Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15வது தமிழர் விளையாட்டு விழா - பிரான்ஸ்

Featured Replies

[size=5]பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடாத்திய 15வது தமிழர் விளையாட்டு விழா 01-07-2012, லு புர்ஜேயில் அமைந்துள்ள Parc Départemental de La Courneuve - L’Air des Vents Dugnyமைதானத்தில் நடைபெற்றது.

தாயகத்தில் போரினாலும் இயற்கை அனர்த்தத்தாலும் கொல்லப்பட்ட பொதுமக்களையும், விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட நினைவுத் தூபி முன்பாக பொதுச் சுடரினை கழகத்தின் பொருளாளர் திரு. வல்லிபுரம் கிருபாகரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

கழகத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் புடைசூழ வருகை தந்த பிரமுகர்கள் அனைவரையும் கொடிக்கம்பம் வரை, திருமதி. மீரா மங்களேஸ்வரன் அவர்களின் மாணவிகள் நடனம் வழங்க, நந்தகோபன் குழுவினர் தவில் நாதஸ்வரம் முழங்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன்பின், பிரான்ஸ் தேசியக்கொடியினை லு புளோன் மெனில் நகரபிதா திரு. டிடியே மிங்கோன் (M. Didier Mignon, Maire du Blanc Mesnil) அவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியினை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும், கமினியுஸ் கட்சியின் தலைவியும் தற்போதய சென் சென் தெனிஸ் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி. மரி ஜோர்ஜ் பூவே (Mme. Marie Georges Buffet, Député de la Seine Saint Denis) அவர்களும், தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை கழகத்தின் கௌரவ உறுப்பினர் திரு. பேதுறுப்பிள்ளை ஜெயசூரியர் அவர்களும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து தாயகத்தின் விடுதலைக்காக போராடி வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட போராளிகள், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் 15வது தமிழர் விளையாட்டு விழாவின் நிகழ்வுகள் ஆரம்பமானது. மங்கள விளக்கினை சென் சன் டெனிஸ் மாகாண சபை உறுப்பினரான திரு. ஏர்வே பிறாமி(M. Hervé Bramy, conseiller général de la Seine Saint Denis), துனி நகரமன்ற உறுப்பினரான திரு. மிசேல் டெல்பிடாஸ்(M. Michel Delplace, conseiller municipal de Dugny), ரான்சி மாநகர சபை உறுப்பினரும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் - பிரான்சின் தலைவருமான திரு. அலன் ஆனந்தன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சரான திரு. நாகலிங்கம் பாலச்சந்திரன், கழகத்தின் தலைவரான திரு. தர்மலிங்கம் கோணேஸ்வரன், கழகத்தின் செயலாளரான திரு. திருநாவுக்கரசு ரவீந்திரன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

தாச்சிப் போட்டி, முட்டிஉடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல் போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் உட்பட கரப்பந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம், சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்கள் மற்றும் பலவகை வேடிக்கை விநோத விளையாட்டுக்களில் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று மகிழ்ந்தனர்.

சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் - அறிவூட்டும் போட்டி நிகழ்வுகளும் காற்று நிரப்பிய பலூன் மாளிகையும், சிறுவர் பூங்காவும் சிறுவர்களைக் கவர்ந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. 15வது ஆண்டை முன்னிட்டு சிறுவர்களுக்கான குதிரை வலமும் இடம்பெற்றது.

மாலை இசைநிகழ்வுகள், நடனநிகழ்வுகள் மற்றும் நாடகம் உட்பட பலவகை கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது. நீங்களும் பாடலாம் நிகழ்வில் பாரிசின் முன்னணி இசைக் குழுவான சன்ராஜ் கலைஞர்களின் இசையில் பல பாடகர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பிரான்சின் பிரபல பாடகர்களுடன் கொலண்ட நாட்டில் வாழும் ராப்பிசைப் பாடகர் திரு. சுரேஸ் ட வன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

பாரீஸ் தமிழர் கல்வி நிலைய மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இணைந்து தெருக்கூத்து நடனத்தை வழங்கினர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மக்களிற்கு உணவூட்டுவதற்காக தமிழர் உணவகம் நிறுவப்பட்டு, தாயகச் சுவையுடன் ஓடியல் கூழ், அப்பம், தோசை உட்பட பலவகை உணவுவகைகளும், சிற்றுண்டிகளும் குளிர்பாணங்களும் பரிமாறப்பட்டன.

பிரான்சின் முன்னணி தமிழ் வணிகர்களின் சிறப்புத் தள்ளுபடி விலையிலான விற்பனைகளும் இடம்பெற்றது.

ஜி ரிவி தொலைக்காட்சி கலைஞர்கள் நேரடியாக கலந்துகொண்டு தங்களது அரங்கத்தில் ஜனரஞ்சக நிகழ்வுகளை நடாத்தினர்.

கலைஞர் ஐங்கரன் தொலைக்காட்சி நிறுவனமும் தனது விளம்பரத்துடன் தள்ளுபடி விலையில் ஒலி ஒளித் தட்டுக்களை விநியோகித்தது.

தமிழர் குரல் மற்றும் தமிழ் அமுதம் வானொலிகள் தங்களது நேரஞ்சலையும் விளம்பரத்தையும் முன்னெடுத்தார்கள்.

தமிழர் நடுவம் மற்றும் நாடுகடந்த அரசு உறுதுணைக் குழு ஆகியவை தங்களது செயற்பாடுகள் பற்றிய செயலகத்தை நிறுவி, மக்களுக்கு தங்களது கருத்துக்களை விளக்கினர்.

மக்களின் நலன் கருதி சி. ஐ. எப் பேருந்துச் சேவையும், எ. டி. பி. ஏஸ் இன் முதலுதவிச் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழாவில் சென் சன் டெனிஸ் மாகாண அவை துணைத் தலைவர் திரு. ஸ்தெபன் துருசெல்(M. Stéphane Troussel, Vice président du conseil général de la Seine Saint Denis), இல் சென் டெனிஸ் நகரசபை உறுப்பினர் திரு. ரவிசங்கர் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட சிறுவர்கள் பெரியவர்கள் என 7000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். காலை 10.00 மணிக்கு விழா ஆரம்பமாகி மாலை 9.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்படும் சிறியரக உந்துருளி (Scooter).

இவ்விழாவில் கலந்துகொண்டவர்களின் நுழைவுச் சீட்டுக்கள் நல்வாய்ப்புப் பார்க்கப்பட்டது. நல்வாய்ப்பைத் தட்டிக்கொண்ட இலக்கம் 02441.

PHONE 2000நிறுவனம் நடாத்திய நல்வாய்ப்பில் வெற்றிபெற்ற இலக்கங்கள் :[/size]

[size=5]
·
முதலாவது பரிசிலக்கம்
222 -
samsugn Galaxy S3
[/size]

[size=5]
·
இரண்டாவது பரிசிலக்கம்
236 -
Iphone 4
[/size]

[size=5]
·
மூன்றாவது பரிசிலக்கம்
57 -
Samsung
[/size]

[size=5]நன்றி[/size]

[size=5]http://seithy.com/br...egory=TamilNews[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.