Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால் நழுவும் சுவடுகள்

Featured Replies

இந்த மக்கள் கேரள மக்களைப் போல விசாலமாக வாழ்கின்றார்கள் இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்திய அமைதிப்படை ஜவான்கள்
யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியலை, இந்தியாவின் "கடவுள் தேசமாக' வர்ணிக்கப்படும் மலையாள வாசனைக்குரிய கேரளாவுடன் ஒப்பிட்டு பேசிய தருணங்கள் அவை.

 

 

புறப்படையான பார்வை நோக்கலின் அடிப்படையில், யாழ்ப்பாணத்து மக்கள்  "விசாலமானவர்கள்" என்னும் முடிவுக்கு அந்நியர்கள் வேகமாக வந்து விடுவதற்கான முக்கிய காரணங்கள் எமது "பொருளாதாரமும்', "வாழ்வாதாரமும்', "வாழிடக் கோலமுமே!


தனித்தனியான, கிணறுகள், எல்லைப்படுத்தப்பட்ட தனிக் குடும்ப வாழிடங்கள், பிரத்தியேகமான மலசலகூடங்கள், பொறுப்புணர்ச்சியுடன் விளைவிக்கப்படுகின்ற விவசாய நிலங்கள் என்று எமக்குத் தெரியாமல் பிற ஆசிய தேசங்களுக்கு கண்ணைக் குத்துகின்ற எமது சிறப்புக்கள், உண்மையிலேயே தனித்துவமானவை.

 

"வர தட்சணை" என்ற பணப்பிசாசின் கோரப்பிடியில் இந்தியாவின் பல்வேறு சமூகங்கள் சீரழிவுக்குள்ளான போதிலும், சில பல கட்டுப்படுத்தப்பட்ட முறைகளினூடாக கைமாற்றப்படுகின்ற யாழ்ப்பாணத்தவர்களின் "சீதனம்" வீழ்த்தியவர்களை விட, வாழவைத்தவர்களின் எண்ணிக்கை மனக் கணக்கினால் எப்போதும் அதிகமே!


மரணங்களை மலிவுப் பதிப்பில் எம்மிடம் விற்பனை  செய்த ஆள்வோரின் அடக்குமுறைக்குள் அமிழ்த்திக் கிடந்ததை, முதன்மைக் காரணமாகவும், நாகரிக உச்சத்தின் தலைசிறந்த வாழ்க்கைக் கோலமான "குடும்ப' அமைப்பு முறையை துணைக் காரணமாகவும் கொண்டு வடபுலம் என்றைக்குமே சனத்தொகை நெருக்கடி  என்ற சங்கடத்தை இன்றுவரை சந்தித்ததேயில்லை.

 

வடிகால்கள் மீதிக்கு இணைக்கப்படாத தத்தமது வீட்டுக் கழிவுகளை  எல்லைக்குள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டிய "விசாலம்' இன்னும் மீதம் இருக்கின்றதென பெருமைப்படக் கூடிய குறு நிலங்கள் வட புலத்தில் நகர்ப்புறம் தவிர்ந்த எல்லா இடங்களிலும் பரந்து கிடப்பதை சாதாரணமாகக் காணலாம்.

எது உயர்ந்த வாழ்க்கை? இருக்கவே இல்லாத இடத்தில், எண்ணற்ற இலத்திரனியல் உபகரணங்களையும் ஆளுக்கு மேல் அடுக்கப்பட்ட குடியிருப்புக்களையும் கூட்டிக் கட்டி வாழ்வதா?

தனக்கான உணவைப் பயிரிட்டு அறுக்கப் போதுமான விளை நிலமும், ஒவ்வொரு  தனி மனிதனை

சுற்றியும் நான்கு மடங்கு வாயுக் கோளமும் கொண்டு பரந்து வாழ்வதா?


"அறுபது' களுக்கு பிறகு ஊரோடு உட்கார்ந்துவிடும் அரச ஊழியர்களையும் இறுதிக் காலங்களை சொந்தங்களோடு கழிக்கவென்று புலம்பெயர்ந்த தேசங்களை  விட்டுப் பிரிந்து நிரந்தரமாக வேப்பம் காற்றில் தங்கிவிடுகின்ற முதிய தம்பதியினரையும் பார்த்துப் பழகும் "பக்குவம்'' எமக்கு வர இன்னமும் காலம் இருக்கிறது.

 

திராவிடக் குடிகளில் ஆதியிலேயே ஊறிப் போன தனித்துவமான வாழ்க்கை முறைகளில் பழக்கவழக்கங்களாக, குடும்பங்களுக்கு பிரத்தியேகமான "நீர்குண்டு", "தீக்குண்டு" முறையே இன்றைய "கிணறு", "சமையலறை' என்பன அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.


பழந்தமிழர் வரலாற்றை அடித்துக் கூறும், காலச் சான்றாதாரம் என்று எதனையும் தன்னிடத்தில்

கொண்டிராத போதிலும், ஆங்காங்கே திட்டுத் திட்டாக வீழ்ந்து கிடக்கும் காலத்தின் சுவடுகள், இத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன.

 

கூடவே அழிவுக்குள்ளாக்கப்படும் இனமொன்றின் நீடித்த வீழ்ச்சியை உறுதி செய்யும் ஊடுருவல்களாக மொழியழிப்பும், கலாசாரவொழுக்கமும் காலகாலமாக அடக்கியாளும்  தேவையுடையோர்களால் கைக்கொள்ளப்படுகின்ற மலின உத்திகளேயாகும், "தூய வழி இனம்" என்ற  பெருமையை சிதைக்க வேண்டிய, கலப்பு யுத்தியை அதிகாரத்தின் துணையோடு விதைப்பவர்களின், நீண்ட நோக்கம் எதிர் வருகின்ற நூற்றாண்டுகளை  நோக்கிய பலவீனப்படுத்தும், கொடூரமானதும், அசூசை நிறைந்ததுமாகும்.

 

உலக வரலாற்றில் இது ஒன்றும் புதிதல்ல. தத்தமது சொந்தப் பூமியிலேயே  சிறுபான்மையினராக ஆக்கப்பட்டவர்களின் கண்ணீரில் கால் கழுவி மௌனத்தில் துடைத்தழித்து தலைகுனிந்து நிற்கின்றது

இறந்த காலம் அமெரிக்க கண்டங்களில்  செவ் இந்தியர்களையும், ஆஸ்திரேலியாவின் அபார் ஜீனிஸ்களையும், தென்கிழக்காசியாவின் மஞ்சூரியர்களையும், குமரிக் கண்டத்தின் தமிழர்களையும், இன்னும் எஞ்சியிருக்கும் பூர்வீகிகளாக கொண்டாடி ஆடும் தைரியம் எந்த வரலாற்று ஆசிரியளுக்கும் இன்னும் வரவில்லை.


ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயத்தை, தம் வாழ்வோடு பின்னிக் கொண்ட இவர்களில் இன்னும் சீண்டப்படாமல் எஞ்சியிருப்பவர்களாக ஆபிரிக்க கறுப்பினர்கள் சுட்டிக் காட்டப்படுகின்றனர்.

உடல் உழைப்பினை பிரதான மூலதனமாகக் கொண்ட பூமித் தாயின் பூர்விக புத்திரர்கள் யாவரினதும் மேனி நிறம் "மெலனின்" வஞ்சகம் நிறைந்த கறுப்பு என்று உண்மையை அதக்கிப் துப்புகின்றது உயிரியல் விஞ்ஞானம் உலகுக்கு உணவிடும்  உழவுத் தொழிலை கண்டங்களாகப் பிரித்து தாமுண்டு தன் பாடுண்றென்று வாழ்ந்தவர்களை பின்னால் வந்த"கொம்பு'கள் மறைத்தெழுந்து அடிமை கண்டது தான் நாம் அனைவரும் அறிந்ததொன்றே.


ஐரோப்பிய வந்தேறிகளினால் வளம் சுரண்டப்பட்ட அமெரிக்காவின் பூர்விக  செவ்விந்தியர்களும், ஆஸ்திரேலியாவின் அபார் ஜீனிஸ்களும் தமக்கான எதிர்ப்பினை காட்டிக்கொள்ள முடியாத மனித வலு வறுமையும், பொருளாதார வெற்றிடமும் வாழிட பரம்பல் குறைவும் கொண்ட சமூகங்களாக தம்மைத் தாமே ஆக்கிக்  கொண்டதன் விளைவு, இன்றை திகதியில், விரவிட்டு எண்ணிவிடக்கூடிய ஆட்த்தொகையில் தத்தமது எஜமானர்களால் எறியப்படும் ஜீவனாம் சத்தில் பிழைப்பு நடாத்தும் கண்காட்சி மனிதர்களாக  வீழ்ந்து வாழ வைத்திருக்கின்றது.

 

ஆனால் தொழில்நுட்பம் கூட கடந்து போகத் துடிக்கின்ற விஞ்ஞானத்தின் எழுச்சிப் புள்ளியில் நின்றுகொண்டிருக்கின்ற உலகத்தில் அன்றைய ஆக்கிரமிப்புக்களுக்கு சற்றும் நிகர் குறையாத நில அபகரிப்பினை எதிர்த்து குரல் எழுப்பும் வலிமையை ஈழத் தமிழன் சூப்புக்கேனும் நாவெடுக்காமல் வாழவிருப்பது வியப்பில்லையா?


துப்பாக்கிகளுக்கு முன்னால் நடுங்கி ஒழித்துக் கொள்கின்ற "பயம்' தான் இன்றும்  ஐம்பது ஆண்டுகள் கழிந்து வருகின்ற தமிழ் சந்ததிக்கு எம்மால் உரித்தாக  கொடுக்கப்படப்போகும் அடிமை வாழ்வுக்கான முதல் துளி என்பதை எப்படி ஜீரணிக்க முடிக்கிறது எம்மால்?

பாதிக்குப் பாதி சிங்களக் குடியேற்றங்களால் கற்பனை செய்யப்படுகின்ற வரும் எதிர்காலத்தின் பழிச் சொற்களின் பட்டியலில், "ஆளுநரையோ' "அமைச்சரையோ', "அதிகாரிகளையோ' திட்டித் தீர்க்கப் போவதில்லை எம் விழுதுகள் மாறாத ஐம் புலன்களினாலும் சடப்பொருளாக உறைந்து நின்ற ஒவ்வொரு தமிழர்களையும் கேட்கக் காது கூசும் வார்த்தைகளால் அர்ச்சிக்கக் காத்துக் கிடக்கின்றது

 

"இருள் மயமான' எம் எதிர்காலம்

வலி. வடக்கில் பாதுகாப்பு வேலிகளின் முன்னகர்வு, "நிரந்தர சொகுசுக் கட்டடங்களாக மாற்றப்படும் இராணுவ முகாம்கள்', "நாவற்குழியில்' அரச காணிகளில் சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டம்', "மாத்தளனில் திடீரென வந்திறங்கிய சிங்கள மீனவர்கள்' இவையெல்லாம் அண்மைய நாள்களில் இலங்கையில் இருந்து  புறப்படும் ஊடகங்களின் முக்கிய செய்திகள் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் எனப் பன்முகப்படுத்தப்பட்ட ஊடகங்களின் வாயிலாக வெளிவருகின்ற இத்தகவல்கள் போதுமான ஆதாரங்களா?

 

அதே இலங்கையிலிருந்து புறப்படுகின்ற ஊடகங்களில் பாதிக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலா ஆனவை இதேசெய்திகளை "அரச அபிவிருத்திப்'' பணிகளாக முரசறைகின்றன. அவற்றுள் பல்வேறு தமிழ் ஊடகங்களும் அடக்கம். இருக்க, "நாவற்குழி' தமிழர் பிரதேசம் என்பதையும், அங்கு அத்துமீறுபவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் என்பதையும் தேடிக் கண்டுபிடித்து நீதி தரக் காத்திருக்கின்றது.

சர்வதேசம் என்று நம்புவதில் என்ன பலன் கிட்டப் போகின்றது? வெகுவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்கள் எண்ணங்கள் என்ற பிரதிபலிப்பை விம்பப்படுத்தி விடாத செய்திகளுக்காக எவருமே இலங்கை அரசையும், ஆள்வோரையும் கேள்வி கேட்கப் போவதில்லை என்ற உண்மையை நம்பக் கடினமேயாயினும், நம்பியே ஆக வேண்டும்.


ஆனால் மேற்கூறிய வலிந்த அத்துமீறல்களுக்கு எதிராக "சாமானியர்களால் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகள்' என்கின்ற தொனிப்பினால் பிரதானப்படுத்தப்படுகின்ற தகவல்களும், தரவுகளும், ஒலிவடிவங்களும், புகைப்படங்களும் காணொலிகளும் உலகத்தின் பார்வையை எம்மை நோக்கி ஈர்க்கச் செய்யும் என்ற யதார்த்தத்தை அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள எம்மில் யாருமே தயாரில்லை.

 

கடந்த போன  மூன்று வருடங்களில் மூக்குடைந்த தமிழர்களின் உடல்மொழி  உலகுக்கு சொல்ல வருவது என்ன? "ஒன்று கூடல்' என்பது ஆலயத் திருவிழாக்களோடு வீதிகளை குறைத்து நெருங்குவதாகவும், "கூட்டம்' என்பது வீடமைப்புக்கும், நியமனத்துக்கும், ஆள்பிடிக்கும் வரும்படிப் பொறியாகவும், "எழுச்சி', "புரட்சி' எல்லாம் எழுத்துக்களில் மட்டும் வந்து போகின்றவையாகவும், "ஹர்த்தால்' போன்ற இயல்பு வாழ்வின் முடக்குகைகள் முன்னாள் சம்பவங்களாகவும் மாறிப் போனவை தானே?


மேற்படி எவ்வழிகளிலேனும் தமது "அன்றாடக் கருமங்கள்  பாதிக்கப்படாமல் கொண்டு நடத்துகின்ற மக்களிடம் பிரச்சினை உள்ளது'' என்று  சிறு  பான்மையாக தமிழ் மக்களை பிரதிபலிக்கின்ற ஊடகங்கள் சொல்வதை அப்படியே  நம்பி உலக தேசங்கள் எமக்கு நீதி பெற்றுத் தருவதற்கு முண்டியடிக்கும் என இலவு காத்திருப்பது எத்துணை முட்டாள்த்தனம்?

 

கணத்தாமதமின்றி உலகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒட்டுமொத்த நிலப்பரப்புகளையும் கண்காணிக்கும் வசதி படைத்த தகவல் தொழில்நுட்பத்தின் வானவெளியின் கீழ் வாழ்ந்து கொண்டு, ஆயுத அடக்குமுறைக்கும், அரசியல் பழி வாங்கல்களுக்கும் அஞ்சுகின்ற "பேதமையை' யாழ்ப்பாணத் தமிழர்கள் உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் யாவரினதும், இன்றைய முக மூடிகளாக இறுக்கிக் கட்டிவிடத்  துடிப்பவர்கள் எவரையும் மன்னிக்காது எம் "நாளை''.


உணவுக்கு மட்டும் வாய் திறப்பவர்களாகவும் தலை சொறிய மட்டும் கைதூக்குபவர்களாகவும், மரத்துப் போகக்கூடாதென்பதற்காய் கால் நீட்டுபவர்களாகவும் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற மறு பக்கத்தில், தமது தேவைகளை எவ்வித எதிர்ப்புமின்றி நிகழ்த்தி முடிக்கக் காத்திருப்பவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தில் நாங்களும் "தோன்றாப்'' பங்காளர்களாகவே கணிக்கப்படும் அபாயம் காத்திருப்பதைக் கண்டு, விழிமின் ! எழுமின் !

 

"கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள், தன் சிறகுகளை........" பெயர் மறந்து போன கவிஞனொருவனின் வார்த்தைகளில் துளித் துளியாய் வடிந்து, ஒவ்வொருவரினதும் உள்ளங்கைகளில் உறைந்து இறைஞ்சுகின்றது. எம் "இனத்தின் இருப்பு" !

- செந்தூரி

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=2333046211169927

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.