Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ற அரசியல் கோமாளி...? ' துன்பம்' என்று ஒப்புக்கொள்கிறார் - ஈழதேசம் செய்தி..!

Featured Replies

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ற அரசியல் கோமாளி...? ' துன்பம்' என்று ஒப்புக்கொள்கிறார் - ஈழதேசம் செய்தி..!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சொல்லிக்கொள்ளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரையில் நேற்று மீடியாவிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். துன்பத்தில் உள்ளவர்களிடம் 'தனி ஈழம்' என கூறி திசை திருப்பி வாழ்வை குலைப்பது தவறான போக்கு என்று செப்பியுள்ளார். தி.மு.க., நடத்திய டெசோ மாநாடு தேவையில்லாதது. இலங்கையில் உள்ள தமிழர்கள் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே துன்பத்தில் உள்ளவர்களிடம் 'தனி ஈழம்' என கூறி திசை திருப்பி அவர்களது வாழ்வை குலைப்பது தவறான போக்கு என்று கூறியுள்ளார்.

ஆக, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இலங்கையில் தமிழ் மக்கள் போருக்குப் பிறகு மிகவும் துன்பத்தில் உள்ளார்கள் என்கிறார். துன்பத்தில் என்றால் என்ன..? வீடு வாசல் இல்லாமல், தொழில் வியாபாரம் என்று இல்லாமல், உறவினர் மற்றும் தாங்களது குடும்பம் என்று இல்லாமல், உண்ண உணவு உறங்க பாய் படுக்கை என்று இல்லாமல், காசு பணம் இல்லாமல், சதா சிங்கள ராணுவத்தின் கண்காணிப்பிலும், நாள் ஒன்றுக்கு தமிழ் ஈழப் பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் தமிழ் இளைஞர்களை கடத்துதல், கொலை செய்தல் என்ற கொடுமைகளை அனுபவித்து என்று இல்லாமல், சிறைகளில் வாடிக்

கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை குண்டர்களை வைத்து கொலை செய்தும், என்னற்றோரை கைகால்கள் உடைத்தும் என்று இல்லாமல், இவர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் அரசியல் செயல்பாடுகளை முடக்கியும் என்று கொள்ளலாமா..? துன்பத்தில் என்றால் என்ன அர்த்தம் கொள்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..?

சரி, இவரின் பேச்சுப்படியே பொருள் கொள்வோம் எனில், துன்பத்தில் உள்ளவர்களிடம் போய் தனி ஈழம் என்று சொல்லாமல், அரசியல் உரிமை என்று பொருள் கொள்ளலாமா..? இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நல்வாழ்வு எப்படி கிடைக்கும்..? அரசியல் உரிமை தவிர. ஆக, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உடனடியாக அரசியல் உரிமை வேண்டும் என்று கூறுகிறாரா..

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தன் வாழ்நாள் முழுதும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் பேரன் காங்கிரஸ் கட்சியின் சிறந்த அடிமை என்று கொள்ளலாமா..? தந்தை எப்படி இருந்தார்..? அப்படியே மகன் மற்றும் பேரன்கள் இருக்க வேண்டியதில்லை, அவ்வாறு இருக்க முடியாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

இந்த லட்சணத்தில் இந்திய அரசியல் கட்சிகள் தங்களது வாரிசுகளை கட்சியில் ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்கின்றன. அவர்களும் தங்களின் ஏகபோக சாம்ராஜ்யங்களை ஆளும் மன நிலையில் மக்களை வதம் செய்வதற்கு என்றே பிறந்துள்ளார்கள் என்று கருதலாமா..?

மாயாண்டிக்கருப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.