Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத் தம்பி அடிப்பான் ஆசை அண்ணன் தடவுவான்: - பனங்காட்டான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அன்புத் தம்பி அடிப்பான் ஆசை அண்ணன் தடவுவான்: - பனங்காட்டான் 
[Friday, 2012-12-21 23:56:18]
 
ஷிரானி பண்டாரநாயக்காவை அரசியலுக்கு வருமாறு முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் இக்கட்டுரையில் குறிப்பிட்டவாறு ஷிரானி�அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவாரா? நடக்காது என்று சொல்ல முடியாது!
 
ஜனநாயக நாடொன்றின் ஆட்சியமைப்பு என்பது மூன்று கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது. சட்டவாக்க அதிகாரம், நீதிமுறை அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் என்பவை இவை.
 
இவற்றுள் முதலாவது, நாடாளுமன்றத்துடன் சம்பந்தமானது. இரண்டாவது, நீதி பரிபாலனத்துடன் சம்பந்தமானது. மூன்றாவது ஆட்சியின் உயர்பீடமான பிரதமர் அல்லது ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்டது.
 
இலங்கையைப் பொறுத்தளவில் மூன்றாவது, அம்சமானது ஜனாதிபதியைக் குறிப்பது. இங்கு பிரதமர் என்பவர் சடப்பொருளாக இயங்குபவர்.
 
மேற்சொல்லப்பட்ட மூன்று கட்டமைப்புகளும், இரு நடைமுறைகளை மீறாதவையாக இருக்கவேண்டும். அவை ஆங்கிலத்தில் �ஏ.ஆர்� என்றும், 'எ.ப். ஆர்"என்றும் அழைக்கப்படும்.
 
�ஏ.ஆர்� என்பது Administrative Regulations (நிர்வாக விதிமுறைகள்) என்றும், 'எ.ப், ஆர்"என்பது Financial Regulations (நீதி விதிமுறைகள்) என்றும் பொருள்படும்.
 
இவை எதனையும் மதிக்காது, தம்மிஷ்டப்படி இயங்கும் ஒரு நாடாக இலங்கை அமைந்துள்ளது.
 
சட்டவாக்க அதிகாரமான நாடாளுமன்ற நிர்வாகத்திற்கு அண்ணன் சமால் ராஜபாக்ச தலைமை தாங்குகிறார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிக்கு தம்பி மகிந்த ராஜபக்ச தலைவர். எஞ்சியிருக்கும் நீதிபரிபாலனம் மட்டும் ஒரு ராஜபக்சவிடம் இல்லாததால் அதனை எட்டிப்பறிக்கும் நாடகம் நடைபெறுகிறது.
 
இதனையும் ராஜபக்ச குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டால் சர்வாதிகார ஆட்சிக்குத் தேவையான சகல அம்சங்களும் ஒரு வீட்டின் கூரைக்குள் வந்துவிடும்.
 
அதன்பின்னர் மோசடி, ஊழல், கையாடல், கையூட்டல். கமிசன் எனப்படும் எல்லாம் சட்டபூர்வமாகி எவருமே மூச்சுவிட முடியாததாகிவிடும்.
 
ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி நீக்க மகிந்த எடுத்த முயற்சியின் பின்னணி இதுவே. ஆனால் இது குரங்கின் பின்னால் கொப்புத் தாவிய கதையாக மாறிவிட்டது.
 
ஷிரானி சாதாரண குடும்பப் பொண்ணாகையால், ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தின் பிரதம நீதியரசர் நெவில் சமரக்கூன் போன்று இவரும் பதவிநீக்க நடவடிக்கையைக் கண்டு பதவிதுறந்து ஓடிவிடுவார் என்ற ராஜபக்ச சகோதரர் கோதபாயவின் நோக்கம் இதுவரை நடைபெறவில்லை. மாறாக சாம, பேத, தான, தாண்ட நான்வகை ஆயுதங்களையும் ஷிரானி பண்டாரநாயக்க பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
 
அவருக்கு பின்பலமாக இன, மத, சாதி, பேதமற்ற வகையில் பெரும்பாலான நீதிபதிகளும், சட்டவாதிகளும் இருப்பதை அங்கு இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் காட்டி நிற்கின்றன.
 
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னால் சாட்சியமளித்த ஒரேயொரு நீதிபதி திருமதி ஷிரானி திலகரட்ண என்பவர்.
 
மற்றிரு நீதிபதிகளுடனும் ஒன்றாகத் தலைமை தாங்க வேண்டிய பல வழக்கு விசாரணைகள் கடந்த 17ம் திகதி திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டன. மற்றிரு நீதிபதிகளும் அங்கு சமூகமளிக்காததே இதற்கு காரணம்.
 
பிரதம நீதியரசருக்கு எதிராக திருமதி. திலகரட்ண சாட்சியமளித்ததை கண்டிக்கும் வகையில் மற்றிரு நீதிபதிகளும் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
இதனைத் தொடர்ந்து திருமதி. திலகரட்ணவுக்கு கோதபாய ராஜபக்சவின் உத்தரவில் பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது வேடிக்கையான வினோதம்.
 
ஷிரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கிய பின்னர், ஷிரானி திலகரட்ணவை பிரதான நீதியரசராக நியமிக்க மகிந்தவும் கோதபாயவும் திட்டமிட்டிருந்ததாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
 
புதிதாக எவரைப் பிரதம நீதியரசராக நியமித்தாலும் அதனைத் தாங்கள் ஏற்கப்போவதில்லை என்று இலங்கைச் சட்டவாளர் சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது மகிந்தவுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவால்.
 
சட்டவாளர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் விஜயதாச ராஜபக்ச என்னும் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் முதலில் மகிந்த தலைமையிலான சுதந்திரக் கட்சியினூடாகவே நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்.
 
ஆனால் பின்னர் மகிந்த தரப்பின் சர்வாதிகாரப் போக்கில் விரக்தியடைந்து அக்கட்சியிலிருந்து, வெளியேறி கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்.
 
இவரது தலைமையிலான சட்டவாளர் சங்கத்தை உடைப்பதற்குக் கடந்த வாரங்களில் பல முயற்சிகளை ராஜபக்ச சகோதரர்கள் மேற்கொண்டும் முடியாமற் போய்விட்டது.
 
இதன் தொடர்ச்சியாக கொழும்பில் நாவல என்னும் இடத்திலுள்ள விஜேயதாசவின் இல்லத்தின் முன்னால் 19ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் மூன்று தடவை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
 
வீட்டின் மேல்மாடியில் குண்டு துளைத்துள்ளது. முற்பகுதியில் சில வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
பொலிஸ்மா அதிபர் அங்கு விஜயம் செய்வதற்கு முன்னர் வேகமாக விரைந்து சென்றவர் ஜனாதிபதிப் பதவியிலிருக்கும் மகிந்த ராஜபக்ச.
 
சுமார் முப்பது நிமிடங்களை அங்கு செலவிட்ட இவர், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
ஓரிரு அமைச்சர்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச உட்பட ஜே.வி.பி. எம்.பிக்களும், சரத் பொன்சேகாவும் விஜேதாச வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்து தங்கள் அக்கறையைக் காட்டியுள்ளனர்.
 
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சர்வதேச அளவில் எவ்வளவு தூரத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதையும், இதனால் எவ்வளவு பாதிப்பு தமது அரசுக்கு ஏற்படும் என்பதையும் மகிந்த அறிவார்.
 
அதேசமயம், இந்தச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர் யார் என்பதையும் அவர் நன்கறிவார்.
 
�தம்பி அடிப்பான். அண்ணன் தடவுவான்� என்பது இலங்கை அரசியலில் சகல நாடுகளும் தெரிந்துவைத்திருக்கும் ஒரு விடயம்.
 
சில நாட்களுக்கு முன்னர் சட்டவாதி குணரட்ண வன்னிநாயக்க மீது தாக்குதல் நடத்த நால்வர் முனைந்தனர். பொறலஸ்கமுவவிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்னால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்திலுள்ள தேசிய சட்டவாளர் சங்கத்தின் செயலாளரான இவர் ஷிரானி பண்டாரநாயக்க விடயத்தில் நியாயத்தின் பக்கம் நின்று துணிச்சலாக செயற்படுபவர்.
 
ஷிரானி பண்டாரநாயக்க விடயத்தில் எதிர்பார்த்ததுபோன்று எதுவும் சுலபமாக முடியாததால் விரக்தி அடைந்திருக்கும் அரச தரப்பு, சட்டவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அச்சமூட்டும் காடைத்தனத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது அப்பட்டமாகத் தெரிகின்றது.
 
இதனால் நீதிபரிபாலனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மகிந்த அரசு எடுக்க ஆரம்பித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட ஆதரவுடன் இந்த மாதம் 21ம், 22ம் திகதிகளில் நீதிச்சேவை ஆணையம் இரண்டு நாள் கருத்தரங்கு மாநாடு ஒன்றை கொழும்பில் நடத்தவிருந்தது. பிரதம நீதியரசர் என்னும் பதவி வழியாக ஷிரானி பண்டாரநாயக்க இதன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
 
இதனை விரும்பாத அரசாங்கம் இக்கருத்தரங்கில் தங்களுக்கு நாட்டமில்லையென ஐ.நாவுக்கு அறிவித்து அதனை ரத்துச் செய்துவிட்டது.
 
நீதியரசர்களுக்கான கார் இறக்குமதி அனுமதியும் உத்தியோகப்பற்றற்றமுறையில் இடைநிறுத்தம் கண்டுள்ளது. உள்ளக நடவடிக்கைகள் ஊடாக வேறு சில எதிர்ச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
மறுபுறத்தில் தமக்கெதிரான விசாரணையை இடைநிறுத்தவும், தயாரிக்கப்பட்ட குற்ற அறிக்கையை தடுத்து நிறுத்தவும் உயர் நீதிமன்றத்தில் ஷிரானி பண்டாரநாயக்க தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது.
 
இதற்கான தீர்ப்பு டிசெம்பர் 21ல் வரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
 
நீதிமன்றம் நாடாளுமன்றத்திலும் உயர்வானதா அல்லது நாடாளுமன்றம் நீதிமன்றத்திலும் உயர்வானதா என்ற நெருக்கடி நிலை இப்போது உருவாகியுள்ளது.
 
�நீதியற்ற கட்டமைப்பு மிலேச்சத்தனமான சமூகமொன்றை உருவாக்கும்� என்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தெரிவித்திருப்பது இன்றைய சூழலில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது.
 
�நீயா? நானா?� என்ற போட்டிக்குள் பிரதம நீதியரசரும், ஜனாதிபதியும் பகிரங்க ஆட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அவளைத் தொடுவானேன்? அவலப்படுவானேன்?� என்ற சொற்றொடர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் பொருத்தமாகவுள்ளது.
 
சிறுகுறிப்பு: ஷிரானி பண்டாரநாயக்க சிறிமாவோ பண்டாரநாயக்க குடும்பத்தின் உறவினர் அல்ல. விஜேதாச ராஜபக்ச ஜனாதிபதி ராஜபக்ச குடும்பத்தினரின் உறவினர் அல்ல.
 
பிற்குறிப்பு: ஷிரானி பண்டாரநாயக்காவை அரசியலுக்கு வருமாறு முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் இக்கட்டுரையில் குறிப்பிட்டவாறு ஷிரானி�அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவாரா? நடக்காது என்று சொல்ல முடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.