெல்லாம் செய்தியாக்கிய – அசிங்கமிந்த – கருப்பு ஜூலை! பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே அடக்கிக் கொண்டிருந்த வன்மம் வெடித்து, உலகின் காதுகளில் – அதர்மத்தின் கொடையாளர்களாய் தமிழனை; தமிழனே பதிந்துக் கொண்ட சீர்கேடிந்த; கருப்பு ஜூலை! தமிழன் தன் வரலாற்றில் செம்மொழியை கொண்டதாகவும் அந்நியரை வென்றதாகவும் எண்ணியதை எல்லாம் பெற்றதாகவும் உலகத்தை தன் உள்ளங்கையில் அடக்கிக் கொண்டதாகவும் எதை வேண்டுமோ எழுதிக் கொள்ளளாம்; எதை சாதிப்பினும் – இரக்கம் ஒழித்த இந்த கருப்பு ஜூலை மட்டும் கருப்பாகவே பதிவு செய்யப் பட்டிருக்கும் தமிழனின் கால ஏட்டில்!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.