Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்கள் விசா காலம் முடிந்தாலும் தமிழகத்தில் தங்க அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TamilNadu-6712-150.jpg

[size=4]இலங்கை தமிழர்களின் விசா காலம் முடிந்தாலும் அவர்கள் தமிழகத்தில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அலைக்கழிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.[/size]

[size=4]இலங்கை போர் காலத்தில் ஏராளமான தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கு உள்நாட்டு போர் முடிந்துவிட்டது. இருப்பினும் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வருவதும் தொடர்கிறது.[/size]

[size=4]சிலர் முறையாக சுற்றுலா (3, 6 மாதம்) மற்றும் பணி விசா பெற்று தமிழகத்திற்கு வருகின்றனர். இவர்கள் தமிழகத்தில் தங்க இருக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தங்கள் வருகையை பதிவு செய்வது அவசியம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர்கள் இலங்கை தமிழர்களின் வருகையை பதிவு செய்யாமல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், அகதிகள் மறுவாழ்வுத்துறை கமிஷனர் அலுவலகம், இலங்கை துணை தூதரகத்தில் கடிதம் பெற்று வருமாறு திருப்பி அனுப்பி அலைக்கழிக்கப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், இலங்கை தமிழர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.[/size]

[size=4]இதை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் கடும் நடவடிகை எடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கை தமிழர்கள் அலைக்கழிக்கப் படாமல் இருக்க போலீ சாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களிடம் முறையான விசா இருந்தாலும், விசா காலாவதியாகிவிட்டாலும், காவல் நிலையத்தில் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தாலும் தகுந்த விசாரணை நடத்த வேண்டும்.[/size]

[size=4]பின்னர், இலங்கை தமிழர்கள் வரும் தேதியில் பதிவு செய்து சான்று வழங்க வேண்டும். இலங்கை மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது குடியுரிமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க மற்றும் விசா நீட்டிப்பு செய்ய நற்சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் விசா காலம் முடிந்தாலும் அவர்கள் தங்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டிலேயே தங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இவற்றை மீறும் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலைய எழுத்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.