Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் அசிங்கப் பயணமாகியது இந்தியாவிற்கான ஆன்மீகப் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் அசிங்கப் பயணமாகியது இந்தியாவிற்கான ஆன்மீகப் பயணம்

பிப் 14, 2013
     
பிரித்தானியாவில் இருந்து சிறீலங்காவின் ‘அதியுயர் ஜனாதிபதி’ மகிந்த ராஜபக்ச விரட்டப்பட்டு ஓடத்தொடங்கியபோது அவரது இந்த ஓட்டம் இனித் தொடரும் என்பதை ஆணித்தரமாகக் கூறியிருந்தோம்.
 
இப்போது அயலிலுள்ள இந்தியாவில் இருந்தும் அவர் விரட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார். இனப்படுகொலையை முடித்த கையுடன் இந்தியா சென்றிருந்த மகிந்தவிற்கு ஆளும் கொங்கிரஸ் அரசு செங்கம்பளம் விரித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்பளித்தது. அதன் பின்னரும் இரண்டு தடவைகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது ஆங்காங்கே தமிழ் இன உணர்வாளர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியபோதும், மகிந்தவை இந்தியா மிகக் கௌரவமாகவே வரவேற்றிருந்தது.
 
இறுதியாகக் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் மகிந்த இந்தியா செல்லவிருந்தபோது, மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் சேலத்தில் முச்சக்கரவண்டிச் சாரதியான விஜயராஜ் என்பவர் ‘இந்தியாவுக்கு ராஜபக்ச வருவதைத் தடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி தமது உடலில் எரிபொருளை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். “ராஜபக்ச இந்தியா வருவதை யாரும் விரும்பவில்லை. இதனால் அவரது வருகையை தடுக்க வேண்டும், இதை வலியுறுத்தித்தான் நான் தீக்குளித்தேன்” என்று தனது உயிரை விடுவதற்கு முன்பாக உணர்வுமயமாகக் கூறிய அந்தத் தமிழன், “இந்திய அரசு சிறீலங்காவிற்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த  வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன்.
 
ராஜபக்சவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபக்சவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிபெற்று ராஜபக்சவை எதிர்க்க வேண்டும்” என்றார். பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோதும், மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று தடுத்தபோதும் அதனையும் பொருட்படுத்தாமல் தனது உணர்வுகளை ஊடகங்கள் ஊடாக தமிழக மக்களுக்கு வெளிப்படுத்திவிட்டு கண்களை மூடிக்கொண்டான் அந்த வீரத் தமிழ்மகன்.
 
இன்று சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, மகிந்தவின் வருகைக்கு எதிராக தமிழகம் கட்சி பேதம் இல்லாமல் எழுச்சி கொண்டதைப் பார்த்தபோது அந்த வீரத் தமிழ் மகனின் சாவின் மகத்துவத்தை உணரமுடிந்தது. ஆளும்கட்சி முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், திருமாவளவன், சீமான், கொம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமல்ல பல்கலைக்கழக மாணவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் சிறீலங்கா ஜனாதிபதிக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் எதிராக இம்முறை கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
 
மகிந்தவின் கொடும்பாவிகளை எரித்தும், சிங்கக் கொடிகளை அறுத்தெறிந்தும் தமது கோபத்தைக் காட்டியிருந்தனர். அத்துடன், தி.மு.க. தலைவர் கருணாநிதி, கழகத் தொண்டர்களை கறுப்பு உடையில் அழைத்து மகிந்தவின் வருகைக்கு எதிரான கண்டன மாநாடொன்றை நடத்தியிருந்தார். இதன் உச்சமாக மத்தியிள்ள கொங்கிரஸ் மகிந்தவிற்கு செங்கம்பளம் விரிக்க தயாராகவிருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கொங்கிரஸ் கட்சியினர் மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
“தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மகிந்த ராஜபக்ச இந்தியப் பயணத்தை இரத்துச் செய்திருக்க வேண்டுமென” கொங்கிரசின் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். விரும்பியோ, விரும்பமலோ மகிந்தவை ஆதரிக்கின்றவர்கள் கூட மகிந்தவை விரட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததை தமிழகத்தின் இந்த எதிர்ப்புக்கள் காட்டிநின்றன. ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ உட்பட அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் டில்லி வரை சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டு தமது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். மகிந்த வழிபாட்டிற்குச் சென்ற ஆந்திர மாநிலத்தில் திருப்பதி அமைந்திருந்த பகுதிக்கு தடை உத்தரவைப் போட்டபோதும், அதனையும் மீறிச்சென்று தமது எதிர்ப்புக்களை பலர் வெளிப்படுத்தியிருந்தனர்.
 
“உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்தகயா, சாம்ராட் அசோகர் தனது ஆயுதத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சையை போதிப்பதை இந்த இடத்திலிருந்து தான் துவங்கினார். அப்பேர்ப்பட்ட இந்தப் புனித மண்ணில்த்தான், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த பாவி மகிந்த ராஜபக்ச வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது” என பீகார் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். மகிந்தவின் வருகையை எதிர்த்துப் போராட்டமும் நடத்தியிருந்தார்.
 
இவ்வாறு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் மகிந்தவின் வருகைக்கு கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு இந்தியாவில் எழுந்த அதிகளவான எதிர்ப்பு மகிந்த ராஜபக்சவிற்கே இருக்கும் எனும் அளவிற்கு இது இருந்துள்ளது. இவ்வாறான கடும் எதிர்ப்புக்களால் தனது டில்லிப் பயணத்தைக் கைவிட்டு, மத வழிபாடுகளைக்கூட நிம்மதியின்றி செய்துவிட்டு, அசிங்கப்பட்ட முகத்தோடு நாடு திரும்பவேண்டிய நிலைக்கு மகிந்த தள்ளப்பட்டார். இந்தியாவின் பீஹார் மாநில முதல்வரைத் தவிர வேறு எந்த அரசியல் பிரமுகரையும் சந்திக்க முடியவில்லை என்றும், ஆனால் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘ரோ’ அமைப்பின் இயக்குனரான அலோக் ஜோசி மகிந்தவைச் சந்தித்தாக இந்திய ஊடகள் தெரிவித்தன.
 
எனினும், கடுமையான எதிர்ப்புக்களின் எதிரெலியாக ‘இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை இந்திய அரசாங்கம் அறிந்துவைத்துள்ளது என்றும் அந்த உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியது தார்மீகக் கடமை’ என்றும் இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி கருத்து வெளியிட்டார். அத்துடன், சிறீலங்காவுடன் உறவு வைத்திருப்பதனை வைத்துக்கொண்டு இந்திய மக்களின் உணர்வுகளையும் அக்கறையையும் கீழ்மட்டத்தில் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
மகிந்தவிற்கு எதிராகக் கிளர்ந்துள்ள கடுமையான எதிர்ப்புக்கள் ஆளும் கொங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தமையையே இவரது கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன. ஆனால், தமிழகத்தினதும் ஏனைய மாநிலத்தவர்களினதும் எதிர்ப்பை சிங்களம் சில்லறைத்தனமானதாக கொச்சைப்படுத்த முனைந்துள்ளது. தங்கள் சுயநலன்களுக்காக தமிழக அரசியல் தலைவர்கள் ஆடும் நாடகம் இதுவென்று சிறீலங்கா அமைச்சர்களும், சிங்கள இனவாதிகளும் கருத்துவெளியிட்டுள்ளனர்.
 
இதன்ஒருபடி மேலேபோய், “எனக்கு எல்லா நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் எதிர்ப்பு உள்ளது என்று கருதிவிட முடியாது. இவற்றைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை” என்று திருப்பதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு மகிந்த ராஜபக்ச பெருமையடித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நடைபெற இன்னமும் சில வாரங்களே உள்ள நிலையில், மகிந்த மேற்கொண்ட ஆன்மீகப் பயணம், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகவே மாறியுள்ளது. இதனை மகிந்த உணர்ந்துகொள்ள அதிககாலம் எடுக்காது.
 
ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.