Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் கொலை - திறந்தவெளி முகாமுக்கு மாற்றப்பட்டார் செந்தூரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் கொலை - திறந்தவெளி முகாமுக்கு மாற்றப்பட்டார் செந்தூரன்!

[Thursday, 2012-11-08 07:37:06]

உரிய ஆவணங்கள் இன்றி தமிழகத்திற்கு கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளில் சிலரை, பொலிஸார் கைது செய்து செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்தனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் சிலரை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த ஒகஸ்ட் மாதம் செங்கல்பட்டு முகாமில் இருந்து பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்ட செந்தூரன் (வயது 35), சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.

இதனால் தற்கொலை முயற்சி வழக்கின் கீழ் 2 முறை செந்தூரனை பொலிஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் விடுதலையாகி மீண்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் சிறப்பு முகாமில் உள்ள செந்தூரனை, திறந்தவெளி முகாமிற்கு மாற்றலாம் என்று அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்டம், தாழையூரில் உள்ள திறந்தவெளி முகாமிற்கு செந்தூரனை பொலிஸார் வேனில் அழைத்து சென்றனர். தற்போது இந்த முகாமில் 7 பேர் மட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, கொலை செய்த வாலிபரின் குடும்பத்தை வெளியேற்ற கோரியும், அருகே உள்ள மதுபான கடையை அகற்றக்கோரியும் நேற்று காலை திடீரென ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர் அருகே ராயனூரில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இதில், நூற்றுக்கும்மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு வசிப்போர் பல்வேறு தொழில் நிறுவனங்களில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.

முகாமில் வசிக்கும், சுதாகார், சின்னவர் என்ற ஜெயப்பிரகாஷ் ஆகிய இருதரப்புக்கும் கடந்த, 5ம் தேதி மாலை திடீரென மோதல் ஏற்பட்டது.இதில், சுதாகர் அண்ணன் செல்வம் (என்ற) நிலாதரன் கத்தியால் குத்தியதில், ஜெயப்பிரகாஷ் இறந்தார். அவரது தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

தமிழ்ச்செல்வன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று வீட்டுக்கு திரும்பினார். இதுதொடர்பாக நிலாதரனை பசுபதிபாளையம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பிரச்னைக்கு காரணமான சுதாகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்து, முகாம்வாசிகள், நேற்று காலை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கூறியதாவது:சுதாகரன் குடும்பத்தார் அனைவரிடமும் அடிக்கடி பிரச்னை செய்கின்றனர். இதை முன்கூட்டியே பொலிஸார் தடுத்திருந்தால், இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது.

பிரச்னைக்கு காரணமான சுதாகரை விட்டுவிட்டு, அவரது அண்ணனை மட்டும் கைது செய்துள்ளனர். சுதாகரையும் கைது செய்ய வேண்டும். சுதாகர் குடும்பத்தை வேறு முகாமுக்கு மாற்ற வேண்டும். அதேபோல, இப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு முகாமில் வசிக்கும் இளைஞர்கள் குடிக்கச் செல்கின்றனர். சிலர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்த மதுபான கடையால் அனைவருக்கும் பிரச்னை. எனவே அதை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.தகவலறிந்த, கரூர் டி.எஸ்.பி., மனோகரன் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

இலங்கை தமிழர்கள் இதுதொடர்பாக மனு ஒன்றை எழுதி டி.எஸ்.பி.,யிடம் வழங்கினர். நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., உறுதி கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

http://seithy.com/br...&language=tamil

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.