Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக எழுத்தாளர்கள் தினம் குறித்து யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு அறிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக எழுத்தாளர்கள் தினம் குறித்து யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு அறிக்கை.

தமிழீழம் | ADMIN | NOVEMBER 15, 2012 AT 10:47

உலகமெங்கும் உள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் அரச அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றார்கள். அவ்வாறு துணிந்து வெளிப்படுத்தும் எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்களையும் , வெளியீட்டாளர்களையும் அரசு அச்சுறுத்துகின்றது. பின்னர் சிறையில் அடைக்கிறது, அல்லது கொலை செய்கின்றது. ஆகையால் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்காய் 15.11.1981ம் ஆண்டு எழுத்தாளர் தினம் ஆரம்பிக்கப்பட்டது .

இன்று இலங்கையில் கருத்துச்சுதந்திரம் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளது, Sunday Leader பத்திரிகையில் பணியாற்றிய லசிந்த விக்கிரமதுங்க என்ற சிங்கள எழுத்தாளர் இலங்கை அரசின் அடக்கு முறையை எதிர்த்து எழுதியதால் 08.01.2009 அன்று உந்துருளியில் வந்த நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 28.04.2005 அன்று ஊடகத்தில் முதிர்ச்சிபெற்ற தமிழ் ஊடகவியளாளரான தேவரட்னம் சிவராம் அவர்களும் இனம் தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டார். ‘Committee to Protect Journalists’ என்ற அமைப்பு 1992 – 2012ம் ஆண்டு காலக்கட்டத்தில் 25 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என கூறுகின்றது, “Journalists for Democracy” என்ற அமைப்பு 39 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கின்றது. மேலும் இலங்கையில் பல ஊடகவியளாளர்கள் கொலை செய்யப்படுவதும், காணாமல் போவதும், புலம்பெயர்ந்து செல்வதும் தொடர்ந்துகொண்டே உள்ளது. 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஊடக அடக்குமுறை நாடுகளின் வரிசையில் இலங்கை 4வது இடத்தில் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரசு செய்த மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களை துளு திசநாயகம் என்ற ஊடகவியளாளர் வெளிக்கொண்டு வந்தார், அவரை இலங்கையில் உள்ள கொழும்பு உச்ச நீதி மன்றம் பயங்கரவாதத்தை தூண்டுகின்ற கருத்தை கூறுவதாக கூறி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவருக்கு எதிராக அறிவித்தது. இதை அடுத்து துளு திசநாயகம் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

இலங்கை அரசானது தனக்கு எதிரான ஊடகங்களை வாங்கி தன்வசப் படுத்தும் செயல்களிலும் இறங்கியுள்ளது. “The Sunday Leader” ஊடகத்தை மகிந்த ராஜபக்ஸாவுக்கு அரசியலில் நெருங்கிய நபர் தனதுரிமையாக்கி, அரசுக்குச் சார்பாக நடாத்துகின்றார். ஆனால் “The Sunday Leader” பணியாற்றும் Frederica Jansz என்ற ஊடகவியளாளர் தாம் இலங்கை அரசின் அடக்குமுறையை தொடர்ந்தும் எழுதுவோம் என கூறியுள்ளார். இந்த எழுத்தாளர் தினத்தில் யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு தமிழ் ஊடகங்களை தேசப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும் மற்றும் இனப்பற்றுடன் ஆக்கப்பூர்வமாக காலத்தின் தேவை கருதி ஒன்றுமையாய் செயற்படுமாறு மிகவும் உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றது.

http://thaaitamil.com/?p=38488

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.