Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி பூச்சாண்டி காட்டும் இலங்கை அரசு - மனோ கணேசன்..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

[size=3]புலி பூச்சாண்டி காட்டும் இலங்கை அரசு - மனோ கணேசன்..! ஈழதேசம் செய்தி..![/size]

[size=3]

அளவுக்கு அதிகமான ராணுவத்தினரை குவித்து வைத்துக்கொண்டு இருக்கும் காரணத்தால் தான் பிரிட்டன் நாடு தன் நாட்டு மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பிரிட்டனின் சுற்றலா பயணிகளுக்கு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை செல்லும் பிரிட்டன் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது என்றார் மனோ கணேசன் அவர்கள். இவை புரியாமல் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் அவர்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பை நீக்குங்கள் என்று பிரிட்டன் அரசுக்கு வேண்டுகோள் விடுப்பது நல்ல நகைச்சுவை என்று கூறினார். [/size]

[size=3]

ஒரு நகர் முழுதும் அல்லது ஒரு சிட்டி முழுதும் பெருமளவில் ராணுவத்தினரை குவித்து வைத்தால் என்ன நடக்கும்..? இதோ ஒரு உதாரணத்திற்கு இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வேளா வேளைக்கு மட்டன் சாப்பாடும் குடிப்பதற்கு விலை மலிவில் சரக்கு ரம்மும் என்று பொலி காளைகளைப்போல் வளர்த்து வீதியில் நிறுத்தினால் என்ன செய்வார்கள் அந்த ராணுவ வீரர்கள்..? அங்கு வரும் போகும் பெண்களை தூக்கிக் கொண்டு போய் கற்பழித்து விட்டு கொலை செய்து சாக்கடையில் வீசி எறிந்து விட்டு, அவர்கள் தீவிரவாத சதி செய்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்லுவார்களா மாட்டார்களா..? [/size]

[size=3]

ஆனால் தற்பொழுது இந்தியா ராணுவ வீரர்கள் காஷ்மீரில் தாயையும் மகளையும் ஒன்றாக வைத்து கற்பழிக்கிறார்கள், கற்பழித்து முடித்தவுடன் கொன்று விடுகிறார்கள். இதை தடுக்கும் அந்த வீட்டில் உள்ள ஆண்களை துப்பாக்கியால் சுட்டும், கை கால் கண்களை கட்டி தெருவில் இழுத்துக் கொண்டு போவதும் என்று ஒரே காட்டுத் தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறது இந்திய ராணுவம். இதைப்போல வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள ராணுவமும் இவ்வாறே நடந்து கொள்கிறார்கள். அங்குள்ள மாநில அரசு இந்த கொடிய செயல்களை எல்லாம் தட்டி கேட்க முடியாது. ஏன் என்றால் சிறப்பு ஆயுத சட்டம் என்று ஒன்றை போட்டு, அதை ராணுவத்தின் கைகளில் கொடுத்திருக்கிறார்கள். இந்த ராணுவ வீரர்கள் மீது எந்த வழக்கும் போட முடியாது. ராணுவ நீதி மன்றமே விசாரித்தால் தான். ராணுவ நீதி மன்றம் விசாரிக்கும் எனில், ஒரு ராணுவ வீரரும் ராணுவத்தில் இருக்க முடியாது. குறிப்பாக ராணுவ உயர் அதிகாரிகள் அனைவருமே அந்த பதவியில் இருக்க முடியாது. மேலும் இந்த ராணுவ நடவடிக்கைகளை விமர்சித்தால், அவர்களின் செயல்திறனை குறைத்து விடும், நாட்டின் பாதுகாப்பில் ஓட்டை விழுந்து விடும் என்று ஆட்சியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊடகங்கள், ஆட்சியாளர்களின் அறிவு ஜீவிகள் இவ்வாறு கூறி விடுவார்கள்.[/size]

[size=3]

ராணுவம் என்றாலே இப்படிதான் இருக்கும், அது அமெரிக்க ராணுவமாக இருந்தாலும் சரி, வேற எந்த ராணுவமாக இருந்தாலும் சரி என்று ஒப்புதல் சான்றிதழ் ஒன்றை ஜார்ஜ் புஷ் அவர்கள் முன்பே வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் இலங்கை ராணுவத்தினரை மனித பிறவிகளிலேயே சேர்க்க முடியாது. அவர்களை கொண்டு போய் தமிழர்கள் வாழும் அணைத்து பகுதிகளிலும் குவித்து வைத்தால், என்ன நடக்கும்..? முடி வெட்டும் சலூன் கடைகளை கூட அவர்கள் நடத்துகிறார்கள் என்றால் என்ன சொல்வது..? நான்கு பேர் ஒன்றாக கூட முடியாது. ஒருவர் வீட்டுக்கு விருந்தினர் வர முடியாது. அவ்வளவு ஏன் சாவு ஒன்று நடந்து விட்டால் கூட்டம் சேர முடியாது. அந்த இழவு வீட்டிற்கு செல்வதற்கு இலங்கை ராணுவத்தின் அனுமதியை பெற வேண்டும். இதையெல்லாம் நாம் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். இவர்களுக்கு வேற வேலை இல்லை என்று சொல்லுவார்கள். இவையெல்லாம் டெசோ மாநாடு நடத்தி, முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.அவர்கள் சொன்னது. [/size]

[size=3]

பிரிட்டன் அரசின் எச்சரிக்கையும் ஜாக்கிரதை என்ற அறிவிப்பும் சரியானதாகத் தானே இருக்கும்.? அதுவும் பிரிட்டன்காரர்களுக்கு தெரியாத ராணுவ விசயமா..? உலகம் முழுதும் உள்ள மக்களை அவர்கள் அளவிற்கு கொன்று போட்டுள்ள வரலாறுகளை கொண்டது பிரிட்டன் ராணுவம். [/size]

[size=3]

மேலும் மனோ கணேசன் இவ்வாறு கூறினார். அரசாங்கம் வட கிழக்கு தமிழ் பிரதேசங்களில் ராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதின் நோக்கம் எமக்கு தெரியும். சிவில் நடவடிக்கைகளில் தலையிட்டு, தமிழ் மக்களை தொடர்ந்தும் தோல்வியடைந்த சமூகமாக வைத்திருப்பதற்கும், தமிழ் பிரதேசங்களில் நில அபகரிப்புகளைச் செய்யவும், தமிழர்களின் ஜனநாயக உரிமை கேட்டு பேசினால் கூட கண்காணிப்பதற்கும் தான் ராணுவத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. ஆனால் இந்த காரணங்களை வெளியில் சொல்ல முடியாது, எனவே இதோ புலிகள், அதோ புலிகள் என்று புலி பூச்சாண்டி காட்டி உலக நாடுகளையும், தமிழ் மக்களையும் ஏமாற்றி கொண்டிருக்கிறது என்றார். [/size]

[size=3]

ஒரு நாட்டில் பெரும்பான்மை சமூகம் தன் நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தை தன் சகோதரத் தன்மையுடன் அரவணைத்து செல்ல வேண்டும். அதுவே அந்நாட்டின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் என்று இல்லாமல் மிக முன்னேறிய சமூகமாக உலகிற்கு வழிகாட்டும். ஆனால் இலங்கை அளவிற்கு ஒரு சிறுபான்மை இனத்தை, தமிழ் இனத்தை அழித்து ஒழித்ததை ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள பெரும்பான்மை இனத்தில் கூட காண முடியாது. [/size]

[size=3]

யுத்தம் நடந்து மூன்று ஆண்டுகள் முடிந்து போய் விட்டன. சிறுபான்மை இனமான தமிழ் இனம் முள்ளு வேலிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது பன்றிகளை விட கேவலமாக. புலிகள் வந்தால் தான் முள்ளு வேலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால் புலிகள் மீண்டும் வருவதற்கு வேறு என்ன தடையாக இருக்க முடியும்..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.[/size]

[size=3]

சங்கிலிக்கருப்பு[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.