Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம்..?! 2000 மெகா வாட் உற்பத்தி விரைவில் ..! 2000 பேர் மீது வழக்கு...! மெட்ராஸ் உயர்நீதி மன்றம் கண்டனம்..! ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

கூடங்குளம்..?! 2000 மெகா வாட் உற்பத்தி விரைவில் ..! 2000 பேர் மீது வழக்கு...! மெட்ராஸ் உயர்நீதி மன்றம் கண்டனம்..! ஈழதேசம் பார்வையில்..!

மக்களை ..யிர் அளவுக்கு மதிக்கும் காங்கிரஸ் அரசு. அதுவும் தமிழ் மக்களை பன்றியின் ...யிர் அளவிற்கு கூட மதிப்பதில்லை என்று கூறினால் யாரவது மறுக்க முடியுமா என்ன...? மத்திய நாடாளுமன்ற இணை அமைச்சர் வே.நாராயணசாமி அவர்களின் விமான நிலைய பேட்டியைப் பார்த்தால், சாதாரண அப்பாவி மக்கள் என்ன நினைப்பார்கள்..? சரி இந்த அமைச்சர் தான் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசை தனது தோளில் வைத்து தாங்குகிறார் என்று நினைத்து விடமாட்டார்களா..? அப்படி ஒரு பேட்டி எப்பொழுது பார்த்தாலும். கிடக்கட்டும் அது அவர் ஸ்டைல் ஆக இருக்கலாம். ஆனால் இந்த அமைச்சர் என்ன நினைத்துக்கொண்டு பேட்டி கொடுக்கிறார்.? மற்ற அமைச்சர்கள் எல்லாம் சமார்த்தியமாக பேட்டி கொடுக்கும் பொழுது, இவர் மட்டும் ஏன் இப்படி..? ஒருவேளை தமிழ் நாட்டு மக்கள்தானே, அனைவரும் மாங்காய் மடையர்களாகத் தானே இருப்பார்கள் என்ற நினைப்பாய் கூட இருக்கலாம்.

அடுத்த ஆண்டிற்குள் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூடன்குள அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றியதால் இந்த அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவின் கொடியேற்றத்தின் போது இந்த அணுமின் நிலையம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கும். 2 வது அணு உலையின் மூலம் மின் உற்பத்தி துவங்குவதற்கான அணைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 வது மற்றும் 4 வது அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்திய - ரசியா நாடுகள் இடையே கையெழுத்தாகி உள்ளது என்றார். பிறகு வழக்கம் போல வே.நாராயணசாமி சொல்வதைப் போல சொன்னார் நிலைய இயக்குனர் சுந்தர். " கூடங்குளம் அணு மின் நிலையம் அணைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பூர்த்தி செய்துள்ளது "என்றார்.

ஒருவேளை, பேப்பர்களில் கோப்புகளில் அணைத்து வித பாதுகாப்பு அம்சங்களையும் எழுதி வைத்துள்ளார்கள் போல, இல்லாவிட்டால் அப்துல் கலாம் தொடங்கி நாராயணசாமி தொடங்கி இன்று நிலைய இயக்குனர் சங்கர் வரை தெரியாமலா சொல்லுவார்கள்..?

கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தடையில்லா சான்றிதழ் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் வாங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த பொழுது தான் மெட்ராஸ் உயர் நீதி மன்றம் அமைச்சர் வே.நாராயணசாமிக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது. நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளார்கள். வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது கூடங்குளம் அணு உலை தொடங்கும் தேதியை அறிவித்த மத்திய அமைச்சர் நாராயணசாமியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் உயர்நீதி மன்றத்தில் கூடங்குளம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அணு உலை துவங்கும் தேதியை எவ்வாறு அறிவிப்பீர்கள்..? தீர்ப்பு வெளியாகும் முன்பே மத்திய அமைச்சருக்கு என்ன அவசரம்..? மத்திய அமைச்சர் உச்ச நீதி மன்றத்தைத் தான் மதிப்பாரா..? உயர் நீதி மன்றத்தை மதிக்க மாட்டாரா..? என்றார்கள்.

அதோடு உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கூடங்குளம் அணு உலையை இயக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது எவ்வாறு என்று விளக்கம் அழிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.அணு உலையை இயக்குவது குறித்து தேதியை அறிவித்தது குறித்து மத்திய, மாநில அரசுகள் வரும் 21 ம் தேதிக்குள் பதில் அழிக்க கோரி நோட்டிஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆக, நீண்ட நாட்களாக இருந்த உயர் நீதி மன்ற நீதிபதிகளின் மன வேதனையை கொட்டி விட்டார்கள்..! மத்திய அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் உச்ச நீதி மன்றத்தை மதிக்கும் அளவிற்கு உயர் நீதி மன்றத்தை மதிப்பதில்லை என்று. மேலும், மத்திய அரசு சார்பில் இருந்து இந்த வழக்கில் யாரும் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், 2 மாத காலமாக கூடங்குளம் பிரச்சனையை விசாரித்து வருவதற்கு என்ன மரியாதை உள்ளது. இப்படியே போனால், இந்த வழக்கினை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியின் பெஞ்சுக்கு மாற்றிவிடுவோம் என்று எச்சரித்தார்கள் நீதிபதிகள்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழக முதல்வர் ஜெ.அம்மையாரின் நேரடி பார்வையில் உள்ள துறை. முதல்வருக்கு தெரியாமல் தடையில்லா சான்றிதழ் கொடுத்திருக்க முடியாது. மேலும் உயர் நீதி மன்ற நீதிபதிகளின் இந்த தேவையற்ற கேள்விகளுக்கு ஒரு பெரிய ஆப்பை தாயாரித்து விட்டது சோனியா அரசு. நீதிபதிகள் பாதுகாப்பு உத்திரவாத மசோதா என்ற ஒன்றை. இந்த மசோதா மேல்சபையில் ஒப்புதலுக்காக நிலுவையில் நின்று கொண்டிருக்கின்றன. இந்த புதிய மசோதா என்ன சொல்கிறது..? அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் இவர்களுக்கான நிகர் நிலை அதிகாரிகள் கூட்டத்தை பார்த்து கேள்விக் கேட்பதை, உத்தரவு போடுவதை, கருத்து சொல்வதை தடை செய்யும் மசோதா தான் இந்த புதிய மசோதா..! எப்படி இருக்கிறது கதை.? இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரின் நம்பிக்கையின் கடைசி நிறுவனம் இந்த நீதி மன்றம் தான். அதற்கும் ஒரு பெரிய ஆப்பை வைத்துவிட்டது அன்னை சோனியா அரசு என்று கருதலாம்.

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து கூடங்குளம் பகுதியில் நேற்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக உதயகுமார் உள்ளிட்ட சுமார் 2000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். போராட்டம் என்றால் அது கூடங்குளம் போராட்டாம் தான் என்று வைக்கோ பேசியுள்ளார். அதனால் வைக்கோ மீதும் ஒரு வழக்கைப் போட்டுள்ளார்கள். விஜயாபதி கிரமா நிர்வாக அதிகாரி அதாவது வி.ஏ.ஓ. செந்தில் குமரன் கூடங்குளம் காவல்துறையில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கூடங்குளம் போலீஸ் சார், சுதந்திர தினத்தையும், தேசிய கொடியையும் அவமதித்தது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும், கறுப்புக் கொடி ஏற்றி ஊர்வலமாக சென்ற சுமார் 2 ஆயிரம் பொது மக்கள் மீது படு பயங்கரமான வழக்குகளை போட்டுள்ளார்கள். கூடன்குள போராட்டாக்கார்கள் மற்றும் அதன் தலைவர்கள் மீது மட்டும் இதுவரை சுமார் 274 வழக்குகளை போட்டு பேப்பர் காகிதங்களை நிரப்பி உள்ளார்கள்.

உலகம் முழுக்க அணு உலையே வேண்டாம் என்று ஊர்வலம் போராட்டம் என்று நடந்து கொண்டிருக்க, பல ஐரோப்பிய அரசுகள் அணு உலைகளை மூடி விடுவோம் என்று அறிவித்துக் கொண்டிருக்க, கேரள மற்றும் மேற்கு வங்க, மாராட்டிய அரசுகள் அணு உலைகளை எங்களது மாநிலங்களில் திறக்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்க, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியும், தற்போதைய முதல்வர் ஜெ.அம்மையாரும் அணு உலைகளை திறக்கிறார்கள் என்றால் இவர்கள் தமிழ் மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

இப்பொழுது சொல்லுங்கள்...! இந்திய மக்களை மயிர் அளவிற்கு மதிக்கும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை பன்றியின் மயிர் அளவிற்கு மதிக்கிறது என்றும் கருதலாமா..?

மாயாண்டிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.