Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா முதல் டெசோ வரை- புதிய காட்சியின் தொடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karinaass%205.jpg

ஈழப்போராட்டம் தனக்கே உரியது என்ற எண்ணம் கொண்ட கருணாநிதி மீண்டும் டெசோவை உருவாக்க வேண்டும் என்று மீண்டும் குரல் எழுப்பி வருகிறார்.

ஏற்கனவே ஒரு திங்களுக்கு முன்னதாக வீரமணியைக் கொண்டு டெசோவை ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை விடச் செய்தார். அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன். கருணாநிதியின் திட்டம்தான் இதுவென. அது இன்று சரியாகி இப்போது கருணாநிதி தன் வாயாலேயே டேசோவை உருவாக்க வேண்டுமென்று சொல்லி விட்டார். எனவே அடுத்து வரும் நாள்களில் டெசோ உருவாக்கப்படும்.

டெசோ என்ன செய்யும்?

கருணாநிதி இங்கே டெசோவை உருவாக்க வேண்டும், தமிழ் ஈழம் ஏற்பட வேண்டும் என்று கூறுவது, நாடாளுமன்றில் அவர் கட்சி எம்.பி.க்கள் தமிழ் ஈழத்திற்காக குரல் கொடுப்பது எல்லாம் இந்திய அரசின் திருவிளையாடல் என்பதை விவரமுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நடுவண் அரசின் அனுமதியின்றி கருணா கும்பல் இவ்வாறு குரல் எழுப்பாது. இந்திய அரசுக்கு தற்போது இந்தக் குரல்கள் எழும்ப வேண்டியதன் தேவை என்ன?

கடிவாளம் போட்ட அமெரிக்கத் தீர்மானம்தான். உலகத் தமிழர்களின் பாரிய அரசதந்திரோபாயங்களால் ஐ.நா. மன்றில் சிறிலங்கா அரசு குற்றவாளிப்பட்டியல் நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் வரும் 22-வது ஜெனீவா கூட்டத்தில் சிறீலங்கா அரசு முழங்காலில் நின்று தனது அறிக்கையை மீண்டும் வைக்க வேண்டியதிருக்கிறது.

அது நிச்சயம் உலகிற்கு - மேற்கு நாடுகளுக்கு திருப்தியளிக்காது. ஏனெனில் மேற்கு நாடுகளின் குறியே இலங்கையைக் கொத்தாக கொத்துப் பரோட்டா ஆக்கிட வேண்டுமென்பதுதானே. எனவே நிச்சயமாக சர்வதேசத் தலையீட்டை நியாயப் படுத்தி அமெரிக்கா தலைமையில் என்றுமில்லாத ஒரு புயல் இலங்கைத் தீவில் வீசவிருக்கிறது.

அதே வேளை இலங்கையோ சீனா பக்கம் அதிகளவில் சாய்ந்து அரசியலில் இறங்கினால் இந்தியாவின் கதி அதோகதிதான். துணைக்கண்டத்தில் இந்திய அரசியல் என்பது வெறும் புளிக்கரைசலாகிவிடும். இனி இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு இடமில்லை என்றாகிவிடும். (சில மேதாவிகள் இந்திய விருப்பமின்றி இலங்கையில் சுதந்திரம் வேண்டுவோர் எதுவும் செய்ய முடியாது என்று உரைத்து வருவது எவ்வளவு விரைந்து மாறி வருகிறது என்பதை இந்த நிகழ்வுப் போக்குகள் காட்டுகின்றன).

இந்நிலையில் பாய்ந்து வரும் மேற்குலகின் அரசியலுக்கு இணையாக ஓர் இரண்டாவது கோட்டை போட வேண்டும். அது முந்தைய நிலைமைகளை மீண்டும் ஏற்படுத்துவதுதான். கருணாநிதி சொல்கிறார்: "அதற்கு பழைய நிலைமைகளையெல்லாம் மறந்து புதிய நிலைமைகளை உருவாக்குவோம்". அவர் புதிய நிலைமை என்பது பழைய நிலைமைதான். அதாவது 1980 - ன் நிலைமைகளை மீளக்கொண்டு வருவதுதான். அன்று விடுதலைப்புலிகள் இருந்தனர். இன்று அவர்கள் இல்லையென்பது கருணாநிதியின் மகிழ்ச்சி. கருணாநிதி மூலம் பழைய நிலைமைகளை மீளக் கொண்டுவரலாம் என்பது இந்திய அரசின் திட்டம்.

இது இப்படியே நிறைவேறி விடுமா?

இன்று விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாவிட்டாலும், அவர்கள் தங்கள் பதிலிகளை ஏராளமாக இறக்கி விட்டு விட்டே போயிருக்கின்றனர். தமிழகம் முழுதும் ஏராளமான சிற்றமைப்புகள் தமிழ் தேசியத்தின் பேரால் இயங்கி வருகின்றன. தமிழர் களம், மே 17, தமிழர் விடுதலை மன்றம் என பத்துக்கும் மேற்பட்ட புதிய அமைப்புக்கள் களத்தில் உள்ளன. இவை யாவும் தலைவர் பிரபாகரனை தங்கள் பதாகையில் வைத்திருக்கின்றன. இவை என்ன செய்யும் என்பதே டெசோவை தீர்மானிக்கும். இந்த சிற்றமைப்புக்கள் யாவும் அய்யா வைகோ, அய்யா நெடுமாறன் ஆகியோரையே பெரிதும் மதித்து அரசியல் களம் காணுகின்றனர்.

இந்த சிற்றமைப்புக்களோடு இன்னமும் பல சிற்றமைப்புக்கள் உருவாகும். அவையாவும் கருணாநிதியின் டெசோவுக்கு எதிரணியில் அணிதிரளும் என்பதும் யூகிக்கக் கூடியதே. அன்று ஈழத்திலே இந்திய அரசின் ரா உளவுத்துறை போராளிகளைப் பிளவுபடுத்தியும், கொலைபுரிந்தும் தன் இருப்பை கொண்டு சென்றது. இன்று ஈழத்தில் அல்லாமல், அக்காட்சிகள் தமிழகத்திலேயே நடைபெறும். அதனையொட்டி உலகத் தமிழர்கள் தங்கள் அணுகுமுறைகளை வகுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஈழதேசம் இணையத்திற்காக நிலவரசு கண்ணன்.

http://www.eeladhesa...08-44&Itemid=29

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.