Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா விமானப்படைக்குப் பயிற்சி - ஜெயலலிதாவின் கோரிக்கையை புதுடெல்லி கண்டுகொள்ளாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Indo-lanka%20flages.jpg

[size=4]தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெறும் சிறிலங்கா விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை இந்திய மத்தியஅரசு கண்டுகொள்வதற்கு சாத்தியமில்லை என்று ‘இந்து‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒரு வாரத்துக்கு முன்னரே இணங்கியுள்ளதே அதற்குக் காரணம் என்று ‘இந்து‘ நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் மாநில முதல்வர் ஒருவரின் கோரிக்கை குறித்து சிறிலங்காவினால் பதிலளிக்க முடியாது என்று சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“எல்லா இருதரப்பு விவகாரங்களையும் கொழும்பும், புதுடெல்லியுமே கலந்துரையாடி முடிவு செய்கின்றன. இந்தநிலையில் இதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர், புறச்சக்திகளால் பயிற்சிகள் பாதிக்கப்பட்ட போது, பயிற்சியாளர்கள் நடுநிலை மாநிலங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர் அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நல்ல நிலையில் இல்லாதபோதும், பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில் இருநாடுகளும் உறுதியை எதிர்பார்க்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகவியலாளர்களிடம் பேசும்போது, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

“நாம் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்தும் ஏனைய. பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் விவாதித்தோம். இதுகுறித்து மேலும் விவாதிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சிறிலங்கா எமது நெருக்கமான அண்டை நாடு. அதனுடன் எமக்கு பன்மைத்தன்மை கொண்ட உறவுகள் உள்ளன. அதனை மேலும் பலப்படுத்தி முன்னேற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம்.“ என்று கூறியிருந்தார்.

2010 டிசெம்பரில் நடந்த பாதுகாப்புச் செயலர் மட்ட பேச்சுக்களின் பின்னர், இந்திய ஆயுதப்படை பயிற்சி நிலையங்களில் சிறிலங்கா படையினருக்கு மேலதிக இடங்களை ஒதுக்கவும், இருதரப்பு பயற்சிகளை மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டது.

இந்திய - சிறிலங்கா கடற்படைப் பயிற்சி திருகோணமலைக்கு அப்பால் நடத்தப்பட்டது.

அதுமட்டுமன்றி இரு கரையோரக் காவல் கப்பல்களை சிறிலங்காவுக்காக இந்தியா கட்டிவருகிறது.

2009 மே மாதம் விடுதலைப் புலிகளின் வீழ்சிக்குப் பின்னர், சிறிலங்காவுடனான இந்தியாவின் அமைதிக்கால பாதுகாப்பு இணக்கப்பாடு தீவிரமான தொடர் பேச்சுக்களின் பின்னர் வடிவமைக்கப்பட்டது.

இந்தப் பேச்சுக்கள் இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகள் மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்திய இராணுவ, விமானப்படை, கடற்படைத் தளபதிகள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

பாதுகாப்புச் செயலர் மட்டத்திலான பேச்சுக்கள் காலவரம்புடன் நிறுவன மயப்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளினதும் பாதுகாப்புக் கரிசனைகள், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்றும் இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.[/size]

[size=4]http://www.puthinapp...?20120706106537[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.