Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவரை 9 லட்சம் கண்ணி வெடிகள் இலங்கையில் அகற்றப்பட்டன - டி.கே.என்.ரோகன் தலைமையிலான இந்தியர்களும் ஈடுபட்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை 9 லட்சம் கண்ணி வெடிகள் இலங்கையில் அகற்றப்பட்டன - டி.கே.என்.ரோகன் தலைமையிலான இந்தியர்களும் ஈடுபட்டனர்!

[Monday, 2012-10-22 08:36:07]

இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான சண்டை ஓய்ந்த பிறகு, ஒன்பது லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு உள்ளன.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல் முடிந்தது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சண்டையின் போது, விடுதலைப் புலிகள், ராணுவத்தை தடுக்க, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், கண்ணி வெடிகளை புதைத்தனர். சண்டை ஓய்ந்து விட்ட நிலையில், தற்போது இந்த கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, 5,000 சதுர கி.மீ., பரப்பளவில், 80 சதவீத கண்ணி வெடிகள், அகற்றப்பட்டு விட்டதாக, இலங்கை ராணுவத்தினர் தெரிவித்து உள்ளனர். வாகனங்களை சிதைக்கும், ஐந்து லட்சம் கண்ணி வெடிகளும், பீரங்கிகளை தகர்க்கும், 1,500 கண்ணி வெடிகளும், தொட்ட உடனே வெடிக்கும், நான்கு லட்சம் கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டு உள்ளன.

கண்ணி வெடி அகற்றும் குழுவில், இந்திய நிறுவனங்களும் ஈடுபட்டு உள்ளன. உயிருக்கு அச்சுறுத்தலான, இந்த கடின பணியை செய்ததற்காக, டி.கே.என்.ரோகன் தலைமையிலான கண்ணி வெடி அகற்றும் குழுவுக்கு, கடந்த, 10ம் தேதி, அமெரிக்காவில், "மார்ஷல் லெகசி இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனம், விருது வழங்கி, கவுரவித்தது. கண்ணி வெடிகளை கண்டறியும் பயிற்சி பெற்ற, 26 நாய்களும், இந்த குழுவுக்கு, அன்பளிப்பாக வழங்கப்பட்டு உள்ளன.

http://seithy.com/br...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.