Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாவது ஈழத்தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது ஈழத்தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்.

சிறீலங்கா | ADMIN | OCTOBER 27, 2012 AT 11:49

புகலிடம் கோரியிருந்த சிறிலங்காத் தமிழர் ஒருவரின் கோரிக்கை அவுஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்டு ஒக்ரோபர் 31 அன்று மீண்டும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார். இதற்கான உத்தரவை அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சிறிலங்கா அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்படும் நிலையில் பிரித்தானிய உயர் நீதிமன்றமானது சிறிலங்கர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள அதேவேளையில், தற்போது அவுஸ்திரேலியாவானது தனது நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள சிறிலங்காத் தமிழர் ஒருவரை மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பத் தீர்மானித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர் தனது புகலிட விண்ணப்பத்தில், தனது சகோதரன் ஒருவர் தமிழ்ப் புலி உறுப்பினராகச் செயற்பட்டிருந்ததாகவும், சிறிலங்காவில் இடம்பெற்ற குருதி தோய்ந்த யுத்த நடவடிக்கையில் இவர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான படிவத்தில் குறித்த தமிழர் கையெழுத்திட மறுத்துள்ளார். தனது 40வது வயதில் அதாவது பெப்ரவரி 2010ல் சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியா வந்தடைந்த குறித்த தமிழரின் பெயர் பாதுகாப்பு நோக்கங் கருதி இங்கு வெளியிடப்படவில்லை

.

இதேபோன்று கடந்த யூலையில் தயான் அந்தோணி என்ற தமிழர் ஒருவர் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இறுதி நேரத்தில் தன்னை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவேண்டாம் என தயான் அந்தோணி ஐக்கிய நாடுகள் சபையிடம் மனு சமர்ப்பித்த போதிலும் இவை எதுவும் கருத்திலெடுக்கப்படாது சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அவுஸ்திரேலியாவானது தன்னால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவோர் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்த பின்னரே தீர்வெடுப்பதாகவும் இதனால் இவர்கள் எவ்வித சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், 90 பேருடன் பயணித்த மூன்று படகுகள் கொக்கோஸ் தீவின் வடக்குப் பகுதியில் வைத்து இடைமறிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவிலிருந்து கடல் வழியாக 3000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதே புகலிடக் கோரிக்கையாளர்களின் இலக்காகும்.

http://thaaitamil.com/?p=36821

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.