Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெருச் சண்டைக்காரனாக மாறிய உலகத் தமிழ் ஈனத் தலைவர் மு.கருணாநிதி..! ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

தெருச் சண்டைக்காரனாக மாறிய உலகத் தமிழ் ஈனத் தலைவர் மு.கருணாநிதி..! ஈழதேசம் பார்வையில்..!

பழ.நெடுமாறன் அனுப்பிய கப்பல் படையை நான் தடுத்தேனா..? விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு பழ.நெடுமாறன் போன்றோர் தூண்டிவிட்டது தான் காரணம். பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை என்னைப் பழிப்பதே வேலையா..? என்று காட்டமாக அல்ல கோபம் தலைக்கேறி, கண்கள் கொப்பளிக்க இவ்வாறு கேட்டுள்ளார்.இலங்கையிலே தமிழர்கள் மீது ராஜபக்சே போர் தொடுத்துவிட்டார் என்றதும், தன்னுடைய கப்பல் படையை பழ.நெடுமாறன் கொழும்பு நோக்கி அனுப்பியதைப் போலவும், அந்தப்படை இலங்கை போய் சேருவதற்குள் நான் தடுத்தி நிறுத்தி, முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதை போலவும் என்று கடுமையாக தாக்கியுள்ளார் மு.கருணாநிதி அவர்கள்.

ஆமாம்..! பழ.நெடுமாறன் மட்டுமல்ல எண்ணற்ற புலம் பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனுப்பிய 'வணங்கா மண்' என்ற அந்தக் கப்பலை தடுத்து நிறுத்தியதே இந்த மு.கருணாநிதியும் அவரின் மத்திய அரசும் தான் காரணம். செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் மனித உரிமைகள் சங்கம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்புகள் அனைத்தும் கெஞ்சினார்களே, கதறினார்களே, பல உயிர் காக்கும் மருந்துகள், உணவுப் பொருட்கள், அத்தியாவிசிய பொருட்கள் என்று பல ஆயிரம் டன் பொருட்கள் அனைத்தும் கடலில் கொண்டு போய் சேர்க்கவிடாமல் அன்றைய மு.கருணாநிதியின் இந்திய அரசு தடுத்து நிறுத்தி விட்டதே, முன்னாள் முதல்வர் மு.க.,வும் எங்கேயோ..? யாருக்கோ..? எதுவோ..? நடக்கிறது என்று மானாட மயிலாட பார்த்தவர்தானே. அதனால் தான் திரு.பழ. நெடுமாறன் அவர்களைப் பார்த்து தெருச்சண்டை போடுகிறார், மு.க.,அவர்கள்.உனது கப்பலை தடுத்து நிறுத்தினேனா..? என்று.

நேற்றைய பழ.நெடுமாறன் எழுதிய கடிதத்திற்குத் தான் இந்த தெருச்சண்டையை போட்டுள்ளார் மு.க.,அவர்கள். ' டெசோ நாடகம் முடிந்தது - கலைஞரின் வேடமும் கலைந்தது ' என்ற கட்டுரையில் திருவாளர் மு.கருணாநிதியின் கபட நாடகத்தை தோலுரித்து உப்பு தடவி உப்புக்கண்டம் போட்டு கொடியில் தொங்கப்போட்டு விட்டார் அய்யா நெடுமாறன் அவர்கள். நேற்றையதினம் தி.மு.க.கழக எம்.பி.க்கள், தமிழக மீனவன் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் பதுங்கி விட்டார்கள் கழக எம்.பி.க்கள்.பிறகு இவ்வாறு விளக்கம் சொன்னது கழகம். இலங்கைத் தமிழர்களை விடுவித்து விட்டார்கள், அதானால் தான் ஆர்ப்பாட்ட போராட்டங்கள் நடைபெறவில்லை என்று. ஆனால் என்ன நடந்திருக்கும்..? காங் - ஐ நிர்வாக குழு, கழக எம்.பி.க்களை கூப்பிட்டு வாங்கு வாங்கு என்று வாங்கியிருப்பார்கள். எங்கு வந்து ஆர்ப்பட்டாம்..கூத்து எல்லாம்..? என்று மிரட்டியவுடன் தோளில் கிடந்த துண்டைக் காணோம்... துணியைக் காணோம்... என்று ஓடி ஒளிந்திருப்பார்கள்.

ஒரு நாட்டில் மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும்போது, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இது போன்ற பிரச்சனைகளில் தலையிட்டு தவிர்க்க முடியும் என்பதை, அரசியல் அதிகார வரம்புகளை பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் உணர முடியும். ஏதோ எடுத்தேன்,கவிழ்த்தேன் என்று எரிச்சலை கொட்டி தீர்ப்பவர்களுக்கு அதையெல்லாம் சிந்திக்க நேரமோ, நினைப்போ கிடையாது என்று மாநில - மத்திய அரசு குறித்து விளக்கக் குறிப்பை சொல்லுகிறார். லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படும் போது ஏன் போரை நிறுத்தவில்லை என்றால், தலையை கவட்டைக்குள்விட்டு அப்படியே முதுகு வழியாக வந்து பிடரி வழியாக மூக்கை தொடலாம் என்று சொல்ல வருகிறார்.

சும்மா ஒத்தை ரூபாய், இரண்டு ரூபாய் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருந்தார் மமதாவின் மத்திய ரயில் மந்திரி, அந்த மந்திரியும் இரவு வரை மாமாதாவுக்கு தலையை ஆட்டிக்கொண்டு இருந்து விட்டு, மக்கா நாள் பகலில் காங்கிரஸ் பெருச்சாளிகள் கொடுத்த காசுக்கு ஆசைப்பட்டு, இந்த ஒத்தை ரூபாய் இரட்டை ரூபாய் என்று விலையை உயர்த்த, கொல்கொத்தாவில் இருந்தபடியே அன்றைக்கே ரயில் மந்திரியின் ராஜினாமா கடிதத்தை கொடுத்து காங் - ஐ பெருச்சாளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இந்திய ரயில் பட்ஜெட் தாக்கலில் மறுநாள் பதிவி விலகிய ஒரே ரயில் அமைச்சர் என்ற இந்தியப் பதிவை செய்துள்ளார் மமதா.

ஒரு சாதாரண ஒத்தை ரூபாய், இரட்டை ரூபாய் விலை உயர்வுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் என்றால்,.இதே வங்காளிகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டால் என்ன நடந்திருக்கும்..?அப்படியே அலேக்காக மேற்கு வங்க மாநிலத்தை இந்தியாவை விட்டு தனியே தூக்கிக் கொண்டு போயிருப்பாரா... மாட்டாரா..? காரணம் என்ன..? மக்களின் வரிப்பணத்தை, இயற்கை வளங்களை, அரசு காஜானாவை கொள்ளை அடிக்கவில்லை...திங்கவில்லை மமதா அவர்கள். இவற்றையெல்லாம் விட மாநில அரசின் உரிமையை, வங்காளிகளின் நலனை உயர்த்திப் பிடிக்கிறார். திராவிடம், தென்னிந்தியம், வட இந்தியம் என்று பேசவில்லை. பேசவும் மாட்டார்.

ப.சிதம்பரம் சென்னைக்கு வந்து என்னைப் பார்த்தது சும்மா தான். என்று பொய் மேல் பொய் சொல்கிறார். அப்புறம் எதற்கு ஈழம் என்ற ஓலையை அனுப்பினார்கள் உள்துறை அதிகாரிகள்..? நேரம் போகாமல் கடிதம் எழுதி எழுதி விளையாடினார்களா என்ன..? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறது என்கிறார். உள்ளம் பள்ளம் என்று டி.ராஜேந்தர் வசனத்தை பேசினால் எல்லாம் சரியாகி விடுமா என்ன..? புலம்பெயர் மக்கள் மற்றும் உலகத் தமிழர்கள் உங்கள் வசனத்தை மாத்தச்சொல்லி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆயிற்று.

உலகத் தமிழர்களின் ஒரே தலைவர், இனமான தமிழ் காவலர், நடமாடும் வள்ளுவர்..இன்ன பிற பட்டப்பெயர்கள் என்பதெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்னர் உலகத் தமிழர்களாலும், புலம் பெயர் மக்களாலும் பறிக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டு விட்டன. இப்பொழுது அவர்கள் வழங்கியிருக்கும் பட்டங்கள் எல்லாம் இவ்வாறு உள்ளன.

நவீன கால எட்டப்பன்

தமிழர்கள் இன துரோகி

ஒரு நாட்டில் வாழ்ந்த லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்த பொழுது ரிக்கார்ட் டான்ஸ் பார்த்தக் கொண்டிருந்த மாபாவி என்று எல்லாம் தமிழர் விரோத, இன விரோத, இன அழிப்புக்கு காரணமாக இருந்தவர் என்றெல்லாம் பலவாறாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

மாயாண்டிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.