Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிங் மாஸ்டர் மகிந்த ராஜபக்சேவும்-மெரின் லீ பென்னும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ring%20master_CI.JPG

'மதிப்புக்குரிய' மகிந்த ராஜபக்சே இலங்கை ஜனாதிபதி. 'மதிப்பிற்குரிய' மெரீன் லீ பென், பிரெஞ்சு வெள்ளை இனவாதக் கட்சியின் தலைவர் ழான் மரி லீ பென்னின் புதல்வி. இவர்கள் இருவருக்கும் என்ன பொதுத்தன்மை? மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருக்கிறார். மெரின் லீ பென் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிடுகிறார்.

மறுபடியும் அதே கேள்வி, இலங்கை ஜனாதிபதிக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளருக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்கிறது.

பிரான்சில் பிரெஞ்சு நேஷனல் பார்ட்டி இருப்பது போல பிரிட்டனில் பிரிட்டிஸ் நேஷனல் பார்ட்டி என ஒரு கட்சி இருக்கிறது. இரண்டும் வெள்ளை இனவெறிக் கட்சிகள். நாசி படுகொலைகளையும் யூதமக்கள் கொல்லப்பட்டதையும் ஆதரிக்கும் கட்சிகள். இந்தக் கட்சிகளோடு சேர்ந்து செயல்பட்டவர்தான், எழுபத்தி ஏழு அப்பாவிகளைக் கொன்று குவித்த நோர்வேஜிய வெள்ளைக் கிறித்தவ இனவெறியன் ஆன்ட்ரஸ் பிரிவிக். இவன் வரித்துக் கொண்ட இவனது எதிரிகளில் முதலாமவர்கள் கலாச்சார மார்க்சியர்கள். இரண்டமாவர்கள் ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமியர்கள்.

பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் மெரீன் லீ பென்னின் எதிரிகள் இதே மார்க்சியர்களும் ஐரோப்பா வாழ் முஸ்லீம்களும்தான்.

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் முதல்நிலை வாக்குகள் பெற, இன்றைய ஜனாதிபதி சார்க்கோசி இரண்டாம் நிலையிலும், 19 சதவீத பிரெஞ்சு மக்களின் வாக்குகள் பெற்று மெரீன் லீ பென் மூன்றாம் நிலையிலும் இருக்கிறார்கள். வறிய பிரெஞ்சு மக்கள் வாழும் பகுதிகளில் மெரின் லீ பென்னின் இனவாதக் கட்சி பிரதான கட்சியாக வளர்ந்து வருகிறது. இதே நிலைமைதான் பிரித்தானியாவிலும். இதற்கான காரணம் என்ன? ஐரோப்பிய அரசியலைப் பார்த்து வந்திருப்பவர்களுக்கு, குறிப்பாக பிரெஞ்சு, பிரிட்டன் அரசியலைப் பார்த்து வந்திருப்பவர்களுக்கு ஒரு விஷயத்தினை ஸ்தூலமாக அனுமானித்திருக்க முடியும்.

அது, இனவாதக் கட்சிகளின் இனவெறி மற்றும் வேற்றின, வேறுமத எதிர்ப்புக் கோஷங்களையும் தேர்தல் இலக்குகளையும் சார்க்கோசி, கமரூன் போன்ற பழமைவாத, வலதுசாரிக் கட்சியினர் தேன் தடவிய வார்த்தைகளில் வைத்து வந்திருக்கிறார்கள் எனும் நிஜம்தான் அது.

இந்த வகையில் இனவெறி அரசியலையும் வேற்று இன-மத எதிர்ப்பு அரசியலையும் ‘சட்டபூர்வமான’ அரசியலாக்க இவர்கள் முனைந்தார்கள். இனவாதிகளையும் அடிப்படை கிறித்தவ மதவாதிகளையும் இவ்வாறு தமது வாக்கு வங்கியாக மாற்றினார்கள். இவர்கள் பிரதான அரசியல் கட்சிகள் என்பதால் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு தாராளவாத அரசியல் முகத்தையும் இவர்கள் காண்பிக்க வேண்டியிருந்தது. இனவாதத்தையும் பிற இன-மத எதிர்ப்பையும் இவர்களால் 'இனவெறிக் கட்சிகள் போல்’ வெளிப்படையாக முன்வைக்கவில்லை.

இதனால், சுயாதீனமாக நிரந்தரப்பட்ட, பரந்துபட்ட இனவாத வாக்கு வங்கி, வறிய உதிரிப்பாட்டாளிகளின் வாழ்நிலை ஆகியவற்றினைத் தழுவியபடி பிரதான இனவாத அரசியல் என்பதாக முன்னிலைக்கு வருகிறது.

ஐரோப்பாவில் இனவெறிக் கட்சிகள் பிரதான கட்சிகளாக வளர்ந்து வருவதற்கான பொருண்மையான அடிப்படை இதுதான்.

இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமையும் இதனை ஒத்ததுதான். இன்றைய நிலைமை அல்ல, அரை நூற்றாண்டு தென்னிலங்கை அரசியல் அமைவும் இப்படிப்பட்டதுதான். ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் தாம் மாறி மாறி ஆட்சிக்கு வருவதற்காக சிங்கள இனவாதத்தையே பாவித்திருக்கிறது. தமது ஆட்சியதிகாரத்திற்காக, தமது தாராளவாத தேன்தடவிய அரசியலை ஒரு புறம் வைத்துக் கொண்டு, மறுபுறம் கடும் சிங்கள இனவெறி அரசியலின் இலக்குகளையும் போக்குகளையும் இந்த இரு கட்சிகளும் சுவீகரித்துக் கொண்டிருந்தது.

தமது அரசியல் வாக்கு வங்கியாகக் கருதும் அதே சிங்கள இனவெறி என்பது ஒரு சுயாதினமான நிரந்தர அரசியல் வாக்கு வங்கியாகவும் ஆகும் என்பதனை அவர்கள் எதிர்பார்க்காமலும் இல்லை.

கடும் சிங்கள இனவெறிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமிய ‘ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், முன்னாள் மனித உரிமை வழக்கறிஞர்’ மகிந்த ராஜபக்சேவின் அரசில் அங்கம் வகிப்பதனை வேறு எவ்வாறும் நாம் விளக்க முடியாது.

சம்பிக்க ரணவக்க தமிழ் தேசியக் கூட்டடைமைப்பை நோக்கி, பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வா, உன்னைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் எனச் சவால் விடுவதை நாம் வேறு எவ்வாறு விளக்க முடியும்?

பாசிசம் அல்லது நாசிசம் என்பதை நாம் சட்ட உருவாக்கம் எனும் அடிப்படையில் புரிந்து கொண்டால், இலங்கையின் யாப்பும், பிரதமரே பௌத்த மத புரவலராகவும் சம்வேளையில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ‘சட்டப்படி’ பிரதமர் கூட்டம் கூட்டி, தம்புள்ளை முஸ்லீம் மசூதி ‘சட்டவிரோதமாக’க் கட்டப்பட்டிருப்பதால், அறுபது அண்டுகள் ஆனாலும் அதனை ‘சட்டப்படி’ அகற்றிக் கொள்ள வேண்டும், அல்லவெனில் அங்கு கலவரம் மூளும் அபாயம் இருக்கிறது என மனிதாபிமானத்துடன் சொல்லியிருக்கிறார்.

நடக்கின்ற அனைத்தையும் அலரி மாளிகையில் இருந்து புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் ரிங்க் மாஸ்ட்ர் மகிந்த ராஜபக்சே.

ரிங்க் மாஸ்டர் என்று சொன்னேன்.

சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்றக் குழவை அவர் கையாண்ட விதம், இலங்கை வந்துவிட்டுப் போய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் ரங்கராஜன், காங்கிரஸ் பிரமுகர் சுதர்சன நாச்சியப்பன் போன்றோர் பேசுவதைப் பார்க்கிறபோது, கத்தார் நாட்டுக்குப் போய் போரின் இறுதி நாட்களில் படுகொலை ஏதும் நடக்கவில்லை என்று இலங்கை அரசுக்குச் 'சான்றிதழ்' கொடுத்துவிட்டு, இலங்கை திரும்பி, தம்புள்ளை மசூதிக்காக 'அழும்' நீதியமைச்சர் ஹக்கீமின் புலம்பல் என இவற்றையெல்லாம் பார்க்கிறபோது, ஒரு வண்ணமிகு சர்க்கஸ்தான் இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதல்லாமல்-

ரி மாஸ்டர் மகிந்த ராஜபக்சே அற்புதமாக சர்க்கஸை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதல்லாமல்-

நிலைமையை வேறு என்ன வகையில் புரிந்து கொள்ள முடியும்?

சுதர்சன நாச்சியப்பன் இலங்கையை சிங்கப்பூர் ஆக்க முடியும் என்கிறார். ரங்கராஜன் ஈழத் தமிழ் கட்சிகள் தமிழீழம் கேட்கவில்லை என்கிறார். ஹக்கீம் தனக்கு பிரதமர் தலைமையில் நடந்த கூட்டம் பற்றித் தெரியவில்லை என்கிறார்.

சர்க்கஸில் ரிங்க் மாஸ்டரை அடுத்து புகழ் பெற்றவர்கள் இவர்கள்தான். இவர்களை எப்படி அழைப்பது என்பது அநேகமாக குழந்தைகளுக்கும் சர்க்கஸ் ரசிகர்களுக்கும் தெரியும்.

மகிந்த ராஜபக்சே இரண்டு சாட்டைகளை மறுபடி வீசியிருக்கிறார். 13 பிளஸ் மற்றது பாராளுமன்றத் தெரிவுக் குழு. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரும்படி இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை. சம்பிக்க ரணவக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்துபார் என்கிறார். உம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்கிறார் அவர். பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வா என்கிறார் மகிந்த ராஜபக்சே.

இனவெறி அரசியல்வாதியை முழங்கவிட்டு, இனப்பிரச்சினைக்கு அவரும் ஒப்புக் கொண்டு ஒரு தீர்வு வழங்குவது என்பது ஒரு போதும் சாத்தியமில்லை.

மகிந்த ராஜபக்சேவுக்கு பாராளுமன்றத்தில் மிருகபலம் இருக்கிறது. அடிக்கடி ராஜபக்சே சொல்கிற 13 பிளஸ் என்பதுதான் என்ன என்பதனைத் தெளிவாக விளக்கி, 13 இன் பிரதான விஷயமான வடக்கு-கிழக்கு இணைப்பு, காணி போலீஸ் அதிகாரம் என இரண்டையும் விடுத்து, அது என்ன 13 பிளஸ் என்ன என்பதனைத் தெளிவாக அவர் சொல்லலாம் அல்லவா? சர்வகட்சி ஆலோசனைக் குழு அறிக்கை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என மகிந்தவே அமைத்த குழுக்களின் அறிக்கைகள் ஏன் நிறைவேற்ற முடியவில்லை, என்ன தடைகள் என்பதனை விரிவாக அவர் விளக்கலாம் இல்லையா?

மகிந்த ராஜபக்சேவுக்கு இதனால் இழப்பதற்கு, சிங்கள இனவெறியர்களின் வாக்குகள் தவிர என்னதான் இருக்கிறது? அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் சிங்கள இனவெறியர்களின் வாக்குத் தவிர இழப்பதற்கு என்னதான் இருக்கிறது?

மகிந்த ராஜபக்சேவிடம் மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கேவிடமும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு குறித்த திட்டவட்டமான தெரிவுகள் இல்லை. இவர்களுடையது மட்டுமல்ல, இலங்கை இடதுசாரிக் கட்சிகளதும், புதிதாகத் தோன்றியிருக்கிற முன்னணி சோசலிசக் கட்சியினது அறிக்கைகளிலும் கூட தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து எதுவும் ஸ்தூலமாக இல்லை.

ஈழத் தமிழர்களின் பிரச்சினை இருபரிமாணம் கொண்டது. பிரதானமாக அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினை, அவர்கள் எதிர்கொள்கிற மனித உரிமை மற்றும் போர்க்குற்றம் தொடர்பான பிரச்சினை அதனது விளைவுதான். முழு இலங்கை அரசு அமைப்பினதும், இலங்கை சிவில் சமூக ஒழுங்கினதும் தர்க்கபூர்வமான வளர்ச்சிதான் இன்று தென்னிலங்கை மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் மற்றும் ஒடுக்குமுறைகள்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் தாம் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையின் பிரதான பகுதியாகத்தான் அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழர்கள் அதனை அனுபவித்து வருகிறார்கள் எனும் பிரக்ஞையைப் பெற வேண்டும்.

அதுவே தென்னிலங்கை அரசியலில் விடுதலை நோக்கை உருவாக்கும்.

வெறும் இலங்கை-இந்திய-அமெரிக்க அரசுகளை நோக்கிய இறைஞ்சுதலாக அல்லாமல், தமிழர் அரசியலை வெகுஜனமயப்படுத்துவதும், தமிழ் அரசியல் தலைமைக்குள் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முனைவது என்பதும், அவர்களது ஒன்றுபட்ட குரல உருவாக்கும் நிரப்பந்தத்தைக் கிளர்த்த முனைவதும்தான் வடகிழக்கு முனையில் விடுதலை அரசியலை நோக்கிய நகர்தலாக இருக்கும்.

அதுவரையிலும் ரிக் மாஸ்ட்டர் தனது சாட்டையை வேகமாக வீசிக் கொண்டேயிருப்பார்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.