Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களமயமாகும் தமிழர் பிரதேசங்கள் ! தமிழ் தேசியக் கூட்டமைப்பு – நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பதிலென்ன ?

Featured Replies

http://youtu.be/GLP_2eLr8JE

தமிழர்களின் பிரதேசங்களில் பரவலான இராணுவ கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், அந்தப்பின்னணியில் சிங்களக்குடியேற்றங்களைச் செய்து வருகின்றமையானது, தமிழ் மக்கள் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக, கிளந்தெழமாட்டார்கள் என்ற நோக்கில் என , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலை ஒலிப்பரப்பான நாதம் வானோசையில் இடம்பெற்ற, சிறிலங்காவின் தமிழர் நில ஆக்கிரமிப்பும் – அபகரிப்பும் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே, சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையினை சிங்கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் நினைத்தவர்கள், அன்று அதனை மறைமுகமாக செய்தவர்கள் இன்று அதனை வெளிப்படையாக செய்து வருகின்றார்கள் என தெரிவித்தார்.

யுத்தத்தில் வென்றவர்கள் எதனையும் செய்யலாம் என்ற மனநிலையில், இவைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள், இதனைத் தடுப்பதற்கு சர்வதேசம் ஆக்கபூர்வமான நடவடிக்களை செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து இந்தியா , அமெரிக்கா ஆகிய நாடுகள் கருத்துக்களை தெரிவித்த போதும், அவைகள் போதுமானதாக அமையவில்லையெனத் தெரிவித்தார்.

போருக்கு பிற்பாடு, கடந்த மூன்று ஆண்டுகளாக இராணுவமயமாக்கலை முதற்கட்டமாக மேற்கொண்டு வந்த சிறிலங்கா அரசாங்கம் , அதனைத் தொடர்ந்து சிங்கமயமாக்கலை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையின் வட மாகாணத்தின் பல பகுதிகளில், இராணு தேவைகளுக்காகவும் , இராணுவ குடியிருப்புக்களுக்காவும், 20 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் கபளிகரம் செய்யப்பட்டுள்ளதென தெரிவித்த சுரேஸ் பிரமேச்சந்திரன் அவர்கள், இராணுவம் என்ற அடிப்படையில், சட்டவிதிகளுக்கு புறம்பான வகையில் தாங்கள் எதனையும் செய்யலாம் என்ற எண்ணத்திலேயே இவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் :

முல்லைத்தீவில் உள்ள திருமுறிகண்டி என்ற இடத்தில் 4 ஆயிரம் ஏக்கர் பகுதியில் இராணுவ குடியிருப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மேற்பகுதியில் உள்ள இரணமடுப்பகுதியில் விமானத்தளம் அமைப்பதற்கும், மன்னார் முல்லிக்குளம் என்றபகுதியில் அங்குள்ள மக்கள் விரட்டியடிக்கப்பட்டு ,அந்தப்பகுதியில் பெருயளவிலான கடற்படைத்தளம் அமைக்கப்பட்டு வருகின்றது.

யாழ்பாணம் வலிகாமம் பகுதியில் 23 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படாமல், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

இதேபோல் ஆயிரக்கணக்கான வீடுகள் , நிலங்கள் இராணுவத்தினரால் கபளிகரம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்பாணம் ,மன்னார் ,வவுனியா ,கிளிநொச்சி , முல்லைத்தீவு என சகல பகுதிகளிலும் நிலங்கள்

அபகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் , இலங்கையின் வடக்குமாகணத்தின் குடிசன பரம்பலை மாற்றக்கூடிய வகையில், மாற்ற வேண்டுமென்ற வகையிலேயே அமைகின்றன.

சிங்களக் கடற்தொழிலாளர்கள் , விவசாசியகள் என தமிழ் பிரதேசங்கள் எங்கும் குடியேற்றப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

இவ்வாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுடைய கருத்துக்கள் அமைய, இவ்விவகாரம் குறித்து நாதம் வானோசை நிகழ்ச்சியில் கருத்துரைத்த, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் , சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கமயமாக்கலில் இருந்து தமிழர்களின் இருப்பினைத் தக்கவைக்க, சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றினைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கியநாடு சபை செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பலஸ்தீன நிலப்பரப்பில் , இஸ்றேலினால் மேற்கொள்ளப்பட்ட யூதக்குடியேற்றங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை உதாரணமாகக் கொண்டு , இலங்கைத்தீவின் தமிழர் அரசியல் இருப்பில் ,எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தினை முன்னுணர்ந்துஎ இன்றே அதனைத் தடுப்பதற்குரிய ஒரு பொறிமுறையாக அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொன் பாலராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.