Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரூர் மாநாடு புதிய எழுச்சியைக் கொடுக்குமா ம.தி.மு.க.வுக்கு..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறது ஈழதேசம்..!

Featured Replies

கரூர் மாநாடு புதிய எழுச்சியைக் கொடுக்குமா ம.தி.மு.க.வுக்கு..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறது ஈழதேசம்..!

கரூர் மாநாடு இந்திய அரசியலில் ம.தி.மு.க.,வுக்கு புதிய எழுச்சியை உருவாக்கும் என்று அதன் தலைவர் திரு.வைக்கோ அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்ரோருள் கரூரில் செப்டம்பர் - 15 ம் தேதி திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் ம.தி.மு.க, மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்றும், விவசாயிகள், மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தின் நீராதாரங்களை தடுக்கும் அண்டை மாநிலங்களை கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். கரூர் மாநாடு இந்திய அரசியலில் ம.தி.மு.க..வுக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தும். திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றார். மேலும், பூந்தமல்லி சிறப்பு அகதி முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் செந்தூரன் உயிரிழந்தால் அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சரியான அணுகுமுறையை பின்பற்றி வரும் தமிழக அரசு. இந்தப் பிரச்சனையிலும் அதே போன்று அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றார்.

முதலில் தி.மு.க.,தலைவர் மு.கருணாநிதி நடத்திய டெசோ மாநாட்டில் கலந்து கொண்டிருக்க வேண்டும், கலந்து கொண்டு திரு.மு.க.,வுக்கு ஒரு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கலாம். ஒன்று தி.மு.க.வே வைக்கோ அவர்களை கழட்டி விட்டிருக்கும், சொல்லப்படும் காரணங்கள் ம.தி.மு.க.வுக்கு அரசியல் வளர்ச்சியை கொடுத்திருக்கும், அந்த வாய்ப்பை தவற விட்டுள்ளார் என்று கருதலாம்.

பிறகு, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசும், ப.ஜ.க.வும் நேரடியான மறைமுக ஆதரவை இலங்கை அரசுக்கு வழங்கி வருகின்றன என்று கூறி, இலங்கை பிரச்சனை மற்றும் மீனவர்கள் பிரச்சனை தீர வேண்டுமெனில் இவர்கள் தவிர்த்த மூன்றாவது அணியை தமிழகத்திலும் பிறகு இந்தியாவிலும் உருவாக்க முயற்சிப்போம் என்று அறிவித்து மூன்றாவது அணியை அதாவது தமிழகத்தில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தவிர்த்த அணியை உருவாக்கும் என்று அறிவித்திருக்க வேண்டும்.

பிறகு, திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த மாநாடு அமையும் என்று கூறியுள்ளார். முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு திராவிடம் என்ற சொல்லாக்கம் சுக்கு நூறாக பிய்ந்து போன சட்டையைப் போல் உள்ளது. இந்த சட்டையை புத்தம் புதிய சட்டை என்று சொல்வது எவ்வளவு தூரம் பயன் அளிக்கும்..? திராவிடம் தான் மாநில உரிமையை பறித்து இன்று மத்திய அரசால் குவிக்கப்பட்டுள்ளன. அதாவது மாநில அரசுக்கு என்று என்ன இருக்கிறது..? நகராட்சி குப்பைகளையும் டாஸ்மாக் மதுபான விற்பனையையும் தவிர,

(எனவே தான் தி.மு.க.வின் மு.க, எப்பாடுபட்டாவது தேசிய அரசியலில், மத்திய அரசில் அங்கும் வகிக்கும் நிலையை 90 - களிலேயே எடுத்துவிட்டார் முரசொலி மாறன் மூலமாக. தொடர்ந்து ஒரு இருபது வருடங்களாக மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு வருகிறார். கேட்டால் மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது. மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்கிறார். மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் விசயங்களில், மத்திய அரசில் அமைச்சர்களாக, கூட்டணிக் கட்சிகளாக அங்கம் வகித்துக் கொண்டே மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்கிறார். இவர்கள் மத்திய அரசில் முதுகு சொரிந்து கொள்ளவா இருக்கிறார்கள்..? என்று ம.தி.மு.க. ஒரு பெரும் இயக்கத்தை எடுத்திருக்க வேண்டும். )

மத்திய அரசு அணைத்து வித உரிமைகளையும் பறித்து விட்டன என்ற உண்மைய சொல்லி போராடி இருக்க வேண்டும். அதனால் தான் காவிரி முதற் அணு உலை வரை மாநில அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று போராடியிருக்க வேண்டும்.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகள் இலங்கைப் பிரச்சனைகளை போட்டி போட்டுக் கொண்டு கையில் எடுத்து விட்டார்கள். இதனால் பின்னுக்கு தள்ளப்படும் கட்சியின் முதல் வரிசையில் ம.தி.மு.க.வே நிற்கின்றன என்றால் மிகையில்லை. நிலைமை இவ்வாறு இருக்க கரூர் மாநாடு எப்படி எழுச்சியை ஏற்படுத்தும்..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.