Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணங்காமண் நிவாரணக் கப்பல் தொடர்பான நிதி சேகரிப்புச் சர்ச்சைகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வணங்காமண் நிவாரணக் கப்பல் தொடர்பான நிதி சேகரிப்புச் சர்ச்சைகள்..!
பிப் 6, 2013
     
கப்டன் அலி என்ற சிரியா நாட்டுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஜரோப்பிய நாடுகள் மற்றும் ஜக்கிய இராச்சியம் வாழ் தமிழர்கள் சேகரித்த உலர் உணவுப் பொருட்கள்,உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றிக் கொண்டு 2009 யூன் மாதமளவில் இலங்கைக்குச் சென்றது.
 
வணங்காமண் என்று இந்தப் பயணத்திற்காகப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பலில் சுமார் 894 மெ. தொன் நிவாரணப் பொருட்கள் இருந்தன. அந்தக் கப்பலில் 13 ஊழியர்கள் இருந்தனர். ஜஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழவின் உறுப்பினர் கிறிஸ்டன் வூச்னன் ஜக்கிய இராச்சிய குடியுரிமை பெற்ற உதயணன் தவராஜசிங்கம் ஆகியோரும் அதில் பயணித்தனர்.
 
நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு ஜக்கிய  இராச்சியத்தின் மில்ரன் கீன்ஸ் மாநகரில் 2009 மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை பேரெழுச்சியுடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பிலிப்சாகி தொடக்கிவைத்தார். கொடையாளிகள் பலர் அப்போது தமது பங்களிப்பைச் செய்தனர்.

வேறு பல நகரங்களிலும் மைய்யங்களிலும் சேகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன. பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி   மற்றும் உள்ளுராட்ச்சி உறுப்பினர்கள், பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இவற்றில் இணைந்தனர்.

ரூட்டிங் சிவயோகம் மண்டபம், சிறி செல்வ விநாயகர் ஆலயம், என்பீல்ட் செல்வ விநாயகர் ஆலயம், குறோய்டன் சிறீ சக்தி கணபதிகோவில் ஆகியவற்றில் மிக முக்கியமான சேகரிப்பு நிலையங்கள் இயங்கின. வடமேற்கு இலன்டன் புன்சேடவுன் பிறைமறி கல்வி நிலையம், வட குறொய்டன் கொன்சர்வேற்றிவ் அமைப்பு கட்டிடம் ஆகியவற்றிலும் சேகரிப்பு நடைபெற்றது.

தென்கிழக்கு இலன்டனின் லுவிசம் சிவன் கோவில் கற்பகம் வர்த்தக நிலையம் மில்லீனியம் சுப்பர் மார்க்கெற் புறொம்லி கோஸ்ற்கட்டர் சுப்பர் மார்க்கெற் ஆகியவற்றிலும் சேகரிப்பு மையங்கள் இயக்கப்பட்டன. தென்மேற்கு இலன்டனில் ஜயப்ப சுவாமி கோவில் இலக்கம் 71, கமன்ஸ் லேன் வாற்போட் ஆகியவற்றிலும் சேகரிப்பு மைய்யங்கள் செயற்ப்பட்டன. சேகரிப்பு தொடர்பான தகவல் வழங்குவதற்க்கு பிரத்தியேக தொலைபேசி எண்களும் (http;//www.Vannimission.org) மற்றும் (info@Vannimission.org என்ற வணங்காமண் வலைத் தளங்களும் திறக்கப்பட்டன.

நிவாரணப் பொருட்களோடு பொதுமக்களிடம் இருந்து நிதி உதவியும் பெறப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நிதி சேகரிப்பை யார் யார் செய்தார்கள், அவற்றிற்கான கணக்கு முறைப்படி செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது பற்றிய சர்ச்சை இன்று வரை நிலைக்கின்றது.

vanagaman.jpg

இவ்வாறு திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் கப்பல் கொழும்பில் இருந்து 160 கடல் மைல் தொலைவில் சென்றவேளை இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்டது. குறித்த கப்பல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கப்பலே எனவும் அது முல்லைத்தீவுக் கடற் பகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்த போதே கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை கடற்படை  தெரிவித்தது .

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் முறையான பயண அனுமதி பெறாது சட்டவிரோதமாக தமது கடற்பகுதிக்குள் நுளைய முற்பட்டதாக இலங்கை கடற்படை குற்றஞ் சாட்டடியது. கப்பலைச் சோதனைக்கு உட்படுத்திய கடற்படை வணங்காமண் கப்பலை இலங்கைக் கடற்பரப்பிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதை ஏஎப்பி செய்திச் சேவை உறுதி செய்தது.

வெளியேற உத்தரவிடப்பட்ட கப்பல் 2009யூன் 20ம் திகதிச் செய்திகளின்படி தமிழ் நாடு சென்னை அருகே 18கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போதைய தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி இந்த விடயத்தில் தலையிட நேர்ந்தது.

அவர் அதிரடியாய் கப்பலிலுள்ள நிவாரணப் பொருட்கள் வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிறிஷ்ணாவுக்கு கடிதம் எழுதினார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதத்தை புது டில்லிக்கு எடுத்துச் சென்றார்.

இதைத் தொடர்ந்து இலங்கை இந்திய உயர்மட்ட அதிகாரிகளிடையே பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஜனாதிபதி ராஜபக்சவின் இரு சகோதரர்கள் பசிலும் கொத்தபாயாவும் புதுடில்லி வந்தனர். வணங்காமண் கப்பலிலுள்ள பொருட்களைப் சென்னையில் வைத்துப் பிறிதோர் கப்பலுக்கு மாற்றுவது என்று தீர்மானிக்கப் பட்டது.  இந்தப் பணியை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்கும் என்றும் நிவாரணப் பொருட்களைக் கையேற்று விநியோகிக்கும் பொறுப்பை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஏற்றுக்  கொள்ளும் என்றும் பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டது.

எம்.வி.கொலராடோ என்ற சரக்குக் கப்பலுக்கு நிவாரணப் பொருள்கள் மாற்றப்பட்டுக் கொழும்புத் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பல நடைமுறைச் சிக்கல்கள் தோன்றியதால் மூன்று மாதங்களுக்கு மேல் அவை துறைமுகத்தில தேங்கிக் கிடந்தன.

இறுதியாக 2009 ஒக்ரோபர் 22ம் நாள் 680 மெற்  தொன் நிவாரணப் பொருட்கள் 27கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பார ஊர்திகள் மூலம் வவுனியாவுக்கு எடுத்துக் செல்லப்பட்டன. இவ்வளவு காலம் துறைமுகத்தில் தேங்கிக் கிடந்தபடியால் தாமதக் கட்டணங்களாக இலங்கை அரசு 20 இலட்சம் ரூபாவையும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் 6 இலட்சம் ரூபாவையும் செலுத்தின. மெனிக் பாம் அகதிகளுக்கு வவுனியா அரசு அதிபர் மேற்பார்வையில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. சர்வதேச விவகாரமாக இடம் பெற்ற வணங்காமண் என்று அழைக்கப்பட்ட கப்பல் தொடர்பாகப் புதிய சர்ச்சைகள் மிக அண்மையில் கிளம்பியுள்ளன.

2013 சனவரி 23ம் நாள் புதன்கிழமை வெளிவந்த மலேசியா ஆங்கில நாளிதழ் ஸ்ரார் (The Star) நிதி சேகரிப்பு பற்றிய முறைகேடுகள் அடங்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. வன்னி நிவாரண நிதி சேகரிப்பு மலேசியாவில் நடத்தப்பட்டு சுமார் 73,960 வெள்ளி திரட்டப்பட்டது. பொதுக் கணக்கு ஆய்வாளர் தான் துவான் தாட் வெளியிட்ட அறிக்கை கணக்குகளில் முன்னுக்குப் பின் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்த அறிக்கை விவரங்கள் ஜனவரி 2013ல் வெளிவந்தன. சீனர்களும் தமிழர்களும் உறுப்பினர்களாக இருக்கும் டிஏபி கட்சி 2009ம் ஆண்டு இலங்கைத் தமிழர் நிவாரண நிதி திரட்டும் பணியைத் தொடங்கியது.

ஜக்கிய இராச்சியத்தின் வன்னிக்கான கருணை நிவாரணம் (Mercy Missison to Vanni) என்ற அமைப்பிற்கு சேகரிக்கப்பட்ட நிதி அனுப்பப்பட்டதாக சம்பந்தப்பட்ட மலேசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நிதி திரட்டலுக்குப் பொறுப்பான அமைப்பின் செயலர் எம்.சதீஷ்குமார் 73,960 மலேசிய றிங்கிற் சேர்க்கப் பட்டதாகவும் இதில் 65,000 றிங்கிற் ஜக்கிய இராச்சியத்தின் வன்னிக்கான கருணை நிவாரண அமைப்பிற்கு அனுப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால் டிஏபி அரசியல் கட்சியின் உதவி பொதுச் செயலர் பேராசிரியர் இராமசாமி யூலை 2012ல் பிறிதோர் விளக்கத்தை நல்கியுள்ளார். 73,451 றிங்கிற் சேர்க்கப்பட்டதாகவும் அது முழவதும் மேற்கூறிய கருணை நிவாரண அமைப்பின் இலங்கைப் போரால் பாதிக்கப்பட்டோர் நிதிக்குச் செலுத்தப்பட்டதாகவும் போராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஜக்கிய இராச்சிய கருணை நிவாரண அமைப்pன் நிதி அறிக்கையில் மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படும் நிதி பற்றிய எந்தவொரு குறிப்பும் காணப்படவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று கணக்கு ஆய்வாளர் தான் துவான் தாட் (Tan Tuan Tat)      சுட்டிக் காட்டுகிறார்.

இந்த அதிகாரியின் பொது நிதி தொடர்பான அறிக்கை இன்னொரு முக்கிய தகவலை வழங்குகிறது. ஜக்கிய இராச்சியத்தில் வன்னிக்கான நிவாரணச் சேகரிப்பில் மூன்று வௌ;வேறு அமைப்புக்கள் செயற்பட்டனவாம. அவற்றின் விவரம் பின்வருமாறு. பெயர்கள் ஆங்கிலத்தில் Mercy Mission UK,  Mercy Mission Limited,  Mercy Mission Internationalட.

இவற்றில் முதலாவது மாத்திரம் அறிக்கை வெளியிட்ட போது இயங்கியதாகவும் நிதி ஆய்வாளர் குறிப்பிடுகிறார். அடுத்த இரண்டும் செயலிழந்து விட்டன.தனது அறிக்கை நகலை ஊழலுக்கு எதிரான மலேசிய ஆணையத்திற்கு நடவடிக்கைக்காக அனுப்பப்போவதாக தான் துவான் தாட் தனது பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடடுள்ளார். பல இழுபறிகளுக்குப் பிறகு தனது இலக்கை அடைந்த வணங்காமண்  விவகாரம் இன்றும் புதிய பிரச்சினைகளுக்குக் காரணமாகியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.