Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவனை சுட்டுக் கொல்லும் இலங்கை - இத்தாலி- இந்த வரிசையில் அமெரிக்கா..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

[size=3]தமிழக மீனவனை சுட்டுக் கொல்லும் இலங்கை - இத்தாலி- இந்த வரிசையில் அமெரிக்கா..?! ஈழதேசம் செய்தி..![/size]

[size=3]

விரட்டி விரட்டி கொல்லப்படுகின்றனர் தமிழக மீனவர்கள். தினமும் இலங்கை கடற்படை தமிழக மீனவனை பார்த்ததும் கம்பு கத்தி,கோடரி, துப்பாக்கி சகிதம் பாய்ந்தோடி வந்து சுட்டுக் கொன்று விட்டு சாவகாசமாக இலங்கை சென்று விடுகிறது சிங்கள கடற்படை மற்றும் அதன் கூலிப்படைகள்.என்னடா இது..! இலங்கை கடற்படை மட்டும் தமிழக மீனவனை சுட்டு சுட்டு விளையாடுகிறது, நாமும் எவ்வளவு நாள் தான் சும்மாவே கடலில் போய்க் கொண்டிருப்பது என்று அந்த வழியே வந்த இத்தாலிக் கப்பல் இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள். அதில் ஒருவர் மலையாள மீனவன், எனவே மலையாள முதல்வர் உம்மன் சாண்டி இத்தாலிக் கப்பலின் மாலுமிகளை கைது செய்து வழக்குப் போட்டார். இத்தாலி அரசும் என்னனவோ பகீரித முயற்சியெல்லாம் செய்து கோர்ட்டுக்கு வெளியே பிரச்சனையை முடித்துக் கொண்டுவிட்டார்கள். [/size]

[size=3]

கடந்த திங்கள் கிழமை ஏ.சேகர், எம்.பாண்டுவநாதன், கே.முத்துக்கண்ணன், ஆர்.முத்து மணிராஜ் மற்றும் துபாய் படகோட்டி என்று ஒரு டீம் துபாய் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஜபல் அலி என்ற துறைமுகம் அருகில், அமெரிக்கா போர்க்கப்பலை நோக்கி இந்த மீனவர்கள் வந்தார்கள், எனவே தான் சுட்டுக் கொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்கிறது அமெரிக்கா கடற்படையினர். அமெரிக்கா போர்க் கப்பலுக்கு ஈரான் கடற்பகுதியில் ஏமன் கடற் பகுதியில் பக்ரைன் கடற்பகுதியில் என்ன வேலை..? வளைகுடா கடற்பகுதி முழுதும் குத்தகைக்கு எடுத்துள்ள அமெரிக்கா ஈரான் நாட்டின் கடற்பகுதியை ஏலத்திற்கு எடுக்க முடியாத கோபத்தில் ஈரான் நாட்டை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. [/size]

[size=3]

மேலும் எவ்வளவு நாள் தான் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சும்மாவே கப்பலில் நிற்பது, பார்த்தார்கள் இந்த ஆர்.சேகர் டீம் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், அமெரிக்கா கடற்படை வீரர்கள் சுட்டு சுட்டு விளையாடி இருக்கிறார்கள். இந்த துப்பாக்கியால் சுட்டு விளையாடும் பொழுது ஆர்.சேகர் என்பவர் அந்த இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்து விட்டார். மற்ற மூவரும் துப்பாக்கி குண்டுகளை வயிற்றிலும் முதுகிலும் கைகளிலும் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். [/size]

[size=3]

இந்த அமெரிக்காவின் துப்பாக்கி சூடு சம்பவத்தை முதல் ஆளாக ஈரான் கண்டித்துள்ளது. யு.ஏ.இ.அரசிடம் ஈரான் கோபமாக சற்று கேள்விகளை எழுப்பியுள்ளது. பிராந்திய பாதுகாப்பு என்பது அந்தந்த நாடுகளின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டுமே அன்றி, அந்நிய நாடுகளின் அதாவது அமெரிக்காவின் உதவியை ஏற்கக் கூடாது என்று. அமெரிக்கா ஆதரவளார்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், 2000 ம் வருடத்தில் யு.எஸ்.எஸ்.கோல். என்ற அமெரிக்காவின் அணு ஆயுத கப்பல் ஏமன் துறைமுகத்தில் வைத்து தாக்கப்பட்டன. அந்த தாக்குதலில் சுமார் 16 அமெரிக்கா கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அல் கொய்தாவினர் சிறு படகில் வந்தே நடத்தினர். எனவே அதேபோன்று அல்கொய்தாவினர் தான் அமெரிக்கா கப்பலை தாக்க வருகின்றனர் என்று கருதி எங்களது வீர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்கிறார்கள். [/size]

[size=3]

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டார். எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள், துபாயில் நடந்தது என்ன..? அறிக்கை அளிக்க இந்திய தூதருக்கு உத்தரவை வழங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன. யு.ஏ.இ, ன் இந்திய தூதர் அறிக்கையை எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களிடம் கொடுத்தவுடன், அந்த அறிக்கையை நன்கு படித்து பார்த்து, பிறகு தங்களது கண்டனங்களை தெரிவித்தாலும் தெரிவிப்பார்கள் போல காங்கிரஸ் அரசு. [/size]

[size=3]

விசயம் என்னவென்றால், அமெரிக்கா கடற்படை எச்சரிக்கை செய்தது என்றும், அந்த எச்சரிக்கையை மதிக்காமல் அந்த கப்பலை சுற்றி செல்ல முயற்சித்த மீனவர்களை வேறு வழியே இல்லாமல் சுட்டுத் தள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது அமெரிக்கா கடற்படை என்று ஒரு வாதத்தை வைக்கிறார்கள். அமெரிக்கா கடற்படையினரும் இத்தாலி கடற்படையினரும் எச்சரிக்க செய்ய முயன்றோம் என்று ஒரு பேச்சுக்காவது சொல்லுகிறார்கள். தமிழக கடற்பகுதியில் எந்த எச்சரிக்கையும் செய்யாமல் இலங்கை கடற்படை தினசரி சுட்டு விளையாடி வருகிறது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் தமிழர்கள் என்ற காரணத்தினால் தானோ..? துபாய் - தமிழக மீனவன் இலங்கை கடற்படையினரிடம் அடி உதை வாங்காமல், துப்பாக்கிச் சூடு வாங்கமால் துபாயில் போய் பிழைக்கலாம் என்றால், அங்கே வெளிநாட்டுக்காரன் துப்பாக்கியால் சுட்டு சுட்டு விளையாடுகிறான் என்கிறார் ராமநாதபுர மீனவ சங்க தலைவர். [/size]

[size=3]

கொஞ்ச நாட்களுக்கு முன் கடற்படை ஒத்திகை மற்றும் கூட்டு பாதுகாப்பு போர் ஒத்திகை என்று உலகில் உள்ள அணைத்து கடற் பரப்பிலும் கடற்படையும் ராணுவமும் சேர்ந்து போர் பயிற்சி மேற்கொண்டார்கள். இந்த அணைத்து கடற் பரப்பிலும் அமெரிக்கா கப்பற்படை தவறாமல் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டது. எனவே, அந்த பயிற்சியின் முடிவில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார்களோ..? தமிழக மீனவன் என்று ஒரு கூட்டம் உள்ளது. அவர்களை சுட்டுக் கொல்லும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். யாரும் எவரும் ஏதுவும் கேட்க மாட்டார்கள். யாரும் அற்ற அனாதைக் கூட்டம் அது என்று சொல்லியிருப்பார்களோ..? [/size]

[size=3]

இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பித்து, துபாயில் இறங்கியுள்ள சுமார் 4000 தமிழக மீனவனுக்கு அங்கும் பாதுகாப்பில்லை. கூலிக்கு மாரடித்து உயிரை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையே தொடருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.[/size]

[size=3]

மாயாண்டிக்கருப்பு [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.