Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓயாமல் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசின் இன ஒழிப்பும்! ஒவ்வாத கலாச்சாரமும்!

Featured Replies

சிறுபான்மை இனத்தவர்களை அடக்கி ஒடுக்கி அழித்துவிட்டு முழு நாட்டையும் பௌத்த பூமியாக்குவதற்கு சில சிங்கள பேரினவாதிகள் பல ஆண்டுகளாக எண்ணம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தவர் தான் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்தராஜபக்‌ஷ அவர்கள் இவர் எமது நாட்டை பொறுப்பேற்று ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாக அறிவித்தார். எனினும் சிறுபான்மையினரை அழிக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு சாடிக்கேற்ற மூடி வாய்த்தது போல் அமைத்தார் மகிந்த ராஜபக்‌ஷ முதலில் கண்ணில் பட்டது தமிழ்மக்கள். இரண்டாவது முஸ்லீம்கள்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் கல்வி, கலை, கலாச்சாரம் என்று எல்லாவற்றிலும் எமது நாட்டில் அன்று தொட்டு இன்று வரை முன்னின்று கொண்டிருக்கின்றார்கள் இதை மேலும் வளரவிடக்கூடாது. என எண்ணிய சிங்கள பேரினவாத அரசு சிறிபான்மை மக்களை மகிந்த தலைமையில் அழிக்க முற்பட்டது.

இந்த இன அழிப்பு திட்டத்திற்கு வைத்த முதற்பெயர் புலிப் பயங்கரவாத ஒழிப்பு என்று கூறி மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால்கள் வரை சில நாடுகளின் உதவிகளோடும் ஒட்டுக் குழுக்களின் உதவிகளோடும் நவீனரக ஆயுதங்களையும் போரில் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளையும் பயன்படுத்தி எமது விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் பேராடியவர்களையும் அப்பாவி தமிழ்பேசும் மக்களையும் மனிதாபிமானமுமற்ற முறையில் கொன்று குவித்தது இந்த அரசு.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டுலட்சத்துக்கும் அதிகமாகும். மேலும் இந்த காடையர்களின் வெறியாட்டத்தினால் மூன்றுலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது உடமைகளையும் உறவுகளையும் இழந்து பாதிக்கப்பட்டனர். இரண்டாம் உலகமகாயுத்தத்திற்கு பின் பெரியதொரு உயர்ச்சேதமும், அழிவும் என்றால் இதுவாகத்தான் இருந்தது.

இதன் பின்னர் நாட்டில் அமைதியை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலை நிறுத்தினார்களா. இல்லை ஏனெனில் அரசின் இன ஒழிப்பு இன்னும் ஓயாமல் தொடர்ந்து மேலும் வடக்கு, கிழக்கில் பலகாலமாக கண்ணில் படாத பலபல புதிய வாகனங்கள் அறம்புறமாக பறக்கத்தொடங்கின. பௌத்த விகாரைகள், அதனுடன் இராணுவ நினைவுதூபிகளும், ஹொட்டல்களும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும் திடீர்திடீரென உருவெடுக்கதொடங்கி உள்ளன.

முஸ்லீம் மலையக மக்களினதும் உரிமைகளும் மறுக்கப்பட்டன. பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன. அபிவிருத்தி என்னும் பெயரில் தமிழ் முஸ்லீம் மக்களின் நினைவுச் சின்னங்கள் சிதறடிக்கப்பட்டன. வேலைவாய்ப்பு வழங்குவதிலும் பராபட்சம் காட்டினார்கள். அவற்றிற்கெல்லாம் இந்த அரசுக்கு உறுதுணையாக பணத்திற்கு அடிமைப்பட்ட எமது தமிழ் துரோகிகள் செயற்பட்டு வருகின்றனர்.

வடக்கில் ஈ.பி.டி.பி என்று கட்சியைத் தொடங்கிவிட்டு அந்தகட்சியை சரியான வழிநடத்த தெரியாமல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் கரைத்துவிட்டு இதற்குப் பெயர் இணக்க அரசியல் என்கின்றார்கள் இதே மாதிரி கிழக்கில் ஒரு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் பிள்ளையானும், மேலும் நாட்டின் பிரதான தனிசிங்கள கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் நாட்டின் ஒரு பிரதி அமைச்சரான கருணாவும் அம்பாறையில் ஓர் இனியபாரதியும் செயற்பட்டுகொண்டிருக்கின்றார்கள். என்றால் வெட்கப்பட்ட கூடிய விடயம் தான் இவர்களுக்கு எப்போதுதான் புத்திவருமோ.

இவர்களுக்கு இந்த மகிந்த அரசு பெண், பொன், பொருட்களை நாய்க்கு எலும்புத்துண்டுகளை வீசுவது போல அள்ளி அள்ளி எறிந்து விட்டு அரசு குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றது. இத்துடனாவது எமது தமிழ் மக்களை விட்டார்களா இந்த இன ஒழிப்பு வாதிகள் எம் மக்களிடம் இருந்த கடைசி சொத்துக்களான கலாச்சாரத்தின் மீதும் கைவைக்க தொடங்கிவிட்டார்கள்.

எமது தமிழ் மண்ணை பொறுத்தவரையில் பல்லாண்டு பல்லாண்டு காலமாக எமது தமிழருக்கே உரிதான கலாச்சாரங்கள் இந்நாள் வரைக்கும் பாதுகாக்கப்பட்டுத்தான் வந்தது. ஆனால் இப்பொழுது எமது தமிழர் பிரதேசத்தில் விபசாரம், போதைவஸ்துக்களான (கஞ்சா, அபின், கிரோயின்) மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் புகைத்தல், பகிடிவதை, ரௌடீசம், போன்றன அதிகரித்து காணப்படுகின்றன.

இது எவ்வாறு எம் பிரதேசத்திற்குள் வந்தது. அன்று தமிழ் மன்னர்கள் அரசாண்ட காலந்தொட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் காலம் வரைக்கும் வராத ஒன்று யார் தயவில் இங்கு வந்தது என்பதில் புரியாத புதிர்கள் ஒன்றுமில்லை. ஆயதங்களினால் எம்மை அழித்த அரசு இப்போது மீண்டும் மறைமுகமாக தமிழ் துரோகிகளுடன் சேர்ந்து எமது தமிழ் இளைஞர் யுவதிகளின் தேவைகளைக் கண்டறிந்து உதவிசெய்வதாக கூறி இவர்களின் மனதை மாற்றி தவறான வழிக்கு இட்டுச் செல்வதன் மூலம் இன்னும் ஒரு தமிழிரின் பெரிய சக்தியான இளைஞர் சக்தியை அழித்து இதிலும் பொய்யானதொரு வெற்றியை காணலாம். என எண்ணி செயற்படுகின்றது.

இங்கும் சில நல்லவர்கள் இருப்பதால் நேராக ஊடுருவ முடியாமல் திண்டாடுகின்றார்கள். இவ்வாறு அன்றாடம் நடக்கும் கலாச்சார சீரழிவுப் பிரச்சனைகளை கண்டும் காணாததுமாக பொலிசார் ஒரு பக்கம் எமது நாட்டு பொலீசாருக்கு ஊர்வலத்தில் புலிக்கொடி காட்டியவர்களையும், வாளால் வெட்டியவர்களையும், பாலியல் துஸ்பிரயோகம் செய்பவர்களையும், தேடிப்பிடிப்பதென்றால் சரியான சிரமமான பிரச்சனை. ஆனால் வீதியில் ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணியாமலோ, சிக்னல் போடமல் திருப்பினாலோ நலாபக்கமிருந்தும் வெள்ளை ஹெல்மட் அணிந்த பொலிசார் எங்கிருந்தோ பறந்து வந்து அந்த பெண்ணின் மோட்டர் வண்டியை மறித்து குறைந்தது. ½ மணித்தியாலமாவது விசாரித்து போவது வழக்கமாக்கும் பொலிசார் ஒருபுறமிருக்க இந்த மகிந்தவுக்கு எங்கிருந்துதான் மூளைகள் வேலை செய்கின்றனவோ.

தொடர்ந்து எல்லாவிதமான இன அழிப்பையும் செய்ததன் பின் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கையில் மீண்டும் பூதாரகமாக வருகின்றது. மகிந்தவின் இரகசிய இலங்கை – அவுஸ்திரேலிய ஒப்பந்தம் அதாவது இலங்கையில் வாழும் தமிழ் இளைஞர் யுவதிகளை அகதிகளாக்கி அடிமைகளாக்கி அவுஸ்திரேலியா அனுப்பும் திட்டம்இதில் குறிப்பாக யாழ்ப்பாண இளைஞர்கள் தான் சிக்குண்டிருக்கின்றார்கள்.

மகிந்தவுக்கு தெரியும் குடாநாட்டில் ஒரு அரசை உருவாக்குவதும் அதை அழிப்பதும் இங்கிருக்கும் இளைஞர்கள் தான் என்று குடாநாட்டின் மிகப் பெரும் பலம் இளைஞர்கள் இவர்களை அழிப்பதற்கு தன்னிடம் வேறு வழியில்லை. ஒரு பக்கமிருக்க இரண்டாவது சவர்தேசம் தன்னை ஊற்றுப்பார்த்துத் கொண்டிருக்கின்றது. இதனால் இவ்வாறானதொரு காரியத்தில் இறங்கியிருக்கிறது இந்த அரசு இதுமட்டுமல்ல இன்றுமொரு இரகசியத் திட்டமிட்டும் வைத்திருக்கின்றார்கள் போல மகிந்த வடக்கிலிருந்து இளைஞர்களை அகதிகளாக வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டால் பின்னர் இலகுவாக வடமாகாணசபைத் தேர்தலை நடாத்தலாம். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இளைஞர்களும் சிதறடிக்கப்பட்டுவிடும். இதன் மூலம் தனது திருகுதாளங்களை செய்யலாம் என்று நினைத்திருப்பார்கள்.

ஆனால் இந்த அரசுக்கு தெளிவாக ஒன்றை சொல்லி வைக்க விரும்புகின்றேன். எமது உலகத் தமிழினத்தின் கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழன் மட்டுமல்ல தமிழர் பிரதேசங்களையும் அதில் இருந்து ஒரு துரும்பைக் கூட எடுத்துக்கொள்ள உங்களால் முடியாது. தமிழர்கள் இப்போது அழிந்து கொண்டிருக்கின்றார்கள். என தப்புக்கணக்கு போடவேண்டாம். மௌனமாகத் தான் இருக்கின்றார்கள். இந்த மௌனம் கூட தேவைப்பட்டால் தேவைபட்டவைகளை செய்யும். எனவே என் இனிய சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போல ஒரு இளைஞன் என்ற வகையில் உங்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எம்மைச் சுற்றி நாளாந்தம் பல பிரச்சனைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. சில பிரச்சனைகள் நமக்கு கசப்பான அனுபவங்களைக் கூட தந்துகொண்டிருக்கின்றன. எது எவ்வாறு இருந்தாலும் நாம் நேரடியாக அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு முடியாதுவிடின் நமக்கு தெரிந்த ஒரு நல்ல மனிதரின் உதவியை நாடியாவது தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய சவால் வேலைப்பிரச்சனை இதற்கும் எமது நாட்டில் வழியுண்டு அதை நாமே நல்ல வழியில் தேடிப்பார்க்க வேண்டும். அதைவிடுத்து கலாச்சார சீர்கேட்டில் ஈடுபடமுற்படுவதோ அவர்களுக்கு உதவி புரிவதோ அவுஸ்ரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்வதோ நிரந்தர முடிவாகாது.

எம்மக்களையும் எம்மண்ணையும் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு இன்று இளைஞர்களாகிய நமக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணம் சிங்கள தேசத்துக்கு உரித்தானதல்ல யாழ்ப்பாணம் யாழ்ப்பாண தமிழ் பேசும் மக்களுக்கே சொந்தமானது யாழ்ப்பாண இறையாண்மை யாழ்ப்பாண மக்களுக்கே உரித்தானது இறையாண்மை என்பது ஒரு அரசின் தெய்வீக சொத்துரிமையல்ல அது மக்களுக்கே உரித்தானது.

இளைஞர்களே இறுக்கமான கட்டுப்பாடும் சுய ஒழுக்கமும் எங்களுக்கு எப்பொழுதும் நல்ல பெயரைத் தேடித்தரும் எப்பொழுதும் நாங்கள் எங்களுடைய சுய ஒழுக்கத்தையே பேண வேண்டும். சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவரை ஒருவராலும் கெடுத்துவிட முடியாது. முயற்சி செய்பவனுக்கு பாதைகள் திறந்து வழிவிடுகின்றன. சாம்பிக் கிடப்பவன் கண்களுக்கு எப்போதும் பாதைகள் மூடிய வண்ணமே தென்படுகின்றன. என்பதற்கிணங்க எதிர்வரும் காலங்களில் நாம் ஒன்றாக செயற்பட்டு எமது தமிழினத்தின் பெருமையை உலகறியச் செய்வோம்.

எஸ்.நிசாந்தன்,

முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.