Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவி படமெடுத்து ஆடும் சி.பி.ஐ.மார்க்சிஸ்ட் கட்சி..? தமிழக காம்ரேட்களே உஷார்..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

காவி படமெடுத்து ஆடும் சி.பி.ஐ.மார்க்சிஸ்ட் கட்சி..? தமிழக காம்ரேட்களே உஷார்..! ஈழதேசம் செய்தி..!

இந்திய மார்க்சிஸ்ட் காம்ரேட்கள் கொதிப்படைந்து போய் உள்ளார்கள். எதற்கு..? இலங்கையின் கால்பந்து குழுவினர் அதுதான் புட்பால் க்ரூப் விளையாட சென்னை வந்தார்கள் அல்லவா..? அவர்களை தமிழக முதல்வர் ஜெ. அம்மையார் திருப்பி அனுப்ப உத்தரவிட்டு அந்த நேரு ஸ்டேடியம் பொறுப்பாளரை தற்காலிக பதவி நீக்கம் செய்ததோடு மட்டுமின்றி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டன. இந்த ஜெ.அம்மையாரின் நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் எதிர் வினையாற்றினார் இவ்வாறு. ராணுவ வீரர்களை வேண்டுமானால் திருப்பி அனுப்பலாம். விளையாட்டு வீரர்களையெல்லாமா திருப்பி அனுப்புவார்கள் என்று. திருவாரூரில் உள்ள சர்ச்சுக்கு வந்த இலங்கையர்களையும் அங்கு உள்ள நாம் தமிழர் அமைப்பு, விடுதலை சிறுத்தைகள் முற்றுகையிட பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் நடந்து முடிந்த தமிழர் ஆதரவு நிகழ்வுகள். காங்கிரஸ் பெருச்சாளிகளே சும்மா செவனேன்னு கிடக்கையில், இந்த புதிய அல்ல பழைய இத்துப்போன காவிக்கூட்டம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது. இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களிடையே நட்பு சக்தியை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு, திருப்பி அனுப்புவது, அனுப்பியது தவறான செயலாகும். இதனால் இருநாட்டு மக்களின் உறவு முறைகள் பெரிதும் பாதிக்கப்படும். வரும் காலத்திலாவது இலங்கை மக்களுடன் மனதிற்கு இசைவான நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறது காவியை அப்படியே உள்வாங்கி செல்லரித்துப் போன மார்க்சிஸ்ட் கட்சி.

நாமும் வழக்கம் போல கருணாநிதி பாலிடிக்ஸ் பேசுவோம். அதுதான் லாவணி அரசியல். அய்யா ..காம்ரேட்களே..! அப்போ பாகிஸ்தான் நாட்டை நாள் ஒன்றுக்கு பத்து தடவை சொல்கிறீர்கள்..தீவிரவாத நாடு..அய்யோ பயங்கரவாத நாடு என்று. ஏன் அந்த நாட்டு மக்களும் இந்திய மக்களும் அந்நியோன்யமாக பழகக் கூடாது, நட்புறவை வளர்க்க முயற்சிக்கக் கூடாது. பாகிஸ்தான் நாடே தீவிரவாத நாடா..? படு பயங்கரவாதி நாடா..? அல்லது பாகிஸ்தான் அரசா..? என்று கேட்டுப் பாருங்களேன்..இந்திய மார்க்சிஸ்ட் கட்சியிடம்..படாரென்று பதில் வரும் அந்த மக்களும் பயங்கரவாதிகள் தான், அந்த அரசும் பயங்கரவாத தீவிரவாத நாடு தான் என்று. அதாவது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் கட்சியான பா.ஜ.க.வை முந்திக் கொண்டு சொல்வார்கள்.

இல்லையென்றால் பாகிஸ்தான் அரசை வெளிப்படையாக நாட்டு மக்களிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, ரகசியமாக பாகிஸ்தான் அரசிடம் அய்யா..இப்படியே மெய்ண்டைன் பண்ணூங்க..உங்களை வைத்து தான் நாங்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம் இந்தியாவில் என்று அரசை நடத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனிய பனியா கும்பல், தற்பொழுது சீமான் அவர்கள் கூறுவதைப் போல, தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று ஆசிய முழுதும் சொல்லி வருகிறார்கள். முஸ்லிம்களை உலகெங்கும் டவுசரை உருவச்சொல்லி பார்கிறார்கள் என்பது வேறு விசயம். ஏனென்றால் அந்த இடத்தில் படு பயங்கரமான வெடிகுண்டை வைத்திருப்பார்களாம்.

தற்பொழுது பெண் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் இந்தியாவில் என்று வாரம் ஒரு முறை வைத்து ஓலமிடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பலால் ஆளப்படும் இந்திய அரசு. முஸ்லிம் பெண்களின் ஆடைகளையும் உள்ளாடைகளையும் திறந்து பார்ப்பதற்கு மிகப்பெரும் ஆர்வம் கொண்டு இவ்வாறு சொல்கிறார்கள். பெண் தீவிரவாதிகள் அதுவும் தற்கொலைப் படை பெண் தீவிரவாதிகள் என்று. இந்தியாவில் ஊடுருவி அப்படி என்ன அவர்கள் செய்யப்போகிறார்கள்..? என்று நமக்கு புரியவில்லை. என்னமோ இந்திய ராணுவம் இந்திய மக்கள் மீது உயிரையே வைத்திருப்பதைப் போல. என்னமாய் கூவுகிறார்கள். கிடக்கட்டும் இவைகள் இவைகளெல்லாம்.

ஏன் இந்த மார்சிஸ்ட் கட்சியினர் இலங்கை குறித்து வருத்தமும் கவலையும் அடைகிறார்கள்..? தமிழர்களை இன அடிப்படைவாதம் நோக்கி தள்ளுகிறார்கள். அதைதான் விரும்புகிறது காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க.வும், இந்த இரண்டு கட்சிக்கும் மட்டை அடிக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட் என்று கருதலாமா..?

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.