Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய ஊடகங்களிற்கிடையிலான ஒத்துளைப்பு

Featured Replies

தற்பொழுது பூட்டப்பட்ட ஒரு விடையத்தலைப்பில் தமிழ் ஒளி இணையம் விரைவாக செய்திகள் கொண்டுவருவதில்லை என்ற முறைப்பாடு ஓரளவு உண்மையானது.

தமிழ் ஒளி இணைய செய்திகளில் சில தடவை அவதானித்திருக்கிறன் அவர்கள் புதினம் தமிழ்நெற் சங்கதியில் வரும் செய்திகளின் கோணத்திலேயே சொல்லுகிறார்கள். அதன் அர்த்தம் அவற்றை மூலமாக வைத்துத்தான் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் அது இந்த இணையத்தளத்தின் செய்தியின் அடிப்படையில் தான் கூறப்படுகிறது என்ற ஊடக தர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை. மிக அரிதான சந்தர்ப்பங்களில் பொதுப்படையாக "இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன" என்று கூறுவார்கள். ஏன் இந்த வரட்டுக் கொளரவம் நீங்கள் நம்பி மூலமாக எடுக்கும் இணையத்தளத்தின் பெயரை கூறிப்பிடுவதில் என்ன பிரச்சனை? ஏன் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதை தவிர்க்கிறார்கள்?

சில செய்திகளை தமது நிருபர்கள் மூலம் உறுதிப்படுத்தாமல் அறிவிக்கமாட்டோம் என்ற விளக்கம் ஏற்றுக் கொள்ளகூடியது அல்ல. BBC, CNN போன்றவற்றை உதாரணமாக எடுத்தால் breaking news என்று வரும் பொழுது வேறு ஊடகத்தை முற்றுமுழுதாக மேற்கோள்காட்டி அவர்களின் செய்தியின் சாரம்சத்தை கூறி தமது நிருபரிடம் மேலதிக தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் விரைவில் உங்களுடன் பகிர்வோம் என்பார்கள். ஏன் இந்த நடமுறையை தமிழ் ஒளி இணையத்தார் பாவிக்கக்கூடாது? BBC, CNN போன்றவற்றில் செய்தி நேரத்திற்கு முன்போ செல்லக்கூடிய முக்கியத்துவம் உள்ள செய்திகளை சுடச் சுட வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுதே கிளே எழுத்தோட்டமாக போடுவார்கள். ஏன் தமிழ்நெற்றின் முகவரி இலச்சினையோடு செய்தியின் சாரம்சத்தை எழுத்தோட்டமாக போடக்கூடாது?

தமிழ்நெற்றை எனைய மேற்குலக ஊடகங்கள் ஒரு News Agency, Newswire ஆக பாவிக்கின்றன. உதாரணத்திற்கு Reuters போன்று. Reuters as news agency & newswire பலதரப்பட்ட ஊடகங்களால் தத்தமது நிருபர்களிற்கு அப்பால் மேற்கோள் காட்டப்படுகிறது. ஆனால் எமது ஊடகங்களின் கண்ணுக்கு ஏன் அவ்வாறு தெரியுது இல்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுவோம் .... "செவிடன் காதில் சங்கு ஊதுவது போலத்தான்" .... ஏறவா போகிறது!!!! ....

அங்கு வேலை செய்பவர்களுக்கு செய்தி எண்றால் என்ன எண்று மதல் தெரிய வேண்டும்.

உதாரணத்திற்கு விழுந்தடித்து பல நூறு செய்திகளை சொல்கிறார்கள் அதாவது அங்கு தாக்குதல் சிப்பாய் பலி இங்கு தாக்குதல் சிப்பாய் பலி அதில் தாக்குதல் சிப்பாய் பல இதில் தாக்குதல் சிப்பாய் பலி அவர்கள் சுட்டனர் சிப்பாய் பலி இவர்கள் சுட்டனர் சிப்பாய் பலி இவற்றில் எல்லாம் இராணுவத்தினரின் கொலைக்கு முன்னரிமை கொடுக்கபடுகிறது. ஆனால் அனைத்து சம்பவங்களிலும் தமிழ் மக்கள் காயப்பட்டால் அல்லது கொல்லபட்டால் அல்லது துன்புறுத்தபட்டால் அது கடைசி வரியில் சொல்லி முடிக்கிறார்கள்.

இது மாபெரும் தவறு இதைதான் லங்காபுவத் ஜலண் உட்பட அனைத்து ஊடகங்களும் செய்கிண்றன.

50 இறாணுவம் ஒரு சம்பவத்தில் கொல்லபட்டாலும் அந்த இடத்தில் 5 தமிழ் மக்கள் இராணுவம் தாக்கியதில் அல்லது இராணுவம் சுட்டதில் காயப்படால் அதைதான் தமிழ் ஊடகங்கள் முன்னிலைபடுத்த வேண்டும். ஆனால் 50 இராணுவத்திற்கு அளுது வடிக்கும் இத்தகய ஊடகங்கள் 5 தமிழ் மக்கள் அந்த இடத்தில் காயப்படுவதை அலட்டி கொள்வதில்லை

இது மாபெரும் தவறு

500 இராணுவம் இறந்தாலும் அந்த இடத்தில் 50 பொதுமக்களுக்கு அல்லது 5 போராளிகளுக்கு காயம் எற்பட்டால் அதைதான் நாம் பெரிது படுத்தி மக்களை உணர்ச்சி பொங்க வைக்கவேண்டும்.

பொல்லெடுத்தவன் எல்லாரும் சண்டியனாகலாம். கமரா தூக்கினவன் எல்லாரம் தொலைக்காட்சி நடத்தாலாம் ஆனால் ஊடகத்துறையில் செய்தி என்பது செல்லவேண்டிய முறையில் மக்களை செல்லவேண்டும்.

இண்று ஈராக்கில் நடப்படு கொடிய யுத்தம்.

ஆனாலும் அமரிக்க மக்கள் ஈராக்கில் போராடும் அமரிக்க வீரர்களை ஆதரிப்பதற்கு காரணம். 50000 ஈராக்கிய மக்கள் இறந்தாலும் துன்பப்பட்டாலும் அதை சி.என்.என் மறைத்து 1 அமரிக்க வீரன் இறந்தாலும் அதை பெரிய செய்திய வெளி உலகிற்கு காட்டுகிறது இதனால் அமரிக்க மக்கள் கொதிப்படைகிறார்கள். அதன் விளைவால் அந்த இரத்த கொதிப்பில் அமரிக்க யுத்தம் நகர்கிறது.

  • தொடங்கியவர்

எமது பாடசாலைக் காலத்தில் இலக்கங்களை வைத்து ஒரு சின்னப்பிள்ளைத்தனமான வெற்றித்திருப்த்தியை கண்ட மாதிரி தான் இவையின் ஆசிரியர் குழுவின் மனோநிலை போலும்.

இராணுவத்தின் இழப்புகளை போட்டா போதும் என்று இருக்காமல் எமது பொதுமக்களின் அவலங்களை காட்ட வேணும்.

பல்கலைக்கழகத்தில் ஊடகவியல்துறையின் படிக்கும் மாணவர்களை கோடை விடுமுறைக்கு வேலை கொடுத்தால் ஆவாது கொஞ்சம் புதிய சிந்தனைகள் உள்ளே வரும் எல்லா?

பழைய கிழடுகட்டைகள் பனங்கொட்டை பாணியாரம் சுடுதுகள்.

சினிமா பொழுது போக்கு நிகழ்ச்சிகளை விதம் விதமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தூண்டுதல் செய்திகள் ஆய்வுகள் கலந்துரையாடல்கள் போன்ற வற்றில் இல்லை.

  • 2 weeks later...

----------------------------------------------------------------------------------------------------

பல்கலைக்கழகத்தில் ஊடகவியல்துறையின் படிக்கும் மாணவர்களை கோடை விடுமுறைக்கு வேலை கொடுத்தால் ஆவாது கொஞ்சம் புதிய சிந்தனைகள் உள்ளே வரும் எல்லா?

-------------------------------------------------------------------------------------------------------

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் குறுக்காலபோவான்.

'உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்' என்று மற்றைய ஊடகங்கள் பெரும்பாலும் ஆங்கில ஊடகங்களைப்போல் இவர்களும் நேயர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கவேண்டும்....ஆனால் செய்வார்களா?...இல்லை.. வழக்கமான எமது தமிழருக்கே உரித்தான அதிகாரதோரணையில் 'நான் போடுறத நீர் பாரும்' என்ற ரீதியில் இப்படியான நிறுவனங்கள் இயங்குகின்றன....

சும்மா ஒரு தமிழ்சங்கத்தில்கூட இந்த ஒத்துப்போகும் பண்போ எதுசெய்தால் முன்னேற்றம் வரும் என்ற கருத்துக் கணிப்புக்கோ இடமில்லை என்னும்போது மேல்சொன்ன செவிடன் சங்கு தான் வாழ்க்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.