Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ நாவில் இன்று வெள்ளிக்கிழமை தொகுப்பு

Featured Replies

[size=4]சிறிலங்கா மீது அமெரிக்கப் பிரதிநிதி சுமத்திய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்[/size] [size=4][ வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2012, 03:36 GMT ] [ தா.அருணாசலம் ][/size]

[size=4]eileen.jpgஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி எலீன் சம்பர்லைன் டோனகே,

“ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சிறிலங்கா அரசு ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத் தான் இன்றும் முன்வைத்துள்ளது.

புதிய யோசனைகளையோ திட்டங்களையோ முன்வைக்கவில்லை.

சிறிலங்காவில் 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரங்கள் குவிக்கப்பட்டது குறித்தும், அரசியல் அதிகாரப்பகிர்வு குறித்த இணக்கப்பாடு எதுவும் எட்டப்படாதது குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம்.

முன்பு போர் நடந்த இடங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் அன்றாட வாழ்விலும், பொருளாதார விவகாரங்களிலும் இராணுவத் தலையீடுகள் உள்ளன.

2010 தொடக்கம் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளன.

காணாமற்போதல்கள், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற தீவிரமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்கின்றன.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

எதிர்கட்சிப் பிரமுகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், தடுத்து வைக்கப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர்.

ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த நம்பகமான விசாரணைகளோ, சட்டநடவடிக்கைகளோ இல்லை.

கடந்த 30 நாட்களுக்குள் நீதித்துறைச் சுதந்திரத்தில் அரசியல் தலையீட்டுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நீதிபதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

மாகாணசபைகளின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் சட்டமூலத்துக்கு சவால் விடுத்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் கொழும்பில் தாக்கப்பட்டுள்ளார். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்தக் கவலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு அமெரிக்கா சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.

1.பொதுமக்களின் நிகழ்வுகளில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றுதல், காணாமற்போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் குறித்து பதிலளிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல், மரணச்சான்றிதழ் வழங்கல், காணி சீர்திருத்தம், அதிகாரப்பகிர்வு, ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்குதல் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும், மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.

3.மனிதஉரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, வெளிப்படைத்தன்மையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும்.

4. தலைமை நீதியரசரை பதவிநீக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதாக இன்று செய்திகள் வந்துள்ள நிலையில், சிறிலங்கா அரசு நீதித்துறையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்." என்று தெரிவித்தார். [/size]

[size=4]அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு சிறிலங்காவைத் தாக்கியது இந்தியா[/size] [size=4][ வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2012, 06:02 GMT ] [ கார்வண்ணன் ][/size]

[size=4]UNHRC-20th.jpgஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நடந்த பூகோள கால மீளாய்வின் போது, அமெரிக்காவைப் போலவே இந்தியாவும், சிறிலங்கா நிறைவேற்றிய வேண்டிய பொறுப்புகளைப் பட்டியலிட்டு, சிறிலங்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி நபானிற்றா சக்ரவர்த்தி-

“வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை, முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் உள்ளிட்ட சில விடயங்களில் சிறிலங்கா எட்டியுள்ள முன்னேற்றங்களை இந்தியா வரவேற்கிறது.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டு சிறிலங்காவுக்கு உள்ளது.

விரைவான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

2013ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்தி, அங்குள்ள மக்கள் ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், தனியார் நிலங்களில் இருந்து படையினரை அகற்றுதல், உயர்பாதுகாப்பு வலயங்களை விலக்குதல், பொதுமக்களின் வழமையான செயற்பாடுகளில் நிலவும் இராணுவத் தலையீட்டை அகற்றுதல், உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, பெருமளவு பொதுமக்களின் இழப்புகளுக்கு காரணமான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா விரைவான நடவடிக்கையை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்தியப் பிரதிநிதியின் கருத்துகள் அமைந்துள்ளன.

நீண்டகாலமாக அமெரிக்கா வலியுறுத்தி வருவது போன்று இந்தியாவும் இந்த அமர்வில் கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]ஜெனிவாவில் பழைய பல்லவியையே பாடினார் மகிந்த சமரசிங்க[/size] [size=4][ வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2012, 00:23 GMT ] [ தா.அருணாசலம் ][/size]

[size=4]mahinda-samarasinghe.jpgஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று மாலை இடம்பெற்ற பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரையில், புதிதாக எதுவும் இல்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்துள்ளன.

இவர் தனது உரையில் சிறிலங்கா அரசு மனிதஉரிமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்தது, போரால் இடம்பெயர்தோரை மீள்குடியேற்றியது. வடக்கில் மிதிவெடிகளை அகற்றியது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்றவற்றை மகிந்த சமரசிங்க தனது அரை மணிநேர உரையில் பட்டியலிட்டிருந்தார்.

அத்துடன் சிறிலங்காவுக்கு உள்ளேயும் வெளியிலும் உள்ள சில சக்திகள் நாட்டை சீர்குலைக்க முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடத்தப்பட்டு காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும், சில புள்ளிவிபரங்களை வைத்து அவர் நிராகரித்தார்.

வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணத்திலோ, வன்னியிலோ அவர்கள் மக்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்வதில்லை என்றும் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படையினர் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா இராணுவமே விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பொதுமக்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள், சனல் 4 காணொளி உள்ளிட்ட சுமார் 50 சம்பவங்கள் குறித்து இராணுவ நீதிமன்றம் விசாரிக்கிறது என்றும், இதுவரை இந்த நீதிமன்றம் 30 முறைக்கு மேல் கூடி பலரையும் விசாரித்துள்ளதாகவும் மகிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.

“சிறிலங்கா இராணுவம் பொதுமக்களுக்குப் இழப்பை ஏற்படுத்தியதா, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதா, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா போன்றன குறித்தும், சனல் 4 காணொளி உண்மையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, அதில் காணப்படுவோரை அடையாளம் காண முடியுமா என்பது குறித்தும் இநத நீதிமன்றம் விசாரிக்கும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தமக்குப் பொருந்தக் கூடிய விடயங்கள் என்ன என்பதை ஆராய்ந்து அதை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை உருவாக்கவும் ஒரு குழுவை சிறிலங்கா இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா கடற்படையும் இதே போன்று செய்துள்ளது. இது முன்னேற்றமில்லை என்றால் எது முன்னேற்றம் என்று நான் கேட்கிறேன்". என்று மகிந்த சமரசிங்க சமரசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.[/size]

http://www.puthinappalakai.com/index.php

  • தொடங்கியவர்

72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகள் அடுக்கிவைப்பு

[size=1]

November 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை[/size][size=3]

un_Human-rights-100x100.jpg[/size][size=3]

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் நேற்று இலங்கை விவகாரம் ஆராயப்பட்ட போது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்த அதேவேளை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தன.[/size][size=3]

முக்கியமாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13 ஆவது அரசமைப்புத் திருத்த விடயம், வடமாகாண சபைத் தேர்தல், மீள்குடியேற்றம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும்தொனியில் கேள்வி எழுப்பின.[/size][size=3]

ஓவ்வொரு நாட்டிற்கும் 72விநாடிகளே ஒதுக்கப்பட்டிருந்தது.[/size][size=3]

இலங்கை பற்றிய விவாதம் நேற்று பிற்பகல் ஆரம்பமானது. ஆரம்பத்தில் சிறிலங்காவின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரங்க இலங்கை அரசு மனித உரிமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தது, மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், பெண்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது என சுமார் ஒரு மணிநேரம் தமது நாட்டின் செயற்பாட்டினை விபரித்தார்.

இதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவர் எலென் சம்பெர்லைன் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பட்டியல் இடப்பட்டிருக்கிறதே தவிர மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்களின் முன்னேற்றங்களை அங்கு காணமுடியவில்லையே என தெரிவித்தார்.[/size][size=3]

நீதித்துறை மீது சிறிலங்கா மேற்கொண்டிருக்கும் தாக்குதலை கண்டித்த அமெரிக்க தூதுவர் நீதித்துறையில் தலையிடும் போக்கை கைவிட்டு நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.[/size][size=3]

வடக்கில் இராணுவப்பிரசன்னம் பற்றி அமெரிக்க இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் கடும் விமர்சனத்தை முன்வைத்த போது அதற்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க இராணுவம் வடக்கில் 4652வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவம் யுத்த குற்றத்தில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த சிறிலங்கா அந்த குற்றச்சாட்டுக்களை இராணுவம் விசாரிப்பதாக தெரிவித்தது. சுமார் 50 சம்பவங்களை இந்த இராணுவ நீதிமன்றம் விசாரிக்கிறது என சிறிலங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.[/size][size=3]

இராணுவம் புரிந்த குற்றத்தை இராணுவமே விசாரித்தால் அதில் பொதுமக்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியுமா என டென்மார்க் உட்பட மேற்குலக நாடுகள் கேள்வி எழுப்பின.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் நடைபெறும் மீளாய்வு கூட்டத்தில் இன்றும் சிறிலங்கா தொடர்பாக உறுப்புநாடுகள் ஆராய உள்ளன.[/size][size=3]

இந்த விடயங்களை அடிப்படையாக வைத்து இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களை அறிக்கையாக வெளியிட உள்ளன. இந்த அறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இந்த அறிக்கையில் சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள், அதன் கால எல்லை தொடர்பான விபரங்கள் அடங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/size][size=3]

இதில் அதிகாரப்பரவலாக்கல், மீள்குடியேற்றம், வடமாகாணசபை தேர்தல் ஆகிய விடயங்கள் முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/size][size=3]

http://www.sarithamnews.com/?p=28[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.