Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேய்கள் பின்தொடர்கின்றன.

Featured Replies

பேய்கள் பின்தொடர்கின்றன.

ஆமிக்குப் போன தமிழ்ப் பிள்ளையளுக்குப் பேய் பிடிச்சிட்டுதாம் இந்த வாரம் பரபரப்பான செய்திகளில் முதலிடத்தைப் பெற்றது மேற்குறித்த செய்திதான்."உலகம் 21 ஆம் திகதியுடன் அழியப்போகிறது''.  என்ற வதந்தியைக் கூட பின்தள்ளி விட்டு, வடபகுதியின் வாய்கள் அத்தனையும் இந்த பேய்பிடிப்புக் கதைகளையே அதிகம் முணுமுணுத்துக்கொண்டன.

 
மறத்தால் புலியை விரட்டிய தமிழ்ப் பெண்களின் வீரத்தை காலம் காலமாகவே செவி வழிக்கதைகள்,இலக்கியங்கள் என்பவற்றில் மட்டுமல்லாது நேரிலும் கண்டவர்கள் நாங்கள். தமிழர்களின் விடிவுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்களுக்கு சரிசமமாக, ஆயுதத்தை தமிழ்ப் பெண்களும் தூக்கினர்
 
இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டு, வரிச் சீருடையோடு களமாடி மகளிர் படையணிகள் பறித்த வெற்றிகள் ஏராளம்.தனியே மரபார்ந்த மற்றும் கெரில்லா முறை சண்டைகளில் மட்டுமல்லாமல் ஆண்களே செய்ய முடியாத துணிகர நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக இவர்கள் செய்து காட்டினர்.
 
அங்கயற் கண்ணி தொடக்கி வைத்த வழியினில் தம் உயிரையும் உடலையும் பிய்த்தெறிந்து, விடிவுக்காக மடிந்த பெண் போராளிகள் பலர்.  இறுதியில் நமக்கான காலம் முடிந்துபோனது.
jaffna%20army%20tk%2001.jpg
 
தலைநிமிர்த்தி களமாடிய பெண் போராளிகளின் நிலை தலைகீழாக மாறிப்போனது. தடுப்புக்கு கொண்டுசெல்லப்பட்டு புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளை தங்கள் குடும்பங்களுடன் இணைந்து வாழவே மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
 
"இயக்கத்துக்கு போட்டுவந்தவளை எங்கட பெடியனுக்கு எப்படி கட்டிக் குடுக்க முடியும்?'' என்று வார்த்தை அம்புகள், அறம்புறமாகப் பாய்ந்து அவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளை குதறிப் போட்டன. 
 
கனவுகள் கண்ணீரில் நனைந்து, சுடுசொற்களின் மேல் வெந்துகொண்டிருந்தன. வருடக்கணக்கில் குடும்பத்தோடு பிணைப்பில்லாத காரணத்தால் "தம்மை வேண்டாத விருந்தாளிகளாக நடத்துகிறார்களோ?' என்ற எண்ணம் இந்த முன்னாள் போராளிகளிடம் முளைவிடத் தொடங்கியது.
 
குடும்பத்தாருடன் இருக்கவேண்டிய பாசப்பிணைப்பில் நிரப்பமுடியாத இடைவெளிகள் உருவாகின. குடும்ப அங்கத்தவர்களும் .இந்தப்  பெண்போராளிகளை விளங்கிக்கொள்ளத் தவறியிருந்தனர்.
 
 "ஆயுதத்தைத் தூக்கியவள்'' "ஆமிக்காரர்களை சுட்டவள் '' என்ற அழிவுற்றுப் போன பழைய விம்பங்களையே மீண்டும் தூசி தட்டி பெண் போராளிகளுக்குப்  பதிலீடாக அந்த விம்பத்தையே இன்னமும் கண்களுக்குள் தேக்கி வைத்திருந்தனர்.
 
கசப்பின் தருணங்களை மறந்து பழையபடி  தங்கள் குடும்பத்தோடு ஒட்டி உறவாட வேண்டும் என்ற தவிப்பு இந்தப் பெண்களிடம் பொங்கி எழவே செய்தது. ஆயினும் ஒருவித  இடைவெளித் தன்மையோடே குடும்ப அங்கத்தவர்கள் உறவாட முற்பட்டதால் இந்தப் பெண்களுக்கும் குடும்பத்தவர்களுக்கும் இடையே மெல்லிய திரை விழுந்தது. 
 
திரையின் அடர்த்தி நாளுக்கு நாள் அதிகரித்தது. வேறு வேலை தேடமுடியவில்லை. இவர்கள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே பறிபோன பணிகள் ஏராளம். எல்லோருடைய கண்களுக்கும் இவர்களைப் பார்க்கும் போது மட்டும்  சந்தேக நோய் தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.
 
வீட்டிலும் வறுமை. "நாங்கள் வன்னியை சிங்கப்பூராக்கி, அதிலே சகல வசதிகளோடும் மக்களை குடியேற்றி விட்டோம்.'' என்று மார்  தட்டுகிறது அரசு.  நிலவரம் உகண்டாவை விட கீழ் மட்டத்திலேயே  வன்னியின் உண்மையான வாழ்வு இருக்கிறது.
 
வீதியை அகலமாக்கி, காப்பெற் போட்டு, இருமருங்கிலும் கட்டடக்காடுகளை எழுப்பி விடுவதால் மாத்திரம் மக்களின் வாழ்வு வளம் பெற்றுவிட்டதாக அர்த்தமாகாது. அவர்களின் வாழ்வு எந்தவித இடருமின்றி அதன் பாட்டிலேயே அசைவதற்கான ஏது நிலைகள் வன்னியில் இல்லை. வாழ்வை வளமாக்கும் எந்தவொரு முயற்சியில் இறங்கினாலும், படைத்தரப்பின் குறுக்கீடு தொடரவே செய்கிறது.
 
சுவரில் பட்ட பந்தாக மீண்டும் பூச்சியப் புள்ளிக்கே அவர்களது வாழ்வு திரும்பவேண்டியிருக்கிறது.  குடும்பப்பார சிலுவைகளை சுமக்கவேண்டிய ஆண்களில் பெரும்பாலானோரை போர் தின்றுவிட்டது. இன்னும் பலரின் அங்கங்களை அது எடுத்துக்கொண்டதால்,  ஊன்று கோலோடும், சக்கர வண்டில்களிலுமே இன்னும் சில ஆண்களின் வாழ்க்கை பிறரின் துணை கொண்டு நகர வேண்டியிருக்கிறது.
 
இத்தகைய குடும்பச் சூழல் வந்து சேரும் நிலையில் குடும்பச் சிலுவையை பெண்களே சுமக்க வேண்டியிருக்கிறது. தலையில் "இயக்கத்தில் இருந்து வந்தவள்'' என்ற ஊரின் கேலிச்சொற்கள் முள்முடியாகி, இரத்தத்தை சொட்டவைக்க குடும்பப் பாரச் சிலுவையை தோளில் தூக்கி வைத்தனர் இந்தப் பெண்கள். ஆனால் எந்தத் திசையை நோக்கிப் பயணிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 
 
இந்தச் சமயத்தில் தான் படைத்தரப்புக்கு பெண்களைத் திரட்டும்  பணியை அரசு காதும் காதும் வைத்தது போல் தொடங்கியிருந்தது. பகிரங்க விண்ணப்பத்தினூடாக அதிலிருந்து உரியவர்களைத் தெரிவு  செய்வதே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபார்ந்த முறை. ஆனால் தமிழ்ப் பெண்களை படைத்தரப்புக்குள் உள்வாங்கிவிட வேண்டும் என்ற உள்நோக்கோடு அந்த மரபை மிகச்சுலபமாக மிதித்தது அரசு.
 
""பிரித்'' ஓதி, குடும்பங்களிடம் இருந்து பெண்களை பிரித்தெடுத்தனர். பெற்றோரே மனமுவந்து தம் பெண் பிள்ளைகளை படையில் சேர்த்ததாக பறைசாற்றினர். ஆனால் வறுமையும், தொழில் தேடவேண்டிய நிர்ப்பந்தமுமே இத்தகைய படுகுழியில் தங்கள் பிள்ளைகளை தாங்களே தள்ளவேண்டிய  நிலையை ஏற்படுத்தியதாக பெற்றோர்கள் இப்போது கதறுகிறார்கள்.
 
படைக்குப் போன பெண்களில் சிலர் அடுத்து வந்த நாள்களிலேயே மீண்டும் திரும்பி வந்தனர். அவர்களின் கண்களில் ஒருவித பயம் ஒட்டியிருந்தது. அதன் பின்னர் ஏனைய பெண்கள் வீட்டுக்குச் செல்லப்போவதாக கேட்டுள்ளனர். ஆனால் இப்படியே விட்டால் கடைசியில் இணைந்தவர்கள் எல்லோருமே போய் விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் தான் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் படைக்குச் சேர்ந்த 13 பெண்கள் மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களை பேய் பிடித்திருப்பதாக சொல்லிக்கொண்டனர்.
 
இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் "கலையாடவும்' தொடங்கினர். பிரித் நூலுக்கும், பூசாரிகளின் மந்திரங்களுக்கும் அந்தப் பேய்கள் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. அவை இனத்தின் மானத்தை அடகுவைத்து விட்டதாக எழுந்த குற்ற உணர்ச்சியில் உருவாகிய பேய்கள். எல்லாப் பேய்களும் இரத்தம் குடிப்பவை அல்ல. நல்லதைச் செய்யும் பேய்களும் உண்டு. இந்தப் பெண்களுக்கு அவர்களின் தவறை தொடராதிருக்க பேய்கள் இன்னும் வரலாம்.

 

நன்றி தமிழ்க்கதிர் 

சிங்கள பேய் பிடித்த பெண்கள் கன்னியா நீருற்றில் நீராடினர்

tamil-army-girls-150x150.jpgசிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பேய்பிடித்து மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி சிகிச்சை பெற்றுவந்த தமிழ் பெண்கள் சுற்றுலாவுக்காக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சிங்களப்பேய் பிடித்திருந்த அவர்கள் கன்னியா வென்னீர் ஊற்றில் நீராடினர்.

கடந்த 11ம் திகதி நள்ளிரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாமில் 16 தமிழ் பெண்கள் திடீரென பாதிக்கப்பட்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  பின்னர் படைமுகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் தற்போது திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் பிரெட்றிக் கோட்டை, திருக்கோணேஸ்வரம் கோவில், கிண்ணியா, நிலாவெளி கடற்கரை மற்றும் கன்னியா வெந்நீரூற்று போன்ற இடங்களுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ்ப் பெண்களில் 96 பேர் மட்டுமே இந்தச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஏனையவர்கள் தொடர்ந்தும் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படவில்லை என இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் உள்ள வைத்தியர் ஒருவர் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.tamil-army-girls.jpg

 
WWW.Thinakkathir.com
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.