Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலக்கரி ஊழலை மறைத்து - நல்லா கிளப்புறாங்கையா.... பீதியை..! ( தீவிரவாத பயங்கரவாதம் தான்..! ) ஈழதேசம் செய்தி..!

Featured Replies

நிலக்கரி ஊழலை மறைத்து - நல்லா கிளப்புறாங்கையா.... பீதியை..! ( தீவிரவாத பயங்கரவாதம் தான்..! ) ஈழதேசம் செய்தி..!

ஹைதராபாத், மகாராஷ்டிரா, பெங்களூரு மற்றும் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் நேற்று முதல் தீவிரவாத பயங்கரவாத பீதியை கிளப்பி உள்ளது இவ்வாறு இந்திய உள்துறை. கர்நாடகத்தில் கைதான தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், கல்பாக்கம் மற்றும் கைகா அணுமின் நிலையங்களை தகர்க்க அவர்கள் சதி திட்டம் தீட்டி இருந்தது அம்பலமாகி உள்ளது என்று. டி.வி.யில் பல பேர்களை காண்பித்தார்கள். வாய்க்கு வந்த பேரெல்லாம் கூறுகிறார்கள், முதலில் லக்சர் என்ற தீவிரவாத அமைப்பு என்றார்கள். பிறகு யாராவது கேள்விகளை கேட்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்து, சிமி என்ற அமைப்பில் உள்ளவர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். தற்பொழுது அதுவும் பத்தாது என்று தமிழ் நாட்டிலும் பதுங்கி உள்ளார்கள் தீவிரவாதிகள் மாறும் பயங்கரவாதிகள் என்று சொல்கிறது உளவுத் துறைகள். இதுவரை இந்திய நாடே அதிர்ச்சி கொள்ளும் அளவிற்கு என்று நினைத்து நாங்கள் அங்கே பத்து பேரை கைது செய்துள்ளோம், இங்கே பல பத்து பேர்களை தேடுகிறோம் என்று கூறி இந்திய முழுதும் நிலக்கரி ஊழல் பற்றி அடுத்த நிகழ்வு என்ன ..? என்று அறிந்து கொள்ள இருக்கும் மக்களிடம், தீவிரவாத, பயங்கரவாத பூச்சாண்டிகளை காட்டுகிறார்கள்.

ஐ.பி., ஆந்திரா உளவுத்துறை, கர்நாடாக உளவுத்துறை ஆகிய மூன்று க்ரூப்களும் களத்தில் இறங்கி பெரும் பீதியை கிளப்பி, நிலக்கரி ஊழலை மறைப்பதற்கும், ஊழல் மற்றும் அணு உலைகள் குறித்து பேசப்பட்டு வரும் செயல்பாடுகளை ஒரு நேரத்தில் திசை திருப்பி, அப்படி பேசுவதே தீவிரவாதம் பயங்கரவாதம் என்று காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்களோ..? ஆந்திரா, கர்நாடாக உளவுத்துறைகளே களத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்றால், தமிழ் நாட்டு உளவுத்துறை எங்கேயாவது அவர்களே குண்டுகளை வைத்து விட்டு, அய்யோ தமிழ் நாடு முழுதும் தீவிரவாதம் தலை தூக்கி நிற்கும் நிலையில், ஏன் இலங்கைப் பிரச்சனை பற்றி பேசுகிறீர்கள்..? கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி பேசுகிறீர்கள்..? என்று காட்டுவதற்கு இந்நேரம் களத்தில் குதித்து இருப்பார்கள் என்றும் நம்பலாம்.

ஒருவேளை, கூடங்குளம் அணு உலையை தற்காலிகமாக செயல்படாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்த லக்சர், சிமி பயங்கரவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன என்று கூறி பூச்சாண்டி காட்டினாலும், நமக்கு வரும் இயல்பான சந்தேகம் என்னவெனில், முன்பெல்லாம் இது போன்ற உளவு அமைப்புகள் ஒரு பிரச்சனைக்கு மட்டும் இது போன்ற ஒரு நூதனமான ஒரு பீதியை ஏற்படுத்தி, மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக போராட்ட அமைப்புகளை சற்று ஓரம் கட்டி விடுவார்கள். ஆனால் தற்பொழுதே எல்லாம் ஒரு பிரச்சனைக்கு பல்வேறு கோணங்களை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த பயங்கரவாத தீவிரவாத பூச்சாண்டியை கிளப்புகிறது இந்திய பார்ப்பனிய அரசு.

இலங்கைப் பிரச்சனை, கூடங்குளம் அணு மின்நிலையம் மற்றும் இவையெல்லாம் சும்மா தம்மாத்தூண்டு பிரச்சனைகள். இவையெல்லாம் மீறி, ஊழலில் வரலாற்றை அல்ல, அதையும் தாண்டி, உலக நாடுகள் எல்லாம் எங்களை பார்த்து, உங்களது நாடுகளில் இவ்வாறு எல்லாம் ஊழல் புரியலாம், அந்நாட்டின் வளங்களை வரைமுறை இல்லாமல் கொள்ளை அடிக்கலாம். மக்கள் யாராவது இந்த ஊழல்கள் பற்றி கேட்டால், ஒரு சில இடத்தில் குண்டுகளை வெடிக்க வைத்து, அய்யோ..பயங்கரவாதம்..அய்யோ..! தீவிரவாதம் என்று பெரும் ஒப்பாரிகளை வைத்து விட்டால் எல்லாம் மறைந்து விடும் என்று கூறுகிறார்கள் உலகிற்கு.

ஆக, மக்களை நிரந்தரமாக தங்களது சித்தாந்த கருத்து தளத்தில் வைப்பதற்குப் பதில், வெடிகுண்டு பீதி, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்று கூறி ஏற்கனவே ஒரு பத்து வருடங்களை ஓட்டி விட்டார்கள், இனிமேலும் இவ்வாறு பீதிகளை ஏற்படுத்தி தங்களது அரசு நிலைத்து நிற்கும் கருத்து தளத்தை ஏற்படுத்த முடியாது என்று ஒருபுறம் இருக்க, இந்தியாவில் இடது சாரி தன்மை கொண்ட கட்சிகள் இல்லாததின் விளைவே இதுபோன்ற அப்பட்டமான பயமுறுத்தல்களும், அரசின் அரஜாகங்களும் என்று கருதலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.