Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் கொட்டுகிறது மழை; வெள்ளத்தால் 65,000 பேர் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் கொட்டுகிறது மழை; வெள்ளத்தால் 65,000 பேர் பாதிப்பு

 
வடக்கு, கிழக்கில் பெய்துவரும் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 13,903 குடும்பங்களைச் சேர்ந்த 63,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த சில தினங்களாகப் பெய்து வருகின்ற அடை மழையினால் பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் திருக்கோயில், மண்முனைபற்று, வெல்லாவலி, காத்தான்குடி, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலுமே இவ்வாறு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
 
முல்லைத்தீவில் 980 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 225 பேரும் வவுனியாவில் 480 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 781 பேரும், கிளிநொச்சியில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 153 குடும்பங்களைச் சேர்ந்த 416 அங்கத்தவர்களே இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளதாகத் திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கடந்த 48 மணித்தியாலயங்களில் 162.0 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளதனால் பல நூற்றுக்கணக்கான நெல் வயல்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.
 
வவுனியாவில்...
வவுனியாவில் கடந்த இரு நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகின்ற நிலையில், வெள்ளம் காரணமாக இதுவரையில் 943 குடும்பங்களைச் சேர்ந்த 1,561 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம் பெயர்ந்துள்ள மக்கள் 4 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
பண்டிக்கெய்த கிராம அலுவலகர் பிரிவிலுள்ள பெரியமடு அம்மன் வித்தியாலயத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரும் புளியங்குளம் வடக்கிலுள்ள பழைய அரைக்கும் ஆலையொன்றில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும் பழையவாடி கிராம அபிவிருத்தி அமைப்பிலுள்ள நலன்புரி நிலையத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும் பிரப்பைமடுக் கிராமத்திலுள்ள பொது மண்டபமொன்றில் 831 குடும்பங்களைச் சேர்ந்த 1,220 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இவர்களுக்கு அந்தந்த கிராம அலுவலகர் பிரிவுகளினூடாக சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத் தகவல்கள் கூறின.
 
மேலும் வவுனியாவில் பண்டிக்கெய்த கிராம அலுவலகர் பிரிவு, புளியங்குளம் வடக்கு கிராம அலுவலகர் பிரிவு, குளம் கிராம அலுவலகர் பிரிவு, நாவற்குளம், புளியங்குளம் தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் பழையவாடிக் கிராமம் மற்றும் ஆலங்குளம் கிராமம், வவுனியா தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் பிரப்பைமடுக் கிராமம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
 
பெரியமடுக்குளம், பண்டிக்கெய்தகுளம், நாவற்குளம் ஆகிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. புதுக்குளம், கிழவிக்குளம், வவுனியாக்குளம் ஆகிய குளங்கள் வான்பாய்கின்றன. ஏற்கெனவே உடைப்பெடுத்த கதிரவேலர்பூவரசங்குளம், மேற்குளம், துலாவிக்குளம் ஆகிய குளங்களிலிருந்து நீர் மேவிப் பாய்கின்றது.
 
குஞ்சுக்குளம், மூன்றுமுறிப்பு பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அப்பாதையூடான வாகனப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. அத்துடன், வவுனியாவிலிருந்து குஞ்சுக்குளம், நவ்விக்குளம் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ பிரிவுத் தகவல்கள் கூறுகின்றன.
 
கிளிநொச்சியில்...
 
கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவிலிருந்து பெய்த அடை மழையைத் தொடர்ந்து 43 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் முரசுமோட்டை கிராம அலுவலகர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் முருகானாந்தா அ.த.க.பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் மருதநகர் கிராம அலுவலகர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 
 
இவர்கள் பன்னங்கண்டி அ.த.க.பாடசாலையிலும் முஹமட் முன்பள்ளியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கச்சார் கிராம அலுவலகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
 
இவர்கள் தினேஷ் முன்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத் தகவல்கள் கூறுகின்றன.
 
15 பெப்ரவரி 2013, வெள்ளி 9:20 மு.ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.