Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறப்பு அதிரடிப்படையின் நடமாட்டங்களை புலிகளுக்காக உளவுபார்த்த மூவர் வவுனியாவில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vavuniya-prison.jpg

[size=4]விடுதலைப் புலிகளின் உளவாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை சிறிலங்கா காவல்துறையினர் வவுனியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை பற்றிய தகவல்களை இவர்கள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்குப் பரிமாறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறை தலைமையக பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வவுனியா சிறைச்சாலையில் கைதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்காவலர்களை மீட்கும் நடவடிக்கையை சில சட்டவாளர்கள் ஒளிப்படம் எடுத்ததாகவும், அவர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றில் இருந்த காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் 28 பேரும் புலம்பெயர் தமிழர்களுடன் செய்மதித் தொலைபேசி மூலம் தகவல்களைப் பரிமாறியுள்ளதாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி பிரதி காவல்துறைமா அதிபர் சந்திரசிறி ரணவான தெரிவித்துள்ளார்.

சிறைக்காவலர்களை மீட்கும் நடவடிக்கையின் போது இவர்களிடம் இருந்து 57 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“உதவிக்காவல்துறை அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்க தலைமையில் வவுனியாவுக்கு சென்ற 40 கொமாண்டோக்களைக் கொண்ட சிறப்பு அதிரடிப்படையின் சிறப்பு ஆயுத மற்றும் தந்திரோபாய அணி இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றது.

மொத்தம் 80 கொமாண்டோக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த ஜுன் 29ம் நாள் நண்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை அடுத்து உடனடியாகவே, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் 28 பேரும் அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120703106518[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.