Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை : 'ஏமாற்றத்துடன் கடந்துபோகும் 2012'

Featured Replies

கடந்துபோன 2012 ஆம் ஆண்டு இலங்கையை பொறுத்தவரை பல வகைகளிலும் ஒரு ஏமாற்றம் மிக்க ஆண்டாகவே கடந்து போயிருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், சிலோன் டுடே பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியரும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார்.


போரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இலங்கை தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானம் ஒரு உந்து சக்தியாகப் பார்க்கப்பட்டாலும், அதனையடுத்து பெரிய அளவில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

அதேவேளை இலங்கையின் தென்பகுதி அரசியலைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் பலமிழந்த நிலையில், ஒரு தனிநபர் ஆட்சியே அங்கு நடக்கிறது என்ற நிலைமையே தொடர்வதாகவும் அனந்த் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக நீதித்துறைக்கும், சட்டவாக்கத்துறைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இலங்கையில் ஒரு ''அரபுவசந்தத்தை'' ஒத்த நிலையை ஏற்படுத்திவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இதற்கிடையே 2012 இல் இலங்கையில் தொடர்ச்சியாக தொழிற்சங்கப் போராட்டங்கள் நடந்திருப்பதாகவும், அதில் கல்வித்துறை போராட்டம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

 

121202124930_jaffna_tharshananth_304x171


இந்தப் போராட்டங்களுக்கு இலங்கையின் பொருளாதார நிலையே அடிப்படைக் காரணம் என்றும் அனந்த் பாலகிட்ணர் கூறுகிறார்.

 

அதேவேளை தமது பிரச்சினைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121231_anandonlankain.shtml



Review of the year 2012

 

http://www.dailymirror.lk/news/infographics/24633-review-of-the-year-2012.html



சுவடுகள் 2012...

 

http://tamil.dailymirror.lk/--main/55908--2012.html

  • தொடங்கியவர்

மூன்று ஆண்டுகள் தமிழர்கள் அழிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய வருட பிறப்பை கீழே உள்ள படம் மூலம் வர்ணிக்க முடிகின்றது:

 

577804_103571906483627_1604146038_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.